பொது இடத்தில் கஞ்சா புகைத்த இளைஞன் விளக்கமறியலில்!!

Smoking-ganja

திருகோணமலையில் பொது இடத்தில் கஞ்சா புகைத்த இளைஞன் ஒருவரை இந்த மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராசா இன்று உத்தரவிட்டுள்ளார்.

கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பிரதேசத்தில் பௌத்த விகாரையொன்று அமைந்துள்ள பகுதியில், கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த நிலையில் குறித்த இளைஞனை திருகோணமலை பொலிஸார் நேற்று (18) கைது செய்துள்ளனர்.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று (19) ஆஜர்ப்படுத்திய போதே 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை அணிக்கு மற்றுமொரு சிக்கல்!!

Shaminda Eranga

இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் சமிந்த எரங்க, திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இன்னும் இரு நாட்களில் நொடின்கேம் நகரில் (Nottingham) ஆரம்பிக்கவுள்ளது.

இந்தநிலையிலேயே இருதயத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் இங்கிலாந்திலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்சானும் தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக கடந்த மே மாத இறுதியில் அறிவித்தார்.

அத்துடன், தம்மிக்க பிரசாத் மற்றும் துஷ்மந்த சாமர ஆகியோர் காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து முன்னதாக விலகியுள்ள நிலையில், எரங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையானது இலங்கை அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகின்றது.

இதேவேளை, இங்கிலாந்துடன் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சமிந்த எரங்கவின் பந்துவீச்சில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவர், நாளை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைச் சிறுவர்கள் உட்பட 67 சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த 53 வயது நபர்!!

Abuse

இலங்கை உள்ளிட்ட பலநாடுகளை சேர்ந்த சிறுவர்களை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பிரான்ஸ் நாட்டு பொதுமகன் ஒருவருக்கு எதிராக அந்த நாட்டில் வழக்கு விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

53 வயதான அவர் 67 இளம் சிறுவர்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இலங்கை, எகிப்து மற்றும் டியூனிசியாவை சேர்ந்தவர்கள் என பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

மனிதாபிமான பணிகளில் ஈடுபடுவதாக கூறியே இவர் இந்த செயலில் ஈடுப்பட்டுவந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் குறித்த பிரான்ஸ் நாட்டவருக்கு எதிரான விசாரணைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

அவர் இணையத்தினுடாக இளம் வயதினருடன் தொடர்புகளை மேற்கொண்டு குறித்த நாடுகளுக்கு செல்லும் போது துஸ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பிரான்ஸ் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

வவுனியா கூமாங்குளம் சுப்பர் ஸ்ரார் விளையாட்டு கழகத்தின் புதிய வர்ண சீருடை அறிமுகம்!!

 
வவுனியா கூமாங்குளம் சுப்பர் ஸ்ரார் விளையாட்டு கழகத்தின் கடினப்பந்து அணிக்கு இன்று (19.06.2016) புதிய வர்ண சீருடை கழகத் தலைவர் திரு விவேகானந்தன் அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்தார்.

புதிய சீருடைகளுக்கான அனுசரணையினை நியூ ஸ்ரைல் ரெயிலர்ஸ் திரு.நிரோ, தழிழ் தேசிய இளைஞர் கழகம் சார்பாக உறுப்பினர் திரு.பிரசாத், மற்றும் ராஜா ஸ்ரோர்ஸ் உரிமையாளர் திரு.ராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இன் நிகழ்விற்கு வருகை தந்திருந்த வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்க செயலளார் திரு.மிதுளன் அவர்கள் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார் .

சீலன் சுவையருவி உருமையாளர் திரு.சீலன் அவர்கள் சுப்பர் ஸ்ரார் வி.கழக கரப்பந்து அணிக்கு மின் குழிழ்கனை வழங்கி வைத்தார்.

1 13453132_913056762138285_291602807_o 13453375_913057182138243_888497607_o 13460812_913056175471677_1898663091_o 13461335_913057132138248_1174226490_o 13467516_913058238804804_76499037_o 13467780_913057048804923_163887408_o 13479750_913056272138334_177794649_n 13499493_913056845471610_1651694086_o 13499836_913056012138360_1137061779_o

9 வயது பாடசாலைச் சிறுமி கொலை : சந்தேகநபரின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

Mahiyangana School Girl Murder

மஹியங்கனை – ரிதீமாலியத்த – மொரான பிரதேசத்தில் ஒன்பது வயது பாடசாலை மாணவியின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனடிப்படையில் குறித்த சிறுமி பாடசாலை விட்டு வீடு வரும் வழியில் வைத்து அவரை கடத்தியதாக குறித்த சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

பின்னர் சிறுமியின் உணவு பெட்டியில் சுற்றப்பட்டிருந்த துணியை கொண்டு அவரின் வாயை கட்டியுள்ளார். பின்னர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி மயக்கமடைந்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

பின்னர் சிறுமியை ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் வீசிச் சென்றதாக சந்தேகநபர் காவற்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சிறுமி காணாமல் போன நேரத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது வரையில் குறித்த சந்தேகநபர் உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையிலேயே சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்கி சந்தமாளி பிரேமசிறி என்ற குறித்த சிறுமி குடா லூனுக கணிஷ்ட வித்தியாலயத்தில் நான்காம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மஹியங்கனை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

-ஹிரு நியூஸ்-

இணையக் காதலில் சிக்கும் பெண்கள் தப்பிக்க என்ன வழி?

