மீண்டும் காதலில் விழுந்த எமி ஜாக்ஸன்!!

amy-jackson-biography
மதராசபட்டிணம் படத்தின் மூலம் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் எமி ஜாக்ஸன்.சமீபத்தின் கேன்ஸ் பட விழாவுக்கு சென்றவருக்கு பிரான்சின் பிரபல தொழிலதிபரான ஜீன் பெர்னார்ட் என்பவருடம் பழக்கம் ஏற்பட்டதாம்.கேன்ஸ் விழா முடிவடைந்து ஒரு மாதம் ஆன நிலையில் இருவரும் சேர்ந்து ஒன்றாக ஊர்சுற்றி வருவதாக முணுமுணுக்கப்படுகிறது.

இதற்கு முன்பு ஹாலிவுட் நடிகர் ப்ரதீக் பாபர், அடுத்து பாக்ஸர் ஜோ சில்க்ரிக் ஆகியோருடன் டேட்டில் இருந்தவர் கடைசியாக 22 வயது நடிகரான ரியான் தாமஸுடன் ஆறு மாதகாலம் சேர்ந்து வாழ்ந்து பிரிந்தார்.ஜீன் பெர்னார்டுக்கு இது இரண்டாவது காதல். பிரபல பிரான்ஸ் பாடகி செரில் கோலின் முன்னாள் கணவர் தான் ஜீன் பெர்னார்ட்.

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை!!

school-closed-chalkboard

வரவிருக்கும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 7ம், 8ம் திகதிகளில் நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும், இதன்பொருட்டு ஆகஸ்ட் 15ம், 16ம் திகதிகளில் குறித்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி தவறுதலாக வெடித்து வன பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு!!

1 (58)

ஹம்பாந்டே்டை, வல்சபுகல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவருடன் போராடும் போது, உத்தியோகபூர்வ துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் வன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை, சிலர் சட்டவிரோதமாக மிருக வேட்டையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலை அடுத்து சந்தேகநபர்களை கைது செய்வதற்காக 05 பேர் கொண்ட வன பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் சென்றுள்ளனர்.

இதன்போது தப்பிக்க முயற்சித்த சந்தேகநபர் ஒருவரை தடுக்க போராடிய வன பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளது.இதில் காயமடைந்த வன பாதுகாப்பு அதிகாரி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக எமது அத தெரண செய்தியாளர் கூறினார்.48 வயதுடைய கிரம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.அத்துடன் உயிரிழந்த நிலையில் வேட்டையாடப்பட்ட மான் ஒன்றும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திரஜித் குமாரசுவாமியின் நியமனத்துக்கு எதிர்ப்பு!!

DR.Indrajith-Kumaraswamy-receives-letter-of-appointment-620x310

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டதை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின், முக்கிய தலைவர்களான விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நியமனத்தை கண்டித்துள்ளனர்.இது குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ள, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ, இந்த நியமனத்தின் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

விடுதலை புலிகள் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து வந்த அமெரிக்காவில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ராஜ் ராஜரத்தினம் எனும் நபருக்கு சொந்தமான நிறுவனமொன்றில் இந்திரஜித் குமாரசுவாமி ஆலோசகராக பணிபுரிந்ததாக விமல் வீரவன்ஸ குற்றம்சாட்டியுள்ளார்.எனவே, அவரை மத்திய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டதை கண்டிப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கருத்துக்களை தெரிவித்த போது, பிரிவினைவாதிகளுடன் இணைந்து செயல்பட்ட ஒரு நபரிடம் தேசிய பொருளாதாரத்தின் கேந்திர தானமாக கருதப்படும் மத்திய வங்கியை கையளிப்பதை அனுமதிக்க முடியாதென்று தெரிவித்தார்.இதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல, தேசிய பாதுகாப்பிற்கும் அச்சறுத்தல் ஏற்படுமென்றும் அவர் எச்சரித்தார்.

இதிரஜித் குமாரசுவாமி இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே மேற்கொள்ளப்படவுள்ள பொருளாதார ஒப்பந்தத்தை உருவாக்கும் முக்கிய பணிகளை மேற்கொள்ளும் ஒரு நபரென்று குற்றம்சாட்டிய உதய கம்மன்பில இந்த நியமனத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரம், மேலும் ஆபத்தை சந்திக்குமென்றும் எச்சரித்தார் என, பிபிசி செய்திகள் குறிப்பிடுகின்றன.

