பங்களாதேஷில் இன்று இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் இரண்டு பேர் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் தீவிரவாதிகள் இன்று இரவு திடீர் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.
இந்த சம்பவத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பேர் பலியானதுடன் 40 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த துப்பாக்கிப்பிரயோகத்துக்கு ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியிருப்பதாக சி.என்.என் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் உணவகத்தில் இருந்த 20 பேரை தீவிரவாதிகள் பணயக் கைதியாக பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்களாதேஷில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த தகவலை ட்விட்டரில் பதிந்துள்ளது. தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள 20 பேரில் இரண்டு இலங்கையரும் உள்ளடங்கிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் உடனடி கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடுகஸ்தோட்டை – நவயாலத்தன்னை எனும் இடத்தில் நீராடச்சென்ற தாயும் மகனும் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த தாயும் மகனும் ஆற்றில் இருக்கும் போது கரையேரமாக இருந்த ஒரு மரத்தின் கீழ்பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது.
இதன் போது படு காயமுற்ற நிலையில் இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெடிப்பு சம்பந்தமாக இராணுவப்படையினர் தற்போது ஆராய்ந்து வருவதாகவும், இந்த குண்டு எப்படி வெடித்தது, எங்கிருந்து வந்தது போன்ற தகவல்கள் மர்மமாகவே உள்ளது என பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ் நகர்ப்புறத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் போதைவஸ்து பாவனை சில மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், பாடசாலை நேரத்தில் போதைவஸ்து பாவனை குற்றச் செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதாகவும் அத்தகைய மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
100 கிலோ கஞ்சா உடைமையில் வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கு தொடர்பான பிணை மனு யாழ் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி இளஞ்செழியன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
யாழ் நகரில் உள்ள பிரபல பாடசாலைகளில் உள்ள ஒரு சில மாணவர்களே பாடசாலை நேரத்தில் பாடசாலை வளாகத்தில் மது அருந்துதல், புகை பிடித்தல் மற்றும் போதை கலந்த இனிப்புகளை உண்ணுதல் போன்ற போதைவஸ்துகளைப் பயன்படுத்துகின்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக மேல் நீதிமன்றத்திற்குச் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீதிபதி கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
யாழ்ப்பாணம் நகர்ப்புற பிரபல பாடசாலைகளில் ஒரு சிறு தொகை மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் கல்வி கற்கும் நேரத்தில் போதைவஸ்து பாவிப்பதாகவும், போதை கலந்த இனிப்புகளை உண்பதாகவும், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதாகவும் பாடசாலை சமூகங்களினால் மேல் நீதிமன்றத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அந்தப் பாடசாலைகளின் ஒருசில ஆசிரியர்களும் ஒத்துழைப்பும் உதவியும் வழங்கி வருவதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் பராயத்தினராகிய சிறுதொகை மாணவர்களே இத்தகைய போதைவஸ்து பாவனை குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்தக் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற பாடசாலைகள் அமைந்துள்ள பிரதேசங்கள் மது பாவனை மற்றும் சிகரட் பாவனை தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக இருந்த போதிலும் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் ஆசிரியர்கள் அதிபர்கள் இந்தக் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அச்சமடைந்திருப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுடைய பெற்றோருக்கு அதுபற்றி அறிவித்து, அவர்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டியது அதிபர் ஆசிரியர்களின் கடமையாகும்.
இத்தகைய மாணவர்களை பொலிஸாரின் ஊடாக நேரடியாகக் கண்காணித்து, அவர்களைக் கையும் மெய்யுமாகப் பிடிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
அந்தப் பாடசாலைகளின் ஏனைய மாணவர்களின் ஒழுக்கம், கல்வி, எதிர்காலம் என்பவற்றின் நலன் கருதி போதைவஸ்து பாவனை குற்றச் செயல்களுக்காகக் கைது செய்யப்படுகின்ற மாணவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
போதைவஸ்து பாவனை இளம்பராயத்தினர் மத்தியில் அதுவும் மாணவர்கள் மத்தியில் அனுமதிக்கப்பட முடியாது. அவர்கள் மத்தியில் இத்தகைய குற்றச் செயல்கள் இடம்பெறுவதை சட்டத்தை நேசிப்பவர்களும், சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களும் பார்த்திருக்கவும் முடியாது என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வழிதவறிய நிலையில் தெருவில் அனாதையாக நின்ற ஒரு சிறுவனை பொலிஸார் மீட்டு அனாதை இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.
