பெங்களூர் நகரின் முதல் பெண் டாக்சி ஓட்டுனரும் உபேர் இந்தியா கோல் டாக்சி நிறுவனத்தின் முதல் பெண் ஓட்டுனருமான பாரதி பெங்களூரில் மரணமடைந்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் 39 வயதான வீராத் பாரதி. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு வேலை தேடி பெங்களூருக்கு வந்தார்.
பெங்களூரில் உள்ள நாகஷெட்டி ஹல்லி என்ற பகுதியில் வசித்து வந்த இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு கார் டிரைவிங் கற்றுக்கொண்டு சொந்தமாக கார் வாங்கி அவரே ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு உபேர் டாக்சி நிறுவனத்தில் ஓட்டுனராக பணியில் சேர்ந்தார்.
பெங்களூர் நகரின் முதல் பெண் டாக்சி டிரைவராகவும், உபேர் இந்தியா நிறுவனத்தின் முதல் பெண் டாக்சி டிரைவராகவும் இவர் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் பாரதி தனது வீட்டில் இறந்து கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரது வீட்டில் சென்ற பொலிசார், அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவரது சடலத்தை மீட்டுள்ளனர்.
பாரதி இறந்தது தற்கொலையா அல்லது கொலையா என்ற இருவேறு கோணங்களில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறப்பதற்கு முன் பாரதி கடிதம் எதுவும் எழுதியிருக்கலாம் என்பதால் அவரது வீட்டில் பொலிசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால் தற்கொலைக்குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. அதேசமயம் வெளியாட்கள் யாரும் உள்ளே வந்ததற்காக அறிகுறியும் தென்படவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் மென்பொருள் பொறியாளர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக மேலும் இரு வீடியோ காட்சிகள் பொலிசாரிடம் சிக்கியுள்ளன.
இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுவாதி கடந்த 24ம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு மர்ம நபரால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில் குற்றவாளி யார் என பொலிசார் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை செய்த பொலிசார் சுவாதி கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என ஒரு நபரின் வீடியோ காட்சிகளை வெளியிட்டனர்.
தற்போது மேலும் இரண்டு வீடியோ பதிவுகள் பொலிசாருக்கு கிடைத்துள்ளது. சுவாதி வீட்டில் இருந்து ரயில் நிலையம் செல்லும் வழியில் பொருத்தப்பட்டிந்த தனியார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பொலிசார் ஆய்வு செய்தனர்.
இதில் சம்பவத்தன்று சுவாதி, தனது தந்தையுடன்மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, டீக்கடையில் நின்று கொண்டிருக்கும் ஒரு மர்ம நபர், சுவாதியைப் முழு கவனத்துடன் வேடிக்கை பார்த்ததும், பின்னர் சுவாதியைப்பின் தொடர்ந்து செல்வதும் பதிவாகியுள்ளதாம்.
இந்த மர்ம நபர் தான், ஏற்கெனவே வெளியிடப்பட்ட விடியோ காட்சியிலும் உள்ளாராம். மேலும், மற்றொரு கமெராவில் உள்ள காட்சியில், அந்த நபர், தப்பியோடும் காட்சி கிடைத்துள்ளதாம்.
இந்த இரு காட்சிகளையும் கைப்பற்றியுள்ள பொலிசார், அந்த மர்ம நபர் தான் சுவாதியை கொலை செய்தாரா என்பதை உறுதி செய்வதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் சுவாதியை கொலை செய்த கொலைகாரனை நுங்கம்பாக்கம் ரெயில் நிலைய கன்டீன் ஊழியர் ஒருவர் பொலிசாருக்கு அடையாளம் காட்டியுள்ளார். இந்த கொலை தொடர்பாக கன்டீன் ஊழியர்’ பொலிசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை சம்பவம் குறித்து அவர் பொலிசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது..
கொலைகாரனும், அந்த பெண்ணும் சிறிது நேரம் கடை அருகே நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை நான் கவனிக்கவில்லை. ஆனால் காரசாரமாக சென்ற அவர்கள் பேசிக் கொண்டார்கள்.
திடீரென்று `அய்யோ… அம்மா…’ என்ற குரல் கேட்டது. அந்த கொலைகாரன் பக்கவாட்டில் சற்று பின்பக்கமாக நின்று அந்த பெண்ணை அரிவாளால் வெட்டினான். உடனே அந்த பெண் ரத்தம் பீறிட்ட நிலையில் தரையில் சாய்ந்து விட்டார்.
