12 ஆடுகளை கொன்ற நாய்குட்டியை நீதிமன்றத்தில் நிறுத்திய விவசாயி: அதிரடி உத்தரவிட்ட நீதிபதி!!

hqdefault
ஜேர்மனி நாட்டில் 12 ஆடுகளை நாய்குட்டி ஒன்று கொன்றதாக புகார் கூறியுள்ள விவசாயி ஒருவர் அதனை நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Dusseldorf என்ற நகர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு லேடி எனப்பெயரிடப்பட்ட நாய்குட்டி ஒன்றை அதன் உரிமையாளரின் வெளியே அழைத்துச் சென்றுள்ளார். சிறிய பாதையில் நடந்துச் சென்றபோது, நாயின் உடலில் எந்த கயிறும் கட்டப்படாமல் குதித்து சென்றுள்ளது. அப்போது, எதிரே ஒரு விவசாயி எண்ணற்ற ஆடுகளை ஓட்டி வந்துள்ளார். ஆட்டுக்கூட்டத்தை கண்டு உற்சாகம் அடைந்த அந்த நாய்குட்டி கூட்டத்திற்கு மத்தியில் குதித்துள்ளது.

கூட்டத்திற்கு மத்தியில் நாய்க்குட்டி உள்ளதை அறிந்த ஆடுகள் அலறி அங்கும் இங்கும் குதித்துள்ளன. உள்ளே ஆடுகள் மத்தியில் சிக்கிய நாய்குட்டியால் வெளியே வரமுடியாமல் திணறியுள்ளது. ஆடுகளை ஓட்டி வந்த விவசாயி நாய்குட்டியை விரட்டியுள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு நாய்க்குட்டி உரிமையாளரிடம் சென்றடைகிறது. ஆனால், நாய்குட்டி வெளியேறியதும் அங்கு 12 ஆட்டுக் குட்டிகள் உயிரிழந்துள்ளதை கண்டு விவசாயி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

எனினும், உயிரிழந்த எந்த ஆட்டையும் நாய்குட்டி கடிக்கவில்லை. நாய்குட்டி உள்ளே புகுந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அந்த 12 ஆடுகளும் உயிரிழந்தது பின்னர் தெரியவந்தது. ஆடுகளுக்கு பீதியுடன் அதிர்ச்சியை நாய் ஏற்படுத்தியதால் தான் ஆடுகள் உயிரிழந்தன என குற்றம் சாட்டிய விவசாயி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று முன் தினம் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

வழக்கை விசாரணை செய்தபோது நாய்குட்டியின் உரிமையாளர் விவசாயின் புகாரை மறுத்துள்ளார். ‘ஆடுகளுக்கு ஏற்கனவே உளைச்சலும், ஒருவித மன வியாதியும் இருந்ததால் தான் அவைகள் உயிரிழந்து விட்டன. இதற்கும் தனது நாய்குட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என உரிமையாளர் வாதிட்டுள்ளார். நாய்குட்டியுடன் சென்ற பேரப்பிள்ளை பேசியபோது, ‘ஆடுகள் கூட்டத்திற்குள் நாய் நுழைந்தவுடன் விவசாயி நாயை இரும்பு கம்பியால் அடித்து விரட்டியுள்ளார்.

அப்போது, அவர் நாயை அடிப்பதற்கு பதிலாக ஆடுகளையும் அடித்துள்ளார். இதனால் தான் ஆடுகள் உயிரிழந்தன’ என வாக்குமூலம் அளித்துள்ளார். எனினும், இவ்வழக்கில் பல்வேறு சந்தேக முடிச்சுகள் உள்ளதால், புகாரை நிரூபிக்க கூடுதல் ஆதரங்களை ஒப்படைக்குமாறு இருதரப்பினருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாடசாலையில் பதற்றம் – மாணவர்களால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில்!

article-2029865-0D7E773B00000578-450_634x383
கொழும்பின் பிரபல கல்லூரி ஒன்றின் ஆசிரியர் ஒருவர் பாடசாலை இன்று காலைமாணவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதாவது குறித்த பாடசாலையின் ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்வின் போது பாரியநிதி அதிபரால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு நேற்றைய தினம் குறித்த ஆசிரியர் இலஞ்ச ஒழிப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதுள்ளார்.

