கடந்த 2010ம் ஆண்டு ஹெரோயின் போதைப் பொருளினை வியாபாரம் செய்யதாகவும் தனது உடமையில் மறைத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்து வவுனியாவைச் இருவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கிற்கான தீர்ப்பு 29.04.2016 அன்று வழங்கப்படவிருந்தது எனினும் அப்போதைய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் அவர்கள் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றதன் காரணமாக இவ் வழற்கிக்கான தீர்ப்பு 22.07.2016 அன்று பிற்போடப்பட்டது.
பிரதம நீதியரசரின் விஷேட நியமணத்தின் பேரில் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்த மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் அவர்கள் இரண்டாம் எதிரிக்கு இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் குற்றம் அற்றவர் என காணப்பட்டு விடுவித்து விடுதலை செய்யப்பட்டார்.
எனினும் இவர் முதல் நாளான 21.07.2016 அன்று இரவு 11.20 மணிக்கு அனுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்து விட்டதாக மன்றிற்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த வழங்கிலே பெயர் குறிப்பிடப்பட்ட முதலாம் எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரம் செய்தார் என்ற முதலாவது குற்றச்சாட்டிற்கு குற்றம் அற்றவர் என்று காணப்பட்டு குறித்த குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக இரண்டாவது குற்றச்சாட்டான ஹெரோயின் போதைப் பொருளினை தனது உடமையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாக காணப்பட்டு ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர்.
90ம் ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘குச் குச் ஹோத்தா ஹை’ என்ற இந்தித் திரைப்படத்தில் தாயின் மறைவுக்குப் பிறகு தனிமையில் வாடும் தனது தந்தைக்கு அவருடைய பழைய காதலியை தேடிச் சென்று தந்தைக்கு திருமணம் செய்து வைப்பார் 8 வயது மகள்.
சினிமாவில் பார்த்து ரசித்துப் பார்த்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், கேரளாவில் நிஜத்திலும் அரங்கேறியிருக்கிறது.
கேரளா மாநிலம் கொல்லத்தில் வசிக்கும் அனிதா செம்புவில்யால், தனது இளம்வயதில், ஜி.விக்ரம் என்ற தனது பத்தாம் வகுப்பு ஆசிரியர் மீது காதல்வயப்பட்டார். ஆற்றங்கரையிலும் கடல்மணல்வெளியிலும் தங்கள் காதலை நாள்தோறும் வளர்த்தனர்.
ஆனால் தங்களது காதலை பெற்றோரிடம் தெரிவித்த போது, அப்படி ஒரு எதிர்ப்பை சந்திப்போம் என இருவரும் நினைத்துப்பார்க்கவில்லை. அனிதாவின் காதலுக்கு அவரது பெற்றோரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
துணிந்து ஒருநாள் அனிதாவை பெண் கேட்டு வந்த விக்ரமை அவமானப்படுத்தியதோடு நில்லாமல் தன் அதிகாரத்தைக்காட்டி அந்த ஊரைவிட்டே வெளியேறச் செய்தார் அனிதாவின் தந்தை.
நொறுங்கிப்போனார் அனிதா. அனிதாவின் தந்தை அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. அனிதாவின் படிப்பை பாதியில் நிறுத்தி அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
கொஞ்சகாலம்தான் அந்த வாழ்க்கை இனித்தது. அனிதாவின் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி ஒருநாள் எதிர்பாராதவிதமாக இறந்தார்.
அதன்பின் தனது 2 குழந்தைகளுடன் தன் வாழ்க்கையை மீண்டும் துவக்கினார் அனிதா. அனிதாவின் 2 மகள்களும் வளர்ந்து கல்லுாரிக்கு செல்லும் வயதை எட்டினர்.
கணவரின் மறைவுக்கு பிறகு பல சிரமங்களுக்கு இடையே தன் 2 மகள்களையும் வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்துவைத்தார் அனிதா.
இந்த சமயத்தில்தான் அந்த எதிர்பாராத சம்பவம் அனிதாவின் வாழ்வில் நிகழ்ந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் பணிக்காக சென்ற இடத்தில் தனது பழைய காதலன் ஜி.விக்ரமை சந்திக்க நேர்ந்தது.
அனிதாவின் பிரிவிற்குப்பின் அவரது நினைவாக விக்ரம் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருவது தெரிந்து உருகிப்போனார் அனிதா.
ஊர் திரும்பிய பின் தன் வளர்ந்த மகள்களிடம் ஒருநாள் இதை சாதாரணமாக சொல்லி அழுதார்.அனிதா இதை சொல்லிவிட்டு வேறு வேலையில் மூழ்கிப்போனார்.