சிறிதுநேரம் அவர் உயிருக்கு போராடிய படி இருந்தார். அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்த எங்களால் அப்போது ஒன்றும் செய்யமுடியவில்லை.
உடனே அந்த கொலைகாரன் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டான். அதன்பிறகு நாங்கள் ஓடிச்சென்றுபார்த்தோம். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் தனிப்படை பொலிசார் சுவாதியின் நெருங்கிய தோழிகளிடம் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
சுவாதியை அச்சுறுத்தும் வகையில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டிருந்தால், அதை அவர் தனது தோழிகளிடம் கூறியிருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த 36பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான பேரவையின் உதவியுடன் அவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாக இலங்கை வந்தனர்.
குறித்த அனைவரும், வவுனியா, கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
இவர்களில் 20 ஆண்களும் 16 பெண்களும் அடங்கியிருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கான நிதியுதவியை ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் பேரவை செய்திருந்தது.
துருக்கி விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
துருக்கியிலுள்ள இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய இரண்டு குண்டு வெடிப்பு தாக்குதலில் 32 பேர் உடல் சிதறி பலியாயினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
விமான நிலையத்தில் உள்ள எக்ஸ்-ரே செக்யூரிட்டி அறை பகுதியில் இந்த குண்டு வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும், இது மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவனின் மர்ம உறுப்பினை பிடித்தார் என்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
யாழ். பாசையூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையில் தரம் 8ல் கல்வி கற்கும் மாணவன் வகுப்பறையில் குழப்படி செய்தமைக்கு, தண்டனை வழங்குவதற்காக இவ்வாறு மர்ம உறுப்பை பிடித்து தண்டனை வழங்கியுள்ளார்.
இந்த சம்பவத்தினை அறிந்த நபர் ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு 119 இலக்கத்தின் ஊடாக முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் பாடசாலை அதிபரை யாழ்.பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட அதிபரை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றதுடன், யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இலங்கையர்களின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், 2001ம் ஆண்டு மேற்கொள்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களின் படி ஆண்களின் எதிர்பார்க்கும் ஆயுட் காலம் 68.8 வயதாக காணப்பட்டதுடன் பெண்களுக்கான ஆயுட்காலம் 77.2 வயதாக நிலவியது.
இதேவேளை, 2011 தொடக்கம் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி ஆண்களின் ஆயுட்காலம் 72 வயதாகவும் பெண்களின் ஆயுட்காலம் 78.6ஆகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடைபெறும் கொலை வழக்கு ஒன்றில் கிளி சாட்சியான வினோத நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் மிசிகனை சேர்ந்தவர் மார்டின், இவரது மனைவி கிளன்னா துராம் (48). இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் கிளன்னா துராம் தனது கணவர் மார்டினை 5 தடவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். அதன் பின்னர் அவர் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் துப்பாக்கி வெடிக்காததால் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் கடந்த ஆண்டு நடந்தது. இக்கொலையை நேரில் பார்த்த சாட்சி யாரும் இல்லை. இதற்கிடையே இத்தம்பதி ஆபிரிக்காவை சேர்ந்த கிளி ஒன்றை செல்லமாக வளர்த்தனர். அதற்கு பட் என பெயிரிட்டுள்ளனர்.
இது மிகவும் தெளிவாக பேசும் திறன் படைத்தது. மேலும் நடக்கும் சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து அதை திரும்ப தெரிவித்து வந்தது.
தற்போது இக்கொலை வழக்கு நீதிமன்றில் நடைபெற்று வருகிறது. அதில் இந்த கிளியை சாட்சி ஆக சேர்க்க வேண்டும் என அரசு தரப்பு வக்கீல் ராபர்ட் ஸ்பிரிங்ஸ் டெட் கேட்டுக்கொண்டார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிளி சாட்சி சொல்ல அனுமதித்துள்ளார். அறிவு திறன் படைத்த இக்கிளி தற்போது மார்டினின் முன்னாள் மனைவி கிறிஸ்டினா கெல்லரிடம் உள்ளது.
