21 நாள் திருமணவாழ்க்கையின் பின் மர்மமான முறையில் யுவதி மரணம்!!

suicide

நுவரெலியா ராகல பகுதியில் வசிக்கும் தமிழ் யுவதி ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தபொல, கொணபிட்டியவத்தவை சேர்ந்த செல்வராசா பிரியதர்சனி (28) வயதுடையவர் எனவும், 21 நாட்கள் முன்னரே இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த யுவதியின் கணவர் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த பொழுது தனது மனைவி இறந்து கிடப்பதை கண்டதை அடுத்து பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த யுவதி தனது நண்பி ஒருவருக்கு தொலைபேசியில் அறிவித்த பிற்பாடே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனியார் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை!!

Ilancheliyan

பாலியல் வதை, போதைப் பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை குற்றம் சாட்டப்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும். அந்த நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இத்தகைய வழக்கு விசாரணைகள் முடியும் வரையில் சம்பந்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதைவஸ்து வழக்கு தொடர்பிலான பிணை மனு ஒன்றை ஆய்வு செய்தபோதே இவ்வாறு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்கள் டியுசன் வகுப்புக்கள் நடத்தும்போது மிகவும் பொறுப்போடு செயற்பட வேண்டும் என்றும் பாலியல்வதை, போதைவஸ்து பாவனை, போதைப்பொருள் விற்பனை போன்ற குற்றச்சாட்டுக்கள் எழாத வகையில் ஒழுக்க விழுமியங்களைப் பேணி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் பலவற்றில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. சில தனியார் கல்வி நிலையங்கள் மாட்டுக் கொட்டகைகளைப் போன்று காணப்படுகின்றன.

இத்தகைய கல்வி நிறுவனங்களை அவற்றின் பொறுப்பாளர்களும் நிர்வாகிகளும் உடனடியாக சீரமைக்க வேண்டும். காற்றோட்டமுள்ள சுத்தமான மலசலகூட வசதி கொண்ட சுகாதாரத்திற்குப் பாதிப்பில்லாத வகையில் தனியார் கல்வி நிலையங்கள் நடைபெறுகின்றனவா என தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குகின்ற மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ஏதேனும் வசதி குறைபாடுகள், சுகாதாரப் பாதிப்புகள் தனியார் கல்வி நிறுவனங்களில் காணப்படுமேயானால் அவற்றுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவ, மாணவிகள் ஒன்று கூடுகின்ற தனியார் கல்வி நிலையங்கள் பாலியல்வதை, போதைபொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை போன்ற குற்றச்செயல்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்பான இடங்களாகக் கருதப்படுகின்றன.

போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் தனியார் கல்வி நிலையங்களில் கூடுகின்ற மாணவர்களை இலக்கு வைத்து தமது போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுக்கும் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டிருக்கின்றன.

எனவே, தனியார் கல்வி நிலையங்களில் பாலியல்வதை குற்றம் இடம்பெற்றதாகவோ அல்லது போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால், அந்தக் கல்வி நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

பாலியல்வதை மற்றும் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் எவரேனும் தனியார் கல்வி நிலைய வளாகத்தினுள் கைது செய்யப்பட்டால், அது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட தனியார் கல்வி நிலையத்தின் பொறுப்பதிகாரி அதற்கான பொறுப்பை ஏற்று பதிலளிக்க வேண்டும.

இலங்கையில் வைத்தியசாலை தாதியர், சிறைச்சாலை பெண் உத்தியோகத்தர் போன்ற பெண்கள் தவிர வேறு பெண்கள் மாலை 6 மணியில் இருந்து அதிகாலை 6 மணிவரை இரவு நேர கடமையில் ஈடுபட முடியாது. தொழில்பார்க்கவும் முடியாது. ஆடைத் தொழிpற்சாலை பெண்கள் கூட மாலை 6 மணியின் பின்னர் வேலை செய்ய முடியாது.

