தமிழ் சினிமாவில் எப்போதும் புதுமைகளையே தேடி தேடி செய்பவர் இயக்குனர் பார்த்திபன்.இவர் தான் இயக்கும் அடுத்த படத்திற்கு பேஸ்புக்கின் மூலம் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்து வருகிறார் என்பது தான் தற்போது பேஸ்புக்கில் முக்கிய செய்தியாக வலம் வருகிறது.பிரபல நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் பல திறமைகளுக்கு சொந்தக்காரரான பார்த்திபன் தான் இயக்கும் அடுத்த படத்திற்கு நடிகர் ஆர்யா சாயலில் இருக்க வேண்டும்.நடிகை சுமார் 25 வயது மாநிறம்/கருமை அன்பான முகம் கொண்டு இருக்க வேண்டும் என தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்தார்.அது போதும் ஆளாளுக்கு தங்களுடைய புகைப்படங்களை போட்டு வருகின்றனர்.
ஒரு சிலர் தங்களுடைய உண்மையான புகைப்படத்தை போட்டு வருகின்ற்னர்.ஆனால் ஒரு சிலரோ புகைப்படத்தை கிராபிக்ஸ் செய்து பார்த்திபனை கிண்டல் செய்து வருகின்றனர். எது எப்படியோ உங்களுக்கு ஒரு வாய்ப்பு வேண்டுமா, அப்ப உடனே உங்க புகைப்படத்தை பார்த்திபனோடு பேஸ்புக்கில் போட்டுவிடுங்க.
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் தம்பி ராமைய்யா. இவரின் தாயார் பாப்பம்மாள் நேற்று மாலை மதுரையில் காலமானார்.74 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
ஆனால் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்துள்ளார். இவரின் இறுதி சடங்கு இன்று அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள ராஜராஜபுரத்தில் நடைபெறவுள்ளது.
தனுஷ் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால், தங்கமகன் தோல்விக்கு பிறகு தற்போது ஒரு வெற்றி கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றார்.இதற்காக தொடரி படத்தை ஆகஸ்ட் 19ம் திகதி வெளியிட முடிவு செய்தார்கள்,
சமீபத்தில் கிடைத்த தகவலின்படி தொடரி இந்த திகதியில் வர வாய்ப்பில்லையாம்.மேலும் படம் செப்டம்பர் மாதம் தள்ளிப்போகும் என கூறப்படுகின்றது, இச்செய்தி தனுஷ் ரசிகர்களுக்கு மிகவும் வருத்தத்தை அளித்துள்ளது.
ஒன்றரை கிலோ தங்கத்துடன் 3 இலங்கையர்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்திய ரூபாவின் படி இதன் பெறுமதி 46 இலட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து யு.எல்.161 என்ற விமானம் மூலம் நேற்று காலை 8.45 மணியளவில் இவர்கள் இந்தியா சென்றுள்ளதாகவும், யோகேஸ்வரி செல்லத்தம்பி, சுசிகலா யோகேஸ்வரன், ராமக்கல் ராமசாமி ஆகிய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இவர்களிடம் இருந்து 8 தங்க வளையல்கள், 4 தங்கச் சங்கிலிகள், பென்டன்கள் பத்து உள்ளிட்ட பல தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய விமானநிலைய தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தன் ஆலயத்தில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இம்முறை ஆலய சூழல் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா எதிர்வரும் 8ம் திகதி கொடியேற்றத்துடன், ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், திருவிழாவுக்கான மாநகர சபையின் ஏற்பாடுகளை ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு மாநகர சபை மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில்,நல்லூர் மஹோற்சவ காலத்தில் ‘பிளாஸ்ரிக் அர்ச்சனைத் தட்டுக்களுக்கு பதிலாக பனையோலையில் தயாரிக்கப்பட்ட அர்ச்சனைத்தட்டுக்கள் விற்பனை செய்ய வேண்டும். அவற்றை மாவட்ட மகளிர் அமைப்புக் கள் ஊடாகவும், பனைசார் உற்பத்தியாளர்களிடமிருந்தும், குறைந்த விலைகளில் கடைக்காரர் கள் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைவிட, 20 மைக்றோவுக்கு குறைவான பொலித்தீன் பாவனை மற்றும் உக்கலடையாத பொரு ட்களின் பாவனை என்பனவும் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்களும், கடமையில் ஈடுபடுபவர்களுக்கு கலாசார உடைகளை அணிய வேண்டும். ஆலய வெளி வீதியில் அங்கப் பிரதட்சனை செய்வதற்காக கொட்டப்பட்டுள்ள மணலை அசிங்கம் செய்யாமல், சுகாதாரம் பேணவேண்டும். ஆலய சூழலில் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக ஆங்காங்கே கண்காணிப்பு கமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஆலயத் சுற்றாடலையொட்டி அமைக்கப்படும் வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் சைக்கிள்களுக்கு 5 ரூபாயும், மோட்டார் சைக்கிள்களுக்கு 10 ரூபாயும் மாத்திரம் அறிவிட ப்படவேண்டும்.
மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.ஆலயத்தின் முக்கிய திருவிழாக் காலங்களில் ஆலயத்துக்குள் நுழையும் காவடிகள், வடக்கு வீதிப்பக்கமாக நுழைந்து, குபேர வாசலில் தங்கள் நேர்த்திக் கடனை முடித்த பின்னர், கோவில் வீதி வழியாக தெற்கு பக்கமாக வெளியேற வேண்டும். ஆலயத்தை சூழ அமைக்கப்படும் வீதித்தடைகள் எதிர்வரும் 7 ஆம் திகதி பிற்பகல் 2 மணியுடன் அமுலுக்கு வருகின்றது. ஆலயச் சூழலில் கடைகள் அமைத்தவர்கள் தங்கள் பொருட்களை இடமாற்றுவதற்காக மாத்திரம் மதியம் 12 மணி முதல் 2 மணிவரையில் பாதை திறக்கப்படும். மேலும், அப்பகுதியில் குடியிருப்பவர்கள், கடைகள் வைத்திருப்பவர்கள், அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு, சென்று வருவதற்கு விசேடமான அடையாள அட்டை வழங்கப்படும் என்றார்.
இந்தியாவின் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற விமானம் தரையிறங்கும் போது ஓடுதளத்தில் விபத்துக்குள்ளானது. இருப்பினும் அதிருஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்.
எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK521 வகை விமானம் இன்று மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு சென்றது. அந்த விமானத்தில் 275 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என மொத்தம் 282 பேர் பயணித்தனர்.
அந்த விமானம், துபாய் விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்கியபோது, முன்பக்க சக்கரம் உடைந்ததால் நிலை தடுமாறி, விமானத்தின் வால் பகுதி முதலில் தரையை தட்டியது. இதையடுத்து அதன் வலது பக்க என்ஜின் ஓடுதளத்தில் மோதி தீப்பிடித்தது.
விமானம் சிறிது தூரம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து படுவேகத்தில் ஓடியது. இருப்பினும், சில அடி தூரத்தில் சென்று விமானம் நின்றுவிட்டது. இதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இருப்பினும், விமானத்தின் என்ஜின் பகுதியில் தீ பிடித்திருந்ததால், அங்கு பெரும் கரும்புகை எழுந்தது.
உடனடியாக பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். எமர்ஜென்சி வாசல்கள் வழியாகவும் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தால் பயணிகளின் உயிருக்கோ, உடலுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்த சம்பவம் துபாய் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோட்டார் சைக்கிளொன்று புகையிரதத்துடன் மோதியதில் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல்-கனேவத்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையிலேயே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என்றும், அவர்களது சடலம் கனேவத்த புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெல்லவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை பல கோரிக்கைளை முன்வைத்து பாதுகாப்பற்ற புகையிரத கடவை காவலர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பணி நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மேல் நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (03.08.2016) காலை மூவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நடைபெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கினை விசாரணை மேற்கொண்ட மேல் நீதிமன்ற நீதவான் திரு.சசிமகேந்திரன் இன்று (03.08.2016) இருவருக்கு மூன்று வருடங்கள் கடூழிய சிறைத்தண்டணையும் சங்கிலிவேல் ராஜாசிவா, விஜயசேகர பத்திரஜகே லயனல்விரசிங்க பண்டார,எரேத் முதியன்சிலாகே இகலவலகே மஞ்சுலஜெயசேன ஆகிய மூவருக்கு மரண தண்டணையும் வழங்கி தீர்ப்பளித்தார்.
