காலியில் வீடொன்றுக்குள் புகுந்து பெண் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிட்டியாகொட – பலிமுல்ல பிரதேசத்தில் வீடொன்றினுள் இருந்த நபர் மற்றும் பெண்ணொருவர் மீது நேற்று இரவு ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்தவர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 49 மற்றும் 29 வயதுடைய மிட்டியகொட, பாலிமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் தந்தையும் மகளும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த ஆணும் பெண்ணும் பலபிட்டிய வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மிட்டியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு கொக்கிளாய் கர்நாட்டு கேணிப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (15.12) இரவு இடம்பெற்றுள்ளது.
கண்டி, நுவரெலியா பகுதியில் இருந்து தொழில் நிமித்தம் வந்த இருவர் முல்லைத்தீவு கொக்குளாய் கர்நாட்டு கேணிப்பகுதில் வாடியில் தங்கியிருந்துள்ளனர்.
குறித்த இருவரும் போதைக்கு அடிமையாகி இருந்த நிலையில் நேற்று மாலை வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில் நேற்றையதினம் இரவு நுவரெலியா பிரதேசத்தில் வசிக்கும் குடும்பஸ்தர் கண்டியில் வசிக்கும் மற்றைய நபரை அடித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் குறித்த விடயம் தொடர்பாக கொக்குளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மரணமடைந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் சுந்தரராஜ் எனும் 38 வயதுடைய கண்டியினை சேர்ந்த நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நுவரெலியா மஸ்கெலிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய மற்றைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.
கொழும்பு – வெள்ளவத்தையில் பெருந்தொகை பணத்துடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலிங்வுட் பிளேஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது தெகிவளையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளார்.
குறித்த இளைஞரிடம் இருந்து பெருந்தொகை பணம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேடுதல் நடவடிக்கையின் போது போதைப்பொருள் மற்றும் 19 இலட்சம் ரூபா பணம், மொபைல் போன், பணம் எண்ணும் இயந்திரம், இரண்டு வங்கி அட்டைகள் மற்றும் ஒரு மின்னணு தராசு என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய போதைப்பொருளுடன் மேலும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, மட்டக்களப்பு பகுதிகளை சேர்ந்த 25 மற்றும் 24 வயதானவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைக்காக வெள்ளவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, புகையிரத நிலையம் முன்பாக நின்ற பழமையான மரம் காற்றின் காரணமாக முறிந்து விழுந்ததில் அரச விடுதி ஒன்றும் வர்த்தக நிலையம் ஒன்றும் சேதமடைந்துள்ளது. இன்று (16.12) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் மீண்டும் அவ்வப்போது மழை பெய்து வருவதுடன், காற்றும் வீசி வருகின்றது. மதியம் வீசிய காற்றின் காரணமாக வவுனியா புகையிரத நிலையம் முன்பாக நின்ற பழையான பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதன்போது மற்றும் ஒரு மரக் கிளை மீது மரம் முறிந்து விழுந்ததால் அம் மரமும் முறிந்து விழுந்துள்ளது.
இதன் காரணமாக, அருகில் இருந்து அரச விடுதியின் கூரைப் பகுதி சேதமடைந்துள்ளதுடன், வர்த்தக நிலையம் ஒன்றின் கூரை மற்றும் சுவர் பகுதி என்பன சேதமடைந்துள்ளது. அத்துடன் மின்சார இணைப்பும் அறுவடைந்து மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
வவுனியாவில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கர வண்டிகளை திருடி விற்பனை செய்த நிலையில் இரு முச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் இன்று (16.12) தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரப் பகுதியில் இருந்து சிவப்பு நிற முச்சக்கர வணடி ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்று, முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்தை கொடுத்து அவரை கீழே தள்ளிவிட்டு குறித்த முச்சக்கர வண்டியை கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
அதுபோன்று, வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் இருந்து உளுக்குளம் நோக்கி முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமாத்திச் சென்று சாரதிக்கு மயக்க மருத்து கொடுத்து முச்சக்கர வண்டி ஒன்று கடத்திச் செல்லப்பட்ட சம்பவமும் பதிவாகியிருந்தது.
இது தொடர்பில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த விஜசேகர ஆலோசனையில், வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மலன் பெரேரா வழிநடத்தலில், வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையில்,
உப பொலிஸ் பரிசோதகர் சாரங்க ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்ட்டுகளான திசாநாயக்க (37348), ரன்வெல (61518), பொலிஸ் கொன்தாபிள்களான சிந்தக (78448), விதுசன் (91800), சாரதியான திஸதாநாயக்க (18129) ஆகியோர் தலைமையிலான பொலிசார் விசேட நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இது தொடாபான விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யபபட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வவுனியா நகரப் பகுதியில் கடத்தப்பட்ட முச்சக்கர வணடிக்கு நீல நிற வர்ண்ப்பூச்சு பூசி வாகன இலக்கத்தகடு மாற்றபபட்டு கெக்கிராவ பகுதியில் மீட்கப்பட்டது.