புவலோஜன் என்ற சிறுவன் இன்று மதியம் கொழுப்பில் வழிதவறி நடமாடிக்கொண்டிருந்துள்ளார். இதை அவதானித்துள்ள பொலிஸார் சிறுவனை மீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுடன் மாகொல முஸ்லிம் அனாதையில்லத்தில் தங்க வைத்துள்ளனர்.
குறித்த சிறுவனின் தந்தையின் பெயர் புண்ணியசீலன் எனவும் தாயின் பெயர் குணவதி எனவும் சகோதரியின் பெயர் கலா எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சிறுவன் மோதரை – இப்பாவத்தயில் வசிப்பதாகவும் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றுகொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
குறித்த சிறுவன் பற்றிய விபரம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு, குழந்தையைப் பெற்றோருடன் சேர்ப்பதற்கு உதவ வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
காட்டு மிருகங்களை வேட்டையாடிவரும் கும்பல் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகிவருன்றது.
இந்த நிலையில் இது தொடர்பில் பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டு என முகப்புத்தகம் வாயிலாக பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதேவேளை, குறித்த புகைப்படங்களில் அரிய வகை மிருகங்களான மான், வௌவால், காட்டுப்பூனை, முயல், மரை, முள்ளம்பன்றி, காட்டுக்கோழி, மர அணில் போன்ற மிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளன.
வேட்டையாடப்பட்ட மிருகங்களுடன் குறித்த நபர்கள் துப்பாக்கிகளுடன் நின்றவாறு எடுத்த படங்களும் உணவுக்காக பயன்படுத்தப்படுவது போன்ற படங்களும் பதிவேற்றப்பட்டுள்ளன.
குறித்த படங்களில் துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் என்பனவும் காணப்படுகின்றன.
எது எவ்வாறாக இருப்பினும் குறித்த புகைப்படத்திலுள்ளவர்கள் தொடர்பில் பொலிஸார் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அனைவரது வேண்டுகோளாகவும் உள்ளது.
சுவிஸின் தூண் மாநகர சபை உறுப்பினரான திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன், பிராத்ஹவுசில் இடம்பெற்ற கூட்டத்தில் சேலை அணிந்த முதல் தமிழ்ப்பெண்ணாக கலந்து கொண்டார்.
குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட தர்ஷிகா கருத்துத் தெரிவிக்கையில், எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. வாக்களித்த தூண் வாழ் மக்களுக்கு என்னால் முடிந்த சேவைகளை இன்றிலிருந்து செய்ய கடமைப்பட்டுள்ளேன்.
சுதந்திரமான வாழ்வுக்கும், சுகாதாரமான வாழ்வுக்கும், கல்வி, பிள்ளைகள் மற்றும் குடும்பம் போன்ற விடயங்களில் கூடுதலாக அழுத்தத்தை கொடுத்து சேவையாற்ற பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் வசிக்கும் 37 வயது அதிசய மனிதன் டிம் பிரெய்டு. இவரது உடலில் எந்த விஷம் ஏறினாலும் பாதிப்பதில்லை. இவர் தனது உடலில் விஷ முறிவு ஏற்படும் வகையில் தன்னை தயார்படுத்தி வந்தார். அதன்பிறகு 2 முறை அவரை ஒரு நாகம் கடித்தது. ஆனால் உடலில் விஷம் ஏறவில்லை.
இதேபோல் விஷ ஊசி போட்டும் சாகவில்லை. இதையடுத்து அவரது உடல் எந்த விஷத்தையும் ஏற்றுக்கொள்ளும் சக்தி பெற்றது. கடந்த 16 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட விஷ பாம்புகளை கடிக்க விட்டுள்ளார். விஷ ஊசிகளும் போட்டுள்ளார். ஆனால் மரணம் அவரை நெருங்க முடியவில்லை.
இவரை பார்த்து விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்தனர். இவரது உடலை வைத்து பரிசோதனைகள் செய்து வருகிறார்கள். விஷ மனிதனுக்கு 20 வயதில் திருமணம் ஆனது. திருமணத்துக்கு பின்புதான் டிம் இந்த விஷ பரீட்சையில் இறங்கி இருக்கிறார்.
உலகில் எந்தவித கொடிய விஷப்பாம்பாக இருந்தாலும் கடிக்க விடுங்கள் பார்ப்போம் என்று சவால் விடுகிறார்.