கொலை நடந்த அன்று இறுதியாக கிளன்னா துராமிடம் மார்டின் என்னை சுடாதே (‘டோன்ட் ஷூட்’) என கூறிய வார்த்தையை கிளி திரும்ப திரும்ப தெரிவிக்கிறது. எனவே நீதிமன்றில் இக்கிளி அளிக்கும் சாட்சியத்தின் மூலம் கிளன்னாவுக்கு தண்டனை வழங்க முடியும்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் குழல்மன்னம் நெல்லிப்பரம்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 60). இவரது மனைவி ராதாமணி (52). இவர்களுக்கு திருசியா (20), தர்சனா (20) என்ற இரட்டை பெண் குழந்தைகளும், திருராஜ் என்ற மகனும் இருந்தனர்.
திருராஜ் வெளியே சென்று வருவதாக கூறி வெளியே சென்றார். பின்னர் இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உள் பக்கம் பூட்டப்பட்டிருந்தது. கதவை பல முறை தட்டியும் திறக்கவில்லை.
சந்தேகமடைந்த திருராஜ் இது குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் ஆலத்தூர் டி.எஸ்.பி. ராமச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் மற்ற பொலிசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சமையல் அறையில் பாலகிருஷ்ணன், ராதாமணியும் தூக்குப்போட்டு இறந்த நிலையில் தொங்கினர். மற்றொரு அறையில் இரட்டையர்கள் திருசியாவும், தர்சனாவும் இறந்த நிலையில் தூக்கில் தொங்கினர்.
4 பேர்களின் உடல்களை மீட்ட பொலிசார் பாலக்காடு அரசு வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வேறு காரணமா? என்று டி.எஸ்.பி. ராமச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.
பேஸ்புக்கில் ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்ட படத்தை பார்த்த இளம்பெண் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
சென்னை சுவாதியின் கொடூர கொலை மனதை விட்டு அகலாத நிலையில், இந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த வினுப்ரியா என்ற 20 வயது பெண்ணின் ஃபேஸ்புக்கில் இருந்த போட்டோவை மார்ஃபிங் செய்து ஆபாசமான படங்களோடு இணைத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டான் ஒரு கயவன்.
அதை வினுப்பிரியாவின் ஃபேஸ்புக் பக்கத்திலும் டேக் செய்தான்.
தனது போட்டோ இப்படி ஆபாசமாக வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வினுப்ரியா மற்றும் அவரின் குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்தனர்.
பின்னர் அந்த போட்டோ நீக்கப்பட்டது. மீண்டும் அதே போல ஒரு போட்டோ வெளியாகவே அவமானம் தாங்காமல் வினுப்பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் மகளின் ஆபாச படம் வெளியிடப்பட்டது குறித்து பெண்ணின் தந்தை பொலிஸில் புகார் அளிக்கச் சென்ற போது, ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட படத்தை அழிக்க, 2 ஆயிரம் பணமும், ஒரு செல்ஃபோனும் பொலிசார் லஞ்சமாக கேட்டுள்ளனர்.
அதை கொடுத்த பின்னரும், காவல்துறையினர் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் காட்டிய அலட்சியமே ஒரு பெண்ணின் உயிரை காவு வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் திருச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நேற்று திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு திருச்சி வந்து, பயணிகளை இறக்கி ஏற்றிக்கொண்டு, மாலை 5.30-க்கு மலேசியா புறப்பட்டது ஏர் ஏசியா விமானம்.
விமானத்தில் 151 பயணிகளும், 6 சிப்பந்திகளும் இருந்தனர்.
சுமார் 1 மணிநேர பயணத்துக்குப் பின்னர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டறிந்தார்.
இதையடுத்து, திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் விமானத்தை மீண்டும் திருச்சியில் தரை இறக்குமாறு கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானியை அறிவுறுத்தினர்.
இதையடுத்து விமானம் மீண்டும் திருச்சி திரும்பியது. திருச்சியில் அவசரமாக தரையிறக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
முன்னதாக, விமானத்தில் உள்ள எரிபொருளை தீர்க்கும் வகையில் வட்டமடிக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து விமானம் திருச்சி எல்லையிலேயே தாழ்வாக பறந்து வட்டமடித்தது.
இதற்குள் தீயணைப்பு வாகனங்கள், அம்புலன்ஸுகள், மருத்துவக் குழுவினர், பாதுகாப்பு படை வீரர்கள் திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர்.