இரு பிள்ளைகளின் தாயாரான சுகாதார உத்தியோகத்தர் டெங்கினால் மரணம்!!

1 (5)

சமூக சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி மாநகர சபையின் சமூக சுகாதார உத்தியோகத்தரான 38 வயதுடைய அனுஷ தம்பதேனிய என்ற இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

கடந்த மாதம் 25 ஆம் திகதியில் இருந்து தொடர் காய்ச்சலினால் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற டெங்கு நிகழ்ச்சித்திட்டத்தில் குறித்த நபர் பங்கு பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு!

shutterstock_278803553
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரிசி, மரக்கறி, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் துரித கதியில் உயர்வடைந்துள்ளதனால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோ 75 ரூபா, சாதாரண சம்பா அரிசி ஒரு கிலோ 90-100 ரூபா வரையிலும், தரமான சம்பா அரிசி ஒரு கிலோ 120 முதல் 145 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

சீனியின் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்கின்றது. ஒரு கிலோ சீனியின் சில்லறை விலை 120 மதல் 125 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் சீனிக்கு 30 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மரக்கறி வகைகளின் விலைகளும் அண்மைக் காலமாக உயர்வடைந்து செல்வதனால் மக்கள் மரக்கறி நுகர்வினை குறைத்துக் கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவில் இன்று 94 வது கூட்டுறவாளர் தினப் போட்டிகள்!!

COPE

சர்வதேச கூட்டுறவாளர்களை கௌரவப்படுத்தும் முகமாகவும், எதிர்கால சந்ததியினரிடையே கூட்டுறவை வளர்க்கும் நோக்குடனும் வருடாவருடம் இக் கூட்டுறவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் முல்லை மாவட்ட கூட்டுறவு சபையினரால் 2016 ம் ஆண்டுக்கான, மாவட்ட மட்ட கலை இலக்கியப் போட்டிகள் இன்று காலை 09.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.

ஒட்டுசுட்டான், மு/கற்சிலைமடு அ.த.க பாடசாலையில்.. முல்லை மாவட்ட கூட்டுறவு சபைத் தலைவர் வீ.சர்வானந்தராசா அவர்களின் தலைமையில் இப் போட்டிகள் நடைபெறும்.

பிரதம விருந்தினராக முல்லை மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு உ.சுபசிங்க அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளாக இவை அமையவுள்ளன. ஏற்கனவே முல்லை மாவட்டத்திற்குட்பட்ட கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலாக இப் போட்டிகள் நடைபெற்றிருந்தன.

கோட்ட மட்டத்தில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள் இன்று மாவட்டமட்ட போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். கோட்ட மட்டத்தில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் இன்று வழங்கப்படும்.

இன்று நடைபெறும் மாவட்டமட்ட போட்டிகளுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் தொடர்ந்து நடாத்தப்பட இருக்கின்ற.. ‘மாவட்டமட்ட கூட்டுறவாளர் விழாவில்’ மாணவர்களுக்கு வழங்கிக் கொரவிக்கப்படும்.

– வே.முல்லைத்தீபன்-

நண்பர்களுக்காக உயிரை தியாகம் செய்த இளைஞன்!!

Bangaladesh

நண்பர்களுக்காக உயிரை தியாகம் செய்வது போன்ற சம்பவங்களையும், காட்சிகளையும் சினிமாவில் நாம் அனேகமாக பார்த்திருப்போம். ஆனால் தன் நண்பர்களுக்காக தன் உயிரயே மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரம் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள உணவகம் ஒன்றினை தீவிரவாதிகள் முற்றுகையிட்டதனை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

இதன் போது சுமார் 20 பேர் வரை தீவிரவாதிகளினால் கொல்லப்பட்டனர். இதில் பணயக் கைதிகளாக பிடிபட்டிருந்த 18 பேரை அந்நாட்டு அதிரடிப்படையினர் உயிருடன் மீட்டனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களில் 9 இத்தாலியர்கள், 7 ஜப்பானியர்கள், இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள், அமெரிக்கர் ஒருவரும், ஒரு இந்தியரும் அடங்குகின்றனர்.

