துணை விமானியாகும் தமிழ்ப்பெண்!!

Tamil Pilot Girl

டென்மார்க்கை சேர்ந்த தமிழ்பெண், துணை விமானியாகும் தனது விருப்பதை முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அர்ச்சனா செல்லத்துரை என்பவர், டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியை தொடங்கவிருக்கிறார்.

தனது விமான போக்குவரத்து விமானி உரிமத்தை Learn to fly Aps – இல் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, Commercial Pilot Licence மற்றும் Multi IFR Rating குறித்த படிப்பினை Diamond Flight Academy Scandinavia பயின்று வரும், இவர் விரைவில் துணை விமானியாகவிருக்கிறார்.

உனது விமான படிப்பினை முடித்துவிட்டாயா? என ஒவ்வொரு நாளும் கேள்விகள் வரும், தற்போது அதற்கான முடிவு கிடைத்துவிட்டது என கூறியுள்ளார்.

நான் முரளிதரனாக இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டேன் : அர்ஜூன ரணதுங்க!!

Murali

நான் முரளிதரன் இடத்தில் இருந்திருந்தால் அவுஸ்திரேலியா அணிக்கு பயிற்சியளிக்கும் வாய்ப்பை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன் என்று முன்னாள் இலங்கை தலைவர் அர்ஜூன ரணதுங்க கூறியுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடருக்கு இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனைஅவுஸ்திரேலிய அணி பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.

முரளிதரனின் இந்த முடிவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை எதிர்ப்பு தெரிவித்தது. அவர் சொந்த நாட்டுக்கு துரோகம் செய்வதாக கிரிக்கெட் சபைத் தலைவர் சுமதிபால குற்றம் சாட்டியிருந்தார்.

இதைத் தொடர்ந்து முன்னாள் இலங்கை தலைவர்களான சங்கக்கார, ஜெயவர்த்தன ஆகியோர் முரளிதரனுக்கு ஆதரவாக பேசினர்.

இந்நிலையில் முத்தையா முரளிதரனின் இந்த முடிவு சரியானது கிடையாது என்று இலங்கையின் முன்னாள் தலைவரும், துறைமுக மற்றும் கப்பல் அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், நான் முரளிதரன் இடத்தில் இருந்து கொண்டு இப்படி செய்திருக்க மாட்டேன். இருப்பினும் அவர் எடுத்த இந்த முடிவை பற்றி நான் ஏதும் கூற முடியாது.

அவர் கண்டிப்பாக அவுஸ்திரேலிய அணி வழங்கிய இந்த பயிற்சியாளர் பதவி வாய்ப்பை நிராகரித்திருக்க வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று கூறியுள்ளார்.

ஆண்களே இது உங்களுக்கான அழகு குறிப்புகள்!!

Boy Beauty

பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை.. அது ஏன் என்றும் புரியவில்லை. ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக வெளியுலக தொடர்பு இருக்கிறது. அவர்கள் தான் வெயில், மழை,தூசியிலும் செல்வார்கள்.

ஆனால் அவர்கள் அழகின் மீது அக்கறை காட்டமாட்டார்கள். ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை எனபது தான் வருத்தம் ஆண்களும் அழகிற்கு என்று நேரம் ஓதுக்கி உடலை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் மாதம் ஒரு முறை ப்யூட்டி பார்லர் போகலாம்.

வீட்டிலே செய்யும் சில அழகு குறிப்புகள் இதோ. வாரம் ஒரு முறையாவது செய்யுங்கள்.

முக அழகுக்கு:

பொதுவாக ஆண்கள் வேலைநிமித்தமாக அதிகமாக வெயிலில் சுற்றிதிரிவார்கள்.
வீட்டுக்கு வந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவவும். இன்னும் கொஞ்சம் நேரமிருந்தால் ஐஸ் கட்டியினை ஒரு துணியில் போட்டு முகத்தில் ஓத்தடம் கொடுக்கவும். இதனால் முகம் தெளிவடையும். இதனை தினமும் செய்யுங்கள்.

சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும் அவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அதில் பாலாடையும், பன்னீரையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவிடவும்.

