காதலிக்காமல் இருக்கும் பெண்களுக்கு மட்டுமே கிடைக்கும் நன்மைகள்!!

Girl

காதல் செய்துவிட்டு, ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்படுவதுண்டு. ஏனெனில் காதலில் விழுந்துவிட்டால், ஒருசிலவற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் மற்றும் கட்டாயம் இருக்கும். ஆகவே பலரும் காதல் செய்ய யோசிப்பார்கள். குறிப்பாக பெண்கள் நிறையவே யோசிப்பார்கள்.

மேலும் காதல் செய்துவிட்டு, காதல் செய்யாமல் இருப்பவர்களைப் பார்த்தால், சிலருக்கு பொறாமையாக இருக்கும். ஏனெனில் காதலில் விழாமல் இருந்தால், ராஜா ராணி போல் இருக்கலாம். வாழ்க்கையை சந்தோஷமாக விருப்பத்திற்கேற்றவாறு வாழலாம்.

அதுவே காதலில் விழுந்துவிட்டால்,சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. எதைச் செய்வதாக இருந்தாலும், காதலன்/காதலியிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும்.

எனவே திருமணம் செய்வதற்கு முன்,காதலில் விழாமல் இருந்தால், பிடித்த அனைத்தையும் எந்த ஒரு இடையூறு இல்லாமல் மேற்கொண்டு,ஜாலியான வாழ்க்கையை வாழலாம்.

அதிலும் பெண்கள் வெட்கப்பட்டு, அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருந்த காலம் எப்போதோ மாறிவிட்டது. தற்போது பெண்களும் அனைத்தும் அவர்களது விருப்பத்துடன் இருக்க வேண்டுமென்று நினைக்கின்றனர்.

எப்படி ஆண்கள் காதலில் விழாமல் இருந்தால், சந்தோஷமாக இருக்கலாமோ, பெண்களும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.

குறிப்பாக தற்போதுள்ள பெண்களுக்கு சுதந்திரம் அவசியமாகிவிட்டது. அவர்களுக்கும் ஆண்களைப் போன்றே ஒருசில ஆசைகள் உள்ளன. அத்தகைய ஆசைகள் காதலில் விழுந்துவிட்டால் நடக்காது. எனவே தற்போதுள்ள பெண்கள் மிகவும் உஷாராக இருக்கின்றனர். ” இப்போது பெண்கள் காதலில் விழாமல் இருந்தால், எந்த மாதிரியான சந்தோஷத்தை அடையலாம் என்று அனுபவசாலிகள் கூறுவதைக் கொஞ்சம் கேளுங்களேன்.

சுதந்திரப் பறவை
காதல் செய்யாமல் இருந்தால், எந்த ஒரு செயலை செய்ய நினைத்தாலும் யாரிடமும் அனுமதிப் பெற வேண்டிய அவசியம் இல்லை. நினைத்ததை எந்நேரத்திலும் பயமின்றி, தடையின்றி செய்யலாம்.

சந்தோஷமாக ஷாப்பிங் செய்யலாம்
பெண்களுக்கு ஷாப்பிங் என்றால் மிகவும் பிடிக்கும். சில பெண்களுக்கு அதுவே பொழுதுபோக்காக இருக்கும். எனவே தனி ஒரு பெண்ணாக இருந்தால்,எந்நேரமும் சந்தோஷமாக ஷாப்பிங்கிலேயே இருக்கலாம்.

வேலையில் கவனம் செலுத்தலாம்
காதல் செய்யாமல் இருந்தால், அலுவலகத்தில் நல்ல ஆர்வத்துடன் வேலை செய்யலாம். அதிலும் அலுவலகத்தில் கொடுத்துள்ள இலக்கை அடைய எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.

நண்பர்களுடன் நேரம் செலவழிக்கலாம்
காதல் வந்துவிட்டால் நண்பர்களுடன் நேரம் செலவழிக்கவே முடியாது. ஆனால் காதலில் மட்டும் விழாமல் இருந்தால், நண்பர்களுடன் எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவழிக்கலாம்.

ஆண் நண்பர்களுடன் பேசலாம்
சில ஆண்கள், தங்களது காதலியை அவர்களது ஆண் நண்பர்களுடன் பேசவே அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், அதுவே தனி ஆளாக இருந்தால், எப்போது வேண்டுமானாலும், ஆண் நண்பர்களுடன் பேசலாம்.

