யாழில் பெண் ஒருவரின் மோசமான செயல் : பொலிஸார் அதிரடி!!

நீண்ட காலமாக சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண்ணொருவர், 27 போத்தல்கள் மதுபானத்துடன் பொலிஸாரால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் கால் போத்தல் மதுபானத்தை ரூபா ஆயிரத்திற்கு விற்பனை செய்து வந்ததாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய இன்றையதினம் (10.02) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.

தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 857,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின் (24 karat gold 1 grams) விலை 30,240 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 241,900 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் (22 karat gold 1 grams) விலையானது 27,720 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் ( 22 karat gold 8 grams) விலையானது 221,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 26,460 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 211,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

சர்வதேச அளவில் சிகிரியாவிற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்.!!

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்கள் பட்டியலை Booking.com என்ற வலைத்தளம் வெளியிட்டுள்ளது.

குறித்த வலைத்தளமானது 360 மில்லியனுக்கும் அதிகமான சரிபார்க்கப்பட்ட வாடிக்கையாளர் மதிப்புரைகளை அடிப்படையாகக் கொண்டு, 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரமாக இலங்கையின் சிகிரியாவை முடிசூட்டியுள்ளது.

பதின்மூன்றாவது டிராவலர் ரிவியூ விருதுகளின் (Traveller Review Awards) ஒரு பகுதியாக, Booking.com உலகில் மிகவும் வரவேற்கத்தக்க 10 நகரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சிகிரியா பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஸ்பெயினில் உள்ள கசோர்லா மற்றும் பிரேசிலில் உள்ள உருபிசி ஆகியவை பிற இடங்களுடன் சேர்த்து தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நியூசிலாந்திலுள்ள டௌபோ, அமெரிக்காவிலுள்ள சென். அகஸ்டின், இத்தாலியிலுள்ள ஓர்வியோட்டோ, கொலம்பியாவிலுள்ள மணிசாலேஸ் மற்றும் ஜேர்மனியிலுள்ள குவெட்லின்பர்க்,

தாய்லாந்திலுள்ள கோ லந்தா, பிரித்தானியாவிலுள்ள செஸ்டர் ஆகிய நகரங்கள் இவ்வாறு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

Booking.com, இலங்கையின் சிகிரியா பற்றி கூறுகையில் “இலங்கையின் ‘கலாசார முக்கோணத்தின்’ மையத்தில் அமைந்துள்ள சிகிரியா, இயற்கை அழகையும் ஆழமான வரலாற்றையும் கொண்டுள்ள ஒரு இடமாகும்.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான சிகிரியா பண்டைய இலங்கையின் கட்டடக்கலை சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. மேலும், சிகிரியா சாகசம் மற்றும் அமைதியின் மறக்க முடியாத கலவையை வழங்குகிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா முழுவதும் இன்று இரவு 1 1/2 மணிநேர மின்வெட்டு : விபரம் உள்ளே!!

இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

தற்போதையை நிலைமையை கருத்திற் கொண்டு மின் தடையை நடைமுறைப்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், இவ்வாறு ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின்வெட்டை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வவுனியா முழுவதும் இன்று (10.02.2025) மற்றும் நாளை (11.02.2025) இரண்டு நாட்களும் இரவு 8.00 மணிமுதல் 9.30 மணிவரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்வெட்டு அட்டவணையை பார்வையிட இங்கு அழுத்துக..

இன்றும் நாளையும் 1 1/2 மணிநேர மின்வெட்டு : வெளியான முக்கிய அறிவிப்பு!!

இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

தற்போதையை நிலைமையை கருத்திற் கொண்டு மின் தடையை நடைமுறைப்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், இவ்வாறு ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின்வெட்டை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

மின்வெட்டு அட்டவணையை பார்வையிட இங்கு அழுத்துக..

அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து : கொழும்பு நோக்கி பயணித்த 4 பேர் பலி : 28 பேர் படுகாயம்!!

குருணாகலில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோரய பகுதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று அதிகாலை கந்துருவெலவிலிருந்து குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து, தோராய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது மதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 28 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் பலர் குருநாகல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவர்களுக்குள் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மீண்டும் மின் தடை : இன்று இறுதி முடிவு!!

