பெண்கள் காதலிக்கும் முன்பு யோசிக்க வேண்டியவை!!

201606301009406154_Women-love-to-think-before_SECVPF

காதலிப்பது தவறில்லை. ஆனால் அந்த காதலால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நினைத்து பார்க்க வேண்டும்.காதல் எப்ப எங்க எப்பிடி வரும் என்று தெரியாது என்பீர்கள். காதலிப்பது தவறில்லை. ஆனால் அந்த காதலால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நினைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் காதலை எல்லா குடும்பத்திலும் ஏற்றுக்கொள்வதில்லை.

எனவே பெண்கள் தாங்கள் காதலிப்பதால் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை வருமா? காலம் முழுவதும் எந்த பிரச்சனையும் இல்லாமல் காதலருடன் குடும்பம் நடத்த முடியுமா என்பதை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இப்போது காதலிக்கும் முன்னர் எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை பாருங்கள்.

1) முதலில் உங்களை பற்றி உணருங்கள்.
2) உங்கள் குடும்பத்தை பற்றி யோசியுங்கள்.
3) நம் குடும்பத்தில் காதலை ஏற்பாற்களா ? என்று சிந்தியுங்கள்.
4) நாம் காதலிக்க கூடிய நபரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
5) அவருடைய குடும்பத்தை விசாரியுங்கள்.
6) காதலிக்க நினைக்கும் நபரிடம் தோழமையோடு பழகி அவருடைய நல்ல / கெட்ட விசயத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
7) நீங்கள் காதலிக்கும் நபரை பற்றி உங்கள் வீட்டில் பேச உங்களுக்கு தைரியம் இருக்கின்றதா என்று யோசியுங்கள்.
8) காதலிக்கும் நபர் விட்டு கொடுக்கும் மணம் இருக்கின்றதா என்று எண்ணுங்கள்.
9) நம் வீட்டில் உள்ளவர்கள் ஜாதி பார்பவர்களா என்று பாருங்கள்.
10) அடுத்தவர்கள் காதலிக்கிறார்கள் என்று நீங்கள் காதலிக்காதீர்கள்.

இவை அணைத்தும் சரியாக இருந்தால் நீங்கள் தாராளமாக காதலிக்களாம். நீங்கள் ஆராய்ந்தவற்றில் தவறு இருந்தால் தயவு செய்து காதலிக்காதீர். நீங்க காதலிச்சு அது நடக்கவில்லை எனில் கஷ்டம் உங்களுக்கு மட்டும் இல்ல. உங்களுக்கும் கஷ்டம். நீங்க காதலிக்குறவங்களுக்கும் கஷ்டம். உங்களை பெற்றவர்களுக்கும் கஷ்டம்.

தோண்டத் தோண்ட தங்கம் கிடைக்கும் ஏரி!!

642141535gold-balls2

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஏரி ஒன்றைத் தூர்வாரும் போது தோண்ட தோண்ட பழங்கால தங்க நகைகள் கிடைத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு புதையல் எதுவும் உள்ளதா என்பது பற்றி தொல்பொருள்துறையினர் ஆய்வு நடத்த உள்ளனர்.திருப்பத்துார் அருகேயுள்ள பாப்பானேரியில், நேற்று முன்தினம், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஏரியைத் தூர்வாரும் பணியில் 131 பேர் ஈடுபட்டனர். அப்போது சதுர வடிவில் டாலருடன் கூடிய தங்கச்சங்கிலி ஒன்று கிடைத்துள்ளது.

தொடர்ந்து துார்வாரியபோது 7 சவரன் எடையுள்ள மற்றொரு தங்கச்சங்கிலித் துண்டும் கிடைத்தது. அவை திருப்பத்துாரில் உள்ள அரசு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.கலை நயத்துடன் கூடிய அந்த தங்கச்சங்கிலிகள் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று மீண்டும் ஏரியில் துார்வாரும் பணி நடைபெற்ற போது, மூன்று துண்டுகளாக மேலும் 66 கிராம் தங்கம் கிடைத்தது. அவையும் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தங்கம் கிடைத்து வருவதால், இன்று தொல்பொருள் துறையினர் பாப்பனேரி ஏரியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீதியில் வாழும் ஒருவரின் ஆசையை அஜித் நிறைவேற்றுவாரா?

ajith-kumar-so-sorry

அஜித் எப்போதும் தன் ரசிகர்களின் விருப்பப்படியே நடந்துக்கொள்வார். இந்நிலையில் சமீபத்தில் யு-டியூப் சேனலில் சாலையோரத்தில் வாழும் அன்றாட சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் ஒருவரை பேட்டியெடுத்துள்ளனர்.