எனவே தனியார் கல்வி நிலையங்கள் சூரியோதயத்தின் பின்னர் சூரியன் மறைவதற்கிடையிலான பகல் வேளைகளில் மாத்திரமே வகுப்புக்களை நடத்த வேண்டும். அதிகாலை வேளைகளிலும், இரவு வேளைகளிலும் வகுப்புக்கள் நடத்துவதைத் தனியார் கல்வி நிலையங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்பிள்ளைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும் போதை விற்பனையும் அதிகரிக்கின்ற நேரங்களாக, இரவு நேரங்களே அமைந்திருக்கின்றன.

எனவே, தனியார் கல்வி நிலையங்கள், அதிகாலை வேளையிலும் இரவிலும் வகுப்புக்களை நடத்தி பாலியல்வதை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகாமல் இருப்பது அவசியமாகும்.

மாணவிகள் அதிகாலையில் தனியார் கல்வி நிறுவனங்களில் வகுப்புகளுக்கு வரும்போதும், இரவு நேரத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் வகுப்புக்கள் முடிந்து வீடு செல்லும்போதும், அவர்களுக்கு வீதிகளில் ஆபத்து வந்தால்கூட, தனியார் கல்வி நிறுவுனங்களில் வகுப்புக்கள் நடத்திய ஆசிரியரும் அந்த நிறுவனங்களின் பொறுப்பதிகாரியும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, அவற்றைத் தவிர்த்து, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தனியார் கல்வி நிறுவனங்களை, போதை வஸ்து பாவனை மற்றம் போதை வஸ்து விற்பனை இல்லாத பிரதேசமாக மாற்றியமைக்க வேண்டியது அனைத்து தனியார் கல்வி நிறுவன நிர்வாகிகளினதும் பொறுப்பாகும்.

முக்கியமாக பெண்கள் மீதான வன்செயல்களுக்கு, போதைவஸ்தே முக்கிய காரணியாக அமைந்துள்ளது என்பதை தனியார் கல்வி நிறுவனங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

தனியார் கல்வி நிலையங்களுக்கு முன்னால் உள்ள வீதியோரங்களில் தனியார் கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவர்கள் கூடி நின்று கதைப்பதையும், அதனால், வீதியில் செல்வபர்களுக்கு அவர்கள் இடைஞ்சல் ஏற்படுத்துவதையும், தனியார் கல்வி நிலையங்கள் கவனித்து, மாணவர்கள் அவ்வாறு கூடி நிற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாணவர்கள் வீதியோரங்களில் கூடி நிற்கும் சந்தர்ப்பங்களைத்தான், மாணவர்களுக்கு போதை வஸ்துக்களை இலகுவில் விற்பனை செய்வதற்கான வாய்ப்பாக போதைவஸ்து வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

எனவே, போதை வஸ்து வியாபாரிகள் மாணவர்களை அணுக முடியாத வகையில், வகுப்புக்கள் முடிந்த பின்னர், மாணவர்களை கல்வி நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாண சமூகத்திலிருந்து, போதை வஸ்துக்களை ஒழிப்பதற்கு அனைத்துத் தரப்பும் தமக்குரிய கடமைகளில் இருந்து தவற முடியாது என்ற அடிப்படையிலேயே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன என்று நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவுறுத்தல்களை மாநகர சபை மற்றும் நகர சபை ஆணையாளர்கள், பிரதேச சபை செயலாளர்களுக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்குமாறு யாழ் நீதிமன்ற பதிவாளுக்கு நீதிபதி பணித்துள்ளார்

பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெர்ஸிக்கு சிறைத்தண்டனை!!