பிறகு இளஞ்சூடான வெந்நீரில் கழுவினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும்.

தினமும் பசும் பாலில் ஏடு எடுத்து முகம் முழுவது நன்கு அழுத்தித் தேய்து ஊற வைக்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். கருபுள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.

உதடுகளுக்கு

சில ஆண்கள் சிகெரட் பிடிப்பதால் உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும். (தொடர்ந்து சிகெரட் குடிப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயனில்லை)

பற்களுக்கு

எலுமிச்சை சாறு + உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இந்த தூளில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.

தலைமுடிக்கு

தலைமுடி நன்றாக கருகருவென்று வளர்வதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்னெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் சமமாக எடுத்து தலைக்கு தேய்த்து ஊரிய பின்பு குளிக்க வேண்டும்

வீட்டில் பெண்களிடம் சொல்லி மருதாணி இலை, கறிவேப்பிலை
சிறிது செம்பருத்தி பூ, இதனை காய வைத்து நன்றாக அறைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு தலைக்கு தேய்க்கலாம்.

உணவில் அதிகமாக கீரை, மற்றும் பச்சை காற்கறிகளை அதிகம் சேர்க்கவும்

இளம் நரை வந்தவர்கள் ஷாம்பு போடுவதை தவிற்க்கவும். தலைமுடியை ட்ரையாக வைக்க வேண்டாம். சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவவும்.

முட்டையில் வெள்ளை கருவை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்

ஹேர் ட்ரை, ஸ்பிரே, ஜெல், ஹேர் கலரிங், ஸ்பார்கல் போன்றவையினை தலைமுடிக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.

மைதானத்தில் நிர்வாணமாக ஓடியவருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு!!

1112

கண்டி பல்லேகல மைதானத்தில் நிர்வாணமாக ஓடிய அவுஸ்திரேலிய பொதுமகன் ஒருவருக்கு ஒருவாரக்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இதன்போது மழைக்காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்ட வேளையில் குறித்த பொதுமகன் மைதானத்துக்குள் நிர்வாணமாக ஓடியுள்ளார்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட அவர் நேற்று கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோது அவருக்கு 3ஆயிரம் ரூபாவை அபராதமாக விதித்த நீதிவான், ஒருவார சிறைத்தண்டனையும் விதிதிள்ளார்.

111

மகிழ்ச்சியான நேரத்தில் மணமகளுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

1

முன்னணி புகைப்பட கலைஞர் Leung ஐஸ்லாந்தில் உள்ள ஒரு இடத்திற்கு திருமண ஜோடிகளை அழைத்துச் சென்று விதவிதமான புகைப்படத்தை எடுத்துள்ளார். அப்போது திடீரென விமானம் ஒன்று மணமகளின் தலையில் மோதி சென்றுள்ளது.

இதனை சற்றும் எதிர்பாராத மணமகள், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார், இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

விமானம் வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் குறித்த பெண் கண்களை மூடிக் கொண்டும், கைகளை பின்னால் வைத்துக் கொண்டும் போஸ் கொடுத்துள்ளார்.

குறித்த புகைப்பட கலைஞன் உலகில் உள்ள புகழ்பெற்ற 30 புகைப்பட கலைஞர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாட்டிறைச்சி கொண்டு சென்றதற்காக முஸ்லிம் பெண்களை அடித்து உதைத்த கும்பல் : அதிர்ச்சி வீடியோ!!

Attack

மத்தியப் பிரேதசத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக இரண்டு முஸ்லிம் பெண்களை, இந்து மத ஜனதா தளம் ஆர்வலர்கள் கூட்டமாக கூடி தாக்கியுள்ள சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் இறந்த மாட்டின் தோலை கொண்டு சென்ற நான்கு தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், தலித் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மண்ட்சோர் ரயில் நிலையத்தில் மாட்டு இறைச்சியை விற்பனைக்காக கொண்டு சென்றதாக இரண்டு முஸ்லிம் பெண்களை, இந்து மத ஜனதா தள அமைப்பினர் கூட்டமாக சேர்ந்து தாக்கியுள்ளனர். இச்சம்பவம் வீடியோவாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீடியோவில், இந்து மத ஜனதா தள அமைப்பினர் குழுவாக சேர்ந்து, இரண்டு முஸ்லிம் பெண்களை கடுமையாக தாக்குகின்றனர். கூட்டத்தை நிறுத்த முயன்ற பொலிசார் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