ஆனால் அம்மாவின் சோகக் கதையைக் கேட்ட மகள்களால் துாங்க முடியவில்லை. அவர்களுக்கு அது கண்ணீரை வரவழைத்தது. தீர்மானமாக ஒரு முடிவெடுத்தனர் சகோதரிகள்.
விக்ரமை நேரில் சந்தித்து தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். அவரது குடும்பத்தினரிடம் பேசி அனுமதி பெற்று அதை தன் தயாரிடமும் தெரிவித்தனர்.
முதலில் இதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இறுதியாக தன் இரண்டு மகள்களின் ஆசையின்படி , 32 வருடங்கள் கழித்து, அனிதா தன் தனது காதலர் ஜி.விக்ரமை கடந்த வாரம் வியாழனன்று கரம்பிடித்தார்.
தனது தாயாரின் இளம்வயது நிறைவேறாத விருப்பத்தை அவரது இறுதிக்காலத்தில் நிறைவேற்றி வைத்த மகள்களின் செயல் கேரளாவில் ஆச்சர்யத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பணி நிமித்தமாக சென்ற இடத்தில் தனது காதலரை சந்தித்த என் அம்மா, தனது வெற்றிபெறாத காதலைப்பற்றி துயரத்துடன் பகிர்ந்துகொண்டார்.
அம்மாவின் நினைவாக விக்ரம் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்வது ஆச்சர்யமளித்தது. எனக்கு கண்ணீரை வரவழைத்தது.
இதுபற்றி என் அக்கா மற்றும் குடும்பத்தினரிடம் பேசி அவர்களை சேர்த்து வைக்க முடிவு செய்தேன். நானே இதற்கான வேலையில் இறங்கினேன். திருமணத்துக்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
எனது அம்மாவை நினைத்து வாழ்ந்து வந்த ஜி.விக்ரமுக்கும் என் அம்மாவுக்கும் கடந்த 21ந்தேதி திருமணம் செய்து வைத்தோம்.” என்று தனது முகநூலில் தனது தாயாரின் திருமணம் குறித்து ஆதிரா குறிப்பிட்டிருக்கிறார்.
இதைவிட சுவாரஸ்யம் ஒன்றும் இந்த திருமணத்தில் உண்டு. அதையும் ஆதிரா தனது முகநுால் பக்கத்தில் சொல்லியிருக்கிறார்.
நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த திருமணத்தில் முழு மன நிறைவோடு ஆசியோடும் தாலி எடுத்து கொடுத்தவர் யார் தெரியுமா?… இதே ஜோடியை 32 வருடங்களுக்கு முன்பு பிரித்து வைத்த என் தாத்தா தான்.
பெற்றோர்கள் பிள்ளைகளின் காதலை எதிர்க்கும் இந்தக் காலத்தில், பிள்ளைகளே பெற்றோரின் காதலை தேடிச் சேர்த்து வைத்திருப்பது, சபாஷ் சொல்லத்தான் வைக்கிறது.
தமது இளைய சகோதரியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இரண்டு சகோதரர்களை விளகக்மறியலில் வைக்குமாறு காலி மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹபராதுவை பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 17 வயதை அடைந்துள்ள குறித்த சிறுமி இது தொடர்பில் அண்மையில் பொலிஸில் முறைபாடு செய்துள்ளார்.
சிறுமியின் முறைப்பாட்டுக்கு அமைய ஹபராதுவ பொலிஸாரும், சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு சபை அதிகாரிகளும் இணைந்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
21 மற்றும் 26 வயதான குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் காலி மேல்நீதிமன்றில் இன்று முன்னிலை படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, இந்த துஷ்பிரயோக சம்பவம் இடம்பெற்ற போது சிறுமிக்கு 14 வயது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நண்பர்கள் கேலி செய்தமையால் மனைமுடைந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த மாணவி தூக்கிட்டு பத்து நாட்கள் கடந்த நிலையில், இவர் நேற்று வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் சிலாபத்தில் இடம்பெற்றுள்ளது. தற்கொலை செய்துகொண்டுள்ள மாணவியின் தந்தை சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சிலாபம் பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவி படிப்பிலும் சிறந்து விளங்கியுள்ளார்.
எனினும், தந்தையின் செயலை சுட்டிக்காட்டி பாடசாலை நண்பர் நண்பிகள் அடிக்கடி இம்மாணவியை கேலி செய்துள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மனமுடைந்த குறித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய குறித்த மாணவி “இனிமேல் பாடசாலை செல்ல போவதில்லை எனவும் நண்பர்கள் தன்னை கேலி செய்வதாகவும்” தனது தாயிடம் முறையிட்டுள்ளார்.