Internet Love

சமூக வலைத்தளங்களை 25 முதல் 45 வயது வரையுள்ள ஆண் மற்றும் பெண்களில் ஒரு பகுதியினர் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.

சுதாவுக்கு 38 வயது. திருமணமாகி 13 வருடங்கள் ஆகியிருக்கின்றன. இரண்டு குழந்தைகளின் தாய். பிள்ளைகளை பள்ளிக்கும், கணவரை அலுவலகத்திற்கும் அனுப்பி விட்டு, வீட்டு நிர்வாகத்தை கவனித்துக்கொண்டிருந்த அவள் எப்படியோ ‘சைபர் பார்ட்னர்’ எனப்படும், ‘இணையக் காதலன்’ ஒருவனிடம் சிக்கிக்கொண்டாள்.

“நான் மிகுந்த குற்ற உணர்வுடன் இருக்கிறேன். என் கணவருக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் செய்வதுபோல் தோன்றுகிறது. இப்படியே போனால் அவன் என்ன சொன்னாலும் கேட்கும் நிலைக்கு சென்று விடுவேன்.

இப்போது சிலநாட்களாக அவன் என்னிடம் முரண்பாடான சில ஆசைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். என் கணவருக்கு சந்தேகம் வந்து விட்டால், என்னை விவாகரத்து செய்துவிடுவார்’’ என்றாள்.

அவளிடம் ஏற்பட்டிருந்த மனமாற்றங்களை எல்லாம் அறிந்தபோது கிட்டத்தட்ட அவள், ‘இன்டர்நெட் அடிக்ஷன் டிஸார்டர்’ என்ற பாதிப்புக்கு உள்ளாகி விட்டதை உணரமுடிந்தது.
அந்த நபரோடு அவள் செல்போன் வழி இணைய தொடர்பில் பழகி வந்திருக்கிறாள்.

‘கணவர், உன் போனை எடுத்து பார்த்து விடக்கூடாதே! என்ற பயம் எப்போதும் உன்னை வாட்டுகிறதா?’ என்று கேட்டேன்.

“ஆமாம்’’ என்றாள்.

‘நீ அந்த நபரோடு சட்டிங் செய்யும்போது குழந்தைகள் அருகில் வந்தால், குழந்தைகள் மீது கட்டுக்கடங்காத கோபம் வருகிறதா?’

என்ற கேள்விக்கும், ‘கணவர் வீட்டிற்கு வருவதற்கு முன்னால் ‘சட் கிளீயர் ஒப்ஷன்’ கொடுத்து அனைத்தையும் அழித்து சுத்தம் செய்து விடுகிறாயா?’ என்ற கேள்விக்கும் அவளிடம் இருந்து “ஆமாம்’’ என்ற பதிலே வந்தது.

நான் சற்றுயோசித்ததும், “என் குடும்ப வாழ்க்கை சிதறுண்டு போய்விடுமோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுவிட்டது’’ என்று கண்கலங்கினாள்.

இன்று நிறைய பெண்கள் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். வேலை தரும் சோர்வு, கணவருடன் ஏற்படும் சின்னச் சின்ன மனக்கசப்புகள், கணவன்–மனைவி இருவரும் வெவ்வேறு இடங்களில் வேலை பார்த்தல் போன்றவைகளால் கணவன்–மனைவி இடையே மனம் விட்டுப்பேசுவது குறைந்து, பெயரளவுக்கு மட்டும் பேசுகிறார்கள்.

அப்போது கணவரோடு மனைவி பேச வேண்டிய விஷயங்கள் எல்லாம் ‘பேசப்படாத விஷயங்களாக’ மனைவிகளின் மனதுக்குள்ளே குவிந்து கிடக்கும். யாரிடம் அதை கொட்டுவது என்ற கேள்வி ஏற்படும் போது ‘அவைகளைஎல்லாம் கேட்க இதோ நான் இருக்கிறேன்’ என்று, ஒரு ‘சைபர் பார்ட்னர்’ கிடைத்து விட்டால், தயக்கத்தோடு பேசத் தொடங்கி–குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கணவரிடம் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களைக்கூட பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு சென்று விடுகிறார்கள்.

அடுத்தகட்டமாக தன்னை மறந்து, மணிக் கணக்கில் சட்டிங்கில் ஈடுபடுவார்கள்.
அப்போது கிட்டத்தட்ட கணவருடனான தகவல் தொடர்பு நின்றுபோகும் அல்லது கணவர் பேசும்போது, ‘ஏன் இவர் பேசிப் பேசி தொந்தரவு தருகிறார்?’ என்ற எரிச்சல் தோன்றும்.