உலகை உலுக்கிய போர்களில் ஒன்றாக அறியப்படும் சோம் போரின் நூறாவது நினைவு நாள் இன்று ஐரோப்பாவில் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த போரில் மொத்தம் பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர் அல்லது படுகாயமடைந்தனர். கடந்த இருநூறு ஆண்டுகளில் உலகில் நடந்த போர்களில் மொத்தம் நான்கு கோடி பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வரைபடம் 1817 முதல் 2007 ஆம் ஆண்டுவரை உலக அளவில் நாடுகளுக்கு இடையில் நடந்த போர்கள் அல்லது நாடுகளுக்குள்ளேயே நடந்த உள்நாட்டுப்போர்களில் கொல்லப்பட்டவர்களின் தேசிய அடையாளங்களை காட்டுகிறது.
இதில் இருக்கும் வட்டங்களின் அளவு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறிப்புணர்த்துகின்றன.
இந்த வரைபடத்தில் ஐரோப்பிய கண்டத்தின் மீது தோன்றும் மிகப்பெரிய வட்டங்கள் முதலாவது மற்றும் இரண்டாவது உலகப்போர்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறிக்கிறது.
டெல்லியை சேர்ந்த சோனு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்டான். தற்போது 12 வயதான நிலையில் அவன் மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
டெல்லியை சேர்ந்த சோனு கடந்த 2010ம் ஆண்டு கடத்தப்பட்டான். இந்நிலையில் வங்காளதேசம் ஜெஸ்சோர் என்ற நகரில் உள்ள குழந்தைகள் மறுவாழ்வு மையத்தில் சோனு தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெஸ்சோர் நகரில் உள்ள நபரிடம் தான் டெல்லியை சேர்ந்தவர் என்றும், பெற்றோர் குறித்த விவரங்களை கூறியுள்ளான்.
அதனை தொடர்ந்து டெல்லியில் சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்ட அந்த நபர் வங்காள தேசத்தில் சிறுவன் தங்கி இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம் தங்கள் மகனை மீட்டுத்தரும்படி சிறுவனின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
வேண்டுகோளை ஏற்ற சுஷ்மா சுவராஜ் சிறுவனின் மரபணுவையும், சிறுவனின் தாயார் மரபணுவையும் ஒப்பிட்டு அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டார்.
மரபணு சோதனையில், இருவரின் மரபணுக்களும் ஒத்துபோனது கண்டறியப்பட்டது. இதற்கிடையே, வங்காளதேசத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்த சுஷ்மா, சோனுவை மீட்கும்படி உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் அனாதை இல்லத்தில் இருந்து சோனுவை தூதர அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். பத்திரமாக மீட்கபட்ட சிறுவன் இன்று டெல்லி வந்து சேர்ந்தான். பின்பு அவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
சிறுவனை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்த சுஷ்மா சுவராஜிக்கு சிறுவனின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். பெற்றோருடன் வந்து தன்னை சந்தித்த அந்த சிறுவனை, வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் கனிவுடன் பேசினார்.
சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்திய மூன்று நாள் டெங்கு ஒழிப்பு திட்டத்தின் முதல் நாளில் 18,055 இடங்கள் டெங்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நேற்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் நாளை வரை இடம்பெறவுள்ளது.
டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் மிகுந்த கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு திட்டத்தில், டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சுற்றாடலை வைத்திருந்த 139 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 853 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
10 மாவட்டங்களில் டெங்கு தொற்று பரவும் நிலை காணப்படுவதாக டெங்கு ஒழிப்பு பிரிவினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டப் பிரேரணைகளில் ஒன்று வவுனியாவில் 200 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றினை அமைப்பதாகும்.
வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் வவுனியா நகருக்கு மிக அண்மையாகவுள்ள தாண்டிக்குளத்தில் அமைக்கப்பட வேண்டுமா? அல்லது நகரில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ள ஓமந்தையில் A9 வீதிக்கு அண்மையாக அமைய வேண்டுமா? என்ற இட அமைவு பற்றிய சர்ச்சை முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டாலும் அது பற்றிய வாதப் பிரதி வாதங்கள் மற்றும் ஏட்டிக்குப் போட்டியான உண்ணாவிரதங்களும் ஊர்வலங்களும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.
பல்வேறு இழுபறிகள் மத்தியில் வடக்கு மாகாண சபையின் ஏகமனதான தீர்மானப்படி தாண்டிக்குளத்தில் அமைக்க முடிவெடுக்கப்பட்டதாக அறியமுடிந்துள்ள போதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் இலங்கையில் பொருளாதார மத்திய நிலையங்கள் தொடர்பாக பொதுவாகவும் வவுனியாவின் அமைவிடம் பற்றிய கருத்துக்கள் சில பொது மக்களதும் அது சார்ந்த அமைப்புக்களதும் கவனத்திற்காகவும் சிந்தனைக்காகவும் சமர்ப்பிக்கப்படுகிறது.
