அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ட்விங்கிள் என்ற நாய் 100 பலூன்களை வெறும் 39.08 நொடிகளில் உடைத்து புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.
இதன் மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த நாய் ஒன்றின் முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த தி ஓண்டர் என்ற நாய் 100 பலூன்களை 41.67 நொடிகளில் உடைத்து கின்னஸ் உலக சாதனை படைத்திருந்தது.
தி ஓண்டரின் உரிமையாளர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், புதிதாக சாதனை படைத்துள்ள ட்விங்கிளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மேலும், விரைவில் இந்த சாதனையை முறியடிக்க தனது நாய்க்கு தீவிர பயிற்சி வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களிடமிருந்து நோட்டிபிகேஷன் வந்தால் அது வைரஸாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகில் இன்று அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் சமூகவலைதளமாகவுள்ள பேஸ்புகில் கருத்துகள், புகைப்படங்கள் மற்றும் செய்திகள் உலக அளவில் உடனுக்குடன் பதிவிடப்படுகின்றன. ஆனால் இதுவே ஹேக்கர்களுக்கு வசதியாகவும் அமைந்துள்ளது.
பேஸ்புக்கில் பகிரப்படும் செய்திகள் மூலம், புகைப்படங்கள் வாயிலாக வைரஸ்கள் அதிகமாக பரவிவருகின்றன.
நண்பர்கள் பெயரில் நம் பக்கத்திற்கு வரும் நோட்டிபிகேஷன்களால் நமது மடிக்கணனி, கையடக்கதொலைபேசி மற்றும் கணனிகளுக்கு வைரஸ்கள் பரவுகின்றன.
புகைப்படங்கள் மூலம் வரும் அறிவிப்புகளால் மல்வேயர் நீங்கள் பயன்படுத்தும் கணனிக்கு உடனடியாக தரவிறக்கம் ஆகிறது. இதனை கிளிக் செய்வதன் மூலம் வைரஸ் ஆக்டிவேட் ஆகிறது. குரோம் மட்டுமல்லாமல், எட்ஜ், பயர் பொக்ஸ், சபாரி, ஒபேரா மூலம் இந்தவகை வைரஸ்கள் பரவுகின்றன.
அதனால் உங்கள் வரும் நோட்டி பிகேஷன்களை கவனமாக கையாள வேண்டும். இந்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை நண்பர்களிடமிருந்து நோட்டிபிகேஷன் வந்தால் அதை கவனமாக கையாள வேண்டும். அதனை கிளிக் செய்யாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது.
திருமணம் என்பது மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒரு ஒழுக்க முறையாகும்.
அத்துடன், திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும் மதம், பண்பாடு போன்ற விடயங்களில் வெவ்வேறு விதமான நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
எனினும், நடைமுறையிலுள்ள நெறிமுறைகளுக்கு அப்பால் சென்ற அமெரிக்க பிரஜை ஒருவர் விசித்திரமான திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
ஆம் இன்றைய நவீன காலத்தில் மனிதனின் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ள ஸ்மார்ட் போனை ஒருவர் முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவம் அமெரிக்காவின் லோஸ் வேகஸ் நகரில் இடம்பெற்றுள்ளது. ஏரோன் சேர்வேனக் என்ற மேற்படி இளைஞரே ஸ்மார்ட்போனை முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார்.
குறித்த திருமணமானது கிறிஸ்தவ முறைப்படி இடம்பெற்றுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏரோன் சேர்வேனக்,
இன்றைய காலத்தில் மக்கள் அவர்களின் ஸ்மார்ட் போன்களை அதகமாக நேசிக்கின்றனர். காலை முதல் இரவு தூங்கும் வரையிலும் மக்கள் ஸ்மார்ட் போனுடனேயே இருக்கின்றனர்.
நமது ஸ்மார்ட் போனுடன் உணர்ச்சிகரமான உறவை நாம் கொண்டுள்ளோம். அது போலவே, என் ஸ்மார்ட்போனுடன் எனக்கு நீண்ட நாள் உறவு உள்ளது.
நமக்கு ஆறுதலும், அமைதியும் அளிக்கும் வகையில் ஸ்மார்ட்போன் உள்ளது. இது கிட்டதட்ட ஒரு மனித உறவு போன்றதுதான்” என அவர் கூறியுள்ளார்.
