இணையதளத்தில் புதிய படம் வெளியீடு : உரிமையாளர் கைது : இணையதளம் முடக்கம்!!

kick_ass

தகவல் திருட்டு இணையத்தளமான கிக் ஆஸ் டாரண்ட்ஸ் அமெரிக்க அரசால் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த இணையதளத்தின் நிறுவுனரும் போலந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிக் ஆஸ் டாரண்ட்ஸ் இணையத்தளத்தில் புதிய படங்கள், இசை அல்பங்கள் என அனைத்தும் முறையான அனுமதி பெறாமல் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது. ஒன்லைனில் படங்களை தரவிறக்கம் செய்து பார்ப்பவர்களுக்கு சொர்க்கபுரியாக திகழ்ந்து வந்தது.

சுமார் 100 கோடி டொலர்கள் மதிப்புள்ள படங்கள், இசை ஆல்பங்கள் உள்ளிட்ட தகவல்களை திருடுவதாக புகார் எழுந்ததை அடுத்து அமெரிக்க நீதித்துறையால் குறித்த இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.

இணையத்தளத்தின் நிறுவுனர் ஆர்டம் வாலின் என்பவர் தகவல் திருட்டு, பண மோசடி ஆகிய குற்றங்களின் கீழ் போலந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆர்டம் வாலியின் அப்பிள் போன் மற்றும் ஐகிளவுட் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அவரைக் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இணையங்கள், தொலைபேசி ஊடாக சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு!!

child-abuse

இணையங்கள் மற்றும் கைத்தொலைபேசிகள் ஊடாக சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது. இணையங்கள், கைத்தொலைபேசிகள் ஊடாக சிறுவர்கள் வெவ்வேறு முறைகளில் துன்புறுத்தப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுவர்கள் மீதான பாலியல் தொல்லைகள் தொடர்பில் முறையிடுவதற்கு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி, 0773220032 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறையிடலாம் என அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், குறித்த தொலைபேசி இலக்கம் ஊடாக குறுந்தகவல், வட்ஸ்அப், வைபர் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முறையிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இத்தொலைபேசி இலக்கமானது ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதி முதல் 24 மணிநேரமும் செயற்படும் என அந்த அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட்ஸ் அப்க்கு விதிக்கப்பட்ட திடீர் தடை!!

Whatapp

பிரேசில் நாட்டில் வட்ஸ் அப் செயலிக்கு விதிக்கப்பட்ட திடீர் தடையால் 10 கோடிக்கும் அதிகமானோர் தகவல் பரிமாற முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

வட்ஸ் அப் பாதுகாப்பு அம்சங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், இதனால் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதனால் இந்தியாவில் வட்ஸ் அப் செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் இந்தியாவில் வட்ஸ் அப் செயலியை தடை செய்ய முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த நிலையில் பிரேசில் நாட்டில் நடந்த ஒரு குற்றச் செயலுக்காக குறிப்பிட்ட தகவல்களை வழங்குமாறு பிரேசில் பொலிசார் வட்ஸ் அப் நிறுவனத்தை கேட்டுக் கொண்டனர். ஆனால் தகவல்களை தர அந்நிறுவனம் மறுத்துவிட்டது.

இது குறித்து ரியோ டீ ஜெனீரோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வட்ஸ் அப் செயலுக்கு தடைவிதிப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் 10 கோடிக்கும் அதிகமானோர் தகவல் பரிமாற முடியாமல் அவதிக்குள்ளாகினர். ஆனால் சிறிது நேரத்திலே கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

பிரேசில் நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வட்ஸ் அப் செயலிக்கு மூன்று முறை தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களை குத்தகைக்கு வழங்குகின்றது!!

srilankan

நிதிநெருக்கடியை எதிர்கொள்ளும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம், விமானங்களை குத்தகைக்கு வழங்கவுள்ளது.

இதன்படி, குறைந்தது 4 பயணிகள் விமானங்களையாவது பாகிஸ்தானிய சர்வதேச விமான நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏ330 விமானங்களை குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் பேச்சுவாரத்தைகள் இடம்பெறுகின்றன. ஏ350 விமானங்கள் தொடர்பிலான கட்டளை ரத்துச்செய்யப்பட்டநிலையிலேயே ஏ330 விமானங்கள் தொடர்பில் பேச்சுவாரத்தைகள் இடம்பெறுகின்றன என்று அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

தமது நட்டத்தை ஈடுசெய்துக்கொள்வற்காகவே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது விமானம் குத்தகைக்கு விடப்படுவதாக தகவல் வெளியானபோதும் எவ்வாறான குத்தகை என்ற விடயம் வெளியாகவில்லை.