சற்றுமுன் மதவாச்சி புகையிரத நிலையத்தை முற்றுகையிட்டு தண்டவாளங்களின் குறுக்கே நின்று புகையிரதக் காப்பாளர்கள் திடீரென மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றது.
வடமாகாண புகையிரதக் காப்பாளர் சங்கத் தலைவர், செயளாளர் மற்றும் காப்பாளர்களுடன் தென்மாகாண புகையிரதக் காப்பாளர் சங்கத் தலைவர், செயளாளர் மற்றும் காப்பாளர்களும் இணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்
நிரந்தர நியமனம் கோரியும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாக்குறுதி அளித்த சம்பள உயர்வு இன்னமும் அதிகரிக்கவில்லை என்றும் மேலதிக பணியாளர்களை பணிக்கு அமர்த்தும் போது அந்தந்தக் கிராமங்களிலேயே பணியாளர்களை அமர்த்துமாறும் கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண் ஒருவர்.
எங்க கிராமத்துல வருஷத்துக்கு 15 பொண்ணுகளை தூக்கிட்டுப் போய்க் கெடுக்கறாங்க. எங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுங்கய்யா எனக் கதறுகிறார்கள் கிராமத்து மக்கள்.
தஞ்சாவூர், அம்மாப்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட சாலையோர கிராமம் சாலியமங்கலம். இந்தப் பகுதியில் தலித் சமூகத்து மக்கள் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். சாதி இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர்.
கடந்த 31ம் திகதி இரவு தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகள் கலைச் செல்வி, தோட்டம் ஒன்றின் முள்புதரில் நிர்வாணமான நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்திருக்கிறார்.
படுகொலைக்கு முன்னதாகக் கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.
இதையடுத்துக் கொலைக்குக் காரணமான ராஜா மற்றும் குமார் ஆகியோரைக் கைது செய்திருக்கிறது போலீஸ். குற்றவாளிகளை கைது செய்வதில் காவல்துறை கால தாமதம் செய்ய, மதுரை எவிடென்ஸ் அமைப்பு தலையிட்டு கைது செய்ய வைத்திருக்கிறது.
கலைச்செல்வியின் உறவினர்கள் தெரிவிக்கையில், ராஜேந்திரனோட முதல் மனைவி மாரியம்மாள் உடம்பு சரியில்லாமல் செத்துப் போயிட்டாங்க. அவங்க அக்கா பாப்பம்மாள் வீட்டிலதான் கலைச்செல்வி வளர்ந்து வந்தாள். வீட்டு வேலைகளைக் கவனிக்கறதுன்னு அந்தப் பொண்ணு இருக்கற இடமே தெரியாது.
சம்பவம் நடந்த அன்னைக்கு இரவு புள்ளை எங்க போச்சுன்னு ஊர் முழுக்க தேடிக்கிட்டு இருந்தாங்க. விடிய விடிய தேடியும் கிடைக்கல. மறுநாள் காலையில முள்புதர்ல நிர்வாணமா கிடக்கறாள்னு செய்தி வந்துச்சு.
கொடூரமா கொன்னு போட்டுட்டானுங்க. குமார், ராஜான்னு இந்த பேருக்கும் ஊருக்குள்ள எந்த வேலையும் இல்லாம, வெட்டியா இருப்பானுங்க.
தலித் பொண்ணுங்களைத் தூக்கிட்டுப் போறதுதான் இவனுக வேலையே. அவங்க சமூகத்து பெரியவங்களும் இதைத் தட்டிக் கேட்க மாட்டாங்க என வேதனைப்பட்டனர்.
கலைச்செல்வியின் அப்பா ராஜேந்திரனோ, ” என் புள்ளையக் கொன்ன மாதிரியே அவனுங்களும் சாகனும். எங்களுக்கு வேற எதுவும் வேணாம். அரசாங்கத்தோட எந்த உதவியும் வேண்டாம் எனக் கதறி அழுதார்.