எந்நேரமும் பணம் இருக்கும்
தனி ஒரு பெண்ணாக இருந்தால், பொறுப்புக்களானது மிகவும் குறைவு. மேலும் வாங்கும் சம்பளத்தை சேமிப்பதோடு, விருப்பப்பட்டவாறு செலவழிக்கலாம். குறிப்பாக எந்நேரமும் கையில் பணம் இருக்கும்.

பிடித்ததை செய்யலாம்
பொதுவாக காதல் வந்தால், காதலரைப் பற்றிய நினைவே அதிகம் இருக்கும். தமக்கு பிடித்ததை மற்றும் தம்மைப் பற்றி யோசிக்கவே நேரம் இருக்காது. ஆனால் தனி நபராக இருந்தால், தம்மைப் பற்றி அதிகம் யோசிக்கலாம். பிடித்தவாறு நேரத்தை செலவழிக்கலாம்.

நோ கமிட்மெண்ட்
காதல் செய்யாமல் இருந்தால், யாரை வேண்டுமானாலும் சைட் அடிக்கலாம். பிடித்தவாறு வாழ்க்கையை வாழலாம்.

அரட்டை அடிக்கலாம்
பொதுவாக நாம் நிறைய அழகான ஆண்களை பார்க்கலாம். அதனால் சிலருக்கு அந்த ஆண்களுடன் பேச வேண்டுமென்று தோன்றும். இவை அனைத்தையும் தனி ஒரு பெண்ணாக இருந்தால் செய்யலாம். குறிப்பாக, மேற்கூறிய அனைத்தும் ஆண்களுக்கும் பொருந்தும். என்ன நண்பர்களே! சரியா????

சிம்புவின் அம்மாவாக நடிக்கும் ஸ்ரேயா!!

Actress-Shriya-Saran

 

சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AAA படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் 3 கதாப்பாத்திரங்களில் சிம்பு நடிக்கிறார். இதில் ஒரு கதாபாத்திரத்திற்கு சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகள் மறுத்துவிட்டார்களாம்.

ஏனெனில் இந்த ஜோடிக்கு பிறக்கும் குழந்தை தான் மற்றொரு சிம்பு, அப்படிப்பார்த்தால் சிம்புவிற்கு அம்மாவாகவும் நடிக்கவேண்டும் என்பதால் த்ரிஷாவிலிருந்து பல நடிகைகள் மறுத்துவிட்டனர்.

தற்போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஸ்ரேயா சம்மதித்துள்ளாராம், ஸ்ரேயா ஹிந்தி த்ரிஷியத்திலும் 15 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களை சிறை வைத்த மைத்திரி!!

Maithiri

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை முக்கிய அமைச்சர்கள் சிலரை சிறைக்கூண்டு ஒன்றுக்குள் வைத்துப் பூட்டியுள்ளார்.

மாத்தறை கலால் திணைக்கள அத்தியட்சகர் திணைக்களம் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது கலால் திணைக்களத்தினால் கைது செய்யப்படும் போதைப் பொருள் கடத்தல்காரர்களை தடுத்து வைப்பதற்கான சிறைக்கூண்டு ஒன்றும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறைக் கூண்டை திறந்து வைக்கும் நிகழ்வுக்காக அமைச்சர்கள் சிலரை ஜனாதிபதி கூண்டுக்குள் அனுப்பி வைத்து இரும்புக் கதவையும் மூடிவிட்டார்.

சிறித்துக் கொண்டே சிறைக்குச் சென்ற அமைச்சர்களை சற்று நேரத்தில் ஜனாதிபதியே கதவை திறந்து வைத்துள்ளார்.

அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, தென்மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் சில்வா ஆகியோரே இவ்வாறு ஜனாதிபதியினால் சிறைக்கு கூண்டுக்குள் அடைக்கப்பட்டனர்.

இனி ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளுக்குத் தடை!!

Class

மத்திய மாகாணத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் தனியார் வகுப்புக்கள் தடைசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு கிழமைகளில் குறித்த வகுப்புக்கள் நடைபெறுவது முற்றாகத்தடை செய்யப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடமும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய மாகாணத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் நடாத்தபடும் தனியார் வகுப்புக்களை இடைநிறுத்துவதற்கு மாகாண சபையினால் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு அது நிறைவேற்றப்படும் எனவும் மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரகசிய டயரியால் வெளியான உண்மை : காதலியை அடித்தே கொலை செய்த காதலன்!!

