பவுன்சரை இப்படிதான் ஆட வேண்டும்! டோனிக்கு கிரிக்கெட் சொல்லி கொடுத்த நடுவர்!!

i
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான டோனிக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை போல டெஸ்ட் போட்டி எளிதாக அமையவில்லை.ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிரடி ஆட்டத்தால் எதிரணியை கதிகலங்க வைக்கும் டோனி டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்ள தடுமாறினார்.

இதனாலே அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் நமக்கு டெஸ்ட் சரிவராது என்று பாதியிலே ஓய்வு அறிவித்துவிட்டார் டோனி.கடந்த 2014ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த டெஸ்டில் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் வேகத்தாலும் பவுன்சர் பந்துகளாலும் இந்திய அணியை மிரட்டினர்.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஹாசல்வுட், மிட்செல் ஜான்சன் ஆகியோர் இந்திய அணித்தலைவர் டோனியை பவுன்சர் பந்துகளால் தாக்க ஆரம்பித்தனர்.ஆனால் டோனியும் அதை எதிர்கொள்ளாமல், ஆட்டமிழந்து விடக் கூடாது என்பதற்காக அப்படியே உடம்பில் வாங்கிக் கொண்டிருந்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் களநடுவர் மார்சிஸ் எரஸ்மஸ் டோனிக்கு பவுன்சர் பந்தை எப்படி சமாளிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தார். பவுன்சர் பந்துகளை குனிந்து விட்டுவிடுமாறு டோனிக்கு அவர் அறிவுறித்தினார்.பிரிஸ்பேனில் நடந்த டெஸ்டில் அவுஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தண்ணீரில் மிதந்த சுவிஸ்: 150 ஆண்டுகளுக்கு பின்னர் கொட்டித்தீர்த்த மழை!!

245001720-jpg
சுவிட்சர்லாந்தின் பாசெல் மாகாணத்தில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் கொட்டித் தீர்த்த மழையின் அளவு இரு மடங்காக அதிகரித்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த ஆறு மாதத்தில் மட்டும் பாசெல் மாகாணத்தில் பெய்த மழையின் அளவு 732 மில்லி மீற்றர் என தெரிவித்துள்ள சுவிஸ் வானிலை ஆய்வு மையம், இது கடந்த ஆண்டை விடவும் இரு மடங்கு என தெரிவித்துள்ளது.மட்டுமின்றி 1864 ஆம் ஆண்டிற்கு பின்னர் வரலாறு காணாத வகையில் மழை கொட்டித்தீர்த்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான மாதங்களில் பதிவான மழையின் அளவு 639 மில்லி மீற்றர் என தெரிவித்துள்ள அதிகாரிகள், அது இந்த ஆண்டு முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.பாசெல் மாகாணம் அளவுக்கும் அதிகமான மழையால் அவதிக்கு உள்ளாகையில், சுவிட்சர்லாந்தின் பெரும்பாலான மாகாணங்கள் கடந்த 6 மாதங்களாக போதிய அளவு மழை இன்றி தவித்துள்ளது.இதில் சூரிச், Lucerne மற்றும் St Gallen ஆகிய மாகாணங்கள் மட்டும் சராசரி அளவை விடவும் கூடுதலாக மழையை பெற்றுள்ளது.

மழை காரணமாக மே மற்றும் ஜூன் மாதங்களில் சுவிட்சர்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதும், சாலைகள் மூடப்படுவதும், கிராமங்களில் பெருவெள்ளம் ஏற்படுவதும், பனிப்பொழிவு என ஒட்டுமொத்தமாக மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இருப்பினும் ஜூன் இறுதி முதல் அதிக வெப்பமுடன் வரண்ட வானிலை தென்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் தாக்குதல்! எச்சரிக்கை விடுத்த ஐ.எஸ்!!