எவிடென்ஸ் கதிர் கூறியதாவது, என் வாழ்நாளில் இப்படியொரு கொடூர சாவைப் பார்த்ததில்லை. நுங்கம்பாக்கத்தில் கொல்லப்பட்ட சுவாதியைவிட, பல மடங்கு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் கலைச்செல்வி.
ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண் கொல்லப்பட்டால் தேசிய அளவில் பரபரப்பான விவாதமாகிறது. அதுவே, ஏதோ ஒரு கிராமத்தில் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டால், யாரும் கண்டுகொள்வது இல்லை. மிகுந்த வேதனையாக இருக்கிறது.
அந்தப் பெண்ணின் உடலில் கொடூரமான காயங்கள் இருக்கின்றன. வாயில் கிழிந்த உள்ளாடையைத் திணித்துவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்பிறகு சாகும் வரையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலியல் சித்திரவதை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொடூரமாகக் கொலை செய்த ஆதிக்க சாதி குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம். சாலிய மங்கலத்தில் ஆதிக்க சாதி ஆண்களை எதிர்த்துப் பேச முடியாத நிலையில், அந்த ஊர் தலித் மக்கள் உள்ளனர்.
ஆண்டுக்கு 15 பெண்கள் வரையில் பாலியல் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள். இந்தக் கொடுமையை எதிர்த்துப் பேச முடியாத நிலைமையில இருக்கிறோம். அரசாங்கத்துகிட்ட சொல்லி எங்களைக் காப்பாத்துங்கய்யா என அந்த மக்கள் கதறுகின்றனர். இதைப் பற்றி விரிவாக ஆய்வு நடத்த இருக்கிறோம்.
பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தைரியமாக வந்து புகார் கொடுங்கள் என அறிவுறுத்தியிருக்கிறோம். அரசாங்கம் எந்த இழப்பீடும் தர வேண்டாம். இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்டா போதும்’ என்பதுதான் அவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
சாலிய மங்கலத்தில் தலித் மக்கள் மீது நடக்கும் கொடுமைகள் குறித்து அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று படுகொலைகள் நடக்கும்போது மட்டுமே, அம்மக்கள் படும் துன்பங்கள் வெளி உலகிற்குத் தெரிய வருகின்றது.
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் சட்டரீதியாகவே எங்கள் போராட்டத்தைத் தொடருவோம் என்றார் கொந்தளிப்போடு. தலித் பெண்ணின் மரணம் பற்றிய தகவல் வெளியாகி 48 மணி நேரங்கள் கடந்தும் அரசு நிர்வாகத்தில் எவ்வித சலனமும் இல்லை.
சாலிய மங்கலத்தை அரசு சீரியஸாக கவனிக்க வேண்டும் என எச்சரிக்கை குரல் எழுப்புகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
திடீர் திருப்பங்களுக்கு சுவாதி கொலை வழக்கில் குறைவே இல்லை.
சுவாதி தந்தையான கோபாலகிருஷ்ணன் அவரது உண்மையான தந்தையா, வளர்ப்புத் தந்தையா? சுவாதி கொலையுண்ட இடத்திற்கு வந்த கோபாலகிருஷ்ணன் அழவில்லை.
அவரது சித்தப்பா செல்போனில் சுவாதியின் வெட்டுப்பட்ட உடம்பை பல கோணங்களில் படம் எடுத்துக் கொண்டிருந்தார். கோபாலகிருஷ்ணன் மனைவியின் தங்கைக்கு பிறந்தவர்தான் இந்த சுவாதியும், அவரது அக்கா நித்யாவும். அவர்களை கோபாலகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்தார் என இணையதளங்களில் செய்தி வெளியானது.
இன்னும் சில மீடியாக்களில் சுவாதிக்கு பெங்களூரில் பிலால் மாலிக் மூலம் இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுவாதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என செய்திகள் வெளியாகின.
இதெல்லாம் கட்டுக் கதை என்றார்கள் விசாரணை போலீசார். ஸ்ரீரங்கத்திலுள்ள சுவாதியின் உறவினர்களைக் கேட்டோம்.
சுவாதியின் அப்பா கோபாலகிருஷ்ணனின் மனைவி பெயர் ரங்கநாயகி. அவர்களுக்கு சுவாதி, நித்யா என இரண்டு பெண்கள்தான். ரங்கநாயகியின் தங்கைக்கு இரண்டு ஆண் குழந்தைகள் என்றதுடன் அந்தப் பையன்களோடு சுவாதி இருக்கும் படத்தைக் காண்பித்தனர்.
