இலங்கை அணிக்கெதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
சவுத்அம்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 140 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 17.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக தனுஷ்க குணதிலக்க 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் ஜோர்தன் மற்றும் லியாம் டோவ்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
141 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சார்பில் பட்லர் 49 பந்துகளில் 73 ஓட்டங்களைக் குவித்தார். மேலும் அணித்தலைவர் மோகன் 47 ஓட்டங்களையும் குவித்தனர். ஆட்டநாயகனாக பட்லர் தேர்வு செய்யப்பட்டார்.
இதன்மூலம் விளையாடிய எந்தவொரு போட்டியிலும் வெல்லாது இலங்கை அணி இந்த தொடரை நிறைவு செய்துள்ளது.
வவுனியா பொலிஸார் கடமை நேரத்தில் தமது கடமையில் கவனம் செலுத்துவதில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வவுனியா புகையிரத நிலைய வீதி வங்கிகளுக்கு முன் பக்கமாக வாகனங்கள் நிறுத்தத்தடை என பாதாகையிடப்பட்டுள்ள இடத்தில் வாகனங்கள் தரித்து நிற்கின்றன.
இதற்கு முன்பாக போக்குவரத்துப் பொலிசார் கடமையிலிருக்கின்ற போதும் இவ்விடயம் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதில்லை
.
இவ் விடயம் தொடர்பாக தனியார் வங்கியொன்றில் பணிபுரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர் கருத்து தெரிவிக்கையில்..
இவ்வாறு வாகனம் நிறுத்தத்தடை என பாதகையிடப்பட்ட இடத்தில் வாகனங்கள் தரித்து நிற்க்கின்றன. போக்குவரத்துப் பொலிஸார் அப்பாவி மக்களிடம் தேவையற்ற காரணத்தினை கூறி தண்டப்பணம் அறவிடுகின்றனர். ஆனால் தமது கடமையை ஒழுங்காக செய்வதில்லை எனத் தெரிவித்தார்.
நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று இன்று மாலை 4.20 மணியளவில் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் ரதெல்ல குறுக்கு பாதையில் கார்லபேக் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பலந்த காயங்களுக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதியும், அதில் பயணித்த இரு பெண்களும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறே விபத்து ஏற்பட காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக நானு ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானு ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் இவ் விசேட மதிய உணவு வழங்கும் நிகழ்வு நேற்று (04.03.2016) கூமாங்குளத்தில் அமைந்துள்ள ஓர்கன் புதுவாழ்வு பூங்காவில் நடைபெற்றது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) மத்திய கிழக்கு நாடுகளின் இணைப்பாளர்களில் ஒருவரான தோழர் குணா அவர்களின் ஊடாக இவ் விசேட உணவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) சிரேஷ்ட உறுப்பினர் முத்தையா கண்ணதாசன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) மத்தியகுழு இளைஞரணி செயற்பாட்டாளர் சு.காண்டீபன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) பின்லாந்து இணைப்பாளர் சந்துரு மோகன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் த.நிகேதன், அமைப்பாளர் வ.பிரதீபன் மற்றும் ஓர்கன் புதுவாழ்வு பூங்காவின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு, வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லத்தில் 26.06.2016 அன்று முத்தயன்கட்டு வலதுகரை பாடசாலை அதிபரும், வன்னி குறோஸ் கலாச்சாரப்பேரவையின் முல்லைமாவட்ட தலைவருமான சி.நாகேந்திரன் தலைமையில் “கவித்தென்றல் ஏரூர் எழுதிய – இரவுகள் தொலைத்த எழுத்துக்கள்” எனும் கவிதை நூல் வெளியிட்டுவிழா நடைபெற்றது.
இன் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கலந்து கொண்டு கவிதையின் முதல் பிரதியினை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நூல் வெளியிட்டு விழாவில் பெறப்பட்ட நிதியினை வள்ளிபுனம் இனிய வாழ்வு சிறார்களின் நலனுக்காக முகாமையாளர் திருச்செல்வத்திடம் வன்னி எம்.பி சி.சிவமோகன் அவர்கள் அதனை கையளித்தார்.