சட்டிங் செய்வதற்காக தனிமையில் போய் உட்கார்ந்துவிடுதல், அந்த பார்ட்னரின் விருப்பத்திற்கெல்லாம் வளைய ஆரம்பித்தல் போன்ற நிலைக்குசெல்லும்போது, குடும்ப வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டுவிடும்.

அழுது, விம்மி, வெளிப்படுத்த முடியாத கவலைகளை எல்லாம் பகிர்ந்து கொண்டஅவள், “நான் எப்படியாவது இந்த சிக்கலில் இருந்து மீள வேண்டும்! அதற்கு வழி சொல்லுங்கள்’’ என்றாள்.

‘சைபர் பார்ட்னரிடம் இருந்து விலகி விடவேண்டும் என்ற எண்ணம் உன்னிடம் வந்து விட்டதால், உன் குடும்ப வாழ்க்கையை காப்பாற்றிவிட முடியும் என்று நீ நம்பலாம். முதலில் அந்த நபரிடம் இருந்து விலகிவிடு. செல்போன் பயன்படுத்தும் நேரத்தை வெகுவாக குறைத்துவிடு.

கணவரோடு தினமும் பேசுவதற்கு அதிக நேரத்தை ஒதுக்கு. கணவர், குழந்தைகளோடு பேசிக் கொண்டிருக்கும் போது செல்போனை மறந்து விட வேண்டும். குறிப்பாக படுக்கை அறைக்குள் அதை கொண்டு செல்லவே வேண்டாம்.

தனிமையும், சூழ்நிலைகளுமே பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கும். குடும்பத்தோடு அதிகமான நேரத்தை செலவிடு.
அப்போது தனிமையும், பிரச்சினைக்குரிய நபரின் நினைவும் வராது.

சில மணிநேரங்கள் தனிமையில் அமர்ந்து ‘உனக்கும் கணவருக்கும் இடைவெளி உருவாக என்ன காரணம்?’ என்று சிந்தித்து, காரணங்களை எல்லாம் குறிப்பெடுத்துக்கொள்.

அந்த இடைவெளியை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து உடனே அதை நடைமுறைப்படுத்து. வெளியே யாரிடமோ காட்ட முன் வரும் அன்பையும், பாசத்தையும், காதல் உணர்வையும் உடனடியாக உன் கணவரிடம் காட்டு.

உங்கள் வாழ்க்கையில் ரசனை குறைந்து போனதுதான் மூன்றாம் நபர் உங்கள் வாழ்க்கைக்குள் நுழைய காரணம்.

வாழ்க்கையை ரசனைக்குரியதாக மாற்ற உன் கணவரோடு சேர்ந்து திட்டமிடு. எல்லாவற்றுக்கும் மேலாக கணவருக்கு எப்போதும் நம்பிக்கைக்குரியவளாக இருப்பேன் என்று உறுதி எடுத்துக்கொள்’ என்றேன்.

அடுத்த அரைமணி நேரத்திலே அவள் தனது கணவரிடம் தனக்கு பிடிக்காத செயல்கள் என்னென்ன இருக்கிறது என்பதை பட்டியல் போட்டாள்.

அதை எப்படி அவரிடம் பக்குவமாக எடுத்துச்சொல்வது என்பதற்கு அவளுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டது.

மேலும் சில விஷயங்களுக்கும் அவள் கவுன்சலிங் பெற்றுக்கொண்டு நம்பிக்கையோடு விடைபெற்றாள்.

சமூக வலைத்தளங்களை 25 முதல் 45 வயது வரையுள்ள ஆண் மற்றும் பெண்களில் ஒரு பகுதியினர் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனால் சமூகத்தில் குற்றங்கள் பெருகி வருவதையும், விவாகரத்துக்கள் அதிகரித்து வருவதையும் அனைவருமே கவனத்தில் கொள்ளவேண்டும்.

-மித்திரன்-

வவுனியா மாவட்ட விளையாட்டு விழாவில் வவுனியா நகர் பிரதேச செயலகம் சம்பியன்!!

 
வவுனியா மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட விளையாட்டு விழா நேற்று முன்தினம் மாலை புளியங்குளம் இந்து வித்தியாலய மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இதன் இரண்டாம் நாளான நேற்று ஆரம்பமான போட்டிகள் மாலை 3.00 மணியளவில் பிரதம விருந்தினர்களின் வருகையுடன் பரிசளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்று நிறைவு பெற்றது.

இப் போட்டிகளில் ஒட்டுமொத்த புள்ளியடிப்படையில் வவுனியா நகர் பிரதேச செயலகம் முதலாமிடத்தினையும், வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலகம் இரண்டாமிடத்தையும், வவுனியா தெற்கு பிரதேச செயலகம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.