இந்நிலையில், உணவகத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து பணயக் கைதியாக இருந்த ஒருவர் இவ்வாறு விவரித்துள்ளார்.

உணவகத்தை முற்றுகையிட்ட தீவிரவாதிகள் “நாங்கள் உள்ளூர் நபர்களை கொல்லப்போவதில்லை. வெளிநாட்டவர்களை மட்டுமே கொல்லப்போகிறோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

வெளிநாட்டவர்களை கொலை செய்த போதும் தீவிரவாதிகள், உள்ளூர் மக்களிடமும், உணவக ஊழியர்களிடமும் பரிவுடன் நடந்து கொண்டனர்.

இதன் போதே அனைவரினது மனதையும் நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று அந்த உணவகத்தில் அறங்கேறியுள்ளது.

தனது நண்பர்களையும், பிற பணயக்கைதிகளையும் விட்டு வெளியே செல்ல முடியாது எனக் கூறிய இளைஞர் ஒருவரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

ஃபாராஸ் ஹூசைன் என்ற உயிரிழந்த அந்த இளைஞர் பங்களாதேஷ் பிரஜையாவார். ஃபாராஸ் ஹூசைன் அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருக்கின்றார்.

சம்பவம் இடம்பெற்ற போது அவருடன் மேற்கத்திய கலாச்சார உடையில் இரு பெண்களும் அந்த உணவகத்தில் இருந்துள்ளனர்.

ஃபாராஸ் ஹூசைன் ஒரு பங்களாதேஷ் இஸ்லாமியர் என தெரிந்ததும், தீவிரவாதிகள், அவரை வெளியே செல்ல அனுமதித்தனர்.

எனினும், அருடன் இருந்த பெண்கள் வெளிநாட்டவர் என்பதை அறிந்த தீவிரவாதிகள் குறித்த இரு பெண்களையும் பணயக்கைதிகளாக பிடித்துக்கொண்டனர்.

இதன் காரணமாக, தீவிரவாதிகள் வெளியே செல்ல அனுமதித்த போதும், ஃபாராஸ் ஹூசைன் வெளியே செல்லவில்லை.

தனது நண்பர்களையும், பணயக்கைதிகளையும் விடுவித்தால் மட்டுமே தான் வெளியில் செல்வேன் என கூறி ஃபாராஸ் ஹூசைன் உணவகத்தின் உள்ளேயே இருந்துள்ளார்.

இறுதியில் தீவிரவாதிகளினால் கொல்லப்பட்ட 20 பேரில் ஃபாராஸ் ஹூசைனும் ஒருவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலை செய்யும் முடிவில் வெட்டவில்லை : கண்ணீர் விடும் ராம்குமார்!!

Ramkumar

தான் கொலை செய்ய வேண்டும் என்ற முடிவில் வெட்டவில்லை என சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த மாதம் 24ம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து பொறியியல் பட்டதாரியான சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் இடம்பெற்று ஒரு வாரம் கடந்த நிலையில் சந்தேகநபரான ராம்குமாரை பொலிஸார் கைது செய்தனர்.

தான்கைது செய்யப்பட போவதை அறிந்துகொண்ட ராம்குமார் தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில் தற்போது ராயப்பேட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சை பெற்றுவரும் ராம்குமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது நீதபதி முன்னிலையில் சாட்சியமளித்த ராம்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ”சுவாதி என்னை தேவாங்கு என இழிவுபடுத்தியதால் ஒரு முறைதான் வெட்டினேன்.

அதுவும் கொலை செய்யும் முடிவில் சுவாதியை வெட்டவில்லை. வெட்டிய போது உடனே கத்தியை என்னால் இழுக்க முடியவில்லை.

சற்று சிரமப்பட்டு இரண்டு முறை இழுத்தேன். அதில்தான் சுவாதி உயிரிழந்திருக்கலாம். நான் தெரியாமல் செய்துவிட்டேன். என்னை விட்டுவிடுங்கள் என நீதிபதி முன்னிலையில் கண்ணீர் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் கொடியேற்றம் நாளை!!