பின்னர் எரிபொருள் தீர்ந்து இரவு 7.25- மணிக்கு விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. எந்தவிதமான அசம்பாதவிதமும் இன்றி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார் விமானி.
சுமார் 1 மணிநேர திக் திக் பயணத்துக்கு பிறகு பாதுகாப்பாக தரையிறங்கியதை அடுத்து பயணிகள் விமானிக்கு நன்றி தெரிவித்தனர்.
பயணிகள் அனைவரும் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதும் பயணிகள் அனுப்பி வைக்கப்படுவர். அல்லது இரவு விமானத்தில் அனுப்பிவைக்கப்படுவர் என விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு இதேபோல் மலேசிய விமானம் புறப்பட்ட சில சில நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இணையம் எவ்வளவு பிஸியான இடம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்.சிந்தித்து பாருங்கள் நீங்கள் இந்க பந்தியை வாசிக்க எவ்வளவு நேரம் எடுக்கிறது என்று.அந்த ஒவ்வொரு நிமிடமும் 2000 Skype அழைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன, 700 Instagram பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Eric Brantner என்பவர் தெரிவிப்பது போன்று நாளுக்கு நாள் இணையம் பாவிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கிட்டத்தட்ட 3.4 பில்லியன் மக்கள் (உலக சனத்தொகையின் 46.1 வீதம்) ஒன்லைனில் உள்ளார்கள்.அதில் இளைஞர்கள் வாரத்திற்கு 27 மணித்தியாலங்கள் ஒன்லைனில் செலவழிக்கிறார்கள்.
இங்கு சில ஆச்சரியப்பட வைக்கும் புள்ளி விபரங்கள் உங்களுக்காக தரப்படுகின்றன.ஒவ்வொரு செக்கனும் சராசரியாக 35,950 Gb போக்குவரத்து மாற்றங்கள் இடம்பெறுகின்றன.உலகமட்டத்தில் செக்கனுக்கு 54,907 Google தேடல்களும், 7,252 Tweets, 125,406 YouTube பார்வையாளர்களும், ,501,018 email களும் அனுப்பப்படகின்றன.இவ் எண்ணிக்கை ஒன்லைன் எண்ணிக்கை அதிகரிக்கையில் மேலும் அதிகரிக்கின்றது.
கடந்த மே மாதம் முழுவதும் தமிழ்நாடே பரபரப்பாக எதிர்ப்பார்த்த விஷயம் தேர்தல். இந்த தேர்தலில் வெற்றிவாகை சூடிய ஜெயலலிதாவுக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
அதேபோல் நடிகர் பார்த்திபனும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.இந்நிலையில் தனக்கு வாழ்த்து கூறிய நடிகர் பார்த்திபனுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளார் முதல்வர் ஜெயலதிதா. அதனை பார்த்திபனும் தன்னுடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் 20 பெண்களுடன் 40 குழந்தைகளை பெற்ற பின்னரும் மேலும் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். பிரித்தானியாவில் உள்ள Ebbw Vale நகரை சேர்ந்தவர் மைக் ஹால்பின் (Mike Holpin Age-56). இவருக்கு 9 வயது இருக்கும்போதே பாலுணர்வு (sex) மீது அதிக மோகம் இருந்ததால் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்க விரும்பியுள்ளார். இளம்வயது தொடங்கியதும் வெவ்வேறு பெண்களுடன் தொடர்பு கொண்டு வருடந்தோறும் குழந்தைகளை பெற்று வந்துள்ளார்.
இதேபோல் சுமார் 20 பெண்களுடன் இவர் பழகி 40 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். மது போதைக்கு அடிமையான அவர் சில நேரங்களில் தனது குழந்தைகளின் பெயர்களை அடிக்கடி மறந்துள்ளார். இதனால் தன்னுடைய ஒவ்வொரு குழந்தைகளின் முதுகிலும் அவர்களின் பெயர்களை பச்சைக்குத்தி (Tattoo) அதை பார்த்து அவர்களின் பெயர்களை நினைவு கொள்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் எனக்கு கருத்தடை குறித்து எந்த நம்பிக்கையும் இல்லை. ஆனால் பாலுணர்வு மீது அதிக விருப்பம் உண்டு.
