சிவகார்த்திகேயன் நடிக்கும் ரெமோ படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. ஏனெனில் இதில் இவர் பெண் வேடம் அணிந்து வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் பலத்த வரவேற்பு பெற்றுள்ளது.இப்படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷை காதலிக்க வைக்க தான் பெண் வேடம் அணிவாராம்.
மேலும், இப்படத்தில் ஒரு ஹீரோயின் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார்.அவரு வேரு யாரும் இல்லை, சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிசட்டை படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யா தானாம்.
சிவகார்த்திகேயன் தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிவிட்டார். இவர் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் ரெமோ.இப்படத்தின் சிங்கிள் ட்ராக் ஏற்கனவே வெளிவந்துவிட்டது,
இந்நிலையில் அடுத்த பாடல் இன்று SIIMA விருது விழாவில் வெளியிடவுள்ளார்களாம்.இந்த பாடல் ‘செஞ்சிட்டாளே’ என்ற வரிகளில் தொடங்கும் என கூறியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த பாட்டி ஒருவருக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதித்து வியட்நாம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Nguyen Thi Huong என்ற 76 வயது பாட்டி ஒருவர் 1.6kg போதைபொருளை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார், இது தொடர்பான வழக்கு வியட்நாம் Ho Chi Minh City நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இப்பெண்மணி, தான் கொண்டு சென்ற பொருளில் போதைபொருள் இருந்தது தெரியாது என்று கூறியுள்ளார், இருப்பினும் பிரதிவாதியின் பதிலை ஏற்க மறுத்த நீதிபதி அவருக்கு மரணதண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், எனது உடல்நிலை மோசமாக உள்ளது என கூறி அவர் மேல்முறையீடு செய்துள்ளார், ஆனால் இந்த மேல்முறையீடு தோல்வியடையும் வீதத்தில், விஷ ஊசி மூலம் இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.இந்த வழக்கு குறித்து அவுஸ்திரேலியா வெளியுறத்துறை அமைச்சர் கூறியதாவது, தூதரகம் சார்பில் அவருக்காவும், அவரது குடும்பத்தினருக்காகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.
உலக நாடுகளில் போதைபொருள் கடத்தல் வழக்கில் கடுமையான சட்டங்களை பின்பற்றி வரும் நாடுகளில் வியட்நாம் நாடும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தில் இந்து கோயில் பூசாரி ஒருவர் இன்று காலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.சமீபகாலமாக வங்கதேசத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.இந்த கொலைவெறி தாக்குதலுக்கு அங்குள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில் ஜினைதா மாவட்டத்தில் இன்று காலை பூசாரி ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்து கோயிலில் பூசாரியாக பணியாற்றிவந்த ஷைமானந்தா(45) என்பவர் இன்று அதிகாலை பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று வாலிபர்கள் அவரை வீச்சரிவாளால் துடிதுடிக்க வெட்டிக் கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இந்த கொலைக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளே காரணமாக இருக்கலாம் என மாவட்ட காவல்துறை தலைவர் கோபிநாத் காஞ்சிலால் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா நாட்டில் 10 ராணுவ வீரர்களுடன் பயணமான விமானம் ஒன்று நடுவானில் மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைபீரியாவில் உள்ள Krasnoyarsk என்ற காட்டுத் தீ பரவி வருகிறது. தீயை கட்டுப்படுத்த Russian IL-76 என்ற மீட்பு விமானத்தில் 10 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டனர்.
