தந்தையர் தினத்தில் மகளின் கன்னத்தில் சூடு வைத்த குடிகார தந்தை!!

father-beating-child
கோவை மாவட்டத்தில் 8 வயது மகள் கன்னத்தில் சூடு வைத்த குடிகார தந்தையை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.கோவை மாவட்டம், நெகமம் அருகிலுள்ள வலசுபாளையத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ்- சுபா தம்பதி. இவர்களுக்கு 8 வயதில் காயத்ரி என்ற மகள் உள்ளார். காயத்ரி அரசுப் பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கூலித்தொழிலாளியான கோவிந்தராஜ், குடித்துவிட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது வீட்டில், ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த தனது மகள் காயத்ரியை எழுப்பியுள்ளார். ஆனால் காயத்ரி எழுந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் மகளின் இரு கன்னங்களிலும் சூடு வைத்துள்ளார்.

இதனால் காயத்ரிக்கு பலத்த தீ காயம் ஏற்பட, தாய் சுபா அந்த சிறுமியை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.அப்போது மருத்துவமனையில் இருந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் கோவிந்தராஜை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கோழித் திருடனுக்கு கோப்பி : தெற்கில் இடம்பெற்ற நகைப்புச்சம்பவம்!!

warm cup of ciffee

வீடொன்றில் கோழி திருடச்சென்ற து கால் தவறி கிணற்றில் விழுந்த நபர் திருடனென்பதை அறியாது காப்பாற்றிய சம்பவம் தென் பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபர் கோழிகளை திருடி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டவர்.

இதனாலேயே அப்பகுதியில் அவர் கோழி திருடனென அனைவராலும் அழைக்கப்பட்டு வந்துள்ளார்.குறித்த நபர் சில தினங்களாக திருடுவதை விட்டிருந்த நிலையில், ஒரு நாள் இரவு வேளையில் கோழியொன்றை திருடுவதற்காக வீடொன்றிற்குள் சென்றுள்ளார்.

இதன் போது அவ்வீட்டிலுள்ள நாய் குரைத்துள்ளதையடுத்து பயந்து போன குறித்த நபர் வேகமாக ஓட ஆரம்பித்துள்ளார்.பயந்து ஓடியமையினால் கால் இடரி கிணற்றில் விழுந்துள்ளார்.கிணற்றில் விழுந்த குறித்த நபர் தன்னை காப்பாற்றுமாறு கத்தியுள்ளார்.குறித்த சத்தத்தால் வீட்டிலிருந்த அனைவரும் கிணற்றுப் பகுதிக்கு வந்துள்ளனர்.

இதேவேளை, குறித்த நபர் திருடிய கோழியை நீரிற்குள் அமிழ்த்தியதுடன் தான் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது பொலிஸார் துரத்தியதாகவும் அதனாலேயே தான் கிணற்றில் தவறி விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார். குறித்த நபரின் வார்த்தைகளை நம்பிய வீட்டினர் திருடனை வெளியெடுத்துள்ளதோடு மாற்று உடைகளையும் வழங்கி சூடாக பருகுவதற்கு கோப்பியும் வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதன்படி, சில நாட்களுக்குப் பின் தண்ணீரெடுப்பதற்காக கிணற்றிற்கு குறித்த வீட்டுப்பெண் சென்ற போது கோழி மிதந்த வண்ணம் இருந்துள்ளது.அதிர்ச்சியடைந்த குறித்த பெண் தனது கணவனை அழைத்து காண்பித்துள்ளார். குறித்த நபர் கோழியை திருடவே வந்துள்ளாரென்பதை அறிந்து ஆத்திரமடைந்த அவர்கள் குறித்த நபரை தீவிரமாக தேடிவந்துள்ளனர்.எனினும் குறித்த நபரை அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.

 

வீட்டின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி!!

1 (72)

அம்பாறை – பொத்துவில் – ஹிதயாபுரம் பிரதேசத்தில் வீடொன்றின் தடுப்புச்சுவர் உடைந்து விழுந்ததில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்று மதியம் இடம் பெற்றதாக ஹிதயாபுர பொலிஸார் கூறினார்.

