வவுனியாவில் முதிரைக்குற்றிகள் பொலிசாரால் பறிமுதல்!!

 
வவுனியா சேமமடுப் பகுதியில் வைத்து ஒருதொகை முதிரைக் குற்றிகள் ஓமந்தைப் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவகையில்,

நெடுங்கேணியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படவிருந்த 11 முதிரைக்குற்றிகள், 30 வருடம் பழமைவாய்ந்த மரக்குற்றிகளை எடுத்துச் செல்லப்படவிருந்தபோதே ஓமந்தைப் பொலிஸ் நிலைய டி.ஜ.ஜி தேசபந்த தென்னக்கோண், எஸ்.எஸ்.பி. சிறிதகுமார, ஏ.ஸ்.பி. டபில்யூ. டி. என். புp. வெல்கம அவர்களின் அறிவுறுத்தலுக்க அமைய பொறுப்பதிகாரி சமன் குமார மற்றும் ஓமந்தை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குறித்த மரக்குற்றிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

முதிரைக் குற்றிகளை ஏற்றிச் சென்ற வாகனத்துடன் சென்ற இரு சந்தேக நபர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எற்கனவே மரக்கடத்தல் தொடர்பான முறைப்பாடு புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் எதிர்வரும் 29.07.2016 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

DSC_0273 DSC_0276 DSC_0281 DSC_0285

போதையில் கைகளை அறுத்துக் கொண்ட மாணவர்கள் : பொலிஸார் தீவிர விசாரணை!!

Students

செவனகல பிரதேசத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான பாடசாலைச் சேர்ந்த மாணவர்கள் பலர் போதை தலைக்கேறிய நிலையில் தமது கைகளை அறுத்துக்கொண்ட சம்பவம் ஒன்று கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவ, மாணவிகளின் கைகளில் காணப்பட்ட காயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பாடசாலை அதிபர் மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி போதை தலைக்கேறியதால் போத்தல்களை உடைத்து அதன் மூலம் தமது கைகளில்காயங்களை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பாக அதிபர் செவனகல பொலிஸாருக்கு அறிவித்ததும் குறித்த மாணவர்களை கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது பல அதிர்ச்சியடையும் தகவல்களை மாணவர்கள் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாம் கஞ்சா உள்ளிட்ட போதையினை உட்கொண்டதோடு,வேறு சில போதைத்தரக்கூடியபானங்களையும் அருந்தியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தைகளில் காணப்படும் ஒரு சில குடிபானங்களுக்கு இனிப்பு வகைகள் கலந்துமாணவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் இதனை அருந்தும் மாணவர்களுக்கு போதை ஏற்படுவதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாணவர்களை குறிவைத்து இவற்றை விற்பனை செய்த நபர் தொடர்பில் தேடிப்பார்த்து அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட மாணவர்களது பெற்றோர் பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன், கடும் எச்சரிக்கையுடன் கைது செய்யப்பட்ட மாணவர்களை பொலிஸார் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சினிமா நடிகர்களுக்கு ஆசி வழங்கிய 116 வயது துறவி தவநிலையில் மரணம்!!

Dead

தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களுக்கு ஆசி வழங்கிய 116 வயது துறவி நெமிலி அருகே தவநிலையில் மரணமடைந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள பாலூர் என்ற கிராமத்தில் 5.12.1900-ல் பிறந்தவர் எத்திராஜ். இவருக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருந்ததால், மூலிகை வைத்தியத்தை எளிதில் கற்று தேர்ந்தார்.

உடலில் உண்டாகும் பல நோய்களுக்கு இயற்கை மூலிகைகளை வைத்து குணப்படுத்தக் கூடிய வல்லமை படைத்தவராக திகழ்ந்து வந்தார்.

இந்நிலையில், இவர் தன் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேலூர் நெமிலி அருகே தக்கோலம் அரசு மருத்துவமனை பின்புறம் தனக்கென ஒரு குடிசை அமைத்து ஆன்மீகத் தொண்டாற்றி கொண்டே மூலிகை வைத்தியமும் பார்த்து வந்தார்.

இதனால், தமிழகத்தில் மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்கள் பகுதியிலிருந்து ஏராளமானோர் இவரிடம் வந்து தங்களது பிரச்சனைக்கு தீர்வு கண்டு சென்றுள்ளனர்.

