அப்பாஸ் காலமானார்!!

appas

உலகளவிலான மிகச்சிறந்த திரைப்பட இயக்குநர்களின் பட்டியலில் இடம்பெற்றவர் அப்பாஸ் கியரோஸ்தாமி. 1997-ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த டேஸ்ட் ஆப் செர்ரி என்ற படத்திற்கு கான் விருது கிடைத்தது. ஆவணப்படங்கள் உள்ளிட்ட 40 படங்களை இயக்கியுள்ளார். ஈரான் புதிய அலை திரைப்பட இயக்குனர்களில் அப்பாஸ் கியரோஸ்தாமி முக்கியமானவர்.

அப்பாஸ் கியரோஸ்தாமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக தொடர்ந்து அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டார். சிகிச்சைக்காக அவர் பிரான்ஸின் பாரிஸ் நகருக்குச் சென்றார். அங்கு கடந்த மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்துபோனார்.

பிரெஞ்சு நபர் மீது காதல் கொண்ட மனைவி: துண்டு துண்டாக வெட்டிய கணவன்!!

1459149523-8816
ஐதராபாத்தில் பேஸ்புக் காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக கணவரிடம் விவாகரத்து கோரிய மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்.ஐதராபாத்தில் வசித்து வந்த ரூபேஷ்(35), சிந்தியா(32) ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர், இவர்களுக்கு ஷான்யா(7) என்ற மகள் உள்ளார்.சிந்தியாவுக்கு பேஸ்புக் மூலம் பிரெஞ்சு நாட்டு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது, இதனைத் தொடர்ந்து பிரெஞ்சு நபரை திருமணம் செய்யப்போவதாகவும் தனக்கு விவாகரத்து வேண்டும் என தனது கணவரிடம் சிந்தியா கூறியுள்ளார்.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த ரூபேஷ் கத்தியால், சிந்தியாவை சரமாரி வெட்டியதில், சிந்தியா ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து ரூபேஷ், சிந்தியாவின் உடலை துண்டு, துண்டாக வெட்டி ஒரு சூட்கேசில் அடைத்து காரில் வைத்துக்கொண்டார். பின்னர் மகள் ஷான்யாவையும் காரில் அழைத்துக்கொண்டு ரங்காரெட்டி மாவட்டம், ஷென்ஷாபாத் அருகே மதனப்பல்லி என்ற இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றார்.

அங்கு சூட்கேஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு இரவு 7 மணியளவில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது சேற்றில், காரின் டயர் சிக்கிக்கொண்டது. இதில் அப்பகுதி மக்களிடம் அவர் சிக்கிக்கொண்டதையடுத்து, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று ரூபேஷிடம் விசாரணை நடத்தினர்.அதில், தனது மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டு சடலத்தை இங்கு கொண்டு வந்து எரித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பொலிசார் வழக்குபதிவு செய்து ரூபேஷை கைது செய்தனர்.

வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கொடியேற்றம் !!(படங்கள்)

இலங்கை திரு நாட்டின் கண்ணே வடபால் அமைந்து சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வன்னி மாநகரில் வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன்  மகோற்சவம் நேற்று  ௦5.07.2016 செவ்வாய்கிழமை நண்பகல் பன்னிரண்டு மணியளவில் மகோற்சவ குரு சிவஸ்ரீ .சதா சங்கரதாஸ் சிவாசாரியார் தலைமையில் கொடிஏற்றதுடன்  ஆரம்பமாகியது .

மேற்படி மகோற்சவத்தில்

17.08.2016 ஞாயிற்றுகிழமை சப்பர திருவிழாவும்
18.08.2016 திங்கட்கிழமையன்று காலை ரதோற்சவமும்
19.08.2016 செவ்வாய்கிழமையன்று தீர்த்தோற்சவமும் இடம்பெறும் .
13439028_1840714306149544_334773206888417023_n 13528892_1840714232816218_5931984629777633176_n 13537785_1840714189482889_7032020498213548088_n 13592246_1840713966149578_820589332093932774_n 13592660_1840714246149550_7208887843510698194_n 13592732_1840714139482894_7476538015120019494_n 13592800_1840714342816207_3282045974272600278_n 13592839_1840714199482888_1542253364219739971_n 13600077_1840714009482907_6181573440129497757_n 13600203_1840714069482901_9200334908204327867_n 13606698_1840714296149545_1073432863278907382_n 13606863_1840714089482899_6499793897572940234_n 13615405_1840714126149562_7458199781890161753_n 13620940_1840713952816246_7290033548333200141_n 13627195_1840713982816243_8215498198967313258_n

 

வவுனியா முஸ்ஸிம் இளைஞர்களால் ஏழைகளுக்கு உதவிகள்!!

