ஹிரித்திக் ரோஷன் தன் குழந்தைகளுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் துருக்கி சென்றுள்ளார்.இவர் அங்கு விமானத்தை தவற விட்டு, விமான நிலையத்தில் அமர்ந்திருந்த போது தீவிரவாதிகள் சில துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்,
உடனே அங்கிருந்தவர்கள் ஹிர்த்திக் ரோஷனை காப்பாற்றி இந்தியா அனுப்பி வைத்துள்ளனர்.அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தனக்கு உதவி செய்த இஸ்தான்புல் விமான பணியாளர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
சமந்தாவின் திருமணம் இன்னும் சில மாதங்களில் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவர் தெலுங்கு ஹீரோ நாகசைதன்யாவை காதலிப்பாக தெலுங்கு மீடியாக்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தில் முதலில் சமந்தா தான் கமிட் ஆனார்,
இப்படம் மூன்று பாகமாக எடுக்கப்படுகின்றது.ஒரு பாகத்தில் மட்டும் நடித்துவிட்டு விலகினால் நன்றாக இருக்காது என்று எண்ணி சமந்தா இப்படத்திலிருந்து மொத்தமாக விலகிவிட்டதாக கூறப்படுகின்றது, மேலும், திருமணத்திற்கு பிறகு நடிக்கமாட்டார் என்றும் தெரிகின்றது.
பிரேசிலில் ஒலிம்பிக் தீபத்தின் மீது நீரை ஊற்றி அணைக்க முயன்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.27 வயதான மாத்யூ சில்வா என்ற நபரே குறித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனீரோவில் வருகிற ஆகஸ்டு 5ம் திகதி முதல் 21ம் திகதி வரை அரங்கேறுகிறது.
ஒலிம்பிக் தீபம் பிரேசிலின் 300 நகரங்கள் உட்பட சுமார் 20,000 கிலோ மீட்டர் தூரம் வலம் வந்து இறுதியாக தொடக்க விழா நடைபெறும் மரக்கானா மைதானத்தை சென்றடைந்து அங்குள்ள ராட்சத கொப்பரையில் தீபம் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், மத்திய பிரேசிலில் உள்ள மரக்கஜுவில், ஒலிம்பிக் தீபம் வலம் வந்து கொண்டிருந்த போது, மாத்யூ சில்வா ( வயது27) என்ற நபர் ஒலிம்பிக் தீபத்தின் மீது நீரை ஊற்றி அணைக்க முயன்றுள்ளார்.சம்பவத்தை தொடர்ந்து பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அர்ஜென்டினாவில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கன்னியாஸ்திரி ஒருவர் சிரித்தபடியே மரணமடைந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.அர்ஜென்டினா தலைநகர் ப்யூனஸ் அயர்சைச் சேர்ந்தவர் கன்னியாஸ்திரி சிசிலியா மரியா (வயது 43).
அனைவரிடமும் அன்பாகவும் கனிவாகவும் நடந்துக் கொள்ளும் கன்னியாஸ்திரி சிசிலியாவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இருப்பினும் அவர் தன்னுடைய நோய் குறித்து எந்தவித கவலையும் இல்லாமல் தொடர்ந்து இறை ஊழியத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிசிலியா மரணமடைந்தார்.அவர் இறக்கும் தருவாயில் கூட ‘அனைவரும் அன்பை பகிர்ந்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியவாறே சிரித்தபடியே மரணமடைந்தார். அவரது உதடுகள் பல மணிநேரம் சிரித்தபடியே இருந்தது.கடைசி நேரத்தில் கூட சிரித்தபடியே மரணித்த சிசிலியாவின் புன்னகை புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
செல்போன் பேசியபடி தாதி ஊசி போட்டதால் குழந்தை இறந்ததாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ஆதாம் நகரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது, ஷாகிராபேகம் ஆகியோருக்கு 3 குழந்தைகள்.
