வவுனியாவில் இன்று(22.07.2016) காலை ஆரம்பமான இராணுவ முகாம் மீதான முற்றுகை ஆர்ப்பாட்டம் குடியிருப்பு கலாச்சார மண்டபத்திலுள்ள இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி ஆரம்பித்து ஓமந்தையிலுள்ள இராணுவ முகாமை சென்றடைந்து, யாழ் பிரதான A9 வீதியினை வழிமறித்து பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதனால் A9 வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.
தனியார் மற்றும் அரச காணிகளிலிருந்து இராணுவத்தினரை உடனடியாக வெளியேறுமாறு கோரியே இன்றைய ஆர்ப்பாட்டத்தினை வடபகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து ஜனநாயகத்திற்கான வடபகுதி இளைஞர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.
பொதுமக்களின் காணியிலிருந்து இராணுவத்தினர் உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், உல்லாச விடுதிகள், விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் பொதுமக்கள் தமது காணிகளை இராணுவத்திடம் கொடுத்தவிட்டு வாடகைக்கு வசித்துவருவதாகவும் உடனடியாக இராணுவத்தினர் பொதுக்காணி, அரச காணியிருந்து வெளியேறி மக்கள் குடியிருப்புக்களுக்கு அனுமதிக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வவுனியாவிலிருந்து ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம் ஓமந்தை, திருவையாறு, பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி, இயக்கச்சி, சாவகச்சேரி, வழியாக யாழ்ப்பாணம், காங்கேசன்துறையை சென்றடைய உள்ளதாக ஏட்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்குச் சொந்தமான இடங்களிலும் காணிகளில் இருந்து இராணுவத்தை வெளியேறக் கோரி வவுனியா CCTMS பாடசாலைக்கு முன்னால் உள்ள இராணுவ முகாமுக்கு முன்னால் இன்று (22.07.2016) காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இப் போராட்டம் ஐனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்கள் என்ற அமைப்பினால் முன்னெடுக்கப்படுகின்றது.
வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான இராணுவ முகாம்களை அகற்றக் கோரி தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், வவுனியாவை அடுத்து ஓமந்தையில் இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் இவ் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.
ஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலர் யார் என்பதை தெரிவு செயவதற்கான இரகசிய வாக்கெடுப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 பேர் இப்பதவிக்காகப் போட்டியிடுகின்றனர். தற்போதைய பொதுச் செயலாளர் பான் கி-மூன் அவர்களின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், அடுத்த பொதுச் செயலாளரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளின்படி, பாதுகாப்புச் சபை பரிந்துரையின் அடிப்படையில், 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழு ஐ.நா. பொதுச் செயலாளரை தெரிவு செய்யும்.
அவ்வாறு தெரிவு செய்யும் பொதுச் செயலாளரை ஏற்க மறுக்கும் அதிகாரம் பாதுகாப்புச் சபையிலுள்ள நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு உண்டு.
விதிமுறைகளில் இல்லாவிட்டாலும், உலகின் அனைத்துப் பிராந்தியத்தினருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், சுழற்சி முறையில் ஒவ்வொரு பிராந்தியத்தைச் சேர்ந்தவரும் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.
அந்த வகையில், ஆசியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் சுழற்சி முறையில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளனர்.
இந்நிலையில், பான் கி-மூனுக்கு அடுத்ததாக தங்கள் நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் அடுத்த பொதுச் செயலாளராக வேண்டும் என்று ரஷ்யா உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
எனினும், ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இதுவரை ஒரு பெண் நியமிக்கப்பட்டதில்லை என்பதால், பெண் ஒருவர் தான் அடுத்த பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட வேண்டும் என 56 உறுப்பு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இதுதொடர்பாக நடைபெற்ற வாக்குப் பதிவில் 12 பேர் போட்டியிட்டனர். இதில் 6 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எட்டு பேர் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். இருவர் தென் அமெரிக்காவையும், ஒருவர் மேற்கு ஐரோப்பாவையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அடுத்த பொதுச் செயலாளர் பதவிக்கான போட்டியில், இதுவரை இல்லாத வகையில் வெளிப்படைத் தன்மை அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
முதல்முறையாக ஐ.நா. பொதுக் குழு உறுப்பினர்கள், தூதர்கள், செய்தியாளர்கள் முன்னிலையில் தாங்கள் ஏன் பொதுச் செயலாளராக வர விரும்புகிறோம் என விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் பாதுகாப்புக் சபை உறுப்பினர்கள் முன்னிலையிலும் போட்டியாளர்கள் தனித்தனியாக “நேர்காணலில்’ கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களான மகாலிங்கம் சசிகுமார், மகாலிங்கம் சசீந்திரன் ஆகியோர் நேற்று அவரது தாயாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டனர்.
இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக மூன்றடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேற்படி இரு சந்தேக நபர்களும் நேற்றுக் காலை 8.30 மணி அளவில் சிறையிலிருந்து அவர்களது தாயாரின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த ஓட்டுமடத்திலுள்ள மலர்சாலை ஒன்றுக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.
கடந்த ஜுன் மாதம் 17ம் திகதி சிறைச்சாலை அனுமதியுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகாலிங்கம் சசிகுமாரது (சுவிஸ் குமார்) தாயார் மரணமானார்.
மரணமான மகாலிங்கம் தவநிதி என்ற குறித்த பெண்மணி மேற்படி வழக்கில் நீதிமன்ற தவணைக்காக வந்திருந்த படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயாரான சரஸ்வதி என்பவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சாட்சிகளை பாதுகாப்பதற்கான கட்டளை சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்ட அப்பெண்ணுடன் அவரது சம்பந்தியான சிவதேவன் செல்வராணி என்பவரும் குறித்த சாட்சியை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த வழக்கு தவணையின் போது ஜுன் 21ம் திகதி இறுதிக் கிரியைகள் நடத்த வேண்டி இருந்த காரணத்தினால் சட்டத்தரணி ஒருவர் ஊடாக விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் குறித்த வழக்கில் 4 வது சந்தேக நபரான மகாலிங்கம் சசிதரன், 9ம் சந்தேக நபரான மகாலிங்கம் சசிகுமார் (சுவிஸ்குமார்) ஆகியோருக்கு இறந்த பெண்மணியுடன் சாட்சியை அச்சுறுத்தியதாக கைது செய்யப்பட்ட சிவதேவன் செல்வராணி ஆகியோருக்கும் நீதிமன்றம் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்கி இருந்தது.
இவ்வனுமதி வழங்கும் போது ஊர்காவற்றுறை பதில் நீதவான் இ. சபேசன் சந்தேக நபர்கள் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ளும் போது சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸ் தரப்புக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டடுள்ளது.
சடலம் யாழ்ப்பாணம் ஒட்டுமடம் பகுதியில் அமைந்துள்ள கோம்பையன் மணல் இன்பம் மலர்சாலை சூழலில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்த்து.
இறுதி கிரியைக்கு இறந்த பெண்மணியின் மகன்களாக மகாலிங்கம் சசிதரன், மகாலிங்கம் சசிகுமார் ஆகியோர் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் கைவிலங்கு இடப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.
ஆனால் இறந்த பெண்மணியுடன் சாட்சியை அச்சுறுத்தியதாக கைது செய்யப்பட்ட சிவதேவன் செல்வராணி அழைத்து வரப்படவில்லை.
அத்துடன் 20 நிமிடம் வரை தாயாரின் இறுதிக் கிரியைகளை மேற்குறித்த இரு சந்தேக நபர்களும் கைவிலங்குடன் நிறைவேற்றினர்.
இறுதியாக தங்கள் சொந்த பந்தங்களுடன் இணைந்து அனுதாபங்களை பகிர்ந்ததுடன் சிறைச்சாலை அதிகாரிகள் இவர்களை மீண்டும் சிறைச்சாலைக்கு கடும் பாதுகாப்புடன் ஏற்றிச் சென்றனர்.
