உலகில் உயரமான ஆண்கள் நெதர்லாந்து நாட்டில் : ஆய்வில் தகவல்!!

Height

நெதர்லாந்து நாட்டு ஆண்கள் மற்றும் லத்வியா நாட்டு பெண்களே உலகில் உயரமானவர்கள் என்று புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அதே சமயம், க்வாத்தமாலா நாட்டு பெண்களும், கிழக்கு தீமோர் நாட்டு ஆண்களும் தான் உலகிலேயே குள்ளமானவர்கள் என்று ஆய்வில் தெரிவந்துள்ளது.

மனிதர்களின் உயரங்களில், மரபியல் தாக்கங்களால் சில மாற்றங்கள் ஏற்படலாம் எனினும் நல்ல சத்தூட்டம், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது என லண்டன் இம்பிரியல் கல்லூரியின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கத்திய சமூகங்களில் மனிதர்கள் உயரமாக வளர்வது சராசரியாக உள்ளது. மேலும் ஆபிரிக்காவின் சில இடங்களில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அவர்கள் கண்ட வளர்ச்சி குறைந்துள்ளது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகின் உயரமானவர்களாக கருதப்படும் நெதர்லாந்து நாட்டவரின் சராசரி உயரம் 183 செ.மீ மற்றும் லத்வியா பெண்களின் உயரம் 170 செ. மீ, உலகில் குள்ளமானவர்களாக கருதப்படும் க்வாத்தமாலா பெண்கள் 150 செ.மீட்டர் உயரத்தை எட்டுவது அரிது எனவும் மேலும் கிழக்கு தீமோர் ஆண்களின் சராசரி உயரம் 160 செ.மீட்டர் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தமிழச் சங்கத்தில் திருமலை கவிச்சுடர் சிவரமணியின் ‘அவள் ஒரு தனித்தீவு’ நூல்அறிமுக விழா!!

 
கடந்த 24.07.2016 அன்று வவுனியா தமிழச் சங்கத்தில் திருமலை, கவிச்சுடர் சிவரமணியின் ‘அவள் ஒரு தனித்தீவு’ என்ற நூல்அறிமுக விழா நடைபெற்றது.

வவுனியா ஆதிவினாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில் தமிழ்ச் சங்கத் செயலாளர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கௌரவ சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, M.P.நடராஜா முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் திரு.வீரசிங்கம் பிரதீபன் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர், ஆறுமுகம் அம்பிகைபாகன், திருமதி பராசக்தி ஜெகநாதன், திரு வே.கஜேந்திரகுமார் செயலாளர் ஆதிவினாயகர் ஆலயம், கவிச்சக்கரம் கி.உதயகுமார், தமிழ்மணி கே.கே. அருந்தவராஜா (மேழிக்குமரன்) கவிஞர் கவிச்சுடர் சிவரமணி, கவிஞர் வே.முல்லைத்தீபன் உட்பட பல கலைஞர்கள் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தார்கள்.

1 IMG_4200 IMG_4205 IMG_4209 IMG_4211 IMG_4213 IMG_4214 IMG_4217 IMG_4218 IMG_4219 IMG_4223 IMG_4225 IMG_4227 IMG_4229 IMG_4231 IMG_4233 IMG_4236 IMG_4237 IMG_4244 IMG_4253 IMG_4255 IMG_4256 IMG_4258 IMG_4259 IMG_4261 IMG_4262 IMG_4266 IMG_4271 IMG_4275 IMG_4280 IMG_4283

வவுனியா நெளுக்குளத்தில் விபத்து : 6 மாதக் குழந்தை படுகாயம்!!

 
சற்றுமுன் வவுனியா நெளுக்குளம் குளுமாட்டுச் சந்தியில் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.

நெளுக்குளத்திலிருந்து தனது குடும்பத்துடன் வீடு சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியை குளுமாட்டுசந்தியில் திருப்பும் போது தடம்புரண்டதில் முச்சக்ரவண்டியின் உரிமையாளரின் 6 மாதக் குழந்தை பலத்த காயங்களுக்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

20160726_143628 20160726_143634 20160726_143642 20160726_143733 20160726_143746 20160726_143855 20160726_143936 20160726_144310 20160726_144343 20160726_144404

13 வயதுச் சிறுமியை ஒரு மாதமாக துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 30 நபர்களுக்கு பொலிஸ் வலைவீச்சு!!