நேற்று இடம்பெற்ற போட்டிகளில் பெண்களுக்கான 100 மீட்டர் போட்டியில் முதலாமிடத்தினை V.துவாரகி, இரண்டாமிடத்தினை R.சுபாஜினி, மூன்றாமிடத்தினை S.சங்கவி ஆகியோரும்,

ஆண்களுக்கான 100 மீட்டர் போட்டியில் முதலாமிடத்தினை P.சிவகுமார், இரண்டாமிடத்தினை R.தனுசன் மூன்றாமிடத்தினை R.நிலவனும்

பெண்களுக்கான 400 மீட்டர் போட்டியில் முதலாமிடத்தினை R.M.P.சமனலி, இரண்டாமிடத்தினை, R.கர்சாளினி, மூன்றாமிடத்தினை S.வனர்ஜா ஆகியோரும்,

ஆண்களுக்கான 400 மீட்டர் போட்டியில் முதலாமிடத்தினை R.தனுசன், இரண்டாமிடத்தினை S.தனுசன், மூன்றாமிடத்தினை A.டினோஜனும்,

பெண்களுக்கான 800 மீட்டர் போட்டியில் முதலாமிடத்தினை K.கனகேஸ்வரி, இரண்டாமிடத்தினை I.மேரிகொண்சலா, மூன்றாமிடத்தினை S.லுகப்பிரியா ஆகியோரும்

ஆண்களுக்கான 800 மீட்டர் போட்டியில் முதலாமிடத்தினை J.A.S.I.N குமாரண, இரண்டாமிடத்தினை S.தனுசன், மூன்றாமிடத்தினை வவுனியா நகர் பிரதேச செயலக பிரிவை சேர்ந்த B.சுமித் பிரசன்ன மற்றும் வெங்கல செட்டிகுளம் பிரதே செயலகப் பிரிவைச் சேர்ந்த K.லக்சன் ஆகியோர் பெற்றுகொண்டனர்.

பெண்களுக்கான 1500 மீட்டர் போட்டியில் முதலாமிடத்தினை R.சாளினி, இரண்டாமிடத்தினை K.குகநேஸ்வரி, மூன்றாமிடத்தினை I.மேரிகொண்சலா ஆகியோரும்,

ஆண்களுக்கான 1500 மீட்டர் போட்டியில் முதலாமிடத்தினை M.கௌரிநாதன், இரண்டாமிடத்தினை S.தனுசன், மூன்றாமிடத்தினை S.டானியல் ஆகியோரும்,

பெண்களுக்கான 5000 மீட்டர் போட்டியில் முதலாமிடத்தினை R.சாளினி, இரண்டாமிடத்தினை I.மேரிகொண்சலா, மூன்றாமிடத்தினை A.A.S திசாநாயக ஆகியோரும்,

ஆண்களுக்கான 5000 மீட்டர் போட்டியில் முதலாமிடத்தினை K.நவநீதன், இரண்டாமிடத்தினை, H.A.P.D.I.திசாநாயக்க மூன்றாமிடத்தினை M.கௌரிநாதனும்

பெண்களுக்கான 10000 மீட்டர் போட்டியில் முதலாமிடத்தினை R.சாளினி, இரண்டாமிடத்தினை, A.M.S.அமசா, மூன்றாமிடத்தினை S.பிரதீபா ஆகியோரும்,

ஆண்களுக்கான 10000 மீட்டர் போட்டியில் முதலாமிடத்தினை H.A.P.D.I.திசாநாயக, இரண்டாமிடத்தினை, S.தனுசன் மூன்றாமிடத்தினை K.தனுசியந்தனும்,

பெண்களுக்கான 100 மீட்டர் தடைதாண்டல் போட்டியில் முதலாமிடத்தினை P.தர்சிகா, இரண்டாமிடத்தினை, I.கனிஸ்ரா ஆகியோரும்,

ஆண்களுக்கான 100 மீட்டர் தடைதாண்டல் போட்டியில் முதலாமிடத்தினை K.கபிலன் இரண்டாமிடத்தினை Y.நிறோஜன் மூன்றாமிடத்தினை P.தர்சனும்,

பெண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் போட்டியில் முதலாமிடத்தினை P.தர்சிகா, இரண்டாமிடத்தினை, I.கனிஸ்ரா ஆகியோரும்

ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் போட்டியில் முதலாமிடத்தினை K.குகநேஸ்வரன், இரண்டாமிடத்தினை K.கபிலன் ஆகியோரும்,

பெண்களுக்கான 4*100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் முதலாமிடத்தினை வவுனியா நகர் பிரதேச செயலக குழுவும் இரண்டாமிடத்தினை வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக குழுவும்

ஆண்களுக்கான 4*100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் முதலாமிடத்தினை வவுனியா நகர் பிரதேச செயலகக் குழுவும் இரண்டாமிடத்தினை வவுனியா வடக்கு பிரதேச செயலகக் குழுவும் மூன்றாமிடத்தினை வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலகக் குழுவும் பெற்றுக்கொண்டன.

இறுதியில் கயிறிழுத்தல் நிகழ்வும் அத்துடன் உத்தியோகத்தருக்கான .சங்கீதக் கதிரை நிகழ்ச்சியும் நடைபெற்று பின் பரிசில் வழங்கும் நிகழ்வும் நடைபெற்று இனிதே நிறைவேறியது.

