கம்பஹாவில் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டாம் திகதி முதல் 14 வயது சிறுமி காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கழிவறை குழியில் புதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்தக் கொலையில் தனது இரண்டாவது கணவர் மீது சந்தேகம் உள்ளதாக உயிரிழந்த சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார். அதற்கமைய முறைப்பாடு செய்த பெண்ணின் இரண்டாவது கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
சிறுமியை கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் உள்ள கழிவறையில் சடலத்தை வைத்து கான்கிரீட்டால் மூடியிருப்பதாக, சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலையைச் சேர்ந்த முகம்மது இஜாஸ் என்பவரை கடந்த சில நாட்களாக காணாமல்போயுள்ளதாக இணைஞனின் உறவினர்களால் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் காணாமல் போய் ஒரு வாரமாகிய நிலையிலேயே இளைஞனின் உறவினர்கள் கடந்த மாதம் 25ம் திகதி முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும், இதுவரைக்கும் எவ்வித தகவல்களும் இல்லை என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
காணாமல்போயுள்ள இளைஞ்ர் பற்றிய தகவல் அறிந்தாலோ அல்லது இவரை எங்காவது கண்டாலோ திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அவரது உறவினர்களது தொலைபேசி இலக்கமான 071 425 8714 அறிவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் பகுதியில் மூன்றுபிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்றுகாலை (06.12.2024) விபரீதமுடிவால்உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் ச – நிரோசன் வயது 32 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். கடற்தொழில் செய்து வந்த குறித்த குடும்பஸ்தர் இன்றைய தினம் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
நாட்டில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் இந்திய பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதன்படி, இந்திய பெரிய வெங்காயம் ஒரு கிலோ 500 முதல் 550 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் பெரிய வெங்காயம் மற்றும் ஏனைய பெரிய வெங்காய வகைகளின் விலை கிலோ ஒன்று 400 முதல் 450 ரூபா வரை உள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.
கட்டாரில் சாரதியாக பணியாற்றிய இலங்கையர் ஒருவர் அவர் பயணித்த வாகனத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தளத்தை சேர்ந்த 48 வயதான மொஹமட் அன்வர் மொஹமட் ஷிப்லி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இலங்கையிலுள்ள குடும்பத்தினரின் தகவலுக்கமைய, அவர் சுமார் 22 ஆண்டுகளாக கட்டாரில் சாரதியாக பணிபுரிந்து வருகிறார், கடைசியாக அல் பர்டான் நகரில் பணியாற்றியுள்ளார்.
மொஹமட் பணியாற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் அவரை தொடர்பு கொண்ட போதும், அவர் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அல் பர்தான் பொலிஸாரிடம், அவர் பணியாற்றும் நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளது.
அதற்கமைய, அந்த நபர் ஓட்டிச் சென்ற டிரக் வீதியின் அருகே நிறுத்தியிருப்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
வாகனத்தில் பாதுகாப்பு சீட் பெல்ட் அணிந்திருந்த ஓட்டுனரைக் கண்ட பொலிஸ் அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த மொஹமட் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில்(Jaffna) கிணற்றுக்குள் தவறி விழுந்து சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் ஒருவர் நேற்றையதினம்(05) உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 23ஆம் திகதி சவர்க்காரத்தின் மீது கால் வைத்து வழுக்கியதால், குறித்த சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே, சிகிச்சைப் பலனின்றி நேற்றையதினம் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இருபாலை கிழக்கு, இருபாலை பகுதியைச் சேர்ந்த நிரோசன் விமாத் என்ற 4 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 23ஆம் திகதி குறித்த சிறுவன் அயல்வீட்டு சிறுவனுடன் விளையாடிவிட்டு வாளியைக்கொண்டு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கை கழுவியுள்ளார்.
இதன்போது சவர்க்காரம் கீழே விழுந்த நிலையில் சவர்க்காரத்தின் மீது கால் வைத்ததால் வழுக்கி கிணற்றினுள் விழுந்துள்ளார்.
இதனையடுத்து, சிறுவனை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார்.
சிறுவனது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கனடாவில் வாழ்ந்து வரும் தமிழர்கள் சமீபக் காலங்களில் அந்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் மிகப்பெரும் சக்திகளாக மாறி வருகின்றனர்.