Abuse

தெனியாய – பிட்டபெத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமியை ஒரு மாதமாக துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 30 நபர்களைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலுக்கமைய பஸ் நடத்துநர்கள், சாரதிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட சமூகத்தில் பல முக்கயஸ்தர்கள் இதனுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட நபர் இது தொடர்பில் பல அதிர்ச்சித் தகவல்களை பொலிஸாரிடம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவாதியின் அப்பா இவர் இல்லை : அதிர வைக்கும் பதிவு!!

Swathi Father

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் 24ம் திகதி கொலை செய்யப்பட்ட சுவாதியின் வழக்கு முடிந்தபாடில்லை, தினம் தினம் புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தமிழச்சி என்பவர் தன்னுடைய முக நூல் பக்கத்தில் பதிவொன்றை எழுதியுள்ளார். அதில்,

‘என் பொண்ணை அநியாயமா கொன்னுட்டானுங்க’ளேன்னு சுவாதியின் குருதி உறைந்து போவதற்குள் சிதைக்கப்பட்ட அவளது உடலை பார்த்து கதறிய சந்தான கோபலகிருஷ்ணன் தான் ‪‎சுவாதியின் அப்பா‬ என்பதை இந்த உலகம் நம்பியது.

ஆனால் அதே நாளில் ‘சுவாதியின் சொந்த அப்பா அவரில்லை’ என்பது காவல்துறையினருக்கு தெரிந்தே இருந்தது.

ராம்குமாரை சிறையில் அடையாளம் காட்ட சென்ற போதும் அதே அப்பா, ‘எம் பொண்ண ஏன் கொன்னே’ன்னு கதறிய போதும் ‘சுவாதியின் அப்பா இவரில்லை’ என்று சொல்ல காவல்துறையினருக்கு வாய்வரவில்லை.

“பொண்ணு பொணமா கிடக்கிறா. இந்தாளு ஏன் பாய்கெட்டுல கையவிட்டுக்கிட்டு நிக்குது. அவளுடைய சித்தப்பாவோ வளைஞ்சு குனிஞ்சி செல்போன்ல போட்டோ எடுத்து யாருக்கோ அனுப்புது என்று சில விமர்சனங்கள் பொதுதளத்தில் வந்தபோதும் அந்த வார்த்தைகளில் எனக்கு அதிருப்தி இருந்தது.

ஆனால், ஒரு குழுவின் தீவிர முயற்சியால் கண்டுபிடிக்கப்படும் சுவாதியின் பின்னணிகள் நாம் நம்பிக் கொண்டிருக்கும் தகவல்களை நொறுக்கிவிடுகிறது. ‘இதுதான்டா உண்மை’ என்று நம்மால் கற்பனைகூட செய்ய முடியாத உண்மைகளை வீசியெறியும் போது, சுவாதியின் அப்பா என அடையாளப்படுத்தப்பட்டவர் ‪சம்பவம்‬ நடைபெற்ற அன்று அவருடைய உடல்மொழிகளால் எவ்வாறு விமர்சிக்கப்பட்டாரோ அந்த கூலான காட்சிக்கு பின்னே என்ன‪ பின்னணி‬ இருந்திருக்கக்கூடும் என்று மீண்டும் சிந்திக்க வைத்துவிடுகிறது.

சந்தான கோபலகிருஷ்ணனின் முதல் மனைவியின் தங்கை ரங்கநாயகி என்பவர் தான் சுவாதியின் அம்மா. இவருக்கும் வேறொருக்கும் (கணவர்) பிறந்தவர் ‪சுவாதி‬. குழந்தைகளையும் மனைவியையும் விட்டுவிட்டு கணவர் ஓடிப்போன நிலையில் மனைவியின் தங்கையையும் சந்தான கோபலகிருஷ்ணன் வைத்துக் கொண்டார்.

கிளிநொச்சியில் இரண்டு வயதுச் சிறுவனது உடல் கிணற்றிலிருந்து மீட்பு!!