சம்பவத்தை தொடரந்து இரண்டு முஸ்லிம் பெண்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

பின்னர், அவர்கள் கொண்டு வந்த இறைச்சியை ஆய்வு செய்ததில், அது பசுவின் இறைச்சி இல்லை எனவும், எருமையின் இறைச்சி எனவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பூபிந்தர் சிங், சட்டத்தை கையில் எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

சிறுநீரிலிருந்து பியர் தயாரிக்கும் இயந்திரம் : பெல்ஜியம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!

beer machine

மனிதர்களிடமிருந்து வெளியேறும் சிறுநீர் மூலம், பியர் தயாரிக்கும் இயந்திரம் பெல்ஜியம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம் நட்டின் ஜெண்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இப்படியொரு வினோத இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த இயந்திரத்தை அங்கு நடைபெறும் இசை திருவிழாவிலும் காட்சிக்கு வைத்துள்ளனர்.

மனிதர்களின் சிறுநீரகத்தை அந்த இயந்திரம் சோலார் சக்தியின் மூலம் முதலில் சூடுபடுத்தும். அதன்பின் சிறுநீரகத்தில் இருக்கும் பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் மற்றும் தண்ணீரை தனியாக பிரித்து எடுத்து, அதன் மூலம் பீர் தயாரிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறினர். மேலும், அதிலிருந்து உரமும் தயாரிக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

கின்னஸ் சாதனை படைத்த யானை!!

Elephant

கேரளாவின் திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான தக்ஷயானி என்கிற பெண் யானை கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

யானைகள் சராசரியாக 65 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழும், ஆனால் தக்ஷயானி என்ற யானை 86 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து தேவஸ்தான நிர்வாகம், கடந்த 1949ம் ஆண்டிலிருந்து யானை கோயில் நிர்வாகத்தின் பொறுப்பில் இருந்து வருவதாகவும், முன்னாள் திருவாங்கூர் அரச குடும்பத்தினரால் பரிசளிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக தைவானை சேர்ந்த யானை 85 ஆண்டுகள் வாழ்ந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் அமலா பால் விவாகரத்துக்கு முக்கிய காரணம் நடிகர் தனுஷ்?

amalpal_vijay_amala_paul

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முன்பு தலைவராக இருந்தவர் ஏ.எல். அழகப்பன். இவருக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் நடிகர் உதயா. வெள்ளிக்கிழமை தோறும் கோயிலுக்குச் செல்வது அழகப்பன் மனைவியின் வழக்கம். அங்கே ஒரு பெண் தெய்வபக்தியோடு வழிபடுவதைப் பார்த்து பலமுறை நெகிழ்ந்து போயிருக்கிறார்.

ஒருநாள் அந்தப் பெண்ணிடம் ‘நீ என் மகனை கல்யாணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்க அந்தப் பெண் வெட்கித்தலை குனிந்து, வீட்டில் பேசச் சொல்லிவிட்டார். அவர்தான் இப்போது உதயாவின் மனைவி, அழகப்பனின் மருமகள். இரண்டாவது மகன் ஏ.எல். விஜய் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களை எடுத்து வந்தார். ஏ.எல். விஜய் இயக்கிய ‘மதராச பட்டணம்’ திரைப்படம் உலகளவில் ரசிக்கப்பட்டது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தெய்வமகள்’ படத்தில் அமலாபால் நடித்தார். அப்போதே இருவருக்கும் காதல் மலர்ந்தது. அடுத்து ‘ தலைவா’ படத்தில் நடிகர் விஜய்க்கு ஹீரோயினாக நடிக்க வைத்தார். வெளிநாட்டில் படப்பிடிப்பு நடந்தபோது இருவருக்கும் காதல் தீவிரமானது. ஏ.எல். விஜய் வீட்டுக்கும், அமலாபால் வீட்டுக்கும் காதல் தெரியவந்தது. ‘நாலு பேருக்கு மெசேஜ் சொல்ற மாதிரி சினிமா எடுக்குற டைரக்டர் நீ. உன் வாழ்க்கையை எப்படி அமைச்சுக்கணும்னு நீயே முடிவு பண்ணிக்கோ. பின்னாடி வருத்தப்படுற மாதிரி முடிவு எடுக்காதே’ என்று விஜய் வீட்டில் சொல்லி விட்டனர்.