பெண் பொறியியலாளர் சுவாதியை கொன்ற கொலைகாரன் பற்றி சுவாதியின் தோழி பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சுவாதியை கொன்ற கொலைகாரன் 2 நாட்கள் பின்தொடர்ந்து வந்ததை நேரில் பார்த்ததாக அவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியியலாளர் சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. சுவாதி கொல்லப்பட்ட சம்பவம் பற்றி தினம்தினம் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
சுவாதியை கொன்ற கொலைகாரனின் கமரா உருவப் படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். பொலிஸார் வெளியிட்ட புகைப்படத்தில் இருக்கும் மர்மநபர்தான் சுவாதியை கொன்ற படுபாதக கொலையாளி என்று நுங்கம்பாக்கம் ரயில் நிலைய சிற்றுண்டிச்சாலை ஊழியரும், சுவாதியின் நெருங்கிய தோழியும் பொலிஸாரிடம் அடையாளம் காட்டியுள்ளனர்.
இதனால் புகைப்படத்தில் இருக்கும் மர்மநபர்தான் சுவாதியை கொன்ற கொலைகாரன் என்பது உறுதிபட தெரியவந்துள்ளது.
அந்த கொலைகாரன் பற்றி சுவாதியின் தோழி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரது வாக்குமூலம் விவரம் வருமாறு:-
நான் சுவாதி வேலைபார்க்கும் நிறுவனத்தில்தான் வேலை பார்க்கிறேன். சுவாதியை கொன்ற கொலைகாரனை நான் 2 நாட்கள் நேரில் பார்த்துள்ளேன்.
கடந்த 10ம் திகதியன்றும், 11ம் திகதியன்றும் நானும், சுவாதியோடு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தேன். அப்போது அந்த மர்மநபர் சுவாதியை பின்தொடர்ந்து வருவதை நான் பார்த்தேன்.
அந்த மர்ம நபர் என்னை பின்தொடர்ந்து வருகிறான். ஏன் என்று தெரியவில்லை. அவன் என்னிடம் என்னை உனக்கு தெரியவில்லையா என்று கேட்கிறான். ஆனால் உண்மையிலேயே அவனை எனக்கு யார் என்று தெரியவில்லை என்று சுவாதி என்னிடம் கூறினாள்.
இந்த விஷயத்தை லேசாக விடக்கூடாது அவனை கண்டிக்க வேண்டும் என்று நான் சுவாதியிடம் எச்சரித்தேன். அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சுவாதி என்னிடம் கூறினாள். ஆனால் அந்த படுபாவி சுவாதியை இந்த அளவுக்கு கொடூரமாக கொலை செய்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அந்த பாவியை கைது செய்து பொலிஸார் கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும்.இவ்வாறு சுவாதியின் தோழி தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது.
சுவாதியின் நண்பரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் அவரும் சில திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். பொலிஸாரிடம் அவர் கூறியதாவது..
நானும், சுவாதியும் ஒரே கல்லூரியில் படித்தோம். நல்ல நண்பர்களாக பழகிவந்தோம். திருவல்லிக்கேணியில் உள்ள எனது வீட்டிற்கு கூட சுவாதி வந்திருக்கிறாள்.
இரக்க சிந்தனையுள்ள சுவாதி நல்ல மனம் படைத்தவள். யாருக்கும் தீங்கு செய்ய நினைக்க மாட்டாள். கடந்த 18ம் தேதியன்று சுவாதி, என்னிடம் செல்போனில் பேசினாள். அதுதான் அவள் கடைசியாக என்னிடம் பேசிய பேச்சு.
மர்மநபர் ஒருவன் என்னை பின் தொடர்ந்து வருகிறான். கடந்த 10-ந் தேதியன்றும், 11-ந் தேதியன்றும் அவன் என்னை தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வந்தான் அவனை என்ன செய்வது என்று தெரியவில்லை என்று சுவாதி கூறினாள்.
அவனை யார் என்று அடையாளம் காட்டு நான் அவனை கண்டிக்கிறேன் என்று சுவாதியிடம் கூறினேன். அவன் அவ்வளவு பெரிய ஆளாக தெரியவில்லை. அவனை ஒன்றும் செய்யவேண்டாம். இந்த பிரச்சினையை விட்டுவிடு என்று சுவாதி அப்போது என்னிடம் கூறிவிட்டாள்.