Dead-Body-1

பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் இருந்து இரண்டு வயது நிரம்பிய சிறுவனின் சடலம் இன்று காலை கிளிநொச்சி புதுமுறிப்பில் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. விஜிமன் கனீஸ்ரன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை காணியில் பெற்றோருடன் இருந்த குறித்த சிறுவன் எதிர்பாராத விதமாக பக்கத்து காணிக்குச் சென்றுள்ளதாகவும் அங்கிருந்த கிணற்றிலே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் கிளிநொச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த வாரம் கல்மடு நகர் என்னும் இடத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் இருந்து ஐந்து வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டிருந்ததுடன் அண்மைக்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற கிணற்றிலும் நீர்நிலைகளிலும் தவறிவீழ்ந்து உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற முக்கொலையில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை நிறைவு!!

Murder

மட்டக்களப்பு காக்காச்சிவட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட மூவரின் பிரேத பரிசோதனை அறிக்கை நிறைவடைந்துள்ளது

கடுமையான தாக்குதலினால் தலையில் ஏற்பட்ட காயங்களே மூவரின் மரணத்துக்கும் காரணமாய் அமைந்துள்ளமை பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற முக்கொலையில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை நேற்று (25.07) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இதேவேளை முக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

உயிரழந்த பெண்ணின் 24 வயதான கணவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஒன்றரை வயது பெண் குழந்தை ,குழந்தையின் தாயான 24 வயதுடைய பெண் மற்றும் பெண்ணின் 55 வயதான தந்தை ஆகியோர் நேற்றுமுன்தினம் அதிகாலை கொலை செய்யப்பட்டிருந்தனர்.

ஒன்றரை வயது குழந்தை மற்றும் பெண் ஆகியோரது சடலங்கள் காக்காச்சிவட்டை பகுதியிலுள்ள வீட்டின் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன.

117 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி!!

Sri Lanka's Dinesh Chandimal (L) plays a shot past Australia's wicketkeeper Peter Nevill during the first day of the opening Test cricket match between Sri Lanka and Australia at The Pallekele International Cricket Stadium in Pallekele on July 26, 2016. / AFP / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 34.2 ஓவர்களுக்கு மாத்திரமே தாக்குப் பிடித்து, 117 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகின்றது.

இதன்படி இரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, இன்று கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகின்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி சார்பாக, துடுப்பாட்ட வீரர்கள் எவரும் அவ்வளவாக பிரகாசிக்காத நிலையில், நடு வரிசை வீரரான தனஞ்சய டி சில்வா அதிகபட்சமாக 24 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

ஏனைய வீரர்கள் அதனை விடக் குறைவான ஓட்டத்தைப் பெற்ற நிலையில் வௌியேற, 34.2 ஓவர்களுக்கு மாத்திரமே தாக்குப் பிடித்த இலங்கை, 117 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் ஹேஸில்வுட் (josh Hazlewood), மற்றும் நாதன் லயன் (Nathan Lyon) தலா மூன்று விக்கெட்டுக்களையும், மிச்சல் ஸ்ராக் (Mitchell Starc) மற்றும் ஸ்டீவ் ஒ´கீஃபெ (Steve O´Keefe) ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.

இதன்படி அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 66 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கட்டுகளை இழந்திருந்தபோது முதல்நாள் ஆட்டம் மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தற்காலிகமாக பூட்டு!!

Airport

கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அடுத்த வருட ஜனவரி மாதம் முதல், தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி 5ம் திகதி தொடக்கம் மூன்று மாதங்களுக்கு தினமும் காலை 08.30 முதல் மாலை 04.30 வரை, எட்டு மணித்தியாலங்கள், விமான நிலையம் இவ்வாறு மூடப்படவுள்ளதாக, அமைச்சர் சிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

விமான ஓடுபாதையின் திருத்தப் பணிகள் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதேவேளை, ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், ரயில் கட்டணங்களும் அதிகரிக்கப்படுமா என, இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு “இதுவரை அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை” என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

பரந்தனில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் பலி!!

paranthan

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.பரந்தனை சேர்ந்த 64 வயதான சண்முகன் என்ற முதியவரே விபத்தில் பலியாகி உள்ளார்

புத்தளத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்றுடன் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த முதியவர் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான முதியவர் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

