இரட்டை கோபுரம் தாக்குதல் அமெரிக்காவின் சதித்திட்டமே : அதிர்ச்சித் தகவல்கள்!!

Twin tower attack

இரட்டை கோபுரம் தாக்கப்படப்போவது அமெரிக்க அரசுக்கு முன்பே தெரிந்திருந்தது என்றும் அதற்கு அமெரிக்கா ஒத்துழைத்தது என்றும் ஒரு அதிர்ச்சியான தகவலை ஆதாரத்துடன் அங்குள்ள கமெராமேன் கூறியுள்ளது உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.

உலக வர்த்தக மையமான அமெரிக்காவின் இரட்டை கோபுரம், 2002, செப்டம்பர் 11, அன்று அடுத்தடுத்து இரண்டு விமானங்களால் அல் உம்மா தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. அது உலகையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அதற்கு, பின்லேடன் தலைமையிலான அல் உம்மா தீவிரவாத அமைப்புதான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் விளைவாக, அந்த இயக்கத்தை ஒழிக்க அமெரிக்கா தீவிர நடவடிக்கை எடுத்ததும். அதன் தலைவனான பின்லேடனை கொன்றதும் உலகம் அறிந்ததுதான்.

அப்படியிருக்க, இரட்டை கோபுரம் தாக்கப்பட்டது ஒன்றும் எதிர்பாராமல் நடந்தது அல்ல. செப்டம்பர் 11 இரட்டை கோபுரம் தாக்கப்படப் போவது புஷ் தலைமையிலான அமெரிக்க அரசுக்கு தெரிந்திருந்தது.

ஆனால், அதை முறியடிக்கும் நடவடிக்கைக்கு மாறாக, வர்த்தக மையத்திலும் விமான நிலையத்திலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது என்றும் வர்த்தக மையத்தில் இருந்த முக்கியமான பெட்டகங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டது என்றும் கர்ட் சொனென்ஃபெல்ட்(Kurt Sonnenfeld) ஆதாரங்களுடன் கூறுகிறார்.

கர்ட், அப்போது, தனது 39 வயதில் அமெரிக்காவின் உள்நாட்டு ஆயுத பாதுகாப்பு துறையில் பணியாற்றினார். அது அமெரிக்காவின் M 15 க்கு சமமானது.

அந்த பேரழிவு திட்டம், ஜார்ஜ் W புஷ்ஷின் நிர்வாகத்திற்கு தெரிந்திருந்தும் அவர்களும் இந்த சதியில் ஒத்துழைத்தனர் என்று இப்போது கர்ட் கூறுகிறார்.

அமெரிக்க மண்ணில் தாக்குதல் நடக்கப்போவதை ஐக்கிய அமெரிக்க உளவுதுறையும் எச்சரித்திருந்தது. உலக வர்த்தக மையம் 6 ல் இருந்த முக்கியமான பெட்டகம் அங்கிருந்து காலிசெய்யப்படுவதற்கு இந்த அறிவுறுத்தலே காரணமாக இருந்தது என்கிறார்.

மேலும், உலக வர்த்தக மையம் 4 ல் முன்னெச்சரிக்கைக்கான நகர்வுகள் இருந்துள்ளது. அப்போது நியூயோர்க் டைம்ஸில் வெளியான கட்டுரையிலும் பெட்டகங்கள் பாதுகாக்கப்பாக இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் 1,000 டன் தங்கம், வெள்ளி பொருட்கள் சேதமின்றி இருந்துள்ளது. உலக வர்த்தக மையம் 7 முற்றிலும் அழிந்தபோதும் இவைகள் எப்படி பாதிக்கப்படாமல் இருந்தது. எனவே வர்த்தக மையம் 7 ல் நடந்தது என்ன என சந்தேகம் எழுப்புகிறார்.

இந்த கட்டடத்தில் விமானம் தாக்கிய சேதமில்லை. கட்டட வடிவமைப்பில் சேதமில்லை. ஆனால், வர்த்தக மையம் 7 மட்டும் தனிபகுதியாக நுட்பமாக இடிந்திருக்கிறது. ஒரு 47 மாடி கட்டடம் 6.5 வினாடிகளுக்குள் அதன் பல தளங்களுக்கிடையே எந்த தடையும் இல்லாமல் முற்றிலும் அதன் அடித்தளத்திலே இடிந்து விழுவது சாத்தியமில்லை சந்தேகத்துக்கு உரியது என்கிறார்.