இதனடிப்பாபடையில் பாடசாலை அதிபருக்கு எதிராகவும் பொலிஸ் நிதி மோசடி பிரிவில் முறைபாடு செய்துள்ளமையே இந்தத் தாக்கதல் சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஆசிரியர் இன்று காலை பாடசாலைக்கு சமூகமளித்த நிலையிலேயே மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை: ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

1 (67)

ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே இந்த அறிவிப்பு ஜனாதிபதியால் இன்று விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வட் வரி அதிகரிப்பு மற்றும் பல விடயங்களுக்காக மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அதற்கு முகங்கொடுக்க வேண்டிய அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும், பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு அமைச்சர் உள்ளிட்டவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிவாசலுக்குள் கொலை – இருவர் கைது!!

1 (67)
மூதூர் – ஜின்னாநகர் முஸ்லிம் பள்ளிவாசலுக்குள் நபர் ஒருவரை மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, நீண்டகால பகையே குறித்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள பொலிஸார், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களினால் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதனையடுத்து இரண்டு சகோதரர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருமணத்தால் உச்சக்கட்ட கோபத்தில் சமந்தா!!

Samatha

சமந்தா நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்யவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் சமந்தா தற்போது ஏற்கனவே கமிட் ஆன படங்களில் மட்டும் தான் நடித்து வருகிறாராம்.வேறு எந்த படங்களிலும் யாரும் இவரை கமிட் செய்வது இல்லையாம், வடசென்னை படத்திலிருந்தும் இவர் நீக்கப்பட்டுவிட்டார்,

ஆனால், அதுக்கூட அவருக்கு கவலையில்லை.பலரும் இவரை போனில் தொடர்பு கொண்டு எப்போது திருமணம்? எப்போது திருமணம்? என கேட்பது சமந்தாவிற்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

அதற்குள் சின்னத்திரையா? கார்த்திகாவிற்கு வந்த சோதனை

Karthika-Nair

ஜீவா நடித்த கோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கார்த்திகா. இவர் பிரபல நடிகை ராதாவின் மகளும் கூட. கோ படம் மெகா ஹிட் ஆனது.ஆனால், தொடர்ந்து கார்த்திகாவிற்கு படங்கள் கிடைக்கவில்லை,

இதனால், சில காலம் மும்பை பக்கம் திரும்பலாம் என முடிவெடுத்தார்.அங்கு இவருக்கு ஹிந்தி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது, அதற்குள் சீரியலா? என்று கவலைப்பட்டாலும், வேறு வழியில்லாமல் நடிக்க சம்மதித்து விட்டாராம்.

100-வது பிறந்த நாளன்று ஆகாயத்திலிருந்து குதித்த மூதாட்டி!!

AR-141119955

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹோவெஸ் கேவ் பகுதியைச் சேர்ந்த எலீனர் கன்னிங்ஹாம் என்ற மூதாட்டி கடந்த சனிக்கிழமை தனது 100-வது பிறந்த நாளை ஆகாயத்திலிருந்து குதித்து கொண்டாடினார். இதன்மூலம், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யு.புஷ் சாதனையை முறியடித்துள்ளார்.

புஷ் தனது 90-வது பிறந்த நாளை ஆகாயத்திலிருந்து குதித்து கொண்டாடினார். இவர் இத்தகைய சாகசத்தில் ஈடுபட்டது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு தனது 90-வது வயதில் இந்த சாதனையை செய்துள்ளார். நியூயார்க் நகரின் மையப் பகுதியில் உள்ள ஸ்கோ ஹரீயில் உள்ள தனது பேத்தியுடன் வசித்து வருகிறார் கன்னிங்ஹாம். முன்னதாக, கன்னிங்ஹாமின் உடல்நிலை ஆகாயத்திலிருந்து குதிப்பதற்கு ஏதுவாக இருப்பதாக அவரது மருத்துவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாகனங்களை மேல் நோக்கி இழுக்கும் அதிசய காந்த மலை – வீடியோ!!