2012ஆம் ஆண்டு முதல் சுமார் 7 பயணிகள் விமானங்கள் 3.25 பில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டன.

இதற்காக மாதக்கட்டணமாக 450 000 டொலர்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செலுத்திவருகிறது என அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.

சிறை நிரப்புவதில் மாணவர்களை மிஞ்சும் ஆசிரியர்கள் : நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை!!

Ilancheliyan

சிறைச்சாலையை நிரப்பும் செயற்பாட்டில் மாணவர்களை ஆசிரியர்கள் மிஞ்சுகின்றார்களோ என கேள்வியை எழுப்பி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், ஆசிரியர்களோ அல்லது மாணவர்களோ எவரும் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்படக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

போதை வஸ்து தொடர்பான வழக்கின் பிணை மனு மீதான விசாரணை ஒன்றின் போது நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறு கூறியுள்ளார்.

யாழ் குடாநாட்டில் போதை வஸ்து மற்றும் வாள்வெட்டு குற்றங்கள், கோஸ்டி மோதல்கள், தெருச் சண்டித்தனம், கொள்ளை, குழு மோதல்கள் என பலவித குற்றச்சாட்டுக்களில் பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த குற்றச் செயல்களுக்கு எதிராக இறுக்கமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதனால், தற்சமயம் மாணவர்கள் குற்றங்கள் புரிவது குறைவடைந்து காணப்படுகின்றது.

எனினும், ஆசிரியர்கள் மாணவர்கள் மீது குற்றச் செயல்கள் புரிவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. இது குறித்து தொடர்ச்சியாகக் முறைப்பாடுகள் வந்த வண்ணம் உள்ளன.

ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கின்றார்கள். மாணவர்களைத் தாக்குகின்றார்கள். மாணவிகள் மீது பாலியல் குற்றம் புரிகின்றார்கள் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாடசாலைகள், பாடசாலை வளாகங்கள், கல்லூரி வளாகங்கள் என்பன குற்றச் செயல் புரிவதற்கு அனுமதிக்கப்பட்ட பிரதேசமல்ல.

குற்றச் செயலைச் செய்த எந்தவொரு நபரும், தண்டனையில் இருந்து தப்ப முடியாது. இத்தகைய குற்றச் செயல்களுக்கு மேல் நீதிமன்றம் கடுமையான போக்கையே எடுக்கும்.

சிறுவர்கள், மாணவ மாணவிகள் மீது குற்றம் புரியும் சம்பவங்களை, சமாதானமாக இணங்கி வைக்க முடியாது. அக்குற்றச் செயல்கள் பற்றி பொலிசாருக்கு அறிவிக்கப்பட வேண்டியது மிக முக்கியமானதாகும்.

மாணவிகள் மீது பாலியல் வதை புரியும் ஆசிரியர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என தண்டனச் சட்டக்கோவை மேல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்கின்றது.

மாணவர்கள் மீது ஆசிரியர்கள் தாக்குதல் நடத்துவதை சிறுவர் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் பாரதூரமான குற்றமாகக் கருதுகின்றது.

இந்தக் குற்றத்திற்கு மேல் நீதிமன்றத்தினால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க முடியும். இதே குற்றத்தை சிறுவர்களைக் கொடுமைப் படுத்திய குற்றமாக தண்டனைச் சட்டக் கோவை சுட்டிக்காட்டி, சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று மேல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரை செய்கின்றது.

மிக முக்கியமாக ஆசிரியர் மாணவனைத் தாக்குவது, சிறுவர்களைக் கொடுமைப்படுத்தும் குற்றம் என குறிப்பிட்டு, அது மேல் நீதிமன்றத்தினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய குற்றம் என, சித்திரவதைச் சட்டமும் பரிந்துரை செய்கின்றது,

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆம் பிரிவு மாணவனை ஆசிரியர் தாக்குவது சித்திரவதை என்றும், அது ஓர் அடிப்படை உரிமை மீறல் எனவும் குறிப்பிடுகின்றது.

மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என, அரசியலமைப்புச் சட்டத்தின் 126ஆம் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது.

ஆசிரியர் மாணவனுக்கு அடிப்பது என்பது, ஒழுக்கத்தை வலியுறுத்துவதற்கான ஒரு நடவடிக்கை என முன்னொரு காலத்தில் கருதப்பட்டது.

