Samsung நிறுவனம் TST (Turbo Speed Technology) எனும் தொழில்நுட்பத்தை தனது புதிய ஸ்மார்ட் போன்களில் புகுத்த உள்ளது.சமீபத்தில் அறிமுகமான J2 Pro ஸ்மார்ட் போனில் இந்த தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய தொழிநுட்பம் மூலம் ஆப்ஸ்களால் போன் மெதுவாவதை தடுக்க முடியும்.
இதன் மூலம் RAM அளவை அதிகரித்து போனை 40 சதவீதம் வரை போனை வேகமாக வைத்துக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் இந்த தொழிநுட்பத்தை இனி வெளியிடும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் கொண்டு வரப் போவதாக Samsung நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த தொழில்நுட்பத்தை தெளிவாக விளக்கும் வீடியோ ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்தவர். இவருக்கு சமீபத்தில் காலில் அடிப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பின்பு தான் குணமடைந்துவிட்டதாக அவரே கூறினார்,
இந்நிலையில் கௌதமி சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘கமல் எப்போதும் ஒரு இடத்தில் இருக்க மாட்டார்.சுறுசுறுப்பாக வேலை செய்யும் அவர் ஒரே இடத்தில் இருப்பது மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது’ என கூறியுள்ளார், இது மட்டுமின்றி கபாலி படத்தை கமல் பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெய் மற்றும் அஞ்சலி எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்தனர். இப்படத்தை தொடர்ந்து அடுத்து தற்போது பலூன் என்ற படத்தில் நடிக்கவுள்ளனர்.இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் உண்மையாகவே திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறார்களாம்,
இதை தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.இந்த செய்தி கோலிவுட்டையே பரபரப்பிற்கு உள்ளாக்கியுள்ளது, பல முறை ஜெய், அஞ்சலி இருவருக்குமிடையே காதல் கிசுகிசு வந்தது குறிப்பிடத்தக்கது.
கேரளாவின் திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான தக்ஷயானி என்கிற பெண் யானை கின்னஸ் சாதனை படைத்துள்ளது.யானைகள் சராசரியாக 65 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழும், ஆனால் தக்ஷயானி என்ற யானை 86 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான நிர்வாகம், கடந்த 1949ம் ஆண்டிலிருந்து யானை கோயில் நிர்வாகத்தின் பொறுப்பில் இருந்து வருவதாகவும், முன்னாள் திருவாங்கூர் அரச குடும்பத்தினரால் பரிசளிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னதாக தைவானை சேர்ந்த யானை 85 ஆண்டுகள் வாழ்ந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட ஆறு பேரை உடனடியாக கைதுசெய்ய கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இன்று (28) உத்தரவிட்டுள்ளார்.குறித்த உத்தரவினை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு நீதவான் பிறப்பித்துள்ளார்.
ஹலோ கோப் நிறுவனத்தின் ரூபா 10 இலட்சத்து 125 பெறுமதியான பங்குகள் கொள்வனவு செய்தமை, குறித்த பணம் அவருக்கு எவ்வாறு கிடைத்தது தொடர்பிலான சந்தேகத்தினை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு நீதிமன்றில் இன்று முன்வைத்திருந்தது.
இந் நிலையில் இது தொடர்பில் ஆராய்ந்த நீதவான் நாமல் ராஜபக்ஷ உள்ளிட ஆறு பேரையும் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
க. பொ. த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் எடுத்து வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறும் அதேவேளை பரீட்சை மண்டபத்தினுள் பரீட்சை மண்டப நோக்குனர்களும் மேற்கூறப்பட்ட இலத்திரனியல் உபகரணங்களை பாவிக்கவோ கொண்டுவரவோ கூடாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நோக்குனர்கள் அவர்களது தொலைபேசிகளை மூடி மேற்பார்வையாளரிடம் கொடுத்துவிட்டே மண்டபத்தினுள் வரவேண்டும்.மேற்பார்வையாளர் மாத்திரம் தனது செல்லிடத்தொலைபேசியை அமைதியில் வைத்த்திருக்க அனுமதியுண்டு. நோக்குனர்கள் யாராவது மண்டபத்தினுள் தொலைபேசி வைத்திருந்து பிடிபட்டால் மேற்பார்வையாளர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்வியமைச்சின் 03 திடீர் சோனைக்குழுக்கள் நாடளாவியரீதியில் பரவலாக சோதனையிலீடுபடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே பரீட்சையை நேர்மையாகவும் நீதியாகவும் நடாத்த பரீட்சை ஊழியர்கள் கூடுதல் ஒத்துழைப்பையும் உதவியையும் வழஙங்கவேண்டும் என பரீட்சைத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேற்படி உபகரணங்கள் பரீட்சை மண்டபத்தினுள் பரீட்சார்த்திகளுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் பெறுபேறுகள் ரத்து செய்யப்படும். அவர்களுக்கு 05 வருடங்களுக்கு எந்தவொரு அரசாங்கப் பரீட்சைகளும் எழுத அனுமதிக்கப்படமாட்டாது. கண்டு பிடிக்கப்படும் கையடக்கத் தொலைபேசி அல்லது ஸ்மார்ட் கைக்கடிகாரம் அல்லது இலத்திரனியல் சாதனங்கள் அரசுடமையாக்கப்படும்.
