நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து சென்றிருந்த இலங்கையணிக்கு அங்கு பல அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச அணி ஒன்று ஓர் நாட்டிற்கு போட்டிகளுக்காக செல்லும் போது அந்நாட்டில் வீரர்களுக்கு ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்குவதற்கு வசதிகள் செய்துகொடுக்கப்படும்.
எனினும், இங்கிலாந்து சென்ற இலங்கை அணியினர் தங்குவதற்கு சாதாரண விடுதி ஒன்றே வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குடிபானம், உணவு வழங்குதலிலும் இலங்கை அணியினருக்கு பல முறைகேடுகள் இடம்பெற்றிருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதேவேளை, இலங்கை வரும் சர்வதேச அணிகளுக்கு பல உயர் வசதிகளை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்படுத்திக்கொடுக்கின்றது.
ஆனாலும், இலங்கை அணியினருக்கு வெளிநாடொன்றில் இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் இலங்கை அணி வீரர்கள் திருப்தியடையவில்லை என சொல்லப்படுகின்றது.
முத்துக்குமார் என்று கூறி என் மகனை போலீசார் கைது செய்துள்ளதாக சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் தந்தை பரமசிவன் கூறியுள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் கடந்த 1ம் திகதி நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்வதற்காக போலீசார் சென்றபொழுது ராம்குமார் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியானது. சிகிச்சைக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராம்குமார்.
இதனிடையே அவரது தந்தை பரமசிவன், தாயார், இரு தங்கைகளையும் போலீஸார் இரகசிய இடத்திற்குக் கொண்டு போய் தீவிரமாக விசாரித்தனர். இது பெரும் சர்ச்சைகளையும் கிளப்பியது.
இந்நிலையில், ராம்குமாரின் தந்தை பரமசிவன் அவரது ஊரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனது மகன் ராம்குமார் கல்லூரி தேர்வில் 5 பாடங்களில் தோல்வியடைந்ததை தொடர்ந்து சென்னைக்கு சென்று சிறப்பு வகுப்பில் சேரவேண்டும் என்றார். அதற்காக அவர் சென்னை சென்றார்.
கடந்த சிலதினங்களுக்கு முன் செலவுக்கு பணம் வேணும் என்று கூறி வாங்குவதற்காக இங்கு வந்தார். அப்போது தான் நள்ளிரவில் போலீசார் வந்து ‘முத்துக்குமார் முத்துக்குமார்’ என்று கூப்பிட்டனர்.
சப்தம் கேட்டு எனது மகள் தான் கதவை திறந்தார். திடீர் என்று வெளியே போலீசார் நின்று கொண்டு உங்கள் மகன் கழுத்தை அறுத்துக்கொண்டார் என்று கூறினர்.
இதனைப் பார்த்த நான் மயக்கம் அடைந்து விட்டேன் என்று கூறினார்.
மேலும், எனது மகன் இந்த தவறை செய்யவில்லை. சுவாதியை ராம்குமார் தான் கொலை செய்தார் என்பதை ஏற்க மாட்டேன்.
இந்த வழக்கில் இருந்து ராம்குமார் கண்டிப்பாக விடுதலையாவார் என ராம்குமாரின் தந்தை தெரிவித்தார்.
தமிழ்நாடு கொலை நகரமாக மாறிவருகிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் இந்தச் சம்பவம்.
7 வயது சிறுமியைப் பலாத்காரம்செய்து கொன்று, பிளேடால் கிழித்துப் பாத்திரத்தில் போட்டு மூடிவைத்த 17 வயது சைக்கோ சிறுவனை பொலிசார் கைதுசெய்திருக்கின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தெலுங்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன் (எ) ராஜா. இவரது மனைவி மோகனவள்ளி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.
அதில் ரம்யா என்ற 7 வயது சிறுமி 2ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். இந்த சிறுமிதான் இப்படிக் கொடூரமாகக் கொல்லப்பட்டு உள்ளார்.
ரம்யாவின் சித்தப்பா ரமேஷ் இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது,
கடந்த 2ம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பக்கத்தில் இருந்த பெட்டிக்கடைக்கு மிட்டாய் வாங்க குழந்தை போனாள். 7 மணி ஆகியும் திரும்பி வரவில்லை.
ஊர் முழுக்கத் தேடினோம். கிடைக்காததால் போலீசில் புகார் கொடுத்தோம். அவர்களும் வந்து தேடினார்கள். யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என்று கேட்டார்கள். உடனே ஊர்க்காரர்கள், சரவணன் மீதுதான் சந்தேகம் என்று சொன்னார்கள்.