மேலும், வடிவேலு, டி.ராஜேந்தர் என பல சினிமா பிரபலங்களும் இவரிடம் ஆசி பெறுவதற்கு அடிக்கடி தக்கோலம் வந்து செல்வதுண்டு.

இதை தொடர்ந்து, அந்த பகுதியில் அகதீஸ்வரர் என்ற கோயிலை இவர் கட்டி வந்துள்ளார். அதன் கட்டுமான பணிகள் முடிவு பெறும் நிலையில் அடுத்த வாரம் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

116 வயதான எத்திராஜ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்றிரவு சரியாக 07.20 மணிக்கு தவத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென இறந்தார் என தெரிய வந்துள்ளது.

அவருடைய இறப்பு ஆன்மீகவாதிகள் மட்டுமின்றி அவருக்கு அறிமுகமாயிருந்த பல பிரபலங்கள் இடையேயும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீகவாதி எத்திராஜின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.

அவரது உடல் தவநிலையிலேயே தகனம் செய்வது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் மாயம் : 29 பேரின் கதி என்ன?

Flight

சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று காலை 29 பேருடன் புறப்பட்ட விமானம் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான படைக்கு சொந்தமான ஏ.என்.32 என்ற விமானம் இன்று காலை 29 பேருடன் அந்தமான் புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சில மணி நேரத்தில் கட்டுப்பாட்டு எல்லையில் இருந்து தொடர்பு அற்றுப்போனதால் அதிகாரிகள் பதற்றமடைந்துள்ளனர்.

இதனையடுத்து விமானத்தை தேடும் பணி துரிதமாக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 4 மணி நேரம் மட்டுமே பயணிக்கும் அளவுக்கு எரிபொருள் இருப்பதாக தெரிகிறது.

விமானம் எங்கே சென்றது, விபத்தில் ஏதும் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கபாலி – திரைவிமர்சனம்!!

Kabali

25 வருட சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினி. வெளியில் வரும்போதே அவர் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடிதான் சிறை சென்றார் என்பது தெரிய வருகிறது. சிறையில் இருந்து வெளியே வரும் அவரிடம் ஜான் விஜய், 25 வருடத்தில் மலேசியாவில் நடந்த மாற்றங்களை அவரிடம் விளக்கிக் கொண்டு வருகிறார்.

அப்போது, 43 கேங்க் என்ற கேங்ஸ்டர் கும்பல் மாணவர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கி இருப்பதையும், அதுமட்டுமில்லாமல், கொலை, கடத்தல் வேலைகளை செய்துவருவதாகவும் ரஜினியிடம் கூறுகிறார். முதலாவதாக 43வது கேங்கை சேர்ந்த லிங்கேஷை சந்திக்கிறார்கள். அவனது கும்பலை அடித்து துவம்சம்செய்துவிட்டு, தான் வெளியில் வந்துவிட்டதாக அவனின் பாஸிடம் தெரியப்படுத்துமாறு சொல்லிவிட்டு, தமிழர்கள் வாழும் பகுதிக்கு செல்கிறார்.

K1

அங்கு கபாலி பெயரில் போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு கூடம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் போதைக்கு அடிமையான ரித்விகாவும் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த கூடத்துக்கு ஆசிரியராக கலையரசன் இருக்கிறார். இதையெல்லாம் பார்த்து ரஜினி, தனது பெயரில் நல்லது நடப்பது நினைத்து பூரித்து போகிறார். அப்போது மாணவர்களிடையே நடக்கும் உரையாடும் நிகழ்ச்சியில் தான் கேங்ஸ்டராக எப்படி மாறினேன் என்பதை எடுத்துக் கூறுகிறார். இதன்பிறகு பிளாஸ்பேக் விரிகிறது.

பிளாஸ்பேக் காட்சியில், ரஜினி ஜெயிலுக்கு போகும்போது, நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி ராதிகா ஆப்தே, குண்டு காயத்துடன் கிடப்பதை பார்த்துவிட்டுத்தான் செல்கிறார். இதனால், தற்போது ஜெயிலில் இருந்து வெளியே வந்தவுடன் தனது மனைவி உயிருடன் இருக்கிறாளா, தனது குழந்தை என்னவாயிற்று என்ற குழப்பத்திலேயே இருக்கிறார். இந்நிலையில், கிஷோரின் கும்பலில் போதை மருந்து சப்ளை செய்துவரும் மைம் கோபியை ரஜினி கொன்றுவிடுகிறார். இதையடுத்து, கிஷோர், இனி ரஜினியால் தனது தொழிலுக்கு இடைஞ்சல் இருக்கும் என்றுகூறி அவரை தீர்த்துக்கட்ட பார்க்கிறார்.