காட்டுப்பகுதிக்கு சென்ற அந்த விமானம் தீயை கட்டுப்படுத்தும் ஈடுப்பட்டபோது, திடீரென காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தொடர்ந்து பாராசூட்கள் உதவியுடன் சுமார் 100 மீட்புகுழுவை சேர்ந்த வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுப்பட்டு வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு புதிதாக நியமிக்கப்படுபவரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும் என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநராகக் கடமையாற்றிய அர்ஜுன் மகேந்திரனின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
10 இல் கல்வி கற்கும் தனது காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 17 வயது இளைஞனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞன் தனது கல்வியை இடைநிறுத்திவிட்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். குறித்த மாணவியின் தாய் வெளிநாடொன்றில் பணிபுரிந்துள்ள நிலையில், மாணவி தந்தையுடன் சிலாபம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி குறித்த மாணவி காணமல் போயுள்ள நிலையில், மாணவியின் தந்தை மகளை தேடவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. எனினும் வெளிநாட்டிலிருந்து வருகைத்தந்த தாய் மகளை தேடியுள்ளதுடன், கணவரை பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு தெரிவித்துள்ளார். அதன் பிறகு குறித்த மாணவியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இருவரையும் கண்டுபிடித்து விசாரணையை மேற்கொண்டதில் இளைஞன் மாணவியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டமை தெரியவந்துள்ளது. இதன்போது மாணவி பொலிஸாரிடம், குறித்த இளைஞனை காதலித்ததாகவும், அதன் காரணமாகவெ இளைஞன் கடத்திச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
கடத்திச் சென்ற இளைஞன் மாணவியை தன்னுடைய இடத்தில் இரண்டு நாட்கள் தங்க வைத்திருந்ததோடு, ஏப்ரல் 15 ஆம் திகதி கறுவலகஸ்வெவ பகுதியிலுள்ள இளைஞனின் உறவினரின் வீட்டில் தங்க வைத்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இதேவேளை மணவி வைத்திய பரிசோனைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இளைஞனை கைது செய்து சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
30,000 ரூபா வரையில் மாத வருமானம் பெற்றுக் கொள்வோருக்கு இலவச சட்ட உதவிகளை வழங்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. 30,000 ரூபா வரையில் மாத வருமானத்தைக் கொண்டவர்களுக்கு இலவச அடிப்படையில் சட்ட உதவிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜிப்ரி அழகரட்னம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் 15,000 ரூபா மாத வருமானம் ஈட்டுவோருக்கு மட்டுமே இலவச சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சலுகை மாதம் 30,000 ரூபா வருமானம் ஈட்டுவோருக்கும் வழங்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, சங்கத்தின் சிரேஸ்ட சட்டத்தரணிகள் சட்ட உதவிகளை ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள் என சங்கத்தின் உப தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலதிக வகுப்புக்குச் செல்வதாக கூறி காட்டுப் பகுதிக்குச் சென்ற பாடசாலை மாணவ, மாணவியர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை பிரதேசத்தில் பிரபலமான பாடசாலை ஒன்றில் இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவ, மாணவியர்கள் நால்வரே, கடந்த 26ம் திகதி காட்டுப் பகுதிக்குச் சென்றதாகவும், நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் திரும்பி வராததை அவதானித்த பிரதேசவாசிகள் களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்ற போது மாணவர்கள் இருவர் தப்பிச்சென்று பின்னர் பொலிஸில் சரணடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது ஒருவருக்கு ஒரு லட்சம் அடிப்படையில் பிணை வழங்கி விடுவிக்க களுத்துறை நீதவான் நீதிபதி உதேஸ் ரணதுங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவிகள் இருவரையும் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் அனுமதி கிடைக்கும் வரை ஆனமடுவ நீதிமன்றஅதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் போத்தல்களை விநியோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனமடுவ நீதவான் நீதிபதி ஜனனி.எஸ்.விஜயதுங்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
நவகத்தேகம – முல்லேகம பிரதேச வர்த்தக நிலையங்களில் 5 லீற்றர் குடிநீர்போத்தல்களில் கழிவு கலந்துள்ளதாக கூறி சுகாதார பரிசோதகர்களின் பொறுப்பில் குறித்த நீர் போத்தல்கள் எடுக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனைக்கு அமைய குறித்த போத்தல்களில் எணணெய் மற்றும் கிரீஸ் என்பன கலந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்காரணமாக சுகாதார அமைச்சின் அனுமதி கிடைக்கும் வரை குறித்த குடிநீர்போத்தல்கள் விநியோகம் தடைசெய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இனந்தெரியாத பெண்ணொருவர் நேற்று பிற்பகல் தனது தாயாரை கடுகண்ணாவ பேருந்து நிலையத்தின் அருகில் கைவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக்கண்ட பிரதேசவாசிகள் இணைந்து, குறித்த பெண்ணை கடுகண்ணாவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.நிச்சயம் இவர் போன்ற பெண்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே, மேலும் 80 வயதான தாயை தெருவில் விட்டு சென்ற பெண் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்கு பணிமனையில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் குடும்பஸ்தர் நேற்றிரவு காயங்களுடன் நொச்சிக்குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.