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை மீண்டும் தேசிய மின் அமைப்புடன் இணைக்கும் வரை மின்சாரத்தை தடையை நடைமுறைப்படுத்த வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பில் இன்று(10) தீர்மானிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இன்றைய கலந்துரையாடலில் மின்வெட்டு இல்லாமல் மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கொழும்பின் சில பகுதிகளில் இன்றும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்றையதினம் காலை 11.15 மணி முதல் மாலை வரை நாடளாவிய ரீதியில் திடீர் மின் ஏற்பட்டதுடன், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், எதிர்வரும் நாட்களிலும் கூட இவ்வாறு மின் தடை ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் கொழும்பின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வெள்ளத்தினால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர்பொருட்கள்!!

வவுனியா மாவட்டத்தில் கடந்த காலத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (09.02) காலை 10மணிக்கு இடம்பெற்றது.

சீனத்தூரகத்தின் பிரதிப் பிரதானி சூ.யன்வெய் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் 350 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

வடமாகாணத்தில் 2470 குடும்பங்களுக்கு 6490 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்படவுள்ளதுடன் அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 350 குடும்பங்களுக்கு இன்று வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ந.கமலதாசன் மற்றும் சீன தூதரக இடைக்கால பொறுப்பாளர் ஜு யானுவேல், சீன தூதரக அரசியல் பிரிவுத் தலைவர் குயின் லிகோங், மற்றும் சீன தூதரக அதிகாரிகள் , மாவட்ட செயலக அதிகாரிகள் , கிராம சேவையாளர்கள் , பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றில் பிரதேசவாதம் பேசும் கோமாளி : இளங்குமரன் எம்பி அதிரடி!!

தமிழர்களின் மதிப்பை சீர்குலைப்பதற்கு கோமாளியொன்று நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது, முகப்புத்தக கணக்கில் இட்டுள்ள பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும், “இவ்வுலகில் தமிழர்களுக்கென தனி மதிப்பு உள்ளது. அந்த மதிப்பை சீர்குலைப்பதற்கு அவ்வப்போது துரோகிகளும், கோமாளிகளும் வந்துசெல்வதும் வழமை. அப்படிதான் இம்முறையும் கோமாளியொன்று நாடாளுமன்றம் வந்துள்ளது.

பிரதேசவாதம் பேசி தமிழர்களை பிரித்தாள்வதற்காக கைக்கூலியாக வந்துள்ள இந்த நபர், கத்தரிதோட்ட வெருளிகள் பற்றி கதைப்பது வெட்கக்கேடாகும். இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் உள்ளன. எவரும் இரண்டாந்தர பிரஜைகள் அல்லர் என்ற நிலைப்பாட்டிலேயே தேசிய மக்கள் சக்தி உள்ளது.

நாட்டில் வாழும் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்ககூடிய கட்சிதான் தேசிய மக்கள் சக்தி. மாற்றம் வேண்டும் என்பதற்காகவே யாழ். மக்களும் எமக்கு அமோக ஆதரவை வழங்கினர்.

இந்த மக்கள் ஆணையை புரிந்துகொள்ள பக்குவமில்லாத அரசியல் கோமாளி, தற்போது விமர்சன அரசியலை முன்னெடுத்து வருகின்றது. சமூகவலைத்தளங்களில் பிரபல்யமடைவதற்காக வீரவசனங்களை பேசி, தன்னையும், தன்னை சூழவுள்ள ஒரு சிலரை பற்றி மட்டுமே பேசும் கோமாளிகளெல்லாம் தலைவர்களாக முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எமது மலையக உறவுகள் தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கைக்கு எதிராக நின்றதில்லை. உரிமைப் போராட்டங்களைக்கூட ஆதரித்துள்ளனர்.

எனவே, இணைந்துவாழும் எங்களை பிரதேசவாதத்தை கிளப்பிவிட்டு பிரித்தாள முடியாது என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றோம். தென்னிலங்கையில் மகிந்தவும், அவரின் சகாக்களும் செய்த அரசியல் பாணியை, வடக்கில் செய்வதற்கு இந்த கோமாளி முற்படுகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுலா பயணிகளுக்காக அறிமுகப்படுத்த புதிய திட்டம்!!

எதிர்காலத்தில் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியான சேவைகளை வழங்குவதற்காக டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (07) நடைபெற்ற பிம்ஸ்டெக் டிஜிட்டல் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“அனைவருக்கும் செழிப்புக்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குதல்” என்ற கருப்பொருளில் பிம்ஸ்டெக் டிஜிட்டல் மாநாடு கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உட்பட வெளிநாட்டு தூதுவர்கள் குழு கலந்து கொண்டது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் அரச அபிவிருத்தி ஆகிய தலைப்புகள் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் DigiLocker செயல்முறையை அறிமுகப்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன. UPI செயல்முறையையும் விரிவுபடுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

“டிஜிட்டல் கட்டண முறையாக GovPay ஐ அறிமுகப்படுத்தியதற்காக இலங்கை அரசாங்கத்தை நாங்கள் வாழ்த்துகிறோம்.” என்றார்.