இதில் அவர் தான் அஜித் ரசிகர் என்றும், அஜித் சாரை எப்படியாவது பார்க்க வேண்டும், அவருடன் நின்று ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது, இதை கண்டு அஜித் அவரை நேரில் அழைத்து பார்ப்பாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

சூப்பர் ஸ்டாரை பார்த்த அடுத்த நொடி கண்ணீர் விட்ட அழுத பிரபல நடிகர்கள்- நெகிழ்ச்சி சம்பவம்!!

rajinikanth-7598

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படம் ஜுலை மாதம் வரவுள்ளது. இப்படத்தை வரவேற்க ரசிகர்கள் தற்போதே பேனர், போஸ்டர் என கலக்கி வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் ஆர்ட் இயக்குனர் ராமலிங்கம் ஒரு பேட்டியில் ‘நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன், அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

அவரை பார்த்த அடுத்த நொடி நான் அழ ஆரம்பித்துவிட்டேன், திரும்பி பார்த்தால் கலையரசன், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் அழுதுக்கொண்டே இருந்தனர்’ என கூறியுள்ளார்.

100 அடி உயர Roller-coaster ல் சிக்குண்ட 8 பேர்!!

625.0.560.320.500.400.194.800.668.160.90
அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரில் அமைந்துள்ள பொழுதுபோக்கு பூங்காவில் 100 அடி உயர roller-coaster ல் 8 பேர் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஓக்லஹோமா நகரில் அமைந்துள்ள இந்த பொழுதுபோக்கு பூங்காவில் Silver Bullet எனும் விளையாட்டில் சில பயணிகள் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.அப்போது அந்த roller-coaster 100 அடி உயரத்தில் வந்தபோது பழுதானதாக கூறப்படுகிறது. இதனால் அந்த roller-coaster விளையாட்டில் ஈடுபட்ட 7 சிறுவர்கள் உள்ளிட்ட 8 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து 100 அடி உயரத்தில் சிக்கியுள்ள அந்த குழுவினரை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.பொழுதுபோக்கு பூங்காவின் நிர்வாகத்தினர் துரிதமாக செயல்பட்டு மீட்பு குழுவினருக்கும் அவசர ஊர்திக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.roller-coaster விளையாட்டு பகுதியில் ஏற்பட்ட இச்சம்பவத்தை அடுத்து உடனடியாக எஞ்சிய விளையாட்டுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.இதனிடையே மீட்பு குழுவினர் அந்த roller-coaster ல் சிக்கியவர்களை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஒவ்வொருவராக பத்திரமாக மீட்டுள்ளனர்.இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் ஒருதாய் மக்களையும் பிரிக்க முயலும் ஆதிக்கப்போட்டி!!

VV

பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறும் தாண்டிக்குளத்தில் அமைக்குமாறும் ஒரே நேரத்தில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வவுனியா மாவட்டத்தில் அமையுமா அமையாதா என இன்னமும் தீர்மானிக்கப்படாத ஆனால், சிறு விவசாயி முதல் பெரு வியாபாரி வரை பெரு இலாபம் கிட்டும் எனப்பேராசை கொண்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் பற்றிய சர்ச்சைகள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை.

அரசியல்வாதிகளின் ஆதிக்கப்போட்டியில் அரை நிதியாண்டு கடந்தபின்னும் ஆரம்பிக்கப்படாத இந்தத்திட்டம் பெரும்பாலும் திரும்பிப்போகும் வாய்ப்புத்தான் மிக அதிகம்.

இப்படியிருக்க வவுனியா மக்களையே பிரித்தாளும் தந்திரத்தை அரசியல் தலைவர்கள் இப்போது கையாள்கிறார்கள். ஒரே நேரத்தில் சில பொது அமைப்புக்கள் தாண்டிக்குளத்திற்குத் திட்டம் வேண்டும் என்றும், சில பொது அமைப்புக்கள் ஓமந்தைக்குத் திட்டம் வேண்டும் என்றும் உண்ணாவிரதப்போராட்டம் நிகழ்த்துகின்றன.