இதன் பின்னர் வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் மீட்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த மாணவி நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சென்னை மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் பொலிசார் திட்டமிட்டு உண்மை குற்றவாளிகளை மறைக்க முயற்சிப்பதாக ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த ஜூன் 24ம் திகதி காலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டை இளைஞர் ராம்குமார் கடந்த 1ம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ராம்குமாரை நுங்கம்பாக்கம் பொலிசார் 3 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். பொலிசார் நடத்திய விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ராம்குமாரை மீண்டும் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க நுங்கம்பாக்கம் பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.
ராம்குமாரை நீதிபதி முன்னர் ஆஜர் படுத்தி, நுங்கம்பாக்கம் ரயில்நிலையம் அருகே உள்ள வீடுகளில் கைப்பற்றப்பட்ட சிசிடிவியில் பதிவான காட்சிகளையும் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகளையும் ராம்குமாரையும் நீதிபதி நேரில் ஒப்பிட்டு பார்ப்பதற்காகவே, ராம்குமாரை காவலில் எடுக்க பொலிசார் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள மனு எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கறிஞர் ராம்ராஜ், ராம்குமாருக்கு எதிராக தடயங்களை உருவாக்கவும், ஆதரவாக உள்ள சாட்சிகளை அழிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக வாதிட்டார்.
ராம்குமாரை சிசிடிவி காட்சிகளுடன் ஒப்பிட்டு பார்க்கவும், கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்கவுமே இந்த காவல் கேட்கப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை வரும் 28ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
இதனையடுத்து நிரூபர்களை சந்தித்த ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ், ராம்குமாருக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள தடயங்களை உறுதி செய்யவே ஒரு நாள் காவல் கேட்கப்பட்டுள்ளது. பொலிசார் திட்டமிட்டு உண்மை குற்றவாளிகளை மறைக்க முயற்சி செய்து வருகின்றனர் என்றார்.
ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் அண்மைய நாட்களில் தொடர்சியாக தீவிரவாத தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளது.
தொடர்ச்சியாக குறித்த இரு நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய தினம் பிரான்ஸ் தேவாலயம் ஒன்றில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோக சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
ஜேர்மனியில் பெர்லின் அருகே ஸ்டெக்லிட்ஸ் நகரில் பெஞ்சமின் பிராங்கிளின் வைத்தியசாலையில் புகுந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இந்த தாக்குதலில் குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல்தாரியும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதலின் பின்னணியில் தீவிரவாத செயற்பாடுகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை என அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.
தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேகநபர் மன நோயாளியாக இருக்ககூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தினையடுத்து குறித்த வைத்தியசாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஆபத்தான நிலைமை எதுவும் இல்லை என அந்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை, விவகாரத்தால் இந்திய சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்ட திமுகவினருக்கு சபாநாயகர் தனபால் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழக சட்டசபையில் கடந்த வாரம் 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் மீதான விவாதம் நேற்று சட்டசபையில் 2வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்தின்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ. ஓ.கே.சின்ராஜ், இலங்கை இறுதிக்கட்ட போரின்போது அப்போதைய திமுக அரசு எதுவும் செய்யவில்லை என குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் முழக்கமிட்டதால் அவையில் அமளி நிலவியது.
திமுக உறுப்பினர்கள் பேரவை விதிகளை மதிப்பதில்லை என கண்டனம் தெரிவித்த சபாநாயகர் தனபால், விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் பிறந்த குழந்தைக்கு ஒக்சிஜனுக்கு பதிலாக சிரிப்பூட்டும் வாயு தந்ததால் குழந்தை இறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னி நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள Bankstown-Lidcombe மருத்துவமனையில்தான் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த மருத்துவமனைக்கு ஒக்சிஜன் உருளைகளை வழங்கி வரும் தனியார் நிறுவனத்தினர் தவறுதலாக குறிப்பிட்ட பகுதியில் சிரிப்பூட்டும் வாயுவை இணைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று Sonya Ghanem என்பவரது குழந்தைக்கு பதிவு பரிசோதனைகாக மருத்துவ குழுவினர் வந்துள்ளனர். தொடர்ந்து குழந்தைக்கு மூச்சுத்திணரல் இருந்து வருவதை உணர்ந்த மருத்துவ குழு ஒக்சிஜன் வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
அதன் அடிப்படையில் குழந்தைக்கு குறிப்பிட்ட மருத்துவமனை ஊழியர்கள் ஒக்சிஜன் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதில் ஒக்சிஜன் வழங்குவதற்கு பதிலாக குழந்தைக்கு சிரிப்பூட்டும் வாயு அளித்துள்ளனர். இதனால் குழந்தை இறந்துள்ளது. இச்சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற குழந்தையின் தாயார் நடந்த சம்பவத்தை கூறி அழுதது அப்பகுதியில் இருந்தவர்களை கலக்கமுற வைத்துள்ளது.