முதுகுப் பகுதியில் பலத்த எரிகாயங்களுடன் குறித்த குடும்பஸ்தர் மீட்கப்பட்டுள்ளார்.
மன்னார் பள்ளிமுனை தெற்கைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான எஸ்.அன்ரன் டெனி (வயது-38) என்ற குடும்பஸ்தர் நேற்று முன்தினம் புதன்கிழமை அதிகாலை உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்கு பணிமனையில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டார்.
குறித்த கடத்தல் குறித்து அவரது மனைவி நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்கு பணிமனையில் கடமையாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஆலய பங்கு பணிமனையில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
குறித்த கடத்தல் குறித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடத்தப்பட்ட குறித்த குடும்பஸ்தர் கண் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் நேற்றிரவு நொச்சிக்குளம் கிராம பகுதியில் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குடும்பஸ்தரின் அபயக்குரலை செவிமடுத்த சிலர் உடனடியாக உயிலங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று காயங்களுடன் காணப்பட்ட குறித்த குடும்பஸ்தரை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
குறித்த குடும்பஸ்தரின் முதுகுப் பகுதியில் பலத்த எரிகாயங்கள் காணப்படுகின்றது.
குறித்த குடும்பஸ்தரின் கடத்தல் குறித்து மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கெண்டு வருகின்றனர்.
குறித்த குடும்பஸ்தர் ஏன், எதற்காக கடத்தப்பட்டார் என்ற விடயம் இது வரை வெளியாகவில்லை.
தமிழ், தெலுங்கு பட உலகின் முன்னணி நாயகியாக இருப்பவர் சமந்தா. தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் இவருக்கு அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
இந்த நிலையில், ‘ஒருவரை காதலிக்கிறேன், அவர் யார் என்ற விவரத்தை திருமண அறிவிப்பின்போது வெளியிடுவேன்’ என்று சமந்தா ஒரு பேட்டியில் தெரிவித்தார். காதலர் யார் என்பதை அறிவதில் ரசிகர்கள் தீவிர ஆர்வம் காட்டினார்கள். இதனால் சமந்தா காதல் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இப்போது சமந்தாவின் காதலர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் இளம் நாயகனுமான நாகசைதன்யா என்பது உறுதியாகி இருக்கிறது. தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.
இதை அறிந்த நாகசைதன்யாவின் பெற்றோர் சமந்தமாவை தங்கள் வீட்டுக்கு அழைத்து பேசினார்கள். நாகசைதன்யாவிடமும் கேட்டனர். இதில் இருவரும் தீவிரமாக காதலிப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவுசெய்தனர்.
இதற்கிடையே சமந்தாவும், நாகசைதன்யாவும் ஒரே வீட்டில் சேர்ந்து இருப்பது போன்ற வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத்தில் உள்ள ஒரு வீட்டின் பல்கனியில் இருவரும் ஜோடியாக பேசிக்கொண்டு உலா வருவதை யாரோ ரகசியமாக படம் எடுத்து வெளியிட்டிருந்தனர்.
இப்போது இவர்கள் காதல் பற்றிய செய்திகள் தொடர்ந்து விதம் விதமாக வெளியாகி வருகின்றன. எனவே சமந்தா– நாகசைதன்யா திருமண நிச்சயதார்த்தத்தை விரைவில் நடத்த இரண்டு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர்.
தற்போது நாகசைதன்யா ‘பிரேமம்‘ தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று தெரிகிறது.
சிறுவனின் உடல் எடை இப்படியே கூடிக்கொண்டு சென்றால் அவன் உயிரிழக்க நேரும் என பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
இதனால், ஆர்யாவிற்கு வழங்கும் உணவின் அளவைக் குறைத்துவிட்டனர்.
ஆர்யா உண்பதிலும் உறங்குவதிலும் மாத்திரமே நேரத்தை செலவிடுவதாகவும் சில நேரங்களில் குழியல் தொட்டிக்குள் சென்று படுத்துக்கொள்வதாகவும் அவனது அம்மா தெரிவித்துள்ளார்.
ரொக்கயா (35) அடே சொமன்ட்ரி (45) தம்பதியரின் இரண்டாவது மகனான ஆர்யா பிறந்த போது சாதரணமான 3.2 கிலோ எடையுடனே இருந்துள்ளான்.
