காஜல் அகர்வால் அடுத்து விக்ரம் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார்.இதில் ‘இந்த காலத்தில் உண்மையான காதல் என்பது குறைவு, ஆனால், அதற்காக கொலை செய்வது, தற்கொலை செய்வது ஏன் என்று புரியவில்லை.
காதல் தோல்வி என்றால் அதிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையை தொடங்கவேண்டும், இதற்கெல்லாம் தற்கொலை செய்வது எந்த விதத்திலும் தீர்வு இல்லை’ என கூறியுள்ளார்.
இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் ஒரு கதாபாத்திரத்திற்காக 10 கிலோ எடை குறைக்கவுள்ளதாக நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.இந்நிலையில் இவை எதற்காக என்று ஒரு தகவல் கசிந்துள்ளது,
விஜய் இப்படத்தில் ஒரு சில காட்சிகளில் கல்லூரி மாணவனாக வருவாராம்.அதற்காக தான் இந்த முடிவாம், இதற்கு முன் 2013ல் வெளிவந்த நண்பன் படத்தில் விஜய் கல்லூரி மாணவனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அனைவரையும் கவர்ந்தவர் மகேஸ்வரி. இதன் பின் பல சீரியல்களில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.பின் ஒரு சில படங்களில் தலையை காட்டி சென்றார்,
ஆனால், இவரின் கவனம் முழுவதுமே சீரியலில் தான் இருந்தது.இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கும் சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான ரோலில் மகேஸ்வரி நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.
ஜேர்மனி நாட்டில் இஸ்லாமிய பெண் ஒருவரை நபர் ஒருவர் சரமாரியாக தாக்கி மூக்கை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜேர்மனியில் உள்ள கியல் என்ற நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் நகரில் உள்ள வீதி ஒன்றில் 35 வயதான பெண் ஒருவர் இஸ்லாமியர்கள் அணியுடன் உடையுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது, அவருக்கு எதிர் திசையில் இருந்து வந்த 55 வயதான நபர் ஒருவர் பெண்ணை திடீரென தடுத்தி நிறுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வின் அதிர்ச்சியில் இருந்து பெண் மீளாது உள்ள நிலையில், அவர் சரமாரியாக பெண்ணை தாக்க தொடங்கியுள்ளார். ஒரு குத்து சண்டை வீரர் தனது எதிராளியை தாக்குவது போல் அடித்ததில் பெண்ணின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. தாக்குதல் குறித்து தகவல் அறிந்த பொலிசார் விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் பேசியபோது, ‘பெண் மீது தாக்குதல் தொடங்கியபோது, இஸ்லாமியர்களை பற்றி அவர் தரக்குறைவாக பேசியவாறு தாக்கியதாக’ தெரிவித்தனர்.தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நபர் மீது விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ஜேர்மனியில் இஸ்லாமியர்கள் மீதான மதவெறி தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவது அந்நாட்டு அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்து நாட்டில் நுழைவதற்காக சூட்கேஸ் பெட்டிக்குள் மறைந்து வந்த அகதி ஒருவரை அந்நாட்டு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.எரித்திரியா நாட்டை சேர்ந்த 21 வயதான வாலிபர் ஒருவர் இத்தாலி நாட்டில் நண்பர் ஒருவருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இத்தாலியை விட்டு வெளியேறி சுவிஸில் நுழைய அந்த வாலிபர் திட்டமிட்டுள்ளார். ஆனால், அவரிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை.எனினும், தனது நண்பரிடம் சரியான ஆவணங்கள் இருந்ததால் அவருடைய உதவியுடன் சுவிஸில் நுழைய தீர்மானித்துள்ளார்.
இதன் அடிப்படையில், நண்பன் கொண்டு சென்ற சூட்கேஸ் பெட்டிக்குள் புகுந்து மறைந்துள்ளார். நண்பர் அந்த பெட்டியை எடுத்துக்கொண்டு ரயில் ஒன்றில் பயணம் செய்துள்ளார்.