இந்த வீட்டின் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர் இடிந்துசிறுவனின் மீது விழுந்தமையினால் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சுவர் மீது தொடர்ச்சியாக சிறுவன் ஏறி விளையாடிக்கொண்டு இருந்தமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அபிவிருத்தி செய்யப்படவுள்ள பலாலி விமான நிலையம்!!

colombo airport

பலாலி விமான நிலையமானது அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாவனையில் இல்லாமல் இருக்கும் பலாலி விமான நிலையத்தினை மேலும் 26 ஹெக்டர் நிலப்பரப்பின் மூலம் விரிவுபடுத்தி அதனை அபிவிருத்தி செய்வதற்கு சிவில் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அபிவிருத்திக்காக 750 மில்லியன் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலா பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கல்பிட்டி பிரதேசத்தின் சுற்றுலா வியாபாரத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

உலக கராத்தே சம்பியன் போட்டியில் ஈழச் சிறுமி சாதனை!!

625.0.560.320.160.600.053.800.668.160.90
அனைத்து வயதினருக்குமான ஆறாவது உலக கராத்தே சம்பியன் போட்டியானது அயர்லாந்து நாட்டில் நேற்று (19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் புலம் பெயர்ந்து வாழும் சிவகுமார் அனுசா தம்பதிகளின் புதல்வி செல்வி அகல்யா பங்குபற்றி இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அகல்யா சிறு வயதிலிருந்தே கராத்தே கலையில் ஆர்வமுடன் செயற்பட்டுவரும் அவர் தாயகத்திலும் தற்பொழுது பிரித்தானியா லண்டனிலும் பலபோட்டிகளில் பங்குபற்றி பல பதக்கங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்கையின் இழப்பைத் தாங்க முடியாமல் தீயில் குதித்த அண்ணன்!!

MISAWA AIR BASE, Japan-- A fire fighter from the 35th Civil Engineering Squadron works to put out a blaze on an aircraft fire trainer during fire prevention week here on Oct. 9, 2007. The 35th Civil Engineering Squadron annually demonstrates fire fighting procedures for Misawa residents. (U.S. Air Force photo by Senior Airman Laura R. McFarlane)(RELEASED)

விழுப்புரம் மாவட்டத்தில் தங்கை இறந்த சோகம் தாங்கிகொள்ள முடியாமல் அண்ணன் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கெங்கராம்பாளையத்தை சேர்ந்த குமார்(26) மற்றும் குமாரி ஆகிய இருவரும் உடன்பிறந்தவர்கள் ஆவார். தனது தங்கை குமாரி மீது குமார் அதிக அன்பு கொண்டவர்

குமாரிக்கு திருமணம் ஆகி தனது கணவருடன் தனியாக வசித்து வந்துள்ளார், இந்நிலையில் குமாரிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, இதை அறிந்த குமார், அவரை பல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் குமாரி திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார், இதுபற்றி அறிந்ததும் தனது குடும்பத்தினருடன் நல்லூர் பாளையத்துக்கு வந்த குமார், தங்கையின் உடலை பார்த்து கதறி அழுதார்.

குமாரியின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்தன. குமாரியின் உடலை வீட்டில் இருந்து மயானத்திற்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர். குமார் அழுதபடியே உடன் நடந்து சென்றார். மயானத்தில் குமாரியின் உடலை தகனம் செய்தனர்.

அப்போது துக்கம் தாங்காமல் குமார் கதறியபடியே, தங்கை குமாரியின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் எரிந்த தீயில் குதித்தார். இதனால் அவர் மீது தீப்பற்றி எரிந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த உறவினர்கள், அவரை வெளியே இழுத்தனர். மேலும் அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் குமாரின் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கை இறந்த துக்கம் தாங்க முடியாமல், அவரது உடல் தகனம் செய்யப்பட்ட சிதையில் குதித்து அண்ணன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நஷ்டஈடு கோரும் நிதி அமைச்சர்!!