இந்த சரவணன் 7 மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையூர் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தையை மறைவான இடத்துக்குத் தூக்கிக்கொண்டு போய் அந்தக் குழந்தையின் ஆண் உறுப்பை கடித்திருக்கிறான். குழந்தை கதறி இருக்கிறது.
அதைப் பார்த்தவர்கள் சரவணனைப் பிடித்து ஊர் பஞ்சாயத்தில் ஒப்படைத்தனர். அவன் ஊருக்குள் இருக்கக் கூடாது என்று முடிவு செய்தார்கள். இதையடுத்து அவன் அவங்க அம்மாகூடவே ராயக் கோட்டைக்குச் சென்றுவிட்டான். தாத்தா மட்டும்தான் இங்கு இருந்தார்.
ஆனால், குழந்தை காணாமல் போனதற்கு முதல் நாள் சரவணன் இங்கு வந்திருக்கிறான். அதனால், இவன் மீது சந்தேகம் என்று ஊர்க்காரர்கள் கூறினர்.
ரம்யா காணாமல் போன் நாளன்று இரவே போலீஸார் அவனிடம் விசாரித்ததோடு, அவன் வீட்டிலும் தேடினார்கள். தடயம் ஏதும் கிடைக்க வில்லை. மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு அவனிடம் துருவிதுருவி விசாரித்தார்கள். இல்லவே இல்லை என்று சொல்லிவிட்டான்.
வீட்டின் பூஜை அறைக்குள் தேடும்போது துர்நாற்றம் அடித்தது. ஒரு பாத்திரத்தைத் திறந்து பார்க்கும்போது ரம்யா அங்கு பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்’’ என்று அழுதார். இதுபற்றி போலீஸார் கூறியதாவது,
சரவணனின் அம்மா ரூபா. இவர் ராயக்கோட்டையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். சரவணன் பிறந்ததும் கணவரோடு வாழப்பிடிக்காமல், ராயக்கோட்டைக்கு வந்து இன்னொருவரோடு வாழ்ந்து வருகிறார்.
சரவணன் அம்மாவோடு ராயக்கோட்டையில்தான் இருக்கிறான். ஒரே பையன் என்பதால் ரொம்பச் செல்லம் கொடுத்துவிட்டார்கள். அவன் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
10ம் வகுப்பு படித்திருக்கிறான். இவனிடம் 11 செல்போன்கள், 20 மெமரி கார்டுகள், 5 பென் ட்ரைவ்கள், 1 லேப்டாப் என ஹைடெக் ஆக இருக்கிறான். 24 மணி நேரமும் மொபைலில் ஆபாசப்படம் பார்க்கிறார். ஆபாச வீடியோக்கள், போட்டோக்களை டவுண்லோடு செய்து வைத்து அதையும் பார்த்துக்கொண்டு இருப்பானாம்.
அவனோட தாத்தா ராயக்கோட்டைக்குச் சென்றவர் 1ம் திகதி அவனை இங்கே கூட்டிக்கிட்டு வந்திருக்கிறார். 2ம் திகதி சம்பவத்தன்று தாத்தா வெளியில் போய்விட்டார்.
வீட்டுக்குள் லேப்டாப்பில் ஆபாசப் படம் பார்த்துக்கொண்டு இருந்தபோது, ரம்யா தனியாகக் கடைக்குச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறான்.உடனே ஓடிப்போய் ‘எங்க வீட்டில் பிஸ்கெட் இருக்கு. கொடுக்கிறேன் வா’ என்று கூட்டிட்டுப் போய் கதவைத் தாழிட்டுக்கொண்டு டி.வி சவுண்டை அதிகமாக வைத்துவிட்டு பூஜை அறையில் பலாத்காரம் செய்திருக்கிறான்.
குழந்தை சத்தம் போட்டிருக்கிறது. கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, உறவுக்கு முயன்றிருக்கிறார்.பிறகு, குழந்தையின் கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் பிளேடால் கிழித்து ஈயப்பாத்திரத்தில் திணித்து மூடிவைத்திருக்கிறான்.
வெளியில் எல்லோரும் குழந்தையைத் தேடிக் கொண்டிருந்ததால் அன்று இரவு எதுவும் செய்ய முடியவில்லை. ஒரு நாள் ஆனதால் துர்நாற்றம் வீசும் என்பதால் துர்நாற்றத்தைப் போக்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை காலையில் அவங்க தாத்தாவை ஆட்டுத் தலை வாங்கி வரச்சொல்லி அதை அவரே நெருப்பில் வாட்டி குழம்பு வைத்துச் சாப்பிட்டு இருக்கிறான்.
