பொருளாதார மத்திய நிலையம் வவுனியா ஓமந்தையில் அமைக்கப்படவேண்டும் என வலியுறுத்தி தாமோதரம்பிள்ளை மகேஸ்வரன் என்பவர் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
வடமாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே! மாகாண சபை உறுப்பினர்களே! குடுமிச் சண்டை வேண்டாம், ஒமந்தை சரியான தேர்வு, இது நிறைவேற வேண்டுமேன தெரிவித்து தாமோதரம்பிள்ளை மகேஸ்வரன் என்பவர் 10.08.2016 அன்று காலை7 மணிக்கு ஒமந்தை வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உயிர் பிரியும வரை உண்ணாவிரத்தில் ஈடுபடவுள்ளதாக துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதி பயன்படுத்திய 14 சிம் கார்டுகள் மற்றும் மடிக்கணணி குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என கைது செய்யப்பட்ட ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ராம்குமார் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் நேற்று சென்னையில் நிருபர்களுடன் பேசினார். அப்போது, சுவாதி கொலை வழக்கை விரைந்து முடிக்க நீதித் துறையையும் காவல்துறை துணைக்கு அழைப்பதாக ராமராஜ் குற்றம்சாட்டினார்.
மேலும் ராம்குமார் தரப்பு ஆதாரங்களை தாக்கல் செய்ய தான் தேவையான தகவல்களை திரட்டி வருவதாகவும் வழக்கறிஞர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சுவாதியிடம் 14 சிம்கார்டுகள் இருந்ததாக ராம்குமாரின் வழக்கறிஞர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்மில் பலரும் தற்போது நாவின் சுவைக்கு அடிமையாகிவிட்டோம். அத்துடன் உட்கார்ந்து கொண்டே அதிக நேரம் பணியாற்றும் சூழலுக்கும் ஆட்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக உடல் எடை அதிகரித்து இடுப்பு அளவு பெருத்துவிட்டது. இதனை குறைக்க உடற்பயிற்சி மட்டும் போதாது வேறு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்காகவே அறிமுகமாகியிருக்கிறது ஜேரோனா லைப்போ லேசர் சிகிச்சை.
இந்த சிகிச்சை என்ன செய்யும், இதில் பக்கவிளைவு ஏதேனும் இருக்கிறதா என்று வரிசையாக கேள்வி கேட்கும் முன் இதன் செயல்பாட்டைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். முதலில் நீங்கள் சாப்பிடும் உணவிலிருந்து கொழுப்பானது ஸ்கின் ஃபேட், ஆர்கன் ஃபேட், மஸுல் ஃபேட் என்று மூன்று இடங்களில் சேர்ந்துவிடும்.
உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பை கரைக்க நீங்கள் கடுமையான உழைக்கவேண்டியதிருக்கும். கடினமாக உழைக்கவில்லை என்றால் கொழுப்பு கரையாது. உணவு கட்டுப்பாடு, நீச்சல், ஸ்கிப்பிங் போன்ற கடுமையான உடற்பயிற்சிகள் செய்து தான் இதனை குறைக்கவேண்டும்.
இந்நிலையில் ஸ்கின் ஃபேட் எனப்படும் தோலுக்கடியில் சேர்ந்திருக்கும் கொழுப்புகளை கரைக்க நவீன மயமான ஜேரோனா லைப்போ லேசர் சிகிச்சை என்ற சத்திர சிகிச்சையற்ற ஒரு சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது. இதன் மூலம் தோலுக்கடியில் சேமிக்கப்பட்டிருககும் கொழுப்புகள் கரைவதற்கு வசதியாக அதற்குரிய தூண்டல்களை ஜேரோனா லைப்போ லேசர் என்ற சிகிச்சை மூலம் தூண்டி, கொழுப்பு கரைவதற்கு வழியமைத்து தரப்படுகின்றது.
கொழுப்பை தாங்கி இருக்கும் செல்களை தாக்கி அழித்து, அதிலிருந்து கொழுப்பு வெளியேற துணை செய்கிறது. கொழுப்பை கரைப்பதில்லை. ஆனால் கொழுப்பு வெளியேற துணை செய்கிறது. அதனைத் தொடர்ந்து நீங்கள் செய்யும் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் அந்த கொழுப்பு வெளியேறிவிடும். இந்த சிகிச்சைக்கு பின் உடல் எடை 8 முதல் 10 இன்ச் அளவுகளில் குறைந்திருப்பதை காணலாம். அதே தருணத்தில் உங்கள் உடலிலிருக்கும் நீர்ச்சத்திற்கும், தசை நார் வலுவிற்கும் எந்தவொரு சேதமும் ஏற்படாது. இது தான் இந்தி சிகிச்சையின் சிறப்பு.
