யாரும் வாங்காத 2.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான உலகின் மிகப் பெரிய கச்சா வைரம்!!

Diamand

நேற்று லண்டன் நகரில் ஏலத்திற்கு வந்த உலகின் மிகப் பெரிய கச்சா வைரம் எவராலும் கொள்வனவு செய்யப்படவில்லை.

இந்த “லெசிடி லா ரோனா” என்ற வைரம் 70 மில்லியன் டொலருக்கும் அதிகமாக விலை போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அதற்கு 61 மில்லியன் டொலர் கேள்வியே இருந்துள்ளதால் அது நேற்று விற்பனை செய்யப்படவில்லை.

இது விற்பனை செய்யப்பட்டால் போட்ஸ்வானா அரசுக்கு 60% இலாபம் கிட்டும். ஒரு டென்னிஸ் பந்தின் அளவு உள்ள அந்த வைரம், 1,109 காரட் ஆகும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரம் 2.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு பெரிய கச்சா வைரம் இதுவரை பொது ஏலத்திற்கு வைக்கப்பட்டது இல்லை. பொதுவாக இந்த மாதிரியான வைரங்கள், இரகசிய ஏலத்தில், சீல் வைக்கப்பட்ட கவர்களில், அதிகப்படியாக விலைதர முன்வரும் தனி நபர் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும்.

1905 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்க சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 கரட் க்யுல்லினான் வைரமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிகப் பெரியது.

அது 9 கற்களாக வெட்டப்பட்டது, அந்த வெட்டப்பட்ட கற்களில் பெரியதான ´கிரேட் ஸ்டார் ஆஃப் ஆப்ரிக்கா´ என்று அழைக்கப்படும் கல், லண்டன் டவரில் வைக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் அரசியின் செங்கோலில் பதிக்கப்பட்டுள்ளது.

“சுவாதியைக் கொன்ற மிருகம்” : வட்ஸ் அப்பில் வைரலாகும் புகைப்படம்!!

Swathi Murder

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து, பெண் பொறியாளர் சுவாதியை கொலை செய்த குற்றவாளியின் வரை படத்தினை பொலிசார் வெளியிட்டுள்ள நிலையில், வட்ஸ் அப்பில் குற்றவாளியின் தவறான புகைப்படம் வெளியாகி வருகிறது.

தமிழகத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை குற்றத்தை புரிந்த குற்றவாளியை விரைவில் நெருங்கிவிடுவோம் என சென்னை கமிஷ்னர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இரண்டு வருடங்களுக்கு முன், தீவிரவாதி பன்னா இஸ்மாயில், மற்றும் பக்ருதீனுடன் கைதாகி சிறையில் இருக்கும் தீவிரவாதி பிலால் மாலிக்கின் புகைப்படத்தினை வெளியிட்டு, இவன்தான் சுவாதியை கொன்ற மிருகம் என்று செய்தி வட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கு முன்னர் நடிகர் வய்.ஜி.மகேந்தின் தனது முகநூல் பக்கத்தில், சுவாதி என்ற என்ற பிராமணப் பெண் கொடூரமாக பிலால் மாலிக் என்ற மிருகத்தால் வெட்டி கொல்லப்பட்டுள்ளார் என்ற பதிவினை ஷேர் செய்ததன் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று பிரபல பாடசாலைகளுக்குத் தடை!!

banned

தேசிய பாடசாலை மட்டத்திலான 20 வயதுக்குட்பட்ட ரக்பி போட்டிகளில் விளையாடுவதற்கு மூன்று பிரபல பாடசாலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டி தர்மராஜ பாடசாலை, கொழும்பு கேரி பாடசாலை மற்றும் கண்டி ட்ரின்டி கல்லூரிகளுக்கே இவ்வாறு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளின் போது கலகம் விளைவித்தமைக்காகவே குறித்த பாடசாலைகளுக்கு இவ்வாறு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், கண்டி தர்மராஜ பாடசாலையின் 20 வயதிற்குட்பட்ட ரக்பி அணிக்கு 9 மாதங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பாடசாலை அணியின் பயிற்றுவிப்பாளருக்கு பாடசாலைகளுக்கான பயிற்சி வழங்குவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பாடசாலையின் 7 ரக்பி வீரர்களுக்கு ஒரு வருடத்திற்கான போட்டித் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு கேரி பாடசாலை மற்றும் கண்டி ட்ரினிட்டி கல்லூரியின் 20 வயதுக்குட்பட்ட ரக்பி அணிகளுக்கும் 6 மாத போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களில் பாடசாலை மட்டங்களில் இடம்பெற்ற ரக்பி போட்டிகளின் போது இடம்பெற்றுள்ள குழப்ப நிலை தொடர்பில், மேற்கொண்ட விசாரணைகளுக்கமையவே இவ்வாறு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