Ravi

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேரடி ஒளிப்பரப்பில் ரவி கருணாநாயக்கவிற்குஎதிராக அவதூறாக உரையாற்றியதன் காரணமாக இழப்பீடு கோரி ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் பியல் நிசாந்தவுக்கு நிதி அமைச்சர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் 2 பில்லியன் கோரியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 7ம் திகதி இடம் பெற்ற நேரடி தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில்கலந்து கொண்டு நிதி அமைச்சருக்கு எதிராக அவதூறான அறிக்கை ஒன்றை தாக்கல்செய்தமையினாலேயே இவர் மீது குற்றம்சுமத்தப்பபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவரினுடைய இந்த அறிக்கையின் காரணமாக அரசியல்வாதியான நிதி அமைச்சரின் புகழ்சேதமடைந்திருப்பதாகவும், இதற்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

நயினாதீவு கடலில் குளிக்கச் சென்ற சகோதரர்கள் உட்பட மூவர் சடலமாக மீட்பு!!

Dead

நயினாதீவு கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவரின் சடலங்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த தேவராசா பாருஜன் (வயது 23), தேசவராசா சஞ்சயன் (வயது 22) மற்றும் உதயகுமார் சசிதரன் (வயது 21) ஆகிய மூவருமே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

நயினாதீவு அம்மன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவிற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற இளைஞர்கள் கடலில் குளித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளனர்.

குளித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் மூவரையும் திடிரென காணாத நிலையில், மற்றைய இளைஞர்கள் அங்கிருந்த கடற்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் பிரகாரம், மூவரையும் கடற்படையினர் பல மணி நேரம் தேடிய போது, மாலை 4.00 மணியளவில் மூவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை நயினாதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா தாண்டிக்குளத்தில் ரயிலுடன் மோதி மாட்டுக் கன்று ஒன்று உயிரிழப்பு!!

 
இன்று (19.06.2016) மாலை 5.15 மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த அதிவேக ரயிலுடன் மோதி நாம்பன் கன்று ஒன்று உயிரிழந்துள்ளது.

இச் சம்பவம் வவுனியா தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அண்மையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

1 13472419_1748272125429119_1530445531_n 13479287_1748272222095776_1230580990_n 13479533_1748271985429133_2060091281_n

டோனியை ஓரங்கட்டிய கோலி : ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Dhoni-Kholi

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி விளம்பர படங்களில் நடிக்க ஒருநாள் ஒன்றிற்கு 1.5 கோடி சம்பளம் வாங்குகிறார்.

விராட் கோஹ்லி தற்போது பெரிய அளவிலான போமில் இருக்கிறார். களமிறங்கும் போட்டிகளில் எல்லாம் பட்டையை கிளப்பி வருகிறார்.

கிரிக்கெட் விளையாட்டு மூலம் கோடி கோடியாக சம்பாதித்து வரும் கோஹ்லி, விளம்பர படங்கள் மூலமும் கோடிகளை அள்ளுகிறார்.
13 தயாரிப்புக்களின் தூதுவராக உள்ள கோஹ்லி, விளம்பரங்கள் மூலம் 100 கோடி வரை சம்பாதிக்கிறார். இந்த 100 கோடி கிளப்பில் பெரிய பெரிய விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.

தற்போது விளம்பரப் படங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை இந்திய அணித்தலைவர் டோனியிடம் இருந்து கோஹ்லிக்கு சென்றுள்ளது.

கோஹ்லி விளம்பர படங்களில் நடிக்க நாள் ஒன்றுக்கு 1.5 கோடி வாங்குகிறார். அதே சமயம் டோனி விளம்பரங்களில் நடிக்க நாள் ஒன்றுக்கு 1 கோடி பெறுகிறார்.

போதை மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் : சிம்பாவேயில் இந்திய கிரிக்கெட் வீரர் கைது?

