மஹியங்கனை பிரதேசத்தில் 9 வயது சிறுமியொருவர் துஷ்பிரயோகத்தின் பின்னர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் 33 வயதான 2 பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறித்த நபர் தொடர்பில் மேலும் அதிர்ச்சிகர தகவலொன்று வெளியாகியுள்ளது.
குறித்த நபர் சுமார் 15 வருடங்களின் முன்னர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் தண்டனை அனுபவித்தவர் என தெரியவந்துள்ளது. அதன்போதும் பாடசாலை மாணவியொருவரே துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் நகரத்தின் மேயர் 52 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ராஜஸ்தானில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது, இதில் பரத்பூர் மேயராக திகழ்ந்து வரும் சிவ சிங்(வயது-52) 44.83 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதுகுறித்து சிவசிங் கூறுயதாவது, மேயராக இருந்து தினமும் காலை, மாலை இரண்டு மணி நேரம் கடினமாக படித்தேன், 1971-72ம் ஆண்டு சொந்த பிரச்சனை காரணமாக பள்ளி படிப்பை நிறுத்தினேன்.
ஆனால், அனைவருக்கும் கல்வி மிக முக்கியம் என பின்னர் உணர்ந்தேன், சமீபத்தில் வெளிநாடு செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் என்னால் அங்கு ஆங்கிலத்தில் பேச முடியவில்லை, அதை மிக மோசமாக உணர்ந்தேன்.
மற்றொரு காரணம் புதிய சட்டத்தின் படி தேர்தலில் போட்டியிட அடிப்படை தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது, எனினும் தேர்தலில் போட்டியிட இது ஒரு உதவியாக இருக்கும் என கருதுகிறேன்.
மேலும் தேர்வில் நான் தோல்வியடைந்திருந்தால் மீண்டும் முயற்சி செய்திருப்பேன், தற்போது மேற்படிப்பை தொடர விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்த 78 வயதான ஷிவ் சரண் யாதவ், நம்பிக்கை தளராமல் 47வது முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வியடைந்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசியில் ‘செல்பி’ எடுப்பது தற்போது பிரபலம் ஆகிவிட்டது. சிலர் செல்பி எடுப்பதில் அதி தீவிரமாக உள்ளனர். அவர்களை எச்சரிக்கும் விதமாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது அடிக்கடி செல்பி எடுத்தால் உடலின் தோலில் பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதானவர் போன்ற தோற்றம் உருவாகும் என்றும் தோல் நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
செல்பி எடுக்கும் போது முகம் பாதிக்கப்படுகிறது. அதில் இருந்து வெளியாகும் நீல நிற ஒளி தோல் நலனை பாதிக்கும். அதே நேரத்தில் செல்போனில் இருந்து வெளியாகும் எலெக்ட்ரோ மேக்னடிக் கதிர்கள் டி.என். ஏ.வை பாதிக்கச் செய்து தோலில் சுருக்கத்தை ஏற்படுத்தி வயதானவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் எனவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். எனவே செல்பி பிரியர்களே அவதானமாக இருங்கள்.
தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவை மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தவர் நடிகர் பாண்டியராஜன். இவருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர்.
இதில் பிருத்விராஜ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடித்துவருகிறார். இந்நிலையில் மயிலாப்பூரில் குட்டி விமானத்தை பறக்க விட்ட நடிகர் பாண்டியராஜன் மகன் கைது பிரேமராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். பின் அவர் பொலிசாரின் விசாரணைக்குப் பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இவருக்கு 18 வயதாக இருக்கம்போது பெரிய சோகம் நடைபெற்றது.
18 வயதில் டெல்லி அணியில் இடம்பிடித்திருந்தார். அப்போது ரஞ்சி கோப்பையில் கர்நாடக அணிக்கெதிராக டெல்லி அணிக்காக கோலி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவரது தந்தை மாரடைப்பால் காலமானார். இந்த செய்தி அவருக்குச் சென்றது. இருந்தாலும் அப்பா இறந்த துக்கத்தை மனத்திற்குள் வைத்துக்கொண்டு போட்டியில் தொடர்ந்து விளையாடினார்.
அவரது தந்தை இளம்வயதில் காலமானது விராட் கோலியின் வாழக்கையை அப்படியே மாற்றியது. தந்தை இழந்து விட்டாரே என்று துவண்டு விடாமல் தனது விடா முயற்சியால் தான் எட்ட வேண்டிய சிகரத்தை அடைவதற்கு வீறுநடை போட்டார்.
தற்போது இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரர் என்ற பெயரோடு மட்டுமல்லாமல் இந்த தலைமுறையின் சிறந்த வீரர் என்ற பெருமையோடு திகழந்து வருகிறார்.
இன்று உலக முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தன்னுடைய தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள் கூறும் பாக்கியம் இல்லை என்றாலும், தந்தையுடன் இருக்கும் சிறு வயது போட்டோவை டுவிட்டரில் இணைத்து அனைத்து தந்தையர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
தந்தையுடன் இருக்கும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள விராட் கோலி ‘‘எனது தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள் என்று எப்படி என்னால் நேரடியாக சொல்ல முடியும். எனக்கு தெரிந்த வலிமையான மனிதர். அனைத்து தந்தையர்களுக்கும் நான் ‘ஹேப்பி பாதர்ஸ் டே’ வாழ்த்துக்கள் கூற விரும்புகிறேன். #pillarsofstrength.’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் அரசுக்கு சொந்தமான பெர்டா மினா என்ற எண்ணெய் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது புனித ரமலான் மாதத்தில் குர்ஆன் படிக்கும் வாகன ஓட்டிகளுக்கு தலா 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக போஸ்டர் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டது.
