கனடாவில் தற்கொலை செய்துகொள்ள புதிய சட்டம் அனுமதி!!

Canada-suicide-law

கனடா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயில் தத்தளிக்கிறவர்கள் மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

கனடா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயில் தத்தளிக்கிறவர்கள், உயிரைப் போக்கிக்கொள்வதற்கு வைத்தியர்கள் உதவ விதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம் அகற்றியது.

இதைத் தொடர்ந்து அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணப்படுக்கையில் அவஸ்தைப்படுகிற நோயாளிகள், மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு அந்த நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்து விட்டது.

அதே நேரத்தில் இந்த புதிய சட்டம் மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்டிருப்பதாக விமர்சனமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் குறிப்பிடும்போது, ‘இந்த சட்டம் முதல் கட்ட நடவடிக்கைதான். எதிர்காலத்தில் இது விரிவுபடுத்தப்படும்’ என கூறினர்.

இதேபோன்று நோயாளிகள், மருத்துவர்கள் உதவியுடன் மரணத்தை தாமே தேடிக்கொள்ள அனுமதி அளிக்கும் சட்டம் சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, அல்பேனியா, கொலம்பியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ளது. இப்போது அந்த நாடுகளின் வரிசையில் கனடாவும் சேர்ந்துள்ளது.

மஹியங்கனையில் மாணவி கொலை : துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டிருக்கலாம் என சந்தேகம்!!

Mahiyangana School Girl Murder

மஹியங்கனை – குடாலுணுக கிராமத்தில் 9 வயது சிறுமியொருவர் நேற்று (17.06.2016) மாலை கொலை செய்யப்பட்டமை தொடர்பில், பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறினார்.

மஹியங்கனை – ரிதிமாலியத்த – குடாலுணுக கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 4 இல் கல்வி பயின்ற மல்கி சதமிலியின் சடலம், நேற்று மாலை 5 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.

சிறுமியின் வீட்டில் இருந்து ஒன்றரை கிலோமீற்றர் தொலைவிலுள்ள, உல்ஹிடிய ஓயாவிற்கு அருகிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பாடசாலை நிறைவடைந்து வீட்டிற்குச் செல்லும் இடைப்பட்ட நேரத்திலேயே சிறுமி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வழமையாக பஸ்ஸில் இருந்து இறங்கி சகோதரியுடன் சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும் சதமிலி, நேற்றைய தினம் ஏதோவொரு காரணத்தினால் சகோதரியைத் தவறவிட்டுள்ளார்.

பிற்பகல் இரண்டு மணி கடந்தும் சிறிய மகள் வீட்டிற்கு வராதமையினால், பெற்றோர் அயலவர்களின் உதவியுடன் மகளைத் தேடிச் சென்றுள்ளனர்.

மாலை 5 மணியளவில் சிறுமியின் சடலத்தை நீரோடையொன்றில் அவர்கள் கண்டனர்.

சதமிலியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கைகள் கட்டப்பட்டிருந்ததுடன், பாதணிகள் மற்றும் பாடசாலை பை ஆகியன சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு சற்று தொலைவில் இருந்து மீட்கப்பட்டன.

சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு நேற்றிரவு சென்றிருந்த நீதவான், முதற்கட்ட விசாரணைகளை நிறைவு செய்து, பிரதேச பரிசோதனைகளுக்காக மஹியங்கனை வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்தார்.

சதமிலியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி, கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், குற்றவாளிகளைத் தேடி நேற்றிரவு முதல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மோப்ப நாயின் ஊடாக பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முனனெடுத்த சந்தர்ப்பத்தில், சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்திலுள்ள, சதமிலி கல்வி பயின்ற பாடசாலைக்கு அருகில் மோப்ப நாய் நின்றதாக பொலிஸார் கூறினர்.

இரண்டாவது போட்டியிலும் இலங்கை அணி அபார வெற்றி!!