1 IMG_1355 IMG_1383 IMG_1387 IMG_1398 IMG_1411 IMG_1421 IMG_1430 IMG_1470 IMG_20160618_181745

வவுனியா நெளுக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி!!(இரண்டாம் இணைப்பு)

Nelukkulam Accident

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நேற்று (18.06.2016) இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

படுகாயமடைந்த நாதன் வனஜா என்ற 35 வயது குடும்பப்பெண் சுயநினைவு அற்ற நிலையில் இருந்துள்ள போதும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நெளுக்குளம் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த மகேந்திரா வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டியை தூக்கி எறிந்ததில் குடும்பப்பெண் படுகாயமடைந்ததுடன் ஸ்கூட்டி, மகேந்திரா வாகனத்துக்குள் அகப்பட்டு மின் கம்பத்துடன் மோதியே நின்றுள்ளது.

இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மரணத்திற்குப் பிறகும் ஜூலியானா என்றொரு தேவதை வாழ்கிறாள் : நெஞ்சை உருக்கும் சிறுமியின் கதை!!

juli

சராசரியான நான்கு வயது குழந்தைகளுக்கு பிறப்பு மற்றும் இறப்பு பற்றின அடிப்படை புரிதல் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

ஆனால் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்காவை சேர்ந்த ஐந்து வயது ஜூலியானா பலனளிக்காத சிகிச்சையை மேற்கொண்டு ஏற்றுக்கொள்ள விரும்பாமல் தன் இறப்பை தானே தீர்மானித்த நிகழ்வு பலரை சோகத்தில் ஆழ்த்தியதோடு தீரா நோய் கொண்ட குழந்தைகளின் பெற்றோர் துயரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டனை சேர்ந்த ஜூலியானா சிறு குழந்தையாய் இருந்த போதே Charcot-Marie-Tooth எனப்படும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய் தாக்கப்படுபவர்களின் நரம்புகள் முழுமையாகப் பாதிக்கப்படுவதோடு தசைகளையும் மெல்ல மெல்ல பாதிக்கும்.

நோயின் கடைசி கட்டத்தை எட்டியிருந்த ஜூலியானாவிற்கு பல பிரச்சினைகள் ஏற்பட தொடங்கின. உணவை மெல்ல மற்றும் முழுங்க செயல்படும் திசுக்களை இந்நோய் கடுமையாகப் பாதித்தது.

மேலும் ஜூலியானாவின் நுரையீரலையும் பாதிக்க தொடங்கி இருந்தது. இவருக்கு அடிக்கடி நுரையீரலில் அதிகமான சளி படிந்து நிமோனியாவும் தாக்கி வந்தது.

ஒவ்வொரு முறை இப்படி ஆகும்போதும் ஒரு டியூப்பை மூக்கின் வழியே தொண்டைக்குள் விட்டு நுரையீரல் வரை செலுத்தி ‘நேசோட்ரேக்கியல் ஸக்ஷனிங்’ எனப்படும் வலி மிகுந்த சிகிச்சை மூலம் நுரையீரலை சுத்தப்படுத்த வேண்டியிருக்கும்.

பெரியவர்களாலே பொறுத்துக்கொள்ள முடியாத வலி கொடுக்கும் இந்த சிகிச்சையை ஜூலியான எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாய் பொறுத்துக் கொள்வார். காரணம், கத்தி கூச்சல் போடும் அளவுக்கு கூட அவளது உடலில் சத்து இல்லாமல் இருந்தது தான்.

நாட்கள் செல்ல செல்ல ஜூலியானாவின் உடல் நிலை மோசமானது. மூச்சை உள்ளிழுக்க சிரமப்படும் போதெல்லாம் பெரிய ஆக்சிஜன் மாஸ்க் வைத்து சிகிச்சை பெற வேண்டி இருந்தது. ஒரு சராசரியான குழந்தை பருவம் ஜூலியானாவிற்கு கிடைக்காமலே போனது.

நிலைமை நாளுக்கு நாள் மோசமாகவே அக்டோபர் 2014ல் மருத்துவர்கள் ஜூலியானாவின் பெற்றோரை அழைத்து பேசினர்.

அடுத்த முறை ஜூலியானாவிற்கு உடல்நலம் குன்றும்போது அவளைக் காப்பாற்றுவது கடினம் என்றும், அப்படியே காப்பாற்றினாலும் பலவீனமடைந்த உடலுடன் வாழ்வதே ஒரு கடினமான போராட்டமாக மாறிவிடும் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

எனவே மிகவும் வலிமிகுந்த இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாமா அல்லது சிகிச்சை எதுவும் தராமல் ஜூலியானாவை வீட்டிலேயே வைத்து, அவள் எவ்வளவு நாட்கள் சிகிச்சை இல்லாமலே வாழ முடிகிறதோ அவ்வளவு நாட்கள் வீட்டிலேயே பார்த்துக்கொள்ளலாமா என்ற முடிவையும் ஜூலியானாவின் பெற்றோரையே எடுக்க சொல்லி இருக்கின்றனர்.

juli1

தன் குழந்தையின் நோய் குறித்தும், சிகிச்சை குறித்து அவர்கள் சேர்ந்து எடுத்த முடிவை குறித்து ஜூலியானாவின் தாய் மூன் ஒரு வலைப்பக்கம் தொடங்கி, பதிவு செய்ய தொடங்கினார்.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து மகள் ஜூலியானாவிடம் தான் பேசியவற்றை மூன் தன் வலைபக்கத்தில் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.