நானும் அந்த பிரச்சினையை மறந்துவிட்டேன். சுவாதி கொலை செய்யப்படுவாள் என்று நான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. சுவாதியை பின்தொடர்ந்த மர்ம நபர் இந்த அளவுக்கு கொடூரமாக கொலை செய்வான் என்றும் நினைக்கவில்லை.
அந்த படுபாவி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு சுவாதியின் நண்பர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தனிப்படை பொலிஸார் கொலையாளியை கண்டுபிடித்து கைதுசெய்யும் முயற்சியில் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸ் கமிஷனர் டி.கே.இராஜேந்திரன் நேற்றும் இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதிநவீன விமானம் தயாரிக்கப்படுகிறது. தற்போது ஒரு அடுக்கு விமானம் மட்டுமே உள்ளது.
இந்த நிலையில் 2 அடுக்கு மாடிகளை கொண்ட அதிநவீன விமானம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமான மாதிரியை ஆஸ்கர் வினல்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார்.
இந்த விமானத்தில் 250 பேர் பயணம் செய்யலாம்.
அதிநவீன இந்த விமானத்தில் சூப்பர் சோனிக் என்ஜின் பொருத்தப்படவுள்ளது.
அது மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் திறன் படைத்ததாக இருக்கும்.
லண்டனில் இருந்து நியூயோர்க் நகருக்கு வழக்கத்தை விட 3 மணி நேரத்துக்கு முன்னதாக சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட எமில் நகர் கிராம அலுவலகர் பிரிவில் உள்ள ஜீவபுரம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தை நேற்று புதன்கிழமை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் றொபட் பெரேரா (வயது 17) என தெரியவந்துள்ளது. குறித்த இளைஞனின் தாய் வெளிநாட்டிள் உள்ள நிலையில் தந்தை மற்றும் தம்பியுடன் குறித்த இளைஞன் வசித்து வந்தள்ளார். கடந்த 1ம் திகதி தனது பிறந்த தினத்தையும் கொண்டடியுள்ளார்.
குறித்த இளைஞன் எழுத்தூர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன் தனது தந்தையுடன் சண்டையிட்ட நிலையில் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நண்பர்களுடன் இருந்து விட்டு அன்றைய தினம் மாலை ஜீவபுரம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் தனிமையாக தங்கியுள்ளார்.
குறித்த வீட்டுக்கு வந்த பின்பு எவருடனும் கதைக்கவில்லை.நான்கு நாட்களாக குறித்த இளைஞனை காணாத நிலையில் சந்தேகம் கொண்ட நண்பர்கள் நேற்று புதன்கிழமை காலை இறந்த இளைஞனின் தந்தையிடம் விசாரித்த போது என்னுடன் சண்டை போட்டான் கதைக்கவில்லை .
எங்காவது நண்பர்களின் வீட்டுக்கு போயிருப்பான் வருவான் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் நான்கு நாட்களாக வீடு பூட்டிய நிலையில் இருப்பதாகவும் அவ்வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாகவும் அயல் வீட்டார் நேற்று காலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதன் போது விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த வீட்டிற்கு வந்து சோதனையிட்ட போது குறித்த வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை மீட்ட மன்னார் பொலிஸார் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத்லுவிஸ் அடிப்படையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் 2 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
லண்டன் – கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி துடுப்புடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தனுஷ்க குணதிலக்க 62 ஓட்டங்களையும், குஷல் மென்டீஸ் 77 ஓட்டங்களையும், தினேஸ் சந்திமால் 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். அத்துடன் மெத்தியூஸ் 67 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழக்காது இறுதி வரை களத்தில் இருந்தார்.
இந்தநிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் இலங்கை 5 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 305 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இதனையடுத்து டக்வத்லூவிஸ் முறைப்படி 308 என்ற வெற்றி இலக்கு இங்கிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 40.1 ஓவர்கள் நிறைவில் 309 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுபெற்றது.
ஜேசன் ரோய் 162 ஓட்டங்களையும் ஜோ ரூட் 65 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நுவன் பிரதீப் 2 விக்கெட்டுக்களை பெற்றார்.
ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தக்கூடிய அளவிலான மிக நுண்ணிய கெமராவை ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
ஒரு உப்புத் துகள் அளவு கொண்ட இந்த கெமராவை மருத்துவ சேவைகளுக்கும், இரகசியக் கண்காணிப்புப் பணிகளுக்கும் பயன்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முப்பரிமாண அச்சிடல் முறையைப் பயன்படுத்தி இந்த கெமரா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று லென்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இரண்டு தலைமுடிகளின் அகலம் கொண்ட கண்ணாடி இழைகளில் பொருத்தக்கூடிய இந்த கெமராவிலுள்ள லென்ஸ்கள் தலா 0.1 மி.மீ. அகலம் கொண்டது.
இதனைக் கொண்டு 3 மி.மீ. தொலைவிலிருக்கும் பொருட்களையும் துல்லியமாகக் காண முடியும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதில் பொருத்தப்பட்டுள்ள 1.7 மீட்டர் நீள கண்ணாடி இழைகள், கெமரா படம் பிடிக்கும் காட்சிகளை மின் வடிவில் கடத்தி திரைக்குக் கொண்டு வருகின்றன.
இந்தக் கெமராக்கள் மருத்துவத்துறைக்கு மிகவும் பயன்படக்கூடியவை.
உடலுக்குள் இருக்கும் உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளைக் கண்டறியும் எண்டோஸ்கோப்பி பரிசோதனைகளை இந்த கெமராக்கள் மிகவும் எளிமையாக்கும் என நம்பப்படுகிறது.
இந்தக் கெமராக்களை ஊசி மூலம் மூளைக்குள் செலுத்தியும் பரிசோதிக்கலாம்.
இதுமட்டுமின்றி, கண்காணிப்புப் பணிகளுக்கு இந்த கெமராக்கள் பேருதவியாக இருக்கும்.
கண்ணுக்குப் புலப்படாத கண்காணிப்புக் கெமராக்களாகவும் இவற்றைப் பயன்படுத்த முடியும்.
இந்த ஆய்வின் வெற்றி, மருத்துவ சேவை மற்றும் கண்காணிப்புப் பணிகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வல்லது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மும்மையில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனது ஆறு வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Savitra Durnale(வயது 25) என்ற பெண் தனது ஆறு வயது ஆண் குழந்தையான தேவராஜ்க்கு உடல் நிலை சரியில்லை என கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்ததை அறிந்துள்ளனர். மேலும், குழந்தையின் உடம்பில் பல பகுதிகளில் காயங்கள் இருந்ததால் அவரின் மரணத்தில் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவர்கள் பொலிசில் புகார் அளித்துள்ளனர், பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது தாய் Savitra Durnale அளித்த வாக்கு மூலத்தில், தன் கணவன் இறந்த பிறகு, குழந்தையை வளர்க்க தன்னிடம் போதிய வசதி இல்லை எனவும், அதனால் தான் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றுதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பொலிசார் அவரை கைது செய்ததுடன் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் சுவாதி பற்றி கருத்துக்களை வெளியிடுவதற்கு பதில் அவள் ஆன்மா இறைவன் காலடியில் இளைப்பாற ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்யும்படி சுவாதியின் சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட சுவாதியின் சகோதரி நித்யா இணையத்தள பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..
எனது தங்கை சுவாதி பற்றி யூகத்தின் அடிப்படையில் பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுகிறது. அவளது மூத்த சகோதரி என்ற முறையில் சுவாதி பற்றி சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அவள் மிகவும் குழந்தைத் தனமான குணம் கொண்டவள். மென்மையாகவே பேசுவாள். கடவுளுக்கு பயந்து நடந்தவள். சுந்தரகாண்டம், பஞ்சாங்கம் படிக்காமல் மற்றும் அர்ச்சதை தூவி கொள்ளாமல் அவள் ஒருநாள் கூட வீட்டை விட்டு வெளியில் காலடி எடுத்து வைத்ததில்லை.
தினமும் ரெயிலில் வேலைக்கு செல்லும் போது விஷ்ணு சகஸ்ரநாமம் உச்சரித்தபடியேதான் செல்வாள்.
