தேவாங்கு போல இருப்பதாக கூறியதால் சுவாதியின் வாயை குறிவைத்து வெட்டினேன் : ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்!!

Swathi Murder

சுவாதி கொலை குற்றவாளி ராம்குமாரிடம் இன்று அதிகாலை பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதில் ராம்குமார் கூறியதாவது..

கடந்த டிசம்பரில் சுவாதியிடம் காதலை தெரிவித்ததாகவும், அதை அவர் நிராகரித்ததாகவும் கூறிய அவர் தன் முகம் தேவாங்கு போல இருப்பதாக சுவாதி கூறியதால் மிகுந்த ஆத்திரமடைந்தேன்.

மேலும் தேவாங்கு போல இருப்பதாக விமர்சித்ததால் சுவாதியின் வாயை குறிவைத்து வெட்டியதாக ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, செங்கோட்டை நீதிபதி முன் ராம்குமாரை ஆஜர்படுத்திய பின் இன்று இரவு அவரை சென்னை அழைத்து வர பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.

நெல்லை மருத்துவமனையில் வருவாய், காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ராம்குமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

காதலித்த மறுத்த பெண் கழுத்தறுத்துக் கொலை : இந்தியாவில் மற்றுமொரு சம்பவம்!!

Telungana Girl murder

தெலுங்கானா மாநிலத்தில் காதலிக்க மறுத்த 18 வயது இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவத்தில் கல்லூரி மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் அதிபாபாத் மாவட்டம் பைன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் சருபாய். இவரது மகள் சந்தியா (வயது 18). இவர் தாயுடன் சேர்ந்து பீடி சுற்றும் வேலை பார்த்து வந்தார்.

இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மகேஷ். தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சந்தியாவை ஒருதலையாக காதலித்து வந்தார். தனது காதலை சந்தியாவிடம் தெரிவித்தார். அவர் காதலிக்க மறுத்து விட்டார். ஆனால் சந்தியாவை ஒரு ஆண்டாக தொடர்ந்து காதலிக்குமாறு தொல்லை கொடுத்தார்

நேற்று மதியம் சந்தியா வீட்டு அருகே உள்ள கடைக்கு சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த மகேஷ் அவரிடம் மீண்டும் காதலிக்கும்படி வற்புறுத்தினார்.

அப்போது தனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. என் பின்னால் சுற்றாதே என்று சந்தியா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தியா பின்னால் சென்று அவரது கழுத்தை அறுத்து விட்டு ஓடிவிட்டார்.

இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சந்தியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மகேஷை தேடினர். மாலையில் அவர் பொலிசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நீரில் மூழ்கி இருவர் பலி!!

death

மட்டக்களப்பில் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

வாகரை – மதுரங்கேனிக் குளம் ஆற்றில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மீன்பிடிப்பதற்காக ஆற்றுக் சென்ற 29 வயதான குறித்த இளைஞரே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளார்.

இதேவேளை, வாகரை – காயங்கேனி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார். மேலும் சிலருடன் கடலுக்கு நீராடச் சென்ற வேளையே அவர் இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளார்.

சம்பவத்தில் கொழும்பு – 5 பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இறுதிப் போட்டியிலும் இலங்கை தோல்வி : தொடரை 3-0 எனக் கைப்பற்றிய இங்கிலாந்து!!

England's Liam Plunkett traps Sri Lanka's Danushka Gunathilaka lbw during the Royal London One Day International Series at the SSE SWALEC Stadium, Cardiff.

இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 122 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 – 0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஆரம்பத்தில் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 324 ஆட்டங்களை குவித்தது.

சிறப்பாக விளையாடிய ரூட் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 105 பந்துகளில் 92 ஓட்டங்களை சேர்த்து கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 202 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. அதிகபட்சமாக சந்திமால் 53 ஓட்டங்களைப் பெற்றார்.