எரிபொருள் விலை உயர்த்தப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள எரிபொருள் விலை உயர்த்தப்பட உள்ளதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வற் வரி உயர்விற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள நீதிமன்ற இடைக்கால தடை காரணமாக அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்த உள்ளதாக சில தரப்பினர் தெரிவித்திருந்தனர்.
எனினும் அரசாங்கம் வேறும் வழிகளில் வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் எனவும், எரிபொருள் விலையை உயர்த்தாது எனவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் மலாய் தமிழர் ஒருவர் கபாலி படத்திற்காக, அது திரையிடப்பட உள்ள மால் ஒன்றில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றார்.
ஆனால் டிக்கெட் விற்று தீர்ந்ததால் வருத்தம் அடைந்த அவர், திரையரங்கு இருந்த 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் கீழே குதிக்கும் காட்சிகள், வட்ஸ் அப்பில் இப்போது பரவி வருகிறது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று யாழ். பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆளும், எதிரணி உறுப்பினர்கள் கருத்துகளை வெளியிட்டனர்.
இதன்போதே பிரதமரும் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சம்பவம் இடம்பெற்ற பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க என்னோடு கதைத்தார்.
இதையடுத்து இது பற்றி நான் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தேன்.
சட்டமும் ஒழுங்கும் அமைச்சு இதுவிடயத்தில் துரிதமாக செயற்பட்டது. அமைச்சர் சுவாமிநாதனையும் அனுப்பிவைத்திருந்தோம்.
குறிப்பாக இந்தச் சம்பவத்தை இனவாதமாக்குவதற்கு பெரும்பாலானோர் முயற்சிக்கவில்லை. சுமுக நிலைமையை ஏற்படுத்த ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. எனினும், ஒருவர் மாத்திரம் சிலரை தூண்டிவிட்டு இனவாதம் பேசுகிறனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த உயர் கல்வி அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையானது அந்தப் பிரதேசத்துக்குப் பொறுப்பான கோப்பாய் பொலிஸாரரினாலும் யாழ். பல்கலைக்கழகத்தின் அதிகாரிகளினாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சம்பவம் தொடர்பில் செயற்பட்ட மாணவர்கள் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு யாழ். பல்கலைக்கழகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொர்பில் சந்தேகிக்கப்படுவதாக பொலிஸாரின் விசாரணையின் மூலம் வெளிப்பட்டுள்ள த.சிசிதரன் என்ற மாணவன் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சட்டத்தரணி ஒருவர் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் மூவரடங்கிய குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகளின் நிமித்தமான உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், உப தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் நாளை வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்கு செல்லவுள்ளனர்.
இதன்போது கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களையும் அதேபோல், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மாணவர் அமைப்புகளுடனும் பேச்சுக்களை நடத்தி தற்போதைய நிலைமைகள் பற்றி எனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படும் சகல நடவடிக்கைகளுக்கும் பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களினதும் பல்கலைக்கழக நிர்வாகத்தினதும் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ளப்படுவதற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உரிய ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரஜினி நடித்த கபாலி திரைப்படம் இன்று வெளிவருவதை முன்னிட்டு கரூரில் பேக்கரி ஒன்றில் கபாலி கெட்டப்பில் 4 அடி உயர கேக்கை செய்து பார்வைக்கு வைத்துள்ளனர்.
கபாலி. எங்கு பார்த்தாலும், யாரை பார்த்தாலும் கபாலி பற்றிய உரையாடல்களே காதில் விழுகிறது. ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய் ஆகிய 4 மொழிகளில் இந்த படம் திரைக்கு வருகிறது. கபாலி வெளியீட்டை ரஜினிகாந்த் ரசிகர்கள் விழாவாக கொண்டாடுகிறார்கள். திரையரங்குகளில் கட்அவுட், பனர்கள் அமைத்துள்ளனர். கொடி தோரணங்களும் கட்டி உள்ளனர்.
இந்நிலையில், கரூரில் தனியார் பேக்கரி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி உருவத்தை 4 அடி உயர கேக்காக செய்து பார்வைக்கு வைத்துள்ளனர்.