ஏ.எல்.விஜய்யின் சுபாவம் அமலாபால் பெற்றோரை கவர்ந்ததால் கல்யாணத்துக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் உடனே சந்தோஷமாக ஒப்புக்கொண்டனர். திருமணம் செய்வதற்கு முன்பே அமலாபாலிடம் ‘நீ கல்யாணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது’ என்று விஜய் சொல்ல, அப்போது காதல் மோகத்தில் இருந்த அமலாபால் ஆனந்தமாக தலையாட்டினார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள மேயர் ராமநாதன் ஹாலில் திருமணம் கோலாகலமாக நடந்தது. சென்னை அடையாறு நட்சத்திர ஓட்டல் அருகிலுள்ள போர்ட் கிளப் பகுதியில் தனி வீட்டில் ஏ.எல்.விஜய், அமலாபால் தனிக்குடித்தனம் செய்தனர்.

முதலில் ‘நடிக்க மாட்டேன்’ என்று கொடுத்த வாக்குறுதியை மீறத் துவங்கினார், அமலாபால். தனது தாய்பூமியான மலையாளப் படத்தில் நடிக்கப்போனார் அமலாபால். அப்போதே அதிருப்தி ஆரம்பமானது. அடுத்து ‘பசங்க-2’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க அழைத்தபோதும் தனது எதிர்ப்பை தெரிவித்தார், விஜய்.

தனுஷ் தயாரிப்பில் ‘அம்மா கணக்கு’ படத்தில் நடிக்கச் சென்றபோது பிரச்னை பூதாகரமாக வெடித்தது. அதன்பிறகு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தனர். அப்போது அமலாபாலின் பெற்றோர் ‘சினிமாவில் நடிச்சது போதும் நல்ல கணவர் கிடைச்சிருக்கார் மிஸ் பண்ணாதே’ என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சினிமாவில் நடிப்பதில் பிடிவாதமாக இருந்தார், அமலாபால்.

கடந்த மூன்று மாதமாகவே விஜய் போர்ட் கிளப் வீட்டிலும், அமலாபால் தனியாகவும் வசித்து வருகின்றனர். தங்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தனது பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்துவந்த விஜய் கடந்த 20-ம்தேதி உண்மை நிலையை எடுத்து உரைத்தார். பெற்றோர் முதலில் அதிர்ந்துபோய் கண் கலங்கினர். அதன்பின் விஜய்க்கு ஆறுதல் கூறினர்.

ஏ.எல். விஜய், அமலாபால் இரண்டு நாட்களுக்கும் முன்பு முக்கியமான நண்பர்கள் முன்பு ஆஜராயினர். ஒருவரை ஒருவர் குறைசொல்லி காயப்படுத்திக் கொள்ள வேண்டாம் பரஸ்பர புரிதலோடு விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இனி அமலாபால் நடிப்பு தொடரும். விஜய்யின் கவனம் இயக்கத்தில் இருக்கும்.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறக் காத்திருக்கும் உலகின் மிகப்பெரிய நாய்!!(படங்கள்)

1

உலகின் மிகப்பெரிய நாயாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கக் காத்திருக்கிறது கிரேட் டேன். மூன்று வயதுடைய இந்த கிரேட் டேன் நாய், அதன் பின்னங்கால்களைத் தூக்கினால் 7 அடி உயரத்திற்கு மேலாகவும் 12 கல் எடையுள்ளதாகவும் உள்ளது.