இந்நிகழ்வில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கவிஞர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா போகஸ்வேவ, தந்திரிமலை போன்ற பகுதியில் நேற்று மாலை புதையல் தோண்டிய பெண் உட்பட ஏழு பேரை நாமல்கம பொலிசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா போகஸ்வேவ தந்திரிமலை நந்தமித்தகம பகுதியிலுள்ள கற்பகுதிகளுக்கு அருகில் நேற்று மாலை புதையல் தோண்டுவதாக பொலிசாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பெண் உட்பட எழுபேரை நமக்கம பொலிசார் கைது செய்துள்ளனர்.
புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கில் என்பனவற்றை பொலிசார் கைப்பற்றி இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தியபோது எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் அணிக்கு 8 பேர் கொண்ட 6 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு விளையாட்டுக் கழகங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
ஒரு கழகத்தில் இருந்து எத்தினை அணிகளும் பங்கு கொள்ளலாம். பங்குகொள்ள விரும்புவோர் 15.07.2016 க்கு முதல் உங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்
வெற்றி பெரும் அணிகளுக்கு பெறுமதிமிக்க வெற்றிக் கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கப்படும்.
இச் சுற்றுப் போட்டிக்கு வவுனியா நெற் இணையம் ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாதி கொலையில் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ள ராம்குமார், தான் தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை என்றும், காவல்துறையினர்தான் தன் கழுத்தை அறுத்ததாகவும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த 24ம் திகதி சூளைமேட்டை சேர்ந்த மென்பொறியாளர் சுவாதி என்பவர், மர்ம நபரால் கழுத்தில் வெட்டப்பட்டு கொலையானார்.
இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரி, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் கைதுசெய்யப்பட்டார்.
கைது முயற்சியின்போது, அவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
சிகிச்சைக்குப்பின் சென்னை கொண்டுவரப்பட்ட ராம்குமார், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ராம்குமாரின் சார்பாக இன்று பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
ராம்குமாரின் வழக்கறிஞர் தாக்கல் செய்த அந்த மனுவில், தனக்கும் சுவாதியின் கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தெரிவித்துள்ள ராம்குமார், கைது செய்யப்பட்டபோது தான் தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை என்றும், காவல்துறையினருடன் வந்தவர்கள்தான் தன்னை பிளேடால் கழுத்தை அறுத்ததாகவும் சொல்லியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ராம்குமாரின் வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, “ கொலை சம்பவத்துக்கு முன், 2 நாட்களுக்கு முன்பே சுவாதியை யாரோ தாக்கியதாக கூறப்படுகிறது.
சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை.
போலிசாருடன் சென்ற நபர்கள்தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்துள்ளனர். உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே எங்கள் கட்சிக்காரர் மீது பொலிஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
உயர் நீதிமன்றம் 2 நாட்கள் கெடு விதித்ததால் கைது செய்துள்ளனர் என்று கூறினார்.
சுவாதி கொலையில் பல சட்ட முரண்கள் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், ராம்குமாரின் வழக்கறிஞர் அளித்த இந்த பேட்டி பரபரப்பை கிளப்பியுள்ளது.
வவுனியா பொருளாதார மத்திய நிலைய அமைவிடம் தொடர்பான பிரச்சனைக்கு விளக்கமளித்து வடமாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா அனுப்பிவைத்துள்ள அறிக்கை வருமாறு..
இ.இந்திரராசா
மாகாண சபை உறுப்பினர்
வடமாகாண சபை
எனது அன்பிற்குரிய,
கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களே!
கௌரவ மாகாண சபை உறுப்பினர்களே!
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைய வேண்டும்.