இது ஒரு பீம் லேசர். 5 லேசர் புள்ளிகள் உங்கள் உடலை ஒரு வட்ட வடிவத்தில் சுற்றி வரும். சுற்றி வரும் போது தோல் பகுதியில் ஊடுருவி, கொழுப்புச் செல்களை தாக்குகிறது. குறைந்த அளவிலான லேசர் கதிர்வீச்சு பயன்படுத்தப்படுவதால் லேசர் நம் உடலில் பயணப்படும் போது எந்த வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
இந்தியாவில் உத்தரப்பிரேதசத்தில், கான்பூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கடத்தி சென்று 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
படுகாயமடைந்த அச்சிறுமியை ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். தற்போது அச்சிறுமி அங்குள்ள ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
அவரது தந்தை பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டில், ஜூலை 28 ஆம் திகதி மாலை தனது மகள் சைப்சு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக கூறியுள்ளார். இருப்பினும் பொலிஸ் விசாரணைக்குப் பயந்து முறைப்பாடு அளிக்காமல் இரவு வரை காத்திருந்து, தனது மகள் வராமையால் தனது உறவினர்களுடன் தேட ஆரம்பித்ததாக கூறியிருந்தார்.
இந்நிலையில், இரண்டு நாட்கள் கழித்து, அசோக், விம்லே மிஸ்ரா மற்றும் ரோஹித் ஆகிய 3 இளைஞர்கள் தன் மகளை பக்கத்து கிராமத்திற்கு வெளியே விட்டுச் சென்ற தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த 3 பேர் மீதும் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியை அருகில் உள்ள வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பியுள்ளதாக கான்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கிணற்றில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மண் இன்று சோதனைக்குட்படுத்தபடவுள்ளது.
மன்னார் நீதவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராஜாவின் உத்தரவிற்கு அமைய இன்று காலை 8.30 மணியளவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த கிணற்றின் அகழ்வு பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது.
மேலும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ள தடயப் பொருட்களை பகுப்பாய்விற்கு உட்படுத்தி அறிக்கை பெற்று கொள்ள வேண்டும் என மன்னார் நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
குறித்த அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கிணற்றில் மூன்று நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
காணாமற் போனவர்களின் உறவினர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த கிணற்றில் அகழ்வுப் பணிக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ரஜினி, ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், தன்ஷிகா, ரித்விகா நடிப்பில் கடந்த மாதம் வெளியான கபாலி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் வெற்றிவிழாவை படக்குழுவினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.கபாலி வெற்றியால் அப்படத்தின் 2வது பாகம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் ரஜினி பேசும் மகிழ்ச்சி மற்றும் பாடலில் இடம்பெற்ற நெருப்புடா வார்த்தை உலகளவில் பிரபலமாகியுள்ளன. சமூக வலைதளங்கள் தொடங்கி பொதுமக்கள் அதிகம் பேசக்கூடிய வார்த்தைகளாகவும் இவை மாறியுள்ளன.
இந்நிலையில் தீபாவளிக்குத் தயாரிக்கப்படும் பட்டாசுகளையும் கபாலி திரைப்படம் விட்டு வைக்கவில்லை. பட்டாசுகளுக்கு நெருப்புடா என்றும் மத்தாப்புகளுக்கு மகிழ்ச்சி என்றும் பெயர் வைத்து சிவகாசி பகுதிகளில் பட்டாசு தயாரித்து வருகிறார்களாம்.