 
வவுனியா பட்டானிச்சூர் அரேபியன் ஆண்கள் கழகத்தினால் ரம்ழான் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இன்று (06.07.2016) 20 வறிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

1 DSC_0197 DSC_0200 DSC_0201 DSC_0204 DSC_0206

லஞ்சம் வாங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

1 (63)

லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பியகம பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள்ஒருவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவனருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொண்டவிசாரணைகளின் போதே இவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட நபருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளாமல்இருப்பதற்காக சந்தேக நபரிடம் இருந்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பத்தாயிரம்ரூபாயை லஞ்சமாக கோரியதாகவும், இதன்போது சந்தேகநபர் 5000 ரூபாயை முற்பணமாகவழங்கியுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மிகுதிப்பணமான 5000 ரூபாயை பியகம பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வைத்துபெறும் சந்தர்ப்பத்திலேயே குறித்த பொலிஸ் காஸ்டபிளை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுஅதிகாரிகள் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதேவேளை சந்தேக நபரான பொலிஸ் காஸ்டபிளை இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான்நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வீடு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளை! ஏறாவூரில் சம்பவம்!!

625.0.560.320.160.600.053.800.668.160.90

வீடு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது சுமார் 2 இலட்ச ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸாரும், மட்டக்களப்பு குற்ற தடயவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறட்டையால் வந்த விபரீதம்!!

 

File written by Adobe Photoshop¨ 5.0

குருவிட்ட பகுதியில் இளம் தம்பதிகளுக்கு அடிக்கடி கருத்து முரண்பாடுகள்ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,மனைவியின் பழக்கங்கள் காரணமாகவே இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்துமுரண்பாடுகள் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இரவு நித்திரையின் போது தன் மனைவி குறட்டை விடுவதன் காரணமாக தன்னால்நிம்மதியாக உறங்க முடியவில்லை என கணவன் குற்றம் சுமத்தியுள்ளார்.

திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியும் இந்த பிரச்சினை காரணமாக இவர்கள்இருவருக்கும் அடிக்கடி சண்டை இடம் பெறுவதாக தகவல் தெரிவிக்கின்றன.இதற்காக பல மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்ட போதும் இது பலனிக்கவில்லை எனகுறிப்பிடப்பட்டுள்ளது.அண்மையில் யாத்திரைக்காக இந்த ஜோடி கதிர்காமத்திற்கு சென்றுள்ளனர், அப்போதுஇரவு உறக்கத்தின் போது மனைவி குறட்டை விட்டதில் அங்கிருந்த அனைவரும் உறங்காமல்எழும்பியுள்ளனர்.

இந்த நிலையில் கோபமுற்ற கணவன் வீட்டிற்கு வந்ததும் தன் மனைவியுடன் மீண்டும்வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.இதன் காரணமாக மனைவியை விவாகரத்து செய்வது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவன்குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சைக்கான நுழைவுச்சீட்டு அனுப்பும் பணிகள் ஆரம்பம்!!

AL-exam
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு நுழைவுச்சீட்டு அனுப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான நுழைவுச்சீட்டுக்கள் பாடசாலைகளுக்கும், தனியார் பரீட்சார்த்திகளுக்கான நுழைவுச்சீட்டுக்கள் தனிப்பட்ட முகவரிகளுக்கும் நேற்று காலை அனுப்பி வைக்கப்பட்டதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.நுழைவுச்சீட்டுக்களை உடனடியாக மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

நுழைவுச்சீட்டில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அது குறித்து எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னதாக பரீட்சை திணைக்களத்தின் பரீட்சை ஒழுங்கமைப்பு கிளைக்கு அறிவித்து திருத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.

