கிளிநொச்சி – கண்டாவளைப் பிரதேசத்தில் கடமையாற்றும் கிராம அலுவலர் ஒருவர் தான் அறுவடை செய்த நெல்லை வீதியில் உலர விடுவதற்காக மேற்கொண்ட செயற்பாடு தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்மூலம் அவர் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியமையால் அவசர நோயாளி ஒருவரை வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமத்தை எதிர் நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொதுத் தேவைகளுக்கு செல்வதிலும் பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதிலும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது அண்ணாவின் மகனை தனக்கு கீழ் பணிக்கு அமர்த்தி , அண்ணனின் மகனின் சம்பளத்தையும் முழுதாக தானே எடுத்துக் கொள்வதாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் பலரும் விமர்சங்களை முன் வைத்து வருகின்றனர்.
ஊழலுக்கு, எதிராக தன்னை முன்னிலைப்படுத்தும் அர்ச்சுனா இராமநாதன், அண்ணன் மகனை வேலைக்கு அமர்த்தி, அவரின் சம்பளத்தையும் மோசடியாக தானே பெற்றுக்கொள்வது சரியா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது செலவு விபரங்களை பட்டியலிடுகையில், தனக்கான சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் என்பன தனது செலவீனங்களுக்குப் போதுமானதாக இல்லை.
இதனால் தனக்கு கீழ் நியமிக்க வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சலுகையில், ஆய்வு அலுவலராக தனது அண்ணன் மகன் இராமநாதன் அறிவன்பன் என்பவரை நியமித்து,
அவருக்கு நாடாளுமன்றத்தினால் கொடுப்பனவாக வழங்கப்படும் 56,000 ரூபாவை முழுமையாக அவரிடம் இருந்து பெற்றே தனது செலவீனங்களை ஈடுசெய்வதாக தெரிவித்திருக்கிறார்.
அதேவேளை தனது மகனின் பாடசாலை கல்வி செலவு, கொழும்பில் உள்ள வீட்டின் வாடகை செலவு என்பன உட்பட தனது ஆடைகளுக்காகவே 70 ஆயிரத்திற்கு மேல் செலவு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தனக்கு கீழ் நியமிக்கப்படக்கூடிய ஆளணியில் அண்ணாவின் மகனை நியமித்து அந்த சம்பளத்தை முழுமையாக பெற்றுக்கொண்டாலும் தனது வாழ்க்கை செலவினை ஈடு செய்ய முடியாது திண்டாடி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளமை தொடர்பில் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
கடந்த வாரம் கேரளாவின் மலப்புரத்தில் உள்ள குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவர் குடும்பத்தினர் அளித்த புகாரின் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் கணவன் அல்லது அவர்களது உறவினர்களால் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட விஷ்ணுஜா கடந்த 2023 மே மாதம் பிரபின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணம் முடித்த சில நாட்களிலேயே பிரபின், தமது மனைவி விஷ்ணுஜாவை தொடர்ந்து அவமானப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
விஷ்ணுஜா அழகாக இல்லை என்றும், அவருக்கு வேலை கிடைக்காததை குறிப்பிட்டும் அவமானப்படுத்தி வந்ததாக அவருடைய குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன் செவிலியரான பிரபின் தமது மனைவியை அடித்துத் துன்புறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விஷ்ணுஜாவின் தந்தை வாசுதேவன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அவள் மிகவும் ஒல்லியாக இருப்பதாக கூறி அவமானப் படுத்தி வந்ததாகவும்,
அவள் அழகற்றவள் என்று கூறி, அவளை தனது பைக்கில் அழைத்துச் செல்லவும் பிரபின் அனுமதிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு, பிரபின் தனது மனைவியிடம் ஒரு வேலையைப் பெற்றுக்கொள்ளச் சொன்னதாகவும், அவருடைய சம்பளத்தில் அவள் வாழ முடியாது என்று கூறி தொல்லை அளித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் விஷ்ணுஜா வேலைக்காக முயற்சிகள் மேற்கொண்டும் எதுவும் அமையவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
விஷ்ணுஜா தனக்கு நடந்த துன்புறுத்தல் பற்றி பெற்றோர்களிடம் சொல்லவில்லை, அவள் இறந்த பிறகுதான் அவளுடைய நண்பர்களிடமிருந்து அதைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
நாங்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டபோது, அவள் எங்களுக்கு ஆதரவளித்தாள். ஆனால் அவளுடைய திருமணப் பிரச்சினைகளில் நாங்கள் தலையிட அவள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்றார் வாசுதேவன்.