சுவிஸின் டிசினோ மாகாணத்தில் உள்ள Chiasso என்ற நகருக்கு ரயில் வந்து நின்றவுடன், அதில் பொலிசார் ஏறி வழக்கமான சோதனை செய்துள்ளனர்.அப்போது, நண்பர் கொண்டு சென்ற சூட்கேஸ் பெட்டி புடைத்துக்கொண்டு இருந்ததால் பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், பெட்டியை தூக்கி பார்த்தபோது அது மிகவும் கனமாக இருந்ததால், அதை வெளியேற்றி தரையில் வைத்துள்ளனர்.அப்போது, பொலிசார் கண் முன்னால் பெட்டிக்குள் இருந்த வாலிபர் மெதுவாக வெளியேறியதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கையும் களவுமாக பிடிப்பட்ட வாலிபரையும் அவரது நண்பரையும் பொலிசார் உடனடியாக கைது செய்தனர். பின்னர், இருவரிடம் விசாரணை நடத்திய பிறகு எச்சரிக்கை செய்து இத்தாலி நாட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
நஞ்சு ஊட்டப்பட்ட மிருகங்களின் இறைச்சியை உட்கொள்ள வேண்டாம் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு சிலர் நஞ்சு வகைகளை பயன்படுத்துகின்றனர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வேட்டையாடப்படும் இறைச்சி வகைகளை உட்கொள்ளும் போது எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென மக்களிடம் கோரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக தாகத்தை தீர்த்துக் கொள்ள வரும் மிருகங்களை நஞ்சூட்டி வேட்டையாடப்படுகின்றது.
இவ்வாறு நஞ்சூட்டி வனவிலங்ககளை கொன்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர் என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் டப்.எஸ்.கே. பதிரத்ன தெரிவித்துள்ளார்.இவ்வாறான சம்பவங்கள் பதிவானால் உடனடியாக 1992 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கோ அல்லது 011-2888585 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்க்கும் சுற்று நிருபத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.தரம் ஒன்றுக்கான மாணவர்களை சேர்ப்பது தொடர்பில், அண்மித்த பாடசாலை உள்ளிட்ட அனைத்து வகையீடுகள் குறித்த நேர்முகத் தேர்வுகளின் போதும் பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவரை நியமிக்கக் கூடிய வகையில் சுற்றுநிருபத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் பழைய மாணவர் என்ற அடிப்படையிலான வகையீட்டின் கீழ் விண்ணப்பத்தவர்களின் நேர்முகத் தேர்வு மற்றும் மேன்முறையீடு ஆகிய வகையீடுகளின் போதான குழுவில் மட்டுமே பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் அங்கம் வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டுக்கு தரம் ஒன்றுக்கான மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் இந்த சுற்றுநிருபத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது.கடந்த 30ம் திகதியுடன் விண்ணப்பம் செய்வதற்கான காலம் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரத்தினபுரி – நிவித்திகலை தமிழ் பாடசாலை ஒன்றில் மாணவிகள் மூவர் கடத்தப்பட்டுள்ளதுடன், அதில் இருவர் இரத்தினபுரி பஸ் நிலையத்துக்கு அருகில் அநாதரவான நிலையில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டு, பாடசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த மூன்று மாணவியரும் எவ்வாறு கடத்தப்பட்டனர் என்பது பற்றி பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தற்போது கடத்தப்பட்டுள்ள மாணவியின் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி குறித்த மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறு தாய் தகவல் அனுப்பியுள்ளதாக தெரிவித்து நபர் ஒருவர் பாடசாலைக்கு சென்றுள்ளார். எனினும் பாடசாலை நேரத்தில் பெற்றோர், பாதுகாவலர் இல்லாமல் மாணவியை அனுப்ப பாடசாலை நிர்வாகமும், ஆசிரியர்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாடசாலை முடியும் வரை காத்திருந்த சந்தேகநபர் குறித்த 3 மாணவிகளையும்முச்சக்கரவண்டி ஒன்றில் அழைத்துச் சென்றுள்ளதுடன், இரண்டு மாணிவிகளை இரத்தினபுரி நகரில் விட்டுவிட்டு மற்றைய மாணவியை கடத்திச் சென்றிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவித்திகல, சிந்துருப்பிட்டிய தனியார் தேயிலைத் தோட்டத்திற்கு வந்துள்ளதாகவும், சந்தேகநபரின் வீட்டுக்கு அண்மையிலே குறித்த மாணவியின் வீடும் இருப்பதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இரத்தினபுரி நகரில் நிர்க்கதியான நிலையில் காணப்பட்ட மாணவிகள் இருவரையும் வைத்திய பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை நிவித்திகல பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், மற்றைய மாணவிகளிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது வரை சொந்த இடங்கள் இல்லாமல் இருக்கும் அரச பணியாளர்களுக்கு இடங்களைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.எதிர்வரும் இரண்டு நாட்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பலாந்தொட்டை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதேவேளை இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட அமைச்சர் வஜிர அபேவர்தன நாடு பூராகவும்உள்ள அபிவிருத்தி பணியாளர்களின் செயற்பாடுகளை அதிகரிக்க எதிர்காலத்தில் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச வங்கி அதிகாரியாக தன்னை காட்டிக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கலனேவ-கும்புக்வேவ பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவரிடம் குறித்த நபர் பண மோசடி செய்துள்ளதாகவும், குறித்த பெண் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய இந்த நபரை கைது செய்துள்ளதாகவும் கல்னேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த சந்தேகநபரிடம் இருந்த போலி ஆவணங்களையும்,மோட்டார் சைக்கிள்ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.இதேவேளை, சந்தேகநபரை இன்றைய தினம் கெக்கிராவ நீதவான் நீதிமன்றில்ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருவப் பெண்கள் தங்களுடைய படிப்பு, உடை நண்பர்கள், வெளியில் சென்று வருவது வீட்டு வேலைகளை செய்ய மறுப்பது தொடர்ப்பாய் பெற்றோர்களுடன் அடிக்கடி சண்டை போடுகிறார்கள்.
இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு பெற்றோரும் தன்மகள் தங்கள் கட்டுப்பாட்டு எல்லையை மீற சம்மதிப்பதில்லை. அவ்வாறு மீறினால் கடுமையாக நடந்து கொள்ள முற்படுவார்கள்.
ஆனால் பருவப் பெண்கள் தங்களுடைய படிப்பு, உடை நண்பர்கள், வெளியில் சென்று வருவது வீட்டு வேலைகளை செய்ய மறுப்பது தொடர்ப்பாய் பெற்றோர்களுடன் அடிக்கடி சண்டை போடுகிறார்கள். அவர்களுடைய உடம்பும் மனதும் துரிதமாய் பல மாற்றங்களுக்குள்ளாகின்ற காலகட்டம் இது.
இந்தப் பருவத்தில் தங்களுடைய கருத்துக்கள், எதிர்பார்ப்புகள், தங்களுடைய செயல்களைத் தாங்களே முடிவு செய்யும் விருப்பம் இவற்றுக்காக குரல் கொடுக்கத் தொடங்கி விடுவார்கள்.
டீன் ஏஜ் பெண் குழந்தைகளின் எதிர்பார்ப்புகள் :
* தங்களுக்கு தேவையானவைகளைத் தாங்களே தெரிவு செய்யும் உரிமையை கொடுக்க வேண்டும்.
* தங்களுடைய தனித்தன்மையை வெளிப்படுத்த வாய்ப்புகள் அளிக்க வேண்டும்..
* தாங்கள் முதிர்ச்சியற்றவர்களை போல நடத்தக் கூடாது.
* பெற்றோர்களின் விருப்பங்களையும், கனவுகளையும் தங்கள் மீது திணிக்கக் கூடாது.
* தங்களையும், தங்கள் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திக் கொள்ள போதிய வாய்ப்பு அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு பெற்றோர்களும் செய்ய வேண்டியவை :
* தங்களின் வளைந்து கொடுக்காத கண்டிப்பான போக்கை கைவிடல் நன்று.
* வளரிளம் பெண்ணிடம் சுயசிந்தனையும், சுயமாய் செயல்படும் திறமையும் இருக்கிறது என்பதை உணர்தல் வேண்டும்.
* வீட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது பெண் குழந்தையின் கருத்தினையும் கேட்டுப்பெறுதல் வேண்டும்.
* தெரிவு செய்யும் உரிமையை அளித்தல் (படிப்பு, வேலை, நண்பர்கள்)
* தன்னுடைய உரிமையை கேட்டுப்பெற்றாலும் தனக்குள்ள பொறுப்புகளை அவள் மறப்பதில்லை என்று உணர்தல் வேண்டும்.
* பெண் குழந்தைகளிடம் பாலியல் விழிப்புணர்வை ஊட்டும் கடமை ஒவ்வோர் தாய்க்கும் உள்ளது.
* பெற்றவர்கள் விருப்பு, வெறுப்பு, கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பெற்ற பெண்ணிடம் பகிர்ந்து கொள்ளுதல். அவர்களை சந்தேகப்பட்டு ஆராய்வதோ, விசாரணை செய்வதோ வேண்டாம்.
* தன் மகள் ஒருபோதும் தவறு செய்யமாட்டாள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.
* தங்கள் ஆதரவு எப்போது அவர்களுக்கு உண்டு என்பதை புரிய வைத்தல் வேண்டும்.
மொத்தத்தில் டீன் ஏஜ் பருவம் என்பது ஓர் சோதனை காலகட்டம். அந்த காலகட்டத்தில் பெற்றோர்கள் டீன் ஏஜ் பெண் குழந்தைகளிடம் அன்பும் ,பரிவும் காட்டிடல் வேண்டும்.
இலங்கையில் ஆறு பேரில் ஒருவருக்கு ஏதேனும் நீண்ட நாள் நோய் காணப்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 18 வீதமானவர்கள் ஏதேனும் ஓர் வகை நீண்ட கால நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களத்தினால் இந்த மதிப்பீட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
நீரிழிவு, இரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்று நோய், பக்கவாதம், உள நோய், மூட்டு வலி உள்ளிட்ட நீண்ட கால நோய்களினால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 15 வயதுக்கும் குறைந்த சிறுவர் சிறுமியருக்கு அதிகளவில் தொற்று நோய்களே பரவுகின்றன என தெரிவிக்கப்படுகிறது.
ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தப்பட்ட யாஸிதி இளம்பெண்களை இணையத்தில் ஏலம் விட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் கூட்டமாக கடத்தப்பட்ட யாஸிதி பெண்களை தற்போது இணையத்தில் அவர்கள் ஏலம் விட்டுள்ளனர்.
இதுகுறித்த ரகசிய விளம்பரங்களை அரபி மொழியில் சங்கேத குறிகளுடன் குறிப்பிட்ட நபர்களுக்கு பரப்பி வருகின்றனர்.
அதில் அழகான இளம்பெண் 12,500 டொலர் விலை எட்டியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒட்டு மொத்தமாக 3,000 பெண்கள் மற்றும் குழந்தைகளை செக்ஸ் அடிமைகளாக ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இளம்பெண்களை தற்போது இணையத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்டு விலை பேசி வருகின்றனர். இரண்டு குழந்தைகள் கொண்ட தாயாருக்கு அந்த அமைப்பு இட்டிருக்கும் விலை 3,700 டொலர்கள்.
முக்கியமாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈடுபடுவதற்கு காரணமாக கூறப்படுவது நிதி நெருக்கடி என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
யாஸிதி இளம்பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திவிட்டு அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, இதை அறியவரும் பெற்றோர்களிடம் இருந்து பணம் பறிக்கவே இந்த கொடிய ஏற்பாட்டினை அவர்கள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் யாஸிதி குடும்பங்கள் பெரும்பாலும் கடுமையான கடன் தொல்லையில் சிக்குண்டு அல்லல் பட்டு வருவதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
லாமியா என்ற 18 வயது யாசிதி இளம்பெண் இதேப்போன்று ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக கொடுமைக்குள்ளாகி பின்னர் அங்கிருந்து தப்ப நான்கு முறை முயன்று தோல்வி கண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஒருவழியாக தப்பி தமது பெற்றோரிடம் வந்து சேர்ந்துள்ளார். தப்பித்து வரும்போது கண்ணிவெடியில் சிக்கி தனது ஒரு கண்ணையும் அவர் இழந்துள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் ஒன்றறை வயது குழந்தை வளர வளர அதன் எடை அதிகரித்து கொண்டே வருவதால் பெற்றோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மராட்டிய மாநிலத்தின் புனே மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தையான ஸ்ரீஜித், லெப்டின்(ஹார்மோன் சிதைவு) என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் இருந்து எடை கணிசமாக உயர்ந்து கொண்டே வருவதாகவும், ஆரம்பத்தில் 4 கிலோ எடை இருந்த குழந்தை தற்போது 22 கிலோவாக அதிகரித்துள்ளது.
மேலும் ஸ்ரீஜித் அளவுக்கு அதிகமாக உணவு உண்பார் எனவும் உணவு தர மறுத்தால் அடம்பிடித்து தனது வயிற்றை நிரப்புவார், இதன் காரணமாக அவருக்கு மூச்சு திணறல் மற்றும் எழுந்து நடக்க முடியாத அளவுக்கு அவரது உடல் அதிகமாகி விட்டது.
இதனால் மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதாவது இந்நோயை குணப்படுத்துவதற்கு இந்தியாவில் மருந்து இல்லை என்பதால் இங்கிலாந்தில் இருந்து அதிக பொருட்செலவில் மருந்துகள்(விலை உயர்ந்த ஊசி) வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த விலை உயர்ந்த ஊசியை குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு இருமுறை செலுத்தி வருகின்றன.
இந்த ஊசி குழந்தையின் பசியை ஒரளவுக்கே கட்டுப்படுத்துகிறது, மேலும் குழந்தைக்கு இதே நிலை நீடித்தால் பல வகையான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது,அதனால் குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறப்படுகிறது.
என்னை காதலிக்க மறுத்தால் சுவாதி என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட கதி தான் உனக்கும் என மாணவியை மிரட்டிய இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகரை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அந்த மாணவியை பல மாதங்களாக தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு செல்வகுமார் (வயது 23) என்ற இளைஞன் தொல்லை கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை அந்த மாணவியை செல்வகுமார் வழிமறித்து வரும் 11ம் திகதிக்குள் நீ உன் காதலை சொல்லாவிட்டால் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதிக்கு நடந்த கதி தான் உனக்கும் ஏற்படும் என மிரட்டியதாக தெரிகிறது.
இது குறித்து மாணவியின் தாயார் கோயம்பேடு பொலிசில் புகார் செய்துள்ளார், அதன் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்பவர் என்பதும், சிதம்பரம் ரெயலடி பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது.
இதையடுத்து செல்வகுமாரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.
தமிழகத்தில் வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த இலங்கை அகதி ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த அகதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த முகாமில் வசிக்கு ஸ்டீபன் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் கடந்த 2ஆம் திகதி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த மனைவி திருமங்கலம் அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை பார்க்க ஸ்டீபன் நேற்று வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
வைத்தியசாலையில் வைத்தும் தகராற்றில் ஈடுபட்டு மனைவியை தாக்கியுள்ளார். இதனையடுத்து வைத்தியசாலை ஊழியர்கள் அவரை தடுக்க முயன்றுள்ளனர்.
எனினும், வைத்தியசாலை ஊழியர்களை அவர் அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.