அது மாணவர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கை என்ற அடிப்படையில் அன்று அதனை சமூகம் அங்கீகரித்திருந்தது. அது ஒரு குற்றமாக அப்போது கருதப்படவில்லை.

ஆனால் இன்று ஆசிரியர் மாணவனுக்கு அடிப்பது என்பது ஒரு பாரதூரமான குற்றச் செயல் என நியதிச் சட்டங்கள் குறிப்பிட்டிருக்கின்றன.

அதன் அடிப்படையில் மாணவர்களை அடிக்கின்ற ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இடமளிக்கப்பட்டிருக்கின்றது.
அத்தகைய குற்றங்களுக்கு சிறைத் தண்டனை வழங்க மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு பக்கத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதாக ஆசிரியர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆசிரியர் மீது மாணவன் பொய்க்குற்றச் சாட்டு ஒன்றை முன்வைத்ததாக நீதிமன்ற விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டால், பொய்க் குற்றம் சாட்டி, அதன் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்த குற்றத்திற்காக அந்த மாணவனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் சட்டம் பரிந்துரை செய்கின்றது.

ஆசிரியர்கள் மட்டுமல்ல. மாணவர்களும் ஆசிரியர்கள் மீது பொய்க்குற்றம் சுமத்தி குற்றச் செயல் புரிய முடியாது. அதற்கு சட்டம் இடமளிக்கவில்லை.

யாழ்ப்பாண சமூகத்தில் மாணவனுக்கும் ஆசானுக்கும் இடையில் குரு சிஷ்யன் என்ற ரீதியில் இன்றும் 95 வீதம் உறவு திறம்பட காணப்படுகின்றது.

ஆனால் 5 வீதமான ஆசிரியர்களினதும், மாணவர்களினதும் செயற்பாடுகளே யாழ் குடாநாட்டின் கல்விச் சமூகத்தை வருத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த விவகாரத்தில் சட்டத்தைப் பற்றி தெரியாது என நீதிமன்றில் விவாதம் செய்ய முடியாது. எனவே ஆசிரியர்கள் மாணவிகளைத் தொடவே கூடாது.

ஆசிரியர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தவே கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஏட்டுக் கல்வியை மட்டுமல்ல ஒழுக்கத்தையும் சேர்த்துப் போதிக்க வேண்டும்.

அதேவேளை, ஆசிரியர்களை சிரம் தாழ்த்தி வணங்கும் குருவாக மாணவர்கள் அனைவரும் மதிக்க வேண்டும். பாடசாலைகளில் அல்லது பாடசாலை வளாகத்தில் குற்றச் செயல்கள் இடம்பெற்றால், உடனடியாக அவைபற்றி பொலிசாருக்கு அறிவிக்க வேண்டும்.

ஆசிரியர்கள், அதிபர்களோ அல்லது வலயக் கல்வி அலுவலகம் உட்பட கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த உயரதிகாரிகளோ குற்றச் செயல்களை மூடி மறைக்கக் கூடாது.

பாடசாலையின் கௌவரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற போர்வையில் குற்றச் செயலை மூடி மறைப்பது தண்டனைக்குரிய குற்றச் செயலாகும் என்பதை அனைவரும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது, மாணவிகள் மீது பாலியல் வதை புரிந்தது என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மேல் நீதிமன்றத்திற்கு வரும் ஆசிரியர்களுக்கு இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது.

இத்தகைய குற்றச் செயல்களுக்கு மேல் நீதிமன்றம் கடுமையான போக்கையே எடுக்கும். யாழ்ப்பாண சிறை நிரப்புப் போராட்டத்தில் மாணவர்களைப் பின்தள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் இருக்கின்ற வெட்கக் கேடான செயற்பாடு தற்சமயம் அரங்கேறுகின்றது.

சட்டத்தைக் கையில் எடுத்து வன்செயலில் ஈடுபடும் எந்த நபரும், சட்டவாட்சிக்கு எதிரானவர்கள் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று மட்டும் 200 கோடி வசூலித்த கபாலி!!