K4

இதன்பின்னர், ரஜினி தனது மனைவியையும் குழந்தையையும் கண்டுபிடித்தாரா, கிஷோரின் அராஜகத்தை அடித்து ஒடுக்கினாரா என்பதுதான் மீதிக்கதை.

படத்தின் மிகப்பெரிய பலமே சூப்பர் ஸ்டார் ரஜினிதான். வழக்கமான மாஸ் காட்சிகள் மட்டுமில்லாது சென்டிமெண்ட் காட்சிகளிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் சிறைச்சாலையில் வெளிவரும்போதே இவர் தமிழர்களுக்காக பாடுபட்டவர் என்று தெரியவருகிறது. இவர் படத்தில் பேசும் முதல் வசனமே மகிழ்ச்சி என்று சொல்லும்போது நமக்கே மகிழ்ச்சி வருகிறது.

K6

அந்த மாஸ் காட்சியை தொடர்ந்து, லிங்கேஷை அடித்து துவம்சம் செய்து, டீசரில் வரும் டயலாக்கை பேசிவிட்டு, கடைசியில் நக்கலாக கோழிக்கறி என்று சொல்லிவிட்டு செல்லும் காட்சிகளில் எல்லாம் மாஸ் காட்டுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் இன்னமும் தன்னுடைய அதே ஸ்டைலில் நடித்து கலக்கியிருக்கிறார். வயதானாலும் உங்க அழகும், ஸ்டைலும் குறையல என்ற படையப்பா வசனம்தான் நமக்கு ஞாபகம் வருகிறது. அதேபோல், பள்ளி மாணவர்களிடம் தான் எப்படி கேங்ஸ்டராக மாறினேன் என்பதை விளக்கும் காட்சியிலும் அசத்தியிருக்கிறார்.

ரஜினியின் நண்பராக கூடவே வரும் ஜான் விஜய் நடிப்பில் அசத்தியிருக்கிறார். இவருக்கான வசனங்கள் எல்லாம் மிகவும் யதார்த்தமாக இருக்கிறது. அதை எதார்த்தமாக செய்துவிட்டு கைதட்டல் பெறுகிறார். தன்ஷிகாவுக்கு இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம். ஸ்டைலான பெண்ணாகவும் அழகாக இருக்கிறார். இடைவேளைக்கு பிறகு இவரது கதாபாத்திரம் அப்படியே மாறுவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுக்கும். பிளாஸ் பேக் காட்சியில் வரும் நாசரின் நடிப்பும் அற்புதம்.

கிஷோர் மிரட்டலான வில்லனாக அசத்துகிறார். கலர் கலரான உடையில் ஹைடெக் வில்லனாக தெரிந்தாலும், லோக்கல் ரவுடிபோல்தான் நமக்கு தெரிகிறார். லிங்கேஷ், ரஜினிக்கு இணையாக அவருக்கு எதிரில் அமர்ந்து பேசும் காட்சிகளில் கெத்து காட்டுகிறார். மெட்ராஸ் படத்தில் பார்த்த கலையரசன், இப்படத்தில் அப்படியே நேர் எதிராக வந்து நிற்கிறார். குழந்தைதனமான முகத்தில் எதார்த்தம் கலந்து நடித்திருக்கிறார். தினேஷ், ரஜினிக்கு பாடிகார்டாக வந்திருக்கிறார். படம் முழுக்க ‘ரோபோ’ படத்தில் வரும் சிட்டி போல் படத்தில் ரஜினி செய்யும் கட்டளைகளை செய்துவருகிறார். இருந்தாலும், இறுதிக்காட்சிகளில் தனது நடிப்பால் ரசிகர்களை செண்டிமென்டால் கவர்கிறார்.

K3

சூப்பர் ஸ்டாரின் மனைவியாக வரும் ராதிகா ஆப்தே, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். வயதான கெட்டப்பிலும், ரஜினியுடன் இவர் செய்யும் காதல் காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கிறது. 25 வருடத்திற்கு பிறகு தனது கணவனை பார்த்து கண்கலங்கி நிற்கும் காட்சிகளில் எல்லாம் நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார்.