இணையத்தள தகவல்களின் படி இலங்கையில் 15 பொருளாதார மத்திய நிலையங்கள் தொடர்பான தகவல்களைப் பெற முடிந்துள்ளது. அவை அனைத்தும் 4 தொகுதிகளாகப் பிரித்துப் பார்க்கக் கூடியதாகவுள்ளது.
மொத்த சில்லறை வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டவை 04, உற்பத்திப் பிரதேசங்களை மையமாகக் கொண்டவை 08, சில்லறை வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டவை 01, அமைக்க உத்தேசிக்கப்பட்டவை 01 என அவற்றை இனங்காண முடிந்துள்ளது.
இந்நிலையில் வவுனியாவில் அமைக்கப்படவுள்ளது எந்த வகையைச் சார்ந்தது என்பது தெளிவுபடுத்தப்படுத்தப்பட வேண்டிய விடயமாகவே உள்ளது.
வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சியில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றினை அமைக்க உத்தேசிக்கப்பட்டிருந்தும் வவுனியாவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையமே வடக்கின் முதலாவது பொருளாதார மத்திய நிலையமாகும்.
அமைவிடம் தொடர்பான இறுதி முடிவினை எட்டுவதற்கு முன் அரசியல் சார்ந்த விடங்களுக்கு அன்றி நீண்ட காலத்திற்கு மக்களுக்கும் மாவட்டத்திற்கும் பயன்தரக் கூடிய பொருளாதார சமூகக் காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா நகரில் இருந்து 2 கி.மீற்றர் தூரமுள்ள அண்மையான இடத்திலேயே அமைக்கப்பட வேண்டும் என்ற கிராமிய பொருளாதார அமைச்சரின் விட்டுக் கொடுப்பற்ற கூற்றுக்கள் எமது மாவட்டத்திற்கு ஏற்புடையதல்ல.
குறித்த தூரத்திற்குள் அமைக்கப்படாவிட்டால் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படும் என்ற அமைச்சரின் விடாப்பிடி எப்படி நடைமுறைக்குச் சாத்திமாகும் என்பதைச் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.
அதியுச்ச அதிகாரங்களை கொண்டதும் மக்களது ஆணையைப் பெற்றதுமான மக்களவையில் வரவு செலவுத்திட்டப் பிரேரணையாகக் கொண்டுவரப்பட்டு பல குழு நிலைகளையும் கடந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான யோசனையை நல்லாட்சி அரசாங்கத்தின் தனி ஒரு அமைச்சரினால் எவ்வாறு வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியும்?
தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணிகளுக்கும் அப்பால் ஓமந்தையில் அமைப்பதற்கான ஏது நிலைகளே அதிகமாகக் காணப்படுகின்றன.
பொருளாதார மத்திய நிலையங்கள் முழுமையாக சந்தைப்படுத்தல், வர்த்தக நோக்கங்களைக் கொண்டவை. ஆகையால் ஓமந்தையில் A9 வீதிக்கண்மையாக அமைவதில் அல்லது அமைக்கப்படுவதில் போக்குவரத்து வசதி வாய்ப்புக்கள் தொழில் நுணுக்கங்கள் வளர்ந்துள்ள இன்றைய கால கட்டத்தில் தவறானதாக இருக்க முடியாது.
வவுனியா நகரை மட்டுமன்றி அதனை அண்டிய பிரதேசங்களின் அபிவிருத்தியை அல்லது அவற்றின் நகராக்கம் சார்ந்த நகர்வில் ஊன்றிக் கவனத்தில் கொள்வது பொது நலன் சார்ந்நதவர்களின் பணியாக இருந்திருக்க வேண்டும்.
ஓமந்தையில் வவுனியா தொழில் நுட்பக் கல்லூரியின் ஒரு பிரிவாக உயர் தொழில் நுட்பக் கல்லூரி செயல்படத் தொடங்கியுள்ளது. தேசிய அல்லது சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதனை அண்டி அரச ஊழியர்களுக்கான குடியிருப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு துரித விருத்தி கண்டு வருகின்றது.
இத்தகைய பின்னணியில் பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்திற்கு மாற்றுவது அல்லது மாற்ற எத்தனிப்பது ஓமந்தையின் நகராக்கத்தை அதன் அபிவிருத்தியை மறுக்கும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும்.
தாண்டிக்குளத்தில் அமைக்கப்படுவதால் அதிக நன்மை பெறப்போகின்றவர்கள் யார்? தமது கடின உழைப்பின் மூலம் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யும் கிராமப்புற விவசாயிகளா? அல்லது தமது பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு வர்த்தகம் புரியும் வர்த்தகர்களா? என்ற கேள்விக்கு விடைகாண வேண்டிய பொறுப்பு சகலருக்கும் உரியது.
வவுனியா மாவட்டத்தின் சனத்தொகையில் 80% க்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பிரதான தொழில் விவசாயம். விவசாய உற்பத்திகள் அனைத்திற்கும் உரிய பிரதேசங்கள் இவை.
எனவே கிராமப்புற விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களின்; சந்தைப்படுத்தலை இலகுபடுத்த வேண்டுமானால் பொருளாதார மத்திய நிலையம் கிராமப்புறம் சார்ந்த இடத்தில் அமைப்பதற்கான சாதக நிலைகளே அதிகமாக இருக்கின்றன.
வவுனியா மாவட்டத்தில் சுமார் 201க்கும் மேற்பட்ட கமக்காரர் அமைப்புக்கள் காணப்படுகின்றன.16329 இக்கும் மேற்பட்டோர் இதன் அங்கத்தவர்களாவர். இவ்வமைப்புக்களில் மிக அதிகமானவை கிராமங்கள் சார்ந்தவை.
ஓமந்தை, கனகராயன்குளம், நெடுங்கேணி, புளியங்குளம் போன்ற இடங்களில் அதிகமான கமக்காரர் அமைப்புக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே அமைவிடத்தைத் தீர்மானிப்பதில் இவ்வமைப்புக்களுடன் கலந்துரையாடப்பட்டனவா? அவர்களின் கருத்துக்கள் விருப்பங்கள் அறியப்பட்டனவா? என்பதில் பலத்த சந்தேகங்கள் காணப்படுகின்றன.
தாண்டிக்குளம் விவசாயப் பண்ணைக்கு அருகாமையில் பொருளாதார மத்திய நிலையம் அமையும் போது ஏற்படும் சுழல் பாதிப்பகளின் ஊடாக நல்லின விதை உற்பத்திகளைப் பாதிக்கும் என்ற விடயத்தைப் புறந்தள்ளிவிட முடியாதுள்ளது.
மற்றொரு வகையில் விவசாயப் பண்ணையை வேறிடத்திற்கு மாற்றுவதாக முடிவு எடுக்கப்பட்டால் அதன் மூலம் பல இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
பல்லாண்டு கால விவசாயப் பாரம்பரியம் கொண்ட பண்ணையை புதிதாக அமைப்பதற்காக அதிக பணத்தை முதலீட்டுகளுக்கு செலவிட நேரிடும். விதை உற்பத்தியில் புதியபண்ணை செயல்பட ஆரம்பிக்கும் பட்சத்தில் விவசாயத்தில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தும் என்பதுடன் அருகாமையில் உள்ள விவசாயக் கல்லூரியில் கற்கும் மாணவர்கள் தமது செயன்முறைக் கல்வியை கற்பதில் இடர்பாடுகளை எதிர் நோக்குவர்.
புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கு அருகாமையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் போது வவுனியா நகரின் சன, வாகன நெரிசல் தாண்டிக்குளம் வரை விரிவடைந்து அசௌகரியங்களையும் விபத்துக்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்தும்.
யுத்தக் காலங்களில் ராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களுக்கு பல்வேறு வேலைத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட அல்லது விடுவிக்கப்பட்ட பெருமளவு நிதி ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களான வவுனியா நகரை அண்டியுள்ள பல இடங்களுக்கு மாற்றப்பட்டு செலவிடப்பட்டமை கடந்த கால வரலாறாகவுள்ள நிலையில் பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்த ஏனைய கிராமியப் பிரதேசங்களின் விருத்தியில் இப்படியான சந்தர்பங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அனைவரதும் பாரிய பொறுப்பாகும்.