இந்த கபாலி கேக்கை பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்து செல்கின்றனர். 60 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கேக்கில் கபாலி பட ரஜினி கெட்டப்பில் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 நாட்கள் செலவிட்டு இந்த கேக்கை தயாரித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர் கூறுகிறார். இந்த கேக் 20,000 ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடையின்முன் வைக்கப்பட்டுள்ள இந்த கேக் வாடிக்கையாளர்களையும், குழந்தைகளையும், ரஜினி ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.
ஒரு சில ரஜினி ரசிகர்கள் மேலும் ஒரு படி தாண்டி தலையில் கபாலி ஸ்டைலில் தலைமுடியை வெட்டி வலம் வருகின்றனர். இன்னும் என்னனென்ன கெட்டப்பில் கபாலி வலம் வரப்போகிறார் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலான் சமரவீர, இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி சமீப காலமாக கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கூட இலங்கை அணி தோல்வியை சந்தித்து நாடு திரும்பியது.
இந்த நிலையில் அனைத்துப் போட்டிகளுக்கும் தலைவராக உள்ள மத்யூஸை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் மீது விமர்சங்கள் எழுந்து வருகிறது.
ஆனால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் மத்யூஸ் தலைவராக தொடர்வார் என்று இலங்கை கிரிக்கெட் சபை திட்டவட்டமாக அறிவித்தது.
இது தொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலான் சமரவீர கூறுகையில், என்னை பொறுத்தவரை இலங்கை அணியின் தலைவரை மாற்றுவது தேவையற்றது.
ஆனால் மத்யூஸ் சில விடயங்களை கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும். போட்டிகளில் சூழ்நிலைகளை நன்கு அறிந்து நடக்க கூடிய சில முடிவுகளை அவர் எடுக்க முன்வர வேண்டும்.
தலைவர் என்பவர் பெயரளவில் இல்லாமல் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சிறப்பாக செயல்படக் கூடியவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கபாலி திரைப்படத்திற்காக சென்னை, பெங்களூரில் சில அலுவலகங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளதை பார்த்து சர்வதேச ஊடகங்கள் வியந்துள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் யாரைப் பார்த்தாலும் கபாலிடா, நெருப்புடா, நெருங்குடா என்கிறார்கள்.
இன்று பலர் அலுவலகங்களுக்கு செல்லாமல் கபாலியை பார்க்க தியேட்டருக்கு செல்ல உள்ளனர். எப்படியும் இன்று காலை போன் செய்து எனக்கு வயிற்று வலி, தலைவலி, காய்ச்சல், தாத்தா அல்லது பாட்டி இறந்துவிட்டார்கள் என்று பலர் பொய் சொல்லி கபாலி படம் பார்க்க விடுப்பு கேட்பதை தவிர்க்க சில நிறுவனங்கள் தாமாகவே விடுமுறை அறிவித்துள்ளன.
சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கபாலி பட டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
இந்நிலையில் ஒரு நடிகரின் படம் வெளியாவதை முன்னிட்டு அலுவலகங்கள் விடுமுறை அறிவித்துள்ளதை சர்வதேச ஊடகங்கள் வியந்து பார்க்கின்றன.
இலங்கை யாழ்ப்பாணத்தில் 400 மில்லியன் செலவில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் கட்ட திட்டமிட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை யாழ்ப்பாணத்தில் கட்ட திட்டமிட்டுள்ளோம்
சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் நவம்பர் மாதம் தொடங்கும். 3 ஆண்டுகளில் இந்த பணிகள் முழுவதுமாக முடிந்துவிடும். இருப்பினும் இது கட்டப்படும் இடம் இன்னும் தெளிவாக முடிவு செய்யப்படவில்லை. இதற்கான மொத்த செலவையும் கிரிக்கெட் சபை ஏற்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வாழப்பாடி அருகே தற்கொலைக்கு முயன்ற எஜமானை பிஸி என்ற நாய் காப்பாற்றியுள்ளது.