இதனால் பட்டாசுகளின் விற்பனை கணிசமாக உயரும் என்பது பட்டாசு விற்பனையாளர்களின் எண்ணமாக உள்ளது. மறுபுறம் ரஜினி ரசிகர்களையும் இது மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேதஅகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின்எட்டாம்நாளானநேற்று(03.08.2016)காலைமுதல்அபிசேகங்கள்மூலஸ்தான பூசை, யாகபூசை, கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினொரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம் வந்து கைலாச வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
மாலையில் ஆறுமணியளவில் யாழ் நல்லூர் P.S. பாலமுருகன் குழுவினரும் வவுனியா வீ.கரிகர புத்திரன் குழுவினரும் இணைந்து வழங்கிய விசேட தவில் நாதஸ்வர கச்சேரி இடம்பெற்று தொடர்ந்து ஏழரை மணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அகிலாண்டேஸ்வரி அம்பாள் ஒன்பது மணியளவில் சப்பரத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
நேற்றைய சப்பரத்தின் பொது விசேட தவில் கச்சேரியில் தவில் மேதை வீராசாமி தந்து புதல்வன் ஹரிகரபுத்திரனுடன் தவில் வாசித்ததுடன் பாலமுருகன் தனது புதல்வனுடன் நாதஸ்வர கச்சேரியில் கலந்து கொண்டதுடன் வாண வேடிக்கை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஒருதலைக்காதல் விவகாரத்தால் மாணவி நவீனா பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள வா.பாளையம் பகுதியைச் சேர்ந்த அங்கமுத்து என்பவரது மகள் நவீனா(17). பிளஸ்-2 படித்து வந்த இவர் தினமும் பள்ளிக்கு மினி பஸ்சில் சென்று வந்தார்.
குறித்த பேருந்து ஓட்டுநரான செந்தில்(30) என்பவர், நவீனாவை ஒருதலையாக காதலித்தார். இவரது காதலை, அந்த மாணவி ஏற்க மறுத்ததுடன் தனது பெற்றோரிடமும் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
பெற்றோரும் அவனை பலமுறை எச்சரித்தும், அந்நபர் திருந்தியபாடில்லை, உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று தினந்தோறும் சண்டையிட்டுள்ளான்.
இந்நிலையில் சம்பவத்தன்று, மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்றபின்னர், மாணவியின் வீட்டிற்கு பெட்ரோலுடன் சென்ற செந்தில், அங்கு கதவை பூட்டிவிட்டு, என்னை காதலிக்க மறுத்த நீ உயிரோடு இருக்ககூடாது என கூறிக்கொண்டு, தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீயை வைத்துக்கொண்டார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி சுதாரித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிப்பதற்குள் செந்தில் மாணவியை கட்டிப்பிடித்துள்ளார், இதில் மாணவியின் உடலிலும் தீப்பிடித்ததில், அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செந்தில் இறந்தார். மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
சிகிச்சைகள் நடந்து வந்த நிலையில் நான்கு நாட்கள் கழித்து நவீனா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார், ஒருதலைக்காதல் விவகாரத்தால் நவீனா உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் விஜயும் அமலாபாலும் விவாகரத்து செய்துவிட்டு, தற்போது தனித்தனி வீடுகளில் வசிப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சில நாட்களாகவே நானும், அமலாவும் பிரிவது பற்றி வெளிவரும் எண்ணற்ற செய்திகளை நான் படித்து வருகிறேன்.
ஆனால் அவற்றுள் வதந்திகளும், கற்பனைக் கதைகளும் தான் மிக அதிகம். இந்த தருணத்தில் நான் ஒன்றை மட்டும் தெளிவுப்படுத்தி கொள்ள விரும்புகிறேன். நானும் அமலாவும் பிரிகிறோம் என்ற செய்தி உண்மைதான், ஆனால் மற்ற எல்லா தகவல்களும் முற்றிலும் பொய்யானது.
எங்களின் பிரிவிற்கு என்ன காரணம் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். என்னுடைய நெருங்கிய நண்பர்களும், ஒரு சில ஊடக நண்பர்களும் இதைப்பற்றி வெளிப்படையாக பேசுமாறு கேட்டுக்கொண்டாலும், என் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை நான் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.
ஒரு சராசரி தந்தையாக மகனின் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த பிரச்சனைகளால் நொந்துபோன என் தந்தை, தன் மனதில் சரி என்று பட்டதை ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் சொன்னது, இந்த பிரச்சனையை திசை திருப்பியது.
இயல்பாகவே சமூதாயத்தின் மீதும், பெண்கள் மீதும் அதிக அக்கறையும், மரியாதையும் கொண்டவன் நான். எனது இயக்கத்தில் வெளியான ஒன்பது படங்களும், பெண்களின் சுயமரியாதையை பிரதிபலிக்கும் வண்ணமாகத்தான் இருந்திருக்கிறது.
அமலா தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால், திருமணத்திற்கு பிறகும் அவரின் விருப்பத்திற்கு என்னால் முடிந்த ஆதரவை கொடுத்து வந்தேன். அப்படி இருக்கும்போது, திருமணத்திற்குப் பின்னர் அமலா நடிப்பதால் தான் நாங்கள் விவாகரத்து பெறுகிறோம் என்று பரவும் செய்திகள் அனைத்தும் பொய்யே.
நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டு குணங்களும் தான் ஒரு வலுவான திருமண வாழ்விற்கு சிறந்த பாலமாக செயல்படுகிறது. அந்த இரண்டும் உடைந்த பிறகு திருமண வாழ்வை தொடர்ந்தால் அதில் எந்தவித அர்த்தமும் இருக்காது.
நாங்கள் இருவரும் பிரிந்துவிடுவோம் என கனவில்கூட நான் நினைத்ததில்லை, ஆனால் இன்றைக்கு அது நடந்துவிட்டது. மிகுந்த வலியை என் இதயத்தினுள் பூட்டிக்கொண்டு, எனது வாழ்க்கையை கண்ணியமான முறையில் தொடர நான் முடிவு செய்துவிட்டேன்.
இந்த உண்மை எதுவும் தெரியாமல், குறிப்பிட்ட சில ஊடகங்கள் பரப்பும் வதந்திகளால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். அதை நினைக்கும்போதுதான் எனக்கு மேலும் வருத்தமாக இருக்கிறது. இனியாவது எங்களின் தனிப்பட்ட உணர்வுகளை மதித்து, இதுபோல் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் என்னுடன் இருந்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகோதரிகளுடன் சேட்டை விட்டால் முகத்தில் குத்துங்கள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி சொன்னதனாலேயே முகத்தில் குத்தினேன் என ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
உடுவில் பகுதியை சேர்ந்த கே.அதிஷ்டராஜா (வயது 45) எனும் நபர் முகத்தில் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் திங்கட்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார்.
தனது முகத்தில் நபரொருவர் குத்தி காயமேற்படுத்தியதாக சுன்னாகம் பொலிசாரிடம் காயத்திற்குள்ளானவர் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் தாக்குதல் மேற்கொண்ட நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணையினை மேற்கொண்டனர்.
தனது சகோதரிகளுக்கு தாக்குதலுக்கு இலக்கான நபர் நீண்டகாலமாக தொந்தரவு கொடுத்து வந்தார் எனவும் , சகோதரிகளுக்கு தொந்தரவு கொடுப்பவர்களுக்கு முகத்திலையே தாக்குங்கள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கூறி இருந்ததாக பத்திரிகை செய்திகளில் வாசித்து இருந்தேன்.
அதனாலேயே எனது சகோதரிகளுடன் சேட்டை விட்டவருக்கு முகத்திலேயே தாக்கினேன் என தாக்குதலாளி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தனது வாக்கு மூலத்தை வழங்கினார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றார்கள்.
அவுஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் கரீத் க்ளீயர் என்ற நபர், மேலாண்மை ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய பின்பக்க பொக்கெட்டில் ஐபோன் 6 செல்போனை வைத்து, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கும் போது, தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது பின்பக்க பொக்கெட்டில் இருந்த ஐபோன், திடீரென தீப்பிடித்துள்ளது. இதை உணர்ந்த கரீத், உடனடியாக அதனை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் ஐபோன் வெடித்துள்ளது. இதில் அவருடைய பின்பக்கத்தில் தோலின் இரண்டு பகுதியில் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக சிட்னியில் உள்ள ரோயல் நோர்த் ஷோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செல்போனின் மெட்டல் பகுதி முழுவதும் சேதமடைந்து விட்டது. மேலும் அதிலிருந்த லித்தியம் கீழ்ப்பகுதி வழியாக வெளியேறிவிட்டது. இதுகுறித்து அப்பிள் நிறுவனத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மரணம் என்பது அனைவருக்கும் நிச்சயிக்கப்பட்ட விடயம். எனினும் எதிர்கால உலகின் மனிதர்களுக்கு மரணம் நிச்சயமில்லை இறந்த பின்னரும் வாழலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.ஒவ்வோர் நாட்டிலும் காணப்படும் சூழ்நிலை, மருத்துவ வசதிகள் போன்ற காரணங்களின் அடிப்படையில் உயிர்வாழும் காலங்களின் சராசரிகளும் மாறுபட்டே காணப்படுகின்றன.