கர்ட்டின் சொந்த வாழ்க்கை வினோதமானது. 2002 ல் அவர் மீது தன்மனைவி நான்சியை கொன்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொலொரடோவில், டென்வரில் உள்ள வீட்டில் அவருடைய 36 வயது மனைவியை தலையில் சுட்டுக்கொன்ற குற்றம் அவர் மீது பதிவாகியுள்ளது. ஆனால், அவர் அந்த சூழலில் இந்த ஆதாரங்களை வெளியிடவில்லை.

அப்போது, அவர் அமெரிக்காவை விட்டு அர்ஜெண்டினா செல்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் இப்போது துணிவோடு தன் மவுனத்தை கலைப்பதாகவும் கூறுகிறார்.

ஆனாலும், அவருக்கு 54 வயதாகிவிட்டபோதிலும், தற்போதும் சட்டரீதியாக தேடப்படும் குற்றவாளியாகவே உள்ளார். அந்த கோபமும் அவருடைய பேச்சில் தெரிவது குறிப்பிடத்தக்கது.

அர்ஜெண்டினாவில் அவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் இருப்பதாக கூறினாலும் அமெரிக்காவில் தனது குடும்பத்தையும் கொலொரடோ மலைகளையும் இழந்துவிட்டதாகவும் அமெரிக்கா வரும் வாய்ப்பு இருப்பதாக நினைக்கவில்லை என்றும் வருந்துகிறார்.

மேலும், அர்ஜெண்டினாவில் இந்த சதித்திட்டம் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனைவியின் அழகை அவர் மட்டும் ரசிக்கட்டும் : பேஸ்புக் புகைப்படத்தால் சர்ச்சையில் நடிகர்!!

Actor

மனைவின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த மலையாள நடிகருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

சமீபத்தில் பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்துக்காக ஆசிப் அலி, தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார், அந்த புகைப்படத்தை அவர் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அது அவரது உரிமையாக இருந்தாலும், புகைப்படத்தில் ஆசிப் அலியின் மனைவி பர்தா அணியவில்லை, குறிப்பாக இது ரம்ஜான் மாதம் என்பதால், வீட்டை விட்டு வெளியே வரும் பெண்கள் கண்டிப்பாக பர்தா அணி வேண்டும்.

ஆனால், இதனை பின்பற்றாமல் இவ்வாறு நடந்துகொண்டது தவறு என பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்துள்ளன, மனைவியின் அழகினை அவர் மட்டும் கண்டு ரசிப்பதற்குதான், மற்றவர்களின் கண்கள் ரசிப்பதற்கு அல்ல என கருத்து தெரிவித்துள்ளனர்.

சமையல் பாத்திரத்தில் பிணமாக கிடந்த 8 வயது சிறுமி: காரணம் நரபலியா?

8 Year girl Murder in india

சேலம் அருகே சமையல் பாத்திரத்தில் சிறுமியின் உடல் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தெளுங்கனூரை சேர்ந்த ராஜா என்பவரின் 8 வயது மகள் மோகனவள்ளி நேற்றிரவு வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது திடீர் என காணாமல் போனார்.
இச்சம்பவம் தொடர்பாக ராஜா அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில்,

அருகில் இருந்த திருமூர்த்தி என்பவரது வீட்டின் அருகே மோகனவல்லி நின்றதாகவும் அதன் பிறகே காணாமல் போனதாகவும் தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த பொலிசார் திருமூர்த்தியின் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது அங்கு பெரிய பாத்திரம் ஒன்றில் சிறுமி மோகன வள்ளி பிணமாக கிடந்தார்.

இதையடுத்து, திருமூர்த்தியை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாத்திரத்தை சுற்றிலும் சிவப்பு நிறத்தில் குங்குமம் சிதறி கிடந்ததால் நரபலிக்காக நடந்த கொலையா அல்லது சிறுமி பாலியல் தொந்தரவிற்கு உட்படுத்தப்பட்டாரா என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா ஓமந்தை வீரபத்திர ஆலய விக்கிரங்கள் இனந்தெரியாதோரால் சேதம்!!

 
வவுனியா ஒமந்தை வீரபத்திரர் ஆலயத்தின் விக்கிரங்கள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

புரதான கோவில்களில் ஒன்றான வீரபத்திரர் கோயிலுக்கு புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு பரிவார மூர்த்திகள் சில வாரங்களுக்கு முன்னர் பிரதிஸ்டை செய்யப்பட்டது.

இந் நிலையிலேயே இச் சிலை உடைக்கப்பட்டு சிலைக்கு அருகே காணப்பட்ட வேல்களும் முறித்து எரியப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஒமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

news (1) news (2) news (3) news (4) news (5)

வவுனியாவில் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கைகலப்பினால் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!!