வவுனியா பொலிசாரால் 146 முதிரைப் பலகைகள் பறிமுதல்!!

 
வவுனியா கல்மடு காட்டுப் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்ட146 முதிரைப் பலகைகளை நெளுக்குளம் பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் ஒரு கப் ரக வாகனத்தையும் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்ட்ட சந்தேகநபர் மடுப்பிரதேசத்தில் சின்ன பண்டிவிரிச்சான் பகுதியைச்சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட முத்திரைப் பலகைகளின் பெறுமதி சுமார் நான்கு இலட்சம் பெறுமதியானது என வவுனியா பொலிசார் தெரிவித்தனர். அத்துடன் மரம் வெட்டும் இயந்திரம் ஒன்றும் தங்களால் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த வவுனியா பொலிசார்..

முதிரைப் மரப்பலகைகளை ஏற்றி வந்த கப் ரக வாகனத்தை பொலிசார் மறித்த போது நிற்காமல் சென்றதன் காரணமாக குறித்த வாகனத்தை விரட்டி வந்த பொலிசார் வவுனியா புகையிரதக் கடவையின் வாயில் புகையிரதம் செல்வதற்காக மூடப்பட்ட நிலையில் தப்பித்துச் செல்ல முடியாத நிலையில் குறித்த கப் ரக வாகனம் அதனை ஓட்டிச்சென்ற சாரதி உட்பட முதிரைக்குற்றிகளை கைப்பற்றியதாக தெரிவித்த பொலிசார் முதற்கட்ட விசாரணையில் குறித்த முதிரைப் பலகைகள் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச்செல்ல இருந்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டனர்.

இந் நடவடிக்கையில் நெடுக்குளம் பொலிஸ் அதிகாரி ஏ.எம்.எஸ் அத்தநாயக்க தலைமையிலான கான்ஸ்டபிள்களான வீரசிங்க (34690), ரூபசிங்க (53595), பியந்த(38178), ஜனக (68968), ஜெயதுங்க (20211), நிரோசன்(88567) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

1 IMG_4370 IMG_4372 IMG_4374 IMG_4381 IMG_4384 IMG_4387

வவுனியா கோவில்குளம் ஐயப்பன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா!!

 
வவுனியா கோவில்குளம் ஐயப்பன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று செவ்வாய்க்கிழமை (05.07.2016) முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்வுகளை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் கௌரவ அதிதிகளாக முருகனூர் சாரதா வித்தியாலய அதிபர் திரு பி.நேசராஜா, கோவில்குளம் இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை பிரதி அதிபர் திருமதி ஓங்காரநாதன் அவர்களும் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தார்கள்.

சிறப்பு அதிதிகளாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி எஸ்.சந்திரிக்கா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) சிரேஷ்ட உறுப்பினர் முத்தையா கண்ணதாசன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) மத்தியகுழு இளைஞரணி செயற்பாட்டாளர் சு.காண்டீபன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) பின்லாந்து இணைப்பாளர் சந்துரு மோகன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் த.நிகேதன், அமைப்பாளர் வ.பிரதீபன் , பிற முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப் போட்டி தொடர்ந்து மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள், வினோத உடை நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.

வவுனியா கோவில்குளம் ஐயப்பன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழாவிற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினர் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் கோவில்குளம் இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை பிரதி அதிபர் திருமதி ஓங்காரநாதன் அவர்களினாலும் ஒரு தொகுதி பரிசுப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

IMG_2943 IMG_2946 IMG_2948 IMG_2951 IMG_2956 IMG_2969 IMG_2973 IMG_2988 IMG_3009 IMG_3011 IMG_3014 IMG_3022 IMG_3031 IMG_3039 IMG_3048 IMG_3057

கழுத்தை அறுத்த பொலிஸ் கதையை திசை திருப்புகிறதா: சுவாதி கொலையின் 8 மர்மங்கள்!!

Swathi Murder

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதி வழக்கின், அடுத்தடுத்த நகர்வுகள் விசாரணையின் போக்கையே கேள்விக்குட்படுத்தும் விதமாக ஆகிக்கொண்டிருக்கின்றன.