Dublin , Ireland - 16 June 2016; Farees Maharoof of Sri Lanka, left, is congratulated by wicketkeeper Dinesh Chandimal after catching out Ireland's Kevin OBrien during the One Day International match between Ireland and Sri Lanka at Malahide Cricket Ground in Malahide, Dublin. (Photo By Seb Daly/Sportsfile via Getty Images)

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 136 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்ட இழப்பிற்கு 377 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை அணி சார்பில் அபாரமாக ஆடிய குஷல் ஜனித் பெரேரா 135 ஓட்டங்களையும், சீக்குகே பிரசண்ண 95 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அயர்லாந்து சார்பில் முர்தக் 66 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 45 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது.

சுரங்க லக்மால் 38 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

தொடரின் சிறப்பாட்டக்காரராக டசுன் சானக தெரிவுசெய்யப்பட்டார்.

இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சிம்பாவே 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி!!

Zimbabwean players celebrate after winning the T20 International cricket match against India at Harare Sports Club, Saturday, June, 18, 2016. The Indian cricket team is in Zimbabwe for One Day International and T20 matches. (AP Photo/Tsvangirayi Mukwazhi)

இந்தியாவுக்கு எதிரான முதல் T20 போட்டியில் சிம்பாவே அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக வென்றது. தற்போது 2 T20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகின்றது. இதன் முதல் T20 போட்டி இன்று ஹராரேயில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித்தலைவர் டோனி பந்துவீசமுடிவு செய்தார். அதன்படி, சிம்பாவே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

சிம்பாவே அணிக்கு மசகட்சா 25 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிபாபா 20 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரிச்மண்ட் (0) ’ரிட்டயட் ஹர்ட்’ முறையில் வெளியேறினார்.

இதனையடுத்து வந்த வாலர் 30 ஓட்டங்களிலும், சிக்கந்தர் 20 ஓட்டங்களிலும் வெளியேறினர். இதன் பின்னர் தனியாளாக அதிரடி காட்ட ஆரம்பித்தார் சிகும்புரா. சிக்சராக பறக்கவிட்ட அவர் அரைசதம் கடந்தார்.

இறுதியில் சிம்பாவே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 170 ஓட்டங்கள் எடுத்தது. சிகும்புரா (54), மட்ஜிவா (5) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி சார்பில், பும்ரா 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதன் பின்னர் சற்று கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர் ராகுல் முதல் பந்திலே டக்-அவுட்டாக வெளியேறினார். ராயுடு 19 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, நிதானமாக ஆடிய மந்தீப் சிங் 31 ஓட்டங்களும், அதிரடியாக ஆடிய மணீஷ் பாண்டே 48 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பதற்றமான சூழ்நிலையில் டோனி, அக்சர் படேல் ஜோடி சிறப்பாக செயல்பட்டது. இந்த நேரத்தில் அக்சர் படேல் (18) ஆட்டமிழக்க மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.

கடைசி ஓவரில் ரிஷி தவான் பந்துகளை வீணடிக்க, இந்திய அணியால் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் 2 ஓட்டங்களால் சிம்பாவே வெற்றி பெற்றது. டோனி (19), ரிஷி தவான் (1) களத்தில் இருந்தனர்.

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வேட்டைத் திருவிழா!!

 
யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வேட்டைத் திருவிழா நேற்று (17.06.2016) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

1 DSC_0400 DSC_0401 DSC_0402 DSC_0420 DSC_0424 DSC_0428 DSC_0429 DSC_0431 DSC_0439 DSC_0442 DSC_0448 DSC_0450 DSC_0452 DSC_0454 DSC_0457 DSC_0459 DSC_0462 DSC_0464 DSC_0466 DSC_0472 DSC_0478

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் படுகாயம்!!

Vavuniya Accident

வவுனியா நெளுக்கும் பகுதியில் இன்று (18.06.2016) மதியம் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நெளுக்குளம் பகுதியிலிருந்து சென்றுகொண்டிருந்த மகேந்திரா வான் முன்னால் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டியை மோதியத்தள்ளியதில் தூக்கி வீசப்பட்ட குடும்பப் பெண் படுகாயமடைந்ததுடன் செலுத்தி வந்த ஸ்கூட்டி மகேந்திரா வாகனத்திற்குள் அகப்பட்டு லக்சபான மின் கம்பத்துடன் மோதி நின்றுள்ளது.