Vavuniya Death

வவுனியா பம்பைமடு பகுதியில் மோட்டார் சைக்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் வசித்து வந்து மூன்று பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணன் செல்வநாயகம் (வயது 31) வவுனியா தரணிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.

நேற்றுமுன்தினம் இரவு இசை நிகழ்ச்சி இடம்பெற்ற பகுதியில் இளைஞர்கள் சிலருடன் ஏற்பட்ட கைகலப்பில் அப்பகுதி இளைஞர்களினால் மோட்டார் சைக்கிலில் துரத்திச் செல்லப்பட்டபோது குறித்த குடும்பஸ்தருடன் சென்ற ஏழு பேரும் வெவ்வேறு திசைகளை நோக்கிச் சென்றுள்ளனர்.

இரவு என்பதால் வீதிகள் தெளிவின்மை காரணமாக ஒரு மோட்டார் சைக்கிலில் சென்ற மூவர் மரத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மூவரும் வெவ்வேறு இடங்களில் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதுடன் ஒருவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இருவரையும் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைந்த அப்பகுதி இளைஞர்கள் இன்று காலை அப்பகுதிக்குச் சென்றபோது பலத்த காயங்களுடன் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதை அவதானித்து உடனடியாக அவசர பொலிசாரின் உதவியை நாடியுள்ளனர்.

அப்பகுதிக்குச் சென்ற பொலிசார் மற்றும் திடீர் நகர மரண விசாரணை அதிகாரி சடலத்தினை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசேதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் சடலத்தினை ஒப்படைக்குமாறு நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குறித்த குடும்பஸ்தருடன் இசை நிகழச்சிக்குச் சென்ற ஏழு பேரையும் பொலிசார் கைது செய்ததுடன் அதில் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நீதிமன்றம் பிணையில் அனைவரையும் விடுவித்துள்ளது. மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த குடும்பஸ்தர் வீதிப் பராமரிப்புப் பணியில் தொழில் புரிந்து வருவதாகவும் தங்கி நின்று தொழில் புரிந்து வருவதும் தற்போது விடுமுறையில் வீட்டிற்கு வந்தபோதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையங்களில் தாக்குதல் நடத்துவோம் : ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்!!

Airport1

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் அவர்கள் ஒரு மிரட்டல் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதில் அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் அல்லது
நியூயோர்க்கில் உள்ள ஜோன் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்தின் மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படும். அதேபோன்று இங்கிலாந்தின் ஹீத்ரோ, விம்பிள்டனின் அகமது விமான நிலையங்களையும் தாக்குவோம் என மிரட்டியுள்ளனர்.

எனவே விமானங்களிலும், விமான நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து இருநாட்டு விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பதவியை விட்டு ஓடமாட்டேன் : மத்தியூஸ்!!

Mathews

இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன். இக்கட்டான நிலையில் உள்ள இலங்கை அணியை மேலும் சிறப்பாக செயல்பட உதவுவேன் என அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் ஐந்தாவது போட்டியிலும் இலங்கை தோல்விகண்டதோடு தொடரை 3-0 என இழந்தது. டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்தது.

இந்நிலையில் இலங்கை அணியின் தொடர்ச்சியான தோல்லி தொடர்பில் கருத்து தெரிவித்த மத்தியூஸ்,

தற்போது இலங்கை அணி இக்கட்டான நிலைமையில் உள்ளது. இதனால் நான் அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன். இதை எதிர்த்து போராடுவேன்.

எங்கள் அணியில் எனக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல நல்ல வீர்ரகள் உள்ளனர், நிச்சியமாக விரைவில் இந்த மோசமான நிலையிலிருந்து அணியை வெளிக் கொண்டு வருவேன்.

2013ம் ஆண்டு முதல் இலங்கை அணியின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியின் தலைவராக செயற்பட்டு வரும் மத்தியூஸிற்கு, இந்த ஆண்டு தொடக்கம் முதல் 20 ஒவர் அணித் தலைவர் பெறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விலங்குகளை கொடூரமாக வேட்டையாடிய கொலையாளிகள் கைது!!

1

நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் விலங்குகளை வேட்டையாடி பேஸ்புக்கில் பிரசுரித்தவர்கள் 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வன விலங்குகளை வேட்டையாடி உணவாக்கினார் என இணையத்தளங்களில் வெளியான படங்களில் இந்த விலங்கு வேட்டையுடன் சம்பந்தப்பட்ட பிரதான நபரும் இதில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பன்வில பொலிஸார் இன்று காலை இந்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று தெல்தெனிய நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

625.0.560.320.500.400.197.800.1280.160.95 (1) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (2) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (3) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (4) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (5) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (6) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (7) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (8) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (9) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (10) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (11) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (12) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (13) 625.0.560.320.500.400.197.800.1280.160.95

வவுனியா மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் : சிறிதரன்!!