ஜூலியானா, அடுத்த முறை உடம்பு சரியில்லாமல் போனால் மருத்துவமனை போகணுமா வேண்டாம் மா சரி, மருத்துவமனை வேண்டாம். ஆனால் வீட்டிலேயே இருந்தால் உடல்நலம் இன்னும் மோசமாகும். கொஞ்ச நாட்களிலேயே சொர்க்கத்திற்கு போக வேண்டும். உனக்கு புரிகிறதா ஜூலியானா? சொர்க்கத்திற்கு போகும் முன் இறப்பை சந்திக்க நேரிடும்.

ம்ம் . புரிகிறது. பரவாயில்லை. அப்படியென்றால் இப்போதைக்கு நீ மட்டும் தனியாக தான் சொர்க்கம் செல்ல முடியும். அம்மா சில வருஷங்கள் கழித்து பின்னால் தான் வருவேன் பரவாயில்லையா?

சொர்க்கத்தில் யாராவது இருப்பார்களா? நான் தனியாக இருக்க மாட்டேனே? இல்லை. நீ தனியாக இருக்க மாட்டாய். அம்மா..சில பேர் என்னை போல சீக்கிரமே சொர்க்கம் சென்று விடுவார்களா?

ஆம் ஜூலியானா. யாருக்குமே தெரியாது. யார் எப்போது எப்படி சொர்க்கம் செல்ல போகிறார்கள் என்று (தன் தம்பியை காட்டி) அலெக்ஸ்ஸும் என் கூட சொர்க்கத்திற்கு வருவானா? இல்லை ஜூலியானா. அனைவரும் தனித்தனியாக தான் சொர்க்கம் செல்ல முடியும் . உனக்கு பயமாக இருக்கிறதா? பயமா? இல்லை அம்மா. சொர்க்கம் பிடிக்கும். ஆனால் சாக பயமாக இருக்கிறது.

இவ்வாறான தன் மகளுடன் நடந்த உரையாடல்களை மூன் பதிவு செய்ய தொடங்கிய முதலே ஊடகங்களின் கவனம் ஜூலியானாவின் மீதும் அவளின் நிலை மீதும் விழுந்தது. நாடு முழுக்க இந்த பதிவுகள் பகிரப்பட்டன.

juli4

ஜூலியானாவின் கதை ஆவணப் பதிவுகளாக்கப்பட்டன. பலரும் ஜூலியானாவிற்காக பிராத்தனை செய்து கொண்டனர்.

ஜூலியானாவின் பெற்றோர் தொடர்ந்து தன் மகளிடம் பேசி அவர்களால் முடிந்த வரை இறப்பு பற்றின புரிதலை அவளுக்கு ஏற்படுத்தி வந்துள்ளனர்.

அதன் விளைவாக, அடுத்த முறை நோய் காரணமாக உடல்நிலை குன்றும் போது மருத்துவமனை செல்ல கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர் ஜூலியானாவும் அவள் பெற்றோரும். இந்நிலையில் நோயின் தீவிரத்தால் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூலியானாவின் உயிர் பிரிந்தது.

இதன் பிறகு, சின்ன குழந்தையின் பேச்சை கேட்டுக் கொண்டு சிகிச்சை அளிக்காமல் இருந்தது முட்டாள்தனம் என்று ஒரு பிரிவினரும், ‘ஒவ்வொரு முறையும் குழாயை உள்ளே விட்டு நுரையீரலை சுத்தப்படுத்தும் வலி என்னவென்று அனுபவித்திருந்த ஜூலியானா தன் இறப்பை குறித்த முடிவை எடுத்தது சரி’ எனவும் ஒரு பிரிவினரும் இந்த நிகழ்வை குறித்து கருத்துக்களை பகிரத் தொடங்கினர்.

இது குறித்து ஜூலியானாவின் தாய் மூன் தனது வலைப்பக்கத்தில் மிகவும் உருக்கமாக இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

ஒரு குழந்தையைக் காப்பாற்ற தேவையான அனைத்தையும் நாங்கள் செய்யவில்லையோ எனும் ஆதங்கத்தில் பலர் எங்கள் முடிவை விவாதிப்பது புரிகிறது.

ஆனால் நிச்சயம் குணப்படுத்த முடியாது என்று தெரிந்த பின்னர் குழந்தை ஒவ்வொரு நாளும் சிகிச்சையால் நலிவடைந்து வேதனை அடைவதை கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு நாங்கள் எடுத்த முடிவு எவ்வளவு மேலானது என்பது புரியும்.

மேலும் ஜூலியானாவின் விருப்பமும் இதுவே. எங்கள் கதையை நாங்கள் பகிர்ந்து கொள்ள காரணம், தீரா நோய்களுடைய குழந்தைகளின் பெற்றோர்களின் மனவேதனையை உலகிற்கு புரியவைக்கவே.

ஜூலியானாவின் இறப்பு குறித்து அவளின் தாய் மூன் உருக்கமாக இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.“எங்கள் தேவதை ஜூலியானா அவள் விருப்பப்பட்டது போலவே இன்று சொர்க்கத்திற்கு சென்று விட்டாள்.