படத்தில் 43 கேங்கின் தலைவராக வரும் மலேசியா நடிகர் வின்ஸ்டன் சா, தோற்றத்திலேயே மிரட்டுகிறார். இவருக்கும் ரஜினிக்கு இணையான மாஸ் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். போதைக்கு அடிமையான பெண்ணாக வரும் ரித்விகாவின் கதாபாத்திரத்தை அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். இவர் ரஜினியை எதிர்த்து பேசும் காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார்.

K2

இயக்குனர் பா.ரஞ்சித், ரஜினிக்கு ஏற்ற கதையை உருவாக்கி, அதை தனது பாணியில் உருவாக்கியிருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலமே எதார்த்தமான வசனங்கள்தான். ஆங்காங்கே, ரஜினி பேசும் வசனங்கள், பஞ்ச் டயலாக்காக இல்லாவிட்டாலும், ரசிகர்களை விசிலடிக்க வைத்துள்ளது. ஆனால், ஒருசில காட்சிகளால் படத்திற்கு தொய்வு இருக்கிறது. ரஞ்சித் இயக்கியிருந்த இரண்டு படங்களும் ரஞ்சித் பெயரைச் சொல்லும்படமாக இருந்தது. ஆனால், கபாலி முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினியை மட்டுமே குறிப்பிடும். அந்தளவுக்கு ரஞ்சித்தின் பங்கு இதில் குறைவுதான் என்று சொல்லவேண்டும்.

K5

சந்தோஷ் நாராயணன் இசையில் ஏற்கெனவே பாடல்கள் ஹிட்டாயிருந்தாலும், திரையில் பார்க்கும்போது அந்த பாடல்களுக்கு ஜீவன் பிறந்திருக்கிறது. பின்னணி இசையும் மிரட்டலாக இருக்கிறது. முரளியின் ஒளிப்பதிவு மலேசியாவை அழகாக படம்பிடித்திருக்கிறது. செட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளும் மிகவும் தத்ரூபமாக தெரிகிறது. ரஜினிக்கு அமைத்த மாஸ் காட்சிகளில் எல்லாம் இவரது கமரா அழகாக வேலை செய்திருக்கிறது.

மொத்தத்தில் கபாலி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி

வவுனியா வைரவர்புளியங்குளம் பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பூங்காவனம்!!(படங்கள்)

வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ  பெருவிழாவில்   20.07.2016 புதன்கிழமையன்று பூங்காவனம் உற்சவம் இடம்பெற்றது .

பூங்காவான உற்சவத்தின் இறுதியில்  அம்பாள் அழகிய  பூந்தண்டிகையில்  வீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.

13697281_1847839305437044_4526116912558829503_n

13690834_1847839865436988_5714156393306099048_n 13692523_1847839238770384_8054691293518646371_n 13697281_1847839305437044_4526116912558829503_n 13716054_1847839635437011_7583528181767074596_n 13726764_1847839752103666_2217903370509540625_n (1) 13726764_1847839752103666_2217903370509540625_n 13726783_1847840045436970_734106037457458784_n 13729013_1847839828770325_4039940381957070252_n 13731535_1847839532103688_8860196005641095514_n 13754704_1847839242103717_1958203713990395506_n 13769516_1847839332103708_6360100713675522049_n 13769569_1847839455437029_5398662637033643780_n 13775420_1847839935436981_7908287898623655046_n 13775456_1847840022103639_2156541960374633496_n 13775816_1847839585437016_5642202151377415301_n

 

 

உசேன்போல்டுக்கு நடந்த கொடுமை!!

Bolt

2008, 2012ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்று அசத்திய ஜமைக்கா தடகள ஜாம்பவான் உசேன்போல்ட், ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஹட்ரிக் தங்கப்பதக்கம் வெல்லும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

தசைப்பிடிப்பு காயம் காரணமாக ஜமைக்காவில் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய உசேன்போல்ட் லண்டனில் இன்றும் (வெளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) நடைபெறும் சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க இருக்கிறார். இந்த நிலையில் உசேன்போல்ட் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது..

எனது தசைப்பிடிப்பு காயம் நன்றாகி விட்டது. தற்போது எந்தவித பிரச்சினையும் இல்லை. ஊக்க மருந்து பயன்படுத்தியதற்கான ஆதாரம் இருந்தால் நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஊக்க மருந்து பிரச்சினையால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷிய தடகள அணிக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டு இருப்பது நியாயமானது என்று நீங்கள் நினைத்தால் அது தான் எனது எண்ணமும் ஆகும்.