Kabali

ரஜினி நடித்துள்ள கபாலி படத்தை ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட விலைக்கு இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வியாபாரம் செய்துள்ளார். ஒவ்வொரு பகுதியிலும் கபாலி எவ்வளவு தொகைக்கு வியாபாரம் ஆனது என்பது குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி,
சென்னை சிட்டி – 6.30 கோடி
செங்கல்பட்டு – 14.00 கோடி
கோயம்புத்தூர் – 13.00 கோடி
மதுரை – 8.10 கோடி
திருச்சி / தஞ்சாவூர் – 7.40 கோடி
சேலம் – 6.40 கோடி
திருநெல்வேலி / கன்னியாகுமாரி – 4.85 கோடி
தென் ஆற்காடு – 3.95 கோடி
வட ஆற்காடு – 4.50 கோடி

தமிழ்நாட்டில் மட்டும் 68.50 கோடிகளுக்கு கபாலி வியாபாரம் ஆகியுள்ளது. இதுதவிர, மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும், சட்டிலைட் உரிமம், ஓடியோ உரிமம் ஆகியவற்றிலும் குறிப்பிட்ட விலைக்கு வியாபாரம் ஆகியுள்ளது.

ஆந்திரா / தெலுங்கனா (தியேட்டர் மற்றும் சாட்டிலைட் உரிமை) – 32.00 கோடி கர்நாடகா (அனைத்து மொழிகளுக்கும்) – 10.50 கோடி கேரளா (தியேட்டர் மற்றும் சட்டிலைட் உரிமை) – 7.50 கோடி வடஇந்தியா (தியேட்டர் (அனைத்து மொழிகளுக்கும்) மற்றும் சட்டிலைட் உரிமை) 15.50 கோடி வெளிநாடு (அனைத்து மொழிகளுக்கும்) – 34.00 கோடி தமிழ் சட்டிலைட் உரிமை – 30.00 கோடி ஓடியோ உரிமை (அனைத்து மொழிகளுக்கும்) – 3.00 கோடி ஆக மொத்தம் – 201 கோடி.

வெளியாவதற்கு முன்பே 201 கோடி வரை சம்பாதித்து விட்ட கபாலி படம் வெளியான பிறகு எவ்வளவு சம்பாதிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை.

இருப்பினும், இதுவரை பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ள கபாலி படம் வெளியான பிறகு வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என சினிமா ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அதிசய பெண்!!

2

ஒருமுறை உறங்கினால் 64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் நிக்கோல் என்ற பெண்.

கே.எல்.எஸ் அதாவது Kleine-Levin Syndrome (KLS) என்ற உறக்கம் சார்ந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார் நிக்கோல்.

பிறக்கும் போது சாதாரணமாக இருந்த நிக்கோல், ஆறு வயதான போது 18 மணிநேரம் உறங்க ஆரம்பித்துள்ளார். அதுமட்டுமின்றி உறங்கி எழுந்தவுடன் தாய், உறவினர்களை அடையாம் காணவே சிரமப்பட்டுள்ளார்.

தனது 14வது Thanks Giving பார்ட்டியின் போது உறங்க ஆரம்பித்த நிக்கோல், ஜனவரி மாதமே எழும்பினாராம். பொதுவாக நிக்கோல் நீண்டநாள் உறங்க போகிறார் என்பதை அவருக்கு திடீரென வரும் தலைவலி மற்றும் மந்தமான நிலையை வைத்து அறிந்துக் கொள்ள முடியுமாம்.

இதுபோல இவர் உறங்கும் போது சராசரியாக 22-64 நாட்கள் வரை உறங்குவராம். இந்த இடைப்பட்ட நாட்களில் என்ன நடந்தது என்பது குறித்து நிக்கோலுக்கு ஒன்றுமே தெரியாது.

உலகில் ஆயிரத்தில் ஒருவருக்கு தான் இந்த குறைபாடு உள்ளது என்றும், மருத்துவத்தில் இதுவரை இதற்கு எந்தவொரு தீர்வும் இல்லை எனவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

3 4

வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியதில் ஒருவர் பலி!!

Kathi

மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடைபெற்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

ஹோட்டலில் பணியாற்றும் இரண்டு ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கைகலப்பாக மாறிய நிலையில் ஒரு ஊழியர் தனது சக பணியாளரை கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார்.

இதில் இறந்த நபருக்கு 32 வயதிருக்கும் என்று தெரிய வந்துள்ளது. மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்துள்ள மினுவாங்கொடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காதலித்த பெண்ணை குத்திக் கொலை செய்த காதலன் : நடந்தது என்ன?

