தமிழ்ப் பட நடிகைகளை ஒதுக்கும் இந்தி திரையுலகம்!!

Tamil Actress

திரிஷா, காஜல் அகர்வால், ஸ்ரேயா, தமன்னா ஆகியோர் நடித்த இந்தி படங்கள் தோல்வி அடைந்ததால் அங்குள்ள பட உலகினர் அவர்களை ஒதுக்கினர். இதனால் மீண்டும் தமிழ்-தெலுங்கு படங்களில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாள கதாநாயகிகள் இந்தி படங்களில் நடிப்பதை பெருமையாக கருதுகிறார்கள். அதிக சம்பளம், பெரிய நட்சத்திர அந்தஸ்து, உலகளாவிய வியாபாரம் போன்றவை அவர்களை இந்தி பக்கம் இழுக்கின்றன.

ஆனால் அங்கு தலைகாட்டிய நடிகைகள் பலருடைய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. திறமை இருந்தும் அவர்களால் நிலைக்க முடியாமல் போனது. ஸ்ரீதேவி, ஹேமாமாலினிக்குப் பின்னர் தென்னிந்திய நடிகைகள் யாரும் இந்தியில் ஆதிக்கம் செலுத்தவில்லை.

இந்தி கஜினியில் நடித்து ஒரு படத்திலேயே உச்சத்துக்கு போய் மற்ற இந்தி நடிகைகளை கதிகலங்க வைத்த அசினுக்கு அதற்குப் பின்னர் நடித்த படங்கள் கைகொடுக்கவில்லை. சல்மான்கான், அபிஷேக் பச்சன், அக்‌ஷய்குமார், அஜய்தேவ்கான் என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தும் அவரால் வளரமுடியவில்லை. இதனால் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டே விலகிவிட்டார்.

ரஜினிகாந்துடன் சிவாஜியில் நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தில் இருந்த ஸ்ரேயாவுக்கு தெலுங்கிலும் கை நிறையப் படங்கள் இருந்தன. அவருக்கும் இந்திப் பட ஆசை வந்ததால் மும்பைக்கு பறந்தார். இதுவரை 10 இந்தி படங்களில் நடித்தும் அவைகள் சரியாக ஓடாததால் முன்னணி நடிகைகள் இடத்துக்கு வர முடியவில்லை. தற்போது சிம்புவுடன் தமிழ் படத்தில் நடிக்க வந்து விட்டார்.

தமிழில் 10 வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்து வரும் திரிஷாவையும் இந்தி பட ஆசை விட்டு வைக்கவில்லை. காட்டா மீட்டா படத்தில் அக்‌ஷய்குமாருடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அந்த படம் தோல்வியடைந்தது. இதனால் இந்தி ஆசையை மூட்டைகட்டி விட்டு மீண்டும் தமிழுக்கே வந்து விட்டார்.

காஜல் அகர்வாலுக்கு தமிழ், தெலுங்கு மார்க்கெட் நன்றாகவே இருந்தது. அவர் நடித்த படங்கள் வசூல் குவிக்கவும் செய்தன. ஆனால் இவரும் சிங்கம் படத்தின் இந்திப் பதிப்பில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடித்து இந்தி பட உலகுக்கு அறிமுகமானார்.

ஸ்பெஷல் 26 என்ற படத்தில் அக்‌ஷய்குமாருடன் நடித்தார். இந்த இரண்டு படங்களும் வெற்றிகரமாக ஓடினாலும் கதாநாயகர்களுக்கே பெயர் வாங்கி கொடுத்தன. காஜல் அகர்வால் கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்க்கப்பட்டார். தொடர்ந்து ரன்தீப் கோடாவுடன் நடித்த டி லப்சூன் கி கஹானி படம் தோல்வி அடைந்ததால் இந்தி பட உலகம் அவரை ஓரம்கட்டி விட்டது.