தமது மகள் கொல்லப்பட்டிருக்கவே வாய்ப்புள்ளதாகவும், அவள் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுக்கமாட்டார் என்றும் வாசுதேவன் முறையிட்டுள்ளார்.
பிரபின் தனது மனைவியின் வாட்ஸ்அப் உரையாடலை கண்காணித்து வந்ததால், விஷ்ணுஜா ரகசியமாக டெலிகிராம் செயலியை பயன்படுத்தி, தமது நிலையை நெருங்கிய தோழி ஒருவரிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.
மணப்பெண் ஒருவர் வழுக்கை தலையுடன் திருமணம் செய்து கொண்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது. பெரும்பாலான மணப்பெண்கள் தங்கள் திருமணத்திற்கு முன் அவர்களின் தோற்றம், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார்கள்.
இருப்பினும் மணப்பெண் ஒருவர் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டுள்ளார். அதாவது இந்த மணப்பெண், தோற்றத்தைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக தனது திருமண நாளில் நம்பிக்கையுடன் வழுக்கை தலையுடன் வந்தார்.
இந்த மணமகள் டிஜிட்டல் கிரியேட்டர் நீஹர் சச்தேவா ஆவார். இவர் அமெரிக்க வாழ் இந்தியர் ஆவார். இந்த பெண்ணிற்கு முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் அலோபீசியா என்ற குறைபாடு உள்ளது.
இவருக்கு ஆறு மாத வயதில் அலோபீசியா இருப்பது கண்டறியப்பட்டது. இந்த குறைபாடு இருந்தால் உடலின் சில பகுதிகள் அல்லது அனைத்து பகுதிகளில் இருந்தும் முடி உதிர்தல் ஏற்படும்.
இவர் தனது திருமணத்திற்காக வழுக்கைத் தோற்றத்துடன் வருவதாகவே கூறினார். அதன்படி அவரது திருமண நாளில், நீஹர் பாரம்பரிய இந்திய திருமண உடையை அணிந்தார்.
மேலும் தனது வழுக்கையை விக் மூலம் மறைப்பதற்குப் பதிலாக பெருமையுடன் வெளிப்படுத்தினார். அதேபோல, சிவப்பு நிற லெஹங்கா ஆடையில், அழகான நகை அணிந்து சென்று, வருங்கால கணவர் அருண் கணபதியை கரம்பிடித்தார். இவரின் திருமண காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி காண்போரை நெகிழ வைத்துள்ளது.
தேனி மாவட்டம் கும்பம் கோம்பை சாலை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மனோஜ் (32) மற்றும் தீபிகா (24). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.இந்த நிலையில், மனோஜுக்கு நாள்பட்ட உடல் நலக்குறைவு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், தொடர்ந்து மருத்துவரை சந்தித்து வந்த மனோஜ் வேலைக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இந்த நிலையில், அவரது மனைவி தீபிகாவும் அவ்வப்போது வலிப்பு நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
இதனால், மன அழுத்தத்தில் இருந்த மனோஜ் நேற்று விஷம் குடித்தார். இதைத் தொடர்ந்து, அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையில், அவரது மனைவி தீபிகாவுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தீபிகாவும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக கம்பம் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவர் இறந்த பிறகு மனைவியும் உயிரை விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
படையினரை கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கு குறித்து உரையாற்றினார்.