Merci

வரி ஏய்ப்பு வழக்கில் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு (Lionel Messi) 21 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, அவரது தந்தையான ஜேம்ஸ் மெஸ்ஸிக்கும் குறித்த சம்பவம் தொடர்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த வரி ஏய்ப்பு சம்பவம் குறித்து இருவருக்கும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஆஜன்டீனா மற்றும் பர்சிலேனா ஆகிய அணிகளில் விளையாடி வந்த லியோனல் மெஸ்ஸி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

இந்தநிலையில், அண்மையில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் சிலி அணியிடம் தோற்று அர்ஜென்டினா கிண்ணத்தை இழந்தது.

இப் போட்டியில் மெஸ்ஸி பெனால்டி ஷூட்டில் கோல் அடிக்கத் தவறியது, அர்ஜென்டினாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து அவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தையை உயிருடன் புதைத்து வழிபாடு-கொடூர சம்பவம்!!!!

safe_image1

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் கும்கெர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி ஸ்ரீமதி. இவர்களுக்கு 2 1/2 வயதில் குஷ்பு என்ற பெண் குழந்தை உள்ளது. பிறந்ததில் இருந்து நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் சிறுமியை டாக்டர் மற்றும் மாந்தீரிகரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். அப்படி இருந்தும் உடல் நலம் சரியாகவில்லை.

தங்களது மகளுக்கு தெய்வ அருள் இருப்பதாக வும், உயிருடன் புதைத்தால் சரியாகிவிடும் என்று அவர்கள் கருதினர். இதை தொடர்ந்து சிறுமி குஷ்புவை உயிரோடு புதைத்தனர். அதோடு அவர் புதைக்கப்பட்ட இடத்தில் வழிபாடு செய்தனர்.அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் அங்கு குவிந்து சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் வழிபாடு செய்தனர். அவர்கள் பழங்கள், பூக்கள், பணங்களை வைத்து பிரார்த்தனை செய்தனர். இதனால் அந்த கிராமம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு வந்தனர். சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த சிறுமி கடுமையான வயிற்று போக்கால் பாதிக் கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.இந்த சம்பவம் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆவிகளை திருப்தி படுத்தும் விபச்சாரிகள் : மயானத்தில் விசித்திரம்!!

ghost_001
உத்திரபிரதேச மாநிலத்தில் ஆவிகளை மகிழ்விப்பதற்தாக திருவிழா நடத்தப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள மணிக்கண்காட் என்ற இடத்தில் இருக்கும் பழமையான சுடுகாட்டில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.வருடத்திற்கு ஒருமுறை ஆவிகள் திருவிழா என்ற பெயரில் இந்த கொண்டாட்டம் நடைபெறுகிறது.

ஆவிகள் கோப ரூபமானவை என்பதால், அவை மேலும் பாவங்கள் செய்து பாவிகள் ஆகாமல் இருக்க, அவற்றின் கோபத்தை தடுத்து அவற்றை மகிழச்செய்து, சாந்தப்படுத்துவதே ஆவிகள் திருவிழா என்று கூறப்படுகிறது. ஆவிகளை எப்படி சந்தோஷப்படுத்துவது? காதல் ஏக்கத்திலும், பெண்ணாசையிலும் சிக்கித்தவிக்கும் ஆவிகள் தான் அதிகமாக பாவம் செய்கின்றன என்பதை உள்ளுர்வாசிகள் கண்டறிந்தனர்.

எனவே அவற்றை திருப்திப்படுத்த அழகிகளை கூப்பிட்டு வந்து மேடையில் ஆட்டம் போட வைக்கிறார்கள். ஆவிகளுக்கு பகலில் வரும் பழக்கம் இல்லை என்பதால் இந்த ஆட்டம் நள்ளிரவில் அரங்கேறும். நேரம் செல்ல செல்ல நடனத்தின் முறை மாறுபடும். ஆவிகளை மகிழ்விப்பதற்காக பலநூறு ஆண்டுகளாக இந்த ஆட்டம் பாட்டம் நடந்து வருகிறது.