இதனால் 5 போட்டிகளைக் கொண்ட தொடரை இங்கிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது. 1வது ஒருநாள் போட்டி சமநிலையில் முடிந்த நிலையில் 3வது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் புகையிரதக் கடவை காப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் : பாதுகாப்புப் பணியில் பொலிசார்!!

 
வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக புகையிரதக் கடவைக் காப்பாளர்கள் இன்று காலை (03.07.2016) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடவைக் காப்பாளர்களாக பணிபுரிபவர்களுக்கு நாளாந்த சம்பளமாக 250 ரூபாவே வழங்கப்படுவதாகவும் நிரந்தரமற்ற வேலையாக காணப்படுவதாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது சம்பளத்தை உயர்த்தக் கோரியும் நிரந்தர நியமனம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அதிகளவான பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

1 13549195_496725637187423_1160083337_o 13555853_496725490520771_657774254_o 13569942_496725117187475_1391731055_o 13570115_496725613854092_171718641_o 13575662_496725387187448_1744520119_o 13588883_496725060520814_986742689_o

வவுனியாவில் தீக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

Dead Body

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வசித்து வந்த சிவபாலன் பகீரதி (25) என்ற யுவதி சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மண்எண்ணை அடுப்பில் தீ ஏற்பட்டு எரிகாயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று(02.07.2016) காலை உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

கடந்த 21.06.2016 அன்று குறித்த யுவதி சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மண்எண்னை அடுப்பில் மண்எண்ணை குறைந்துள்ளது. எரிந்து கொண்டிருந்த அடுப்பில் மண்எண்ணை ஊற்றியபோது எதிர்பாரமல் ஏற்பட்ட தீ அடுப்பினை சுற்றி எரிந்துள்ளது.

இதை எதிர்பாராத யுவதி கையிலிருந்த மண்எண்ணை போத்திலினை வீசியுள்ளார். அப் போத்தலிலிருந்த மண்எண்ணை அவ்விடத்தில் சிந்தியபோது மேலும் தீப் பரவி உடலில் தீக் காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த யவதியின் சகோதரி உடனடியாக தீயினை அணைத்து குறித்த யுவதியை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விடுதி இரண்டிற்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தபோதும் நேற்று முன்தினம் திடீரென அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டபோதும் சிகிச்சைப்பலனின்றி குறித்த யுவதி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணையினை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் தீயினால் ஏற்பட்ட மரணம் என தெரிவித்து சடலத்தினை உறவினரிடம் ஒப்படைத்துள்ளார்.

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!!

Hang

வவுனியா ஆச்சிபுரம் பகுதியிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஆச்சிபுரம் பகுதியில் வசித்து வந்த தர்மலிங்கம் மகேந்திரன் என்ற 55 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

குறித்த நபரிற்கு அருகருகாமையில் இரண்டு காணிகளில் மனைவி பிள்ளைகள் ஒரு வீட்லும், குறித்த நபர் தனியாக உள்ள வீட்டிலும் வசித்து வந்துள்ளனர்.

இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வவுனியா வைத்தியசாலையில் சல வாசலில் சவ்வு வளர்ந்துள்ளது என்று தெரிவித்து சத்திரசிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் மறுபடியும் அவ்விடத்தில் சவ்வு வளர்ந்து நோயின் தாக்கம் அதிகமாக சில மாதங்களாக காணப்பட்டுள்ளது. எனினும் வைத்திய சிகிச்சை மேற்கொள்ளமல் இருந்து வந்துள்ளார்.

சம்பவ தினம் இரவு மனைவி சாப்பாட்டினை கொடுத்துவிட்டு அருகிலுள்ள வீட்டில் தங்கியுள்ளார். இவர் சில காலமாக தனிமையியே வாழ்ந்து வந்துள்ளார்.