57398810c46188ea608b4590
லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இந்த வார இறுதிக்குள் தாக்குதல் நடத்துவோம் என ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உலகின் முன்னணி அரசு சார்பற்ற பயங்கரவாத அமைப்பு தங்களது வலைதள அமைப்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில், யூலை 4 ஆம் திகதிக்குள் லாஸ் ஏஞ்சல்ஸ், ஹீத்ரூ விமான நிலையம் மற்றும் நியூயோர்க்கின் ஜோன் கென்னடி விமான நிலையங்களில் தாக்குதல் நடத்துவோம்.யூலை 4 ஆம் திகதி அமெரிக்காவின் சுதந்திர தினமாகும், மேலும் இந்த நாள் 13 பிரித்தானிய காலணிகள் 1776 ஆம் ஆண்டு ஒன்றிணைந்த நாள் ஆகும்.

டுவிட்டரில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட 3 நாட்களுக்கு பின்னர், இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.இஸ்தான்புல் விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.இந்த தாக்குதலில், மூன்று வெளிநாட்டவர்கள் உள்பட ஐ.எஸ் ஆதரவாளர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், இஸ்தான்புல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் வெளிநாட்டவர்களே என்றும் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகள் ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கிரிகிஸ்தான் நாட்டவர்கள் என்று துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

சம்பூரில் 9வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேகநபர் விளக்கமறியலில்!!

prisoner-jail
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று உத்தரவிட்டார்.மூதூர், பாட்டாளிபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதோடு மனைவியோடு ஏற்பட்ட தகராறு காரணமாகவே சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சந்தேக நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உறவுக்காரர் எனவும், சிறுமியின் தாய் தந்தை காட்டுக்கு விறகு எடுக்கச் சென்ற நிலையிலே சந்தேக நபர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் தாய், தந்தை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, குறித்த சந்தேக நபரை புதன்கிழமை மாலையில் மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் 251 ஹெக்டேயரில் சோளம் பயிர்ச்செய்கை!!

corn-farm-new-jersey-1-680x380
மட்டக்களப்பு மாவட்டத்தின் 16 விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் இம்முறை சுமார் 251 ஹெக்டேயரில் சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் இராசரெத்தினம் கோகுலதாசன் தெரிவித்தார்.

மாற்றுப் பயிர்ச் செய்கைத் திட்டத்தின் கீழ் கரடியனாறு, வாகரை, வாழைச்சேனை, வந்தாறுமூலை, கிரான், ஏறாவூர், ஆயித்தியமலை, மண்டபத்தடி, காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, பழுகாமம், மண்டூர், வெல்லாவெளி, தாந்தாமலை, கொக்கட்டிச்சோலை ஆகிய விவசாய போதனாசிரியர் பிரிவுகளிலேயே சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளன.

மேலும், சோளம் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய அடிப்படையில் சோளம் விதைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி!!

Indrajit Coomaraswamy

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனைத்து தரப்பினரதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

1950ம் ஏப்ரல் ஆண்டு பிறந்த டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி பொதுநலவாய அமைப்பின் பொருளாதார அலுவல்கள் பிரிவின் முன்னாள் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

பத்தாயிரம் இராணுவத்தினர் விலகல்!!

Army

இராணுவத்தில் இருந்து சட்ட ரீதியாக விலகிக்கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் தமாக முன்வந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் சட்டரீதியாக விலகிக்கொள்வதற்காக பொதுமன்னிப்புக் காலம் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் 12ம் திகதி முதல் இம்மாதம் 12ம் திகதி வரை இப்பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி நேற்று வரை இராணுவத்தில் இருந்து தப்பியோடிய, சுமார் 10,417 பேர் தாமாக முன்வந்து சட்டரீதியாக இராணுவத்தில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இராணுவத்திலிருந்து தப்பியோடிய மேலும் 15 ஆயிரம் பேர் மறைந்து வாழ்வதாக இராணுவத் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளம் வயதினரின் கோபத்தினை கையாளும் முறைகள்!!

angry-woman
13- 19 வயது வரையிலான காலகட்டத்தை நாம் இளவயது (Teen Age) என்று அழைக்கிறோம். இக்கால கட்டத்தின் போதே உளவியல், ஹார்மோன் உட்பட பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.மேலும் இந்த வயதில் தீய பழக்க வழக்கங்களின் பக்கம் செல்லாமல், சரியாக கடந்து விட்டாலே நாம் வாழ்வில் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற கூற்றும் நிலவுகின்றது.