 
போதையில் இருந்து விடுதலை பெற்ற நாடு என்ற தொனிப்பொருளில் மாவட்ட சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தால் நீதிமன்றினால் கட்டளை இடப்பட்ட நபர்களுக்கான சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று முன்தினம் (29.06.2016) புதன் கிழமை அதிகாலை 10.00 மணியில் இருந்து பிற்பகல் 1.00 மணியளவில் வவுனியா சிறுவர் நன்னடத்தைகள் திணைக்கள கேட்போர் கூடத்தில் மாவட்ட சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் கே.எம்.நஜீம் தலைமையில் நடைபெற்றது.
இக் கருத்தரங்கிற்கு வளவாளர்களாக வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல மருத்துவ ஆலோசகர் எஸ்.சிவதாஸ், மாவட்ட மது வரித்திணைக்கள நிலையப் பொறுப்பதிகாரி ஏ.ஜீ.எஸ்.கே.செனவிரட்ண மற்றும் பரிசோதகர் எஸ்.சுரேஸ், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ். சுபாசினி, இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி எஸ்.எப்.சிப்கா மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரனை உத்தியோகத்தர் ஆர்.எல்.வசந்தராஜா ஆகியயோர் கருத்துரைகளை வழங்கினர்.

இங்கு போதைப் பொருளுக்கும் புகைத்தலுக்கும் அடிமையானவர்கள் குடும்பத்திற்கு மிகப் பெரிய அபாயகரமானவர்களாக காணப்படுவதாகவும் இதில் இருந்து விடுதலை பெற உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கும் அதனை கையாளத் தெரியும் போது அதில் இருந்து விடுதலை பெற முடியும்.

போதையற்ற குடும்பம், கிராமம், நகரம் என விஸ்தரிக்கப்படல் வேண்டும் எனவும் பல்தேசிய கம்பனிகள் கொள்ளை இலாபங்களை அடைந்து கொள்வதற்கு சாதாரண மக்களை குறிவைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது, தனது கருத்துரையை மாவட்ட சமுதாய, சீர்திருத்த உத்தியோகத்தர் கே.எம். நஜீம் தெரிவித்து முதலில் மாற்றமே அவசியம் என கருத்துரை வழங்கி வருகை தந்த அனைத்து வளவாளர்களுக்கு நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

1 DSC05225 DSC05226 DSC05228 DSC05233 DSC05235 DSC05238 DSC05240 DSC05243 DSC05250

காதலில் தோற்றுத் தான் பாருங்களேன்!!

Love

இந்த உலகில் அப்பா அம்மா இறந்தால் கூட கண்ணீர் விடுவார்கள், ஆனால் காதலியோ காதலனோ இறந்தால் தான் உயிரையே விடுவார்கள் என்ற வசனங்கள் எல்லாம், கேட்பதற்கும் பேசுவதற்கும் வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்.ஆனால், நிஜ வாழ்க்கையில் சற்றும் எடுபடாத ஒன்று, சிலர் காதல் தோல்வி அடைந்துவிட்டால், உலகமே இருண்டுவிட்டது போன்று எண்ணி ஒரு மூலையில் உட்கார்ந்து விடுவார்கள்.

ஆனால், எத்தனை பேருக்கு தெரியும் காதல் தோல்விக்குள்ளும் ஒளிமயமான வாழ்க்கை மறைந்து இருக்கிறது என்று.வாழ்க்கை என்பது நிலையானது அல்ல, எல்லாமே கடந்து போவது தான் என்பதை அழுத்தமாக உணர்த்தும் செயல் காதல் தோல்வி.எதற்காகவும் கண்ணீர் சிந்தி பயனில்லை, நமது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டியது மட்டுமே நமது பணி.