இன்று காலை மனைவி வீட்டிற்குச் சென்றபோது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணையினை மேற்கொண்டதுடன், நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு மரண விசாரணையினை மேற்கொள்வதற்கு சடலத்தினை வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

வவுனியாவில் மோட்டார் சைக்கில் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

Acci

வவுனியா பம்பைமடு பகுதியில் மோட்டார் சைக்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் வசித்து வந்து மூன்று பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணன் செல்வநாயகம் (வயது 31) வவுனியா தரணிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.

நேற்றுமுன்தினம் இரவு இசை நிகழ்ச்சி இடம்பெற்ற பகுதியில் இளைஞர்கள் சிலருடன் ஏற்பட்ட கைகலப்பில் அப்பகுதி இளைஞர்களினால் மோட்டார் சைக்கிலில் துரத்திச் செல்லப்பட்டபோது குறித்த குடும்பஸ்தருடன் சென்ற ஏழு பேரும் வெவ்வேறு திசைகளை நோக்கிச் சென்றுள்ளனர்.

இரவு என்பதால் வீதிகள் தெளிவின்மை காரணமாக ஒரு மோட்டார் சைக்கிலில் சென்ற மூவர் மரத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மூவரும் வெவ்வேறு இடங்களில் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதுடன் ஒருவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இருவரையும் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைந்த அப்பகுதி இளைஞர்கள் இன்று காலை அப்பகுதிக்குச் சென்றபோது பலத்த காயங்களுடன் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதை அவதானித்து உடனடியாக அவசர பொலிசாரின் உதவியை நாடியுள்ளனர்.

அப்பகுதிக்குச் சென்ற பொலிசார் மற்றும் திடீர் நகர மரண விசாரணை அதிகாரி சடலத்தினை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசேதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் சடலத்தினை ஒப்படைக்குமாறு நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குறித்த குடும்பஸ்தருடன் இசை நிகழச்சிக்குச் சென்ற ஏழு பேரையும் பொலிசார் கைது செய்ததுடன் அதில் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நீதிமன்றம் பிணையில் அனைவரையும் விடுவித்துள்ளது. மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த குடும்பஸ்தர் வீதிப் பராமரிப்புப் பணியில் தொழில் புரிந்து வருவதாகவும் தங்கி நின்று தொழில் புரிந்து வருவதும் தற்போது விடுமுறையில் வீட்டிற்கு வந்தபோதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் சைமா விருது : சிறந்த நடிகர் சீயான் விக்ரம்: சிறந்த நடிகை நயன்தாரா : முழு விபரம்!!

nayan_vikram

சிங்கப்பூரில் நடைபெற்ற சைமா 2016 விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நயன்தாரா.

சிறந்த நடிகருக்கான விருதை ஐ படத்திற்காக சீயான் விக்ரம் பெற்றுள்ளார். தென்னிந்திய திரையுலகினரை கெளரவித்து வழங்கப்படும் சைமா 2016 விருது கடந்த ஜூன் 30 மற்றும் ஜூலை 1 நடைபெற்றது.

இந்த விருது வழங்கும் விழாவில் ஏராளமான தென்னிந்திய திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

தென்னிந்தியாவின் யூத் ஐகான் விருது நடிகை சமந்தாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற தமிழ் திரையுலகினர் பட்டியல்:

சிறந்த நடிகர்: விக்ரம் (ஐ)
சிறந்த நடிகை : நயன்தாரா (நானும் ரவுடிதான்)
சிறந்த படம் : தனி ஒருவன்
சிறந்த இயக்குனர் : விக்னேஷ் சிவன் (நானும் ரவுடிதான்)
சிறந்த இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் (நானும் ரவுடிதான்) சிறந்த பாடலாசிரியர் : வைரமுத்து (ஓ காதல் கண்மணி)
சிறந்த வில்லன் நடிகர் : அருண் விஜய் (என்னை அறிந்தால்)
சிறந்த நகைச்சுவை நடிகர் : ஆர்.ஜே. பாலாஜி (நானும் ரவுடிதான்)
சிறந்த அறிமுக நடிகர் : ஜி.வி.பிரகாஷ் (டார்லிங்)
சிறந்த அறிமுக நடிகை : கீர்த்தி சுரேஷ் (இது என்ன மாயம்)
சிறந்த துணை நடிகர் : பிரகாஷ் ராஜ் (ஓ காதல் கண்மணி)
சிறந்த துணை நடிகை : ராதிகா சரத்குமார் (தங்கமகன்)
சிறந்த பின்னணி பாடகர் : அனிருத் (படம்: நானும் ரவுடிதான்)
சிறந்த பின்னணி பாடகி : ஸ்வேதா மோகன் ( படம்: தங்கமகன்)
சிறந்த விமர்சக நடிகர் : ஜெயம் ரவி (தனி ஒருவன்)
சிறந்த விமர்சக நடிகை : நித்யா மேனன் (ஓ காதல் கண்மணி)

தென்னிந்தியாவின் யூத் ஐகான் விருது : சமந்தா. வாழ்நாள் சாதனையாளர் விருது : பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி மற்றும் பழம்பெரும் தயாரிப்பாளர், இயக்குனர் பஞ்சு அருணாச்சலம்.

siima_awards001 siima_awards002 siima_awards003 siima_awards004 siima_awards005 (1) siima_awards005 siima_awards006 siima_awards009 siima_awards010 siima_awards012 siima_awards013 siima_awards014 siima_awards015 siima_awards016 siima_awards017 siima_awards018 siima_awards019 siima_awards020 siima_awards021 siima_awards023 siima_awards024 siima_awards026 siima_awards027 siima_awards035 siima_awards044 siima_awards051 siima_awards052 siima_awards053

கடந்த ஏழு மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 35 பேர் உயிரிழப்பு!!

Dengu

வருடத்தின் கடந்த ஏழு மாதங்களில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலாப் பீடிக்கப்பட்ட 20,954 பேர் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, புத்தளம், குருநாகல் மாவட்டங்களிலேயே கூடுதலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, நேற்று மற்றும் நேற்று முன்தினம் இரண்டு நாட்களிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான சூழல் காணப்பட்ட அதிக இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பரந்தனில் மூன்று வயது சிறுவனுக்கு நடந்த பரிதாபம்!!

Accident

புதுக்குடியிருப்பு, பரந்தன் வீதியில் பாலர் பாடசாலையின் மாணவரொருவர் பாரவூர்தியுடன் மோதி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று மாலை சுகந்திரம் பிரதேசத்தில் வெள்ளபள்ளம் சந்திக்கு அருகில் பாதை ஊடாக சென்ற மாணவன் மீது மோதியதினால் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தினால் படுகாயமடைந்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்த சிறுவன் 3 வயதுடையவர் என பரந்தன் பொலிஸார் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டையை உலுக்கிய மிகப்பெரும் பரபரப்பு நிறைவுக்கு வந்தது : முழு விபரம் இணைப்பு!!

Swathi Murder

தமிழ்நாட்டையே பதற வைத்த பொறியியலாளர் சுவாதி கொலையில் கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த மிகப்பெரும் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.

சுவாதியை ஈவிரக்கமின்றி வெட்டி சாய்த்த கொலையாளி நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்றிரவு பிடிபட்டான்.
இதுபற்றிய முழு விவரம் வருமாறு..

சென்னை சூளைமேடு கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சந்தான கோபாலகிருஷ்ணன்.

இவரது 2வது மகள் சுவாதி (வயது 24). இவர் செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டியில் இன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார்.

நுங்கம்பாக்கத்தில் இருந்து மின்சார ரயிலில் பரனூருக்கு தினமும் அவர் பணிக்கு செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தார்.

கடந்த 24ம் திகதி காலை 6.45 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு அவர் வந்தபோது மர்ம இளைஞர் ஒருவர் அவரிடம் கடும் வாக்குவாதம் செய்தான்.

அடுத்த நிமிடம் அவன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுவாதியை 4 தடவை வெட்டினான். இதில் கழுத்து, தாடையில் கடுமையாக வெட்டு காயம் அடைந்த சுவாதி ரயில் நிலைய பிளாட்பாரத்திலேயே விழுந்து உயிரிழந்தார்.

சுவாதி கொலை செய்யப்பட்ட விதம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் மத்தியில் இந்த கொலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த கொலை பற்றி முதலில் ரெயில்வே பொலிஸார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதையடுத்து சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பை சென்னை பொலிஸார் ஏற்றனர். 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. என்றாலும் குற்றவாளியை கண்டுபிடிப்பது பொலிஸாருக்கு பெரும் சவாலாக இருந்தது.

கொலையாளி யார் அவன் எதற்காக சுவாதியை கொலை செய்தான் என்பது கடந்த ஒரு வாரமாகவே மர்மமாக இருந்தது.

இந்த கொலையில் பொலிஸாருக்கு விசாரணை நடாத்துவதற்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகி இருந்த கொலையாளியின் படம் மட்டுமே உதவியாக இருந்தது.

அந்த படம் தெளிவில்லாமல் இருந்ததால் ஐதராபாத்தில் உள்ள சோதனை கூடத்தில் அது துல்லியமாக மேம்படுத்தப்பட்டு படம் வெளியிடப்பட்டது. அதற்கு உடனடியாக பலன் கிடைத்தது.

அந்த படத்தை பார்த்த சூளைமேட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதி காவலாளிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அங்கு தங்கி இருக்கும் ஒரு இளைஞர் போன்றே கொலையாளி இருப்பதாக அவர் உணர்ந்தார்.

அவர் நேற்று முன்தினம் இரவு இதுபற்றி பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பொலிஸார் அந்த காவலாளியிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது விடுதியில் தங்கியிருந்த ராம்குமார் என்ற இளைஞர் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ராம்குமார் எங்கே என்று பொலிஸார் விசாரித்தனர்.

அப்போது 24, 25ம் திகதிகளில் அவன் விடுதியில் தங்கி இருந்து இருக்கிறான். அதன் பிறகு அவன் யாரிடமும் சொல்லாமல் வெளியேறி விட்டது தெரிய வந்தது. இதனால் ராம்குமார் மீதான சந்தேகம் வலுத்தது.

அவனது சொந்த ஊர் மற்றும் அவனை பற்றிய முழு விவரங்களையும் பொலிஸார் சேகரித்தனர். ராம்குமாரின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி பகுதியில் உள்ள தேன்பொத்தை, மீனாட்சிபுரம் என்ற சிறிய கிராமம் ஆகும்.

இதை அறிந்த தனிப்படைபொலிஸார் நேற்று காலை ஆலோசனை நடத்தினார்கள். இதையடுத்து தென்காசி பொலிஸ் தலைமையில் கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை பொலிஸார் நேற்று காலை முதல் மீனாட்சிபுரம் கிராமத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக கொலையாளி ராம்குமார் வீட்டையும், அவன் எங்கே செல்கிறான் என்பதையும் இரகசியமாக பின்தொடர்ந்து கண்காணித்தனர்.

நேற்று காலை 10 மணியளவில் ராம்குமார் பக்கத்தில் உள்ள மலைப் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றான். தனது வீட்டில் உள்ள ஆடுகளை அந்த பகுதிக்கு கொண்டு சென்றான்.

அவனை தனிப்படை பொலிஸார் பின் தொடர்ந்து சென்றனர். தூரத்தில் இருந்தபடியே அவனை படம் பிடித்தனர். அந்த படம் சென்னையில் உள்ள தனிப்படை பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஏற்கனவே கண்காணிப்பு கமராவில் பதிவாகி இருந்த படத்துடன் மீனாட்சிபுரத்தில் எடுக்கப்பட்ட கொலையாளியின் படத்தை தனிப்படை பொலிஸார் ஒப்பிட்டு பார்த்தனர்.

அப்போது சுவாதியை கொன்றவன் இந்த ராம்குமார்தான் என்பது தனிப்படை பொலிஸாருக்கு 100 சதவீதம் உறுதியாக தெரிய வந்தது.

இதையடுத்து ராம்குமாரை தப்பிக்க விடாமல் பிடிக்க வியூகம் வகுக்கப்பட்டது. ராம்குமாரை எப்போது, எப்படி பிடிப்பது நேற்று மதியம் நெல்லை பொலிஸார் ஆலோசனை நடத்தினார்கள்.

பகலில் ராம்குமாரை சுற்றி வளைத்தால் கிராமத்தில் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று தனிப்படை பொலிஸார் கருதினார்கள்.
எனவே நள்ளிரவில் அவனை பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரவு 11 மணிக்கு 3 பொலிஸ் வான்களில் பொலிஸார் மீனாட்சிபுரம் கிராமத்தை சுற்றி வளைத்தனர்.

ஒரு பிரிவு பொலிஸார் கிராமத்தில் வெளி பகுதியில் அரண் போல நின்றனர். 5 பொலிஸார் மட்டும் கிராமத்துக்குள் சென்றனர். பொலிஸார் வருவதை அறிந்ததும் வீதியில் இருந்த நாய்கள் குலைத்தன.

என்றாலும் பொலிஸார் அதை சமாளித்து ராம்குமார் வீட்டுக்கு சென்றனர். சரியாக இரவு 11 மணிக்கு பொலிஸார் கொலையாளி ராம்குமாரின் வீட்டு கதவை தட்டினார்.

ராம்குமாரின் தந்தை பரமசிவம் கதவை திறந்தார். பொலிஸாரை பார்த்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தார். என்ன பொலிஸ்காரங்க வந்திருக்காங்க என்று அவர் பயத்தில் அலறினார்.

இதை கேட்டதும் வீட்டுக்குள் படுத்திருந்த ராம்குமார் அலறியடித்தபடி எழுந்தான். பொலிஸார் எப்படியோ தன்னை மோப்பம் பிடித்து சுற்றிவளைத்து விட்டார்களே என்ற அதிர்ச்சியுடன் அவன் வீட்டின் பின்பக்கமாக ஓடினான்.

தப்பி செல்ல அவன் முயன்றான். பொலிஸார் அவனை பிடிக்க விரட்டினார். ஆனால் துரதிருஷ்டவசமாக ஒரு கல்லில் மோதி தடுமாறி கீழே விழுந்து விட்டார்.

இதற்கிடையே வீட்டின் பின்பகுதிக்கு ஓடிய ராம்குமார் வீட்டை சுற்றி பொலிஸ் நிற்பதை அறிந்ததும் இனி தப்பிக்க முடியாது என்று உணர்ந்தான்.

உடனே அவன் தான் வைத்திருந்த பிளேடால் கழுத்தின் இரு பக்கமும் அறுத்து தற்கொலைக்கு முயன்றான். ரத்தம் பீறிட்டு வழிய அவன் அலறியபடி கீழே சாய்ந்தான்.

அதற்குள் பொலிஸார் அவனை சுற்றி வளைத்தனர். அவனை காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுடன் அவன் கழுத்தில் துணியால் கட்டினார்கள்.

பிறகு அவனை வானில் ஏற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு 11.30 மணிக்கு கொண்டு சென்றனர். அங்கு ராம்குமாருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே தகவல் தெரிந்து பொதுமக்கள் அங்கு திரண்டனர். ராம்குமாரை காப்பாற்ற கூடுதல் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதை உணர்ந்த பொலிஸார் அவனை தென்காசியில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவு 1.30 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வந்தனர்.

அங்கு அவனுக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக இரவில் 5 வைத்தியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் ராம்குமாரை காப்பாற்ற அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர்.

வைத்தியர்கள் குழு இன்று அதிகாலை 3.15 மணிக்கு சிகிச்சை தொடங்கினார்கள். 5.15 மணி வரை 2 மணி நேரம் சிகிச்சை நீடித்தது. ராம்குமாரின் கழுத்தில் 18 தையல்கள் போடப்பட்டன.

அதன் பின்னர் அவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அவனை மருத்துவர்கள் குழு கண்காணித்தது. இன்று காலை 7.30 மணிக்கு ராம்குமார் கண் விழித்தான்.

சுயநினைவு வந்தாலும் அவனால் முழுமையாக பேச முடியவில்லை. சுற்றி நின்ற பொலிஸாரை மிரட்சியுடன் பார்த்தான். பிறகு அவன் சுவாதியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டான்.

அடுத்தக் கட்டமாக அவனிடம் எப்போது விசாரணை நடத்துவது என்று பொலிஸார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதற்காக சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் நெல்லை விரைந்துள்ளனர். ஓரிரு நாட்களில் ராம்குமார் முழுமையாக குணம் அடைந்ததும் அவனை சென்னை அழைத்து வர திட்டமிட்டுள்ளனர்.

அதன் பிறகு இந்த கொலையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவும்!!

Rain

நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக மலையகத்தின் மேற்கு சரிவான பகுதிகளில் அவ்வப்போது 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், பொத்துவில் தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையிலும் உள்ள கடற்பிராந்தியங்களில் சிலவேளைகளில் மணிக்கு 60 கிலோமீற்றராக காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என்பதுடன், கடற்பிராந்தியங்களி்ல் அவ்வப்போது கொந்தளிப்பும் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

திருகோணலைக்கு அப்பாலுள்ள கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றராக அதிகாரிக்கலாம் என்பதால், அந்த கடற் பிரதேசங்களில் அவ்வப்போது கொந்தளிப்பு ஏற்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

ஆண் எப்ப‍டி இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புவார்கள்

201607021013131503_Women-like-male-how-to-be_SECVPF (2)

ஆண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற பெண்களின் விருப்பங்கள் பல வகையாக உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என ‘ fair complexion’ உள்ள பெண்கள் கூட எதிர்பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து. ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் ‘மீசை’க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ‘மீசை’ ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ ‘ தாடி’ பிடிப்பதில்லை.

பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ‘ ட்ரெஸ்ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர் ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ் – டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம். முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது.

அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும். (அவள் முகத்தை மட்டும்!). முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டார்கள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, தவிர ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

அந்த படத்தை யாரும் பார்க்காதீர்கள் – வீரப்பன் மனைவி கதறல்!!

veerappan_f_wife001

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இன்று வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் வீரப்பன் குறித்து பல விஷயங்கள் படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படம் குறித்து வீரப்பன் மனைவி கூறுகையில், இந்த படத்தை யாரும் பார்க்க வேண்டாம், இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்

அவர் கையால் விருதை கொடுங்கள், நயன்தாரா ஏற்படுத்திய சலசலப்பு, முன்னணி நடிகர் கோபம்?

nayanthara-759

அவர் கையால் விருதை கொடுங்கள், நயன்தாரா ஏற்படுத்திய சலசலப்பு, முன்னணி நடிகர் கோபம்? – Cineulagamநயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடித்த நானும் ரவுடி தான் படத்திற்காக பல விருதுகளை பெற்று வருகிறார்.இந்நிலையில் நேற்று SIIMA விருது விழாவிலும் சிறந்த நடிகை என்ற விருதை பெற்றார்.

அப்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கையால் இந்த விருதை பெற மறுத்த இவர், விக்னேஷ் சிவன் கையால் பெற வேண்டும் என கூறினார்.இதனால், தெலுங்கு சினிமா ரசிகர்கள் மிகவும் கோபமடைந்து விட்டனர். இதை தொடர்ந்து கொஞ்ச நேரம் சலசலப்பு ஏற்பட்டது.