வவுனியாவில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமையவேண்டுமா? அல்லது தாண்டிக்குளத்தில் அமையவேண்டுமா? என்பது மிக முக்கிய பேசு பொருளாக அமைந்துள்ளதை தாங்கள் அறிவீர்கள்.
வேறு எந்தப் பிரச்சினைக்கும் கொடுக்காத முக்கியத்துவம் ஒரு சாதாரண விடயத்துக்காக ஏன் வழங்கப்படுகின்றது என்பது வியப்பாக உள்ளது.
இது பற்றி நீண்ட உரையாடல்கள் நிபுணர்குழு அறிக்கைகள் கலந்தாலோசிக்கப் பட்டிருந்தபோதும். உறுதியான முடிவை எடுக்கமுடியாத துர்பாக்கிய நிலையில் உள்ளோம். ஆதலால் இது பற்றி தெளிவுபட வேண்டிய தேவையுள்ளது.
15.10.2010ல் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் விவாதிக்கப்பட்டு ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அக் கூட்டத்தில் இணைத் தலைவர்களாக அமைச்சர் கௌரவ றிசாட் பதியுதீன் கௌரவ ஆளுநர் சந்திரசிறி மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ந.சிவசக்திஆனந்தன், கௌரவ அ.அடைக்கலநாதன், கௌரவ நூர்தீன் மசூர் கௌரவ ஹுனைஸ் பாறுக், கௌரவ லிங்கநாதன் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், உயர் அரச அதிகாரிகள் என 82 பேர் கலந்து கொண்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் வவுனியாவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் கூடி கலந்துரையாடி பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமையவேண்டும் என்பதை உறுதி செய்து முதலமைச்சரிடம் தெரிவிப்பதற்காக மறுநாள் அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தோம்.
அக் குழுவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ந.சிவசக்தி ஆனந்தன், கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், கௌரவ சாந்தி சிறீஸ்கந்தராஜா, கௌரவ செல்வம் அடைக்கலநாதன் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வினோநோகதாரலிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ லிங்கநாதன், கௌரவ ம.தியாகராசா, கௌரவ M.P.நடராஜ், கௌரவ அமைச்சர் ப.சத்தியலிங்கம் சார்பாக அவரது பிரத்தியேக செயலாளர் திரு ப.சத்தியசீலன் மற்றும் வர்த்தக சங்க பிரமுகர்கள் உட்பட நானும் கலந்துகொண்டிருந்தேன்.
30.06.2016ல் மீள்குடியேற்ற அமைச்சர் கௌரவ சுவாமிநாதன் மற்றும் கௌரவ முதலமைச்சர் கலந்து கொண்ட சிதம்பரபுர மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய கௌரவ அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள் “பொருளாதார மத்திய நிலையத்திற்கான நிதி திரும்பி போய்விடக்கூடாது என்ற ஆதங்கத்தில்; தாண்டிக்குளத்தில் அமையவேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுவந்தேனேயன்றி ஓமந்தையில் இது அமையுமாக இருந்தால் வரவேற்பேன் என்றும் அதுதான் எமது முதல் தெரிவும்” என பொருள்பட உறுதியாக கூறியிருந்தார்.
இத்தகைய உறுதிப்படுத்தல்களுக்கு பின்பும் 03.07.2016ல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் ஐயா தலைமையில் கூடிய வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை அமைச்சர்கள் கூடிய கூட்டத்தில் ஒரு முடிவும் எட்டப்படாமல் போனமையும் வாக்கெடுப்புக்கு விடத் தீர்மானித்தமையும் கவலைக்குரிய விடயங்கள்.
பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத் தெரிவில் முதலமைச்சர் அவர்கள் தன்னிச்சையாக ஓமந்தையை தெரிவு செய்யவில்லை. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தீர்மானம் வன்னிமாவட்ட பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களின் தீர்மானம், நிபுணர் குழு அறிக்கைகள் மற்றும் விவசாய உற்பத்திச் சங்கங்களின் கோரிக்கை என்பனவற்றிற்கு அமைவாகவே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
ஆகவே இத் தீர்மானத்தை மலினப்படுத்தி முதலமைச்சரை சங்கடப்படுத்தாமல் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தீர்மானத்திற்கமைவாகவும் மக்களதும் மக்கள் பிரதிநிதிகளதும் அபிலாசைகளை புரிந்து கொண்டும் தாங்கள் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
பிரித்தானியாவில் வீடு ஒன்றில் உலாவும் பேயை பெண் ஒருவர் புகைப்படம் எடுத்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1924ம் ஆண்டு தேம்ஸ் (Thames) பகுதியில் கட்டப்பட்ட வீடு ஒன்றில் அமானுஷ்ய நிகழ்வுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ஆக்ஸ்போர்டுசையர் (Oxfordshire) நகரை சேர்ந்த மைக்கில் மோரிஸ் (Michelle Morris Age-42) என்ற அமானுஷ்ய ஆய்வாளர் அவ்வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் விளக்கமுடியாத செயல்கள் மற்றும் அழுகை சத்தங்கள் அதிகளவில் கேட்டுள்ளது. எனவே வீட்டின் வெளியில் இருந்தபடியே அவர் எடுத்த புகைப்படத்தில், ஜன்னலின் ஓரம் பேய் நின்றிருப்பது புலப்பட்டுள்ளது.
இதுகுறித்து மைக்கில் மோரிஸ் கூறுகையில், அந்த வீட்டில் வாழ்ந்த பாட்டி ஒருவர் குழந்தை ஒன்றை வளர்த்துள்ளார் என்றும் அந்த குழந்தை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து இறந்ததால், அந்த பாட்டியும் தனது இறப்பிற்கு பிறகு அங்கேயே உலாவுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் இப்போது கிடைத்திருக்கும் புகைப்படம் தனது ஆய்விற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் ராமர் பாலத்தை கட்ட பயன்பட்ட மிதக்கும் கற்கள் என்றழைக்கப்படும் நீரில் மூழ்காத பாறைகள் காணகிடைக்கின்றன. தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ள சுண்ணாம்பு கற்களால் அமைந்துள்ள பாலத்தினை ராமர் பாலம் என்று அழைக்கின்றனர்.
ராமாயணம் என்ற இந்துக்களின் புகழ்பெற்ற புராணத்தில், இலங்கையைச் சேர்ந்த ராவணன் சீதையை கடத்தி சென்றதையடுத்து, ராமன் சீதையை கடல் கடந்து காப்பாற்ற மண், மிதக்கும் கற்கள் மற்றும் மரங்களை கொண்டு ஆஞ்சநேயர் மற்றும் வானரங்களால் கட்டப்பட்ட பாலம் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நாசா அமைப்பு விண்வெளியில் இருந்த புகைப்டத்தில் தெளிவாக தெரியும் இந்த பாலத்தினை இந்துக்கள் ராமர் பாலம் என்றே நம்பி வருகின்றனர். இந்த பாலத்தில் நடத்தப்பட்ட பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் முடிவுகளில் இது 3500 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்று சிலரும், பலர் இது மனிதர்களால் கட்டப்பட்டது அல்ல என்றும் கலவையான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் கிடைக்கும் சில அரிய வகை பாறைகள் தண்ணீரில் மிதக்கும் தன்மையை பெற்றுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.தீவு நகரமான ராமேஸ்வரத்தில் உள்ள துளசி பாபா மடத்தில் இந்த மிதக்கும் பாறைகள் உள்ளன.‘ அந்த மடத்தில் ஒரு தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு பாறைகளை மிதக்க விட்டிருக்கின்றனர். மேலும், ராமர் சீதையை மீட்க கட்டிய பாலத்தை கட்ட பயன்படுத்திய கற்களாக இது இருக்கலாம் என்று பெரும்பாலான மக்களால் நம்பப்படுகிறது.