India

பாலியல் புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் சிம்பாவேயில் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய வீரர்கள் தங்கியுள்ள மெய்க்லஸ் ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அங்கிருந்து வெளியான பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் ஈடுபட்டுள்ளதை அப்பகுதி துணை பொலிஸ் கமிஷனர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால் வீரர்கள் யாரும் இவ்வாறு கைது செய்யப்படவில்லை என மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அந்த இந்திய வீரரை அடையாளம் காட்டியதாகவும், அவர் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், ஹோட்டல் வட்டாரங்கள் தெரிவித்தன.

மகனின் அவல நிலையைப் பார்த்து பார்வையற்றோருக்கான ஓவியம் வரையும் கருவியை உருவாக்கிய தந்தை!!

Dulip

பார்வையற்ற மகனின் அவல நிலையை கண்டு வருந்திய தந்தை, தன் மகனுக்காக பார்வையற்றோர் ஓவியம் வரையும் தொலைநோக்கு கருவியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானியான திலிப் பட்டே குறித்து கருவியை உருவாக்கியுள்ளார்.

“பிரக்யா“ என பெயர்வைக்கப்பட்டுள்ள குறித்த கருவி உலகின் முதல் பார்வையற்றோர் ஓவியம் வரைதல் சாதனமாக கருதப்படுகிறது. மேலும் பல தேசிய மற்றும் சர்வதேசஅடையாளத்தை வென்றுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் இஸ்ரோவில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் திலிப் பட் கூறுகையில், பார்வையற்றோர் படும் கஷ்டங்களை தான் மகனினால் தன் உணர்ந்ததாகவும்,

அவர்களின் வாழ்க்கை பிரெயில் ஆறு புள்ளிகள் அடங்கும், அதை என் இயந்திர பொறியியல் பின்னணி மூலம் மாற்ற நினைத்தேன். என் மகனுக்கு புவியியல் மற்றும் மொழி கற்றுக் கொடுக்கும் பணியில் தீவரமாக இறங்கினேன்.

பினனர், 1.5×1.5அடி மர பலகையில் வெல்க்ரோ ஒட்டினேன், கம்பளி நூல் வெளியிடும் வகையில் ஒரு பேனாவை வடிவமைத்தேன்,தொட்டுணரக்கூடிய வகையில் நுால் வெல்க்ரோவில் ஒட்டிக்கொள்ளும்.

ஒவியம் முழுமையாக முடிந்த பின்னர், பார்வையற்றோர் பேனாவின் உதவியுடன் நுாலை மீண்டும் உருட்டும் வகையில் வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மின்சாரம் உதவி இல்லாமல் இயங்கும் குறித்த கருவி பல பார்வையற்றோர் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

472 மகள்களிடமிருந்து தந்தையர் தினம் வாழ்த்து பெற்ற பெருமைக்குரிய மாமனிதர்!!

sawani

அகமதாபாத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு மகேஷ் சவானி என்னும் நபர், அவரது 472 திருமணமான மகள்களிடமிருந்து வாழ்த்துக்கள் பெற்றுள்ள சம்பவம் ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பெண்கள் அனைவரும் அவர்களின் உண்மையான தந்தை இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சவானி, அவர்களுக்கு தகப்பனாக இருந்ததுடன், கடந்த சில ஆண்டுகளாக அவர்களின் திருமணங்களை முன்நின்று நடத்தி வருகிறார்.

47 வயதான சவானி தனது சகோதரர் பத்து ஆண்டுகளுக்கு முன் இறந்த பிறகு, அவரது இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்ய வேண்டிருந்தது. இந்த நிகழ்வு அவரை தந்தை இழந்த பெண்கள் குறித்த சிந்திக்க வைத்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு முதல் தந்தையை இழந்த பெண்களுக்கு ஆதரவு தந்து, அவர்களின் திருமணங்களுகளை முன்நின்று நடத்தி வருகிறார் சவானி.

ரியால்டி, வைரம்,மற்றும் பள்ளிகள் ஆகிய நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபரான சவானி, எந்த மதத்தையும்,சாதியையும் சார்ந்தவர் அல்ல.

கடந்த 2016ம் ஆண்டு மட்டும், 216 பெண்களுக்கு அவர் திருமணம் செய்துவைத்துள்ளார்.