அவனுக்கு இரண்டு வயது ஆன போது வயதுக்கு ஒத்த உடல் எடையைக் காட்டிலும் அதிகமாக இருந்துள்ளது. தொடர்ச்சியாக அவனது எடை அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது.
விவசாயம் செய்து வரும் ஆர்யாவின் தந்தையால், தனது மகனுக்கு போதிய உணவை வாங்கிக் கொடுக்கவே பணம் போதுமானதாக இல்லை.
சில சமயங்களில் தனது மகனின் உணவுக்காக கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்த போது, குறைபாடுகள் எவையுமில்லை எனவும் பண வசதி இருந்தால் பெரிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று காண்பிக்குமாறும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தன்னால் அதிகளவான மருத்துவ செலவுகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் ஏனைய சிறுவர்களைப் போன்று தனது மகனையும் பார்க்கக்கூடிய வாய்ப்பு தனக்குக் கிடைக்கும் என நம்புவதாகவும் ஆர்யாவின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
ஆர்யாவின் பெற்றோர் தற்போது அவனுக்கு கட்டுப்பாடான உணவு வகைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதிகாலையில் எழும்படி நம் வீடுகளில் பெரியவர்கள் கத்திக்கொண்டே இருப்பார்கள். ஆனால் பலருக்கு அதுதான் உலக மகா கஷ்டமான காரியம். சரி, அதிகாலையில் எழுவதில் அப்படி என்ன நன்மைகள் இருக்கின்றன என்று தெரியுமா?
அதிகாலையில் மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இதனால், தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும்.
காலையில் தூய்மையான காற்றைச் சுவாசிப்பதால், நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் நெருங்காது. அதிகாலையில் மூச்சுப் பயிற்சி, யோகா செய்வது, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நலம் பயக்கும்.
அதிகாலையில் எழுவதால் மன அழுத்தம் குறையும். அன்றைய நாளில் என்னென்ன வேலைகள் இருக்கின்றன, அவற்றில் எவற்றை, எப்போது, எங்கே, எப்படி முடிப்பது என எளிதாகத் திட்டமிட முடியும்.
உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது, அதிக ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்ய முடியும். அதிகாலை எழுவதால், காலை வேளையில் கபகபவென்று பசி எடுக்கும். காலை ஆகாரத்தை தவறவிடாமல் இருப்பதால், உடல் பருமன், சர்க்கரைநோய் அபாயம் குறையும்.
இரவு 9 மணிக்கெல்லாம் உறக்கம் தானாக வர ஆரம்பிக்கும். இரவு சரியான நேரத்துக்குத் தூங்குவதால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது. வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும்.
அதிகாலை எழுவதால் சரியான நேரத்தில் இயற்கைக் கடனைக்கழிக்க முடியும். அது, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும். நச்சுக்கள் சீராக வெளியேறுவதால் சிறுநீர், கல்லீரல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் சீராக இயங்கும்.
உடல்நலனுக்கு மட்டுமல்ல, மனநலனுக்கும் அதிகாலையில் எழுவது சிறந்தது. எனவே, அதிகாலையில் எழும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக வழக்கமாக்கிக் கொள்வோம்.
இந்தியாவின் ஆந்திரமாநிலத்தில் பிளாஸ்டிக் கவரை முகத்தில் மூடி விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவன் மூச்சுத் திணறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் குகட்பள்ளி அருகே உள்ள நிசாம்பேட் பகுதியை சேர்ந்த சிறுவன் ஸ்ரீயான் (வயது 4) சம்பவத்தன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது பிளாஸ்டிக் கவரை எடுத்து, தனது முகத்தில் மூடியுள்ளான். இந்நிலையில் முகத்தில் இறுக்கமாக மூடியதால் கவரை எடுக்க முடியாமல் சிறுவன் திணறி உள்ளான்.
இதனால் மயக்கம் அடைந்த சிறுவன் கீழே விழுந்துள்ளான். சிறுவனின் சத்தம் கேட்காமல் இருந்ததால் உள்ளே இருந்த பெற்றோர் ஓடி வந்து பார்த்துள்ளனர்.
சிறுவன் கீழே விழுந்து கிடந்ததை பார்த்த அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதனை செய்த வைத்தியர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுவனின் விளையாட்டு இறுதியில் விபரீதத்தில் முடிந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.