அத்துடன், வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் இருந்து உளுக்குளம் சென்ற போது முச்சக்கர வணடி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு கடத்திச் செல்லப்பட்ட பச்சை நிற முச்சக்கர வண்டி 9 இலட்சம் ரூபாய்க்கு இலக்கத்தகடு மாற்றி விற்பனை செய்யபபட்ட நிலையில் சாய்ந்தமருது பகுதியில் மீட்கப்பட்டுள்னது.
குறித்த இரு சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பகுதியில் வசித்து வரும் 37 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதவேவேளை, வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி வருவோர் தரும் குடிபானங்களை அருந்தாது விழிப்புடன் செயற்படுமாறும் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றில் , பெண் உள்ளிட்ட மூவர் திருட்டில் ஈடுபட்டமை ந்க்கு பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி இல் பதிவாகியுள்ளது.
சுன்னாகம் நகர்ப் பகுதிகளிலுள்ள பல்பொருள் அங்காடிகளிலேயே இவ்வாரு பொருட்கள் களவாடப்பட்டுள்ளது.
இதன்போது பெண் உள்ளிட்ட மூவர் அடங்கிய திருட்டுக் கும்பல் திருட்டுக்களில் ஈடுபடுவது பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.
குறித்த திருட்டுக்கும்பல் முச்சக்கர வண்டி ஒன்றில் வருவதும் அதனை தூரமாக நிறுத்தி விட்டு இவ்வாறு திருட்டில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது.
அதோடு, பல்பொருள் அங்காடியில் பெறுமதியான பொருட்களை திருடி ஆடைகளுக்குள் மறைத்து வைத்து திருடிச் செல்வதும் அங்கு பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளாக கூறப்படுகின்றது.
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (16) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் அந்த அமைப்பு மெதுவாக உருவாகி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 2 நாட்களுக்கு வடக்கே தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும், ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும். அதேவேளை, மத்திய, சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயத்தைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் சரணடைந்த, சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்ற அருச்சுனா எம்பி, அங்கு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டமை தொடர்பாக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக இன்று(16.12.2024) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சரணடைந்தார். இதன்போது எம்பி இராமநாதன் அர்ச்சுனா , கடும் எச்சரிக்கையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா, அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
வித்தியாலயத்தின் அதிபர் எம்.எம்.அன்பஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. முன்னதாக அதிதிகள் பிரதான வீதியில் இருந்து பான்ட் அணிவகுப்புடன் மாலை அணிவித்து வரவழைக்கப்பட்டதுடன் பிரதான மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன்போது, கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த பாடசாலையில் கல்விகற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்கள், 2022 மற்றும்,
2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் மாகாணம், மாவட்டம், வலயம் ஆகிய மட்டஙகளில் சாதனைகளை நிலைநிறுத்திய மாணவர்கள் என 77 பேர் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், தெரிவு செய்யப்பட்ட மாணவத் தலைவர்களுக்கு அதிதிகளால் சின்னம் அணிவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கலை நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வுகளில் வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், வவுனியா தெற்கு வலய ஆசிரிய ஆலோசகர்கள்,
அயல் பாடசாலை அதிபர்கள், பள்ளித் தலைவர்கள், பாடசாலை அபிவிருததிச்சங்க உறுப்பினர்கள், அப்பகுதி அபிவிருத்தி உத்தியோகத்தர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலச்து கொண்டனர்.
மீகொட நாகஹவத்தையில் காரில் பயணித்த 32 வயதுடைய நபர் ஒருவர் வாகனத்தில் பதுங்கியிருந்த இரண்டு இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று (14.12) இரவு பாதிக்கப்பட்ட நபர் தனது சகோதரரின் வசிப்பிடத்திலிருந்து மீகொட நாகஹாவத்தையில் உள்ள தனது சொந்த வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர் ஒருவர் அவரது வாகனத்தை நிறுத்திய போது, மற்றுமொரு நபர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்தபோது, பாதிக்கப்பட்டவரின் மனைவி மற்றும் அவரது ஒரு வயது மகளும் காருக்குள் இருந்தனர்.
உயிரிழந்தவர் பத்தரமுல்லை செத்சிறிபாயவில் உள்ள சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக கடமையாற்றி வந்தவர்.
சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் சமீபக் காலமாக எலிக்காய்ச்சல் எனப்படும் ஒரு கொடிய நோய் பரவி வருகின்றது. இந்த காய்ச்சலால் இதுவரையில் 7 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்நிலையில், கரவெட்டியில் எலிக்காய்ச்சலால் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞன் நேற்றிரவு (14.11.2024) 11:30 மணியளவில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கரவெட்டி – தல்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுகயீனமுற்று பருத்தித்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், அவரின் உடலில் நோய் அதிகரிக்க யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கோமா நிலைக்கு சென்ற குறித்த இளைஞர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியர் ஒருவரின் சடலம் இன்று (15.12.2024) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் வனஜீவராசிகளின் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகளை பராமரிக்கும் பணி செய்துவருகின்றார்.
இந்த நிலையில் நேற்றயதினம் மாலை குறித்த இளைஞர் சேமமடு குளத்தின் ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நீண்டநேரமாகிய நிலையில் அவரை காணாத நிலையில் நிலையில் நண்பர்கள் தேடியுள்ளனர்.
அவரது சடலம் இன்று காலை குறித்த ஆற்றுப்பகுதியில் இருந்து இளைஞர்களால் மீட்கப்பட்டது. சம்பவத்தில் மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த நிரஞ்சன் என்ற அரச ஊழியரே சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
உலக இந்துக்களால் இன்று(14.12.2024) கார்த்திகைத்தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும், ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி,
நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுகின்ற நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது. மேலும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்புப் பூஜைகளும், விளக்கீட்டு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டத்தையும் காணக்கூடியதாக இருந்தது.
கார்த்திகை விளக்கீட்டின் தத்துவம் : படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர்.
சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.
அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
வவுனியாவில் முருகன் ஆலயங்களில் நேற்று (13.12.2024) மாலை குமராலாய தீபம் ஏற்றி விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.
திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடுவர்.
அந்தவகையில் இன்றயதினம் கார்த்திகை தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில் குமராலாய தீபம் இந்து சமய முறைப்படி ஏற்றி வைக்கப்பட்டது. வவுனியாவில் உள்ள பல முருகன் ஆலயங்களில் குமராலய தீபம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குறிப்பாக வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சிவசிறி பிரபாகரக் குருக்கள் தலைமையில் பல நூற்றுக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டுக்கு மத்தியில் விசேட அபிடேக, பூஜை வழிபாடுகளின் பின் குமாரலய தீபம் ஏற்றப்பட்டது.
ஆலயத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட சொக்கப்பானையில் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து சாமி வெளி வீதி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வடமாகாணத்தில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப பிரிவு பொலிசார் இன்று (13.12) தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் குழு ஒன்று செயற்பட்டு வருகின்றது. அது போல வடக்கிலும் அவ்வாறான குழு ஒன்று செயற்பட்டு வந்தது.
அந்தகுழுவால், வவுனியா நகரப் பகுதியில் இருந்து சிவப்பு நிற முச்சக்கர வணடி ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்று, முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்தை கொடுத்து அவரை கீழே தள்ளிவிட்டு, குறித்த முச்சக்கர வண்டியை கடந்திச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
இது தொடர்பில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த விஜசேகரவின் ஆலோசனையில், வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மலன் பெரேரா வழிநடத்தலில், வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையில்,
உப பொலிஸ் பரிசோதகர் சாரங்க ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்ட்டுகளான திசாநாயக்க (37348), ரன்வெல (61518), பொலிஸ் கொன்தாபிள்களான சிந்தக (78448), விதுசன் (91800), சாரதியான திஸதாநாயக்க (18129) ஆகியோர் தலைமையிலான பொலிசார் விசேட நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இது தொடாபான விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யபபட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த முச்சக்கர வணடிக்கு நீல நிற வர்ண்ப்பூச்சு பூசி வாகன இலக்கத்தகடு மாற்றபபட்டு விற்பனை செய்திருந்தை தெரிய வந்ததையடுத்து குறித்த முச்சக்கரவண்டி மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வடக்கில் இடம்பெற்ற மேலும் சில குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டமை தெரிய வந்துள்ளது. வவுனியா, உளுக்குளம் பகுதியில் வைத்து முச்சக்கர வணடி சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு அவரது ஒன்றகால் பவுண் மோதிரத்தை திருடிச் சென்றமை தெரிய வந்துள்ளது.
மேலும், மன்னார், அடம்பன் பகுதியில் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து ஒன்றேகால் பவுண் மோதிரத்தை திருடச் சென்றமை மற்றும் மல்லாவி பகுதியில் டிப்பர் சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து 2 பவுண் சங்கிலியை திருடிச் செனறமை என்பனவும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, திருடப்பட்ட நகைகள் விற்கப்பட்ட இடத்தில் உருக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறித்த இரு நபர்களிடம் இருந்தும் முச்சக்கர வண்டி மற்றும் 4 அரைப் பவுண் நகை என்பன மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் ஹற்றன் பகுதியைச் சேர்ந்த 45 வயது நபரும், மன்னார் வங்காலைப் பகுதியைச் சேர்ந்த 47 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.