நாளொன்றுக்கு 22 மணித்தியாலங்கள் இந்நாய் உறங்குவதாகவும் பெரியவர்கள் படுத்துறங்கக்கூடிய மெத்தையே இதற்கும் தேவைப்படுவதாகவும் நாயின் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியில் வசிக்கும் ப்ரையன் மற்றும் ஜூலி வில்லியம்ஸ் ஆகியோரே இந்நாயின் உரிமையாளராவர்.
தமது நாய் குழந்தைகளுடன் நன்றாகப் பழகுவதாகவும் தனது நிழலைப் பார்த்து தானே அச்சமடைவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2 3 4 5

மூன்றாம் தரத்தில் கல்வி பயிலும் சிறுமி காட்டு யானை தாக்கி பலி!!

elephant-attack

வெல்லவாய – பலஹருவ கனிஷ்ட வித்தியாலயத்தில் மூன்றாம் தரத்தில் கல்வி பயிலும் சிறுமியொருவர் நேற்று காலை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

காட்டு யானைகளின் தாக்குதல்களால் இரண்டு மாதங்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இதனால் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி இப்பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை : பெண்ணால் பரபரப்பு!!

11

ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனிவாவில் உள்ள கொயின்டிரின் விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என ஜெனிவா பொலிஸாருக்கு காலை 9.30 மணியளவில் தொலைபேசி வாயிலாக எச்சரிக்கை தகவலொன்று வந்துள்ளது.

இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு விரைந்து சென்று பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர், மேலும் பயணிகளையும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டு, விமான நிலையத்தில் ஏதேனும் வெடிகுண்டு உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர்.ஆனால், வெடிகுண்டுகள் ஏதேனும் தென்படவில்லை, இந்நிலையில் தங்களுக்கு வந்த அழைப்பு குறித்து விசாரணையை நடத்தியதில் அது போலியான எச்சரிக்கை தகவல் என தெரியவந்துள்ளது.

மேலும், விசாரணையில் மனைவி ஒருவர், தனது கணவர் தன்னை மட்டும் தனியாகவிட்டு பயணம் செய்வதால் பொறாமை கொண்டமையால், தனது கணவரை தடுத்துநிறுத்துவதற்காக இதுபோன்ற போலியான தகவலை பொலிஸாருக்கு கூறியுள்ளாரென தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பயணிகள் மற்றும் பொலிஸாரின் நேரத்தினை வீணடித்ததோடு மட்டுமல்லாமல், இதுபோன்ற போலியான தகவலை பரப்பி பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய இப்பெண்மணி மீது ஜெனிவா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது வழக்கு விசாரணையில், இவருக்கு 30,000 யூரோ அபராதமும்,2 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 13 14

போக்கிமோன் கோவுக்கு அடிமையாகி வேலையைத் துறந்த பெண்!!

pokemon

லண்டனில் போக்கிமோன் கோ விளையாட்டுக்கு அடிமையாகி சோபியா என்ற பெண் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

போக்கிமோன் கோ என்ற வீடியோ கேமுக்கு அடிமையாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த விளையாட்டு, விளையாடும் அனைவரையும் கற்பனை உலகத்திற்கு அழைத்து செல்வதோடு மட்டுமில்லாமல், ஏராளமான பணத்தை சம்பாதிக்கும் பொழுதுபோக்காகவும் திகழ்கிறது.

இதற்கு அடிமையான வடக்கு லண்டனின் ஹை பார்னெட் பகுதியை சேர்ந்த சோபியா பெட்ரெஸா(26) என்ற பெண் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்த சோபியா, இந்த கேமின் மூலம் அதிகம் சம்பாதித்து கோடீஸ்வரர் ஆகலாம் என்ற ஆசையில் பணியை ராஜினாமா செய்ததாக தெரிகிறது.

இதற்கு முன்னதாக நியூசிலாந்து நாட்டை சேர்ந்த போக்கிமோன் ரசிகரான டாம் க்யூரி (24), என்பவரும் இந்த கேமுக்கு அடிமையானதால் தனது வேலையை கடந்தவாரம் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் தாக்குதல் நடத்திய 19 வயது தீவிரவாதி இவர்தான்!!