ராம்குமார் பேசிவிடக் கூடாது என்பதற்காக அவரது கழுத்தை அறுத்தது மட்டுமல்ல, ராம்குமாரின் வாக்குமூலமே சினிமா வசனத்தை மிஞ்சும் வகையில் உள்ளது’ என அதிர்ச்சி கிளப்புகின்றனர் வழக்கறிஞர்கள்.

சுவாதி படுகொலை வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்வதற்காக பொலிஸ் வந்துவிட்ட சூழலை உணர்ந்து கொண்ட ராம்குமார், கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த ராம்குமார், ‘ சுவாதி கொலைக்கும் எனக்கும் தொடர்பில்லை. காவல்துறையினருடன் வந்த நபர்களே கழுத்தை அறுத்ததாக’ தெரிவித்துள்ளதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து சுவாதி கொலை வழக்கில், ராம்குமார் சார்பாக ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியிடம் நாம் பேசிய போது, ” சுவாதி கொலையைப் பொறுத்தவரையில், ஏராளமான சந்தேகங்கள் எழுகின்றன.

ராம்குமார் கொடுத்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலம், பாரதிராஜாவின் சினிமா வசனத்தையே மிஞ்சுகிறது. பொலிஸார் யாரோ ஒருவரைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றவர், வழக்கு தொடர்பாக எழும் சந்தேகங்களை நம்முன் பட்டியலிட்டார்.

1. நெல்லை மருத்துவமனையில் இருந்த போது, நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். பொலிஸார் எழுதிய தாள்களில் ராம்குமார் கையெழுத்துப் போட்டிருக்கிறார். அந்தப் பேப்பரின் இறுதியில், ‘படித்துப் பார்த்தேன் சரி’ என்ற வார்த்தை இருக்கிறது. அந்த இடத்தில் ராம்குமார் கையெழுத்துப் போட்டிருக்கிறார். அந்த வாக்குமூலத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னை வந்ததாகவும், பிரபல ஜவுளிக்கடையில் வேலை பார்த்தாகவும் சொல்கிறார். அப்போது பேஸ்புக் மூலம் சுவாதியின் தொடர்பு கிடைத்ததாகவும் சொல்கிறார். மூன்று மாதத்திற்குள் காதல் உருவாகி, கொலை வரைக்கும் செல்லுமா?

2. அதில், இரண்டு முறை ரயில்வே ஸ்டேஷன் வாசலில் வைத்தே அடித்ததாகவும், தன்னை அவமானப்படுத்தியதால் வாயை வெட்ட வேண்டும் என நண்பர்கள் சொன்னதாகவும், அதன்பேரில் அரிவாளை அவர்கள் கொடுத்ததாகவும் சொல்கிறார். யார் அந்த நண்பர்கள் என எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை. இது ஏன்?

3. சுவாதி உயிரோடு இருக்கக் கூடாது என நினைத்த நபர்கள்தான், ராம்குமாரை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளனர். செங்கோட்டை பகுதியில் மிகுந்த சாதுவான பையனாகத்தான் ராம்குமார் இருந்திருக்கிறார். இவரை சிலர் பயன்படுத்தியிருக்க வாய்ப்பு உள்ளது. அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ளதா?

4. மூன்று மாதங்களுக்கு முன்பு, சுவாதியைக் கொலை செய்ய வேண்டும் என்பதற்காகவே ராம்குமார் சென்னை வந்திருக்க வாய்ப்பு அதிகம். இவருக்குப் பின்னால் இருக்கும் மர்ம நபர்கள் யார்?

5. நள்ளிரவில் கைது செய்யச் சென்றபோது, பிளேடால் ராம்குமார் அறுத்துக் கொள்ளும் காட்சி என ஒரு படம் வெளியானது. கழுத்தில் அறுபட்டிருக்கும் பகுதியில் இன்னும் கொஞ்சம் ஆழமாக வெட்டுப்பட்டிருந்தால், ராம்குமாரால் பேசியிருக்கவே முடியாது. மிகத் துல்லியமாக கழுத்துப் பகுதியில் வெட்டியிருக்கிறார்கள். அவர் பேசவே கூடாது என பொலிஸார் முடிவு செய்தார்களா? அந்த நள்ளிரவில் இந்தக் காட்சியை கமராவில் படம் பிடித்தது யார்?