இன்னும் ஒரு 30 ஆண்டுகளில் நாம் நமது மூளையில் பதிந்திருக்கும் அனைத்தையும் ஒரு கணணியில் பதிவேற்றிவிட முடியும் என கூகுள் நிறுவனத்தில் பொறியியல் பகுதிக்குப் பொறுப்பாக இருக்கும் ரேய் குர்ஸ்வைல் என்பவர் தெரிவித்துள்ளார். இவர் கடந்த காலங்களில் கூறிய விடயங்கள் நிறைவேறியுள்ளமை காரணமாக இது அறிவியல் புனைவு அல்ல என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், செயற்கை மனித மூளையை உருவாக்குவதற்கு தற்போது இருக்கும் கணினிகள் போதாது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், கணினியியலில் மூர்ஸ் லாவ் (Moore’s law) எனப்படும் ஓர் சட்டம் காணப்படுகின்றது. அதன் அடிப்படையில் கணணிகளின் கணக்கீட்டு ஆற்றல் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் இரு மடங்காக அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.
இந்தச் சட்டத்தை அடிப்படையாக வைத்தே ரேய் குர்ஸ்வைல் அவர்கள் 30 வருடங்களில் கணணிகளுடன் ஒரு செயற்கை மனித மூளையைக் கட்டாயம் உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார். இது சாத்தியப்பட்டு விடுமாயின் எதிர்கால மனிதனுக்கு இறப்பு இல்லை. மனித உடல் இறந்துவிட்டாலும், நினைவுகள், கனவுகள் கொண்ட ஒரு டிஜிட்டல் செயற்கை வாழ்க்கையைக் கணினியினூடாக தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.முன்னைய காலத்தில் சாத்தியமில்லை என கூறப்பட்ட விடயங்கள், இன்று சாத்தியப்படுவதும் நிறைவேறியுள்ளமையும் அவதானிக்கக்கூடிய ஒன்றே.
உலகமெங்கும் அனைவராலும் விரும்பி விளையாடப்பட்டுக் கொண்டிருக்கும் போக்கிமேன் கோ (Pokemon Go) கேமிற்கு பிரேசிலில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.இந்த போக்கிமேன் கோ விளையாட்டை ஆண்ட்ராய்டு, அப்பிள் இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் விளையாட முடியும்.
Augmented Reality தொழிநுட்பத்துடன் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற கேம்களை போல் இல்லாமல் இதை நடந்து கொண்டே தான் விளையாட முடியும்.கமெரா, கூகுள் வரைபடம், ஜிபிஎஸ் உதவியுடன் இயங்கும் போன்களில் நீங்கள் இதை விளையாட வேண்டும். இதில் நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் உருவம் எங்கு மறைந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
ஜப்பானில் பிரபலமான இந்த கேம் தற்போது 30க்கும் அதிகமான உலக நாடுகளை அடிமைப்படுத்தி விட்டது.மறைந்திருக்கும் உருவங்களை தேடி பயணிப்பதால் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் உஷாரான பிரேசில் இந்த விளையாட்டை தடை செய்துள்ளது.
கென்யாவில் 7 வருட திருமண வாழ்க்கையில் கருத்தரிக்காத மனைவியின் கைகளை துண்டித்து, கொடுமையாக தாக்கியுள்ள கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். கென்யாவின் Masii பகுதியை சேர்ந்த Stephen Ngila, Jackline Mwende தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.
இதனால் கோபம் கொண்ட கணவன், அவ்வப்போது தனது மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். ஜாக்குலினுக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டதால் மருத்துவமனை சென்று கடந்த வருடம் சிகிச்சை பெற்றுள்ளார், ஆனால் ஸ்டீபன், இதற்கான சிகிச்சை பெற மறுத்துள்ளார்.இதற்கிடையில், உனக்கு கருத்தரிக்க தகுதியில்லை என கூறி தனது மனைவியை மிக கொடுமையாக அடித்துவந்துள்ளார். இதனால் வீட்டை விட்டு சென்ற ஜாக்குலின், 3 மாதங்களுக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், ஒரு நாள் இரவு தனது மனைவியுடன் கடும் சண்டையில் ஈடுபட்ட கணவன், இது தான் ‘உனது கடைசி நாள்’ எனக்கூறி, கட்டையை எடுத்து அவரை வெளுத்து வாங்கியுள்ளார்.இதில், ஜாக்குலினின் முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது, மேலும் அவரது கைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கே பரிதாப தோற்றத்தில் இருக்கும் ஜாக்குலினுக்கு பெண்கள் அமைப்பு பாதுகாப்பு கொடுத்துள்ளது. மேலும், இக்குற்றத்தினை செய்துவிட்டு தப்பியோடி கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.