காதல் தோல்வி என்பது வாழ்க்கையின் வலிமையை தரவல்லது. மனதளவில் முதலில் பாதிப்படைந்தாலும், பின்னாளில் இதே வலிமையாக அமைகிறது.மேலும் வாய்ப்புகள் இருக்கிறது என உணர்த்துவதும் காதலே. முதல் தோல்வி முற்றிலும் தோல்வி அல்ல. அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி பெறலாம் எனும் பாடத்தை கற்பிப்பது காதல் தோல்வி தான்.

வாழ்க்கையில் விளையாட்டாக இருக்கும் ஆண்களை முதிர்ச்சி அடைய வைப்பது சில காதல் தோல்விகள் தான். இவர்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன, வாழ்க்கையின் அடுத்தக் கட்டம் என்ன என்று உணர்த்துவதும் சில காதல் தோல்விகள் தான்.

நமது வாழ்க்கையில் தானாக நடக்கும் அனைத்துமே நன்மைக்கே என்பதை உணர்த்துவது காதல் தோல்வி தான்.நூற்றில் பத்து பேர் தங்களுக்கான சிறந்த துணையை இழப்பது உண்டு. ஆனால், மற்ற 90 பேர் காதல் தோல்விக்கு பிறகு தான் தங்களுக்கு ஏற்ற உண்மையான துணை யாரென அறிகிறார்கள், இதுவே நிதர்சனமான உண்மை.

அரசியலில் உயர் பதவிக்கு ரஜனிக்கு அழைப்பு!!

Rajani-Kiran

புதுச்சேரி மாநிலத்தின் முன்னேற்றத் தூதராக ரஜினிகாந்த் வர வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார்.

புதுவை மாநிலத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள கிரண்பேடி அதிரடியாக பல விஷயங்களைச் செய்ய ஆரம்பித்துள்ளார்.

அம்மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும், முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் சில அறிவிப்புகளைச் செய்து வருகிறார்.

அதில் ஒன்றுதான் ரஜினிக்கான அழைப்பு. சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர் என்ற முறையில் ரஜினி, புதுவையின் முன்னேற்றத் தூதராக (Brand Ambassador for Prosperous Pudhucherry) வர வேண்டும் என்று ட்விட்டரில் கூறியுள்ளார் கிரண் பேடி.

மேலும் புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கபாலி படத்தின் டிக்கெட்டுகளை ஊக்கப் பரிசாக அம்மாவட்ட கலெக்டர் வழங்குவதாக அறிவித்துள்ளதாகவும், இது அங்கே பெரிய அளவில் வேலை செய்துள்ளது என்றும் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

வீட்டில் கழிப்பறை கட்டினால் 4 கபாலி டிக்கெட் இலவசம் : அரசின் புதுவித முயற்சி!!

Kabali Movie Tickets Advanced Booking Online

வீட்டில் கழிப்பறை கட்டினால் 4 கபாலி டிக்கெட் இலவசம் என்ற புதுவித முயற்சியை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளதாவது, புதுச்சேரி மண்ணாடிப்பட்டில் உள்ள செல்லிபட்டு கிராமத்தை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் இரு நாட்கள் ஆய்வு செய்தோம்.

அங்கிருந்த 772 வீடுகளில் 447 வீடுகளில் கழிவறை இல்லாதது அறிந்தோம். அதையடுத்து வீடுகளில் கழிவறை அவசியம் என்பதை வலியுறுத்தினோம்.

வீடுகளில் கழிவறை கட்ட அரசு 20 ஆயிரம் மானியம் தருவதை தெரிவித்தோம். மேலும், கழிவறை கட்டுவதை ஊக்குவிக்க புதிய முயற்சியை எடுத்தோம்.

மக்கள் தாமாகவே முன்வந்து யூலை 15க்குள் கழிவறை கட்டுவதை உறுதி செய்ய விரும்பினோம். அவ்வாறு கழிவறை கட்ட முன்வரும் குடும்பத்துக்கு ரஜினி நடித்த கபாலி படத்தின் 4 டிக்கெட்டுகள் தர முடிவு எடுத்துள்ளோம்.

திரையரங்குகளுடன் பேசி இதற்கான ஏற்பாடுகள் அடுத்து செய்வோம் என்று கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் இந்த முடிவு குறித்து ஆளுநர் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர், கழிவறை கட்டுவோருக்கு இலவச திரைப்பட டிக்கெட் தர உள்ளது நல்ல பலன் தரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் படத்துடன் உலகை வலம் வரும் எயார் ஏஷியா விமானங்கள்!!