எதிர்வரும் 02 ஆம் திகதி க. பொ. த உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இவற்றை கண்டுபிடிப்பதற்கென நான்கு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்துடன் வலய மட்டத்திலும் விசேட குழுக்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்.கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட கைக்கடிகாரங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் என்பவற்றை மாணவர்கள் எடுத்து வருகிறார்களா என்பதனை தீவிரமாக கண்காணிக்குமாறு பரீட்சை மண்டப உத்தியோகத்தர்களுக்கும் கண்காணிப்பாளர்களுக்கும் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவுறுத்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹம்பாந்தோட்டை – ரண்ண பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் பணம் மற்றும் தங்க நகைகளை சூறையாடிய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இரண்டு சந்தேகபர்கள் தனக்கு சுகயீனம் என்று கூறி, குறித்த மருந்தகத்திற்குச் சென்று அங்குள்ள வைத்தியரை அச்சுறுத்தி வைத்தியரிடம் இருந்த 18 ஆயிரம் ரூபா பணத்தையும், தங்க நகைகளையும் சூறையாடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பல குற்றச்சாட்டுக்கள் காரணமாக இதற்கு முன்னரும் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் தற்போது பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சந்தேகநபர்களை இன்று அங்குனகொலபெலஸ்ஸ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். குறித்த விபத்து நேற்று இரவு 11.30 மணியளவில், அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொட்டகலை, தலவாக்கலை பகுதியிலிருந்து அட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கெப் ரக வாகனம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில், மோட்டர் சைக்கிளில் சென்ற இருவருமே பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெப் ரக வாகன சாரதியை கைது செய்து விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசாங்க பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை நாளையுடன் நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளைய தினம் அரசாங்க பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் மூன்றாம் தவணை ஆகஸ்ட் 31 ஆம் திகதி ஆரம்பம் ஆகும் எனவும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
கண்டி மற்றும் கண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மதுபானசாலைகளை 10 நாட்களுக்கு மூடவுள்ளதாக கலால் தீர்வை திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்டி தலதா மாளிகையில் இடம்பெறவிருக்கும் பெரஹராவை முன்னிட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 8ஆம் திகதியில் இருந்து ஆகஸ்ட் 18ஆம் திகதி வரையிலேயே மதுபானசாலைகள் மூடப்பட உள்ளன.
இந்த காலக்கட்டத்தின் போது சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை கொள்வனவு செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலால் தீர்வை திணைக்களம் அறிவித்துள்ளது.
வவுனியாவில் நேற்று இரவு பண்டாரிக்குளம் பகுதியில் வர்த்தக நிலையம் உடைத்து திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா பண்டாரிகுளம் விசாகர் வீதியிலுள்ள வர்த்தக நிலையம் நேற்று(27.07.2016) இரவு திருடர்களினால் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது
வர்த்தக நிலையத்திலிருந்த சிகரட் உட்பட மூன்று லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலதிக வசாரணையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால் அகிலாண்டேஸ்வரம் எனப் போற்றப்படும் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம் நேற்று 27.07.2016 மதியம் 12.00 மணியளவில் சிவஸ்ரீ. சதா.சங்கரதாஸ் சிவாச்சாரியார் தலைமையில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது .
மேற்படி கொடியேற்ற வைபவத்தின் காலை முதல் அபிசேகங்கள் கிரியைகள் இடம்பெற்று கொடியேற்றம் இடம்பெற்று தொடர்ந்து அம்பாள் இடப வாகனத்தில் உள்வீதி மற்றும் வெளிவீதி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தாள் .
நேற்றைய முதல் நாள் மாலை உற்சவத்தின் போது வசந்தமண்டப பூசையை தொடர்ந்து அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்தாள் .