ஆட்டம், பாட்டம் நடைபெறும் இடம் சுடுகாடு, நள்ளிரவு நடனம், ஆவிகளுக்காக ஆட வேண்டும் என்று பலவிதமான வழக்கத்துக்கு மாறான இந்த நிகழ்ச்சியில் நடனமாட பயந்து கொண்டு அழகிகள் வரமாட்டார்கள். இதனால் விபசார பெண்களை அழைத்து வந்து ஆட விடுவார்கள். சுடுகாட்டு நிகழ்ச்சி என்பதால் இந்த நடனத்தைப் பார்க்க பொதுமக்கள் யாரும் வருவதில்லை. பெருமளவில் இளைஞர்கள் மட்டும் ஆவிகளுக்கான ஆட்டத்தை காண வருகிறார்கள்.

பதக்கங்களுக்காக மனிதநேயத்தை விற்கும் சீனா- சிறார்களை சாதனையாளர்களாக மாற்ற கொடூர பயிற்சி! வீடியோ உள்ளே!

China

ஒலிம்பிக் உள்ளிட்ட உலகின் அதிமுக்கிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் ஆசையில் குழந்தைகளை கொடூரமான முறையில் சித்ரவதைப்படுத்திவரும் சீன தடகள பயிற்சியாளர்களின் கோரமுகம் தற்போது வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது.

சீனா இத்தகைய மனிதநேயமற்ற மனித உரிமை மீறல்களின் மூலம் பதக்கங்களையும் விருதுகளையும் வாங்கிக் குவித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது. (இதுபோன்ற வீடியோக்கள் பல தொகுதிகளாக வெளியாகியுள்ளது, குறிப்பிடத்தக்கது.)

03-olympics-torture-china

சென்னையில் பலியான ஆசிரியை நந்தினியின் சோகக் கதை!!

Nadhini

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் நந்தினி. எம்.சி.ஏ பட்டதாரியான இவர், நீலாங்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

நந்தினிக்கு நேற்று முன்தினம் சம்பள நாள் ஆகும். சம்பள பணத்தை ஏ.டி.எம்.-ல் எடுப்பதற்காக தனது அத்தை மகள் காயத்திரியுடன் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மந்தைவெளிக்கு சென்றார்.

நந்தினியின் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் ஏ.டி.எம். மையத்தில் 25 ஆயிரம் பணத்தை எடுத்து ஒரு பையில் போட்டு காயத்திரி கையில் வைத்திருந்தார்.

அப்போது ஹெல்மெட் அணிந்த கொள்ளையன் ஒருவன், மோட்டார் சைக்கிளில் பின்னால் விரட்டி வந்து காயத்திரி வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு வேகமாக செல்ல முயன்றான்.

ஆனால் நந்தினி விட்டு விடாமல் தொடர்ந்து கொள்ளையனை விரட்டி சென்றார். பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் குடிசைப்பகுதி அருகே கொள்ளையன் வலது புறமாக திரும்பிவிட, வேகமாக வந்த நந்தினியால் திரும்ப முடியவில்லை.

வண்டி கட்டுப்பாட்டை இழந்து கடற்கரைக்குள் நுழைந்து அங்கே இருந்த கொன்கிரீட் கல் மீது மோத, இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நந்தினி உயிருக்கு போராட, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் நள்ளிரவு 12.மணி அளவில் நந்தினி இறந்து போனார். காயத்திரி பிழைத்துக் கொண்டார்.

இதில் இன்னொரு வேதனையான விஷயம் என்னவென்றால், நந்தினியின் இரு சக்கர வாகனம் கல் மீது மோதியபோது, அதில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த பொதுப்பணித்துறை முன்னாள் ஊழியர் சேகர் என்பவர் அந்த இடத்தில் அமர்ந்திருந்தார். நந்தினியின் பைக் மோதியதில் சேகர் அதே இடத்தில் பலியானார்.