Kathirkamam

மூவின மக்களும் தரிசிக்கும் புனித பூமியான கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி வரை இடம்பெறும் உற்சவ நிகழ்வுகள் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

கதிர்காமம் உற்சவத்தினை முன்னிட்டு, யால காட்டினூடாக 50 ஆயிரம் முதல் 90 ஆயிரம் அடியார்கள் பக்தி பூர்வமாக கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்கின்றனர்.

ஆலய கொடியேற்றல் நிகழ்வு நாளை காலை கதிர்காமத்தின் பால்குடி பாவா பள்ளிவாசலில் பச்சை நிறத்திலான கொடியினை வைத்து இஸ்லாமிய மதப் பெரியார்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.

பின்னர் அதற்கு சந்தனம் பூசி ஆகம முறைப்படி பாரம்பரிய இசையுடன் பள்ளிவாசலை வலம் வந்து, பிரார்த்தனை இடம்பெறுவதை தொடர்ந்து அனைத்து மத தலைவர்களுடன் கதிர்காம ஆலய கப்புறாளையுடன் கொடியேற்றப்படும்.

இந்நிலையில், கதிர்காம உற்சவத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ரயில் மற்றும் பஸ்கள் விசேட சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், பக்தர்களின் பாதுகாப்பு கருதி பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புனிதப் பிரதேசத்தில் விசேட அனர்த்த முகாமைத்துவ திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.

கதர்காமம் ஜூம்ஆப் பள்ளியின் கொடியேற்றம் நாளை மாலை கதிர்காமம் ருஹணு மகா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே டி.பி. குமாரகேயினால் முன்னெக்கப்படவுள்ளது.

இதேவேளை, சட்ட விரோத செயல்கள், வியாபாரம் மற்றும் வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கும் பொலிஸார் விசேட திட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

6 வயதுச் சிறுமி கொலை வழக்கு : சந்தேகநபரின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

11

தமிழகத்தில் அண்மைய நாட்களில் இடம்பெறும் கொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுவாதி, வினுப்பிரியாவை தொடர்ந்து சேலம், தெலுங்கனூர் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை காணமல் போன குறித்த சிறுமி, அயல் வீட்டில் மூடி வைக்கப்பட்ட சமயல் பாத்திரம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் அதேபகுதியினை சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் போது பொலிஸாரையே அதிர வைக்கும் சில தகவல்களை சந்தேகநபர் கூறியுள்ளார்.

பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய சந்தேகநபர் ” தனக்கு நெருக்கமான சிலர் தன் கண் முன்னே பாலியல் தொழிலில் ஈடுபட்டனர்.
சிறுவயது முதல் அதையே பார்த்து வளர்ந்ததால், தனக்குள்ளும் இப்படியான எண்ணங்கள் தானாகவே தோன்றியது.

அத்துடன் சில குடும்ப பெண்களிடம், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தானும் பாலியல் இச்சையில் ஈடுபட்டதாக குறித்த சிறுவன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அந்த பகுதி மக்கள், “சிறுவனுக்கு 18 வயது ஆகிவிட்டது. கடந்த ஆண்டு பாடசாலையில் சக மாணவனிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளான்.

இதனால் ஊருக்குள் வருவதற்கு சிறுவனுக்கு தடை விதித்திருந்தோம். 9 மாதங்களுக்கு பின்னர் ஊர் திரும்பிய நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளான்.

மேலும், குறித்த சம்பவத்தில் சிறுவனின் தாத்தாவுக்கும் தொடர்பு இருப்பதாக அந்த பகுதி மக்கள் கூறியுள்ளார்.

எனவே, சிறுவனின் தாத்தாவையும் கைது செய்யுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை, சிறுவனின் தாயார் 2 லட்சம் பணம் தருவதாக கூறி சிறுமியின் பெற்றோரை மிரட்டியுள்ளதாகவும் கூறியுள்ளனர்”.

இதேவேளை, சந்தேகநபரான சிறுவனின் வீட்டில் பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளின் போது 11 கையடக்க தொலை பேசிகளையும், 35 மெமரி கார்ட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள அனைத்து மெமரி கார்ட்டுகளிலும் ஆபாச படங்களே இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

12 13

சுவாதி கொலையில் விலகாத மர்மங்கள்!!