Rajani

ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகின்றது. இதுவரை தமிழ்ப் படங்கள் பற்றிக் கேள்விப்படாத நாடுகள் கூட கபாலியை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், பிரபல சர்வதேச விமான நிறுவனமான எயார் ஏஷியா, கபாலி படத்தின் ப்ரமோஷனில் இதுவரை இல்லாத பிரமாண்டத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளது.

கபாலி படத்திற்காக ஏராளமான விமானப் பயணத் திட்டங்களை அறிவித்துள்ள அந்த நிறுவனம், இப்போது கபாலி விமானங்களை இயக்கி வருகிறது.

விமானத்தின் வெளிப்பாகம் முழுக்க ரஜினியின் உருவத்தை பிரமாண்டமாக வரைந்து, ‘சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி’ என்ற விளம்பரத்துடன் சர்வதேச அளவில் விமானங்களை இயக்குகிறது.

முகப்புப் பகுதியில் ரஜினி உச்சரிக்கும் ‘மகிழ்ச்சி’ என்ற வார்த்தை ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையிலிருந்து மலேசியா மற்றும் மலேசியாவிலிருந்து உலகின் முக்கியப் பகுதிகளுக்குச் செல்லும் தங்கள் விமானங்களின் வெளிப்புறத்தை கபாலி ஸ்பெஷலாக மாற்றியுள்ளமை உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இதுவரை உலகில் எந்தவொரு நடிகர் அல்லது படத்திற்காகவும் இவ்வாறு விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டதில்லை.

அந்தப் பெருமை முதல் முறையாக ஒரு தமிழ் நடிகருக்கும் தமிழ்ப் படத்திற்கும் கிடைத்திருக்கிறது.

ரஜினி, கபாலி என்ற பெயருடன் உலகை வலம் வருகின்றன எயார் ஏஷியா விமானங்கள்.

Rajani2

சூப்பர் சிங்கர் புகழ் சயித் இனி வெள்ளித்திரையில்!!

Syed_subahan

முன்பெல்லாம் சின்னத்திரைக்கும், வெள்ளித்திரைக்கும் பெரிய இடைவேளை இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் வெள்ளித்திரையில் ஜொலிக்கும் பல பேர் சின்னத்திரையில் இருந்து வந்தவர்களாக தான் இருக்கிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் என பலரை கூறலாம்.

தற்போது இவர்களின் வரிசையில் வெள்ளித்திரையில் அறிமுகமாக இருக்கிறார் சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சியின் போட்டியாளர் சயித் சுபாஹன்.

வெருளி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மைக் கதையை மையமாகக் கொண்ட படமாம். இந்த படத்தில் தான் அறிமுகமாக இருக்கிறார் சயித்.

துருக்கி விமான நிலைய தாக்குதலின் CCTV காட்சிகள்!!(காணொளி)

Turkey

துருக்கியின் இஸ்தான்புல் நகர விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர். 200 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

பயங்கரவாதிகள் விமான நிலையத்துக்கு வாடகைக் காரில் வந்ததாகவும், பயணிகளை நோக்கி தானியங்கித் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டுவிட்டு, உடலில் பொருத்தியிருந்த வெடிபொருளை வெடிக்கச் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தின்போது விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராவில் பதிவான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன.

அதில், விமான நிலைய நுழைவு வாயிலில் குண்டு வெடிக்கும் காட்சியும், மற்றொரு வீடியோவில் பயணிகளை நோக்கி சுட்டபடி வரும் பயங்கரவாதியை காவலர் ஒருவர் சுட்டு வீழ்த்துவது, கீழே விழுந்த அந்த பயங்கரவாதி தன் உடலில் பொருத்தியிருந்த வெடிபொருளை வெடிக்கச் செய்வது ஆகிய காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

வவுனியாவில் விவேகானந்தரின் சிலை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் திறந்துவைப்பு!!

 
வெங்கல செட்டிகுளம் சந்திக்கு அருகாமையில் இன்று (30.06.2016) காலை 9.00 மணிக்கு சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்துவைக்கப்பட்டது.

இந்துமத அலுவல்கள் மற்றும் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இச் சிலையை திரைநீக்கம் செய்துவைத்தார்.

இன் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், அரச ஊழியர்கள், மதத் தலைவர்கள் உட்பட பிரதேச மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

இவ் ஏற்பாட்டினை வெங்கல செட்டிகுளம் இந்து கலாச்சார பேரவை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-சங்கீதன்-

13563198_1297349566961431_1540045360_n 13578491_1297349590294762_424383127_n13552800_1297349476961440_1292165496_n13553361_1297349106961477_44721446_n13578701_1297349206961467_2028577539_n13565377_1297349156961472_444225131_n13552752_1297348736961514_2110451380_n  13553166_1297348746961513_809967128_n  13563450_1297348740294847_573547847_n13578999_1297348703628184_1181635314_n13553364_1297348976961490_1154180533_n 13563425_1297348876961500_312486629_n 13563215_1297349013628153_777351048_n 13563215_1297499536946434_193023134_n    13565375_1297348800294841_1462909327_n  13565393_1297349316961456_1318315074_n 13565432_1297348750294846_2023564904_n 13565585_1297349330294788_663917841_n 13565622_1297349576961430_1644942210_n 13566098_1297349656961422_959408910_n 13566128_1297349280294793_986768683_n 13576565_1297349600294761_429199019_n 13551097_1297348700294851_1776889841_n   13578960_1297348716961516_43575733_n  93551053_1297500980279623_1912331713_n13563386_1297403753622679_1471843001_n

வவுனியா ஆண்டியா புளியங்குளம் தௌஹீத் வீட்டுத்திட்ட பள்ளி இப்தார் நிகழ்வு!!

 
புனித றமழான் நோன்புக்கான இப்தார் நிகழ்வு நேற்று (29.06.2016) ஆண்டியா புளியங்குளம் தௌஹீத் பள்ளிவாயிலில் இடம் பெற்றது.

இன் நிகழ்விற்கு நிதி அனுசரணை Al-Hima Islamic Service- Sri Lanka வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இன் நிகழ்வினை கே.காதர் மஸ்தான் (பா.உ) (வன்னி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு- இணைத்தலைவர்) ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன் நிகழ்வினை அவரது இணைப்பாளர், பிரத்தியேக செயலாளர் ஊடாக செயலாளர் மற்றும் அவரது சகோதரர்கள் ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_5978 IMG_5979 IMG_5980 IMG_5986 IMG_5987

வவுனியா சிதம்பரபுரம் முகாம் மக்களின் முகாம் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி : சிதம்பர நகர் கிராமம் உருவாக்கம்!!

 
வவுனியா ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள சிதம்பரநகர் குடியேற்ற கிராமத்திற்கான திறப்பு விழாவும் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வும் சிதம்பரபுரம் பகுதியில் இன்று(30.06.2016) காலை 11மணிக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், மீள்குடியேற்ற புனர்வாழ்வு, இந்துகலாச்சார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா, எம்.பி.நடராஜ், ஜி.ரி.லிங்கநாதன், ஜெயதிலக,

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார, வவுனியா பிரதேச செயலக மேலதிக பிரதேச செயலாளர் திருமதி ச.கர்ணன், ஜக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர், உறுப்பினர்கள், மற்றும் அரச உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன்,

வடமாகாண முதலமைச்சரினால் 193 குடும்பங்களுக்கான காணி உறுதி அனுமதிப்பத்திரமவழங்கி வைக்கப்பட்டது. 13.5 மில்லியன் ரூபா செலவில் தலா 70 ஆயிரம் அரை நிர்மாண வீட்டிற்கான காணி அனுமதிப்பத்திரமே வழங்கி வைக்கப்பட்டது.

DSC_0005 DSC_0006 DSC_0007 DSC_0008 DSC_0009 DSC_0010 DSC_0011 DSC_0012 DSC_0015 DSC_0016 DSC_0017 DSC_0018 DSC_0019 DSC_0024 DSC_0031 DSC_0035 DSC_0044 DSC_0052 DSC_0053 DSC_0054 DSC_0055 DSC_0056 DSC_0057 DSC_0058 DSC_0059 DSC_0060 DSC_0065 DSC_0066 DSC_0067 DSC_0069 DSC_0073 DSC_0075

வவுனியா வெங்கலச் செட்டிகுளம் கல்வி அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் அரும்புகள் முன்பள்ளி திறப்பு விழா!!