mag_hill_004

இந்தியாவில் சுற்றுலா பயணிகளின் வாயை பிளக்க வைக்கிறது வாகனங்களை மேல் நோக்கி இழுக்கும் அதிசய காந்த மலை. இந்தியாவின் வடக்கே உள்ள ஸ்ரீநகரில் அமைந்துள்ள லடாக்கில் இருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள லேஹ் என்னும் இடத்தில் காந்த மலை என்ற ஒன்று அமைந்துள்ளது.தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த காந்த மலை, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 11000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் போடப்பட்டுள்ள கட்டத்திற்குள் வாகனங்களை நிறுத்தினால் அந்த வாகனம் மேல் நோக்கி இழுக்கப்பட்டு நகரும்.

கார்கள் போன்ற வாகனங்கள் மட்டுமல்லாமல், இந்த இடத்தை கடந்து செல்லும் விமானங்களும் இந்த மலையை நோக்கி இழுக்கப்படும் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில், சில ஆய்வாளர்கள் இந்த நிகழ்வுகளை, பூமியில் இருந்து வரும் சக்தி வாய்ந்த மின்காந்த ஈர்ப்பினால் ஏற்படுகின்றன என்று கூறினாலும், சிலர் இது ஒரு ஒளியியல் மாயை (Optical Illusion) என்று கூறுகின்றனர்.இந்த அதிசய நிகழ்வின் காரணம் மின் காந்த ஈர்ப்போ அல்லது ஒளியியல் மாயையோ எதுவாக இருந்தாலும், சுற்றுலா வாசிகள் ஆண்டுதோறும் இங்கு படையெடுக்க தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் உங்கள் விரல் நுனியில் தொழில்நுட்பத்தை வைத்திருப்பவர்களா? அப்போ இது உங்களுக்கான செய்தி

470937-whatsapp

வட்ஸ் அப் தற்போது அன்ட்ரொயிட் பயனாளர்களுக்கு, அதன் பீட்டா பதிப்பை புதிய சலுகையாக வழங்கியுள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் அதன் புதிய அம்சத்தை அனைவருக்கும் முன்னதாகவே சோதித்து கொள்ளலாம்.இதற்கு அன்ட்ரொயிட்பயனாளர்கள், கூகுள் பிளே மூலம் வட்ஸ் அப் டெஸ்டர்ஸ்(WhatsApp Testers)ல் உள்நுழைந்து. அந்த பக்கத்தில் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும். பின்னர், “BECOME A TESTER” பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

இதைதொடர்ந்து, வட்ஸ் அப் தானாகவே மிக சமீபத்திய பீட்டா பதிப்பை உங்கள் ஸ்மார்ட் போனில் புதுப்பித்து விடும்.பீட்டா பதிப்பை போனிலிருந்து நீக்க, முன்னதாக கிளிக் செய்த இணைப்பை மீண்டும் கிளிக் செய்து. “Leave the program” பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.இந்த பீட்டா பதிப்பின் மூலம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ் ஆப் செயலியை நீங்கள் சோதித்துக் கொள்ளலாம். மேலும். வாட்ஸ் ஆப்பில் எதிர்வரவுள்ள புதிய அம்சம் குறித்தும் நாம் அறிந்துக்கொள்ளலாம்.

இதில் எச்சரிக்கை கருவியும் உள்ளது. பீட்டா நிறுவிய பின்னர், வாட்ஸ் ஆப் பீட்டா பதிப்பின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறிப்பிட்டுள்ளது போல் உங்கள் போனில் சில கோளாறுகள் ஏற்ப்படலாம்.ஆனால், இது வழக்கமானதே, இது பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. உங்கள் போன் மேம்படுத்தல் பிறகு சரியாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசாஜ் செய்து கொள்ள சென்ற முதியவர் மரணம்!!

1 (44)
மசாஜ் செய்து கொள்வதற்காக மசாஜ் பார்லருக்கு சென்ற முதியவர் ஒருவர் மரணித்துள்ளார்.கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் அமைந்துள்ள மசாஜ் பார்லர் ஒன்றின் மலசல கூடத்தில் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.அக்குரண பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு நேற்று மசாஜ் பார்லரில் உயிரிழந்துள்ளார்.