Murder

அமெரிக்காவில் காதலியை அடித்தே கொண்ட காதலன் தொடர்பாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

Anne Kasprzak மற்றும் அவருடைய காதலன் Darwin Bagshaw இருவரும் தங்களது பள்ளிக் காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர், தன் காதலி தன்னுடைய குழந்தையை கருவில் சுமந்துக் கொண்டிருப்பதை தெரிந்துகொண்ட காதலன் Bagshaw ,காதலியான Anne வை அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று அமெரிக்காவில் உள்ள Salt Lake City, Utah வில் இடம்பெற்றுள்ளது.

Salt Lake City, Utah வின் அருகில் உள்ள ரிவர்டன் நகரில் தன் தந்தை மற்றும் தாயுடன் Anne வாழ்ந்து வந்துள்ளார்.

Anne கணித பாடத்திற்காக பிரத்தியேக வகுப்பிற்கு செல்லும் போது 2012 ஆம் ஆண்டு Darwin-னுடன் காதல் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில் Anne மார்ச் 10 ஆம் தன் வீட்டை விட்டு காணாமல் போயுள்ளார் என்று பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த நாள், ஜோர்தன் ஆற்றங்கரைக்கு அண்மையில் உள்ள பாலம் ஒன்றின் மேல் இரத்தக் கரைகளுடன் கூடிய காலணி ஒன்றை நபர் ஒருவர் இனங்கண்டுள்ளார், குறித்த நபர் உடனடியாக இந்த விடயத்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கரை ஒதுங்கியிருந்த அந்த சடலம் Anne உடையது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தான் தந்தையாக போவதாக Anne என்னிடம் கூறினாள், ஆயினும் என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, எனவே தான் அவளை கொலை செய்து விடலாம் என முடிவு செய்தேன் என புலனாய்வாளர்களிடம் Darwin தெரிவித்துள்ளார்.

Anneவின் உடலை பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவள் கர்ப்பமாக இல்லை என தெரிவித்துள்ளனர்.

அப்படியாயின் டார்வினிடம் அவள் பொய் கூறினாலோ என சந்தேகம் எழுப்பியுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு Darwin பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். முதலில் குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்து பின்னர் ஒப்புக் கொண்டுள்ளார்.

Anne குடும்பத்திற்கும் தன் குடும்பத்திற்கும் மற்றும் அனைவருக்கும் நீதிமன்றத்தின் முன்னிலையில் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் நீதிமன்றம் Darwin-ற்கு 15 வருடம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மேலும், Anne தன் காதலான Darwin பற்றிய விடயங்களை இரகசியமாக டயரி ஒன்றும் எழுதிவந்துள்ளார். இதன் மூலம் பல உண்மை விடயங்கள் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி!!

Sucide

ஒசூரில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூர் அருகே உள்ள புக்சாகரம் கிராமத்தை சேர்ந்த சந்திரா என்பவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் இளம்நிலை 3 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இவரும், பெங்களூரில் பணியாற்றி வரும் வினய்குமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர், இந்த காதல் விவகாரம் சந்திராவின் வீட்டிற்கு தெரியவந்தையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு மட்டுமல்லாமல், சந்திராவிற்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனை அறிந்து, தனது பெற்றோர்களுடன் சந்திராவின் வீட்டிற்கு பெண்கேட்டு சென்ற வினய்குமாரை, உதாசீனப்படுத்தியோடு மட்டுமல்லாமல், அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, வினய்குமார் நாம் எங்காவது ஓடிச்சென்று திருமணம் செய்துகொள்வோம், நீ இல்லாமல் என்னால் வாழ இயலாது, நான் தற்கொலை செய்துகொள்வேன் என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இதனை படித்த சந்திரா, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது, குறுஞ்செய்தி மூலம் சந்திராவை தற்கொலைக்கு தூண்டியதாக வினய்குமார் மீது வழக்குபதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

அரசியல் பிரமுகரின் மகனுக்கு 11 வயது சிறுமியுடன் திருமணம்!!