Love

மும்பையில் வேறு ஒரு ஆணுடன் ஊர் சுற்றியதால் காதலியை காதலன் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பால்கர் மாவட்டம் விரார் மேற்கு கோல்டன் ஓக் பகுதியை சேர்ந்த கின்ஜால்(21) என்பவரும் கொலபாவில் உணவு விடுதியில் பணிபுரியும் தேவேந்திராவும்(23) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வெளியே சென்று வருவதாக கூறிச் சென்ற கின்ஜால் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

பொலிசார் கின்ஜாலை தேடி வந்த நிலையில் மறுநாள் காலை கோல்டன் ஓக் பகுதியில் உள்ள புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து பொலிசார் கின்ஜாலின் காதலன் தேவேந்திராவை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், கடந்த திங்கட்கிழமை கின்ஜாலை சந்திக்க தேவேந்திரா அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். வேறு ஆணுடன் கின்ஜால் சாலையில் நடந்து வருவதை பார்த்துள்ளார். தான் பலமுறை எச்சரித்தும் வேறு ஆண்களுடன் பழகுவதை கண்டு ஆத்திரமடைந்த தேவேந்திரா கின்ஜாலை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனால், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துள்ளார். அங்கு வைத்து கின்ஜாலை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு கோல்டன் ஓக் பகுதியில் உள்ள புதரில் வீசிவிட்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வவுனியாவில் பல மாதங்களாக கொள்ளையில் ஈடுபட்ட இளம் தம்பதியினர் கைது!!

Arrest

வவுனியாவில் பல மாதகாலமாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த வவுனியா சிதம்பரபுரம் பகுதியினை சேர்ந்த 21வயதான இளம் தம்பதியினரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியாவிலுள்ள வீ டொன்றில் இரண்டுக்கு மேற்ப்பட்ட சந்தர்ப்பங்களில் 5 லட்சத்திற்கு அதிகமான நகைகள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துள்ளதாகவும் இவர்களினால் திருடப்பட்ட நகைகள் அடைவு வைக்கப்பட்டு பணத்தினை பெற்றுள்ளாதகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

நிறுத்தாமல் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!!

1 (58)
கண்டி பன்வில பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி சாரதி ஒருவர் லொறியை ஓட்டிச்சென்றமையினால் பொலிஸார் லொறி மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.

பல முறை லொறியை நிறுத்து என பொலிஸார் கூறியும் வாகனத்தை நிறுத்தாமையினாலேயேலொறி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.லொறியை சுடும் போது சாரதி தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த லொறியில் இருந்து, சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட 5 எருமை மாடுகள் மற்றும் 10 காளை மாடுகள் என்பன பறிமுதல்செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

நொடிப் பொழுதில் பாலத்தில் மோதி சிதறிய விமானம்!!

china-airlines-boeing-b737-800-b18616-flight-ci120-
சீனாவில் நேற்று ஆம்பியான் விமானம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.சீனாவில் அரசு விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏ.வி. ஐ.சி ஜாய் ஜெனரல் ஏவியேசன் நிறுவனம் புதியதாக நீரிலும், ஆகாயத்திலும் செல்லக்கூடிய விமான சேவையை தொடங்க திட்டமிட்டிருந்தது.

இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் முடிந்து கிழக்கு சீனாவில் இந்த விமானத்தின் சேவையை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.இதன்படி, நேற்று விமானத்தின் சேவையை தொடங்கி முதல் ஆம்பியன் விமானம் ஷாங்கயின் ஜின்ஷான் மாவட்டத்திலிருந்து ஜெஜியாங் மாகாணம் ஜோஷான் நகருக்கு 10 பேருடன் புறப்பட்டு சென்றது.

அப்போது, எதிர்பாராதவிதமாக நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பயங்கரமாக மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

4 கோடி விலை பேசப்படட எருமை : உரிமையாளர் விற்க மறுப்பு!!

15055511876_f27ee071d9_b

மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை மாட்டை விற்க அதன் உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அக்மியா கிராமத்தை சேர்ந்தவர் முன்னாசிங். விவசாயான இவர் 100 மாடுகளுடன் பண்ணை ஒன்று நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் ஹீரா என்ற பெயர் சூட்டப்பட்ட எருமை மாட்டை வளர்த்து வருகிறார்.

இந்த மாட்டுக்கு 5 வயது ஆகிறது. 4 ஆண்டுகளுக்கு இதை அரியானா மாநிலத்தில் இருந்து வாங்கி வந்தார். இதுவரை 2 குட்டிகளை ஈன்றுள்ளது. தினம் 15 லீட்டரில் இருந்து 31 லீட்டர் வரை பால் கறக்கிறது. 1000 கிலோ எடை, 9.5 அடி நீளம், 5.5 அடி உயரம் உள்ளது.முன்னாசிங் இந்த மாட்டை வாங்கி வந்ததற்கு பிறகு அவருக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டு அவருடைய மாட்டு பண்ணை அசுர வளர்ச்சி அடைந்தது.