நேற்று முன்தினம் நசீராபேகம்(2) என்ற குழந்தைக்கு திடீரென வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. இதனால் தஞ்சை வ.உ.சி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். வைத்திய குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நசீராபேகத்திற்கு உடல் நிலை மோசமானது. இதனால் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு ராஜாமிராசுதார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.
பெற்றோர் அந்த குழந்தையை இரவோடு இரவாக அரசு ராஜாமிராசுதார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி குழந்தை நேற்று அதிகாலை இறந்தது. உடனே சாகுல்ஹமீது குழந்தை நசீராபேகத்தின் சடலத்தை எடுத்துக் கொண்டு முன்பு சிகிச்சை பெற்ற தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
எனது குழந்தை இறப்பிற்கு இந்த மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சைதான் காரணம். உங்கள் மருத்துவமனையில பணிபுரிந்த தாதி செல்போனில் பேசிக்கொண்டு எனது குழந்தைக்கு ஊசி போட்ட பின்னர் தான் உடல்நிலை மோசமானது.
எனவே குழந்தை இறப்பிற்கு மருத்துவமனை நிர்வாகம் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறி முற்றுகையிட்டனர். பெற்றோர், மருத்துவமனை நிர்வாகத்தினரை அழைத்து பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சுமூக தீர்வு ஏற்படவே பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தென் அமெரிக்க நாடான பராகுவேயில் படுக்கையில் சிறுநீர் கழித்த சிறு வயது குழந்தையை, தீயில் வாட்டி தண்டனை கொடுத்துள்ள தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிம்பியோ நகரில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 20 வயது மதிக்கத்தக்க நபரின் சிறுவயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளான்.
இதனால் கோபம் கொண்ட தந்தை, விறகு குச்சிகளை போட்டு தீயை மூட்டியுள்ளனர், அதன் பிறகு நிர்வாணமாக இருக்கும் தனது குழந்தையை கையில் தூக்கிவைத்துக்கொண்டு, எரிகின்ற தீயில் வாட்டி, இனிமேல் படுக்கையில் சிறுநீர் கழிப்பாயா? என கேட்டு மிரட்டுகிறார். அச்சிறுவனும் நான் இனிமேல் அப்படி செய்யமாட்டேன் என கூறுகிறார், இதில் அச்சிறுவனின் உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது, தந்தையின் இச்செயலை அருகில் வசிப்பவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
மேலும் அந்நபரின் காட்டுமிராண்டித்தனமான செயலால் நாங்கள் அச்சமடைந்ததால், அருகில் செல்லவில்லை என கூறியுள்ளனர். இக்குற்றத்திற்காக அந்நபரை கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் பதில் எதுவும் கூற மறுத்துள்ளார், மேலும் நான் ஒன்றும் செய்யவில்லை என்ற வார்த்தையை மட்டும் கூறியுள்ளார்.
மேலும், இந்நபர் அச்சிறுவனின் வளர்ப்பு தந்தை எனவும் தெரியவந்துள்ளது, தாயார் கர்ப்பமாக உள்ளார், தற்போது இந்நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தீயால் காயமடைந்த சிறுவன், குழந்தைகள் Paediatric மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உள்ள தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் இருவர் மாணவனை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் உயர்தரத்தில் பயிலும் மாணவனை குறித்த பாடசாலையின் உடற்பயிற்சி ஆசிரியர் தாக்கியதில் செவிப்பறை பாதிக்கப்பட்ட நிலையில் மாணவன் சாவகச்சேரி ஆதரா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தான்.