அவள் வேலைக்கு செல்லும் வழியில் சிங்க பெருமாள் கோவில் இருப்பதால் தவறாமல் நரசிம்மர் ஆலயத்துக்கு செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தாள். அதுபோல திருமளிகையில் உள்ள ஆச்சாரியர் முதலியாண்டான் சுவாமிகள் ஆலயத்துக்கும் அவள் செல்வதுண்டு.
மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது சூளைமேட்டில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலுக்கு செல்லாமல் அவள் வருவதே கிடையாது. அந்த அளவுக்கு அவள் தெய்வ பக்தி நிறைந்தவள்.
ஸ்ரீரங்கத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்த நாங்கள் பாரம்பரிய வழிபாடுகளில் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள். அடிக்கடி யாத்திரை சென்று நிறைய கோவில்களில் வழிபாடு செய்துள்ளோம்.
கடைசியாக நான் என் தங்கையுடன் மசினக்குடியில் உள்ள ஆலயத்திற்கு சென்று இருந்தோம். அங்குள்ள இயற்கை அழகை கண்டு என் தங்கை சுவாதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அவள் இயற்கையை மிகவும் விரும்புவாள். ஓரிரு தடவை மலையேற்றத்துக்கும் அவள் சென்று வந்துள்ளாள்.
சுவாதிக்கு என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் அதிக பாசமுண்டு. அவளுக்கு நண்பர்கள் வட்டாரம் கிடையாது. சில நட்புகளே உண்டு. தேவையில்லாமல் அவள் எந்த பொழுதுபோக்குகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டாள்.
இத்தகைய பண்புடன் வளர்ந்த அவள் பற்றி யூகத்தின் படி பலரும் பலவிதமாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிடுவது உண்மையிலேயே எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
எனவே அவள் பெயரில் சமூக வலைத்தளங்களில் யாரும் எந்தவித கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
அப்படி வெளியிடப்படும் யூகத்தின் அடிப்படையிலான கருத்துக்கள் இந்த வழக்கில் குழப்பத்தை ஏற்படுத்திவிட வாய்ப்பு உள்ளது.
சமூக வலைத்தளங்களில் சுவாதி பற்றி கருத்துக்களை வெளியிடுவதற்கு பதில் அவள் ஆன்மா இறைவன் காலடியில் இளைப்பாற ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
எங்கள் அனைவரது வேண்டுகோளுமே, இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.
துரதிர்ஷ்டவசமாக கொலை செய்யப்பட்ட எனது தங்கையின் குணத்தையும், இமேஜையும் பாதிக்கும் வகையில் நாம் யாரும் தேவையில்லாமல் செயல்பட வேண்டாம். அது போல ஸ்பிரிட் ஆப் சென்னையையும் மடிய நாம் அனுமதிக்க கூடாது.
என்ன காரணத்தினாலோ சுவாதியை யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. அவற்றை இனி மறந்து விடுவோம். இனியாவது இத்தகைய கொடூரம் நடக்கும் போது அதை தடுத்து நிறுத்த நாம் அனைவரும் முன்வர வேண்டும் என்று ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக்கொள்வோம்.
மக்களை காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மட்டுமல்ல பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்கலாம். சுவாதியின் கொலை சம்பவம் இந்த விஷயத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த வினுபிரியா தற்கொலை வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்பி கூறியதாவது, வினுபிரியா தற்கொலை வழக்கில் விசைத்தறி தொழிலாளியான சுரேஷ் என்பவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சுரேஷ் பொலிசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில், தான் வினுபிரயாவை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும். தனது காதலைப் அவர் புறக்கணித்தால், அவரை அவமானப்படுத்தவே புகைப்படத்தை ஆபாசமாக சித்திரித்து வெளியிட்டதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் சிலரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் வினுப்ரியாவின் புகைப்படங்கள் சித்திரித்து வெளியிடப்பட்டது குறித்து புகார் அளித்த போது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படும் பொலிசார் இருவருக்கு மெமோ அளிக்கப்பட்டுள்ளதாகவும். உரிய விளக்கம் அளிக்கவும் பொலிஸ் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் ஒருவருடம் புனர்வாழ்வுப் பயிற்சியினை நிறைவு செய்த 5 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைத்து வைக்கும் நிகழ்வும், ஏற்கனவே இங்கு புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்திருக்கும் தச்சுத் தொழிலினை கற்றுவந்த 25 போராளிகளுக்கு தச்சு உபகரணங்களும் வழங்கும் நிகழ்வும் இன்று (29.06.2016) நடைபெற்றது.