தமன்னாவுக்கு இந்தியில் அஜய்தேவ்கன், அக்‌ஷய்குமார், சயீப் அலிகான் ஆகியோருடன் நடித்த 3 படங்களும், தோல்வியடைந்து அவருடைய இந்திப்பட கனவைத் தகர்த்துவிட்டது. மீண்டும் தென்னிந்திய மொழி படங்களுக்கு திரும்பி வாய்ப்பு தேடுகிறார்.

லக் படத்தில் அறிமுகமாகி 8 இந்தி படங்களில் நடித்து விட்ட சுருதிஹாசனை அங்குள்ளவர்கள் அழகான நடிகை என்று புகழ்கிறார்கள். ஆனாலும் முன்னணி நடிகை பட்டியலில் அவரை சேர்க்காமல் வைத்துள்ளனர்.

டாப்சி இந்தி பட ஆசையால் மும்பைக்கு போய் 3 படங்களில் நடித்து விட்டார். அவை வெற்றிகரமாக ஓடாததால் முன்னுக்கு வர முடியவில்லை. இந்திக்கு போனதால் அவருக்கு வர வேண்டிய தமிழ், தெலுங்கு பட வாய்ப்புகளும் பறிபோய் விட்டன.

இதுபோல் இலியானாவும் இந்தி பட ஆசையில் போய் படங்கள் தோல்வி அடைந்ததால் பின்னுக்கு தள்ளப்பட்டு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி விடலாமா என்ற யோசனையில் இருக்கிறார்.

கிரிக்கெட்டின் அதியுயர் விருதிற்கு முத்தையா முரளிதரன் தேர்வு!!

Murali

கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது வாழ்நாளில் பெறக்கூடிய அதியுயர் விருதான ஹோல் ஒப் பேம் விருதிற்கு இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை அணி சார்பில் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட முதலாவது வீரர் முத்தையா முரளிதரன் என்பது விசேட அம்சமாகும்.

வவுனியாவில் இரு பொருளாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது : அமைச்சர் ராஜித!!

Vavuniya

இவ்வளவு நாளும் வடக்கில் அமைக்கவிருக்கும் பொருளாதார மத்திய நிலையம் எந்த இடங்களில் அமைக்கப்படும் என்ற இழுபறி நிலை காணப்பட்டது. ஆனால் அதற்கான தீர்வை நேற்று ஜனாதிபதி தெரிவித்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதனடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கருத்தையும், வடமாகாண முதலமைச்சர் ஒரு கருத்தையும் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பில் வடமாகாண சபையில் வாக்கெடுப்பு ஒன்றும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதற்கான தீர்வை ஜனாதிபதி தற்பொழுது வழங்கியுள்ளார்.
ஓமந்தையில் ஒரு பொருளாதார மத்திய நிலையமும், வவுனியாவில் ஒரு மத்திய நிலையமும் அமைக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

மொட்டை ராஜேந்திரன் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?

Mottai-Rajendran-turns-singer

தமிழ் சினிமாவில் சமீப காலமாக கதை இருக்கிறதோ இல்லையோ, மொட்டை ராஜேந்திரன் இருக்கிறார். இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் தான்.அதிலும் சமீபத்தில் வந்த தில்லுக்கு துட்டு படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, இந்நிலையில் இவரின் சம்பள விவரம் தற்போது வெளிவந்துள்ளது.

இவர் ஒரு நாளைக்கு ரூ 2 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம், சிறு பட்ஜெட் படம் என்றால் ரூ 1 லட்சம் முறையே வாங்குகிறார் என கூறப்படுகின்றது.

சாதி என்னை விரட்டுகின்றது, பா.ரஞ்சித் உருக்கம் மற்றும் பதிலடி!!