Marriage

ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில பா.ஜனதா தலைவர் தலா மராண்டியின் மகன் முன்னா மராண்டிக்கு கடந்த 27ம் திகதி, 11 வயது சிறுமியுடன் திருமணம் நடைபெற்றது.

இதுதொடர்பான பத்திரிகை செய்திகள் அடிப்படையில், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்துமாறு கோரியது. இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய் பிரகாஷ், விசாரணை நடத்தி, நீதிபதி ராஜேஷ் சின்காவிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில், பா.ஜனதா தலைவர் தலா மராண்டி, அவருடைய மகன் முன்னா மராண்டி உள்பட 3 பேர் மீது, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, வழக்கு பதிவு செய்யப்பட்டதால், தலா மராண்டி பதவி விலக வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர்கள் ஹேமந்த் சோரன், பாபுலால் மராண்டி உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

விரைவில் பேஸ்புக் மூலம் பணப்பரிமாற்றம்!!

send-money-facebook-messenger

பேஸ்புக் நிறுவனம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சமூக வலைத்தளத்தின் பயனாளர் பெயரை (User Name) பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்யும் முறையை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

உலக அளவில் அனைவராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான பேஸ்புக் அதன் சேவையை பணப் பரிமாற்றத்தின் வாயிலாக வங்கித் துறைக்கும் நீடிக்கவுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் விரைவில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சமூக வலைத்தளத்தின் பயனாளர் பெயரை (User Name) பயன்படுத்தி பணம் பரிமாற்றங்களை செய்ய முடியும் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இதனை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூரில் ஒரு சோதனைக்கு செயல்படுத்திய பின் அனைத்து இடங்களிலும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை 20 வங்கிகளுக்கு அளிக்கப்படும். வங்கி பயனர்கள் அவர்களின் பொது இணைய சுயவிவரங்களை (Public Internet Profile) தங்கள் வங்கி கணக்குகளுடன் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்த பின் வரிசை குறியீடு (Sort Code) மற்றும் வங்கி கணக்கு எண் (Bank Account Number) பேஸ்புக் ஐடி (Facebook ID), ட்விட்டர் ஹேன்டில்(Twitter Handle) மூலம் பணத்தை பரிமாற்றம் செய்து பயன்பெறலாம்.

இது மட்டுமின்றி ஒன்லைன் பரிமாற்றங்களை சிறு உருவ அச்சு கடவுச்சொற்கள் (Thumbprint Password), பயோமெட்ரிக் பாதுகாப்பு முறைகள் (Biometric Security Methods), வாடிக்கையாளர்களின் தொலைபேசி இலக்கத்திற்கு பணப் பரிமாற்றத்தைப் பற்றி குறுஞ் செய்தி (Message) அனுப்புதல் போன்ற பாதுகாப்பு சேவைகளையும் அளிக்கிறது.

இந்த திட்டம் தற்போது அமெரிக்காவில் மெஸ்ன்ஜர் மூலமாக வெற்றிகரமாக செயற்பட்டு வருகிறது. எனவே மற்ற நாடுகளிளும் இதனை செயற்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

குஷல் பெரேராவிற்கு 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க ஐ.சி.சி இணக்கம்!!

Kushal Perera

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட் காப்பாளருமான குசல் ஜனித் பெரேராவிற்கு நஷ்டஈடு வழங்க சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதாலாவது தடவையாக சர்வதேச கிரிக்கெட் சபையின் வருடாந்த சந்திப்பு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் குசல் பெரேராவிற்கு எதிராக ஊக்கமருந்து குற்றச்சாட்டின் பேரில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும் கடந்த மே மாதம் சர்வதேச கிரிக்கெட் சபை குசல் பெரோவிற்கு எதிரான தடையை நீக்கியிருந்தது.

இந்நிலையில் குசல் பெரேராவின் பரிசோதனைக்கு இலங்கை கிரிக்கெட் சபையினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் பவுண்டுகளை நஷ்டஈடாக வழங்கும்படி இலங்கை கிரிக்கெட் சபை கோரியிருந்தது.

குறித்த நஷ்டஈட்டினை சர்வதேச கிரிக்கெட் சபை வழங்க முன்வந்துள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

பக்தாத்தில் இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதல்களில் 125 பேர் பலி!!

Iraq

பக்தாத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மூன்று நாட்களை தேசிய துக்கதினங்களாக ஈராக் அரசு அறிவித்துள்ளது.