இந்நிலையில், மாணவனை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்ட அந்த பாடசாலையின் இரு ஆசிரியர்களும் மாணவனை அச்சுறுத்தியுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் குறித்த இரு ஆசிரியர்களையும் கைது செய்து சாவகச்சேரி பொலிஸார் நேற்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டுள்ளார்.இதேவேளை குறித்த மாணவனைத் தாக்கிய உடற்பயிற்சி ஆசிரியர் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
14 வயது சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கி உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் மினிபே வேரங்தொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் பெற்றோர் இல்லாத சந்தர்ப்பத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.வீட்டில் இருந்த சேலையினால் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினிபேசங்க போதி மத்திய கல்லூரியில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.குறித்த சிறுவன் இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ள போது, 4 வயதான சிறுவனின் சகோதரர் மாத்திரம் வீட்டில் இருந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
பெற்றோர் குறிப்பிடப்பட்ட பிரதேசத்தில் உள்ள நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்த வேளை சிறுவன் இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.மேலும், இவர்கள் விளையாடிக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த கோர சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த சிறுவன் தனது மாமியிடம் “அண்ணன் பொய்க்கு இறந்தது போல் விளையாடுகின்றான் ஓடி வந்து பாருங்கள்” எனவும் கூறியுள்ளான்.குறித்த சிறுவன் தூக்கில் தொங்கி உயிரிழப்பதற்கான காரணங்கள் இது வரையில் அறியப்படவில்லை.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பதற்கு அரசுதீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய 8ரூபாவிலிருந்து 9 ரூபாய் வரையும், அதிலிருந்து ஆரம்பிக்கும் கட்டணங்கள் 6 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பேருந்து கட்டணங்களின் தேசிய கொள்கைகள் கணக்கீட்டு மதிப்பீடுகளுக்கு அமைய பேருந்து கடடனங்களின் திருத்தமானது 3.2 வீதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த 3.2வீதமான கட்டணங்கள் திருத்தத்தின் குறைந்த கட்டண அறவீடுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படாத காரணத்தினால் இதனை நிராகரித்துள்ளதாக பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக கட்டணங்களை 6வீதமாக அதிகரித்துள்ளதாகவும், மிகவும் குறைந்தளவு கட்டணங்களை 1 ரூபாவால் அதிகரிப்பதற்கும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் புத்தூர் றோட் வேம்பிராய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ரஞ்சா எனப்படும் 35 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றை ஏற்றிச் சென்ற வாகனம் குறித்த நபரை மோதி விட்டுவிபத்துக்குள்ளாகி அருகில் இருந்த வீட்டின் மதிலையும் உடைத்து சென்றுள்ளது.
இந்த விபத்தின் மூலம் பல இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் சேதமாகி உள்ளதுடன் ஒரு மரணமும் ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இன்று அதிகாலை தினச்சந்தைப் பகுதியில் துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளது.
அதில் வந்தேறு குடிகளுக்கு வவுனியாவில் வர்த்தகமையமா? என்ற தலைப்புடன் பொருளாதாரம் இருந்துவிட்டால் பொருளாதார மையத்தை அமைக்கும் இடத்தை தீர்மானிக்கும் தகுதி உங்களுக்கு உண்டா? உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளதுடன்,
மண்ணின் மைந்தர்கள் என்ற பெயரில் தினச்சந்தைப்பகுதியில் உள்ள கடைகளில் இத்துண்டுப்பிரசுரத்தினை காணமுடிந்துள்ளதாக தினச்சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வவுனியா சமளங்குளம் மற்றும் ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள இளைஞர் யுவதிகளால் போதைப்பொருள் அற்ற எமது கிராமம் என்ற தொனிப்பொருளில் வீதி நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.
இவ் வீதி நாடகம் சமளங்குளம் மற்றும் ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள 5 கிராமங்களில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சான் பிரான்சிஸ்கோவில் தாவரங்களில் இருந்து இறைச்சி போன்ற சுவையுடைய பர்கரைத் தயாரித்திருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் இறைச்சி அதிக அளவில் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. நீண்ட காலமாகவே இறைச்சிக்கு மாற்றாக அதே சுவையுடைய உணவுப் பொருளை உருவாக்க வேண்டும் என்று நிபுணர்கள் முயற்சி செய்து வந்தனர்.
ஆனால், சான் பிரான்ஸ்சிகோவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அந்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டது.
கடந்த 5 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, மாட்டு இறைச்சியைப் போன்ற நிறமும் சுவையும் உடைய பொருளை உருவாக்கிவிட்டனர்.