கனடாவில் உள்ள ரொறன்ரோ, ஒன்ராறியோ, ஆல்பர்ட்டா போன்ற பல மாகாணங்களில் தமிழர்கள் அதிகம் வாழ்வதுடன், அங்கு பல்வேறு அரசியல் களங்களிலும் கால் பதித்துள்ளனர்
இதன் காரணமாக கனடாவிலும், சர்வதேச ரீதியிலும் அங்கு வாழும் இந்தியத் தமிழர்கள், மற்றும் இலங்கைத் தமிழர்களின் அரசியல், மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு உள்ள முக்கியத்துவம் தற்போது அதிகரித்து வருகிறது.
இவ்வாறான நிலையில், கனடாவின் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி தமிழர்கள் தொடர்பில் முன்வைத்த பிரேரணையானது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் சுட்டிக்காட்டினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபோதே அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவித்ததாவது,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (06) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் எம். அஹிம்சா சமன்மாலி என்ற இந்த யுவதியே உயிரிழந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி – சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவல, கிலிமலே வெலேகொட வீதியில் நேற்று முன்தினம் (04) காலை 7.30 மணியளவில் யுவதி படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காதலை ஏற்க மறுத்த யுவதியை இளைஞன் கொட்டனால் தாக்கியதில் படுகாயமடைந்த யுவதி, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதி நான்கு வருடங்கள் இராணுவத்தில் கடமையாற்றியவர்.
முச்சக்கரவண்டியில் நடமாடும் பாண் விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞன் பலமுறை காதலிக்கக் கேட்டதாகவும், ஆனால் அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் யுவதியின் குடும்பத்தினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
யுவதி நடந்து சென்ற போது பின்னால் வந்து அவரது தலையில் தாக்கியதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடியை பொலிசார் கண்டுபிடித்ததுடன், தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இரத்தக் கறைகளும் காணப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலையுண்ட யுவதி இரத்தினபுரி நகரில் உள்ள வர்த்தக நிறுவனமொன்றில் அலமாரி ஒன்றை எடுத்து வருவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற வேளையில் சிறிபாகம சுதாகல வீதியில் வைத்து தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை நேற்று (05) முன்எடுக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
நுவரெலியா லங்கம டிப்போவில் கடமையாற்றிய காவலாளியை கொலைசெய்து சுமார் ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இக்கொள்லை சம்பவம் நேற்றிரவு (5) இடம்பெற்றுள்ளது. டிப்போவில் காவலராக பணியாற்றிய நுவரெலியா கல்பாய பிரதேசத்தை சேர்ந்த கே.லோகேஸ்வரன் என்ற 85 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சிலர் காவலாளியை கொன்றுவிட்டு டிப்போவில் இருந்த அலுமாரியில் இருந்து சுமார் ஒன்பது லட்சம் ரூபாயை எடுத்துச் சென்றமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவலாளி தனது பாதுகாப்பு அறையில் காத்திருந்தபோது கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கி பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
கொலைச் சம்பவத்தின் போது, டிப்போவுக்குப் பொறுப்பான உத்தியோகத்தரும், காசாளரும் டிப்போவில் தங்கியிருந்த போதிலும், அவர்கள் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
நுவரெலியா லங்கம டிப்போவில் வியாழக்கிழமை (05) பிற்பகல் ஓடிய பஸ்களின் வருமானம் வங்கியில் வைப்பிலிடுவதற்காக அலுமாரியில் வைக்கப்பட்டிருந்ததாக அந்த டிப்போவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
14 வயது சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசியதாகக் கூறப்படும் சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கம்பஹா – அக்கரவிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தொடர்பில் தெரியவருகையில் ,
கொலை செய்யப்பட்ட சிறுமி கடந்த 02 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக சிறுமியின் தாய் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் நேற்று (05) முறைப்பாடு அளித்துள்ளார்.
சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேக நபரான சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் அண்மைய நாட்களில் தேங்காய் விலை வேகமாக உயர்ந்துள்ளமை மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விடயமாக மாறியயுள்ளது.