அப்போது அங்கே திரண்டிருந்த பொதுமக்கள் கொள்ளையனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் பொலிசார் தலையிட்டு கொள்ளையனை மீட்டு சென்றனர். கொள்ளையனிடம் இருந்து நந்தினியின் பணப்பை மீட்கப்பட்டது.

கொள்ளையனைவிரட்டிப் பிடிக்க முயற்சித்து உயிரிழந்த ஆசிரியை நந்தினியின் பிரேத பரிசோதனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது.

அப்போது நந்தினியின் தந்தை வடிவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது மகள் நந்தினிக்கு அடுத்த மாதம் திருமண செய்ய திட்டமிட்டிருந்தேன். நிச்சயதார்த்தத்துக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தோம்

எனது மகளின் திருமணத்தை கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே. அவளது சம்பளப் பணத்தில் வீட்டு செலவுகளைகூட பார்த்துக் கொள்வாள்.

நந்தினி தனது தம்பி மீது ரொம்ப பாசம் கொண்டிருந்தாள். அவனுக்கு ஒரு நல்ல வேலை தேடி கொடுக்க வேண்டுமென்பது அவளது ஆசையாக இருந்தது.

ஆனால் இப்போது, எங்களையெல்லாம் பரிதவிக்க விட்டு விட்டு சென்றுவிட்டாளே என்று கதறி அழுதார்.

-விகடன்-

மாணவனின் புத்தகப்பையில் மதுபான போத்தல்கள் : சீரழியும் இளம் சமுதாயம்!!

Child shadow pixabay

கண்டி மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரின் புத்தகப் பையில் இருந்து மதுபான போத்தல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மாணவனின் புத்தகப் பையில் இருந்த இரண்டு போத்தல்கள் கீழே விழுந்துள்ளது, பின்னர் உடனேயே பையை மூடுவதற்காக சிறுவன் முயற்சித்துள்ளான்.

இதை அவதானித்த சிறுவனின் ஆசிரியரான பிக்கு ஒருவர், உனது பையில் இரண்டு போத்தல்களா ஏன் நீ இரண்டு போத்தல் நீரை பாடசாலைக்கு எடுத்துவந்தாய் என கேள்வி எழுப்பியுள்ளார்.

பின்னர் போத்தல்களை நன்கு அவதானித்த பிக்கு, ஒரு போத்தலில் நீர் இருந்ததையும் மற்றைய போத்தலில் மதுபானம் இருந்ததையும் அவதானித்துள்ளார்.

குறித்த மாணவனிடம் பிக்கு விசாரணைகள் மேற்கொண்டுள்ளார், இதன் போது பதிலளித்த சிறுவன்,

தனது அப்பா நண்பர்களுடன் பகிர்ந்துக் கொண்ட மதுபானத்தின் அரைவாசியை தான் வீட்டிலிருந்து பாடசாலைக்கு கொண்டுவந்ததாக மாணவன் குறிப்பிட்டுள்ளான்.

மேலும், பாடசாலை அதிபர் மாணவனின் பெற்றோரை அழைத்து கடுமையாக கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரா ஒலிம்பிக் வீரர் பிஸ்டோரியசுக்கு 6 வருடங்கள் சிறை : காரணம் என்ன?

Pistorius

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பரா ஒலிம்பிக் வீரர் ஒஸ்கார் பிஸ்டோரியசுக்கு ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரு செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட இவர், ஒலிம்பிக்கில் சாதாரண வீரர்களுடன் சேர்ந்து பங்கேற்ற முதல் மாற்றுத்திறனாளி வீரர் என்ற பெருமை பெற்றவர்.

புகழின் உச்சியில் இருந்த பிஸ்டோரியஸ், பிரபல மாடல் அழகி ரீவா ஸ்டீன்கேம்ப் என்பவரையே காதலித்து வந்தார்.

இந்தநிலையில், 2013ம் ஆண்டு காதலர் தினத்தன்று தனது வீட்டில் வைத்து காதலி ஸ்டீன்கம்ப்பை துப்பாக்கியால் சுட்டு, அவர் கொலை செய்தார்.