 
வெங்கல செட்டிக்குளம் கல்வி அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தினால் முகத்தான்குளம் அரும்புகள் பயிலக முன்பள்ளியின் திறப்பு விழா நேற்று (29.06.2016) அந் நிதியத்தின் தலைவர் P.V.அன்ரனிற்றோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் B.C.R.பபா பாஜோன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா, செட்டிகுளம் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சி.சண்முகானந்தன், பிரம்மஸ்ரீ ஐ.ராஜ் சர்மா
மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள், கமக்கார அமைப்புத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பிரதம விருந்தினர்களால் முன்பள்ளியின் பெயர்ப் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1 IMG_3889 IMG_3891 IMG_3893 IMG_3894

பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும தற்கொலை முயற்சி!!

Palitha

இலங்கை அரசாங்கத்தின் உள்துறை மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். இந்தத் தகவலை மத்துகம பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையின் தென்பகுதி கரையோரப் பிரதேசமான களுத்துறை மாவட்டத்தின் மதுகம பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிலேயே இவர் இன்று வியாழக்கிழமை காலை தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

மத்துகம மீகாதென்ன ஆரம்ப பாடசாலை நிர்வாகம் தரம் ஒன்றுக்கு விண்ணப்பித்தவர்களில் 10 பேரை சேர்த்துக்கொள்ள மறுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உள்துறை மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும நேற்று முன்தினம் மாலை மத்துகம வலையக் கல்விப் பணிமனைக்கு எதிரில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

எனினும் இரண்டு நாள் கடந்தும் பாடசாலை நிர்வாகமோ வலயக் கல்விப் பணிமனையோ விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட சிறுவர்கள் பத்து பேரையும் இணைத்துக்கொள்ள மறுத்ததை அடுத்து குறித்த பாடசாலைக்குள் புகுந்த பிரதியமைச்சர் அங்கிருந்த மின்விசிறியில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்த பொலிசாரும் அவரது ஆதரவாளர்களும் அவரை காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பத்து சிறுவர்களையும் இணைத்துக்கொள்ள மீகாதென்ன ஆரம்ப பாடசாலை அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

பலாத்தகாரத்துக்குள்ளான பெண்ணுடன் சிரித்த முகத்தில் செல்பி!!

30-1467272230-selfie-600

இந்தியா ராஜஸ்தானில் பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுடன் அம்மாநிலத்தின் மகளிர் சங்க உறுப்பினர் சிரித்த முகத்துடன் செல்பி எடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் மகளிர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் எடுத்த செல்பி இணையத்தில் பரவி வருகிறது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு மகளிர் சங்கத்தின் உறுப்பினருக்கு சங்கத்தின் தலைவி உத்தரவிட்டுள்ளார்.சம்பவத்தன்று ஜெய்ப்பூர் வடக்குப் பகுதியில் உள்ள மகிளா பொலிஸ் நிலையத்திற்கு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது ராஜஸ்தான் மகளிர் சங்கத்தின் தலைவி சுமன் ஷர்மா மற்றும் உறுப்பினர் குர்ஜார் ஆகியோர் அப்பெண்ணை நேரில் சந்திக்க அங்கு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சுமன் விசாரித்துக் கொண்டிருந்த போது, அருகில் இருந்த குர்ஜார் இந்த செல்பிக்களை எடுத்துள்ளார்.அதுவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அருகில் சிரித்தபடி முகத்தை வைத்துக் கொண்டு அவர் செல்பி எடுத்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்த வேறு ஒருவர் அதை புகைப்படமெடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்து விட்டார்.பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்ட குர்ஜாருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்த நிலையில் , இந்த செல்பி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என மகளிர் சங்கத் தலைவி சுமன் ஷர்மா விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக மகளிர் சங்கத் தலைவி சுமன் ஷர்மா தெரிவிக்கையில்,

“பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுடன் நான் பேசிக்கொண்டிருந்த போது சங்க உறுப்பினர் இந்த செல்பிக்களை எடுத்துள்ளார். அவர் செல்பி எடுக்கும் போது நான் கவனிக்கவில்லை. இது போன்ற செயல்களில் எனக்கு உடன்பாடு கிடையாது.எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு நான் அவரை கேட்டுக்கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், ராஜஸ்தானில் உள்ள அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். வரதட்சணையாக 51 ஆயிரம் வழங்காததால் தனது கணவர் மற்றும் இரு சகோதரர்களால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.அத்துடன் அப்பெண்ணின் நெற்றியிலும் கையிலும் கணவர் குடும்பத்தார் ‘வரதட்சணை தராததவர்’ என பச்சை குத்தியுள்ளனர்.