இதுகுறித்து சவானி கூறுகையில், கணவனை இழந்த ஒரு தாய் தனது மகளுக்கு திருமணம் செய்ய கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

அவரின் மகள்களில் ஒருவர் கூறியதாவது, சவானி அப்பா ஒரு தந்தையை விட சிறந்தவர், உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இவரை போன்றே ஒரு தந்தை கிடக்க வேண்டும் என வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

கான்ஜூரிங்-2 படத்தை பார்த்து உயிரிழந்த நபரின் உடலைக் காணவில்லை : அதிர்ச்சியில் பொலிஸ்!!

Conjuring2

கான்ஜூரிங்-2 திரைப்படத்தை பார்த்து மாரடைப்பால் உயிரிழந்தவரின் உடலை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாலசுப்ரமணியன் திரையரங்கில் கான்ஜூரிங்-2 படம் திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 17 ஆம் திகதி, படம் பார்த்த 60 வயது முதியவர் மாரடைப்பால் சுருண்டு விழுந்துள்ளார்.

திரையரங்கில் படம் பார்த்தவர்கள் அளித்த தகவலின் பேரில் 108 அவசரஊர்தி மூலம் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் உடன்வந்தவர்கள் உடலை ஆட்டோவில் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு இம்முதியவரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், இவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, இவரது உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஆனால், கொண்டு செல்லும் வழியில் இறந்துபோன இந்நபரின் உடலை காணவில்லை என பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிசார், இந்நபர் தங்கியிருந்த திருவண்ணாமலை ரமணா ஆசிரமம் எதிரே விசிறி சாமியார் மடத்தில் உள்ள அறை மற்றும் இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் முதியோர் இல்லங்களுக்கான தேவை அதிகரித்து வருகின்றது!!

Elders Homeமுதியோர் இல்லங்களுக்கான தேவை படிப்படியாக அதிகரித்து வருவதாக அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நடுத்தர வர்த்தக குடும்பங்களிடம் இருந்தே பெரும்பாலான கோரிக்கைகள் வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சனத்தொகை 1.8மில்லியனுக்கும் அதிகமாகும். இந்த நிலை 2025 ஆம் ஆண்டு 3மில்லியனாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆடம்பர முதியோர் இல்லங்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திஸாநாயக்க கூறியுள்ளார்.

நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள்)

 
இலங்கையின் புகழ்பெற்ற அம்மன் ஆலயமான நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ உயர்திருவிழாவின் ரதோற்சவம் இன்று (19.06.2016) ஞாற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

காலை 5.30 மணியளவில் அம்மனுக்கு அபிஷேகம் ஆரம்பமாகி 7 மணியளவில் வசந்தமண்டபப் பூசையுடன் உள்வீதி வலம்வந்த அம்மன் 9 மணியளவில் தேரேறி 11 மணியளவில் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தார்.

இத் தேர்த் திருவிழாவில் நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான ஒழுங்குகளை ஆலய பரிபாலன சபையினர் ஒழுங்கு செய்துள்ளனர்.

-கஜன்-

1 13407070_1236942579659026_5564088221172364729_n 13418727_1236899322996685_1201953813486443366_n 13423858_1236953726324578_1660014694127627095_n 13427900_1236904022996215_7080480158989483233_n 13428554_1236911256328825_7405216473241826132_n 13432361_1236899416330009_7914680037944311643_n 13435564_1236947926325158_8722816286804239083_n 13442179_1236943779658906_338915456560543412_n 13445391_1236911166328834_3572932821769852062_n 13445552_1236902682996349_4933781519163154553_n 13445648_1236898792996738_7556107185768465677_n 13450196_1236951786324772_5277775736368819497_n 13450226_1236913422995275_3892593047292894032_n 13450254_1236946732991944_5171037911337396785_n 13450884_1236904476329503_7072268195460340312_n 13466090_1236904616329489_5204761458581254425_n 13495143_1236900772996540_649316157889654082_n 13495155_1236904669662817_3270559263109539214_n 13501598_1236948486325102_6972058870570905618_n 13501659_1236911502995467_8074658763571936862_n