6. ‘ராம்குமார்தான் குற்றவாளி, வேறு யாருமில்லை’ என கமிஷனர் ராஜேந்திரன் உடனே வெளியிட வேண்டிய கட்டாயம் என்ன? சுவாதியின் பெற்றோரை பேச விடாமல் தடுப்பது யார்?

7. வீடியோ பதிவில், கொலையாளி எனச் சொல்லப்படும் நபரும் ராம்குமாரும் ஒருவர்தான்’ என தடய அறிவியல் துறை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்காத போது, இருவரும் ஒருவர்தான் என்ற முடிவுக்குக் காவல்துறை எப்படி வந்தது?

8. தனியார் மென்பொருள் நிறுவனத்தில், முதன்முதலாக மைசூரில் வேலை பார்த்திருக்கிறார் சுவாதி. கொலைக்கான பின்னணி அங்கிருந்தே தொடங்குகிறதா? மூன்று மாதங்களாக ஒருவர் பின் தொடர்கிறார் என்பது தெரிந்தும் அவரது பெற்றோரின் கவனத்திற்கு இந்த விவகாரம் வரவில்லையா? காவல்துறையில் சுவாதி புகார் தெரிவிக்காதது ஏன்? பி.ஈ படிப்பை பாதியில் நிறுத்திய ராம்குமாரை, இந்தக் கொலைத் திட்டத்திற்காகத் தயார்படுத்தியிருக்கிறார்கள் என வலுவான சந்தேகம் எழுகிறது. சுவாதி உயிரோடு இருக்கக் கூடாது எனத் திட்டமிட்டவர்கள் யார்? –

என வழக்கின் குளறுபடிகளை வரிசைப்படுத்திய வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, இறுதியாக, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரம் இந்தப் படுகொலை அரங்கேறியிருக்கிறது.

இந்த வழக்கில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவை அனைத்திற்குமான விடை வெளியில் வர வேண்டும். இனியும் இதுபோன்ற கொலைகள் நடந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், அரசுக்கு உதவி செய்யவே இந்த வழக்கில் ஆஜராகியுள்ளேன்.

சுவாதி கொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார் உறுதியாக.

-விகடன்-

தந்தையின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத மகன் தூக்கிட்டு தற்கொலை!!

Sucide

தனது தந்தையின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் மகன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் எப்பாவல – கன்டக்குளம பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

49 வயதான இரு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் தந்தை கடந்த 30ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கருமகாரிய நிகழ்வுகள் இன்று இடம்பெறவிருந்தன.

இதற்கான அனைத்து பொருட்களையும் அவர் வாங்கிக்கொடுத்துள்ளார். எனினும், தந்தையின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத அவர், இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முன்னதாக குறித்த நபர் ஒரு வகை உரத்தினை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். எனினும், அது பயனளிக்கவில்லை.

இந்நிலையில், தனது தந்தையின் கல்லறைக்கு அருகிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம்குமார் சுவாதிக்கு எவ்வாறு அறிமுகமானார்!!

Swathi

படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் நாளுக்கு நாள் புதியதும், புதினமானதுமான செய்திகள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.

கடந்த மாதம் 24ஆம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து பொறியியல் பட்டதாரியான சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ராம்குமார் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சுவாதியை ராம்குமாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் குறித்து தற்போது செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

சுவாதிக்கும், ராம்குமாருக்கு எப்படி நட்பு ஏற்பட்டது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவ்விசாரணைகளின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. சுவாதியும், ராம்குமாரும் பேஸ்புக் மூலமாகவே நண்பர்களாகியுள்ளனர். அதன் பின்னரே சுவாதியின் வீட்டிற்கு அருகில் ராம்குமார் தங்கியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸார், ”சுவாதியும், சூர்யபிரகாஷ் என்பவரும் பேஸ்புக்கில் நண்பர்கள்.

அத்துடன், சூர்யபிரகாசும், ராம்குமாரும் பேஸ்புக் நண்பர்கள். இந்நிலையில் சூர்யபிரகாஷ் மூலமாகவே ராம்குமாருக்கு சுவாதியின் நட்பு கிடைத்துள்ளது.