சேலம் வாழப்பாடி அருகே அக்ரஹாரம் வைத்தி படையாச்சித் தெரு, ஆடு அடிக்கும் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(50). கூலித் தொழிலாளியான இவர் தனது வீட்டில் செல்லமாக நாய் ஒன்று வளர்த்து வந்தார். இதற்கு பிஸி என்று பெயர் வைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் சண்டை போட்டு விட்டு வெளியே சென்று விட்டார். வெகு நேரமாகியும் ரவிச்சந்திரன் வீட்டிற்கு வராததால் பிஸி தேடிச் சென்றுள்ளது.
அப்போது, அந்த பகுதியில் உள்ள தனியார் கயிறு திரிக்கும் கம்பெனி அருகே ரவிச்சந்திரன் அமர்ந்திருப்பதை பிஸி கண்டுபிடித்து அவர் அருகில் சென்றது. ஆனால் ரவிச்சந்திரன் பிஸியை வீட்டிற்கு செல்லுமாறு விரட்டியுள்ளார்.
பின்பு, வீட்டிற்கு வந்த பிஸி ரவிச்சந்திரனின் மகனான குமார் படுத்திருந்த கட்டிலைப் பார்த்து சத்தமாக குறைத்தது. ஆனால் குமார் எழுந்திரிக்கவில்லை. பின்பு குமார் அணிந்திருக்கும் சட்டையை கடித்து இழுத்தது. உடனே குமார் எழுந்திரிக்க பிஸி சத்தமாக குறைத்துக் கொண்டே ரவிச்சந்திரன் இருக்குமிடத்திற்கு ஓடியது. குமாரும் பின்னாடியே ஓடினார்.
அங்கு, ரவிச்சந்திரன் துக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்வதைக் கண்ட குமார் வேகமாக ஓடிப்போய் அவரை காப்பாற்றினார்.
தக்க சமயத்தில் எஜமானின் உயிரைக் காப்பாற்றிய பிஸி என்ற நாயை ரவிச்சந்திரன் குடும்பத்தினர் விருந்து அளித்து பாராட்டியுள்ளனர்.
அறிவு கூர்மையால் எஜமானைக் காப்பற்றிய நாயை அப்பகுதி மக்கள் அனைவரும் வியந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.
சிறை கண்காணிப்பாளரிடம் தன்னை இப்படி கொடூரமாக அடிப்பதற்கு பதில் சாகடித்து விடும் படி கெஞ்சியதாக பிணையில் வெளியே வந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
பாலம் கட்டுமான பணிக்கு இடையூறு செய்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு தற்போது நிபந்தனை பிணையில் வெளியே வந்த பியூஷ் மனுஷ், சேலத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, சிறைக்குள் சென்றதும் சாதி என்ன என்று காவலர்கள் கேட்டனர், பின்னர் சிறை கண்காணிப்பாளர் அறைக்கு என்னை அழைத்து சென்று கொடூரமாக தாக்கினர். வலி தாங்க முடியாத நிலையில் இப்படி என்னை அடிப்பதற்கு பதில் சாகடித்து விடும்படி கண்காணிப்பாளரிடம் கெஞ்சினேன்.
மேலும் நான் தேசிய கொடி எரித்த வழக்கில் கைது செய்யப்பட்டதாக சிறை முழுவதும் தவறான செய்தி பரவியது. பின்னர் பத்திரக்கையில் வந்த செய்தியின் மூலம் நான் பாலம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்தும் என்னை தொடர்ந்து கொடூரமாக தாக்கினர். நான் 1997 முதல் கடந்த 20 ஆண்டுகளாக சேலத்தில் மரங்களை நட்டு வருகிறேன்.
இதுவரை இதுபோன்ற துன்பத்தை என் வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை. சிறையில் என்னை தாக்கியதற்கான காரணத்தை சிறை கண்காணிப்பாளர் கண்டிப்பாக வெளியிட வேண்டும் என பியூஷ் மனுஷ் தெரிவித்துள்ளார்.