ஈராக் தலைநகர் பக்தாத்தில் சன நெரிசல் மிக்க வர்த்தகப் பகுதிகளில் நடத்தப்பட்ட 2 கார்குண்டுத் தாக்குதல்களில் 125 பேர் கொல்லப்பட்டனர்.

Karrada பகுதியில் வெடிமருந்துக்கள் நிரப்பப்பட்ட லொறி ஒன்று வெடிக்கச்செய்யப்பட்டதில் பலர் கொல்லப்பட்டனர்.

ரமழான் விடுமுறையை கொண்டாடுவதற்காக நகர்புற கடைகளிற்கு சென்றிருந்த பலர் குடும்பங்களாகவே கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் உடல்கருகி அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ளதாகவும் மீட்புபணியாளர்கள் கூறுகின்றனர்.

மிகவும் சக்தி வாய்ந்த இந்த தாக்குதலில் பல வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்கள் அழிவடைந்துள்ளன.

இதேவேளை மற்றுமொரு தாக்குதல் பிரசித்தி பெற்ற சந்தைத் தொகுதியொன்றில் நடத்தப்பட்டுள்ளது.

என்றும் இளமை வேண்டுமா? இதோ வழிமுறைகள்!!

Happy-woman
சருமம் இளமையுடன் நீண்ட நாட்கள் இருப்பதற்கு போதிய அளவில் தண்ணீர் குடித்து வர வேண்டும்.தண்ணீர் குடிப்பதுடன் நீர்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும் உட்கொண்டு வந்தால் உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து சரும செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.

எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் மற்றும் நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்து வருகிறீர்களே அவ்வளவுக்கு முதுமையைத் தள்ளிப் போடலாம்.தக்காளியில் ஆன்டி-ஆக்ஸ்டன்ட்டுகள் மட்டுமன்றி நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தாலோ அல்லது ஜீஸ் போட்டு தினமும் ஒரு கிளாஸ் குடித்து வந்தாலோ சரும செல்கள் புத்துணர்ச்சி பெறும்.

கீரைகள் அனைத்துமே மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் பசலைக்கீரை உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள விற்றமின்கள் , கனிமச்சத்துக்கள் மற்றும் நீர்ச்சத்துக்களால் சருமம் மட்டுமன்றி உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

முள்ளங்கியில் ஆன்டி-ஆக்ஸ்டன்ட்டுகள் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை உட்கொண்டு வந்தாலும் முதுமையைத் தள்ளிப் போடலாம். தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் சருமத்திற்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைக்கும். மேலும் இது உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும்.

பேஸ்புக்கில் அதிரடி மாற்றம்!

1 (70)
முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் இன்று பில்லியனிற்கும் மேற்பட்ட பயனர்களை தன்கத்தே கொண்டுள்ளது.இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரித்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.இதன் வரிசையில் தற்போது News Feed வசதியில் அதிரடி மாற்றம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

அதாவது இவ் வசதியின் ஊடாக செய்திகளை ஷேர் செய்து நண்பர்கள், உறவினர்களுடன் பகிரக்கூடியதாக இருக்கும்.இந்த வசதியினை பல்வேறு வியாபார நிறுவனங்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன.ஆனால் தற்போது நண்பர்கள் ஊடாக பகிரப்படும் செய்திகளை அதிகப்படுத்திக் காட்டும் அதேவேளை நிறுவனங்களின் செய்திகளை குறைத்துக்காட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் நண்பர்கள், உறவினர்களின் பிணைப்பே மேம்படுத்த முடிவதுடன் புதிய பயனர்களையும் உள்வாங்க முடியும் என பேஸ்புக் நிறுவனம் எண்ணியுள்ளது.

விமானத்தை தொடர்ந்து கிரெடிட் கார்டிலும் கபாலி!!

Kabali

ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் கபாலி படத்தின் ரீலிஸ் திகதி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், அந்த படத்தை பற்றிய பல புதிய தகவல்கள் தினமும் இணையதளங்களில் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இதுவே, அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் மேலும் அதிகமாக்கிக் கொண்டே இருக்கிறது.