Ranjith_2157718f

படம் வசூல் எல்லாம் தாண்டி சமூக வலைத்தளத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. எல்லோருக்குமிடையே ஒரு வாக்குவாதத்தை உண்டாக்கியுள்ளது.இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் ஒரு பேட்டியில் ‘சாதி, சாதி என்று இதை பற்றியே பேசுகிறீர்கள் என்றால், நான் எங்கு சென்றாலும் முதலில் என் சாதி தான் எல்லோருக்கும் தெரிகின்றது.

மேலே இருப்பவர்களுக்கு எந்த கவலையும் இல்லை, ஆனால், கீழே இருக்கும் நான் மீண்டும் மீண்டும் கேட்பேன், கேட்டுக்கொண்டே இருப்பேன்’ என பதில் அளித்துள்ளார்.

புதிய அம்சங்களுடன் அறிமுகமாகும் கூகுள் மேப்பின் புதிய பதிப்பு!!

hc-31

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட பல்வேறு சேவைகளுள் கூகுள் மேப் சேவையும் ஒன்றாகும்.இன்று உலகளாவிய ரீதியில் பல மில்லியன் பயனர்களால் இவ் வசதி பயன்படுத்தப்படுகின்றது.இதனைக் கருத்திற் கொண்டு தனது பயனர்களுக்கான சேவையினை கூகுள் நிறுவனம் இலகு படுத்தி வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக கூகுள் மேப் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்கின்றது.இப் புதிய பதிப்பில் சில புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.அவற்றில் பிரதானமாக WiFi Only Mode வசதி தரப்பட்டுள்ளது.

இவ் வசதியின் ஊடாக மொபைல் சேவை வழங்குனர் ஊடாக டேட்டா வீண் விரயமாவது தடுக்கப்படுகின்றது.இது தவிர போக்குவரத்து தொடர்பாக ஏற்படும் தாமதங்களுக்கான காரணங்களையும் உடனுக்கு உடன் தெரிந்துகொள்ளும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.இந்த அப்பிளிக்கேஷன் ஆனது தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

கபாலி தோல்விப்படம் : சர்ச்சைக்குரிய பேச்சிற்கு வைரமுத்து விளக்கம்!!

Varaimuththu

பல்வேறு எதிர்பார்ப்புக்களை மத்தியில் வெளியான கபாலி திரைப்படம் பற்றி தினமும் பல்வேறு சர்ச்சைகள் நடைபெற்று வருகின்றன.

கவிஞர் வைரமுத்து சமீபத்தில் பங்கேற்ற விழா ஒன்றில் நான் புரிந்துகொள்கிறேன் ஒவ்வொருவரையும் என்று ஆரம்பித்து, அரசியலை, விஞ்ஞானத்தை என்று ஒவ்வொன்றாக பட்டியலிட்டுக் கொண்டே வருகிறார்.

இறுதியில் கபாலி தோல்வியையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்று பேசுகிறார். அவரது உரை அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்துவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் தனது பேச்சில் ஒரு சிறு தவறு நடந்துவிட்டது குறித்து வைரமுத்து விளக்கமளித்து இதை சர்ச்சையாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது..

கடந்த ஞாயிறு என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேச நேர்ந்தது. அவரது கடவுள் நம்பிக்கையோ எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கிச் சொன்னேன்.

கடவுளை ஏற்றுக் கொள்வது ஒரு நிலை, புரிந்து கொள்வது ஒரு நிலை. ஏற்றுக்கொள்ளாததைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும். கடவுளை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால்கூட அதன் உளவியல் தேவையைப் புரிந்துகொண்டிருக்கிறேன் என்பதை விரிவாகச் சொல்ல முயன்றபோது,

ஆண்- பெண் – உறவுகள் – இல்லறம் அன்பு – காதல் – கண்ணீர் – அரசியல் – கலை – அண்மையில் காணாமல் போன விமானம் மற்றும் கபாலியின் தோல்வி இவைகளை ஏற்றுக்கொள்ள முடியாத இடத்திலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று உணர்ச்சி ஓட்டத்தில் குறிப்பிட்டேன்.