விதிமுறை என்பது எல்லோருக்கும் பொதுவானது தான். தடகள போட்டியில் ஊக்க மருந்து விவகாரம் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இந்த நடவடிக்கை மற்ற வீரர்கள் ஒழுங்காக நடந்து கொள்ள விடுக்கப்படும் எச்சரிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற இலங்கை அகதிகள் சிலர் இந்தியாவில் கைது!!

Aus

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் சிலர் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் முட்டம் பகுதியிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிக்க முயன்றபோது, குற்றப்பிரிவு பொலிஸார் 14 இலங்கை அகதிகளை கைது செய்துள்ளனர்.

இதன்போது பிடிக்கப்பட்ட குறித்த படகு, சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்தப் படகில் பல ஆயிரம் லீட்டர் டீசல் இருப்பது தெரியவந்ததால், பாதுகாப்பு கருதி, கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் அந்தப் படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொள்ளாச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த இலங்கை அகதியை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

பெற்ற பிள்ளையை சாப்பிட்ட காட்டுமிராண்டி தாய்!!

cannibal_mum_002

சீனாவில் தான் பெற்ற பிள்ளையை இளம் தாய் ஒருவர் கடித்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சென்ஸென்(Shenzhen) மாகாணத்தில் வசித்த லி ஸெங்கூவா(Li Zhenghua Age-24) என்ற பெண் தனது கர்ப்ப காலத்தில் வீதியில் உலாவிய படி இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, பிரசவ வேதனையால் துடித்ததால் அக்கம் பக்கத்தினர் இவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதன்பின் ஆண் குழந்தையை ஈன்ற இவர், அக்குழந்தையை சாப்பிட விரும்பியுள்ளார். எனவே குழந்தையின் கையில் தன் பற்களை வைத்து பலமாக கடித்துள்ளார். அப்போது இதனை பார்த்த செவிலியப் பெண் குழந்தையை காப்பாற்றியதுடன் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் லி சென்கூவாவை கைது செய்து விசாரித்துள்ளனர். இதுகுறித்து பொலிசார், மனநலம் பாதிக்கப்பட்ட இப்பெண்ணின் செயல்களை விரும்பாத இவரது மாமியார் இப்பெண்ணை வீதியில் அடித்து விரட்டியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

தாயின் பிணத்தை தோண்டி செல்பி எடுத்த மகன்.அதிர்ச்சி சம்பவம்!!

deadbody_selfie

லெபனான் நாட்டில் நபர் ஒருவர் தனது தாயின் பிணத்துடன் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் காட்டுத் தீயை போல் உலகெங்கும் பரவிய இந்த செல்பி மோகம், சில நேரங்களில் வீபரித செயல்களிலும் மக்களை ஈடுபட வைக்கிறது.மேலும் செல்பி எடுப்பது என்பது ஒரு உளவியல் பிரச்சினை என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இந்நிலையில் லெபனானில் உள்ள சுடுகாடு ஒன்றில் காவலாளியாக பணி புரிந்து வரும் டெப் சாய்ஃலி (Deab Saiqly) என்ற நபர், தனது தாயாரின் பிணத்துடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வெளியாக பலரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

அதிலும் பல ஆண்டுகளுக்கு முன்னரே காலமான அவரது தாயாரின் பிணத்தை தோண்டி எடுத்து, அதனுடன் அவர் செல்பி எடுத்து கொண்டுள்ளார். இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றில் மனநல மருத்துவரிடம் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, எனக்கு அமெரிக்காவில் வரன் ஒன்று அமைந்தது.

ஆனால் மரணங்கள் எனக்கு விருப்பமான ஒன்றாக இருப்பதால் அதனை நான் நிராகரித்தேன் என கூறியுள்ளார். மேலும் இதுவரை நான் நிறைய சடலங்களுடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளேன் என்றும் ஆனால் தாயாருடன் எடுத்துக் கொண்ட செல்பியை மட்டும் பாதுகாப்பாக வைத்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.இந்த பேட்டியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்வையாளர்கள் டெப்பிற்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என கூறியபோதும், அவ்வாறு எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை என அவரை பேட்டி எடுத்த மனநல மருத்துவர் கூறியுள்ளார்.