மகேந்திரா வாகனம் கட்டுப்பாட்டை இழந்தே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த நாதன் வனஜா என்ற 35 வயது குடும்பப் பெண் சுயநினைவற்ற நிலையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது. இவர் இரண்டு பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்த 7 வயதுச் சிறுவனுக்கு உதவி தேவை!!

Help wanted for vavuniya boy

வவுனியா ஆலடி வீதி, செக்கட்டிப்புலவு, பம்பைமடு எனும் முகவரியில் வசித்துவரும் மோகனவர்த்தன் சகாணன் என்ற 7 வயதுடைய சிறுவன் இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்த நிலையில் உள்ளதாகவும், உடன் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று வைத்தியர்கள் சிபாரிசு செய்துள்ளனர்கள்.

வறுமைக்கோட்டின் கீழ் வாழந்துவருவதால் தாரள மனம் கொண்ட கொடையாளிகள் சிறுநீரகம் மாற்றுவதற்கு இச்சிறுவனுக்கு மனமுவர்ந்து உதவி புரியுமாறு கேட்டுள்ளார்கள்.

தொடர்புகளுக்கு
0767879510
0775233072

வங்கி இலக்கம் : 8171006357
கொமர்ஷல் வங்கி
வவுனியா

Help wanted for vavuniya boy1

வவுனியா தழிழ் ஊடகவியலாளர் சங்கத்தை சுய இலாபத்திற்காக பயன்படுத்தும் சில ஊடகவியலாளர்கள்!!

VVV

தமிழ் விருட்சம் மற்றும் குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கமும் இணைந்து நடாத்தும் சர்வதேச தந்தையர் தினத்திற்கு வவுனியா தழிழ் ஊடகவியலாளர் சங்கம் அனுசரணை வழங்குவதாக வெளிவந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என குறித்த சங்கதின் நிர்வாககுழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பொருளாளர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் சம்மந்தமாக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும்போது..

வவுனியா மாவட்டத்தில் தழிழ் ஊடகவியலாளர்களின் நலன் கருதியும் ஊடகவியலாரிடத்தில் புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்தவும் வளர்ந்து வரும் ஊடகவியலார்களை ஊடக அறிவு ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் வவுனியா தழிழ் ஊடகவியலாளர் சங்கம்.

ஆனால் இன்று நிலமை மாறி வருகின்றது. எமது சங்கத்தில் அண்மைகாலமாக ஒருசில ஊடகவிலாளர்கள் வவுனியா தழிழ் ஊடகவியலாளர் சங்கத்தை தமது சுய இலாபத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

சங்கத்தின் பெயரில் அரசியல்வாதிகளிடமிருந்தும் அமைப்புகளிடமிருந்தும் பொருட்கள் சலுகைகள் போன்றவற்றை பெறுகின்றனர். எதிர்வரும் காலத்தில் இதை சங்கம் அனுமதிக்காது.

குறித்த விடயம் சம்மந்தமாக தலைவர் கருத்து தெரிவிக்கும்போது, இவ்விடயம் சம்மந்தமாக எமக்கு ஏதும் தெரியாது சங்கத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

குறித்த விடயம் சம்மந்தமாக பொருளாளர் கருத்து தெரிவிக்கும்போது, நாங்கள் அனுசரணை வழங்கவில்லை. இது எனக்கு மட்டுமல்ல தலைவருக்கோ ஏனைய நிர்வாக குழு உறுப்பினருக்கோ தெரியாமல் நடாத்தப்படும் செயற்பாடு எனத் தெரிவித்தார்.

-உண்மை நியூஸ்-

Vavuniya

இந்தோனேஷியக் கடலில் தத்தளித்த இலங்கையர்கள் தரையிறங்க அனுமதி!!

Sri-Lankan-Tamils

இந்தோனேஷியாவின் அச்சே கடற்பரப்பில் நிர்க்கதிக்குள்ளான இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை தரை இறங்க இந்தோனேஷிய அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

கர்ப்பிணிப் பெண் ஒருவர், 9 சிறார்கள் உள்ளிட்ட 44 பேர் இந்தப் படகில் உள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியா செல்லும் நோக்கில் தமிழகத்திலிருந்து புறப்பட்ட இலங்கையர்களின் படகு, இயந்திரக் கோளாறு காரணமாக இந்தோனேஷியாவின் அச்சே கடற்பரப்பில் நிர்க்கதிக்குள்ளானது.

தத்தளித்துக் கொண்டிருந்த இந்த படகு தொடர்பாக தகவல் அறிந்த இந்தோனேஷிய கடற்படையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இருப்பினும், படகில் இருந்த எவரையும் தரை இறங்க அவர்கள் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், கரை சேரும் நோக்கில் கடலில் குதித்தவர்களை, இந்தோனேசிய கடற்படையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர்.

இதனால், புகலிடக் கோரிக்கையாளர்கள் கடந்த ஒரு வார காலமாக படகில் தத்தளித்து வந்தனர். அவர்களை மீண்டும் தமிழகத்திற்கு அனுப்பும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இந்தோனேஷிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதனால் படகில் இருந்த 44 ஈழத் தமிழ் அகதிகளையும் தற்போது தமது நாட்டில் தரை இறங்குவதற்கு இந்தோனேஷிய அரசு அனுமதித்துள்ளது. அவர்களை ஐ.நா. பிரதிநிதிகள் சந்தித்துப் பேச உள்ளனர்.

குழந்தைகள் முன்னிலையில் இதையெல்லாம் செய்யாதீங்க!!

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே என்ற வரிகள் உங்களுக்கு நினைவிருக்கலாம்.ஆம், குழந்தையின் வளர்ப்பில் தாய் எவ்வளவு முக்கியமோ அதை விட குடும்ப சூழலும் மிக முக்கிய காரணமாக அமைகிறது.குழந்தைகள் பெற்றோர்களை பார்த்து தான் ஒவ்வொரு விடயத்தையும் கற்றுக் கொள்கிறார்கள்.

கணவன்- மனைவி சண்டை

கணவன்- மனைவி இடையிலான சண்டை சச்சரவு குழந்தைகளுக்கு தெரியக்கூடாது. அவர்கள் முன்னிலையில் சண்டையிட்டு கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நீங்கள் தான் உங்க வீட்டு சுட்டிக்கு ஹீரோ என்பதை மறந்துவிட வேண்டாம், உங்களை பார்த்தே குழந்தைகள் வளர்கின்றது.

விமர்சனம் வேண்டாம்

குழந்தைகள் முன்னிலையில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம், உதாரணத்திற்கு உங்கள் நண்பரை அவன் சரியான சோம்பேறி என பேசியிருந்தால் ஒருவேளை அவர் வரும் போது சோம்பேறி மாமா வந்துவிட்டார் என சொல்ல நேரிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும்.

தீய சொற்கள்

தீய சொற்கள் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள், உங்களை பார்த்து தான் அவர்கள் பேச கற்றுக் கொள்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

இதேபோல் குழந்தைகள் முன்னிலையில் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற கெட்ட பழக்கவழக்கங்களை செய்ய வேண்டாம்.

மிரட்டல் வார்த்தைகள்

சிறு குழந்தைகளை மிரட்டும் போது கொன்னுடுவேன், தலையை வெட்டிவிடுவேன் என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.இதேபோல் தொலைக்காட்சியில் நல்ல விடயங்களை சொல்லிக் கொடுக்கும் புரோகிராம்களை பாருங்கள். எப்போதும் அழுது வடியும், அடாவடி சீரியல்கள் அறவே வேண்டாம்.

ஒப்பிட்டு பேச வேண்டாம்

ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறமை என்று இருக்கும், உங்கள் குழந்தையை மற்றவருடன் ஒப்பிட்டு ஒருபோதும் பேசவேண்டாம், அது அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை அதிகரித்து விடும்.

கல்வி

உங்கள் குழந்தைகள் நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை எடுக்கவில்லை என்றால் அதற்காக அவர்களை திட்ட வேண்டாம், அவர்களுடைய பிரச்சனைகளை கண்டறிந்து தீர்க்க வேண்டும்.

பூமியைச் சுற்றும் சிறு கோள் 2016 HO3 : ஈர்ப்பு சக்தியால் உந்தப்பட்டு அங்குமிங்கும் தாண்டுகிறது!!

asteroid20160615-16

பூமியைச் சுற்றும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிறு கோள் தொடர்பான விபரங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகின்றார்கள்.

பூமிக்கு அருகில் உள்ள அல்லது கால் செயற்கைக் கோள் என்று அழைக்க உதாரணமாகக் கருதப்படும் இந்த சிறு கோளுக்கு 2016 HO3 என்று பெயரிடப்பட்டுள்ளது.

பூமியைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் வலம் வருவதைப் போல் உள்ள இந்த சிறுகோள், பூமியுடன் சேர்ந்து சூரியனையும் சுற்றி வருகிறது.

இந்தக் கோளை, பூமியும் சூரியனும் மாறி மாறி ஈர்ப்பதால், அது பல நூறாண்டுகளுக்கு ஈர்ப்பு சக்தியால் உந்தப்பட்டு, அங்குமிங்கும் மாறி மாறித் தாண்டும் இயக்கத்தில் இருக்கும் என்று கலிஃபோர்னியாவில் உள்ள ஜெட் உந்துசக்தி ஆய்வக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சிறுகோள், 100 மீட்டர் அகலத்துக்கு அதிகமாக இருக்காது என்று கருதப்படுகிறது.

தேடு பொறியில் பாட்டி பயன்படுத்திய பணிவான வார்த்தைகள் : கூகுள் நிறுவனம் மகிழ்ச்சி!!

Grandma-google Search

ட்விட்டர் பயனாளரான பென் ஜோன் என்பவர் தனது பாட்டியின் மடிக்கணனியை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டிருந்த போது, பாட்டி தனது கூகுள் தேடு பொறியில் பயன்படுத்திய வார்த்தைகளைக் கண்டு ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்துவிட்டார்.

பாட்டி, கூகுளில் பயன்படுத்தியிருந்த பணிவான, பண்பான வார்த்தைகள் தான் அதற்குக் காரணம். அவர் கூகுளில் எது குறித்துத் தேடினாலும், வார்த்தைகளுக்கு முன்பாக “Please” மற்றும் இறுதியில் ”Thank You” என்றே குறிப்பிட்டுத் தேடியுள்ளார்.

பாட்டியின் இந்த தேடுதல்களை Screen Shot எடுத்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பென் ஜோன்.

இதனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த கூகுள் நிறுவனம், ”உங்களுடைய பணிவான தேடல் எங்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது” என்று மறு ட்வீட் செய்துள்ளது.

Google Replay to Grandma

துரையப்பா மைதானம் பொருளாதாரத்தின் அடையாளம் : காணொளிக் காட்சி மூலம் மோடி தெரிவிப்பு!!

Modi Open Thurayappa Statium

யாழ். துரையப்பா மைதானம் வெறும் செங்கல் மற்றும் மணலால் கட்டப்பட்டதல்ல. இது இருநாட்டினதும் ஒருங்கிணைப்பு உத்வேகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாகும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா சார்பில் 15 கோடி ரூபா செலவில் யாழ்ப்பாணத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கத்தை டெல்லியில் இருந்த படியே பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று காலை 10 மணியளவில் திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காணொளி காட்சி மூலம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் இலங்கை சென்ற போது யாழ்ப்பாண மக்கள் என்னை அன்போடு வரவேற்றமை மறக்க முடியாத சம்பவமாகும். இலங்கை மக்களுடன் ஒன்றிணைந்த செயற்படுவதனால் இந்நாள் எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை தருகின்றது.

இந்த நிகழ்வானது இலங்கை மற்றும் இந்தியாவிற்கான உறவை பலப்படுத்தும். ஐ.நாவின் யோகா தினத்திற்கு இலங்கைதான் முதலில் ஆதரவளித்தது.

நாம் இலங்கையின் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுடனும் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஜனியை கூட தெரியாத அரவிந்தஸ்வாமி!!

arvind-swamy_660_071413045444

அரவிந்த் சாமி தமிழக பெண்கள் பலரும் விரும்பும் பெயர். 90களில் பல பெண்களின் கனவு காதலன், இப்படி தாண்டி எனக்கு ஒரு கணவன் வேண்டும் என்று பெண்கள் ஏங்கிய தருணம். ரோஜாவில் மென்மையாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.இயக்குனர் மணிரத்னம் தளபதி படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் இவரை அறிமுகப்படுத்தினார்.இந்த கதாபாத்திரம் எந்த அளவிற்கு பவர்புல் என்றால், ரஜினி, மம்முட்டி போன்ற சூப்பர் ஸ்டாரையே எதிர்த்து நிற்கும் கதாபாத்திரம், அந்த படத்தில் மிகப்பெரும் ஜாம்பவான்களை தாண்டி அனைவரையும் கவர்ந்தார்.

இந்த படத்தில் நடித்த போது ஒரு நாள் தன் படப்பிடிப்பு முடிந்து ஓர் அறையில் சென்று தூங்கி விட்டாராம், அவர் படுத்திருந்து கட்டில் கீழ் ஒருவர் படுத்திருந்தாராம், சில நேரம் கழித்து தான் தெரிந்தது அது சூப்பர் ஸ்டார் உறங்கும் கட்டில், அவர் தான் தரையில் படுத்திருக்கிறார் என்று, இதை பல இடங்களில் அரவிந்த் சாமி கூறியுள்ளார்.இதை தொடர்ந்து ரோஜா தமிழ் சினிமாவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, வட இந்தியா நாயகன் போல் இருந்ததால் என்னவோ இந்த படம் பாலிவுட்டிலும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பம்பாயிலும் நடித்தார், மாஸ் ரசிகர்கள் என்று இல்லாமல் தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை கொண்டு பயணித்து வந்த அரவிந்த் சாமி திடிரென்று சினிமாவை விட்டு முழுவதும் விலகினார்.

குடும்பம் வியாபாரம் என பிஸியாக இருந்த அரவிந்த் சாமி மீண்டும் தன் குருநாதர் மணிரத்னத்திற்காக கடல் படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார், ஆனால், இவை தோல்வியில் முடிய, தனி ஒருவனாக நானே வெற்றி பெறுகிறேன் என தனி ஒருவனில் மிரட்டியிருந்தார். பிறகு என்ன தற்போது அரவிந்த் சாமி மீண்டும் முன்பை விட அதிக பலத்துடன் தமிழ் சினிமாவில் கால் பதித்துவிட்டார். இவர் இன்று போல் என்றும் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும் என்று இன்று பிறந்தநாள் கொண்டாடும் அரவிந்த் சாமி அவர்களுக்கு வவுனியா நெற் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

அனைவரையும் பிரம்மிக்க வைத்த சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan-Funny-Dialogues

சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகர்களின் முன்னணியில் இருப்பவர். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் ரெமோ.இப்படத்தின் டப்பிங் சமீபத்தில் தொடங்கியது. இதில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே.

டப்பிங்கில் இவர் பெண் வேடத்தில் பேசிய போது ஒட்டு மொத்த படக்குழுவும் பிரம்மித்து போனதாம், அந்த அளவிற்கு தத்ரூபமாக பேசி அசத்திவிட்டாராம்.

விஷால் படப்பிடிப்பில் நடந்த அசம்பாவிதம், படம் பாதியிலேயே நின்றது?

1 (7)

விஷால் தற்போது தான் பழைய உற்சாகத்துடன் செயல்பட்டு வருகிறார். மருது பி,சி செண்டர்களில் நல்ல வரவேற்பு பெற்றது.தற்போது அதே ஆடியன்ஸை குறிவைத்து கத்திச்சண்டை என்ற படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் வடிவேலு மீண்டும் ரீஎண்ட்ரி ஆகியிருப்பது கூடுதல் பலம்.

இந்த படப்பிடிப்பின் போது லைட் மேன் ஒருவர் மயங்கி விழுந்து சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே இறந்துள்ளார், இச்சம்பவம் படக்குழுவை வெகுவாக பாதிக்க சில நாட்கள் இந்த படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.