இதுபற்றி டி.எஸ்.பி நடராஜன், இந்தப் பையன் மீது பல பாலியல் துன்புறுத்தல் புகார்கள் சொல்கிறார்கள். இவ்வளவு சின்ன வயதில் கிரிமினல் சிந்தனைகள் எல்லாம் இருக்கிறது.
இவனைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவிட்டோம் என்றார்.
சமூகம் எப்படி போய்க்கொண்டு இருக்கிறது என்பதற்கு இது உதாரணம்.
அமெரிக்காவில் காதலனை பொலிசார் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதை அவரது காதலி நேரடியாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மினிசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று இரவு 9 மணியளவில் லாவிஸ் ரினோல்ட்ஸ் என்ற பெண் தனது கருப்பினத்தை சேர்ந்த காதலனுடன் காரில் பயணம் செய்துள்ளார்.
லாவிஸ் காரை ஓட்ட அருகில் அவரது காதலன் அமர்ந்திருந்துள்ளார்.
அப்போது, காரில் உள்ள விளக்கு ஒன்று உடைந்திருந்ததை பார்த்த பொலிசார் ஒருவர் காரை தடுத்து நிறுத்தியுள்ளார். காதனை பார்த்த அந்த பொலிசார் ‘உங்களுடைய லைசென்ஸ் மற்றும் ID-களை காட்டுக்கங்கள்’ எனக் கேட்டுள்ளார்.
அப்போது, ‘அவரிடம் துப்பாக்கி இருக்கிறது. அதை எடுத்துச் செல்ல அவருக்கு அனுமதியும் இருக்கிறது’ என அருகில் அமர்ந்திருந்த காதலி கூறியுள்ளார்.
இச்சூழலில் காதலன் லைசென்ஸை எடுக்க கைகளை சட்டைக்குள் நுழைத்துள்ளார். ‘நபர் துப்பாக்கியை தான் எடுக்கிறார்’ என அச்சமுற்ற பொலிசார் அவரை நோக்கி 4 முறை சரமாரியாக சுட்டுத்தள்ளுகிறார்.
இந்த கொடூர காட்சியை கண்ட காதலி உடனடியாக பேஸ்புக்கில் உள்ள வீடியோ வசதியை பயன்படுத்தி தனது காதலன் ரத்த வெள்ளத்தில் துடிப்பதை நேரடியாக வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட வீடியோவை பார்த்த நூற்றுக்கணக்கான நபர்கள் அதிகாலை 3 மணியளவில் மினிசோட்டா ஆளுநர் மாளிகை முன்னிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சற்று முன்னர் வெளியான தகவலில், ஆளுநரை பொலிசார் பின் கதவு வழியாக வேறு இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருப்பின நபரை சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரி தற்போது விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு தினங்களாக பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் சுவாதி மற்றும் ராம்குமார் ஆகிய இருவரும் ஒன்றாக இருப்பது போல் புகைப்படம் ஒன்று பரவிவருகிறது.
ஆனால் இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் சுவாதியும், ராம் குமாரும் இல்லை என பரசுராம் என்பவர் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இது குறித்து அவர் பேஸ்புக்கில், அந்த புகைப்படத்தில் உள்ளது எனது மகன் பிரதீப்பும் அவன் தோழியும், இடம் பாண்டிச்சேரி. இதை கடந்த ஒரு சில தினங்களாக யாரோ சில விஷமிகள் ராம்குமார்&சுவாதி என்று தவறாக இணையதளம் மூலம் பரப்பிய வருகின்றனார் இதை தயவுசெய்து நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
சுவாதி கொலை குறித்து வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் அதிகமான வதந்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
சுவாதியின் கொலை, அதன் விசாரணை… என நாம் எல்லோரும் சமூக ஊடகங்களில் பரபரப்பாக இருந்த அதே காலகட்டத்தில்தான், சேலத்தில் வினுப்ரியா என்கிற பெண் தற்கொலை செய்துகொண்டார்.
ஒருதலைக் காதல் காரணமாக அவரது புகைப்படங்களை ஒரு நபர் அதற்கான செயலியின் மூலம் மிக ஆபாசமான முறையில் மாற்றி, பேஸ்புக்கில் பதிவேற்றியிருக்கிறார்.
அதன் மீது புகார் தரப்பட்டு 10 நாட்களுக்குப் பிறகும் நடவடிக்கை இல்லாததால், வினுப்ரியா தற்கொலை செய்துகொள்கிறார்.
அவர் தற்கொலை செய்துகொண்ட உடனே அந்த பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டு, அடுத்த நாளே அந்தக் குற்றத்தைச் செய்த சுரேஷ் என்பவர் கைதுசெய்யப்படுகிறார்.