இதன்போது, லசந்த விக்ரமதுங்க தொடர்பில் உரையாற்ற போவது குறித்து, சஜித் பிரேமதாச முன்னரே அறிவிக்கவில்லை என ரிஸ்வி சாலி கூறினார். இதனையடுத்து, நான் பேசும் போது நடுவில் வர வேண்டாம் என பிரதி சபாநாயகரை சஜித் எச்சரித்தார்.
உடனே எழுந்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, சண்டியர்கள் நாடாளுமன்றத்திற்குள் வந்துள்ளதாக தெரிவித்தார். அத்துடன், பிரதி சபாநாயகரை அவமதித்தமைக்கு சஜித் மன்னிப்பு கோர வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என குறிப்பிட்டார்.
மேலும், அர்ச்சுனா நேற்றையதினம் சபாநாயகரை ‘Shame’ என்ற வார்த்தையை உபயோகித்து அவமதித்ததாகவும், தயாசிறி ஜயசேகர ஆளும்கட்சி உறுப்பினர் மீது தவறான வார்த்தையை உபயோகித்ததாகவும் பிமல் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, சபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், அர்ச்சுனா சபையில் வாதத்தில் ஈடுபட்டார்.
இதற்கு பதிலளித்த பிரதி சபாநாயகர், நீங்கள் ஆசனத்தில் அமரவில்லை என்றால் படையினரின் உதவியுடன் உங்களை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவேன் என அர்ச்சுனாவை எச்சரித்தார்.
மேலும், நீங்கள் சபாநாயகரை அவமதித்துள்ளீர்கள், அப்போது சபாநாயகர் ஆசனத்தில் நான் இருந்திருந்தால் நிச்சயம் உங்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பேன் என தெரிவித்தார்.
இதேவேளை, தொடர்ந்து உரையாற்றிய சஜித் பிரேமதாச, தான் ‘நடுவில் வர வேண்டாம்’ எனக் கூறிய வார்த்தையை திரும்பப்பெறுவதாக குறிப்பிட்டதையடுத்து, சபை அமைதி நிலைக்கு வந்தது.
சந்தையில் பச்சை மிளகாயின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் விலை ரூ.1600 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை, ஒரு கிலோ கிராம் கறி மிளகாய் ரூ.1000 ஆகவும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, சந்தையில் காய்கறி விலைகள் தற்போது உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மிளகாய் விலை அதிகரிப்பால், மிளகாய் விற்பனையும் கடுமையாகக் குறைந்துள்ளதாகவும், இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்
தான் நேரில் கண்ட மோட்டார் சைக்கிள் விபத்து குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் மறுநாள் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கம்பஹா, ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான சாமிக பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி பமுனுகம, பகுதியில் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள சுவர் மற்றும் மின்விளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றுமொருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது நிலைமையும் மோசமாக உள்ளது. விபத்தில் உயிரிழப்பதற்கு ஒரு நாள் முன்பு, சாமிக பெர்னாண்டோ தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு இளைஞன் விபத்தில் இறப்பது குறித்தும், இறந்த இளைஞனின் தாயார் எவ்வாறு மிகவும் அதிர்ச்சியடைந்தார் என்பது குறித்தும் ஒரு குறிப்பை வெளியிட்டிருந்தார்.
அவரது உடல் பமுனுகம மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு சென்று உடலை அடையாளம் கண்டனர்.