நான் சொன்ன வேகத்தில் ஒரு வார்த்தை விடுபட்டுப் போய்விட்டது என்று பிறகு புரிந்து வருந்தினேன். கபாலி வெற்றி தோல்வி என்று பேசப்படுவதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்ல வந்தேன். அதில் வெற்றி என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது.

என் நோக்கம் நான் சார்ந்திருக்கும் திரையுலகை, நான் பெரிதும் நேசிக்கும் ரஜினியைத் திட்டமிட்டுக் குறைத்துச் சொல்வதல்ல. என் நெஞ்சு தூய்மையானது. ஒரு வார்த்தை அதற்கு வசப்படாமல் போயிருக்கலாம். அதை யாரும் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.

இந்தச் செய்தி வெளியாவதற்கு முன்பே ரஜினி சென்னைக்கு வந்த மறுநாள் அவரிடமே தொலைபேசியில் இதைக் குறிப்பிட்டுச் சொன்னேன். அவர் எனக்கும் சில நண்பர்கள் அப்படித்தான் சொன்னார்கள் என்று பெருந்தன்மையாகப் பேசினார். எங்கள் நட்பு பெரியது தயவு செய்து யாரும் இதைச் சர்ச்சையாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் போக்கிமோன் கோ: மான்ஸ்டரை பிடிக்க போய் சேறு குழியில் சிக்கிய முதியவர்!!

s5nxvvnde6fif2nvtshlsppvl-laa3di-large

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் முதியவர் ஒருவர், நள்ளிரவில் போக்கிமோன் கோ கேம் விளையாடி சேறு நிரம்பிய குழியில் சிக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோய்மான்ஸ் நகரத்தில் 62 வயது முதியவர் ஒருவர், நள்ளிரவு 2 அளவில் தனது கைப்பேசியில் போக்கிமோன் கோ கேம்மை விளையாடிவுள்ளார்.

விளையாட்டில் மூழ்கிய முதியவர், ஒரு மான்ஸ்டரை பிடிப்பதற்காக தனது வீட்டிற்கு பின்னுள்ள காட்டிற்கு சென்றுள்ளார், அப்போது திடீரென சேறு நிரம்பிய குழியில் விழுந்துள்ளார். இடுப்பு பகுதி வரை குழியில் சிக்கியதால் அவரால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து அவர் தனது கைப்பேசியை பயன்படுத்தி அவரச உதவி எண்ணான 911-ஐ அழைத்துள்ளார்.முதியவரின் கைப்பேசி வழிகாட்டுதலின் மூலம் சம்பவயிடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

கைப்பேசியில், நிஜமாக நாமே களத்தில் இறங்கி விளையாடும் படி வடிவமைக்கப்பட்டுள்ள ’போக்கிமோன் கோ’ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை விமான நிலையத்தை பதற வைத்த பாம்பு பார்சல்!!

snake-park
தைவான் நாட்டிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில், பாம்பு ஒன்று பார்சலில் அனுப்பப்பட்டுள்ளதை கண்டு விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.நேற்று இரவு தைவானில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

சோதனையின் போது, ஒரு பார்சல் வித்தியாசமாக இருந்துள்ளது. குறித்த பார்சலை திறந்து சோதனை செய்து பார்த்தபோது அதனுள் பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.பின்னர், பார்சல் குறித்து நடத்திய விசாரணையில், அது சென்னை கேகேநகர் 68வது தெரு முகவரிக்கு வந்துள்ளது.மேலும் அந்த பார்சலினுள் காஸ் அடுப்பு, மிக்சி மற்றும் டிவிடி பிளேயர்கள் இருந்துள்ளன.

பார்சலை அனுப்பியவரின் முகவரி தைவான் மொழியில் இருந்ததால் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை கேகேநகர் 68வது தெருவிற்கு சென்று விசாரணை நடத்தியபோது, அது போலி முகவரி என்பது தெரியவந்துள்ளது.மலைப்பாம்பை பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐக்கிய அரபு இராட்சியத்தில் அடிமை தொழிலாளர்களாக்கப்படும் இலங்கையர்கள்!!