நான் சொல்ல முடியாத சோகத்தில் இருந்தாலும் நன்றியுணர்வுடனே இருக்கிறேன். என்னை நம்பி இந்த அழகான தேவதையை எனக்கு பரிசளித்த கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொள்கிறேன்.

அவளோடு வாழ்ந்த இந்த அற்புதமான ஐந்து வருடங்களின் நினைவே போதும். இப்போது அவள் விடுதலை பெற்று விட்டாள்.

ஜூலியானா என்றொரு தேவதை வாழ்ந்தாள். அவள் பலரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றினாள்.
சின்னஞ்சிறிய அவளின் கைகள் அளித்த கதகதப்பு, அவளின் முத்தங்கள் தந்த மகிழ்ச்சி என்றும் அழியாது.

அவள் காதலை காதலித்தாள். எங்கள் எல்லோர் மீதும் காதலையும் பரிவையும் பொழிந்தாள். அவளை மறந்து விடாதீர்கள்.

ஜூலியானா என்றொரு தேவதை வாழ்ந்தாள்!.

– விகடன்-

1.5 மீட்டர் நீளமுடைய இருப்புக் கம்பி தலையைத் துளைத்து வெளியேறியும் உயிர் பிழைத்த நபர்!!

Iron Rod

கட்டுமானப் பணியின்போது உயரத்திலிருந்து வீழ்ந்ததில், உடலுக்குள் 1.5 மீட்டர் நீளமுடைய இரும்புக் கம்பி பாய்ந்து தலை வழியாக வெளியேறியும் 46 வயது சீனத் தொழிலாளி அதிசயமாக உயிர் பிழைத்துள்ளார்.

சீனாவின் ஷான்டாங் பகுதியில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஷாங் என்பவர், 5 மீட்டர் உயரத்திலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை தவறி வீழ்ந்துள்ளார். அவர் வீழ்ந்த இடத்தில் இருந்த 1.5 மீட்டர் இரும்புக் கம்பி அவரது உடலுக்குள் பாய்ந்தது.

உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர், ஷாங்கின் அடி வயிற்றில் பாய்ந்து தலை வழியாக வெளியேறியிருந்த கம்பியை கட்டுமானப் பகுதியிலிருந்து வெட்டியெடுத்து, அந்தக் கம்பியுடன் அவரை மருத்துமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அந்த மருத்துவமனையில், 9 துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் 7 மணி நேரம் போராடி அந்தக் கம்பியை ஷாங்கின் உடலிலிருந்து வெளியே எடுத்தனர்.

இதுகுறித்து சத்திர சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் கூறியிருப்பதாவது,

”ஷாங் சந்தித்த விபத்து, மிக மிக அபூர்வமானதாகும். அவரது உடலுக்குள் பாய்ந்த கம்பி, இதயம், மூளைக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய், ஈரல், மண்டைப் பகுதி, தொண்டை ஆகிய உயிர் ஆதார உறுப்புகளை மிக நெருக்கத்தில் கடந்து சென்றுள்ளது. எனினும், அந்த உறுப்புகளை கம்பி துளைக்கவில்லை.

முக்கிய உறுப்புகளில் ஒன்றை சிதைத்திருந்தால் கூட அவர் உயிர் பிழைத்திருக்க முடியாது.

மேலும், மிகவும் சிக்கலான அந்த சத்திர சிகிச்சையில் சின்னஞ்சிறிய தவறு ஏற்பட்டிருந்தால் கூட அது அவரது உயிருக்கு ஆபத்தாகியிருக்கும். எனினும், 7 மணி நேரம் போராடி மருத்துவர்கள் அந்த சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.”

முக்கியமான உறுப்புகள் சேதமடைந்திருக்காவிட்டாலும், ஷாங்குக்கு ஏற்பட்ட காயம் மிகப் பெரியது. அவர் திடகாத்திரமானவராக இருந்திருக்காவிட்டால் அந்தக் காயம் காரணமாகவே அவர் இறந்திருப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்திர சிகிச்சைக்குப் பிறகு தற்போது ஷாங்கின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனினும், கிருமித் தொற்று ஏற்பட்டு அவரது உடல் நிலை மோசமடைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால், அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பின்கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் உள்ளவர்களை சீர்திருத்தும் புதிய முயற்சியில் பேஸ்புக்!!

Facebook Sucide Previntion

தற்கொலை எண்ணம் உள்ளவர்களை காப்பாற்ற பேஸ்புக் நிறுவனம் முன்வந்துள்ளது, அதன்படி பேஸ்புக் இணையதளம் தற்கொலை தடுப்புக் கருவியை உலகம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது.

National Suicide Prevention Lifeline, Save.org ஆகிய அமைப்புகளின் உதவியுடன் பேஸ்புக் இணையதளம் இந்த கருவியை உருவாக்கியுள்ளது.