புதிய தொழில்நுட்பத்தை கையில் எடுத்த பேஸ்புக்!!

facebook-inc-to-use-laser-technology-to-boost-high-speed-internet-goals

இணைய வசதியை அனைவரும் வழங்கும் முயற்சியில் களமிறங்கியுள்ள பேஸ்புக் நிறுவனம் லேசர் தொழில்நுட்பத்தை கொண்டு அதனை சாத்தியமாக்க முயற்சித்து வருகிறது.கம்பிவழி அதிவேக தகவல் பகிர்வு வலையமைப்புகளில் (high-speed wired communication) பொதுவாக தகவல்களை அனுப்புவதற்கு லேசர் தொழிநுட்பம் பயன்படுத்தப்படும்.

அதே சமயம் வயர்லெஸ் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யும் தொழிநுட்பங்களில் அலைவரிசைகள் அல்லது நுண்ணலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் ஒரு ஒளிரும் பொருட்களின் மீது லேசரை செலுத்தி அதன் மூலம் இணைய சேவையை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

உலகம் முழுவதும் 4 பில்லியன் மக்கள் இணைய வசதி இல்லாமல் இருக்கும் நிலையில், இந்த தொழில்நுட்பம் மூலம் அவர்களுக்கு இணைய வசதியை அளிக்க முடியும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நடுக்கடலில் நேர்ந்த விபரீதம்: பரிதாபமாக பலியான பெண்கள்!!

Looking for a new start: A leaking boat crowded with more than 300 asylum seekers before its interception by the Italian coastguard.

நைஜீரியா மற்றும் சிலி நாட்டை சேர்ந்த குடியேறிகள் மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலி நாட்டை நோக்கி படகில் சென்ற போது, அந்த படகில் 22 பேரின் பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன.சுமார் 209 பேர் இத்தாலி நாட்டை நோக்கி படகில் சென்றபோது, லிபியாவுக்கு அருகில் வைத்து சர்வதேச கண்காணிப்பு குழுவினர் அந்த படகினை மடக்கி சோதனையிட்டனர். இதில் படகின் கீழ்தளத்தில் 21 பெண்களின் உடல்கள் மற்றும் ஒரு ஆணின் உடல் பிணமாக கிடந்தனர்.இந்த படகில் 50 குழந்தைகள் உட்பட மொத்தம் 209 பேர் பயணித்துள்ளனர், ஆனால் இந்த 22 பேரும் எப்படி இறந்தார்கள் என்பது தெளிவாக தெரியவரவில்லை.

தண்ணீரும், டீசலும் ஒன்றாக கலந்து விட்டதால், அதிலிருந்து நச்சு பரவி இவர்களை சுயநினைவிழக்க செய்ததுடன் படிப்படியாக மரணத்திற்கு வழிவகுத்துள்ளது என humanitarian group Medecins Sans Frontieres (MSF) தலைவர் Jens Pagotto கூறியுள்ளார்.மேலும் இது ஒரு பயங்கரமான மரணம் எனவும் கூறியுள்ளார், இந்த படகில் பயணம் செய்தவர்கள் மேற்கு ஆப்பிரிக்கா, நைஜீரியா மற்றும் கென்யா நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.2016 ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டிற்கு கடலின் மூலம் பயணித்து 83,119 பேர் வந்துள்ளனர், இதில் 3,000 குடியேறிகள் இறந்துவிட்டார்கள் அல்லது காணாமல் போயுள்ளனர் என சர்வதேச குடியேறிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பெண்களை பலாத்காரம் செய்யும் எய்ட்ஸ் நோயாளி: தொழிலாக செய்யும் கொடுமை!!

_90458819_aniva-promo
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மால்வேயில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர், அங்குள்ள பெண்களை பலாத்காரம் செய்து எய்ட்ஸ் நோயினை பரப்பி வரும் தொழிலை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எரிக் அணிவா என்ற இந்நபர் அங்குள்ள கிராமங்களில் இருக்கும் பெண்களுக்கு மிகவும் பரீட்சியமானவர், காரணம் இவர் அப்பகுதியில் உள்ள பெண்களை பலாத்காரம் செய்து வருகிறார்.