எனவே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த கனமான கற்களை தங்கள் கைகளால் தூக்கி பார்க்கின்றனர். பின்னர் அதனை தங்கள் கைகள் நீரில் விடும்போது அது முழுகாமல் மிதப்பதை கண்டு வியப்பில் மெய்சிலிர்த்து போகின்றனர்.
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் (04.07.2016)சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் திங்கட்கிழமைகொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது .
மேற்படி உற்சவத்தில் 11.07.2016 அன்று பொங்கல் உற்சவம் நடைபெற்று 12.07.2016 அன்று வைரவர் மடையுடன் நிறைவுபெறவுள்ளது.
தினமும் கண்ணகை அம்மன் ஏடு வாசிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளதுடன் தினமும் அன்னதானமும் வழங்கப்படவுள்ளது. பக்த அடியார்கள் அனைவரையும் கலந்துகொண்டு கண்ணகை அம்மனின் அருளைப் பெற்றுய்யுமாறு ஆலய பரிபாலன சமையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ரியோ ஒலிம்பிக் மகளிருக்கான போட்டியில் இரு திருநங்கைகள், மகளிருடன் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.இந்த வருடத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் திருநங்கைகளை தேர்ந்தெடுப்பது இதுவே முதல் முறையாகும்.இவர்கள் இருவரும் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் என்றும், மகளிருக்கான குழுவில் கடும் எச்சரிக்கையுடன் இவர்களுக்கு இடமளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியா பிரதிநிதிகளான இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக திருநங்கைகளாகவே இருந்துள்ளார்கள் என திருநங்கை டேல்யா ஜான்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.திருநங்கைகளின் இனம் பற்றி தனக்கு நன்றாகவே தெரியும், இருப்பினும் ஏளனம் நிறைந்த உலகில் இவர்களின் திறமையை நிரூபிக்க வேண்டும் என டேல்யா ஜான்ஸ்டன் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, விளையாட்டு வீரர்களின் testostreone Hormone அளவுகளை நிரூபித்து காட்ட வேண்டும், முன்னதாக திருநங்கை ஒன்று விளையாட்டில் ஈடுப்பட வேண்டுமாயின் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் ஆனால் தற்போது புதிய சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு இந்த சிகிச்சை அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளது.
800 மீற்றர் உலக சாம்பியன் ஓட்டப் போட்டியில்,தென் ஆபிரிக்கா வீராங்கனையான செமன்யா வெற்றி பெற்றதனைத் தொடர்ந்து பால் நிலை தொடர்பான சர்ச்சை ஏற்பட்டது, இந்த நிலையில் சோதனை மேற்கொண்ட போது இவர் ஒரு பெண் என நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிக்க வந்த சில நாட்களிலேயே விஜய்யுடன் ஜோடி சேர்ந்து விட்டார் கீர்த்தி சுரேஷ். இவர் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் கடந்த வருடத்திற்கான சிறந்த புதுமுக நடிகை என்ற விருதை வென்றார்.
இவர் ஒரு பேட்டியில் பேசுகையில் ‘சினிமாவின் என் ரோல்மொடல் நயன்தாரா தான், அவர் இன்றும் தென்னிந்தியாவிலேயே தான் நடித்து வருகிறார்.அவரை போலவே பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தாலும் நான் செல்ல மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு சேனலில் பேட்டியளித்த இவர் ‘என் மகளுக்கு ரெமோ டீசர் மிகவும் பிடித்தது.
தினமும் என்னிடம் கேட்பாள், அந்த அம்பு உங்கள் மீது பட்டவுடன் ரெமோ ஆண்டியாக மாறிடுவீங்களாப்பா என்று, எனக்கு பதில் என்ன சொல்வதென்றே தெரியாது’ என சிவகார்த்திகேயன் கலகலப்பாக பேசியுள்ளார்.