இதே மருத்துவமனையில் கடந்த 2014 ஆம் ஆண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதில் குறிப்பிட்ட குழந்தைக்கு மூளையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சகம், குறிப்பிட்ட மருத்துவமனையின் குழந்தைகளுக்கான பிரிவை விசாரணை முடியும் வரை மூட வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய அனைத்து உதவிகளும் அரசு முன்னெடுத்து ஆவன செய்யும் என உறுதி அளித்துள்ளார்.
மருத்துவமனையில் நடந்த தவறுதலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள குறிப்பிட்ட தனியார் நிறுவனம், இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக குழந்தை ஆபாச வலைத்தளம் இயக்கி வந்த ஜோடியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த கேவலமான செயலின் மூலம் குறித்த ஜோடி சுமார் 2.4 கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த சித்தத்த வேலு, பிரிசில்லா மார்கரெட் தனராஜ் ஜோடியே குறித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், குறித்த வலைத்தளத்தில் குறிப்பிடபட்டிருந்த மின்னஞ்சல் மூலம், சைபர் கிரைம் செல் பிரிவினர் உதவியுடன் அவர்களை கண்டுபிடித்து கைது செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் வங்கி பண பறிமாற்றத்தை குறித்து நடத்திய விசாரணையில், கிட்டதட்ட சுமார் 2.4 கோடி ரூபாய் வரை அவர்கள் பணம் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருச்சியை சேர்ந்த சித்தத்த வேலுவிற்கும், வேலூரை சேர்ந்த பிரிசில்லா மார்கரெட் தனராஜ்க்கும் திருமணம் நடந்துள்ளது, திருமணத்திற்கு பின்னர் இருவரும் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவர்களிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய வேலு நெட்வொர்க்கிங் மற்றும் இணைய ஹோஸ்டிங்கை கற்றுக்கொண்டுள்ளார்.
பின்னர், மனைவியின் உதவியுடன் வீட்டிலேயே குழந்தை ஆபாச வலைத்தளத்தை இயக்கி வந்துள்ளார். வலைத்தளத்தில் தொடர்புக்கு அவர்களின் மின்னஞ்சல் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
குறித்த வலைத்தளத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளிலிருந்து உறுப்பினர்களை சேர்த்ததின் மூலம் இவர்கள் பணம் சம்பாதித்து வந்ததாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஜோடியை நீதிமன்றித்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் முதலாவது டெஸ்ட் போட்டியானது கண்டி பல்லேகல விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.
இந்தநிலையில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் தன்னுடைய ஆடைகள் முழுதையும் கலைந்து விட்டு மைதானத்திற்குள் உள்நுழைந்துள்ளார். மழை காரணமாக போட்டியானது இடைநிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த நபர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.
எனினும் பொலிஸார் தலையிட்டு அவரை மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்பளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .
இரவில் அதை அப்படியே வைத்திருந்து மரு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொந்தி கரைய ஆரம்பிக்கும்.
அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.
அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.