அதேபோல், இப்படத்திற்காக படக்குழுவினர் எடுத்துவரும் புது புது விளம்பர யுக்திகளும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. ஏற்கெனவே, இப்படத்தின் ஏர்லைன்ஸ் பார்ட்னராக இணைந்த ஏர்-ஏசியா நிறுவனம் கபாலி படத்தின் போஸ்டரை விமானத்தில் ஓட்டி ஆகாயம் வரை இப்படத்தின் புகழை பறைசாற்றி வருகிறது. இந்தியா சினிமாவிலேயே விமானம் ஒன்றில் ஒரு படத்தின் விளம்பரம் செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்று கூறப்பட்டது.

விமானத்தைத் தொடர்ந்து தற்போது பிரபல வங்கி நிறுவனம் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கிரெடிட் கார்டுகளில் கபாலி படத்தின் புகைப்படங்களை அச்சடித்து வெளியிட்டு வருகிறது.

சிட்டி பேங்க் என்ற வங்கிதான் இந்த விளம்பரங்களை செய்து வருகிறது. ஒரு படத்தின் விளம்பரங்கள் கிரெடிட் கார்டில் இடம்பெறுவது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.

மாணவர் துஷ்பிரயோகம் : யாழில் 4 ஆசிரியர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Abuse

யாழ். நகருக்கு அண்மித்த பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து கைதுசெய்யப்பட்ட, நான்கு ஆசிரியர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 18ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சசிதரன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் குறித்த பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறி ஆசிரியர்களுக்கு எதிராக, மாணவர்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதில், குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் மற்றும் குற்றத்தினை மறைத்த குற்றச்சாட்டில், அதிபர் உட்பட ஏனைய இரண்டு ஆசிரியர்களும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, 5 பேர் கொண்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

இதன்படி சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் 18ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதிகளால் சித்திரவதைகளுக்கு பின் படுகொலை செய்யப்பட்ட இந்தியப் பெண்!!

Indian Girl Killed in Bangaladesh

பங்களாதேஷில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டவர்களில் 18 வயது நிரம்பிய இந்தியப் பெண்ணும் ஒருவராவார்.

விடுமுறையைக் கழிப்பதற்காக சென்ற இடத்தில் அவருக்கு இத்தகைய பரிதாப நிலை நேர்ந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் ஜெயின். தொழிலதிபரான இவர் கடந்த 20 ஆண்டுகளாக பங்களாதேஷில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவரது மகளான தாரிஷி ஜெயின் (18), அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
தனது விடுமுறையை பெற்றோருடன் கழிப்பதற்காக வங்கதேசத்துக்கு வந்திருந்த தாரிஷி ஜெயின், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.

அவரது உடல் இன்று இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கடும் சித்திரவதைகளுக்கு பின்னரே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

1 2 3 4

100 வருடங்கள் சூரியனை காணாத கிராமம் : நம்பினால் நம்புங்கள்..!!

Norway-village-without-sunlight
ஐரோப்பிய நாடான நோர்வே , கனிமம் மற்றும் பெட்ரோல் வளமிக்க நாடாகும். இங்கு மழை பொழிவும் அதிகம். இந்த நோர்வே நாட்டின் தென்பகுதியில் அடர்ந்த மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குகள் நிறைய இருக்கின்றன. அப்படி ஒரு பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது மிக அழகான, பசுமையான, அமைதியான எழில் மிகும் கிராமம் ஒன்று இருக்கிறது. அந்தக் கிராமத்தின் பெயர் ரூஜூக்கான்.

இந்தப் பள்ளத்தாக்கு கிராமத்தில் சொல்லும்படி பெரிய வசதிகள் ஏதுமில்லைதான்! இந்தக் கிராமத்தில் உள்ள நீராதாரத்தை அடிப்படையாக கொண்டு ஓர் உரத் தொழிற்சாலையும் ரெயில் பாதையும் மட்டும் உண்டு. இந்த உரத்தொழிற்சாலையை நம்பியும் இப்பகுதியில் வளமான மண் வளம் உள்ளதால் விவசாயம் செய்து பிழைத்து கொள்ளலாம் என நம்பி 1900ம் ஆண்டு வாக்கில் கிட்டதட்ட 300 பேர் இங்கு வந்து குடியேறினார். இப்போது கிட்டதட்ட 3500 அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இந்த கிராமம் ஆண்டில் 6 மாதங்கள் (மழை மற்றும் குளிர் காலம்) சூரியனோ சூரிய ஒளியோ துளிக்கூட படமாமல் இருக்கும்.