வாகன இறக்குமதிக்கு அனுமதி : இலங்கை வரும் கப்பல்!!

இலங்கையில் வாகன இற்க்குமதிக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ள நிலையில் , எதிர்வரும் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

வாகனமொன்றின் விலை 5,500,000 முதல் 6,000,000 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நாட்களில் வாகன இறக்குமதிக்கான கடன் கடிதங்கள் விடுவிக்கப்பட்டதன் அடிப்படையில் , எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களின் பின்னர் தொடர்ச்சியாக வாகனங்களைக் கொண்டு வர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே வாகனம் வாங்க காத்திருப்போர் அதுவரையில் முற்பணம் செலுத்தி மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம் என நுகர்வோரிடம் கோருவதாகவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

சரிகமபவில் கதறி அழுத கனடாவாழ் ஈழத்து சிறுமி : கண்கலங்கிய அரங்கம்!!

Saregamapa Li’l Champs Season 4 இல் கதறிய அழுத கனடாவாழ் ஈழத்து சிறுமி யாதவி, தன் தாய் மற்றும் சகோதரிகள் கனடாவில் இருந்து தன்னை காண வந்ததை எதிர்பார்க்காத நிலையில், மேடையில் கதறி அழ, சரிகமப நடுவர்கள் மட்டுமல்லாது அரங்கத்தில் இருந்தவர்களும் கண்ணீர் வடித்துள்ளனர்.

தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப பாடல் இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. தமிழகத்தில் மட்டுமல்லாது புலம் பெயர் தமிழர்களும் மிகவும் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக இது உள்ளது. காரணம் நிகழ்ச்சியில் ஈழத்து தமிழர் குழந்தைகளும் உள்ளவாகப்படுவதே ஆகும் .

அந்தவகையில் தற்போது நடைபெற்றுவரும் சரிகமப லிட்டில் சீசன் 4 இல் , இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட கனடாவாழ் யாதவி கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் Saregamapa Li’l Champs Season 4 Dedication Round தற்போது நடைபெறுகின்றது. போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை மிக அழகாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதில் அழகு நிலவே எனும் பாடலை, ஈழத்து சிறுமி யாதவி பாடுகையில், கனடாவில் இருந்து சர்ப்பிரைஸாக வந்த தாயையும் சகோதரிகளையும் கண்டு கதறி அழுது கண்ணீர் வடிக்கின்றார்.

இந்நிலையில் ஈழத்தமிழர்களின் ஆதரவுக்கும் , அன்புக்கும் நாம் என்றும் கடமைப்பட்டவர்கள் என Saregamapa Li’l Champs Season 4 நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான பாடகர் சீனிவாஸ் கூறியமை நெகிழவைத்துள்ளது.

அர்ச்சுனா வானத்திலிருந்து குதிக்கவில்லை மறைமுகமாக சாடிய எம்.பி!!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வானத்திலிருந்து குதிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (07.02.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூரையை உடைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் குதிக்கவில்லை. அவரை தெரிவு செய்த மக்களை மனதில் நிறுத்தி அவர் செயற்பட வேண்டும்.

அவர் மட்டுமல்ல. எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் நாட்டில் ஒப்பீட்டளவில் இருக்கக்கூடிய இன ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக கருத்து வெளியிட கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

தீவிரமடையும் உப்பு தட்டுப்பாடு : மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!!

சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் உப்பு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என அதன் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.

உப்பு இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் இந்த மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று முதல் நுவரெலியாவில் உறைபனி!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று தொடங்கி அடுத்த சில நாட்களில் அதிகாலை நேரங்களில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் உறைபனி பெய்ய வாய்ப்புள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

அரச பேருந்து சாரதி மீது வாள்வெட்டு : நடுவீதியில் நிர்க்கதிக்குள்ளான மக்கள்!!

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த பஸ்ஸின் சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07.02.2025) இரவு இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியே வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த பஸ் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், பஸ்ஸில் பயணித்த பயணிகள் நடு வீதியில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.