இந்தச் சூழலில் உண்மையில் என்ன நடந்திருக்க வேண்டும்? சமூக ஊடகங்களில் ராம்குமாருக்கு எப்படி விதவிதமான தண்டனைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோமோ, அதைப்போலவே வினுப்ரியாவின் வழக்கில் கைதாகியிருக்கும் சுரேஷ் மீதும், பேஸ்புக் பக்கத்தை முடக்க வினுப்ரியாவின் பெற்றோரிடம் லஞ்சம் கேட்ட பொலிசார் மீதும் கோபப்பட்டிருக்க வேண்டும்.
சமூக ஊடகங்களின் இயல்பாக அதுவே இருந்திருக்கும். ஆனால், நடந்து கொண்டிருப்பது என்ன தெரியுமா? பெண்களுக்கு பக்கம் பக்கமாக அறிவுரை புகட்டப்படுகிறது.
உயர் பொறுப்பு வகித்த ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஒருவரோ, சமூக வலைதளங்களில் பெண்கள் புகைப்படங்கள் பதிவேற்றுவதைத் தவிர்க்க வேண்டும்,
சமூக விரோதிகள் அதைத் தவறாகப் பயன்படுத்துவார்கள் எனக் கவலைப்படுகிறார். அப்படிப் பயன்படுத்தும் சமூக விரோதிகளுக்கு என்ன தண்டனை என்பது பற்றி எல்லாம் அவர் பேசியதாகத் தெரியவில்லை.
நிர்பயா தொடங்கி சுவாதி வரையில், பல பிரச்சினைகளில் சமூக ஊடகங்கள் வெளிப்படுத்தும் ‘தார்மீகக் கோபம்’, வினுப்ரியா வழக்கில் கைதுசெய்யப்பட்ட சுரேஷ் மீதோ அல்லது லஞ்சம் வாங்கிய காவல் துறையினர் மீதோ வெளிப்படாததன் உளவியல் புரியாதது அல்ல.
நிர்பயா போன்ற வெகுசில `அபூர்வ’ வழக்குகள் தவிர்த்து, பெரும்பாலும் பெண்கள் மீதான வன்முறைக்குக் காரணம் பெண்களேதான் என்ற ஆண்மையக் கருத்தியலில் இருந்து விடுபட்டவை அல்ல சமூக ஊடக `நீதி மன்றங்கள்’.
நிர்பயா பிரச்சினையில் கூட `அந்த நேரத்தில் ஏன் ஒரு பெண் பேருந்தில் ஆண் நண்பரோடு பயணிக்க வேண்டும்?’ எனக் கேள்வி எழுப்பிய சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களும் இருக்கிறார்கள்.
சுவாதி விஷயத்திலும் இது நடந்தது. சுவாதியின் நண்பர்கள் பற்றிய செய்திகள் கசியத் தொடங்கிய போது, சுவாதி பற்றிய ‘புனித பிம்பம்’ ஒருசிலரின் சமூக ஊடகங்களில் வெகு கவனமாகக் கட்டமைக்கப்பட்டது.
கடவுள் பக்தி நிரம்பியவர், அதிர்ந்து பேசாதவர், ஆண்களுடன் பழகாதவர் எனத் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டது. அதை எல்லாம் வாசிக்கும் போது, `ஒருவேளை அந்த இயல்புகளைக் கொண்டவராக இல்லாவிட்டால், சுவாதியின் கொலை நியாயமானதாகியிருக்குமா?’ என்ற கேள்வி எழாமல் இல்லை.
சுவாதிக்காக நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஒன்றில் ‘சுவாதியைக் கொலை செய்வதை விட கொடூரமானது, அவரது நடத்தையைக் கொலை செய்வது’ என்று எழுதிய பதாகை தெரிந்தது.
மகள் இறந்தாலும் சரி… சாதி, கௌரவம் முக்கியம் என்ற அடிப்படையைக்கொண்ட ஆணவக் கொலைகளின் பின்னால் உள்ள உளவியலுக்கும், இது மாதிரியான ‘நடத்தைக் கொலைகள்’ பற்றிய அதீதக் கவலைகளுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? `
நடத்தை சரியில்லாததால் அல்லது அதுபோன்ற ஒரு குற்றச்சாட்டால் கொல்லப்படுவதும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதும் பெரும்பாலும் ஏன் ஒரு பெண்ணாகவே இருக்கிறார்?’ என்ற கேள்வி, ஏன் நம்மில் பலருக்கும் எழுவதே இல்லை?
அதைப் பற்றி பேசாமல், கொல்லப்படும் / வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்ணின் நடத்தையைப் பற்றி ஏன் தீராத விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்? `
என்னை என் பெற்றோர்கூட நம்பவில்லை’ என வினுப்ரியாவின் தற்கொலைக் கடிதம் சுமக்கும் துயர் மிகுந்த கேள்வியும் இதுதான்.