காரணம் இந்த கிராமத்திதைச் சுற்றிலும் உள்ள மலை முகடுகள் தடைக்கற்களாக இருந்து, சூரிய ஒளிக்கதிர்களை நுழையவிடமால் தடுத்துவிடும். இங்குள்ள மக்களின் உடலில் சூரியனின் கதிர்கள் விழ வேண்டும் என்றால் பல மைல்களுக்கு அப்பால் மலையை கடந்து செல்ல வேண்டும். இப்படித்தான் சூரிய வெளிச்சத்தை பார்க்க இயலாமல் இந்தக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் நூறாண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்தக்கிராம மக்களின் சோகத்தை,கவலை போக்க ஒருவர் வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிசில் இருந்த இங்கு வந்த அவர் பெயர் மார்ட்டின் ஆண்டர்சன். அவர் இந்த கிராமத்தை கவ்வியிருந்த இருளை போக்க ஒரு வழியை கண்டுபிடிக்க தீவிரமாக முயன்றார். அதற்கு இப்போதுள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாமா என்று யோசித்தார். இந்நகரத்திற்கு சூரிய ஒளியை கொண்டு வருவது குறித்து பலவாறாகதிட்டமிடப்பட்டு வந்தநிலையில் தற்போது சரியான ஒரு தீர்வு கண்டறியப்பட்டுள்ளது. சூரிய காந்தி பூவைப் போல் சூரியன் போகும் திசையில் எல்லாம் அதை பின்தொடர்ந்து செல்லும் தொழில்நுட்பத்துடன் கூடிய கம்ப்யூட்டர்களின் உதவியுடன் இயங்கும் ராட்சத நிலைக் கண்ணாடிகளை மலைகளின் வடக்கு பகுதி உச்சியில் அமைக்க தீர்மானித்தார் மார்ட்டின் ஆண்டர்சன்.

அதன் படி, அருகில் உள்ள மலையில் 450 மீட்டர் உயரத்தில் மூன்று பெரிய கண்ணாடிகளைப் பொருத்தியுள்ளனர். அக்கண்ணாடிகளில் படும் சூரியவெளிச்சம் எதிரொளிப்பதன் மூலம் நகரின் மத்தியப்பகுதியில் சூரிய வெளிச்சம்படுகின்றது.

8 .5 லட்சம் அமெரிக்க டொலர்கள் செலவில் அமைக்கப்பட்ட இந்த நிலைக்கண்ணாடிகள் மூலமாக இந்த கிராமத்தின் மையப் பகுதியான சுமார் 600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மார்க்கெட் பகுதி ஆண்டின் 365 நாட்களிலும் சூரிய ஒளியால் பிரகாசிக்கிறது. கிட்டதட்ட நூறு ஆண்டுகள்சூரிய ஒளியே படாமல் கடந்து விட்ட நோர்வேயின் ருஜூகான் நகரம், தற்போது கண்ணாடியை கொண்டு சூரிய வெளிச்சத்தைப்பெற இருக்கிறது. பாக்ஸ் செய்தி *கடந்த 1907ம் ஆண்டு நோர்ஸ்க் ஹைட்ரோ என்ற தொழில் நிறுவனத்தின் இணை இயக்குனரான சாம் அய்டு என்பவரால் ருஜூகான் நகரம் உருவானது.

*இந்நகரம் குறுக்கலானபள்ளதாக்கில் அமைந்துள்ளதால், இங்கு சூரிய வெளிச்சம்இயற்கையாக விழுவதற்குவாய்ப்பே இல்லை. ஆகவே, இங்குள்ளமக்கள் குளிர்காலத்தில்கேபிள் கார் மூலம் அருகில் உள்ள மலை உச்சிக்கு சென்றுசூரிய வெளிச்சத்தை அனுபவித்துத் திரும்புவதை வாடிக்கையாகக்கொண்டிருந்தனர். *ரூஜூகான்போஷன் எனும் அழகிய பெரிய நீர்வீழ்ச்சி இந்த மலை நகரத்தில் இருக்கிறது. இது 104 மீட்டர் நீளமான நீர்வீழ்ச்சி. இங்கு இந்த நீர்வீழ்ச்சி மூலமாக மின்சாரம் அதிக அளவில் உருவாக்கப்படுகிறது.