இந்நிலையில் கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தேங்காய் விலை 200 ரூபாவை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் நாட்களில் 220 ரூபாயை தாண்டலாம் என சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மக்களின் நுகர்விற்கு தேவையான அளவு தேங்காய் கிடைக்காததால், அதன் விலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலைமைக்கு தீர்வாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் சதொச ஊடாக குறைந்த விலையில் தேங்காய்களை விற்பனை செய்ய தென்னை அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, அரசாங்கத்திற்கு சொந்தமான கூட்டுத்தாபனத்தின் ஊடாக 110 ரூபாவிற்கு தேங்காய் கொள்வனவு செய்யப்பட்டு சதொச ஊடாக 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற வீதியில் வீட்டை சுற்றி கட்டப்பட்டிருந்த மதிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டாரகம ரைகம, பிரதேசத்தை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவரின் பிறந்த நாளான கடந்த 2ஆம் திகதி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர, நாடாளுமன்ற வீதியில், கும்புக்கஹதுவ பகுதியில் உள்ள வீடொன்றின் மதிலில் இருந்த பழைய இரும்பு வேலியை உயிரிழந்த நபரும் அவரது மகனும் அகற்றியுள்ளனர்.
பின்னர் புதிய வேலியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது உயிரிழந்த நபரின் மகன் கடை ஒன்றிற்கு சென்றிருந்த நிலையில் மதிலின் மீதமிருந்த பகுதியை தந்தை அகற்றும் நடடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, சுவர் இடிந்து விழுந்ததுடன், குறித்த நபர் அதன் அடியில் சிக்கியதாகவும் இதனால் மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 07ஆம் திகதி புதிய ஒரு காற்று சுழற்சி உருவாகுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகாக வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 19ஆம் திகதி அன்று மீண்டும் ஒரு தாழமுக்கம் வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளது. இதுவும் மேற்கு, வட மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில மாதிரிகள் இது ஒரு புயலாக வலுப்பெறும் என வெளிப்படுத்துகின்றன. அதேவேளை சில மாதிரிகள் இதனை கிழக்கு மாகாணத்திற்கு அருகாக நகர்ந்து வடக்கு மாகாணத்திற்கு மிக அண்மித்து வரும் என காட்டுகின்றன.
எவ்வாறாயினும் இதனை அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும்.
எனவே எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையும் பின்னர் 21 முதல் 25ஆம் திகதி வரையும் சில பகுதிகளில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதேவேளை எதிர்வரும் 09ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இடையிடையே மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்றொழிலாளர்கள் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை கடற்பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1,200 ரூபிக்ஸ் கியூப்களைப் பயன்படுத்தி 91 அங்குல உயரமும் 68 அங்குல அகலமும் கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பாரிய உருவப்படத்தை உருவாக்கி சிறுவன் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.
சன்சுல் செஹன்ஷ லக்மால் என்ற 11 வயது சிறுவனே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை 3 மணி நேரம், 13 நிமிடங்கள், 7 வினாடிகளில் செய்து சோழன் உலக சாதனைகளில் இடம் பெற்றுள்ளார்.
சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் பீப்பிள்ஸ் ஹெல்பிங் பீப்பிள் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து நேற்று இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
யக்கலவில் உள்ள ரணவிரு ஆடை நீச்சல் தடாகத்தில் முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் மஹா துவாக்கர் மற்றும் பிரதி கட்டளை அதிகாரி பிரிகேடியர் வாசகே ஆகியோர் முன்னிலையில் இச் சாதனை நிகழ்த்தப்பட்டது.
சோழன் வேர்ல்ட் ரெக்கோர்ட்ஸின் பொதுச் செயலாளர், இந்திரநாத் பெரேரா, துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, STEPS இன் இயக்குநரும், சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் ஐரோப்பிய நாடுகளுக்கான தலைவருமான பிரான்சிஸ் ஜேசுதாசன்,
பீப்பிள்ஸ் ஹெல்பிங் பீப்பிள் ஃபவுண்டேஷன் இயக்குநர் மற்றும் சோழன் புக் ஒஃப் வேர்ல்ட் ரெக்கோர்ட்ஸ் இன் செயற்குழு உறுப்பினர் ஆகியோர், சிறுவனின் சாதனை முயற்சியை முறையாக கண்காணித்தனர்.
இந்நிலையில் சன்சுலின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில், அமைப்பாளர்கள், ராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து,
அவருக்கு சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை போன்றவற்றுடன் , சிறுவனின் பெரும் சாதனையை கௌரவிக்கும் வகையில் கோப்பையும் வழங்கப்பட்டது.