Sritharan

பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் அது அமைய உள்ளதாக கருதப்படும் வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பா.உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற த.தே.கூட்டமைப்பின் மத்திய குழு கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களுற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் ஒமந்தையிலா, தாண்டிக்குளத்திலா என்பது தொடர்பில் ஜனநாயகக் கட்சி என்பதன் அடிப்படையில் நியாய பூர்வமான கருத்துக்கள் பரிமாறப்பட்டதாகவும் கூறினார்.

அதுமட்டுமின்றி, இன்று சமூகமளிக்காத பாராளுமன்ற உறுப்பினர்களினதும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களினதும் கருத்துக்களையும் பெற்று விரைவில் மக்களுக்கான பொருளாதார மையத்தினை அமைப்போம் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

சரியான இடத்தினை தெரிவு செய்ததன் பிற்பாடு மிக தெளிவாக அதற்கான அஸ்த்திபாரம் இடப்படும் எனவும், ஜனநாயக கட்சி என்பதன் அடிப்படையில் அடுத்த சந்ததிக்கு இது ஒரு நல்ல விடயமாக இருக்கவேண்டும் என்பதற்காகவுமே முடிவு எடுப்பது ஒருவாரம் பிற்போடப்பட்டதாகவும் பா.உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக அதிகரிக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சோதனை!!

Airport

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பல சர்வதேச நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல்களை தொடர்ந்தே கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்புத் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்புத் தலைமையதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என தம்மிக விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விமான நிலைய சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தந்தையின் வற்புறுத்தலால் 19 வயது இளம் பெண் செய்த காரியம் சிக்கலில் முடிந்தது!!

Dad

காலி – வெலிவத்தை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 19 வயது இளம் யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் வசம் இருந்து 20 கிராம் 10 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர் ஹிக்கடுவை – நாரிகம பகுதியைச் சேர்ந்த, திருமணமாகாத பெண்ணொருவர் எனவும், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் எனவும், தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த யுவதியின் தாய் மற்றும் தந்தையும் ஹெரோயின் வைத்திருந்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிறையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், சந்தேகநபர், தனது தந்தையின் வற்புறுத்தலின் பெயரில் அடிக்கடி சிறைச்சாலைக்கு ஹெரோயின் கொண்டு சென்று அவரிடம் கொடுப்பதாக பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லடிப் பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை!!

Kalladi

மட்டக்களப்பு – கல்லடி பழைய பாலத்தில் இருந்து பாய்ந்து சுமார் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தற்கொலை செய்த இளைஞன் மட்டக்களப்பு – கூழாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா புகையிரதக்கடவை காப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் : நாங்கள் என்ன அடிமைகளா?(காணொளி)

 
வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (03.07.2016) காலை 9.30 மணியளவில் புகையிரதக் கடவைக் காப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எமக்கான ஒரு நாள் சம்பளம் ரூபா 250 என்பது சட்டத்திற்கு முரனானது, நாங்கள் என்ன அடிமைகளா, வேண்டும் வேண்டும் நிரந்தர நியமனம் வேண்டும் என பல்வேறு பாதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 31.05.2016 தொடக்கம் வேலை நிறுத்தப்போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். கடந்த நான்கு வருடகாலமாக அரசியல் பிரமுகர்கள், ஜனாதிபதி, பிரதமர், அதிகாரிகளுக்கு பல்வேறு கடிதங்கள் அனுப்பியும் இதுவரை எமக்கு எவ்வித பதில்களும் வழங்கப்படவில்லை.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக கொழும்பில் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தின் போது 5000 ரூபா சம்பள அதிகரிப்பு செய்வதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் இன்றுவரை சம்பளம் அதிகரிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

தற்போது புகையிரத கடவைகளுக்கும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும், ஒரு சில புகையிரதக் கடவைகளில் பணியில் எவரும் ஈடுபடவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

1 DSC_0011 DSC_0016 DSC_0019 DSC_0023 DSC_0029 DSC_0035 DSC_0038 DSC_0042 DSC_0044 DSC_0045 DSC_0052 DSC_0061

வெகு சிறப்பாக நடைபெற்ற மன்னார் மடு அன்னை ஆலய ஆடித்திருவிழா!!