மசாஜ் செய்து கொள்வதற்காக வந்த நபர், மலசல கூடத்திற்கு சென்று நீண்ட நேரம் வெளியே வரவில்லை என்ற காரணத்தினால், அதன் ஊழியர்கள் இது குறித்து கவனம் செலுத்திய போது முதியவர் இறந்த நிலையில் மலசல கூடத்தில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பெண்களை காதலில் விழவைக்க ஆண்கள் சொல்லும் பொய்கள்!!

Love

உங்களின் காதலன் உங்கள் மீது உண்மையிலேயே காதலில் இருக்கிறாரா அல்லது வெறும் காதல் குண்டை மட்டும் பயன்படுத்துகிறாரா என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாகும். சரி இப்போது காதலர்கள் இப்போது காதலியை ஏமாற்ற என்னென்ன பொய்களை சொல்வார்கள் என்பதை பார்க்கலாம்..

• ஒரு பெண்ணை தன் இழுப்பிற்கு ஒரு ஆண் வளைக்க நினைத்தால், அவன் கூறும் முதல் பொய் இதுவாக தான் இருக்கும். தன் அழகை பற்றி ஒரு ஆண் இப்படி புகழும் போது கண்டிப்பாக அந்த பெண்ணிற்கு ஆனந்தமாக தான் இருக்கும். நான் பெண்களிலேயே நீ தான் சிறந்த அழகி என்பார்கள். ஆனால் இதில் எல்லாம் நீங்கள் மயங்கி விடாதீர்கள்!

• ஒரு ஆணின் உணர்வுகளை தன்னால் மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது என்பதை ஒரு பெண் அறிந்தால் கண்டிப்பாக அவள் சிறப்பாக உணர்வாள். மயங்கி விடாதீர்கள் பெண்களே! தன் வாழ்க்கையை உங்களிடம் ஒப்படைக்காதவரை, ஒரு ஆணை புரிந்து கொள்வது உங்கள் கடமை கிடையாது.

• ஆண்கள் கூறும் மிகப்பெரிய பொய் இது. பெண்களுக்கு சிறப்பான ஒரு உணர்வை ஏற்படுத்த ஆண்கள் இப்படி கூறுவார்கள். ஒரு ஆண் உங்கள் மீது பைத்தியமாக இருப்பதையும், உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் என்பதையும் நீங்கள் அறிந்தால், உங்கள் உணர்ச்சிகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, அந்த நபரின் உண்மையான நோக்கத்தை அலசுவது கண்டிப்பாக கஷ்டமான ஒன்றே.
தங்களின் இறுதியான இன்பத்தை பெறும் வரை, ஆண்கள் பெண்களின் மனதை மேக மூட்டத்துடன் வைத்திடவே விரும்புவார்கள். அதனால் அனைத்து வழிகளிலும் அவர் காதலை சோதித்துப் பாருங்கள் பெண்களே!

• நீங்கள் ஒரு புத்திசாலியான பெண்ணாக இருந்தால், ஏதோ ஒன்று தவறாக உள்ளதே என்று ஆண்கள் கூறும் இந்த பொய்யை வைத்து கண்டுபிடித்து விடுவீர்கள். ஆனால் இந்த பொய்யால் நீங்கள் மயங்கி விட்டீர்கள் என்றால், காதலின் மீது மிக ஆழமான ஏக்கத்தை நீங்கள் கொண்டிருந்திருக்கிறீர்கள்.

அதேப்போல் இதுவரை பார்த்திருந்த சில உணர்ச்சி ரீதியான தேவைகளையும் கொண்டிருந்திருக்கிறீர்கள் என்பதையே அது உணர்த்தும். காதல் குண்டை பயன்படுத்தும் ஆண்கள் கூறும் மற்றொரு பொய் இது என்பது புரிந்து கொள்ளுங்கள் பெண்களே! இந்த சுயநலமான உலகில், யாரும் யாருக்காகவும் சாவதில்லை. அதனால் அவரிடம் பார்த்து மெதுவாக அணுகவும்.

• இது ஒரு உணர்ச்சி ரீதியான மிரட்டலாகும். ஆனால் உங்கள் மீதுள்ள காதலால் ஒருவர் உங்களுக்காக சாக கூட தயாராக உள்ளார் என்பது உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தினால், நீங்கள் இன்னும் வளரவில்லை என்று தான் அர்த்தமாகும். நீங்கள் இன்னும் பக்குவமடைய வேண்டும். முதலில் காதல் குண்டை பயன்படுத்தும் அவரின் உளவியலைப் புரிந்து கொள்ளுங்கள். இது ஒரு வலை! அவரை நீங்கள் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தால், மீண்டும் ஒரு முறை யோசித்து பாருங்கள்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க ஒத்துழைக்க வேண்டும்!!

Omanthai

வட பகுதி மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நன்மை கருதி பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்கு அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைத்தல் தொடர்பில் துறை சார்ந்தவர்களுடனான கலந்துரையாடல் நேற்று (07) மாலை 05.00 மணியளவில் யாழ்ப்பாணம் டேவிட் வீதியிலுள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் பேரவையின் சமூக, பொருளாதார வலுவூட்டலிற்கான உபகுழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கலந்துறையாடலில் துறை சார்ந்த பலரும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர். இக் கலந்துரையாடலின் போது பின்வரும் முன்மொழிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டன.

வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் வன்னிப் பெருநிலப்பரப்பின் மத்திய பகுதியான மாங்குளத்தில் அல்லது அதனை அண்டிய பகுதியில் அமைவதே பொருத்துடையது ஆகும்.

வட மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் என்பதால் வடக்கு மாகாணத்தின் மத்திய பகுதியில் அமைவது அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை வடபகுதி மக்கள் அனைவரும் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.

அதே நேரம், இப்பிரதேசம் எதிர்காலத்தில் பல்துறை சார் அபிவிருத்தியை எட்டுவதற்கும் வாய்ப்பாக அமையும்.

எனினும், தற்போதைய சூழ்நிலையில், பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைவது பொருத்தப்பாடானது என்ற அடிப்படையில் தமிழ் அரசியல் தரப்பில் வாதப் பிரதி வாதங்கள் எழுந்துள்ள‌ நிலையில், தமிழர் நலன் சார்ந்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு நாம் வர வேண்டிய தேவை உள்ளது.

எனவே, அமையப் பெறும் பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவிலிருந்து வடக்கு நோக்கியதாக முல்லைத்தீவு வவுனியா மாவட்ட விழிம்பில் அமைவதே பொருத்தப்பாடுடையது என்பதால், ஓமந்தையில் அமைவதே அடுத்த சிறந்த தெரிவாக இருக்க முடியும். இத் தெரிவு, பொருளாதார மத்திய நிலையத்தின் எதிர்கால விரிவாக்கத்திற்குத் தேவையான நிலப்பிரதேசத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே வடபகுதி மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நன்மை கருதி பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்கு அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இச் சந்தர்ப்பத்தில் கேட்டு நிற்கின்றோம்.

அத்துடன், பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடத்தை வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிப்பது என்பது ஒரு ஆரோக்கியமான விடயம் அல்ல என்பதையும், இது ஒரு அறிவு பூர்வமாக அணுகப்பட வேண்டியது என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டவிரும்புகின்றோம்.

தமிழ் மக்கள் பேரவை
சமூக, பொருளாதார வலுவூட்டலிற்கான உபகுழு,
தமிழ் மக்கள் பேரவை

வெளிநாடுகளில் பணம் வைப்பிலிட்டவர்கள் பற்றிய விபரங்களை திரட்ட நடவடிக்கை!!

Bank

வெளிநாடுகளில் பணம் வைப்புச் செய்துள்ளவர்கள் பற்றிய விபரங்ளை திரட்ட துரித நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கு முன்னதாக பனாமாவில் பணம் வைப்புச் செய்தவர்கள் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்ட போதிலும் அவற்றில் பெரும்பலானவர்கள் போலிப் பெயர்களில் பணம் வைப்புச் செய்திருந்தமை கண்டறியப்பட்டது.

இதனால் இந்த நடவடிக்கையானது தோல்வியைத் தழுவியது.

எதிர்வரும் காலங்களில் அரசாங்கம் என்ற ரீதியில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பிய வாய்மொழி மூல கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

திருமணத் தடை நீக்கும் வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் விரத வழிபாடு!!

Viratham

ராகு காலங்களில் விரதமிருந்து வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.

வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும்.

தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும்.

இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் விரதமிருந்து வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.

இந்த விரத வழிபாட்டை தொடர்ந்து செய்து வர வேண்டும். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

நாசாவின் டுவிட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் கைவரிசை!!

Nasa

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கெப்ளர் மற்றும் கே2 என்ற டுவிட்டர் சமூக வளைதளங்களைக் கடந்த 6ஆம் திகதி ‘r4die2oz’ என்று பெயர் செய்யப்பட்டு அதில், உள்ள அடையாள படத்தையும் ஒரு பெண் புகைப்படத்திற்கு மாற்றியுள்ளனர். ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டதோடு, டுவிட்டர் கணக்கை வேறு ஒரு ஆபாச இணையதளத்துடன் இணைத்துள்ளனர்.

நாசாவின் டுவிட்டர் பக்கத்தை பின்பற்றுவர்களுக்கு திடீரென ஆபாச புகைப்படம் வெளியானது அதிர்ச்சியை அளித்தது. இதையடுத்து யாரோ ஹேக் செய்து இந்த செயலை செய்தது தெரியவந்துள்ளது.

உலகின் முதல் தர விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நசாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்துக்குள்ளேயே ஹேக்கர்கள் ஊடுருவி உள்ளது நாசா அதிகாரிகளை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. இந்த புகைப்படங்களை உடனடியாக நாசா நீக்கிவிட்டது.

8000 கடன் வாங்கிய இளைஞருக்கு நேர்ந்த கொடுமை!!

Loan

பிரித்தானியாவில் வாங்கிய 8000 ரூபாய் கடனை திருப்பி செலுத்த தவறிய இளைஞரை நிர்வாணப்படுத்தி சூடுவைத்த 5 பேர் கொண்ட கும்பலை நீதிமன்றம் சிறையில் தள்ளியுள்ளது.

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. குறிப்பிட்ட நபரை Oldham பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தந்திரமாக வரவழைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர் தாக்குதலில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலில் ஒருவரிடம் இருந்து 8000 கடனாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பணத்தை திருப்பித் தர காலதாமதம் ஏற்பட்டதை அடுத்து குறிப்பிட்ட நபரை Oldham பகுதியில் உள்ள குடியிருப்புக்கு அழைத்துள்ளனர்.

குடியிருப்பில் வந்த இளைஞரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கி நிர்வாணப்படுத்தியுள்ளனர். பின்னர் புறமுதுகு, வயிற்றுப்பகுதி உள்ளிட்ட பகுதியில் சூடு வைத்துள்ளனர். இதனால் உடல் வெந்து அந்த நபர் உயிருக்கு போராடியுள்ளார்.

பின்னர் அந்த காயத்தில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றினை தேய்த்து அந்த கும்பல் சித்திரவதை செய்துள்ளது.

கை கால்களை கட்டி வைத்து தொடர்ந்து தாக்கப்பட்டதாக அங்கிருந்து வந்த பின்னர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
பல மணி நேர தாக்குதலுக்கு பின்னர் வீட்டுக்கு திருப்பிச் செல்ல அனுமதித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த இந்த சம்பவத்தில் குற்றவாளிகளான சோயிப் கான்(17), ஆதம் உசேன்(16), சூபியன் யாகூப்(16) ஆகியோரில் சோயிப் கானுக்கு 6.5 ஆண்டுகள் சிறையும் எஞ்சிய இருவருக்கும் 4 ஆண்டுகள் சிறையும் விதித்துள்ளது மான்செஸ்டர் நகர நீதிமன்றம்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 வயது நபர் ஒருவருக்கு ஓராண்டு இரவு நேர ரோந்து பணியை தண்டனையாக வழங்கியுள்ளனர். அசன் கான் என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கியுள்ளனர்.

குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை கிடைக்கப்பெற்றாலும் பாதிக்கப்பட்ட நபரின் மனதளவில் உருவாகியிருக்கும் காயம் வாழ்நாள் முழுக்க ஆறாது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2