12335

ஐக்கிய அரபு இராச்சிய நாடுகளுக்கு தொழில் நிமிர்த்தம் செல்லும் இலங்கையர்களை கட்டாயப்படுத்தி அந்நாட்டில் அடிமை தொழிலாளர்களாகப்படுவதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய வலய நாடுகளை சேர்ந்த இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த தொழிலாளர்கள் வறுமையின் நிமிர்த்தம் தொழிலிற்காக அதிகமானோர் செல்லும் நாடாக மத்திய கிழக்கின் ஐக்கிய அரபு இராச்சியம் விளங்குகின்றது.

அண்மையில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் 100 இற்கும் மேற்பட்ட ஆசிய வலய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் காலாவாதியான விசாக்கள் மூலம் பணிபுறிவதாகவும் மேலும் இவர்களுக்கான கொடுப்பனவுகள் கடந்த சில மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளதோடு தொழில் முகவர்கள் இவர்களின் விசாக்களை புதிப்பிக்க மறுத்து வருகிறமையால் தங்களால் தங்களின் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள தொழிலாளர்கள் தம்நாட்டு அரசாங்கத்திடம் உதவிகளை கோறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஷங்ரீலா நிறுவனம் அரசாங்கத்திடம் நட்டஈடு கோரியுள்ளது!!

Shangri-La
காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஷங்ரீலா ஹோட்டல், போர் சிட்டி திட்டத்தின் மூலம் மறைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடல் காட்சியைப் பார்க்கக் கூடிய வகையில் ஹொட்டல் நிர்மாணிக்கப்படுவதாகவும், போர்ட் சிட்டி திட்டத்தின் ஊடாக கடலை ஹோட்டலில் இருந்து பார்க்க முடியாத நிலைமை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனால் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை அரசாங்கம் மீறியுள்ளதாகவும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமெனவும் ஷங்ரீலா ஹோட்டல் கோரியுள்ளது.முன்னால் கடல் தென்படுவதனை கருத்திற்கொண்டே ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. ஹோட்டலின் முன்னால் பாரிய நகரமொன்று நிர்மாணிக்கப்படுவதனால், சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்க முடியாது போகும் என தெரிவித்துள்ளது.

இதனால் ஹோட்டலுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நட்டஈடு வழங்கப்பட முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அபிவிருத்தித் திட்டங்களின் போது சில சில மாற்றங்கள் ஏற்படும் எனவும் இது குறித்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. 300 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 500 அறைகளைக் கொண்ட பாரிய நட்சத்திர ஹோட்டல் ஒன்றாக ஷங்ரீலா நிர்மாணிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியர்களின் கொடுப்பனவுகள்,ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்: சுகாதார அமைச்சர்!!

rajitha-senaratne_2-720x480
வைத்தியர்களின் கொடுப்பனவுகள், ஓய்வூதியங்கள் என்பன அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்த வாரமளவில் வைத்தியர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை தற்போது வைத்தியர்களுக்கான அனைத்து வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தொழிற்சங்க உரிமைகளை பெறுவதற்கான ஆயுதம் பேச்சுவார்த்தையே அன்றி வேலைநிறுத்தப் போராட்டம் அல்லவென்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தொழிற்சங்க அமைப்புகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுக்க தயாராகவிருப்பதாகவும் அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.

யானை தாக்கி சிறுமி பலி!!

big_403165_1455721608
வெல்லவாய பகுதியில் யானை தாக்கி பாடசாலை சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் குறித்த சிறுமி தன் தாத்தாவுடன் பாடசாலைக்குச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த சிறுமி 9 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியின் தாத்தா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளுவர் சிலைகள் வைக்கப்படுவதற்கு இலங்கையில் அதிருப்தி!!