இம் மருத்துவ முகாம் கே.காதர் மஸ்தான் பா.உ அவர்களின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட நெடுங்கேணி மருதோடை கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அன்றைய தினம் பெருமளவிலான மக்கள் வருகை தந்து மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று சென்றனர் இதன் நோக்கமானது. வாழ்வாதார நிலையில் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களை நாடிச்சென்று அவர்களின் தேவையை உணர்ந்து சுகாதார ஆலோசனை, விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை வழங்குவதாகும்.
இம் மருத்துவ முகாமில் வைத்தியர் மு.ஆ.முபாரிஸ் மற்றும் மருத்துவ குழாமினர் கலந்து கொண்டதுடன் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் மாஹிர், அலுவலக உதவியாளர் சஜாஸ் மற்றும் ஊடக உறவு வெளிவிவகார செயலாளர் நவ்பர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பிரான்சில் இடம்பெற்ற ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளின் தாக்குதலில் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறவுகளிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் இராமலிங்கம் – ஞானசேகரம் வயது 46 என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
பிரான்சில் கடந்த வாரம் பார ஊர்தி ஒன்றினால் மோதி பலரின் உயிரைப் பறித்த தாக்குதலில் அகப்பட்ட குறித்த யாழ் வாசி தலையில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் மூளை செயல்இழந்து மரணமடைந்துள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 25 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டிற்கு சென்று தஞ்சமடைந்த நிலையில் வாழ்ந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் மூளை செயல்இழந்தபோதிலும் உடம்பின் பல பாகங்கள் நேற்று முன்தினம் செயல்பட்ட நிலையில் நேற்று அதிகாலையில் உயிரிழந்த்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் முன்பு இடம்பெற்ற ஓர் அனர்த்தத்தில் உயிரிழந்த நிலையில் தனிமையில் வாழ்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் தாயார் , மற்றும் உடன் பிறந்த உறவுகள் ஆகியோர் யாழில் வசிக்கின்றனர்.
அவுஸ்திரேலியாவில் தாய் ஒருவர் தனது மகளின் பாதுகாப்பு கருதி, இரவு நேரத்தில் அவரை மரப்பெட்டிக்குள் பூட்டி வைப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள கிராமப்புறத்தில் வசித்து வரும் Emma என்பவர் கணவரை இழந்து தனது 16 வயது பெண் குழந்தை Stephanie ஐ தனியாக வளர்த்து வருகிறார்.
இவர்கள் வசிப்பது கிராமப்புறம் என்பதால், பெண்களுக்கு அதிக ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, எம்மாவின் மகள் ஸ்டீபனி சிறுவயது குழந்தையாக இருக்கும்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.
தனது வீட்டில் மரப்பெட்டி ஒன்றினை தயார் செய்துள்ள எம்மா, அதற்குள் மகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, அந்த பெட்டிக்குள் வைத்து பூட்டி வைத்துவிடுகிறார்.
இதுகுறித்து எம்மா கூறியதாவது, எனது மகளின் பாதுகாப்பு தான் எனக்கு முக்கியமானது, அவளை மரப்பெட்டிக்குள் பூட்டி வைத்தபின்னர் தான் எனக்கு நிம்மதியாக இருக்கும், ஒருவேளை அவளை பூட்டிவைக்கவில்லை என்றால் எனக்கு அச்சமாக இருக்கும்.
சிறுவயதில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதால், மனநலரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அவள் தன்னைத்தானே அதிகம் காயப்படுத்திக்கொள்கிறாள், கடந்த 2 வருடங்களில் மட்டும் 12 முறை, தனது கைய், கால், வயிறு போன்றவற்றை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளாள்.
எனது மகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஆனால், அவளுக்கு தினசரி சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கிறது என கூறியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டீபனி கூறியதாவது, என்னை இதுபோன்று பூட்டிவைத்திருப்பது சிறைக்குள் அடைத்து வைத்திருப்பது போன்று உணர்கிறேன், அது என்னை வேதனைக்குள்ளாக்குகிறது என கூறியுள்ளார்.
டென்மார்க்கை சேர்ந்த தமிழ்பெண், துணை விமானியாகும் தனது விருப்பதை முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அர்ச்சனா செல்லத்துரை என்பவர், டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியை தொடங்கவிருக்கிறார்.
தனது விமான போக்குவரத்து விமானி உரிமத்தை Learn to fly Aps – இல் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, Commercial Pilot Licence மற்றும் Multi IFR Rating குறித்த படிப்பினை Diamond Flight Academy Scandinavia பயின்று வரும், இவர் விரைவில் துணை விமானியாகவிருக்கிறார்.
உனது விமான படிப்பினை முடித்துவிட்டாயா? என ஒவ்வொரு நாளும் கேள்விகள் வரும், தற்போது அதற்கான முடிவு கிடைத்துவிட்டது என கூறியுள்ளார்.