உயிரிழந்த சாமிக பெர்னாண்டோவின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டி – நாவலப்பிட்டி பகுதியில் பெண் ஒருவரை அவரது கணவன் கொடூரமான முறையில் கொலை செய்ததன் பின்னணியில், குடும்பத் தகராறே காரணமாக இருப்பதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலை சம்பவம் நேற்றையதினம்(04.02.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது. நாவலப்பிட்டி, செம் ரோக் பகுதியைச் சேர்ந் கயானி தில்ருக்ஷி குமாரி என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
மேற்படி பெண்ணைக் கொலை செய்தார் எனக் கருதப்படும் பெண்ணின் 42 வயதான கணவர் நேற்றுக் காலை நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அத்துடன், அவர்களின் மூன்று குழந்தைகளும் நாவலப்பிட்டியின் பல்லேகம பகுதியில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி பெண்ணின் கணவருக்குத் தனது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் கடந்த மூன்று மாதங்களாகப் பிரிந்து வசித்து வந்துள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் மேற்படி பெண் கொழும்பு பகுதியில் வேலை செய்து வந்தநிலையில், நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை தனது திருமணமான மகளின் வீட்டுக்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் மனைவியைச் சமாதானம் செய்யும் நோக்கத்துடன் தனது முச்சக்கரவண்டியில் மனைவி இருக்கும் இடத்துக்குச் சென்றுள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் மனைவி யாரோ ஒரு நபருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டதும், கோபமடைந்த அவர், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தான் கொண்டு வந்திருந்த கத்தியால் அவரைத் தாக்கியுள்ளார்.
கத்தி உடைந்ததால்,மேலும் ஒரு கத்தியை எடுத்து தனது மனைவியைக் குத்தியுள்ளதோடு காப்பாற்ற வந்த தனது மகளையும் கத்தியால் தாக்கி, பின்னர் ஒரு பெரிய கல்லை மனைவியின் தலை மீது போட்டுள்ளார்.
சந்தேகநபருக்கும் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவரும் அவரது மகளும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு – ராகம பகுதியில் பெண்ணொருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கழுத்தறுக்கப்பட்ட பின்னர், தீ வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவன் வேலைக்காக வெளியில் சென்ற வேளை, கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, வீடு திரும்பிய கணவன் அதிர்ச்சியடைந்த நிலையில், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் 76 வயதுடையவர் எனவும் அவர் கணவருடன் தனது வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு நிறுவனங்களின் சின்னங்களை பயன்படுத்தி போலியான வேலை வெற்றிட தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் சின்னங்களை பயன்படுத்தி மோசடியான விளம்பரம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
விளம்பரங்களை வேலைவாய்ப்புகளை வழங்குவதாக கூறி வெளியிடப்பட்டதாகவும், அது ஒரு போலியான விளம்பரம் எனவும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், சமீபத்திய நாட்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சின்னங்களை பயன்படுத்தி இதேபோன்ற வேலை வெற்றிட விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசின் சின்னங்களை பயன்படுத்தி வெளியிடப்படும் போலி விளம்பரங்களுக்கு இவ்வாறு பதிலளிப்பது பொருத்தமற்றது என சாருக தமுனுபொல குறிப்பிட்டுள்ளார்.
போலி வலைத்தளங்கள் பெரும்பாலும் உங்கள் தேசிய அடையாள அட்டையின் நகல்கள், கடவுச்சீட்டின் நகல்கள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எந்த சூழ்நிலையிலும் அத்தகைய வலைத்தளங்களைப் பார்வையிட்டு உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்கக்கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் இருந்து துபாய்க்கு வேலைக்காக சென்ற தன்னை, முகவர் அமைப்பு ஒன்று ஐந்து மாதங்களாக வலுக்கட்டாயமாக தடுத்துவைத்திருந்தது என நாடு திரும்பியுள்ள குமுதினி எதிரிசிங்க என்ற பெண் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(4) மக்கள் பேரவைக்கான இயக்கம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் கூறுகையில், என்னை ஐந்து மாதங்களாக முகவர் அமைப்பு ஒன்றில் பலாத்காரமாக தடுத்து வைத்திருந்தனர்.