குறிப்பாக இந்த வயதினருக்கு கோபம் அடிக்கடி வரும், உங்களது பெற்றோர்களும் கோபத்தை சமாளிக்க பல்வேறு வழிகளில் முயன்றது உங்களுக்கு நினைவிருக்கிறதா?முதலில் கோபம் எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

பெற்றோர்களின் கவனத்திற்கு

நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் கோபம் என்பது காதல் மற்றும் சந்தோஷத்தை போன்ற ஒரு இயற்கை உணர்வு, அதில் தவறு ஒன்றும் இல்லை. அதை சரியான வழியில் வெளிப்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் மிக முக்கியமானது.கோபத்தை வெளிப்படுத்தும் சரியான முறை எது என்பதை பெற்றோர் தான் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். எனினும், அது நிரந்தர தீர்வல்ல. மேலும் கோபத்தை வெளிப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

பெரும்பாலான இளைஞர்கள் கோபம் அவர்களுக்கு வல்லமையும், மரியாதையையும் பெற உதவுகிறது என்று நினைப்பதோடு, அதை ஒரு அதிகார தோரணையாகவே கருதுகிறார்கள். இது ஏனெனில், தங்கள் அக்கா, அண்ணன் கோபப்படுவதை பார்ப்பதால் தான்.உங்கள் தங்கை, தம்பி முன்பு நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்களோ, அப்படித்தான் அவர்களும் வளர்வார்கள். எனவே உங்களை நீங்கள் முதலில் திருத்தி கொள்ளுங்கள்.

கோபம் வரும் போது ஒரு ஆழமான மூச்சு எடுத்து மெதுவாக வெளியே மூச்சு விடச்சொல்லுங்கள்.

1 முதல் 10 வரை இறங்கு வரிசையில் கண்களை மூடி எண்ண சொல்லுங்கள்.

கோபத்தை வெளிப்படுத்துவதற்கு முன்னால் அவரை ஒருமுறை யோசிக்க சொல்லுங்கள், சுய கட்டுப்பாட்டிற்காக யோகா செய்ய சொல்லுங்கள்.

அடிக்கடி காலை உணவை தவிர்ப்பதாலும் கோபம் வரும். எனவே அவர்கள் காலை உணவை சாப்பிடுகிறார்களா என்பதை கவனியுங்கள்.

வவுனியாவில் குடும்பப் பெண் மூன்று நபர்களால் பாலியல் வன்புணர்வு!!

Abuse

வவுனியா புளியங்குளத்தில் 32 வயதுடைய குடும்பப்பெண் ஒருவர் மூன்று நபர்களால் பாலியர் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த 28.06.2016 இடம்பெற்றுள்ளது.

புளியங்குளம் பகுதியில் கணவன் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில் நான்கு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த குடும்பப் பெண் ஒருவருக்கே சம்பவம் நேரிட்டுள்ளது.

குறித்த பெண்ணின் வீட்டிற்குள் பலாத்காரமாக நுழைந்த மூன்று நபர்கள் அப்பெண்ணின் குழந்தைகளை ஒரு அறைக்குள் பூட்டி வைத்து விட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சாராயத்தை பருக்கி வாயை துணியால் கட்டி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதுடன் அப்பெண்ணின் தலைமுடியையும் கத்தரித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார் என தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட சம்பவம் குறித்து புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

வவுனியா மக்கள் வங்கிக் கிளையில் மக்கள் வங்கியின் 55வது ஆண்டுப் பூர்த்தி விழா!!