Swathi Murder

காதலை நிராகரித்ததுதான் காரணமா?

சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி எனக் கருதப்படுபவர் கைதுசெய்யப்பட்டாலும் கூட, இந்தக் கொலைக்கான காரணம் முழுமையாக வெளிவராததாலும், பல தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாலும் மர்மங்கள் இன்னும் நீடிக்கின்றன.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24ம் திகதி காலை 6.30 மணியளவில் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். பொலிஸுக்கு பெரும் சவாலாக மாறிய இந்த வழக்கில், கொலை நடந்து எட்டு நாட்களுக்குப் பிறகு, நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரைப் பொலிஸார் கைதுசெய்தனர்.

காதலால் அரியர்ஸ்!

ராம்குமார் குறித்து அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் விசாரித்த போது “ராம்குமாரின் தந்தை பரமசிவன், தென்காசி பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ஊழியர். ராம்குமார், ப்ளஸ் 2 முடித்துவிட்டு ஆலங்குளத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பி.இ மெக்கானிக் படித்தார்.

படித்தபோது கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவியை ராம்குமார் ஒருதலையாகக் காதலித்துள்ளார். அதனால் படிப்பில் கோட்டை விட்டார். சில வருடங்களுக்கு முன்பு ஊரில் ஒரு பெண்ணுக்கும் ராம்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, ஊர் பஞ்சாயத்துவரை போனது.

பொறியியல் படிப்பில் பல பாடங்களில் அரியர்ஸ் இருந்ததால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு ஒரு வருடத்துக்கு முன்பு சென்னை சென்ற ராம்குமார், அங்கு ஐவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்துள்ளார்” என்கிறார்கள் மீனாட்சிபுர மக்கள்.

ஐ.பி.எஸ். ஆசை!

வங்கியில் கல்விக்கடன் பெற்று இன்ஜினீயரிங் படித்த ராம்குமாருக்கு ஐ.பி.எஸ் அதிகாரியாக ஆகவேண்டும் என்பது லட்சியமாக இருந்துள்ளது.

அவர் படித்த பொறியியல் கல்லூரி பயோடேட்டாவில், தன்னுடைய லட்சியம் ஐ.பி.எஸ் அதிகாரியாக ஆகவேண்டும் என்பதுதான் என்று ராம்குமார் குறிப்பிட்டுள்ளார்.

ராம்குமாருக்கு அமைதியான குணம். யாரிடமும் அதிர்ந்து கூடப் பேச மாட்டார். அவர் கொலை செய்ததாகக் கூறப்படும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னைக்குச் சென்றார். அங்கு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர் வேலைக்குச் சென்று இரண்டு தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைத்துக் குடும்பத்தையும் நல்ல நிலைக்குக் கொண்டு வருவார் என்று நாங்கள் எல்லாம் கனவுகண்டோம்.

அந்தக் கனவு தகர்ந்துவிட்டது. ஆனால், அவர் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டுள்ளது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது” என்றார், ராம்குமாரின் உறவினர் அப்துல்லா.

பழக்கம் ஏற்பட்டது எப்படி?

சுவாதிக்கும் ராம்குமாருக்கும் எப்படி அறிமுகம் ஏற்பட்டது என்பது பற்றி மாறுபட்ட தகவல்கள் சொல்லப்படுகின்றன.

சூளைமேடு தெற்கு கங்கையம்மன் தெருவில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் சுவாதியின் வீடுள்ளது. சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன், இ.எஸ்.ஐ-யில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

சுவாதியின் வீட்டில் இருந்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் இரண்டு கி.மீ தூரத்தில் உள்ளது.“ராம்குமார் தங்கி இருந்த மேன்ஷன் வழியாகத்தான் ரயில் நிலையத்துக்கு சுவாதி செல்வார். அப்போது சுவாதியை ராம்குமார் தினமும் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

அனைவரிடமும் சகஜமாகப் பழகும் குணமுடைய சுவாதியிடம் ராம்குமார் பேசியுள்ளார். இந்தப் பேச்சு தொடர்ந்துள்ளது. ஒருநாள், சுவாதியிடம் ராம்குமார் காதலை வெளிப்படுத்த, கடுமையான வார்த்தைகளால் சுவாதி திட்டியிருக்கிறார்.