01TH-STATUE_2227964g

இலங்கையில் திருவள்ளுர் சிலைகள் வைக்கப்படுவதற்கு சிங்கள ஊடகமொன்று அதிருப்தி தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது.அந்தச் செய்தி வருமாறு:-

தமிழகத்தின் தமிழ் கவிஞரான திருவள்ளுவர்களின் 16 சிலைகள் இலங்கைக்கு கொண்டு வந்து நாடு முழுவதிலும் அவற்றை வைக்க எடுக்கும் முயற்சி பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளது.கொழும்பு, மாத்தளை, ஹட்டன், நாவலப்பிட்டி, புத்தளம், சாவகச்சேரி, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்ப, கட்டைப்பறிச்சான் ஆகிய நகரங்களில் இந்த சிலைகள் வைக்கப்பட உள்ளன.

தமிழக கவிஞர் ஒருவரின் சிலைகள் இலங்கையில் வைக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.எனினும் இது குறித்து மக்களினதோ மாகாணசபைகளினதோ கருத்து கோரப்படவில்லை.தமிழகத்தின் வீ.ஜீ.வீ என்ற நிறுவனமே இந்த சிலைகளை வழங்குகின்றன.இந்த சிலைகளுக்கான சுங்கத்தீர்வையை யார் செலுத்தினார்கள் என்பது இதுவரையில் தெரியவரவில்லை என சிங்கள பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

 
இன்று (27.07.2016) வவுனியா பூங்கா வீதியில் நகரசபை வாகனமும் மோட்டார் சைக்கில் ஓன்றும் விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியாவிலிருந்து பூங்கா வீதியுடாக பயணித்த வவுனியா நகரசபையின் வாகனம் நூலக வீதிக்கு திரும்ப முற்பட்டபோது வைரவப்புளியங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலை செலுத்திவந்தவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC_0140 DSC_0141 DSC_0142 DSC_0143 DSC_0144 DSC_0145 DSC_0146 DSC_0147 DSC_0148 DSC_0149 DSC_0150 DSC_0151 DSC_0152 DSC_0153 DSC_0154 DSC_0155 DSC_0156 DSC_0157 DSC_0158 DSC_0159 DSC_0160

வவுனியாவில் வழங்கப்பட்ட திட்டங்களை பார்வையிட்டார் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன்!!

 
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால் வடக்கு மாகாணம் முழுவதும் பேரூந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வவுனியா மாவட்ட மாகாண சபையின் உறுப்பினர் ஏ.ஜெயதிலக அவர்களது வேண்டுகோளுக்கிணங்க வவுனியா இரட்டைபெரியகுளத்தில் உள்ள பரக்கும் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிறுத்தகத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற நிலையில் உறுப்பினரது அழைப்பிலே கடந்த 25.07.2016 திங்கள் மாலை 3.30 மணியளவில் அதனை பாரவையிட்டார் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன்.

குறித்த பேரூந்து நிறுத்தத்தை குறுகிய காலத்திற்குள் கட்டி முடித்த ஒப்பந்த காரர்களுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, விரைவில் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டு மாணவர்களது பாவனைக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதே வேளை யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்திற்கு முன்பாகவும் மாணவர்களது நலன் கருதி அமைக்கப்படும் பேரூந்து நிறுத்தமும் விரைவில் மீதி வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டு, மாணவர்களது பாவனைக்கு ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

1 13600128_10209918792875589_6225353865934313311_n 13615340_10209918813436103_6552407800688340820_n 13615483_10209918813036093_6633861938360046856_n 13654389_10209918812836088_5569129135823543905_n 13669115_10209918787315450_2873208016156751746_n 13781704_10209918786595432_1928541672398126247_n 13781996_10209918794195622_6064466879438077942_n 13782257_10209918794715635_4119961954195738079_n 13782257_10209918796755686_7295457333853932874_n