இன் நிகழ்வு புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப்பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்க தலைமையில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பணிப்பாளர், சர்வமத குருக்கள், பின் இணைவுப் பொறுப்பதிகாரி மற்றும் முன்னாள் போராளிகள், பெற்றோர் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மும்பையை சேர்ந்த பிரபல மொடல் அழகியான சோபியா ஹயத் தற்போது ஆன்மீகத்தில் ஐக்கியமாகியுள்ளார்.படு கவர்ச்சி மொடல், கிசுகிசுக்கள் என உலாவந்த இவர், தற்போது அவற்றையெல்லாம் கைவிட்டு விட்டு, கன்னியாஸ்திரியாக மாறியுள்ளார்.
சமீபத்தில் காசிக்கு போயிருந்த இவர், அவுரங்காபாத்தில் உள்ள கைலாசநார் கோயிலுக்கு சென்று சிவனை வழிபட்டுள்ளார், இதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட்ட அவர், ஆன்மிக பாதை எனது வாழ்க்கையை மாற்றிவிட்டது.சிவன் கோயிலுக்கு சென்ற போது என்னுள் புதுவித மாற்றம் ஏற்பட்டது, என்னுள் சிவன் வந்துவிட்டார், அவருக்கு குழந்தை பெற்றது போல உணர்கிறேன்.
கடவுள்கள் அனைவரும் என்னை தேடி வருகிறார்கள், நான் யாராக இருக்கிறேனோ அதுவாகவே மாறிக்கொண்டிருக்கிறேன் என்றும் என்னுள் சிவலிங்கம் இருக்கிறது எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
வவுனியாவில் இன்று(29.06.2016) மதியம் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த சாரதி காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா தாண்டிக்குளத்திலிருந்து புதுக்குளம் செல்லும் பிரதான வீதியின் வயலுக்கு தண்ணீர் செல்லும் மதகில் முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீழ்ந்துள்ளது. எனினும் முச்சக்கரவண்டியில் சாரதியைத் தவிர வேறுயாரும் பயணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. மேலதிக விசாரணையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்மார்ட்போன் மற்றும் ஜபாட்டில் அனுப்பும் குறுந்தகவல்கள் மனித மூளையின் அதிர்வலைகளை மாற்றக்கூடியது என புதிய ஆய்வுகள் முலம் தெரியவருகிறது.மக்கள் அதிகளவில் ஸ்மார்ட்போன் குறுந்தகவல்கள் மூலம் மற்றவர்களுடன் தகவல்களை பரிமாறுகின்றார்கள்.
ஆனாலும் அதன் நரம்பியல் விளைவுகளை அவர்களால் பெரிதளவில் அறிய முடிவதில்லை.William Tatum தலைமையிலான குழுவொன்று குறுந்தகவல்கள் அனுப்புகையில் மனித மூளையின் செயற்பாடு எவ்வாறு இருக்கிறது என ஆராய்ந்திருந்தது.இதற்கென 129 பேரிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டிருந்தன.
அவர்களது மூளையின் அலைகள் 16 மாதங்களுக்கு மேலாக EEGs மூலம் அவதானிக்கப்பட்டது.இதன் போது அவர்கள் குறுந்தகவல்கள் அனுப்பப்படும் போது அவர்களின் மூளையில் குறுந்தகவல் சந்தம் இருப்பது அவதானிக்கப்பட்டது.இது மற்றைய செயற்பாடுகளின் போது உண்டாகும் சந்தத்திலும் வேறு வகையினது என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
ஹிரித்திக் ரோஷன் தன் குழந்தைகளுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் துருக்கி சென்றுள்ளார்.இவர் அங்கு விமானத்தை தவற விட்டு, விமான நிலையத்தில் அமர்ந்திருந்த போது தீவிரவாதிகள் சில துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்,
உடனே அங்கிருந்தவர்கள் ஹிர்த்திக் ரோஷனை காப்பாற்றி இந்தியா அனுப்பி வைத்துள்ளனர்.அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தனக்கு உதவி செய்த இஸ்தான்புல் விமான பணியாளர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.