அந்தக் கோபத்தில் சுவாதியின் வாயில் காயம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே வெட்டியிருக்கிறார். அது கொலையில் முடிந்திருக்கிறது’’ என்று போலீஸ் தரப்புச் சொன்னது.

செல்பி இரகசியம்!

2012-ல் ராம்குமார் தன் பேஸ்புக் பக்கத்தில், ‘அழகான உருவத்தைவிட அழகான நடத்தையே மிக நல்லது’ என்று ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

ராம்குமாருக்கும், சுவாதிக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் பொலிஸுக்கு உள்ளது. அந்த நட்பு மூலம் சென்னைக்கு வந்த ராம்குமாருடன் சுவாதி பழகியிருக்கலாம் என்றும், பிறகு ராம்குமாரைப் பிடிக்காமல் போயிருக்கலாம் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் சொல்கின்றன.

சுவாதியும் ராம்குமாரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி படம் ஒன்று உள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பாக்கெட்டில் பிளேடுடன்..- ராம்குமாரைப் பிடிக்க ‘ஆபரேஷன் ராம்’ என்று பெயரிட்டு, ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்தவர் நெல்லை டி.ஜ.ஜி தினகரன். மாவட்ட எஸ்.பி விக்ரமன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ சகாயசெல்வின் ஆகியோரைக் கொண்ட டீம் உருவாக்கப்பட்டது.

பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கிராமத்தின் மின்சாரத்தைத் துண்டித்தோம். கும்மிருட்டு நிலவியது. செல்போன் லைட் வெளிச்சத்தில் வீட்டை முற்றுகையிட்டோம்.

அவர்கள் வீட்டு நாய் குரைக்க ஆரம்பித்துவிட்டது. பொலிஸ்… பொலிஸ் என்று ஒரு குரல் கேட்டது. அதைக் கேட்டதும், ராம்குமார் பின்பக்கக் கதவைத் திறந்துகொண்டு ஓடிவிட்டார்.

பொலிஸிடம் சிக்காமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்கிற ஐடியாவில் சட்டைப் பாக்கெட்டில் எப்போதும் பிளேடுடன் வலம் வந்திருக்கிறார் ராம்குமார்.

பொலிஸைப் பார்த்ததும் கழுத்தை அறுத்துக்கொண்டார். மீண்டும் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொள்ள முயல… லாகவமாக அவர் கையைப் பிடித்துத் தடுத்துவிட்டனர்.

இதெல்லாமே வீடியோவில் பதிவுசெய்துள்ளோம். அவரது குடும்பத்தினர் முன்னிலையில்தான் எல்லாமே நடந்தது. உடனே ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் சென்றோம்.

சுவாதியின் செல்போனை அவரது அறையிலிருந்து கைப்பற்றினோம். அது நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் இருந்தது. சென்னை மேன்ஷனுக்கு பணம் செலுத்தியதற்கான ரசீதுகளைக் கைப்பற்றினோம்.

இந்த வீட்டில் இருந்த அரிவாளைத்தான் ராம்குமார் சென்னைக்கு எடுத்துப்போயிருக்கிறார்’’ என்றார்.

மீண்டும் கைது

ராம்குமார் மீது தற்கொலை செய்ய முயன்றதாக ஐ.பி.சி 309 கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது.

தற்போது சென்னை பொலிஸ் அவரை கைது செய்திருக்கிறது. அவர்கள் விசாரணை முடிந்ததும், தென்காசி அழைத்துவந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் போகிறார்கள்.

தற்கொலை முயற்சி வழக்கிலும் துரிதமாகச் செயல்பட்டு ராம்குமாருக்கு 3 முதல் 7 வருடங்கள் சிறைத்தண்டனை வாங்கிக்கொடுப்பதில் தீவிரமாக இருக்கிறது நெல்லை பொலிஸ்.

-விகடன்-

வேற்றுகிரகவாசிகளை தேடிக் கண்டுபிடிக்கும் தொலைநோக்கி!!

Sky eye

வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? அப்படி இருந்தால் எந்த மாதிரியான தோற்றத்துடன் இருப்பார்கள் என பல கேள்விகள் நம் மனதில் எழும்.

தோமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது.

ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். ஒருவேளை அவர்கள் இருந்தால் கண்டுபிடிப்பது சுலபம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வேற்றுகிரக வாசிகளை கண்டறியும் முயற்சியில் பல்வேறு விஞ்ஞானிகளும் ஈடுபட்டுள்ளனர், இதற்காக சீனா மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை அமைக்க திட்டமிட்டுள்ளது.

தென் மேற்கு சீனாவின் குயிசு மாகாணத்தில், 1.2 பில்லியன் யுவான் செலவில் அமைகிறது. Sky Eye என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த தொலைநோக்கியால், 11 மில்லியன் ஒளிஆண்டுகளுக்கு அப்பாலும் பார்க்க முடியும்.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இதன் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் இருப்பதால் விரைவில் வேற்றுகிரகவாசிகள் பற்றிய உண்மை வெளிச்சத்துக்கு வரும் என நம்பப்படுகிறது.

625.0.560.320.500.400.194.800.668.160.90

தொலைபேசி பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா?

3

இன்றைய காலகட்டத்தில் தொலைபேசி இல்லாத நாட்களை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

ஒவ்வொருவரின் கைகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது, இந்த உன்னத சாதனத்தை உருவாக்கியவர் தான் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்.

கடந்த 1847ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் என்னும் இடத்தில் பிறந்தார்.

சிறுவயதில் இருந்தே கல்வியில் ஆர்வம் காட்டி வந்தவர், படிப்பை முடித்துவிட்டு தன் தந்தையோடு காது கேளாதவர்களுக்கு பேசக் கற்றுக் கொடுத்தார்.

அவருடைய 23வது வயதில் காசநோய் ஏற்படவே, பெல்லின் உடல்நிலை கருதி அவரது குடும்பம் 1870ம் ஆண்டுகளில் கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்தது.

1

இதற்கு அடுத்த வருடம் பாஸ்டன் பல்கலைகழத்தில் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார்.

அறிவியல் ஆராய்ட்சிகளில் ஆர்வம் கொண்டிருந்த பெல் தனது ஓய்வு நேரங்களில் ஏதாவது சோதனை செய்துகொண்டே இருப்பார்.

காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் நிறைய செய்ய வேண்டும் என்ற அவரது உந்துதல்தான் தொலைபேசி என்ற உன்னத கருவியை கண்டுபிடிக்க அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.

ஒருவர் பேசுவதை மின்சக்தி மூலம் இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியுமா என்று ஆராயத் தொடங்கினார்.

தனது உதவியாளர் வட்சன் என்பவருடன் சேர்ந்து பெல் சோதனைகளில் ஈடுபட்டார்.
பெல் வீட்டின் மேல் அறையிலும் வாட்சன் கீழ் அறையிலும் இருந்து கொண்டு கம்பிவழி ஒருவர் இன்னொருவருடன் பேச முடியுமா என்று பல்வேறு முறைகளில் சோதனைகளை செய்து பார்த்தனர்.

அவர்களது முயற்சிகள் இரவும் பகலும் என்று நாள் கணக்கில் தொடர்ந்தன.

1876ம் ஆண்டு மார்ச் 10ம் திகதி மதியவேளை கீழ் அறையிலிருந்த வாட்சன் காதில் கருவியை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தார்.

திடீரென்று அந்த கருவியிலிருந்து குரல் கேட்கத் தொடங்கியது. பெல்லின் குரல்தான் “திரு.வட்சன் தயவுசெய்து இங்கு வாருங்கள் நான் உங்களைப் பார்க்க வேண்டும்” வட்சனால் பெல் பேசியதை தெளிவாகக் கேட்க முடிந்தது.

வியப்பை அடக்க முடியாத வட்சன் கருவியை கீழே போட்டுவிட்டு ஒரு பள்ளிச் சிறுவனைப்போல் துள்ளிக்குதித்து மேல் மாடிக்கு ஓடி பெல்லிடம் விசயத்தை சொன்னார், பெல்லின் கனவு நனவானது.

2

பிறகு ஒரு மாத்திற்குள் இரண்டு எளிமையான டெலிபோன்களையும், ஒரு மைக்ரோபோனையும் கண்டுபிடித்தார்.