கனவுகளில் பலவகை இருக்கின்றன. பொதுவாக அவற்றை நாம் கெட்ட கனவு, நல்ல கனவு என்று இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்திருக்கிறோம். நல்ல கனவு என்பது நமக்கு மனதளவிலோ, உடலளவிலோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ஆனால், கெட்ட கனவு தான் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏன், இந்த கெட்ட கனவுகள் வருகின்றன, கனவென்றால் என்ன, அது ஏன் வருகிறது? உங்கள் ஆழ்மனதில் தேங்கிக்கிடக்கும் ஆசைகளும், நினைவுகளும்தான் கனவாக வருகின்றன. அன்றைய நாளில் உங்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்த நினைவுகளே பெரும்பாலும் கனவாக வரும்.
அது, நீங்கள் பார்த்த படமாக இருக்கலாம், ஏதேனும் நிகழ்வாக இருக்காலாம், எதுவாக கூட இருக்கலாம். ஆனால், அது உங்கள் மனதில் ஆழப் பதிந்திருக்க வேண்டும். இனி, கனவுகள் குறித்த வியக்கதகு காரணங்கள் பற்றிப் பார்க்கலாம்.
முடக்கம்
சில முறை உங்களுக்கே தெரியாமல் பயங்கரமான அல்லது அதிர்ச்சியான கனவுகளின் காரணத்தால் சில நிமிடங்கள் நீங்கள் உடல் அசைவற்று இருப்பீர்கள். சிலர் இதை நன்றாக உணர்ந்திருப்பார்கள், அவர்களில் சிலர் இந்த நிலையை பேய் என்று கூட கருதுவது உண்டு.
கொடுங்கனவு
குளிர்ந்த அறைகளில் உறங்குபவர்களுக்கு அதிகமாக கொடுங்கனவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறதாம்.
கனவுகளில் முடியாதவை
நீங்கள் என்ன முயற்சி செய்தாலும், கனவுகளில் தோன்றும் புத்தகங்களையோ, எழுத்துகளையோ உங்களால் படிக்க முடியாது, மற்றும் கடிகாரத்தில் மணி பார்க்க முடியாது.
தெளிவான கனவு
சில கனவுகளை நீங்கள் தெளிவாக பின் தொடர முடியும். சிலருக்கு தூக்கத்தில் இடையில் எழுந்த பிறகும் கூட மீண்டும் அந்த கனவு தொடர்ச்சியாக வரும். பெரும்பாலும் அந்த வகையான கனவுகள் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும்.
அடிமையாதல்
சிலர் கனவுக்கு அடிமைகளாக இருப்பார்கள், கனவு இடையில் கலைந்துவிட்டாலும் கூட, விடாப்படியாக மீண்டும் மீண்டும் உறங்க முயற்சித்து மீண்டும் அந்த கனவினை எட்டிப்பிடிக்க முயற்சிப்பார்கள்.
கண் பார்வையற்றவர்களின் கனவு
இடைப்பட்ட நாட்களில் கண் பார்வையற்றவர்கள் அதுவரை அவர்கள் கண்ட நிகழ்வுகள், நபர்கள் குறித்து கனவுகள் காண வாய்ப்புகள் இருக்கின்றன. பிறவியிலேயே கண் பார்வையற்றவர்கள் கனவு காண வாய்ப்புகளே இல்லை.
முகங்கள்
நீங்கள் நினைக்கலாம் உங்கள் கனவில் யார் யாரோ வருவதாக. ஆனால், அப்படி ஒன்றும் நடக்காது. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த நபர்கள் மட்டுமே உங்கள் கனவில் வருவார்கள். குறைந்தது நீங்கள் டி.வி, நாளிதழ்களில் ஆவது அந்த நபர்களை பார்த்திருக்க கூடும்.
வண்ணங்கள்
நீங்கள் கனவில் பார்க்கும் அனைத்தும் கருப்பு, வெள்ளையாக தான் இருக்கும். கனவுகளில் வண்ணங்கள் தெரியாது.
வியாதி
அடிக்கடி உங்களுக்கு பயங்கரமான, அலறும்படியான கனவு வருகிறது எனில் அது மூளையில் சேதம் ஏற்படுகிறது என்பதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பார்கின்சன் நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.