என்னுடன் இன்னும் இருபது பேரும் கூட தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். எமக்கு தேவையான உணவு இருக்கவில்லை. பசியை நீரருந்தி தணித்துக் கொண்டோம்.
நிறைய பேருக்கு பல சித்திரவதைகளையும் தொல்லைகளையும் கொடுத்தார்கள். இதை நான் நேரடியாக கண்டேன் என ஆதங்கத்துடன் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை மரண வீட்டுக்கு சென்ற வேளை தீடிரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
சுவிட்சர்லாந்து பாசல் மாநிலத்தில் வாழ்ந்து வரும் குறித்த குடும்பஸ்தர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரண வீட்டில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் கடல் உணவு ( நண்டு ) ஒவ்வாமை காரணமாக , இலங்கை புலம் பெயர் இளம் தாய் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் புறநகர் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான, 28 வயதான இளம் குடும்ப பெண்னே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனவரி 25 அன்று உள்ள தனது வீட்டில் நண்டு கறி சாப்பிட்ட பின்னர் உணவு ஒவ்வாமை காரணமாக பெண் உயிரிழந்துள்ளார் .
உயிரிழந்த பெண்ணின் தாயார் அண்மையில் இலங்கையில் இருந்து சென்றதாக கூறப்படும் நிலையில் , இந்த சம்பவம் அங்கு வாழும் ஈழத் தமிழரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலை செல்வதாக கூறி பதின்ம வயது மாணவி காதலனுடன் சென்ற சம்பவம் ஒன்று பதுளையில் பதிவாகியுள்ளது.
பதுளை கன்னலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக குறித்த மாணவியின் பாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
பதுளை தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவி கடந்த 03 ஆம் திகதி பாடசாலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
பாட்டி தனது தொலைபேசியை சார்ஜ் போடுவதற்காக மாணவியின் அறைக்கு சென்று பார்த்தபோது அவரது ஆடைகள் இருக்கவில்லை எனவும் அடுத்த நாள் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தனது காதலனுடன் வந்து விட்டதாக கூறியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவியின் தாய் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ள நிலையில் தந்தை கொழும்பில் பணிப்புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கஹட்டருப்ப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் கண்காணிப்பு அமைப்பின் தரவுகளின் படி, 2025 ஜனவரியில் 4,900 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பெப்ரவரி 4 தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் கண்காணிப்பு அமைப்பால் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, கடந்த மாதம் மொத்தமாக 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,
2025 இம்மாதம் 1 திகதி முதல் 3 திகதி வரை, 419 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரையான டெங்கு நோயுடன் தொடர்புடைய இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 3,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கடந்த வருடம் ஆண்டிற்கான மொத்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை 49,873 ஆக உயர்வடைந்திருந்தது.
2024 ஆம் ஆண்டின் இறுதியில் 24 டெங்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. நாட்டில் டெங்கு நோயாளர்களில் கம்பஹா மாவட்டத்தில் 15.6 சதவீதமானோர் பதிவாகியுள்ளதுடன் 839 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 13.4%, 719 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் கண்காணிப்பு அமைப்பின் பகுப்பாய்வில், கண்டி (347), காலி (334), மட்டக்களப்பு (317), இரத்தினபுரி (293), யாழ்ப்பாணம் (217), மாத்தறை (211), மாத்தளை (147),
கேகாலை (144), களுத்துறை (143), திருகோணமலை (124), ஹம்பாந்தோட்டை (122), பதுளை (107), குருநாகல் (105), மற்றும் மொனராகலை (101) ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
2025 ஜனவரி 1 முதல் பெப்ரவரி 3 வரை நாட்டில் பதிவான மொத்த வழக்குகளில் மாகாண ரீதியாக, நோக்கும் போது 44.7% டெங்கு நோயாளிகள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தென் மாகாணத்தில் 12.4% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மாத இறுதிப்குதியில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் கண்காணிப்பு அமைப்பு அதிக ஆபத்துள்ள 16 பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது.