நான்தான் சுவாதி பேசுகின்றேன்!!

Swathi

இன்று இறந்துவிட்ட நான் இன்னும் சில நாள் காட்சி ஊடகத்தில் உங்களுடன் வாழத்தான் போகிறேன். அதற்கு முன் உங்களுடன் சிலவற்றை பேசிவிட்டு போய்விட ஆசைபடுகிறேன்.

எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதயத்தில் நானும் ஒருத்தி தான். எனக்கான கனவுகள் அதிகம் இல்லை.

எல்லோரையும் போன்ற நானும் ஒரு சக மனுஷி தான். இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன்.
வார இறுதிநாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன். என் அப்பாவும் அப்படித்தான் நினைத்து என்னை அந்த இரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றார்.

உங்களில் எத்தனை பேர் இன்று அந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் உங்களின் மனதிற்க்குத் தெரியும். உங்களில் எத்தனை பேர் பெண்கள் முன்னேற்றத்தை வாய்கிழியப் பேசியவர்கள் என்று எனக்கு தெரியாது.

இன்று நான் வாய்கிழிபட்டுதான் இறந்தேன். உங்களில் ஒருவருக்கு கூட அதைத் தடுக்க ஆண்மை இல்லையே, வரிஜினிட்டியை ஆண்மையாக என்னும் சமூகத்தில்தானே இன்னும் நீங்கள் வாழ்கிறீர்கள்.

அவனைத் தடுக்காத உங்களின் கயமை கூட எனக்குப் புரிந்தது.
ஆனால், அவன் போன பின்பு எனக்கு அடிப்படைச் சிகிச்சை அளிக்கவோ அல்லது என் தாகத்தை போக்க தண்ணி கொடுக்க கூடவா ஆள் இல்லை. இரண்டு மணி நேரம் என்னை வேடிக்கைப் பார்தீர்களே அந்த கணங்கள் கூட உங்களைச் சுடவில்லையா?

உங்களின் அதிகபட்ச சமூக அக்கறை, இன்று ஒரு நாள் உங்களின் பேசு பொருள் நான். எப்படியும் இன்னும் இரண்டு-மூன்று நாட்களில் என்னைக் கொன்றவன் எங்கேனும் பிடிபடுவான் இல்லை நீதிமன்றத்தில் சரணைடைவான்.

என் ஒழுக்கத்தைப் பற்றி ஒரு நீண்டவாதம் பேசுவான். இல்லை என்னால் ஏமாற்றப்பட்டதாக புலம்புவான். அதையும் விவாதப் பொருளாக வைத்து விவாதித்துக் கொண்டே இருங்கள்.

இல்லையேல் ஆளும் வர்க்கம் அவனுக்கு ஒரு தோட்டாவைப் பரிசாக அளித்து அவனைக் கொன்றுவிடும். அதையும் பாராட்டி ஒரு பதிவிட்டு உங்கள் சமூக கடமையை ஆற்றிவிடுங்கள்.

மிஞ்சிப் போனால் ஒரு கவிஞனின் இறங்கற்பா. ஒரு பேச்சாலனின் தொண்டை நீர்வற்ற ஒரு உரை. ஒரு எழுத்தாளனின் ஒரு பக்க கட்டுரை… இது தானே என் சாவின் எச்சங்கள்.

நான் நானாக இங்கு வீழ்த்தப்படவில்லை.ஒட்டுமொத்த சமூகமாகவே வீழ்த்தப்பட்டு இருக்கிறேன். அதை மறந்துவிடாதீர்கள்.

பெண் பிள்ளைகள் வெளியில் போகும் போது பார்த்து போக சொல்லும் நீங்கள் அதை ஆண் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். இந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விதையிலே மக்கச்செய்யுங்கள். விருட்சாமாக அதை வளர்த்து பின்பு வெட்டுதல் என்பது உங்களுக்கும் சுலபம் அல்ல.

உங்களின் கோடாளிகளுக்கும் சுலபம் அல்ல. பாரதி சொன்னான் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்.அது கடினம் என்று நினைத்து இன்று மாதரையே கொளுத்த முடிவு செய்துவிட்டீர்கள் போல. இறுதியாக ஒன்று வேண்டுகிறேன் கடற்கரை சாலையில் எனக்கும் ஒரு நினைவேந்தல் வைத்து அரசியல் செய்யாதீர்கள்!

இது வட்ஸ்ஆப்பில் வலம் வரும் ஒரு பதிவு. கண் முன்னே நடக்கும் கொடூரங்களைக் கண்டும் காணாமல் போகும் நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் சாட்டையடி.

வவுனியாவில் காணாமல் போன உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம்!!

 
வவுனியாவில் இன்று சனிக்கிழமை (25.06.2016) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றிருந்தது.

கடந்த காலங்களில் இலங்கையில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதிகோரியும், காணாமல் போனவர்கள் எங்கேயென கோரியும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

வவுனியா பேரூந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணைடைந்து காணாமல் போன உறவுகளை தேடியறியும் குடும்பங்களின் சங்கம், மற்றும் மாவட்ட பிரஜைகள் குழு ஆகியன இணைந்து நடத்தியிருந்தன.

 1 DSC04802 DSC04804 DSC04806 DSC04808 DSC04812

வவுனியாவில் சம்பூரில் அனல் மின்நிலையம் அமைப்பதை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

 
திருகோணமலை சம்பூரில் அனல் மின்நிலையம் அமைப்பதை நிறுத்தக் கோரியும், சம்பூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு நாசம் விளைவிக்காதே, சூழல் மாசுபடுவதற்கு எதிராக மக்களே அணிதிரள்வீர் போன்ற கோசங்களை எழுப்பியவாறு இன்று(25.06.2016) காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நடைபெற்ற இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

இவ் ஆர்ப்பாட்டத்தில், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

DSC04756 DSC04762 DSC04770 DSC04772 DSC04774 DSC04786 DSC04795

வவுனியாவில் நடந்த விபத்தில் இருவர் படுகாயம்!!

 
வவுனியா பஸ் நிலையத்திற்கு அருகில் இன்று(25.06.2016) நண்பகல் 12.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளுடன் துவிச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 35 வயது குடும்பப்பெண் ஒருவரும் 5 வயதுக்கு குழந்தை ஒன்றும் சிறு காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

-கோபி-

1 13493319_598212167004874_2066509866_o 13493384_598212143671543_76753155_o 13499413_598212140338210_79584328_o 13499975_598212127004878_463075880_o 13509773_598212170338207_1346353838_o 13517729_598212190338205_714118775_o 13523896_598212173671540_9438154_o 13524015_598212130338211_275157092_o

பெண்ணை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் – உயிருக்கு போராட்டம்!!

Abused

டெல்லியில் 2012-ம் ஆண்டு மாணவி ஒருவரை பேருந்தில் கடத்தி சென்று ஒரு கும்பல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தது. இதில் அந்த மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.இதே போன்ற சம்பவம் ஒன்று இப்போது பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள மொய்திகரி அருகே உள்ளது ஜூமைதோலா கிராமம். இங்கு 21 வயது இளம்பெண் ஒருவர் தனது தாயாருடன் வசித்து வந்தார்.

இந்த ஊரைச்சேர்ந்தவர் சமியுல்லா. இவர் சில நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதை செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தார்.அந்த படத்தை காட்டி இளம்பெண்ணிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். கடந்த 15-ந் திகதி வெளியே சென்ற அந்த பெண்ணிடம் சென்று சமியுல்லா பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதில் கோபமடைந்த அந்த பெண் அவரை கத்தியால் தாக்கினார்.

இது சமியுல்லாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரம் கழித்து தனது நண்பர்கள் 4 பேருடன் சமியுல்லா அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்தார். அங்கிருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அவர்கள் வெளியே இழுத்து சென்றனர்.பின்னர் அவர்கள் அனைவரும் அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதுமட்டுமல்ல கொடூரமாகவும் தாக்கியுள்ளனர். இதையடுத்து அவரை சாலையோரம் போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அந்த பெண்ணின் உறவினர்கள் பொலிசில் புகார் கொடுத்தனர். ஆனால் பொலிசார் அதை கண்டுகொள்ளவில்லை.

இதனால் ஒரு வாரமாக இந்த வி‌ஷயம் வெளியே தெரியாமல் இருந்தது. இதுபற்றி உள்ளூர் டி.வி. சேனல்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் செய்தியை வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து பொலிசார் இப்போது தான் நடவடிக்கை எடுத்துள்ளனர்.சமியுல்லா உள்பட 5 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடிவருகிறார்கள்.பீகாரில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல பீகாரில் முசாபர் நகரில் மாங்காய் பறிக்க சென்ற 12 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த பிரமோத்ஷானி, கமலேஷ்ஷானி ஆகியோர் கடத்தி சென்று கற்பழித்தனர். இதில் அந்த பெண் மயங்கிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுதொடர்பாக இருவரையும் பொலிசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டமும் நடந்தது.

பிரபல நடிகைகளுக்கு சிவகார்த்திகேயன் பதிலடி!!

sivakarthikeyan-wallpaper 4-751783

சிவகார்த்திகேயன் நம்பி கட்டும் பந்தய குதிரையாக வளர்ந்து உள்ளார். இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் ஆக யார் தான் இவருடன் கூட்டணி அமைக்க விரும்பாமல் இருப்பார்கள்.இந்நிலையில் ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் விழாவில் சிவகார்த்திகேயன், இந்த படத்தில் நடிக்க பல நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்தது.

ஆனால், யாருமே சம்மதிக்கவில்லை, அவர்கள் அனைவருக்கும் என் நன்றி, ஏனெனில் கீர்த்தி மிகவும் நன்றாக நடித்துள்ளார் என கூறியுள்ளார். இதன் மூலம் தன்னுடன் நடிக்க மறுத்த நடிகைகளுக்கு சிவகார்த்திகேயன் பதிலடி கொடுத்துள்ளார் என தெரிகின்றது.

சந்தானம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்- அதிரடி தீர்ப்பு ஏன்!!

tamil-santhanam-photo-comment-meme_fbtamilan-com_11

சந்தானம் தற்போது தான் தன் தந்தை இழப்பில் இருந்து மீண்டு வருகிறார். இவர் நடிக்கும் தில்லுக்கு துட்டு படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்தது.இந்த ட்ரைலர் அனைவரையும் கவர்ந்து வரும் நிலையில் இந்த படத்தின் கதை ‘பேப்பர் பிளைட் பிக்சர்ஸ்’என்ற நிறுவனம் இந்த தில்லுக்கு துட்டு நாங்கள் தயாரிக்கும் படத்தின் கதை போன்றே உள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த பிறகு நடிகர் சந்தானம் இயக்குநர் ராம்பாலா ஆகியோர் வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இனிமேல் பிரித்தானியாவில் வாழ முடியாதா? மகனின் கேள்வியால் அதிர்ந்து போன தந்தை!!

Father-And-Son
ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற பிரித்தானியா மக்கள் வாக்களித்துள்ளனர்.மக்களின் இந்த தீர்ப்பு, பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்கள், புலம்பெயர்ந்தவர்களின் நிலை என்ன? பிரித்தானியாவின் அடுத்த நடவடிக்கைகள் என்ன? என பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

இந்நிலையில் பேராசிரியராக பணியாற்றிவரும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த Fernando Rosell என்பவர் கடந்த 20 வருடங்களாக பிரித்தானியாவில் வசித்து வருகிறார். நேற்று காலை தன்னுடைய மகனுக்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியாவில் வெளியேறினால் ஏற்படும் விளைவுகளை பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது உடனே, நாம் இனிமேல் பிரித்தானியாவில் வாழ முடியாதா? என கேள்வி எழுப்பியுள்ளான்.

மகனின் இந்த கேள்வியால் ஒருகணம் உறைந்து விட்டாராம் Fernando Rosell. இதுமட்டுமல்லாமல், இவரது நண்பரின் மகனும் நான் பள்ளிக்கு செல்ல இயலாதா? என கேட்டுள்ளான். மற்றொருவருடைய மகன் தனது படுக்கையறையில் விழுந்து கதறி அழுதுள்ளான் என தனக்கும், நண்பர்களுக்கும் நேர்ந்த அனுபவங்களை விவரிக்கிறார்.மேலும் முதன்முறையாக தர்மசங்கடத்தை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

8 மாத குழந்தையை கருணைக் கொலை செய்ய பெற்றோர் மனு- முதல்வரின் தாராள மனம்!!

Untitled
ஆந்திராவில் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் 8 மாத குழந்தையின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் ரமணப்பா- சரஸ்வதி.இவர்களுக்கு ஞான சாய் என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது, பிறந்ததில் இருந்தே குழந்தைக்கு நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளது.எனவே குழந்தையை காப்பாற்ற வேண்டுமானால் அறுவை சிகிச்சை செய்ய ரூ.50 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் கஷ்டப்படும் நிலையில் உள்ள ரமணப்பாவால் குழந்தையின் மருத்துவ செலவுகளை கவனிக்க முடியவில்லை, குழந்தையின் உடல்நலமும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போனது.இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தம்பதியினர், குழந்தையை கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இந்த விடயம் ஊடகங்களில் வெளியாகவே, குழந்தையின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.இந்நிலையில் குழந்தைக்கு சென்னையில் அறுவை சிகிச்சைகள் நடத்த தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்!!

electricity-energy-home-owners
நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் நிறைவு செய்யப்படும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கு தேவையான அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.பொருளாதார வசதிகளின்மை மற்றும் ஏனைய பல காரணங்களால் சுமார் 3 இலட்சம் குடும்பங்கள் மின்சாரமின்றி வசிப்பதாக அறியக்கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய, இந்த குடும்பங்கள் அனைத்திற்கும் விரைவில் மின்சாரத்தை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சினால் பணிப்புரை விடுக்கப்பட்டதாகவும் சுரேன் பட்டகொட சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் மின்சார விநியோகம் தாமதமானதாக கூறியுள்ள அமைச்சின் செயலாளர், எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் மின்சார விநியோகம் நிறைவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கும், அனுமதியின்றி குடியேறியவர்களுக்கும் மின்சாரம் பெற்றுக் கொடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வித அறிவீடுமின்றி வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மின்சார விநியோகிப்படும் எனவும் செயலாளர் சுனில் பட்டகொட சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாத்தறையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதம் இடை நிறுத்தம்!!

????????????????????????????????????

மாத்தறையில் இருந்து யாழ்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக அளுத்கம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. குறித்த புகையிரதம் மாத்தறையில் இருந்து இன்று காலை 6.20 இற்கு பயணத்தை ஆரம்பித்து பின் அளுத்கம பகுதியில் வைத்து காலை 9 மணியளவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரதத்தில் பயணித்த பயணிகளை மற்றுமொரு புகையிரதமான காலு குமாரியில் அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.செயலிழந்துள்ள புகையிரத்தின் திருத்தப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டிலும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு மைத்திரியிடம் கோரிக்கை!!

1 (68)
எதிர்வரும் 2020ம் ஆண்டிலும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினால் நிறுத்தக்கூடிய பொருத்தமான வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவே என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.எனினும், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளைப் போன்று தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும், மீளவும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

60 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு – பாகிஸ்தானியர் கைது!!

arrest (1)

கட்டுநாயக்க விமானத்தளத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து கிலோகிராம் நிறைக்கொண்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த பாகிஸ்தானிய பிரஜை எடுத்து வந்த பொதியில் ஹெரோயின் சூட்சகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து பாகிஸ்தானிய பிரஜை தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளைஞனின் வயிற்றில் கர்ப்பப்பை : அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!

Pragnant

இந்தியாவில் இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்த கர்ப்பப்பையை மருத்துவர்கள் நேற்று (23.06) அகற்றியுள்ளனர்.

ஓசூரை சேர்ந்த 20 வயதுடைய அமரேஷ் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இந்த நிலையில் அண்மையில் அமரேஷ்க்கு வயிற்று வலி அதிகமானது. இதைத் தொடர்ந்து அமரேஷை ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவரின் வயிற்றில் கர்ப்பப்பை இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக அமரேஷ்க்கு நேற்று அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை அகற்றியுள்ளனர்.

இதுபோல் ஆண்களுக்கு கர்ப்பப்பை இருப்பது மிகவும் அரிதானது. இப்போது அறுவை சிகிச்சைக்கு பின் அமரேஷ் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணவர் மிக வசீகரமானவராக இருப்பதால் விவாகரத்துக் கோரும் பெண்

Angry couple mad at each other

எகிப்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவர் அதிக வசீகரமாக இருப்பதாகக் காரணம் கூறி விவாகரத்து கோரியுள்ளார். இப் பெண்ணுக்கு 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அவரின் கணவர் ஒரு மருத்துவராவார். ஆனால், அண்மையில் தனது கணவரிடமிருந்து விவாகரத்துக் கோரி இப் பெண் நீதிமன்றத்தை நாடினார்.

தனது கணவர் மிக கம்பீரமானவராக, வசீகரமானவராக இருப்பதால் அவரை தான் நம்பவில்லை என அப் பெண் தெரிவித்துள்ளார். தனது கணவரை எந்நேரமும் வேறு பெண்கள் பார்ப்பதாகவும் வேறு பெண்களுடன் அவருக்குத் தொடர்புகள் இருக்கக்கூடும் என தான் அஞ்சுவதாகவும் அப் பெண் தெரிவித்துள்ளார். இதனால், தான் துயரமான ஒரு வாழ்க்கையே வாழ்வதாகக் கூறி, தனக்கு விவாகரத்து வழங்குமாறு அப் பெண் கோரியுள்ளார்.

வவுனியாவில் பட்டப்பகலில் வாள்வெட்டுச் சம்பவம்!!

 
வவுனியா புகையிரத நிலைய வீதியில் நேற்று (24.06.2016) பிற்பகல் வாள்வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி திருத்தும் நிலையத்தில் பணிபுரியும் நால்வர் மீது நேற்று (24.06.2016) பிற்பகல் முச்சக்கரவண்டியில் வந்தவர் வாளால் வெட்டிவிட்டு முச்சக்கரவண்டியினை அவ்விடத்திலேயே விட்டு தப்பிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

SAM_0124 SAM_0132 SAM_0133 SAM_0137 SAM_0141