பின்னர் வீட்டில் புகுந்தது திருடன் என்று தவறுதலாக நினைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டேன் என்று பிஸ்டோரிஸ் தெரிவித்தார்.

இந்த வழக்கில் மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ததாக அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவருடமாக சிறையில் இருந்த அவர் பிணையில் வெளியே வந்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கக் கோரி, தென்னாபிரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது திட்டமிட்ட கொலை என்று கூறியதுடன், இதுபற்றி விசாரித்து பிஸ்டோரியசுக்கு தண்டனையை உயர்த்தி வழங்கும்படி கீழ் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து அரசியல் சாசன அமர்வில் முறையிட அவரது வழக்கறிஞர்கள் முயன்றனர். ஆனால், வழக்கை விசாரிக்க அரசியல் சாசன அமர்வு மறுத்துவிட்டது. இதையடுத்து கீழ் நீதிமன்றத்தில் பிஸ்டோரியசுக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பான வாதம் ஜூன் 13ம் திகதி முதல் 17ம் திகதி வரை நடைபெற்று முடிவடைந்தது.

அப்போது, பிஸ்டோரியஸ் தரப்பு சாட்சியாக வாக்குமூலம் அளித்த உளவியல் நிபுணர் ஜோனாதன். குறித்த சம்பவம் நடந்த பின்னர் பிஸ்டோரியசின் மனநிலை பாதிக்கப்பட்டதாகவும், அது கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமடைந்தது கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும், சிறையில் இருந்தால் அவரது நிலைமை மேலும் மோசமாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த வழக்கில் பிஸ்டோரியசுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி! எந்த மொழியிலும் படிக்கலாம்!!

Facebook-Privacy1-696x367

இன்றைய இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளது பேஸ்புக், உலகின் எந்த மூலையில் இருக்கும் நபருடனும் தொடர்பு கொண்டு பேசலாம். ஆனால் இதற்கு தடையாக இருப்பது என்றால் அது மொழி மட்டும் தான். இதனை சரிசெய்ய பேஸ்புக் அருமையான திட்டத்தை வகுத்துள்ளது.

அதாவது வேறு எந்த மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் நமக்கு தெரிந்த எந்த ஒரு மொழியிலும் படிக்கும் வகையில் புதிய வசதி ஒன்றை உருவாக்கி பரிசோதனை செய்து வருகிறது. இதற்கு Settings-> Language-> multilingual post என்பதில் சில மாற்றங்களை செய்து, ஒரு பேஸ்புக் பதிவை பல மொழிகளில் படிக்கும் வசதியை ஆன் செய்துக் கொள்ளலாம்.