இதேவேளை, சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை பொலிஸார் ஒருவார காலம் தேடிய நிலையிலும் சூர்யபிரகாஷ் அமைதியாக இருந்துள்ளார்.

அத்துடன், சுவாதியின் மற்றொரு நண்பரான முகமது பிலால் சித்திக், என்பவர் பொலிஸாருக்கு பல முக்கிய தகவல்களைத் வழங்கியிருந்தார்.

எனினும், சுவாதியின் பேஸ்புக் நண்பரான சூர்யபிரகாஷ் இதன் போது எந்தத் தகவலையும் எங்களுக்கு வழங்கவில்லை.

எனவே, அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக” பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் ஒரு காதல் விவகாரம் : கழுத்து அறுக்கப்பட்ட இலங்கை அகதிப் பெண்!!

Murder

காதலித்து, பின்னர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை அகதி பெண் ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்வதற்கு முயற்சித்த சம்பவம் ஒன்று தாரமங்கலம் அகதிகள் முகாமில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள பவளத்தானூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.

குறித்த முகாமில் ராஜா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு நிசாந்த் மற்றும் நிஷாந்தினி உள்ளிட்ட நான்கு குழந்தைகள் இருக்கின்றனர்.

நிஷாந்தினி வேலூரில் உள்ள காலணிகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் சந்திரசேகரன் மற்றும் நிஷாந்தினி இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

எனினும், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் முகாமுக்கு திரும்பிய நிஷாந்தினி, அங்குள்ள இலங்கை அகதி மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனை அறித்து கொண்ட சந்திரசேகரன் நிஷாந்தினி வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது வீட்டில் தனியாக இருந்த நிஷாந்தினியிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றியதையடுத்து நிஷாந்தினியை கீழே தள்ளிய சந்திரசேகரன், நிஷாந்தினியின் கழுத்தை அறுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தின் போது வலியால் துடித்த நிஷாந்தினி சத்தமிட, அப்பகுதி இளைஞர்கள் சந்திரசேகரனை சுற்றிவளைத்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அத்துடன், பலத்த வெட்டுக் காயத்துடன் கிடந்த நிஷாந்தினியை மீட்டு சேலம் அரச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்திரசேகரனிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது வாக்குமூலம் அளித்த சந்திரசேகரன் ”நிஷாந்தினி தன்னை காதலித்து விட்டு, தற்போது தனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டபோது சரியாக பேசாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஆத்திரத்தில் அவரின் கழுத்தை வெட்டியதாகவும்” சந்திரசேகர் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரிதாபமாக உயிரிழந்த பிறந்து 13 நாட்களான குழந்தை!!

Baby

பிறந்து பதின்மூன்று நாட்களேயான சிசுவொன்று தாய்ப்பால் குடித்து விட்டு நித்தரை கொண்ட போது திடீரென உயிர் இழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று விடியற்காலை 06.45 மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. குறித்த சிசுவிற்கு சிசுவின் தாய் இரவு பால் ஊட்டி விட்டு தூங்க வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை எழுந்து பார்த்த போது குறித்த குழந்தையின் உடற்பாகங்களில் எவ்வித அசைவுகளும் இல்லாமையால் சிசுவை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் சிசுவை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிசுவின் சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மரண விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எந்தவொரு வெற்றியுமின்றி இங்கிலாந்துடனான தொடரை நிறைவு செய்தது இலங்கை அணி!!

ENG

இலங்கை அணிக்கெதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

சவுத்அம்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 140 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 17.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக தனுஷ்க குணதிலக்க 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் ஜோர்தன் மற்றும் லியாம் டோவ்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

141 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சார்பில் பட்லர் 49 பந்துகளில் 73 ஓட்டங்களைக் குவித்தார். மேலும் அணித்தலைவர் மோகன் 47 ஓட்டங்களையும் குவித்தனர். ஆட்டநாயகனாக பட்லர் தேர்வு செய்யப்பட்டார்.

இதன்மூலம் விளையாடிய எந்தவொரு போட்டியிலும் வெல்லாது இலங்கை அணி இந்த தொடரை நிறைவு செய்துள்ளது.