SAJ Relief Foundation ஏற்பாட்டில் புனித றமழானை மாதத்தினை முன்னிட்டு சமூக அபிவிருத்தியும் மதநல்லிணக்கமும் எனும் தொனிப்பொருளில் அவ்நிறுவனத்தின் தலைவர் முன்னால் பிரதேசசபை உறுப்பினருமாகிய அல்ஹாஜ் சாஜிடீன் (சமாதானநீதவான்) அவர்களின் விசேட பணிப்புரையின் கீழ் அந்நிறுவ செயலாளரும் சமாதானநீதவானும் கட்டளையமர்வு பெற்ற அதிகாரியும் ஆகிய சா.சர்ராஜ் தலைமையில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நோன்பு திறக்கும் வைபவம் (இப்தார்) சிறப்புற நடைபெற்றது.
இதன் போது பிரதம விருந்தினராக முன்னால் உதவிக்கல்விப் பணிப்பாளர் நாயகம் குத்துாஸ் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக முன்னால் உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் ஜனாப் சுபைர், பட்டானிச்சூர் ஜீம்மா பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் அப்துல் சமட், பாடசாலை அதிபர் அல்ஹாஜ் றம்சீன் மற்றும் வவுனியா பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
வவுனியா கோதண்டர் நொச்சிக்குளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த “கண்காட்சியும் ஆக்கத்திறன் வெளிப்பாட்டு நிகழ்வும் நேற்று (30.06.2016) பாடசாலையின் அதிபர் திருமதி.சி.சிவசிதம்பரம் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓமந்தை கோட்டக்கல்வி அதிகாரி கலந்து சிறப்பித்தார். மேலும் பாடசாலையின் வசதிப்படுத்துனர் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் அயல் பாடசாலை அதிபர்கள் கலந்து சிறப்பித்தனர். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆக்கத்திறன்கள் வெளிப்படுத்தப்பட்டது.
இப் பாடசாலை அண்மையில் உலக வங்கியினால் இடம்பெற்ற நேரடி மேற்பார்வையில் சிறப்பான இயங்கு தன்மையுடைய பாடசாலை என பாராட்டைப்பெற்றது, இப் பாடசாலைக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என பிரதம விருந்தினரால் வாழ்த்துரை வழங்கப்பட்டது.
தற்போது அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படும் ‘பிரவுசர்’ என்றால் அது Google Chrome தான். இணையப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் பிரவுசர்களில் 99 சதவீத மக்களின் தேர்வு கூகுள் குரோமாக தான் இருக்கிறது. இதன் செயல்திறன் மற்ற பிரவுசர்களை விட சிறப்பாக இருப்பதால் பயன்பாட்டார்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.
ஆனால் சில சமயங்களில் இதுவே நமது பொறுமையை அதிகமாக சோதித்தி விடும். அந்த அளவு மெதுவாக இருக்கும். இதனை மீண்டும் பழையை நிலைக்கு கொண்டு வர சில வழிகள் இருக்கிறது.
1.உங்களது கூகுள் குரோமில் extensions உள்ள தேவையற்ற லிங்குகளைஅகற்றிவிடுங்கள். அதிக்கப்படியான லிங்குகள் பிரவுசர் செயல்பாட்டை குறைக்கும். இதற்கு More tools-> Extensions சென்று சரிசெய்யலாம் அல்லது Shift Esc மூலம் தோன்றும் Task manager box மூலம் சரி செய்யலாம்.
2.அதிகப்படியான extensions பயன்படுத்துவதை விட்டுவிட்டு சில பயனுள்ள extensions மட்டும் பயன்படுத்தலாம். Data Saver extension உங்கள் பிரவுசரில் எந்த அளவு மெமரி உள்ளது என்பதை காட்டும். இதேபோல் OneTab, Tab Suspender மற்றும் The GreatSuspender போன்ற பயனுள்ள extensions மட்டும் பயன்படுத்தலாம்.
3.உள்ள சில இணையத்தளங்களின் plug-ins-களை அகற்றி விடுங்கள். இது அந்த இணையத்தளங்களை சரியாக காட்டாவிட்டாலும், வேகத்தை அதிகரிக்கும். அதேபோல் சில வீடியோக்களை தானாகவே ஓடவிடும் plug-insகளை அகற்றிவிடுங்கள். இதனை chrome://plugins என டைப் செய்து சரி செய்யலாம்.
4.Browsing dataவில் உள்ள சிலவற்றை அடிக்கடி அழித்து வந்தால் கூகுள் குரோம் எப்போதும் வேகமாக இருக்கும். இதில் cache பகுதியை அழித்து வந்தால் பிரவுசர் வேகமாக செயல்படும். இதற்கு Chrome Settings-> advanced settings->Clearbrowsing data சென்று cache, cookies, browsing data என அனைத்தையும் அழிக்க முடியும்.