France Attack

பிரான்சின் வடக்கு பகுதியில் தேவாலயம் ஒன்றில் புகுந்து, ஐந்து பேரை பணையக்கைதிகளாக பிடித்து வைத்தது மட்டுமல்லாமல், மூத்த பாதிரியாரை படுகொலை செய்த ஐ.எஸ் தீவிரவாதி ஒருவரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

புகைப்படத்தில் உள்ள, 19 வயதான Adel Kermiche தாக்குதலில் ஈடுப்பட்ட இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர் என பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும், இவர் தான் பாதிரியாரை கொலை செய்வதற்கு முன்னர் மண்டியிடுமாறு மிரட்டியவர் என தெரியவந்துள்ளது.

Adel Kermiche, அமெரிக்கா உதவிப் பணியாளர் Peter Kassig மரணதண்டனை வீடியோவில் தோன்றிய பிரஞ்சு ஜிஹாதி Maxime Hauchardவின் அறியப்பட்ட நண்பர் என தெரியவந்துள்ளது.

இத்தாக்குதலுக்கு முன்னால் Adel Kermiche, Maxime Hauchardடை சந்தித்து இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். Adel Kermiche, முன்னதாக பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தில் சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர் ஐ.எஸ் இயக்கத்தில் இணைய சிரியாவிற்கு பயணம் மேற்கொள்ள முயற்சி செய்ததை தொடர்ந்து, அதிகாரிகள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சிறையிலிருந்து பிணையில் விடுதலையான Adel Kermiche, ஐ.எஸ் அமைப்பு ஆதரவுடன் பிரான்ஸ் தேவாலய தாக்குதலில் ஈடுப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் தமிழ்த் தேசிய வீரர்கள் தின நிகழ்வுகள்!!

 
1983 யூலை திங்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, ஜெகன், உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் வவுனியாவில் இன்று(27.07.2016) மாலை 3.30 மணியளவில் தமிழ்த் தேசிய வீரர்கள் தின நிகழ்வுகள் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுமான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன், யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ்பிரேமச்சந்திரன். வினோ நோதாராலிங்கம், வடமாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், சிவாஜிலிங்கம், மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட அமைப்பாளர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன் நினைவுக் கூட்டமும் இடம்பெற்றது.

1 DSC_0161 DSC_0163 DSC_0164 DSC_0165 DSC_0168 DSC_0169 DSC_0171 DSC_0175 DSC_0176 DSC_0178 DSC_0179 DSC_0180 DSC_0181 DSC_0182 DSC_0183 DSC_0184 DSC_0185 DSC_0186 DSC_0187 DSC_0188 DSC_0191 DSC_0192 DSC_0194 DSC_0195 DSC_0196 DSC_0197 DSC_0198 DSC_0199 DSC_0200 DSC_0201 DSC_0203 DSC_0205 DSC_0206 DSC_0207 DSC_0213 DSC_0214 DSC_0215

இலங்கை பெண் இங்கிலாந்தில் கொலை முயற்சி!!

1

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பெண்ணொருவர் தனது மகளை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சித்ரானி மஹேந்திரன், (74 வயது)என்ற தாயாரே குமாரி மஹேந்திரன், என்ற (26 வயது) தனது மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட குமாரி மகேந்திரன் தெரிவிக்கையில்,

தான் உறக்கத்தில் இருந்த போது கத்தியால் குத்தியதாகவும் பின்னர் தான் விழித்துக்கொண்டமையினால் தனது தாய் தன்னை துரத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது தாயார் சுகயீனமுற்றிருந்தமையால் அவரை இலங்கைக்கே அனுப்ப ஏற்பாடு செய்ததாகவும், இதன் காரணமாகவே அவர் இத்தாக்குதலை நடத்தியிருக்கக் கூடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், குறித்த தாய் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், கத்திக்குத்துக்கு இலக்கான குறித்த பெண், 2013ஆம் ஆண்டு மிஸ் வேல்ட் அழகிப் போட்டியிலும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

3 4 5