 
வவுனியா மக்கள் வங்கி கிளையில் மக்கள் வங்கியின் 55வது ஆண்டுப் பூர்த்தி விழா நேற்று(01.07.2016) நடைபெற்றது.

இந் நிகழ்வில் வன்னி பிராந்திய முகாமையாளர் , உதவிப் பிராந்திய முகாமையாளர்கள் , மக்கள் வங்கி வவுனியா கிளை முகாமையாளர், மக்கள் வங்கி வவுனியா கிளை செயற்பாட்டு முகாமையாளர் மற்றும் மக்கள் வங்கி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மக்கள் வங்கியானது 1961ம் ஆண்டு ஜூலை 1ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 350 க்கும் மேட்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 news (1) news (2) news (3) news (4) news (5) news (6) news (8) news (9) news (10)

வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால் 56 பேருக்கு சமுதாய சீர்திருத்தக் கட்டளை!!

vavuniya_court

வவுனியா மாவட்டத்தில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் மட்டும் 56 பேருக்கு நீதவான் நிதிமன்றத்தினால் சமுதாய சீர்திருத்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் கே.எம்.நஜீம் தெரிவித்துள்ளார்.

இதில் பெரும்பான்மையாளவர்கள் கஞ்சா பாவனைக்கு அடிமையானவர்கள், மதுபோதையில் இடையூறு விழைவித்தமை, பொது இடங்களில் அநாகரிகமாக அல்லது அசிங்கமாக நடந்து கொண்டமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் அதிகமானோர் தமது திணைக்களத்தில் வைத்து வழிகாட்டப்படுவதாகவும் மேலும் தெரிவித்தார்.

வவுனியா நீதிமன்ற வளாகத்தில் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களம் கடந்த மூன்று வருடங்களாக செயற்பட்டு வருகின்றபோதும் கடந்த மாதமே அதிகமானவர்கள் 56 பேருக்கு நீதவான் நீதிமன்றம் சீர்திருத்தக் கட்டளை பிறப்பித்துள்ளதாகவும், இத் திணைக்களத்தினால் சமுகத்தில் குற்றம் செய்து நீதிமன்றம் வருகின்றவர்களை சீர்திருத்தக் கட்டளைக்குட்படுத்தி அவர்களுக்கும,; குடும்பத்திற்கும், நாட்டிற்கும் நற்பிரஜையாக மாற்றும் செயன்முறைகளை மேற்கொண்டு வருவதாகவும்,

இவ்வாறான கட்டளைகளுக்கு உட்படவில்லை எனில் சிறையில் அடைக்கப்படுவதன் ஊடாக தொழிலை இழந்து, குடும்பம் சீர்குலைந்து, பொருளாதாரத்தை இழந்து, பிள்ளைகளின் கல்வி இடைநடுவில் நிறுத்தப்பட்டு அவர்கள் கவனிப்பாரற்று மேலும் குற்றச் செயல்களுக்குப் பழக்கப்பட்டு நாட்டிற்கு நிதிச்சுமையை ஏற்படுத்தி இருள் மிகுந்த எதிர்காலமாக ஆக்குவதனை தவிர்க்கும் பொருட்டு இக் கட்டளை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இந்த 56 பேருக்கும் சமுதாய சீர்திருத்தக்கட்டளை இட்டு அவர்களை குற்றச் செயல்களில் இருந்து விடுதலை பெற அல்லது குற்றத்தை உணர்ந்து திருந்தவதற்கான ஒரு தற்காலிக பாதுகாப்பகவே நீதிமன்றத்தால் கட்டளை ஆக்கப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதனை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடாத்தப்படவேண்டும் என்றும் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைக்கப்படவேண்டும்!!