பெருவெள்ளத்தில் சிக்கிய 6000 பன்றிகள்: விவசாயி எடுத்த அதிர்ச்சி தரும் முடிவு

China_pigs_3-large_trans++D3d2dmOlWYuQkR76XZjLQKOylOV7i1cNNz18XOj47vE

சீனாவில் பெருவெள்ளத்தில் சிக்கிய 6000 பன்றிகளை காப்பாற்ற முடியாமல் அதன் உரிமையாளர் கண்ணீருடன் விடைபெற்று செல்ல முடிவு செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஷுசெங் மாகாணத்தில் பருவமழை தொடங்கி கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பலத்த சேதம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதனிடையே பெய்லின் நகரில் அமைந்துள்ள பன்றி வளர்ப்பு கொட்டகையில் உள்ள 6000 பன்றிகள் இந்த பெருவெள்ளத்தில் சிக்கி தவித்தவண்ணம் உள்ளது. கொட்டகை தண்ணீரில் மூழ்கியுள்ளதால் பன்றிகள் அந்த தண்ணீரில் சிக்கியுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய பன்றிகளை மீட்டு வேறு பகுதிக்கு மாற்றும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் சென்று முடிந்துள்ள நிலையில், அதன் காப்பாளர் எடுத்த முடிவு வருத்தமளிப்பதாக அமைந்துள்ளது.அந்த கொட்டகையில் இருந்து சில எண்ணிக்கையிலான பன்றிகளையும் தொழிலாளர்களையும் அருகாமையில் உள்ள நிறுவனத்தார் மீட்டு பத்திரமாக வேறு பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் எஞ்சிய பன்றிகளை மீட்பது முடியாத நிலை என கூறப்படுகிறது. சில பன்றிகள் பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை உதவிக்கு அழைத்துள்ளார் அந்த கொட்டகையில் காப்பாளர். இருந்தும் மொத்த பன்றிகளையும் காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகிறது.இதனையடுத்து அந்த பன்றி கொட்டகையை பன்றிகளுடன் விட்டு விட்டு அங்கிருந்து தப்பித்துக்கொள்ள விவசாயி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தென் மற்றும் மத்திய சீனா பகுதிகளில் பெருக்கெடுத்துள்ள பெருவெள்ளத்திற்கு கடந்த 3 நாட்களில் மட்டும் 93 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 19 பேர் மாயமாகியுள்ளனர்.லட்சக்கணக்கானோர் குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். பெருமழையால் மட்டும் இப்பகுதியில் 20 பில்லியன் யுவான் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போரிடாமல் தப்பிய போராளிகளுக்கு நூதன தண்டனை வழங்கிய ஐ.எஸ்!!

isis

ஈராக்கில் கூட்டுப்படைகளுடன் போர் நடக்கும் பகுதியில் இருந்து தப்பி வந்த போராளிகளுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் நூதனை தண்டனை வழங்கியுள்ளனர்.ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கூட்டுப்படைகள் கடுமையாக தாக்குதல்களை தொடுத்து வருகிறது. இதனால் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமிருந்த பல முக்கிய பகுதிகளும் தற்போது கூட்டுப்படைகளின் ஆதிக்கத்தில் வந்துள்ளது.கூட்டுப்படைகளின் தாக்குதலில் பல எண்ணிக்கையிலான ஐ.எஸ் தீவிரவாதிகள் உயிரிழந்து வந்துள்ள நிலையில் பலரும் உயிர் பிழைக்கும் நோக்கில் சண்டை நடக்கும் பகுதியில் இருந்து போரிடாமல் தப்பி வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் கடும் பின்னடைவுக்கு தள்ளப்பட்டுள்ள ஐ.எஸ் அமைப்பு, போரிடாமல் தப்பி வந்த போராளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கி வருகிறது.நிதி நெருக்கடி காரணமாக போராளிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் வெகுவாக குறைக்கப்பட்ட நிலையில் போர்க்களத்தில் நின்று போராடுவதை பல ஐ.எஸ் போராளிகளும் விரும்பவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் ஈராக்கின் சலாஹ்தீன் மாகாணத்தில் உள்ள ஷர்கத் பகுதியில் போரிட்டு வந்த 7 தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர்களை கைது செய்த ஐ.எஸ் அமைப்பினர் பொது வீதியில் வைத்து அவர்களுக்கு நூதன தண்டனை வழங்கியுள்ளனர். அவர்களின் கை கால்களை கட்டி வைத்து கொதிக்கும் தண்ணீரில் மூழ்கடித்து உயிருடன் கொலை செய்துள்ளனர்.இதில் அந்த 7 பேரும் உடல் வெந்து இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேப்போன்று ஃபலூஜா பகுதியில் இருந்து தப்பி வந்த போராளிகள் 19 பேரை கைது செய்து பொது வீதியில் வைத்து கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அப்படியெல்லாம் நடிக்க முடியாது- நயன்தாரா போட்ட கண்டிஷன்!!

412249-nayanthara

நயன்தாரா கையில் 6 படங்கள் உள்ளது. இதில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தற்போது நடிக்க ஆரம்பித்துவிட்டார்.தெலுங்கில் இவர் வெங்கடேஷிற்கு ஜோடியாக நடிக்கும் ஒரு படத்தில் பல கவர்ச்சியான காட்சிகள் இருந்ததாம்.

ஆனால், நயன்தாரா ஒருபோதும் இனி கவர்ச்சியாக நடிக்க முடியாது என கூறி மறுத்துவிடாராம், இதனால், அதிர்ச்சியடைந்த படக்குழு என்ன இருந்தாலும் நயன்தாரா கால்ஷிட்டை வீணாக்க முடியுமா? என்று அவர் கூறியபடியே காட்சிகளை எடுத்து வருகிறார்களாம்.

தமன்னா கொடுத்த சர்ப்ரைஸ்!!

thamana

பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள படம் தேவி. இப்படத்தை இயக்குனர் விஜய் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் எடுத்து வருகிறார்.இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை தமன்னா மற்றும் பிரபுதேவாவும் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டனர்.

இந்த பர்ஸ்ட் லுக் நாளை வெளிவருவதாக இருந்தது, ஆனால், தெலுங்கில் முன்கூட்டியே இன்று வெளியிட்டதால், தமிழிலும் உடனே பர்ஸ்ட் லுக்கை ரிலிஸ் செய்துள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக்கில் தமன்னா இரண்டுவிதமான கெட்டப்புகளில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். பலரும் இந்த பர்ஸ்ட் லுக்கில் தமன்னா கெட்டப் குறித்து பேசி வருகின்றனர்.

புவியின் நீர்மட்டம் உயர்வு – கடலில் 5 தீவுகள் மூழ்கின!!

world2

காற்றில் அதிக அளவில் கார்பன்-டை-ஆக்சைடு வாயு கலப்பதால் மாசு ஏற்பட்டு புவி வெப்பமயமாகி வருகிறது. இதனால் பருவநிலை மாற்றம் எற்பட்டு வருகிறது.இதன் காரணமாக இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் கடலில் நீர் வெப்ப மயமாகிறது. அதனால் கடல் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தென் பசிபிக் கடல் பகுதியில் இருந்த 5 சிறிய தீவுகள் கடலில் மூழ்கி விட்டன.

மேலும் 6 தீவுகள் படிப்படியாக மூழ்கி அழிந்து வருகின்றன. இத்தகவல் ஆஸ்திரேலியாவின் சி.எஸ். ஐ.ஆர்.ஓ நிறுவனம் மற்றும் சீன கடல் பல்கலைக் கழகத்தினர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.கடல் நீர் வெப்பமயமாவதால் பசிபிக் கடல் பரப்பை விட இந்திய பெருங்கடலின் பரப்பளவு அதிகரித்து வருவதாகவும், ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.மேலும் இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் வழக்கத்தை விட மழை அளவு அதிகரித்து இருப்பதாகவும், கிழக்கு ஆசியாவில் மழை அளவு குறைந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அப்பாஸ் காலமானார்!!

appas

உலகளவிலான மிகச்சிறந்த திரைப்பட இயக்குநர்களின் பட்டியலில் இடம்பெற்றவர் அப்பாஸ் கியரோஸ்தாமி. 1997-ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த டேஸ்ட் ஆப் செர்ரி என்ற படத்திற்கு கான் விருது கிடைத்தது. ஆவணப்படங்கள் உள்ளிட்ட 40 படங்களை இயக்கியுள்ளார். ஈரான் புதிய அலை திரைப்பட இயக்குனர்களில் அப்பாஸ் கியரோஸ்தாமி முக்கியமானவர்.

அப்பாஸ் கியரோஸ்தாமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக தொடர்ந்து அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டார். சிகிச்சைக்காக அவர் பிரான்ஸின் பாரிஸ் நகருக்குச் சென்றார். அங்கு கடந்த மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்துபோனார்.