பிராமணர் குடும்பங்களில் உறவுமுறைகளை அழைக்கும் விதம் மாறுபட்டதாக இருக்கும். அதை வைத்து குழம்பிப் போன ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது என்கிறார்கள்.
இதற்கிடையே வருகிற 8ம் திகதி ராம்குமாரை சிறையிலிருந்து அழைத்து வந்து அவரை சுவாதி கொலையுண்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையம், அதையொட்டிய தெருக்களில் நடக்க வைத்து வீடியோ படமெடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அத்துடன் உடைந்த பாட்டில் சில்லுகள் பொருத்தப்பட்ட ரயில் நிலைய சுவர்களில் சிந்தியிருந்த இரத்த மாதிரிகளை சேகரித்த போலீசார் அவற்றையும் ராம்குமாரின் இரத்த மாதிரியையும் ஒப்பிட்டுப் பார்க்க திட்டமிட்டிருந்தனர்.
ராம்குமாரின் கையெழுத்து மாதிரிகளையும் எடுக்க போலீசார் திட்டமிட்டு, கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். அதை எதிர்த்து ராம்குமாரின் வழக்கறிஞர்கள் மனு போட்டனர்.
ராம்குமாரை விசாரிப்பதில் சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளை காவல்துறை மேற்கொள்கிறது எனக் குற்றம் சாட்டுகின்றனர்
அவரது வழக்கறிஞர்கள்.போலீஸ் தரப்போ, தன் போக்கிலிருந்து மாறவில்லை. புழல் சிறையில் உள்ள ராம்குமாரிடமிருந்து கடந்த 30ம் திகதியன்று இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
ஆறாம் தரத்திற்கு புதிதாக சேர்ந்த மாணவியொருவரை அந்த வகுப்பிலிருந்த பழைய மாணவிகள் பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தெவனகல, கன்துன பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவியொருவர் குறித்த பாடசாலையில் சேர்ந்திருக்கிறார்.
அவரைப் பகிடிவதை செய்யும் நோக்கில் பழைய மாணவிகளில் ஒருசிலர் அவரது பாடசாலை சீருடையை கிழித்து வகுப்பறை மண்டபத்தைச் சுற்றிவரச் செய்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியைகள் வினவியபோது, பல்கலைக்கழகங்களில் நடக்கின்ற பகிடிவதைகளுக்கு இப்போதே ஒத்திகை பார்த்ததாக குறித்த மாணவிகள் தெரிவித்ததாக அறியமுடிகின்றது.
இந்த வகுப்பிலுள்ள மாணவியொருவரின் சகோதரன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருப்பதாகவும், அவர் விடுமுறையில் வரும்போது அங்கு நடக்கும் பகிடிவதைகள் பற்றி கதை கதையாகக் கூறுவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த விடயத்தினை சக மாணவிகளிடம் பகிர்ந்துகொண்டபோது அவர்களுக்கும் இந்தப் பகிடிவதை ஆசை வந்ததாக அறியமுடிகின்றது.
பகிடிவதையால் பயந்துபோய் புதிய மாணவி பாடசாலைக்குப் போக மறுப்பு தெரிவித்ததை அடுத்து பெற்றோர்கள் பாடசாலை அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவிகளின் பெற்றோர்களையும் பாடசாலைக்கு வரவழைத்த அதிபர் இவ்வாறான செயல்கள் மீண்டும் நடக்காமல் இருக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, புதிய மாணவி தற்போது மீண்டும் குறித்த பாடசாலைக்கு செல்வதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலிய குடியேற்ற மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் புதிய தகவலின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள சுமார் 1500க்கும் மேற்பட்டோர் தடுப்பு முகாம்களில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் இலங்கையைச் சேர்ந்த 94 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 65 பேரும் அகதிகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நியூசிலாந்தை சேர்ந்த 199 பேரும், ஈரானை சேர்ந்த 175 பேரும், வியட்நாமை சேர்ந்த 142 பேரும் அகதிகளாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் பெரும்பாலானோர் சில ஆண்டுகளுக்கு முன் கடல் வழியாக அவுஸ்திரேலியாவை வந்தடைந்தவர்கள்.
மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் தடுப்பிற்கு பின்னர் அவுஸ்திரேலியாவில் வாழ அந்நாட்டு அரசு அனுமதி வழங்குகின்றது என்ற நம்பிக்கையிலேயே இலங்கையைச் சேர்ந்த புகலிட கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை நோக்கி வருகின்றனர்.
எனினும், சமீப காலமாக கடல் வழியாக வரும் புகலிட கோரிக்கையார்களை அவுஸ்திரேலியா தொடர்ந்து திருப்பி அனுப்பி வருகின்றது.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை காரணம் காட்டி, இலங்கை அகதிகளை பொருளாதார அகதிகளாகவும் அடையாளப்படுத்துகிறது.
இதனால் தமிழ் அகதிகள் அவுஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.
பிரேசிலின் ரியோடி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் 10 பேர் கொண்ட அகதிகள் அணி முதன்முறையாக பங்கேற்கவுள்ளது.
இவ்வணி ஒலிம்பிக் சம்மேளனத்தின் கொடியின் கீழ் பங்கேற்கிறது. இவர்கள் ஒலிம்பிக் தொடக்க நாளின்போது சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் கொடியை ஏந்தி அணி வகுத்து வரவுள்ளனர்.
நான்கு நாடுகளைச் சேர்ந்த இந்த வீரர்கள், வீராங்கனை குறித்த விவரத்தை கடந்த யூன் மாதம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
இவர்களது சாதனைக் கனவை நனவாக்க இவர்களுக்கு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் ஒலிம்பிக் கமிட்டி கொடுத்துள்ளது.
இப்படி ஒரு அணி பங்கேற்பது இதுவே முதன்முறையாகும் என்பதால் இவர்கள் வரலாறு படைக்க காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரான தாமஸ் பேக் கூறுகையில், ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களாக பங்கேற்கும் அகதிகள் அணிக்கு இடம் தரப்பட்டுள்ளது.
இவர்களுக்கென்று நாடு இல்லை, அணி இல்லை, கொடி இல்லை, தேசிய கீதம் இல்லை. தற்போது உலகின் இதர வீரர்கள், வீராங்கனைகளுடன் இவர்களும் சமமாக கலந்துள்ளனர்.
இவர்கள் ஒலிம்பிக் கொடியை ஏந்தி அணிவகுத்து வருவர். இவர்களுக்காக ஒலிம்பிக் கீதம் இசைக்கப்படும் என்று கூறியுள்ளார். அகதிகள் அணியில் இடம்பெற்றுள்ளவர்கள் விபரம்
யுஸ்ரா மார்டினி (சிரியா)- நீச்சல் வீராங்கனை
ரமி அனிஸ் (சிரியா)- நீச்சல் வீரர்
யோனஸ் கிண்டே (எத்தியோப்பியா)- தடகள வீரர்
யீச் புர் பியல் (தெற்கு சூடான்) – தடகள வீரர்
பாலோ அமொடன் லொகொரொ (தெற்கு சூடான்)- தடகள வீரர்
ஜேம்ஸ் நியாங் சியன்ஜியக் (தெற்கு சூடான்)- தடகள வீரர்
லோக் நதிகே லோகோன்யென் (தெற்கு சூடான்)- தடகள வீராங்கனை
ஏஞ்செலினா நடாய் லோஹலித் (தெற்கு சூடான்)- தடகள வீராங்கனை
போபால் மிசங்கா (காங்கோ) – ஜூடோ வீரர்
யோலன்டே புகாசா மபிகா (காங்கோ)- ஜூடோ வீராங்கனை
வவுனியா பொது வைத்தியசாலையின் ஏற்பாட்டில் திணைக்களங்களுக்கிடையிலான சிநேகபூர்வ துடுப்பாட்டப்போட்டி ஒன்று இடம்பெறவுள்ளது.
திணைக்களங்களுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்தும் நோக்கோடு வவுனியா பொது வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இப் போட்டியில் பங்கேற்க விரும்பும் திணைக்களங்கள் வைத்திசாலையின் பணிப்பாளர தொடர்புகொண்டு விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.