மூக்கடைப்பிற்காக ஆவி பிடிக்கும் சிகிச்சையை மேற்கொள்வது பலன் தரும் என்று தான் இது வரை கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சௌதாம்டன் பல்கலைகழக மருத்துவ விஞ்ஞானிகள் நாள்பட்ட மூக்கடைப்பிற்கு ஆவி பிடிக்கும் சிகிச்சை மட்டுமே தொடர்வது முழு பலனைத்தராது என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
மேலும் நாள்பட்ட மூக்கடைப்பிற்காக ஆவி பிடிக்கும் சிகிச்சையுடன் வேறுசில சிகிச்சைகளையும் இணைத்து கூட்டு சிகிச்சையாக அளிக்கும் போது தான் பலன் கிடைக்கும் என்றும், ஆவி பிடிக்கும் சிகிச்சையை மட்டும் தொடர்ந்தால் மூக்கடைப்பு குணம் ஆகாதது மட்டுமில்லாமல் வேறு சில பக்க விளைவுகளையும் ஒரு சிலருக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதையும் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
தூசிகளால் ஏற்படும் சளி காய்ச்சல், சைனஸ் பாதிப்பு, மூக்கில் சதை வளர்தல் போன்றவைகளால் தான் நாள்பட்ட மூக்கடைப்பு எற்படுகிறது என்றும், பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் தற்காலிக மற்றும் நிரந்தரமற்ற மூக்கடைப்பிற்கு ஆவி பிடிக்கும் சிகிச்சை நல்ல பலனைத்தரும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
தலைவலி மற்றும் பார்வையில் கோளாறு ஆகியவையும் இந்த மூக்கடைப்பின் அறிகுறிகளாக கருதலாம் என்றும் அந்த ஆய்வில் கண்டறிந்து தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே நாள்பட்ட மூக்கடைப்பு இருப்பவர்கள் ஆவி பிடிக்கும் சிகிச்சையை மட்டும் தொடராமல் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கூட்டு சிகிச்சையையும் மேற்கொண்டால் பலன்கிட்டும் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
வவுனியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பாலமோட்டை மூன்று முறிப்பு வீதியின் வேலைத்திட்டங்களை நேற்று முன்தினம் (25.07.2016) திங்கள் மாலை 5.30 மணியளவில் உத்தியோக பூர்வமாக வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆரம்பித்துவைத்தார்.
இவ் வேலைத்திட்டமானது வடக்கு மாகாண, மாகாண அபிவிருத்தி நன்கொடையின் கீழ் 2016 (PSDG) வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள வீதி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக சுமார் 6.7 மில்லியன் நிதியில் வீதி செப்பனிடும் பணிகள், தாரிடுதல் மற்றும் 04 மதகுகள் அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் டி.சிவராசலிங்கம், வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் சீலன், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வவுனியா மன்னார் மாவட்ட பிரதம பொறியியலாளர் எஸ்.ரகுநாதன் ஆகியோரும் அக்கிராமத்து அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
சூரிய சக்தியால் இயங்கும் விமானமொன்று உலகை சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
சோலார் இம்பல்ஸ் 2 எனப்படும் குறித்த விமானம் கெய்ரோவிலிருந்து அபுதாபிக்கு தனது இறுதி பயணத்தை கடந்த 24.07.2016 அன்று முன்னெடுத்திருந்தது.
சோலார் இம்பல்ஸ் 2 கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகை சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தது.
17 கட்டங்களைக் கொண்ட இந்த பயணத்தில் சோலார் இம்பல்ஸ் 2 நான்கு கண்டங்கள், 3 கடல்கள் மற்றும் 2 சமுத்திரங்களை வலம் வந்துள்ளது.
உயர் தட்பவெப்ப நிலையை சமாளித்து குறித்த விமானம் இலக்கை எட்டியுள்ளதையடுத்து சூரிய சக்தியால் இயக்கப்படும் விமானமொன்று உலகை சுற்றிய வரலாற்று சாதனையை சோலார் இம்பல்ஸ் 2 எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடற்பரப்பில் இருந்தும் வானில் எழுந்து பறக்கக்கூடிய உலகின் மிகப் பெரிய விமானத்தை சீனா உருவாக்கியுள்ளது. இந்த விமானம் சீனாவின் தெற்கு துறைமுக நகரான ஜுகை நகரில் கடந்த சனிக்கிழமை பயன்பாட்டுடிற்கு விடப்பட்டதாக சீன அரச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
AG600 என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தை சீன அரசுக்கு சொந்தமான AVIC (சீன விமானத் தொழில் நிறுவனம்) உருவாக்கியுள்ளது.
இந்த விமானம் முழு எரிபொருள் கொள்ளளவுடன் 4,500 கி.மீ. பறக்கும் திறன் கொண்டது. கடற்பகுதியில் விபத்து நேரிடும்போது மீட்புப் பணிகளுக்கும் நிலப்பகுதியில் காட்டுத்தீயை அணைக்கவும் இந்த விமானத்தைப் பயன்படுத்தலாம்.
மேலும், கடல்வள மேம்பாடு மற்றும் பயன்பாடு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, புதிய வளங்கள் கண்டுபிடிப்பு, போக்குவரத்து என பல்வேறு தேவைகளுக்கும் இந்த விமானத்தைப் பயன்படுத்தலாம்.
தென் சீனக் கடல் பகுதியில் சில தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருவதால், அந்நாட்டிற்கும் ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் பல்வேறு செயற்பாடுகளுக்கும் இந்த விமானம் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.
விமானத் தேவைகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களை சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில், உள்நாட்டு தொழில்நுட்பத்தை சீனா மேம்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.