ஒரு உணவுப் பொருள் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும்போது அது உலகத்தையே மாற்றிவிடவேண்டும். அப்படி ஒரு பொருளைத்தான் நாங்கள் தற்போது உருவாக்கியிருக்கிறோம்.
இந்தத் தாவர இறைச்சியை சமைக்கும்போது மாட்டு இறைச்சி சமைப்பது போலவே மணம் வரும். பார்க்கவும் கண்களைக் கவரும். சுவையும் அசல் மாட்டு இறைச்சியை ஒத்திருக்கும். பர்கரில் வைத்துச் சுவைத்தவர்கள் தாவர இறைச்சி என்பதை நம்பவில்லை. அத்தனைத் துல்லியம்.
நாங்கள் சைவ உணவு உண்பவர்களுக்காக மட்டும் இந்தத் தாவர இறைச்சியை உருவாக்கவில்லை. பல கோடி அசைவப் பிரியர்களுக்காகவே இதை உருவாக்கியிருக்கிறோம். தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு, கோதுமை, உருளைக்கிழங்கில் உள்ள புரோட்டீன்கள் எல்லாம் சேர்ந்து தாவர இறைச்சியைக் கொடுக்கின்றன.
இறைச்சியை விட இதில் அதிக அளவில் புரோட்டீனும் குறைந்த அளவு கொழுப்பும் இருக்கின்றன. அதனால் பயமின்றி இந்தத் தாவர இறைச்சியைச் சாப்பிடலாம். தற்போது இதன் விலை அதிகமாக இருக்கிறது.
ஆனால் அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது விலை குறைந்துவிடும். அடுத்த 50 ஆண்டுகளில் சைவ இறைச்சி முக்கிய இடத்தைப் பிடித்துவிடும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலை ஒன்றிடம் சிக்கிக் கொண்ட தனது தாயை குறித்த முதலையுடன் போராடி மீட்டெடுத்த இளைஞர் ஒருவருக்கு புதிய வீடொன்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் – இபலோகம பிரதேசத்தைச் சேர்ந்த ரொமேஸ் மதுவந்த என்ற இளைஞனுக்கே புதிய வீடு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் சூரிய பதனம மூலமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த வீடானது இன்றைய தினம் சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் வைத்தியர் வசந்தா ஜயசூரிய ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
ஆண் பாலியல் தொழிலாளிகளினால் எயிட்ஸ் நோய் பரவும் அபாயம் நாட்டில் அதிகரித்துள்ளது. இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்களாக மாற்றமடைந்த ஆண்களின் (ட்ரான்ஸ்ஜென்டர்) எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.
இவ்வாறான ஆண் பாலியல் தொழிலாளிகளின் சேவையை பெற்றுக்கொள்ளும் சமூகத்தின் பல்வேறு மட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் மத்தியில் எச்.ஐ.வீ நோய்த் தொற்று மற்றும் ஏனைய பால் நோய்கள் பரவக்கூடிய அபாயம் வெகுவாக அதிகரித்துள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெண் பாலியல் தொழிலாளிகளை விடவும் ஆண் பாலியல் தொழிலாளிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. திருமணம் முடிந்த மற்றும் திருமணம் முடிக்காத பலரும் இந்த பெண்களாக மாறிய ஆண் பாலியல் தொழிலாளிகளை நாடுகின்றனர்.
உயர்குடிகளைச் சேர்ந்த செல்வந்த பெண்களும் இந்த ட்ரான்ஸ்ஜென்டர் அல்லது பெண்களாக மாறிய ஆண்களிடம் பாலியல் சேவை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
பெண்களாக மாற்றமடைந்த ஆண் பாலியல் தொழிலாளர்கள் பாதுகாப்பான பாலுறவு முறைகளை பின்பற்றத் தவறுதனால் அவர்களும் அவர்களிடம் சேவை பெற்றுக் கொள்ளும் நபர்களும் எச்.ஐ.வீ போன்ற தொற்றுக்களினால் பீடிக்கக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.