இதனால் ஹீரா எருமை மாட்டை அதிர்ஷ்டகர மாடாக கருதுகின்றனர். எனவே பலரும் இதை வாங்குவதற்கு முயற்சித்தனர். ஆனால் முன்னாசிங் இதுவரை விற்க முன்வரவில்லை.இந்த நிலையில் சித்தி மாவட்டத்தை சேர்ந்த ஹர்சவர்த்தன் சிங் என்ற வியாபாரி அவரிடம் சென்று மாட்டை விலைக்கு கேட்டார். ரூ.4 கோடி வரை அவர் விலை பேசினார். ஆனால் முன்னாசிங் மாட்டை கொடுக்க மறுத்து விட்டார்.இந்த மாட்டால் தான் எனக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டது. எனவே அதை விற்க மனம் இல்லை என்று அவர் கூறினார்.

டச் ஸ்கிரீன் செயலிழந்துவிடுகிறதா? இதை முயற்சி செய்யுங்கள் !!

mobile-touch-screen-display
இன்றைய காலகட்டத்தில் மடிக்கணனி, கைப்பேசி என அனைத்து கருவிகளிலும் டச் ஸ்கிரீன் வந்து விட்டது.டச் ஸ்கிரீன் முதல்முறை பயன்படுத்தும் போது வேகம் சீராக இருக்கும். ஆனால் நாளடைவில் வேகம் குறைந்து ஹேங் ஆக ஆரம்பித்து விடும்.இதனை சரிசெய்ய எளிய வழிமுறைகள்:

திடீரென கருவி வேலை செய்யாமல் ஹேங் ஆகும் போது சிறிது நேரம் அமைதியாய் இருந்து பின்பு கருவியை ரீஸ்டார்ட்(restart) செய்ய வேண்டும். இதன் மூலம் உண்மையான பிரச்சனை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.சில சமயம் கருவியின் தொடுதிரை நன்றாக வேலை செய்யும், பயன்படுத்தும் செயளியில் கூட பிரச்சனை இருக்கலாம். எனவே அறிந்து கொண்டு பின்னர் கருவியில் இன்ஸ்டால்(install) செய்துள்ள தேவையில்லாத அப்ளிகேஷன்களை அன் இன்ஸ்டால்(Un Install) செய்து விட வேண்டும்.

இதனால் ரம் மெமரி (Ram Memory) அளவு அதிகமாகி கருவி சீரான வேகத்தில் இயங்கும். அளவுக்கு அதிகமாக செயளிகளை கருவியில் இன்ஸ்டால்(install) செய்து வைக்க கூடாது.
பின்பு நீங்கள் பயன்படுத்தும் கருவியின் தொடுதிரையை உங்களால் கழற்றி மாட்ட முடியும் என்றால் முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் கவனமாக கையாள்வது நல்லது.
மேலும், இந்த வழிமுறைகள் பெரும்பாலான கருவிகளுக்கு பொருந்தும்.

ஒரே ஒரு விடயத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் சேதுபதி!!

vijay-sethupathi-hit-flop

விஜய் சேதுபதி தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். விரைவில் இவர் நடித்த தர்மதுரை படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து றெக்க, அண்டவன் கட்டளை என படங்களை வரிசையாக வெளியாக இருக்கிறது.இந்நிலையில் தான் நடிக்கும் படங்களில் காமெடியனுக்கு வாய்ப்பு இருந்தால் ஒரு நல்ல காமெடியனை போடுங்கள் என்று இயக்குனர்களிடம் சொல்கிறாராம்.

முதல் பாதி காமெடியாக படம் அமைய வேண்டும் என்ற விருப்பமாம் விஜய் சேதுபதி.இந்த செய்தி அறிந்த பல காமெடியன்கள் விஜய் சேதுபதி படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனராம்.

விபத்தில் இளைஞன் உயிரிழந்ததை அறிந்த பாட்டி அதிர்ச்சியில் மரணம்!!

Dead

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் கோடமேட்டினை சேர்ந்த மகாலிங்கம் டினேஸ்குகன் (19 வயது) இன்று அதிகாலை விபத்தில் பலியாகியுள்ளார்.

இதனை கேள்வியுற்ற இளைஞனின் பாட்டி (அப்பம்மா) அதிர்ச்சியில் மரணித்துள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் அவர்கள் தெரிவித்தார்.

இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.