தற்போது தான் 56 வயதாகிறது என்பதால் இன்னும் நிறைய குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் மதுபோதைக்கு ஆளாகியுள்ளதால் குழந்தைகள் காப்பகத்தினர் என்னுடைய பெரும்பாலான குழந்தைகளை கொண்டு சென்று அவர்களின் பராமரிப்பில் வளர்த்து வருகின்றனர்.
அதேபோல் நிறைய பெண்களுடன் பழகி வருவதால் என்னுடைய குழந்தைகள் என்னுடன் சேர்ந்து இருப்பதை விரும்புவதில்லை. எனினும் எனது அனைத்து பிள்ளைகளையும் ஒன்று சேர்ந்து அவர்களுடன் இணைந்து வாழ்வதுடன் மீண்டும் நிறைய குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என கூறியுள்ளார்.
வவுனியாவில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரண்டு வருடங்களாக திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட விஷேட தேவைக்குட்பட்ட நபரை நேற்று முன்தினம் கைது செய்ததாகவும் அவரிடமிருந்து தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்வம் தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவிக்கையில்..
வவுனியாவில் குட்செட் வீதி, கற்குழி, தோணிக்கல் போன்ற பகுதிகளில் கடந்த இரண்டு வருடங்களாக வீடுகளில், மற்றும் அலுவலகங்களில் திருடிய சந்தேக நபரினை நேற்று முன்தினம் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்ய முடிந்துள்ளதாகவும்,
திருடிய நகையினை கொழும்பு செட்டித் தெருவில் விற்பனை செய்த நபரையும் கைது செய்துள்ளதாகவும் 75 பவுணுக்கு மேற்பட்ட திருட்டில் குறித்த சந்தேக நபர் ஈடுபட்டுள்ளதாகவும் எனினும் சில தங்க நகைகளே தம்மால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர் .
இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் மிகுதி தங்கநகையினை திருடிய நபர் இவர்களிடமே கொடுத்து வைத்துள்ளதாக வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளதாகவும் அவர்களையும் தேடி வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இவர்கள் விசாரணையின் பின்னர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டு மக்கள் தங்கள் அதிபரின் கட்டளைக்கேற்ப நிர்வாணமாக வேலை செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன.கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டின் அதிபராக அல்யாக்ஸன்டர் லுகான்ஷேகா பொறுப்பேற்று வருகிறார். நாட்டில் நிலவும் கடுமையான நிதி பற்றாக்குறையால் பெலரஸ் நாட்டின் நாணயமான ‘ருபிள்’ன் மதிப்பு பெரும்சரிவை சந்தித்துள்ளது.
இதனால், அங்கு கடுமையான பொருளாதார தட்டுப்பாடும், வேலையில்லா திண்டாட்டமும் தலைவிரித்து ஆடுகிறது. ‘இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் பெலாரஸ் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது ஆடைகளை கழற்றிவைத்துவிட்டு, வியர்வை சிந்த உழைக்க வேண்டும்’ என அதிபர் அல்யாக்ஸன்டர் லுகான்ஷேகா சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த உத்தரவை ‘சீரியஸ்’ ஆக எடுத்துகொண்ட பலர், தங்களது பணியிடங்களில் ஆடைகளை எல்லாம் அவிழ்த்துவிட்டு, முழு நிர்வாணமாக வேலை செய்ய தொடங்கி விட்டனர். இதை பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களாக பதிவிட்டு வருகின்றனர்.இந்த புகைப்படங்கள் ஐரோப்பிய கண்டத்தையும் கடந்து, ரஷியா, உக்ரைன் வழியாக உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது.
கிரிக்கெட் உலகில் சிறந்த 10 துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.இதில், 3 இந்திய வீரர்கள், 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள், 2 நியூசிலாந்து வீரர்கள், இலங்கை அணியில் ஒருவர் மற்றும் இங்கிலாந்து அணியில் ஒருவர் இடம்பிடித்துள்ளனர்.
சிறந்த துடுப்பாட்ட வீரர்கள்
டிவில்லியர்ஸ் – 887 புள்ளிகள்
விராட் கோஹ்லி – 813 புள்ளிகள்
ஹசிம் அம்லா – 778 புள்ளிகள்
கனே வில்லியம்சன்
மார்ட்டின் குப்தில்
ரோகித் சர்மா
டில்ஷான் – 741 புள்ளிகள்
தவான் – 737 புள்ளிகள்
டி காக் – 735 புள்ளிகள்
ஜோ ரூட் – 725 புள்ளிகள்