காரை செலுத்திய சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரின் சாரதியை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாகூவை 483 கோடி டாலருக்கு வாங்குகிறது வெரிஸான்!!

download

வெரிஸான் தொலைதொடர்பு நிறுவனம் யாகூ நிறுவனத்தை 483 கோடி டொலர் கொடுத்து வாங்குவதாக தெரிய வந்துள்ளது.ஒரு காலத்தில் இணையத்தையே ஆட்சி செய்து வந்த யாகூ நிறுவனத்தின் ஆதிக்கம் 2000ம் ஆண்டிற்கு பின்னர் சரிய தொடங்கியது. யாகூவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைய தொடங்கியது.

இதனால், சில மாதங்களுக்கு முன்பு யாகூ நிறுவனம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில், வெரிஸான் நிறுவனம் யாகூ நிறுவனத்தை 483 கோடி டொலர் கொடுத்து வாங்க உள்ளது. இந்த இணைப்பு அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், கடந்த 2008ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் 4.400 கோடி டொலர் கொடுத்து யாகூ நிறுவனத்தை விலைக்கு கேட்டது. ஆனால் யாகூ நிறுவனம் மறுத்துவிட்டது குறிப்பிட தக்கது

ஒபாமாவை தாக்கிய அண்ணன்!!

obama-malik

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அண்ணன் மாலிக் ஒபாமா (வயது 57). இவர் ஜனாதிபதி ஒபாமா தந்தையின் மற்றொரு மனைவிக்கு பிறந்தவர். கென்யா நாட்டை சேர்ந்த இவர், தற்போது அமெரிக்காவில் உள்ள மேரி லேன்ட் பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு அமெரிக்க குடியுரிமை மற்றும் ஓட்டுரிமை உள்ளது.

ஆனால், வருகிற ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா கட்சி வேட்பாளர் ஹிலாரிக்கு ஓட்டு போட மாட்டேன். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கு ஓட்டு போடப் போகிறேன் என மாலிக் ஒபாமா கூறுகிறார்.

இதுபற்றி விளக்கம் சொல்லும் அவர், எனது தம்பி பராக் ஒபாமா நிர்வாகத்தில் நான் அதிருப்தி அடைந்துள்ளேன். எனவேதான் குடியரசு கட்சிக்கு ஓட்டு போட போகிறேன். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தனது இதயத்தில் இருந்து பேசுகிறார். எனக்கு அவரை பிடித்துள்ளது. அவரை நான் சந்திக்க விரும்புகிறேன் என்று அவர் கூறி இருக்கிறார்.

கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை: மரணத்தின் விளிம்பில் நடந்த ஒரு போராட்டம்!!

article-2306404-19333647000005DC-999_634x349

அவுஸ்திரேலியாவில் முதல் முறையாக கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்டை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், வயிற்றுக்குள் இருக்கும் கருவின் முதுகெலும்பு தண்டுவடம் சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்துள்ளது.இதற்கு Spina bifida என்று பெயர், அவுஸ்திரேலியாவில் 2,000 குழந்தைகள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், 24 வார கர்ப்பிணியாக அப்பெண் இருப்பதால், இந்த கருவுக்கு அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என Brisbane’s Mater மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்,இந்த அறுவை சிகிச்சைக்கு அமெரிக்காவை சேர்ந்த சிறப்பு குழுவும் உதவியுள்ளது, மொத்தம் 40 மருத்துவர்கள் சேர்ந்த குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளது.கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்து கருப்பை அகற்றப்பட்டு, அந்த கருப்பைக்கு திரவம் ஊற்றப்பட்டுள்ளது, திரவம் ஊற்றப்பட்டதால் கருவானது மிதந்து மேலே வந்துள்ளது, இதன்பின்னர் கருவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர், மீண்டும் கர்ப்பிணியின் வயிற்றுக்குள் கருப்பையானது வைக்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவர் Wellons கூறியதாவது, இது அபாயமான ஒன்றாகும், இந்த அறுவை சிகிச்சையின் அப்பெண்ணின் உயிர்பறிபோவதற்கும் வாய்ப்பிருக்கிறது, இருப்பினும் மரணத்தின் விளிம்பிற்கு சென்று போராடி வென்றுள்ளோம் என கூறியுள்ளார்.மேலும், இந்த அறுவைசிகிச்சையின் மூலம் குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.