Omanthai 1

வவுனியா மாவட்ட பொருளாதார மத்திய நிலைய அமைவிடம் தொடர்பாக வாதங்கள், பிரதிவாதங்கள், உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் வவுனியாவில் நடைபெற்று வருகின்றன.

நாட்டு மக்களின் எதிர்காலம், பிரதேச பொருளாதார கட்டமைப்பு, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு முதலியவற்றை கருத்தில் கொண்டு அமைவிடம் தொடர்பான முடிவை முன்வைக்க வேண்டுமென சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் வவுனியா மாவட்ட செயலாளர் சு.டொன்பொஸ்கோ ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, வடமாகாண முதலமைச்சர் முன்மொழியும் ஓமந்தையா அல்லது மத்திய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் கூறும் தாண்டிக்குளமா உகந்தது என சீர்தூக்கிப் பார்க்கும்போது ஒமந்தையே சிறப்பானது என எமது அமைப்பு கருதுகின்றது. இதற்கான காரணங்கள் பின்வருமாறு..

பாலமோட்டை, கனகராயன்குளம், மாமடு, நெடுங்கேணி, நட்டாங்கண்டல் போன்ற வவுனியா மாவட்ட விவசாய பிரதேசங்களின் போக்குவரத்து வலையமைப்பின் மத்திய நிலையமாக ஓமந்தையே காணப்படுகின்றது.

யுத்த காலத்தின் முன் உபநகரமாக வளர்ச்சியுற்று வந்த இந்நகரை மீளக்கட்டியெழுப்பவும், வவுனியா நகரின் சன நெருக்கடியைக் குறைக்கவும், நகர விஸ்தரிப்பிற்கான வசதியை பெருமளவில் கொண்டிருக்கின்ற இவ்விடம், மத்திய கல்லூரி, வங்கிச் சேவை, மருத்துவ நிலையம், புகையிரத நிலையம், A9 போக்குவரத்துப் பாதை என்பவற்றை ஏற்கனவே கொண்டிருக்கின்றது.

மக்கள் செறிவு குறைவாகவும், இடவசதி அதிகமாகவும் ஓமந்தை காணப்படுவதால் கழிவகற்றலை இலகுவாக செய்யவும், வாகன நெரிசல், ஓசை எழுப்புதல் போன்ற சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பராமரிப்பது என்பன இலகுவாகின்றது.

மேலும் தாண்டிக்குளத்தில் இந்நிலையம் அமையுமானால் பின்வரும் பாதிப்புக்கள் ஏற்படும்.

1. திட்டமிடப்படாத வகையில் வவுனியா நகரம் உருவாகியுள்ளதால், போக்குவரத்து நெருக்கடியும், சனச்செரிவு அதிகமாகவும் காணப்படுகின்றது. நிலையம் இங்கு அமையுமானால் மேலும் நெருக்கடி ஏற்படும்.

2. சூழல் மாசடைதலும், கழிவகற்றலில் இடர்பாடுகளும் ஏற்படும்.

3. வடமாகாணத்தில் தமிழ்மொழி மூலமான விவசாயக் கல்லூரிச் செயற்பாடுகளிலும், அபிவிருத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு விவசாய விதை உற்பத்தி ஆராய்ச்சி செயற்பாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.

ஆகவே இவ்விடயம் மாகாண சபைக்குரியதாக இருப்பதால் மாகாணசபை உறுப்பினர்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை விடுத்து நாட்டின் அபிவிருத்தி, மக்களின் நலன், சூழல் பாதிப்பு முதலியவற்றை கருத்தில்கொண்டு ஒருமித்த முடிவைக் காணவேண்டும் என்பதுடன் இவ்விடயத்தில் வட-கிழக்கில் அதிகாரத்தில் இருக்கக்கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராபட்சமாக இருப்பதன் மூலம் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு களம் அமைத்துக்கொடுத்த வரலாற்றுத் தவறினை விட்டுவிட வேண்டாம் என்பதையும் எமது அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது என அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.

மண்ணெண்ணெய் ஊற்றி மனைவியை எரித்த கணவன்!!

Fire1

மனைவியை கணவன் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் ஒன்று பாதுக்கை, பானலுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில், 24 வயதான ஒரு குழந்தையின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 16ம் திகதி கணவன், மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையடுத்து குறித்த பெண் கணவரால் தீ வைக்கப்பட்டுள்ளார்.

தீ காயங்களுக்குள்ளன குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கரவனெல்ல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் எனவும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

சுவாதி கொலைக் குற்றவாளி ராம்குமார் கைது செய்யப்பட்டது எப்படி?

Murder

பெண் பொறியாளர் சுவாதி கொலையில் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கடந்த 24ம் திகதி வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்ம வாலிபர் தப்பி ஓடிவிட்டார். ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கொலையாளி சிக்கவில்லை.

அவன் தப்பிச்செல்லும் போது அருகில் உள்ள சி.சி.டி.வி கமராவில் பதிவான கொலையாளியின் உருவத்தை வைத்து தேடுகிறார்கள். ஆனால் அதில் முகம் தெளிவாக இல்லாததால் கொலையாளி யார் என்று அடையாளம் காண முடியவில்லை.

கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் பொலிஸார் தடுமாறி வந்தனர். இந்நிலையில் சுவாதியை கொலை செய்ததாக திருநெல்வேலியில் ராம்குமார் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ராம்குமார் செங்கோட்டை அருகிலுள்ள மீனாட்சிபுத்தை அடுத்த பன்பொழி கிராமத்தை சேர்ந்தவர். ஆலங்குளம் பொறியியல் கல்லூரியில் பி.இ படித்தவர்.

வேலை தேடி சென்னை சென்ற ராம்குமார், சூளைமேட்டிலுள்ள விடுதி ஒன்றில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியுள்ளான். அப்போது சுவாதியுடன் ராம்குமாருக்கு ஒருதலைக்காதல் ஏற்பட்டுள்ளது.

ராம்குமார் 3 மாதமாக முயற்சித்தும் தனது காதலை சுவாதி ஏற்காததால், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து அரிவாளால் வெட்டி கொடூரமாக கொன்றுள்ளான்.

சுவாதி கொலை செய்த்தை ராம்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.

ராம்குமார் கைது செய்யப்பட்டது எப்படி?

கொலை நடந்து 8 நாட்கள் கடந்த பின்னரும் குற்றவாளியை கைது செய்ய முடியாமல் போனதால் தமிழக பொலிஸாருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்த வழக்கில் நீதிமன்றம் தலையீட்டு குற்றவாளியை விரைவாக கைது செய்ய நெருக்கடி கொடுத்தது. இதனால் குற்றவாளியை விரைவாக கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

சுவாதியுடன் வேலை செய்தவர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உட்பட 100 பேருக்கு அதிகமானோரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினார்கள். ஆனாலும் எந்த தடயமும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ராம்குமாரை பொலிஸார் எப்படி சுற்றி வளைத்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

கொலை செய்யப்பட்ட சுவாதியின் மொபைல் போனை கொலையாளி சம்பவ இடத்திலிருந்து எடுத்து சென்றுள்ளான்.

இதனையறிந்த பொலிஸார், சுவாதியின் நண்பர் ஒருவரின் எண்ணிலிருந்து சுவாதியின் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ். ஒன்றை உடனடியாக அனுப்பியுள்ளனர்.

கொலை நடந்த நாளன்று காலை 8 மணி முதல் 8.10 மணி வரை சுவாதியின் மொபைல் போனை கொலையாளி ஓன் செய்து வைத்துள்ளான். அப்போது எஸ்.எம்.எஸ். டெலிவரி ஆகியுள்ளது.

இதனை வைத்து ஆய்வு செய்த பொலிஸார், செல்போன் சிக்னல் சூளைமேடு பகுதியில் இருந்ததை கண்டறிந்தனர்.

இதனையடுத்து ஒரு தனிப்படை பொலிஸார் கணினி மூலம் வரையப்பட குற்றவாளியின் புகைப்படத்தை கொண்டு சூளைமேடு பகுதியில் வீடு வீடாக சென்று விசாரணை மேற்கொண்டார்கள்.

இதில் சுவாதியின் வீடு அருகில் இருக்கும் மேன்சன் ஒன்றின் காவலாளியிடம் பொலிஸார் நேற்று விசாரித்ததில், மேன்சனில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் ஒருவாரமாக அறைக்கு வரவில்லை என்ற தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அவரது அறையின் பூட்டை உடைத்து பொலிஸார் சோதனை நடத்தினார்கள். அறையில் அவரது வீட்டு முகவரி உட்பட இளைஞரை பற்றி கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து நேற்று இரவு 12 மணியளவில் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் ராம்குமாரை அவரது வீட்டில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

கொலை நடந்த போது அணிந்திருந்த இரத்தக்கறை படிந்த சட்டையை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று தெரிந்ததும் ராம்குமார் தனது கையில் வைத்திருந்த பிளேட்டினால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அடுத்து உடனடியாக அவரை மீனாட்சிபுரம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

பின்னர் 108 அம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராம்குமாரின் கழுத்தில் எக்ஸ்ரே எடுக்கப்பட்ட பின், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பின் ராம் குமார் பேச ஆரம்பித்தான். அவனிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராம்குமாரின் தந்தை பரமசிவம் , தாய் மற்றும் தங்கை மற்றும் சகோதரர் ஆகிய நால்வரிடமும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் இந்த கொலையில் ராம்குமாருக்கு அவரது நண்பர் ஒருவர் உதவி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

சூளைமேட்டில் ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷனிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டுக்குள் 20 ஆயிரம் பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை!!

Dual_Citizenship

இந்த ஆண்டு இறுதிக்குள் 20ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி 1700 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த அரசாங்கத்தினை போன்று இல்லாமல் மிகவும் நேர்மையான முறையில் இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர்கள் இயல்பாகவே தமது இலங்கை பிரஜாவுரிமையை இழந்து விடுகின்றனர்.

எனவே, இவர்கள் மீண்டும் விண்ணப்பிப்பதன் மூலம் இலங்கைக்கான பிரஜாவுரிமையினை பெற முடியுமென அவர் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கையில், இடம்பெற்ற யுத்தம் காரணமாக , கல்வித் தகைமை மற்றும் தொழில்துறையில் தேர்ச்சிபெற்ற பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு வெளியேறியவர்களினது, அறிவு, அனுபவம் மற்றும் பங்களிப்பு நாட்டிற்கு அவசியமாகின்றது. எனவேதான், தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இரட்டை பிரஜாவுரிமை வழங்கலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக அவர் மேலும்

சுவாதி கொலை வழக்கு குற்றவாளி கைது : கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி!!

Swathi Murder

சுவாதி கொலை வழக்கில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியை கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட மென் பொருள் பொறியாளர் சுவாதியின் வழக்கில் 10 சிறப்பு படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் பொலிசார் தடுமாறி வந்தனர். இந்நிலையில் சுவாதியை கொலை செய்ததாக திருநெல்வேலியில் ராம்குமார் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொறியியல் பட்டதாரியான ராம்குமார் செங்கோட்டையை சேர்ந்தவர் என்றும் சென்னைக்கு வேலை தேடி வந்துள்ள இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சூளைமேட்டில் வசித்துவந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

ராம் குமாரை பொலிசார் நெருங்குகிறார்கள் என தெரிந்ததும் அவர் தமது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து பாளையன்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ராம் குமாரை அனுமதித்துள்ளனர்.

இதனிடையே நடந்த விசாரணையில் சுவாதியை கொலை செய்துள்ளதை ராம்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.