அதே வேளையில் ஓமந்தையில் திட்டத்தை வலியுறுத்தி ஊர்வலம் நடக்கின்றது.

ஏற்கனவே இந்தத்திட்டம் வவுனியாவிற்கு வருவதை விரும்பாத சில இனவாத சிங்களத் தலைவர்களுக்கும், வவுனியாவின் அபிவிருத்தியை விரும்பாத சில பிரதேசவாதத் தமிழ்த் தலைவர்களுக்கும் இந்தப்போராட்டங்கள் வாயில் அவல் போட்டுள்ளன.

தமது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியில் மக்களது அபிவிருத்தி பாதிக்கப்பட்டால் கூடப்பரவாயில்லை என்று நினைக்கும் சில தலைவர்கள் இனி வவுனியா மக்களுக்கடையில் கலவரம் ஏற்படாது தடுக்க இந்தத்திட்டம் வேறு மாவட்டத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது என்று அறிவிக்கவும் முன்வரலாம்.

எனவே எங்கள் பிரதேசத்தில் அக்கறை கொண்ட மக்கள் அனைவரும் அவதானமாக இருக்கவேண்டிய பொழுது இது.

கடந்த பல தசாப்தங்களுக்குப் பின்னர் ஒரு பயனுள்ள திட்டம் எங்களை நாடி வந்துள்ளது. எங்களுக்கிடையான வீண் போட்டியால் அதனைக் கெடுத்துக்கொள்ளவேண்டாம்.

சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்களின் வழிநடத்துதலில் இருந்து வெளியே வந்து வவுனியா மாவட்டப் பொது அமைப்புக்கள் அனைத்தும் உடனே சந்திக்கவேண்டும்.

தமக்குப்பொருத்தமான இடம் எது என்பதை பிரதேசப்பற்றைக் கடந்து துறைசார் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யவேண்டும். முடிவுசெய்த பின் அனைவரும் இணைந்து தொடர்போராட்டங்களை நிகழ்த்தவேண்டும். இந்தத் திட்டம் இந்த இடத்தில் உடனே ஆரம்பிக்கப்படவேண்டுமென்று.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

செ.மதுரகன்-

விஜய் மல்லையா நேரில் ஆஜராக வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு!!

M_Id_481076_Vijay_Mallya
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ஜீலை 29ம் திகதி நேரில் ஆஜராக வேண்டும் என மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பல்வேறு வங்கிகளின் மூலம் ரூ.9000 கோடி கடனை பெற்றி திருப்பி செலுத்தாமல் விஜய் மல்லையா லண்டனில் தங்கியுள்ளார்.

இவரை நாடு கடத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தேடப்படும் குற்றவாளி என சமீபத்தில் நீதிமன்றம் அறிவித்தது.இந்நிலையில் மும்பை சிறப்பு நீதிமன்றம், ஜூலை 29ம் திகதி விஜய் மல்லையா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை அமலாக்கத்துறை பத்திரிக்கைகளின் மூலம் வெளியிட்டுள்ளது.

சகல வகையான பீடைக்கொல்லிகளுக்கும் தடை – ஜனாதிபதி!!

intensive-farming-chemicals

சகல வகையான பீடைக்கொல்லிகளையும் நாட்டுக்கு இறக்குமதிசெய்தல், விற்பனைசெய்தல் மற்றும் பயன்படுத்துவதை தடைசெய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பீடைக்கொல்லி, கிருமிநாசினி மற்றும் இரசாயன பொருட்களை அதிகளவு பயன்படுத்துவதன் காரணமாக மக்களின் சுகாதார நிலைமைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கிளைபோசிட் பீடைக்கொல்லி உள்ளிட்ட சகல வகையான பீடைக்கொல்லிகளினதும் இறக்குமதியை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடைசெய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை மக்கள் சுகதேகிகளாக இருப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தலைக்கவசம் இன்றி சென்ற இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு!!

Bike

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு – கொழும்பு பிராதான வீதியில் ஜயந்தியாய எனும் இடத்தில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று இளைஞர்கள் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஜயந்தியாய ஜும்மா பள்ளிவாயலுக்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இவ் விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இறந்தவர்களில் இரண்டு பேர் பாடசாலை மாணவர்களாவர்.

ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயத்தில் தரம் பத்தில் கல்வி பயிலும் கரீம் கஸ்மீர் (வயது – 15), ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் தரம் 11ல் கல்வி பயிலும் சனூஸ் இம்தாத் (வயது – 16), நிஸ்தார் இஸ்பாக் (வயது – 19) என்ற மூன்று பேர் மரணமடைந்துள்ளதுடன், புஹாரி சியாம் (வயது – 26) என்பவர் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைகள் இன்று வியாழக்கிழமை பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் இடம் பெறவுள்ளதாகவும், அதனால் வெலிக்கந்தையில் உள்ள இரண்டு சடங்களும் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.இரண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த நான்கு பேரும் தலைக்கவசம் அணியாமையும் அதிக வேகமுமே இம் மரணத்திற்கான காரணம் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

8000 பட்டதாரிகளுக்கு அரச பதவிகள்!!

graduate

8000 பட்டதாரிகளை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அதிகாரிகளாக இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அமைய இது நடைமுறைபடுத்தப்படவுள்ளதாகவும், இதற்கமைய குறித்த பட்டதாரிகளில் 8000 பேரை அரச நிறுவனங்களுக்கு இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அரச சேவைக்கு முதற் தடவையாக இவ்வாறான பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும், அடுத்த மாதம் அளவில் பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனின் வெளியேற்றத்தால் இலங்கைக்கு ஏற்படப் போகும் பேராபத்து!

sri-lanka-EU

சமகாலத்தில் பிரிட்டனில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலை பல்வேறு வடிவங்களில் இலங்கைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என வர்த்தக சபையின் தலைமை பொருளாதார நிபுணர் அனுஷ்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகி செல்ல அந்நாட்டு மக்கள் ஆதரவு வழங்கியுள்ள நிலையில், இலங்கைக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால விளைவுகள் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

பிரிட்டன் மக்கள் சர்வஜன வாக்கெடுப்பின் பின்னரான, சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாறுபடும் தன்மை, இலங்கைக்கு ஏற்பட்டுள்ள குறுகிய கால விளைவாக காணப்படலாம்.இதன் காரணமாக இலங்கைக்கு வெளிநாட்டு நாணயத்தை ஈர்ப்பதற்கும் கடினமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறான நெருக்கடி ஏற்படும் போதும் தங்களுக்கு தெரிந்த துறையில் முதலீடு செய்வதற்கே முதலீட்டாளர்கள் விருப்புகின்றமையே இதற்கு காரணமாகும்.

அமெரிக்க டொலர், அமெரிக்க திறைசேரி உண்டியல்கள், தங்கம் போன்றவற்றை நோக்கி அவர்கள் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.இதேவேளை, ஏற்றுமதி துறையினுள் இலங்கைக்கு நீண்ட கால விளைவுகளை சந்திக்க நேரிடும் என பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.இலங்கையின் ஏற்றுமதியில் 10% வீதமானவை பிரிட்டனுக்கும் 30% வீதமானவை ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுவதே இதற்கான காரணமாகும். அதாவது கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர் ஏற்றுமதிகளாகும்.

பிரிட்டனில் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஏற்பட்டுள்ள உறுதியற்ற நிலை, இலங்கையின் ஏற்றுமதியில் தாக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதற்கு மேலதிகமாக இலங்கை பிரிட்டனுடன் இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைகளுக்கு வரவுள்ளன.ஜீஎஸ்பி பிளஸ் போன்ற ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஒப்பந்தங்களில் தொடர்ந்து பிரிட்டன் நீடிக்காமையினால் இந்த நிலைமையில் இருந்து தப்பித்து கொள்ள வேண்டுமென்றால் இலங்கையின் ஏற்றுமதி சந்தையை விரிவாக்கப்பட வேண்டும்.

ஐரோப்பா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற சந்தைகளுக்கு 60% ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகின்றது.இலங்கையின் ஏற்றுமதி சந்தையை விரிவாக்குவதற்கு புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்பட வேண்டும்.இதேவேளை, புதிய தலைமுறைகளுக்கான தொழில்நுட்பம் ஊடாக இந்த நாட்டின் ஏற்றுமதி போட்டியை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என வர்த்தக சபையின் தலைமை பொருளாதார நிபுணர் அனுஷ்க விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

கொட்டாவி விட்ட இளைஞருக்கு விளக்கமறியல்!!

prisoner-jail
கொட்டாவி விட்டு நீதிமன்றை அவமரியாதை செய்தமைக்காக இளைஞர் ஒருவருக்கு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவிட்டுள்ளது.கொழும்பு நீதிமன்றத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.நீதிமன்றின் பணிகளை பூர்த்தி செய்து நீதவான், ஆசனத்தை விட்டு இறங்கி வரும் போது சத்தமாக கொட்டாவி விட்டதாக இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கொழும்பு மேலதிக நீதவான் சானீமா விஜேபண்டார, குறித்த இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர், நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைகின்றன அமைதியாக இருக்கவும் என அறிவித்த போது குறித்த இளைஞர் சத்தமாக கொட்டாவி விட்டுள்ளார்.களனி பெத்தியாகொட பிரதேசத்தைச் சேர்ந்த சுரங்க ஜனக குமார என்ற இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கஞ்சா போதைப் பொருள் வழக்கு ஒன்றில் முன்னிலையாகியிருந்தார். சந்தேக நபருக்கு முன்னதாக 5000 ரூபா அபராதத்தை நீதிமன்றம் விதித்திருந்தது.அபராதப் பணத்தைச் செலுத்தும் வரையில் குறித்த இளைஞர் நீதிமன்ற சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதன் போது நீதிமன்ற நடவடிக்கைகள் பூர்த்தியாகி நீதவான் செல்ல முயற்சித்த போது உரக்க கொட்டாவி விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த இளைஞர் குற்றத்தை ஒப்புக் கொண்டதனால், எதிர்வரும் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யானை தாக்கி ஒருவர் பலி!!

x240--kq
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் பலியாகியுள்ளார்.குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.மீன்பிடிக்க சென்ற வேளையிலேயே அவரை யானை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிண்ணியா, புள்ளகுழிமணல் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் மஜீத் ரகீப்(பொக்கையன்) என்பவரே பலியாகியுள்ளார்.

சடலம் தற்போது கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோயில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் -2016

1909366_621447234667056_2738425192189728291_o

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் (04.07.2016) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 11.07.2016 அன்று பொங்கல் உற்சவம் நடைபெற்று 12.07.2016 அன்று வைரவர் மடையுடன் நிறைவுபெறவுள்ளது.

தினமும் கண்ணகை அம்மன் ஏடு வாசிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளதுடன் தினமும் அன்னதானமும் வழங்கப்படவுள்ளது. பக்த அடியார்கள் அனைவரையும் கலந்துகொண்டு கண்ணகை அம்மனின் அருளைப் பெற்றுய்யுமாறு
ஆலய பரிபாலன சமையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

பொங்கல் தினத்தன்று பாற்குடம்,தீச்சட்டி,காவடி  எடுப்பவர்கள்  நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும் .பொங்கல் தினத்தன்று  1008 பானைகளில் பொங்கல் இடம்பெறும் .இப்பொங்கல் வைபவத்தில் கலந்து கொள்ளும் அடியார்கள் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பொங்கலுக்கு தேவையான பானை மற்றும் பொங்கல் பொருட்களை பெர்ருகொள்ளமுடியும்,விசேட போக்குவரத்து  ஒழுங்குகள் மேற்கொள்ளபட்டுள்ளன.

 பொங்கல் தினத்தன்று விசேட கலை நிகழ்வுகளும் இடம்பெறும் …

3 13439029_1188170067900968_6870535910246788526_n 13516142_1188169941234314_2590176969993294778_n Untitled-2

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவ பெருவிழா அறிவித்தல்!

amman

இலங்கை திரு நாட்டின் கண்ணே வடபால் அமைந்து சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வன்னி மாநகரில் வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு எதிர்வரும் ௦5.07.2016 செவ்வாய்கிழமை நண்பகல் பன்னிரண்டு மணியளவில் மகோற்சவ குரு சிவஸ்ரீ .சதா சங்கரதாஸ் சிவாசாரியார் தலைமையில் கொடிஏற்றதுடன் மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகவுள்ளது.
மேற்படி மகோற்சவத்தில்

05.07.2016 செவ்வாய்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றமும்
17.08.2016 ஞாயிற்றுகிழமை சப்பர திருவிழாவும்
18.08.2016 திங்கட்கிழமையன்று காலை ரதோற்சவமும்
19.08.2016 செவ்வாய்கிழமையன்று தீர்த்தோற்சவமும் இடம்பெறும் .