பின்னர் 1876ம் ஆண்டு பெல் தனது புதிய கண்டுபிடிப்புக்கு உரிமை வாங்க பதிவு அலுவலகத்திற்கு சென்றார்.

அதற்கு சற்று முன்னால் எலிசா கிரே என்பவர் எலக்ட்ரிகல் ஸ்பீச் மெஷின்-க்கு உரிமை வாங்கி சென்றதாக தெரிவித்தனர்.

10 வருடங்கள் கழித்து டெலிபோனை கண்டுபிடித்தது யார் என்று நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர், அந்த வழக்கில் பெல் வெற்றி பெற்று பெரும் செல்வந்தர் ஆனார்.

தொலைபேசி மட்டுமின்றி அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இன்டக்‌ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டுபிடித்தார்.

பெல் விமானம் கண்டு பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு வெற்றி தரவில்லை, ஆனால் சில கண்டுபிடிப்புகளைச் செய்தார், விமானத்தின் எய்லிரான் என்ற பகுதியைக் கண்டுபிடித்தவர் பெல் ஆவார்.

பிறகு அவர் தன் வாழ்நாள் முழுவதையும் காது கேளாத குழந்தைகளுக்கு சேவை செய்வதற்கே அர்ப்பணித்தார்.

இவர் கண்டுபிடித்தவைகளில் பதினெட்டு வகை அறிவியல் சாதனங்களை மட்டுமே தனது பெயரில் காப்புரிமை பதிவுகளைச் செய்தார், இதர பன்னிரெண்டு வகைகளை மற்றவர்களின் பெயர்களில் காப்புரிமை பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

1920ல் தான் பிறந்த எடின்பெர்க் நகருக்கு வந்தபோது அந்த நகரம் பெல்லை கவுரவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1922 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 2ம் திகதி தனது 75 ஆவது வயதில் பெல் கனடாவில் காலமானார்.

அவர் நிறைவாகத்தான் இறந்திருக்க வேண்டும். ஏனெனில் அவரது கடைசிக் காலத்தில் அவரது கண்டுபிடிப்பான தொலைபேசி உலகம் முழுவதும், பட்டித்தொட்டிகளிலெல்லாம் பயன்படுத்தப்பட்டதை காணும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

ஆனால் தான் கண்டுபிடித்த தொலைபேசியை அவரே வெறுத்ததுதான் ஆச்சரியமான செய்தி. ஆம் பெல்லின் இறுதிக் காலங்களில் கிராமத்து வீட்டில் அவர் சோதனைகளில் ஈடுபட்டபோது தொலைபேசியை தொல்லையாகக் கருதி அதை செயல்படாமல் ஆக்கியதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.

உலகையே சிறு கிராமமாக சுருக்கிய பெருமை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லையே சாரும் என்று கூறினால் அது மிகையல்ல.

நீதிமன்றத்தின் முன் குழப்பம் விளைவித்த இருவர் கைது!!

Arrest

தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் கூடிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மற்றொருவரை துப்பாக்கியால் சுட முற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பிரதேச மக்களின் உதவியுடன் தம்புள்ளை நீதவான் நீதிமன்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே இவர்கள் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர்களை தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சவுதியில் இரு புனித தலங்கள் அருகே குண்டுவெடிப்பு!!

Saudi Bomb Blast

சவுதி அரேபியாவில் மதினா, காடிஃப் ஆகிய இரண்டு நகரங்களில் புனித தலங்கள் அருகில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

சவுதி அரேபியா நாட்டில் இஸ்லாமியர்களின் புனித தளங்களில் முக்கியமான ஒன்றான மதினாவில், மசூதி அருகே தற்கொலைப் படை குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றுள்ளது.

அந்நாட்டின் அல்-அரேபியா தொலைக்காட்சி வாகனம் வெடித்து சிதறியதற்கான வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது. விபத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக, காடிஃப் நகரில் மற்றொரு வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. காடிஃப் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் வாழும் பகுதியாகும். ஷியா பிரிவினரின் மசூதியை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல், ஜெத்தா நகரில் உள்ள அமெரிக்க தூதரம் அருகே சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் வெடிகுண்டை வெடிக்க செய்து உயிரிழந்தார். இதில் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர்.