13 வயது சிறுமியை 6 லட்சத்திற்கு விற்ற பெற்றோர்! கணவனால் அனுபவித்த கொடுமை!!

053-india_child_domesticworker_imagebiswarupganguly
மும்பையில் 13 வயது சிறுமி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவள் அளித்துள்ள புகாரில், Lachharam Kriparam Chaudhary(35) என்ற நபர், எனது தந்தையிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து என்னை விலைக்கு வாங்கிகொண்டார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் என்னை திருமணம் செய்துகொண்ட அவர், ஒரு வருடமாக என்னை சித்ரவதை செய்து வருகிறார், பாலியல் தொல்லை கொடுப்பது, அவர் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை என்றால் அடித்து கொடுமைபடுத்தினார் என்று பொலிசாரிடம் கூறிய அச்சிறுமி, தனது உடலில் ஏற்பட்ட காயங்களையும் காட்டியுள்ளார்.

புகார் பதிவானதும் உடனே செயல்பட்டு விரைந்து சம்பந்தப்பட்ட Lachharam Kriparam Chaudhary கைது செய்து விசாரித்துள்ளனர், விசாரணையில் அவர் கூறியது, அப்பெண் மீது எனக்கு முழு உரிமையும் உள்ளது.ஏனெனில், ஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் ரங்கம் என்ற இடத்திலிருந்து அவள் பெற்றோரிடமிருந்து 6.3 லட்ச ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியதோடு மட்டுமல்லால் அதற்கான பத்திரத்தையும் பொலிசாரிம் காட்டியுள்ளான்.

அந்த பத்திரத்தில் அச்சிறுமியின் வயது 20 என்று அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.தற்போது மருத்துவ சோதனைக்கு உட்படுத்த அச்சிறுமியின் தற்போதைய வயது 14 என தெரியவந்துள்ளது, மேலும் Chaudhary மீதும், பல்வேறு கற்பழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

வவுனியா கோவில்குளம்  அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகோற்சவம்   நாளை ஆரம்பம்!

சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால்  அகிலாண்டேஸ்வரம்  எனப் போற்றப்படும் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம்  நாளை மதியம் 12.00  மணியளவில் சிவஸ்ரீ. சதா.சங்கரதாஸ் சிவாச்சாரியார்  தலைமையில்  கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.

மேற்படி  உற்சவத்தில்

கொடியேற்றம்  27.07.2016 புதன்கிழமையும்

ஆடி அமாவாசை -02.08.2016  செவ்வாய்க்கிழமையும்

சப்பர திருவிழா -03.08.2016 புதன்கிழமையும்

தேர்த்திருவிழா -04.08.2016 வியாழக்கிழமையும்

தீர்த்த திருவிழா -05.08.2016  வெள்ளிகிழமையும்  இடம்பெறும்!

1 2 3 13840657_1052790454776776_850815631_o

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் 2ம் நாள் நிகழ்வுகள்!!(படங்கள்,காணொளிகள்)

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் இரண்டாம்  நாள் நிகழ்வுகள் நேற்று (25.07.2016) பாடசாலையின் அதிபர் ச.சுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது .

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஸ்ரீமான் ஆ.நடராஜன் ( இந்திய துணைத்தூதர்) சிறப்பு விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், வடமாகண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் கௌரவ விருந்தினராக தி.திரேஸ்குமார் (மேலதிக அரசாங்க அதிபர்) , கு.சிதம்பரநாதன் (பீடாதிபதி- தே.க.கல்லூரி வவுனியா), ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கிராமப்புறப் பாடசாலைகளில் இன்று முன்னணியில் திகழும் வவுனியா புதுக்களம் மகா வித்தியாலயம்பற்றிய மற்றும் தொலைந்துபோன கிராமப்புறப் வாழ்கைமுறை என்பன தொடர்பாக வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி கு. சிதம்பரநாதன் அவர்கள் உரையாற்றினார் .