Eric Aniva என்ற பெயரையும் தாண்டி Hyena என்ற பெயருடன் இவர் அழைக்கப்படுகிறார், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இவர், கிராமங்களில் வசிக்கும் பெண்களை பலாத்காரத்திற்கு உட்படுத்துகிறார், இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருவுற்றால் அதனை கலைத்து விடுகின்றனர்.இவ்வாறு, ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தால் இவருக்கு கிடைக்கும் வருவாய் £5 ஆகும். இதுகுறித்து இவர் கூறியதாவது, 12 வயது பெண்கள் என்னுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர், சில பெண்கள் 12 அல்லது 13 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்.

உறவில் ஈடுபடும் பெண்கள் என்னிடத்தில் மகிழ்ச்சியை காண்கின்றனர் என்றும் இதனால் நான் பெருமை கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.மால்வேயில் உள்ள கிராமத்தில் 10 இல் ஒரு பெண்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ள Eric Aniva, தனது மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.பலாத்காரம் செய்வதை ஒரு தொழிலாக செய்துவரும் இவருடன் வாழ்வதற்கே வெறுப்பாக உள்ளது என மனைவியர்களில் ஒருவரான Fanny Aniva கூறியுள்ளார்.

இது முடிவுக்கு வரவேண்டும் என்றும், இது எங்களுக்கும் பிற பெண்களுக்கும் துயரமான ஒன்று எனவும் கூறியுள்ளார்.இவர் இவ்வாறு இந்த தொழிலை செய்து வருவதற்கு, அந்த கிராமத்தில் உள்ள தலைவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கபாலிக்காக தேர்வை ஒத்தி வைத்த பல்கலைகழகம்!!

Rajini-Kabali-Teaser
கபாலி படம் இன்று வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, நிறைய அலுவலகங்கள் கூட விடுமுறை அளித்து விட்டன.இந்நிலையில் பெங்களூரில் உள்ள பல்கலைகழகம் ஒன்று இன்று நடைபெறவிருந்த தேர்வை ஒத்தி வைத்துவிட்டதாக தகவல்கள் பரவியது.

இதற்கு ஆதாரமாக டுவிட்டரில் சுற்றறிக்கை ஒன்றும் வெளியானது, ஆனால் இது உண்மையில்லை என பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாய்க் குட்டிகளை உயிருடன் எரித்தது ஏன்? பரபரப்பு வாக்குமூலம்!!

DOG-511808

ஜதராபாத்தில் சிறுவர்கள் எட்டு பேர் சேர்ந்து மூன்று நாய்க் குட்டிகளை உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜதராபத்தில் உள்ள வஜீர் சுடுகாட்டுப் பகுதியில் கடந்த 16ம் திகதி சிறுவர்கள் எட்டு பேர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒன்றாக சேர்ந்து மூன்று நாய்க் குட்டிகளை உயிருடன் எரித்துக் கொல்வது போன்ற வீடியோ வெளியானது. சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவவே, அந்த காட்சிகளை ஆதாரமாக வைத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் சிறுவர்களை கைது செய்தனர்.

12 முதல் 17 வயது வரை உள்ள அவர்களில் 5 பேர் மாணவர்கள், 3 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் ஆகஸ்ட் 2ம் திகதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.அவர்கள் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மூன்று நாய்க் குட்டிகளும் விடாமல் குரைத்துக் கொண்டே இருந்தது.அந்த சத்தம் மிகவும் எரிச்சலூட்டியது, தொந்தரவாக இருந்ததால் விளையாட முடியவில்லை, எனவே கோபத்தில் தீயை மூட்டி நாய்க் குட்டிகளை கொன்றதாக தெரிவித்துள்ளனர்.

பெற்ற மகளையே பணம் கொடுத்து கொன்ற தந்தை!!

625.0.560.320.500.400.194.800.668.160.90
தமிழகத்தின் நாமக்கல் அருகே பெற்ற மகளையே ரூ.1,00,000 கொடுத்து தந்தை கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.நாமக்கல் வேலக்கவுண்டன்பட்டியை சேர்ந்த செல்வம்-சுமதி தம்பதியினரின் மகள் காவ்யா.கருத்து வேறுபாடு காரணமாக செல்வம்- சுமதி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், காவ்யா கடந்த 15-ஆம் திகதி கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் தந்தை செல்வத்தையும், அத்தை வெண்ணிலா மற்றும் சங்கர் ஆகியோரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, குடும்ப பிரச்சனை காரணமாக செல்வம் தான் ரூ 1 லட்சம் வழங்கி காவ்யாவை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.