இந்த தற்கொலைத் தடுப்புக் கருவி அனைத்து மொழிகளிலும் கிடைக்கப்பெறும் யாரேனும் துன்பத்தில் தற்கொலை செய்து கொள்ளும் வகையில் பதிவுகளை போஸ்ட் செய்திருந்தால் அவருடைய நண்பர்கள் அல்லது அந்த பதிவை பார்ப்பவர்கள் இந்த கருவிக்கு தெரியப்படுத்தலாம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கான மனரீதியிலான ஆலோசனைகள், உதவிகள் மற்றும் நண்பர்களுடன் இணைத்தல் போன்ற பல வகையான உதவிகளைச் செய்வதற்காக பேஸ்புக் நிறுவனம் குழுக்களை அமைத்துள்ளது.

பிச்சை எடுப்பதற்காக பேரனை கடத்திய தாத்தா!!

Kidnapped

அனுராதபுரம் பிரதேசத்தில் பிச்சை எடுப்பதற்காக தன் பேரப்பிள்ளையை கடத்திச்சென்ற தாத்தாவை அனுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொசன் போயா தினத்தை முன்னிட்டு பிச்சை எடுப்பதற்காகவே குறித்த சிறுவனைதாத்தா கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனை பிச்சை எடுக்க அழைத்துச் செல்வதற்காக பல முறை சிறுவனின் தந்தையிடம் கூறியுள்ளார்.

ஆனால் சிறுவனின் தந்தை இதற்கு மறுத்ததன் காரணமாகவே யாரும் இல்லாதநேரமாக பார்த்து கடத்திச் சென்றுள்ளதாகபொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுவனின் பெற்றோர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமையவே சிறுவனைஇனங்கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை நீதிமன்றம் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்த இருப்பதாக பொலிஸார்கூறியுள்ளனர்.

தனுஷூடன் பகையை வளர்த்துக் கொண்ட நடிகர்!!

Danush

தனுஷ் மிகவும் அமைதியானவர், எந்த பிரச்சனைகளிலும் சிக்காதவர். இவர் அடுத்து வடசென்னை படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தில் முதலில் இசைக்கு ஜி.வி.பிரகாஷை தான் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால், தனுஷ் ஜி.வி வேண்டாம் சந்தோஷ் நாரயணனை ஒப்பந்தம் செய்யுங்கள் என்றாராம்.

சில காலங்களாகவே தனுஷிற்கும், ஜி,விக்கும் பனிப்போர் நடந்து வருகிறது. அதிலும் ஒரு பத்திரிக்கையின் கருத்துக்கணிப்பில் தனுஷ் வென்றார். இதற்கு ஜி.வி உண்மையாகவே விஜய் தான் வென்றார் ஏன் இப்படி மாற்றி கொடுக்க வேண்டும் என கோபமாக கூற, இருவருக்குமிடையே பகை முற்றியுள்ளது.

பிரபல நடிகை வீட்டில் கொள்ளை!!

Vijayashanthi

தமிழ், தெலுங்கு பட உலகில் 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர், விஜயசாந்தி. பின்னர் அரசியலில் குதித்து எம்.பியாகி சினிமாவுக்கு முழுக்கு போட்டார். தற்போது ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள பங்களா வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

அரசியல் பணி காரணமாக விஜயசாந்தி வெளியில் சென்று இருந்த போது, அவரது வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. மர்ம மனிதர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

கொள்ளையர்கள், வீட்டில் இருந்த விலை உயர்ந்த வைர மோதிரம் மற்றும் தங்க சங்கிலி உள்ளிட்ட நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

கொள்ளை போன நகைகளின் மதிப்பு பல இலட்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து விஜயசாந்தியின் சகோதரர் பஞ்சாரா ஹில்ஸ் பொலிசில் புகார் செய்தார். பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

விமான நிலையத்தில் பொருட்களை சேதப்படுத்தியவருக்கு வந்த சிக்கல்!!

Airport

கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் அலுவலகத்திற்கு சேதம் ஏற்படுத்திய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று துபாய் நோக்கி செல்ல வந்த அவர், அலுவலக அதிகாரிகளுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, அங்கிருந்த பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளார்.

இதேவேளை சந்தேகநபர் காயமடைந்திருந்தமையால், அவரை பொலிஸார் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

முகப்புத்தகத்தில் சாதனை படைத்த ஜனாதிபதி மைத்திரி!!

Maithiri

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ முகப்புத்தக கணக்குஆரம்பித்து 18 மாதத்திற்குள் 1 மில்லியன் விருப்புகளை(likes) தாண்டியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ முகப்புத்தக கணக்கில் உள்ளவிருப்புகளை எட்ட 100 எண்ணிக்கையான விருப்புக்களே உள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரியின் கணக்கு ஆரம்பிப்பதற்கு பல வருடங்களுக்கு முன்னரே மகிந்தவின்கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன 2014ம் ஆண்டே தன் உத்தியோகபூர்வ முகப்புத்தக கணக்கை ஆரம்பித்துள்ளார்.

இதேவேளை நாமல் ராஜபக்சவின் கணக்கில் 7 லட்சத்து 84 ஆயிரம்விருப்புகளும், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கணக்கில் அதிகளவான 5 லட்சம் விருப்புகளும்காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.