நேற்றைய இரண்டாம் நாள் நிகழ்வுகளில் மூன்றுவருடங்களுக்கு ஒருமுறை வெளிவரும் அறிவொளி என்னும் நூல் இம்முறை நூற்றாண்டு மலராக வெளிவந்து அந்த நூல்வெளியீட்டு வைபவமும் சிறப்பு பிரதிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. நூலுக்கான மதிப்பீட்டு உரையை தமிழருவி சிவகுமாரன் அவர்கள் நிகழ்த்தினார்.

பாடசாலையின் வளர்ச்சியில்அயராது உழைத்த மறைந்த முன்னாள் அதிபர் திரு. சற்குணசிங்கம் அவர்களை கல்மடு செல்வதேவன் அவர்கள் நினைவு கூர்ந்த நிகழ்வும் இடம்பெற்றது.

தொடர்ந்து பாடசாலையில் பதினெட்டு வருடங்கள் தொடர்ச்சியாக அதிபராக கடமையாற்றி பாடசாலையை தரமுயர்த்துவதிலும் யுத்தகாலங்களில் பாடசாலையை பாதுகாப்பதிலும் முன்னின்று உழைத்தவரும் தற்போதைய வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அதிபருமாகிய தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் மிக உணர்ச்சி பூர்வமாக பாடசாலையின் வளர்ச்சியில் ஏற்பட்ட துன்ப துயரங்களை பற்றியும் உரையாற்றினார்.

தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அந்திய துணைதூதுவர் ஆர்.நடராஜன் அவர்கள் பாடசாலையின் நூற்றாண்டினை முன்னிட்டு அமைக்கபட்ட நினைவு சின்னதாய் திரை நீக்கம் செய்து வைத்து உரையாற்றினார்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட வன்னிப்பாரளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் ,சிவசக்தி ஆனந்தன் ,வடமாகாண சுகாதார அமைச்சர் ப .சத்தியலிங்கம் மற்றும் முன்னால அதிபர்களில் ஒருவரான வையாபுரிநாதன் ஆகியோரது உரைகள் இடம்பெற்றதுடன் கல்வி மற்றும் இணைபாட விதான செயல்பாடுகளில் பாடசாலையின் வளர்ச்சியில் அயராது உழைத்த மாணவர்கள் பெரியோர்கள் மற்றும் ஊரவர்கள் ஆகியோர் கௌரவிக்கபட்டனர் .

நிகழ்வின் இறுதியில் வவுனியா கோவில்குளம் அருளக நுண்கலை கல்லூரி மற்றும் நிருத்திய நிகேதன நுன்கலைகல்லூரி என்பவற்றின் மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்வுகள் சூரிய யாழினி வீரசிங்கத்தின் நெறியாள்கையில் இடம்பெற்றது.

இரண்டு  நாள்  நிகழ்வுகளும் முதன் முறையாக  வவுனியா நகருக்கு வெளியே புதுக்குளம் பிரதேசத்திலிருந்து வவுனியா நெற் இணையத்தினூடாக  நேரடி ஒளிபரப்பு   செய்யப்பட்டது  குறிப்பிடத்தக்கது. நிகழ்வுகளை இணையத்தில் பார்க்க !! இங்கே இணைப்பை கிளிக் செய்து  எமது  YOUTUBE CHANNAL  பார்க்க முடியும்!

DSC_0135 DSC_0136 DSC_0137 DSC_0139 DSC_0134 DSC_0133 DSC_0132 DSC_0131 DSC_0130 DSC_0129 DSC_0128 DSC_0126 DSC_0123 DSC_0122 DSC_0120 DSC_0119 DSC_0117 DSC_0113 DSC_0112 DSC_0111 DSC_0109 DSC_0103 DSC_0102 DSC_0101 DSC_0100 DSC_0099 DSC_0097 DSC_0096 DSC_0095 DSC_0094 DSC_0093 DSC_0090 DSC_0089 DSC_0088 DSC_0087 DSC_0084 DSC_0083 DSC_0082 DSC_0081 DSC_0080 DSC_0078 DSC_0077 DSC_0076 DSC_0005 DSC_0004 DSC_0003 1 (17) 1 (16) 1 (15) 1 (14) 1 (13) 1 (12) 1 (11) 1 (10) 1 (9) 1 (8) 1 (7) 1 (2) 1 (1)