ஏதோ ஒருவகையில் `நடத்தைக் கொலை’ செய்யப்பட்ட ஒரு பெண், உயிருடன் இருக்கக் கூடாது அல்லது அவர் பொதுவாழ்வில் இயங்கக் கூடாது என்ற மிக நுணுக்கமான, கண்ணுக்குப் புலப்படாத நிர்ப்பந்தத்தை சமூக ஊடகங்களும் சேர்ந்து இப்போது உருவாக்குகின்றன.
சுவாதி, வினுப்ரியா மட்டும் அல்ல, சமூக ஊடகங்களில் அன்றாடம் பல `நடத்தைக் கொலைகள்’ நடக்கின்றன.
இந்த நடத்தைக் கொலை மிரட்டல்கள் எல்லாமே பெண்களை சமூக ஊடகங்களில் இருந்தும், பொதுவெளிகளில் இருந்தும் துரத்தி வீட்டில் முடக்கும் முயற்சியே.
சுவாதி கொலை வழக்கில் ஒரு புறம் அவரது நடத்தை குறித்த கேள்விகளும், அது சார்ந்த பதற்றமான விளக்கங்களும் சமூக ஊடகங்களில் சுற்றிக்கொண்டிருந்த அதே நேரம், இன்னொரு புறம் கொலை பற்றிய இணைப் புலனாய்வையும் சிலர் நடத்திக்கொண்டிருந்தார்கள்.
எந்த விசாரணையும் இன்றி அதில் குற்றவாளியாக்கப்பட்டவர் ஓர் இஸ்லாமிய இளைஞர். சுவாதியின் கொலை, காதல் ஜிகாத்தாக மாற்றப்பட்டது.
விசாரணையின் முடிவு வேறாக இருந்த போதும் அது பற்றிய குற்றவுணர்வோ, வெட்கமோ அதைப் பரப்பியவர்களிடம் கொஞ்சமும் இல்லை.
மாறாக, மதப் பிரச்சினையில் இருந்து அதைச் சாதிப் பிரச்சினையாக மாற்ற முனைந்தார்கள். `சுவாதியின் கொலை `Crime for passion’ எனப்படும் உணர்ச்சிக் கொலை’ என்கிறது போலீஸின் முதல்கட்ட விசாரணை.
இந்த அடிப்படைப் புரிதல் இல்லாத சமூக ஊடக நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளில், `சுவாதி போன்ற உயர்சாதியைச் சேர்ந்த, படித்த, நல்ல பணியில் உள்ளவர்களின் காதலுக்குத் தகுதியற்றவர்கள் ராம்குமார் போன்றவர்கள்’ என, சாதிய வன்மம் வெளிப்பட்டது.
அதற்குத் தண்டனையாக எந்தக் குற்றமும் செய்யாத ராம்குமாரின் சகோதரியின், அம்மாவின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.
ஆடி கார் ஏற்றி ஒரு தொழிலாளியைக் கொன்ற இளம்பெண்ணின் புகைப்படத்தை வெளியிடாமல் காப்பாற்றப்பட்ட ஊடக நெறிகள், ராம்குமார் போன்றோரின் வீட்டுப் பெண்களின் புகைப்படங்களை வெளியிடும்போது காணாமல் போகின்றன.
இந்த ஊடக அறத்தைப் பற்றி கேள்வி எழுப்பிய சமூக ஊடகவியலாளரான ஒரு பெண், `ஊடகவியலாளருக்கு, ட்விட்டரில் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்’ என எழுதுகிறார்.
பல நேரங்களில் சமூக ஊடகங்கள் கட்டப் பஞ்சாயத்துகளாக உருவெடுக்கும் அவலம்தான் நடக்கிறது.
பெரும்பாலும் ஒடுக்கப்பட்டவர்களும் பெண்களும் இந்தப் பஞ்சாயத்துகளில் எந்த விசாரணையும் இன்றி குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
காதலை நிராகரித்ததால், அவமானப் படுத்தியதால் அரிவாளை எடுத்து வெட்டிக்கொன்றதாகச் சொல்லப்படும் ராம்குமார் மட்டும்தான் இங்கே குற்றவாளியா?
சுவாதி படுகொலை வழக்குத் தொடர்பாக வெளியாகும் தகவல்கள், காவல்துறையின் புலனாய்வையே கேள்விக்குட்படுத்துவதாக இருக்கிறது. ‘நான் மட்டும் குற்றவாளியல்ல. இன்னும் நிறைய உண்மைகள் இருக்கின்றன என புழல் சிறையில் குமுறிக் கொண்டிருக்கிறாராம் ராம்குமார்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் திகதி காலை வெட்டிக் கொல்லப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கழுத்தறுபட்ட நிலையில் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ராம்குமாரிடம், நெல்லை மாவட்ட நீதிபதி ராமதாஸ், இரகசிய வாக்குமூலம் வாங்கினார்.
என்னுடைய காதலை சுவாதி ஏற்றுக் கொள்ளாமல் அவமானப்படுத்தியதால் கொன்றேன் என ராம்குமார் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையில் இருந்தே தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், நேற்று புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்துப் பேசியிருக்கிறார் வழக்கறிஞர் ராமராஜ்.
ராம்குமாரிடம் தனியாகப் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்காமல், சிறைத்துறை கண்காணிப்பாளர், மூன்று காவலர்கள் என சுற்றி நின்று கொண்டனர். இவ்வாறு அவர்கள் நடந்து கொள்வது ஆச்சர்யமளிக்கிறது.
நிதானமான குரலில் சிலவற்றைப் பேசினார்
அவர். ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தவர். சிறு வயதில் இருந்தே அந்தக் குடும்பத்தை எனக்குத் தெரியும்.
இப்போது மொத்தக் குடும்பமும் இந்த சம்பவத்தால் பரிதவித்து வருகிறது. அவர்களது அனுமதியின் பேரில்தான் புழல் சிறைக்குச் சென்று பார்த்தேன்.
கைது செய்யப்பட்ட நாளில் இருந்தே மிகுந்த மனப்பதட்டத்தில் இருக்கிறார் ராம்குமார். உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் காவல்துறை கடுமையான சித்ரவதைகளைச் செய்திருக்கிறது.
அவரது கழுத்துப் பகுதி, அரை வட்டத்தில் அறுக்கப்பட்டிருக்கிறது. தற்கொலை முயற்சியில் ராம்குமார் இறங்கவில்லை. காவல்துறையினரே அனைத்தையும் செய்தார்கள் என்று அதிர்ச்சி கிளப்பிய ராமராஜ் மேலும் தொடர்ந்தார்,
சிறை அதிகாரிகள் அருகில் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாத ராம்குமார், நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது சார். ஒரு வருடத்திற்கு முன்பே சுவாதியை எனக்குத் தெரியும். பேஸ்புக் மூலமாகத்தான் இருவரும் பேசி வந்தோம். சேட்டிங்கில் நிறைய பேசுவார்.
பி.ஈ படிப்பில் நான்கு அரியர் இருந்ததால், எங்குமே வேலைக்குப் போக முடியவில்லை. சென்னையில் ஏதேனும் வேலை கிடைத்துவிடும் என்று நம்பித்தான் சென்னை வந்தேன்.
சுவாதி வசிக்கும் பகுதியிலேயே மேன்சனில் அறை எடுத்து தங்கினேன். ஆனால், சென்னை வந்த நாளில் இருந்து எந்தக் கம்பெனிக்கும் வேலைக்குப் போகவில்லை. இடையில் எதிர்பாராமல் என்னவெல்லாமோ நடந்துவிட்டது’ என வேதனைப்பட்டார்.
இந்தப் படுகொலைக்குப் பின்னால் வேறு சிலரின் தூண்டுதலும் இருக்கிறது என சந்தேகிக்கிறோம். வழக்கு விசாரணையின்போது மேலும் சில தகவல்கள் வெளிவர வாய்ப்பிருக்கிறது.
தற்போது ராம்குமார் அளவுக்கு அதிகமான மனப் பதட்டத்தில் இருக்கிறார். இந்த வழக்கைப் பற்றிப் பேசவே பயப்படுகிறார்.
போலீஸார் எதையாவது செய்துவிடுவார்கள் என்ற அச்சம் அவருக்குள் இருக்கிறது. தொடக்கத்தில் இருந்தே வழக்கை முடித்து விடவே காவல்துறை அவசரம் காட்டுகிறது.
உண்மையை நிலைநாட்டுவதற்கு காவல்துறை விரும்பவில்லை என்றே தெரிய வருகிறது. பட்டப் பகலில் நடந்த ஒரு பெண்ணின் படுகொலையின் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார் கொந்தளிப்போடு.
ராம்குமாரை சந்தித்த பிறகு ராமராஜ் சொல்லும் இந்த தகவல்கள், நிச்சயம் சுவாதி கொலை வழக்கின் போக்கில் திருப்பத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
இது தொடர்பான சந்தேகங்களுக்கு காவல்துறையோ, சுவாதியின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களோதான் விளக்கம் அளிக்க வேண்டும்.
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியின் பெரிய சந்தைக்கு முன்னால் நேற்று புதன்கிழமை இரவு சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சிறுத்தை எங்கிருந்து வந்தது எதனால் இறந்துள்ளது என்பது பற்றிய எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் சிறுத்தை இறந்தது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உணவு தேடி இச்சிறுத்தை நகருக்குள் வந்து பிரதான வீதியைக் கடக்கும்போது வாகனங்களில் மோதுண்டு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சன அடர்த்தியும் எந்நேரமும் மக்கள் நடமாட்டமும் பரபரப்பாகவும் இருக்கும் ஆரையம்பதி மற்றும் காத்தான்குடி நகரப்புறத்துக்குள் சிறுத்தை ஒன்று பிரவேசித்திருப்பதை அனைவரும் ஆச்சரியத்தோடு பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.!
சென்னையில் கடந்த 7 ஆம் திகதி காலை வீட்டில் இருந்து கல்லூரி பேருந்தில் சென்ற மாணவி பிரியதர்ஷினி திடீரென பேருந்தில் இருந்து கீழே குதித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர், அந்த விசாரணையில், மாணவி பிரியதர்ஷினி படித்த அதே கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வந்த அரவிந்த் (22) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவி பிரியதர்ஷினி எழுதி வைத்த 3 பக்க உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
“டியர் அரவிந்த், என்னை எந்த வார்த்தையெல்லாம் பேசக் கூடாதோ அந்த வார்த்தையெல்லாம் நீ பேசிட்ட. இருந்தாலும் எனக்கு உன்மேல இருந்த லவ் குறையல. நீ எந்த அளவுக்கு உன் குடும்பத்து மேல பாசம் வச்சிருக்கியோ அதே அளவு நான் உன் மேல வைச்ச லவ் உண்மை. அதை என்னால் மறக்க முடியல. என் லவ்வ கடைசி வரைக்கும் நீ புரிஞ்சிக்கல.
ஆனா இப்போ என்னோட உயிர கொடுத்து என் லவ்வ நிரூபிக்க போகிறேன். இவ்வளவு நாள் சேர்ந்து சுத்தினோம். ஜாலியா என்ஜாய் பண்ணினோம். அது மட்டும் லவ் இல்ல. எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் அந்த தைரியம் உன்கிட்ட இல்லப்பா, இருந்தாலும் உன் கூட நான் வாழ்ந்த நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாது.
நான் செத்துட்டா என் கல்லறையில் கூட நம்ம ஞாபகம் அழியாதுடா, அந்த அளவுக்கு நான் உன் மேல வச்சப் பாசம், என் லவ்வை நீ புரிஞ்சிக்கும்போது அத நான் பார்த்து சந்தோஷப்பட முடியாது. ஏனா நீ இதை படிக்கும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன். உன் கூட உன் பொண்டாட்டியா ஒரு நாள் வாழ்ந்துட்டேன். அது போதும். இந்த ஜென்மத்துல அந்த சந்தோஷத்தோடு நான் போறேன்டா.
எப்போது நான் இருந்த இடத்தில் இன்னொருத்திய உன்னால் நினைக்க முடியுமுன்னு நீ நினைச்சியோ அப்போதே செத்துட்டேன். இது வெறும் பொணம். இப்ப சாகுறது நீ கவலைப்படத்தான். நீ ஆசைப்பட்ட மாதிரி நல்ல பொண்ணு உன் வாழ்க்கையில் கிடைக்கும். நீ என்னை நினைச்சு எவ்ளோ அழுதாலும் நான் வரமாட்டேன்டா” என்று கடிதத்தில் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் பிரியதர்ஷினியின் காதலன் அரவிந்தை கைது செய்து பொலிசார் விசாரணை நடத்தினார்கள்.
பிரியதர்ஷினியும், அரவிந்தும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர், ஒரு கட்டத்தில் பிரியதர்ஷினியை திருமணம் செய்து கொள்ள அரவிந்த் மறுத்துள்ளார்.
இதனால் தான் பிரியதர்ஷினி தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது, தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் அரவிந்த் மீது பொலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
மத்திய மற்றும் தென் சீனாவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையினால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 80 இலட்சம் பேர் வசிக்கும் இப்பகுதியில் வீடுகள் பல வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில், 181 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நீரில் மூழ்கி இறந்தனரா, இல்லை எங்காவது சிக்கிக் கொண்டுள்ளனரா எனத் தெரியவில்லை.
சீனாவின் வூவாந் நகரத்தின் யாங்சே ஆற்றங்கரையில் கடந்த ஒரே வாரத்தில் 57.4 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வௌ்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 170,000 பேர் தங்களது குடியிருப்பைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர். 80,000க்கு அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வரலாறு காணாத வெள்ளத்தால் சீனாவின் முக்கிய நகரங்கள், கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தினால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பெண் ஒருவர், தான் ஆவிகளுடன் பேசுவதாகவும், நடப்பதை முன்கூட்டியே அறியும் சக்தி தனக்கு உள்ளதாகவும் தெரிவிக்கின்றார். அமெரிக்காவை சேர்ந்த சாலி குட்மோர் என்ற செவிலியர் பெண், தான் சிறு வயதிலிருந்தே ஆவிகளை கண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் நிறங்கள் மற்றும் அடையாளங்களை கண்டு வருங்காலத்தை முன்கூட்டியே உணர முடிவதாகவும் கூறியுள்ளார். இவர் தனது மகளின் வயிற்றின் அருகே சிவப்பு நிறத்தினை கண்டதாகவும் அதையடுத்து மகளுக்கு ஏதோ பிரச்சனை வரப்போவதாக உணர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சோதித்த மருத்துவர்கள் அவரது மகள் சோபியாவின் கர்ப்பப்பையில் கட்டி உள்ளதை கண்டறிந்துள்ளனர். பின்பு சிகிச்சை மூலம் சோபியாவின் உயிரை காப்பாற்றியுள்ளனர். மேலும் சாலி இதுபற்றி கூறுகையில், நான் இதுபோல பொலிசாருக்கும், மற்ற நபர்களுக்கும் பல முறை உதவியுள்ளேன் என்றும் என் சக்தியால் தான் எனது மகளின் உயிரை காப்பாற்ற முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
ஒருவர் இறந்த பின் 3 நிமிடங்கள் வரை அவருக்கு நினைவுகள் இருக்கும் என இங்கிலாந்தை சேர்ந்த சவுத்தாம்ப்டன் பல்கலைகழக விஞ்ஞானிகளிகளால் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவக்குழு இங்கிலாந்து , அமெரிக்கா மற்றும் ஆஸ்திரியாவில் உள்ள 15 மருத்துவமனைகளில் உள்ள 2060 நோயாளிகளிடம் கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டது.
இதில், ஒரு மனிதனின் இதய துடிப்பு நின்ற 20 முதல் 30 விநாடிகளில் அவனின் மூளையும் செயல்பாட்டை இழந்து விடும் எனவும், அதன் பிறகு 3 நிமிடங்கள் வரை அவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் குறித்த நினைவுகள் அவனுக்கு இருக்கும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழக்கும் தருவாயில் இருக்கும் ஒரு நோயாளியிடம் நினைவுகள் கண்டறியும் கருவி பொருத்தப்பட்டதில், அவர் உயிரிழந்த பிறகு அவரை உயிர்பிழைக்க வைப்பதற்காக டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றி அந்த நோயாளியின் நினைவுகள் பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. மரணம் தொடர்பான ஆராய்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு இந்த ஆய்வு எடுத்து செல்லும் என தெரிகிறது.
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் ஆஸாத் நகர் மீரா தைக்காப்பள்ளிவாசலில் வைத்து குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (07) காலை 06 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 39 வயதுடைய கே.எம்.நாஸ்கீன் என மூதூர் பொலிஸார் கூறியுள்ளனர்.இவ்வாறு உயிரிழந்த நபர் அவரது மைத்துனரைக் கட்டுத் துவக்கினால் சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு மூன்று மாதத்துக்கு முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையிலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சீட்டாட்டம், நுரைப் பந்து அல்லது மடிக்கப்பட்ட கடதாசியினை கழிவு கூடைக்குள் போடுவது போன்ற செயற்பாடுகள் ஒருவரின் உடல் வலிமையை மீட்க உதவும் என புதிய ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. இது தொடர்பான தகவல்கள் Lancet Neurology எனும் ஆய்வுப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இவ் ஆய்வுகள் நான்கு நாடுகளை சேர்ந்த 14 நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தேர்வுசெய்யப்பட்ட நோயாளர்கள் எழுந்தமாறாக இரு வேறு குழுக்களாக ஆராயப்பட்டிருந்தனர்.இதில் குறித்த ஒரு குழுவினர் வீடியோகேம் ஆட பணிக்கப்பட்டிருந்தனர், மற்றைய குழுவினர் சீட்டாட்டம் போன்ற பொழுது பொக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இப் பயிற்சிகள் ஒரு மணி நேரத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.இவர்களில் இரு வாரத்தில் 30 வீத முன்னேற்றமும், நான்கு வாரத்தில் 40 வீத முன்னேற்றமும் அவதானிக்கப்பட்டது.இரு குழுக்களுக்கிடையிலும் பெரிதளவில் வேறுபாடுகள் இருந்திருக்கவில்லை.