 
மன்னார் மடு அன்னை ஆலய ஆடித்திருவிழா வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது. நேற்று காலை 6.15 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம் பிள்ளையின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலி நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம், சிலாபம் மறைமாவட்ட ஆயர் வெலன்ஸ் மென்டிஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மடு அன்னையின் அருளைப் பெறுவதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகைதந்திருந்தனர்.

1 13439072_909495022512845_2344738319184537996_n 13537678_909494392512908_7503447215108615800_n 13566124_909768255818855_366683775_n 13570023_909476272514720_13352898_o 13570279_909476679181346_723456657_o 13578998_909795472482800_1485420091_n 13579692_909795562482791_900936537_o

சிசுவைப் பிரசவித்து வீசி சென்ற பெண் கைது!!

Baby Murder

மட்டக்களப்பு ஏறாவூர், மீராகேணிப் பிரதேசத்தில் அமைந்துள்ள அநாதை இல்லம் ஒன்றின் வளாகத்தில் வாழைமரங்களுக்கு இடையில் கைவிடப்பட்ட நிலையில் 07 மாதச் சிசுவின் சடலம் நேற்று (02.07) இரவு மீட்க்கப்பட்டுள்ளதுடன், அச்சிசுவை பிரசவித்ததாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு மாதகாலமாக குறித்த அநாதை இல்லத்தில் குடும்பத்தவருடன் தங்கியிருந்து சமையல் பணியில் ஈடுபட்டுவந்த இப்பெண்ணைக் கைதுசெய்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளார்.

இப்பெண்ணின் வயிறு வழமைக்கு மாறாக பெரிதாகக் காணப்பட்டபோது, அது தொடர்பில் கணவர் விசாரித்துள்ளார்.

குறித்த பெண் வயிற்றில் கட்டி உள்ளதாக வைத்தியப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது என கணவரிடம் கூறியுள்ளார்.

சம்பவதினம் இப்பெண்ணுக்கு அதிக இரத்தப் பெருக்கு காணப்பட்டதை அடுத்து, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிசுவைப் பிரசவித்துள்ள்ளார்.

இதன் பின்னர், இப்பெண் சிசுவுடன் வைத்தியசாலையிலிருந்து தலைமறைவாகியுள்ளார்.

மேலும், இது தொடர்பில் தமக்குத் தகவல் கிடைத்த நிலையில் இப்பெண்ணைத் தேடிக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டபோது, வாழைமரங்களுக்கு இடையில் சிசு இருந்தமை தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கன் விமானம் எட்டு மணிநேரம் தாமதம் : விமான நிலையத்தில் பயணிகள் போராட்டம்!!

Srilankan

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தாமதத்தால் திருச்சி விமான நிலையத்தில் மேலாளர் அறையை முற்றுகையிட்டு இலங்கை செல்லவிருந்த பயணிகள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் விமானம் தினமும் 2 சேவைகளை இயக்கி வருகிறது.

மதியம் 2.30 மணிக்கு திருச்சி வரும் விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு, பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

நேற்று மதியம் கொழும்பு விமானத்தில் செல்வதற்கு வந்த 137 பயணிகள் பலத்த சோதனைக்கு பின் பயணிகள் தங்கும் அறையில் காத்திருந்தனர்.

அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொழும்பில் விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் மாலை 4.30மணிக்கு விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் என பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பயணிகள் 2 மணி நேரம் பயணிகள் காத்திருப்பு அறையில் காத்திருந்தனர். ஆனால் விமானம் மாலை 5 மணி ஆகியும் வராததால் பயணிகள் ஏர்லைன்ஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இரவு 10.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு விமானம் வரும் என தெரிவித்தனர்.

இதில் கோபமடைந்த 50க்கும் மேற்பட்ட பயணிகள் ஏர்லைன்ஸ் மற்றும் டெர்மினல் மேலாளர் அறையை முற்றுகையிட்டு தங்கள் பயணத்தை ரத்து செய்து கொள்வதாக தெரிவித்தனர்.

இருந்த போதும் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது எங்களுக்கு மாற்று ஏற்பாடு கூட செய்யாமல், பயணிகள் தங்கும் அறையிலேயே தங்க வைத்ததாக கூறி ஆதங்கப்பட்டனர்.

இதில் 50 பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்து விட்டு பணத்தை திரும்ப பெற்று சென்றனர்.

மீதமுள்ள பயணிகள் அறையில் காத்திருந்தனர். இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விமானம் இரவு 10.55 மணிக்கு வந்து 11.55 மணிக்கு 87 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

8 மணி நேர தாமதத்தால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

-மாலை மலர்-