தினமும் மகேஸ்வர பூஜை இடம்பெறும்.
மேலதிக தொடர்புகளுக்கு
0242222788
ஆலயபரிபாலன சபை

image-0.02.01.000bd3ddefb137ddf1ff803a0daee2cf00716f533ca2ac3f5545b48a50e52dff-V image-0.02.01.629fe695a68ef614b8e87c95104c5e5fad0f22765a2a8797077551b5f90076ab-V image-0.02.01.f4c429154ab49244bbf77d8448a9f01e44085e92e5647c223ff603896275341f-V

 

வடமாகாண எல்லே விளையாட்டில் இருந்து வவுனியா பாடசாலை   வெளியேற்றபட்டமைக்கு தகுதியற்ற நடுவர்களின் தீர்ப்பே காரணம்!!

Slugel_An_Elle_match_in_progress

வடமாகாண பாடசாலைகளுக்கிடையில்26.06.2016 ஞாயிற்றுகிழமை யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற  பெண்களுக்கான எல்லே போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய பெண்கள் அணியை எதிர்த்து யாழ்சாவகச்சேரி இந்துக்கல்லூரி பெண்கள் அணி ஆட்டத்தில் ஈடுபட்டிருந்த போது எல்லே விதிமுறைக்கு மாறாக நடுவர்கள் அளித்த தீர்ப்பினால் வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய பெண்கள் அணி துரதிஸ்டவசமாக கால் இறுதிப போட்டியில் இருந்து வெளியேறியது.

 அதன் போது இலங்கை எல்லே நடுவர்களுக்கான சங்கத்தின் செயலாளர் S.A.Gவிஜேரட்ண அவரிடம் தொலைபேசி  மூலம் தொடர்புகொண்டு விதி உறுதிப்படுத்தப்பட்டும் குறித்த இடத்தில் நடுவர்களால் சரியான தீர்ப்பு வழங்கப்படவில்லை.

துடுப்பாட்ட வீரரின் விலகலுக்கு பின்னர் பந்து வீசுபவர் மாறுதல் என்ற விதி (எல்லே விளையாட்டு வழிகாட்டி நூலாசிரியர் விமலசிறி சில்வா பக்கம் -11) நடுவருக்கு தெரியாத காரணத்தினாலேயே இவ்வணி வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

குறித்த  பிரச்சினைக்கு சரியான தீர்வாக இலங்கை எல்லே சம்மேளன விதியின்படி,
போட்டி விதி மீறல் இடம் பெற்ற இடத்தில் இருந்து மீளவும் தொடர்ந்து நடாத்தப்படவேண்டும் .
• அல்லது போட்டி மீளவும் நடாத்தப்பட வேண்டும்.

இவ் விளையாட்டு விதியை கருத்திற் கொள்ளாது தமது குழுத் தீர்மானப்படி வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய பெண்கள் அணியை போட்டியில் இருந்து வெளியேற்றியது அப்பட்டமான அவர்களின் தவறை எடுத்துக்காட்டுகின்றது.

இவ்விதி மீறல் இடம் பெற்ற வேளையில் வடமாகாண எல்லே போட்டி இணைப்பாளரிடம் மேன் முறையீடு 26.06.2016 அன்று பி.ப 4.45 மணியளவில் வழங்கப்பட்டது. அம்முறைப்பாட்டிற்குரிய முடிவினை 27.06.2016அன்று காலை 8 மணிக்கு வழங்கப்படுவதாக வடமாகாண எல்லே போட்டிக்கு பொறுப்பானவர் கூறினார்.ஆனாலும் அன்று காலை 10.45 மணிவரை எந்த முடிவும் வழங்கப்படாத நிலையில் போட்டியில் இருந்து விலக்கப்பட்டதாக கூறி இவ்வணி அனுப்பி வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய கிராமத்தின் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களாகிய இவ்வணியினர் வடமாகாண விளையாட்டுகுழுவினரின்அசமந்தப்போக்கினால்பலஅசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த நிலையில் ஒரு நாள் பொழுதை வீணாக மைதானத்தில் கழித்து தமது பிரதேசத்தைச் சென்றடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாகாண கல்வித்திணைக்களத்தின் விளையாட்டுத் துறையின் பொறுப்பற்ற இச் செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஒரு விளையாட்டுக்கான தகுதியான நடுவரைக் கொண்டு போட்டியை நடாத்த முடியாதவர்கள் மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு எவ்விதம் உதவுவார்களென கல்விச் சமூகத்தினர் ஆதங்கப்படுகின்றனர்.