எனவே, தலைநகர் ஜகார்தாவில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் ஏராளமான வாகன ஓட்டிகள் நீண்ட கியூ வரிசையில் நிற்கின்றனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரார்த்தனை அறைக்கு சென்று புனித குர்ஆன் புத்தகத்தில் ஒரு பகுதியை படித்து விட்டு 2 லிட்டர் பெட்ரோல் பெற்றுச் செல்கின்றனர்.
ரமலான் மாதம் முழுவதும் குர்ஆன் வாசிப்பதன் மூலம் முழு நூலையும் படித்து முடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அத்துடன் வாகனங்களில் இலவசமாக பெட்ரோல் நிரப்ப முடிகிறது என்றும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். 25 கோடி மக்கள் தொகையுள்ள இந்தோனேசியாவில் 90 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதி காணியொன்றில் இருந்து நேற்றிரவு பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொக்குவில் பொலிஸ் காவலரனுக்கு அருகில் உள்ள குறித்த காணியில் வீடு கட்டுவதற்கு குழிகள் தோண்டியபோது பைகளில் சுற்றப்பட்ட நிலையில் இந்த ஆயுதங்கள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பதில் பொறுப்பதிகாரி அஜித் குணவர்த்தன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
ஆர்யா எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என போராடி வருகிறார். இதனால் இவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு முரட்டுத்தனமாக உடலை ஏற்றிவருகிறார்.
இந்த படத்தில் ஆர்யா காட்டுப்பகுதியில் வாழும் மக்களில் ஒருவராக நடிக்கிறார் என நாம் முன்பே செய்திகள் வெளியாகியிருந்தன..
இதற்காக இவர் தினமும் காலை 42 முட்டை வெள்ளை கருக்கள், 2 கிலோ சிக்கன் மற்றும் பழங்கள், அது மட்டுமில்லாமல் , உடற்பயிற்சி முடிந்தவுடன் ரெடி மேட் ப்ரோடீன் பவுடர் சாப்பிடுகின்றாராம்.
மின்சாரம் பயன்படுத்தாமல் அறையை குளிரூட்டும் எளிய முறையை பயன்படுத்தி இந்தியாவில் திரளானோர் பயன்பெற்று வருகின்றனர்.கோடையின் வெப்பத்தை தணிக்க பெரும்பாலான வசதி படைத்தவர்கள் மின்சார குளிரூட்டியை பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் அடித்தட்டு மக்களின் வசதிக்கு ஏற்றவகையில் மின்சாரம் இல்லாமல் அறையை குளிரூட்டும் எளியமுறையை Grameen Intel எனும் அமைப்பு ஒரு விளம்பர நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்து வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகிறது.
வங்கதேசத்தில் முதன்முறையாக இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வெற்றிகண்டுள்ள இந்த இரு நிறுவனங்களும் தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அடித்தட்டு மக்களின் தேவையை இனம்கண்டு இந்த குளிரூட்டியை நிறுவி வருகின்றனர்.வங்கதேசத்தில் மட்டும் இந்த அமைப்பால் 25,000 வீடுகளில் மின்சாரம் தேவையில்லாத குளிரூட்டி நிறுவப்பட்டுள்ளது. இதேப்போன்று இந்தியாவிலும் இதே அளவு எண்ணிக்கையிலான வீடுகளில் குளிரூட்டிகள் பயன்பாட்டில் உள்ளது.
இந்த சிறப்பு குளிரூட்டியை உருவாக்குவதற்கு தடிமனான கனரக அட்டையும் ஏராளமான பயன்படுத்தப்பட்ட குளிர்பான பாட்டில்களும் போதுமானது. முதலில் எந்த அறை சன்னலில் நாம் இந்த குளிரூட்டியை பயன்படுத்த இருக்கிறோமோ அந்த அளவிற்கு கனரக அட்டையை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் grid pattern முறையில் அந்த அட்டையில் பாட்டிலின் வாய்ப்பகுதியை இணைத்துக்கொள்ளும் வகையில் துவாரங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். பாட்டில்கள் அளவில் பெரிதாக இருத்தல் வேண்டும்.
இதனையடுத்து பாட்டில்கள்களின் பாதியை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும், கூடவே பாட்டில் மூடிகளின் மேற்பகுதியையும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். பின்னர் ஒவ்வொரு பாட்டிலாக அட்டையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள துவாரங்களில் பாட்டிலின் வாய்ப்பகுதியை மூடியுடன் இணைக்க வேண்டும். அடுத்த கட்டமாக பாட்டில்களின் உடற்பகுதி கொண்ட அமைப்பு முழுவதும் சன்னலின் வெளியே இருக்கும்படி அட்டையை சன்னலுடன் இணைக்க வேண்டும்.
இப்போது அறைக்குள்ளே சன்னலில் பாட்டில்களின் வாய்ப்பகுதி மட்டுமே தெரியும். இதனால் இந்த அமைப்பு வழியாக அதிக வெப்பம் கொண்ட வெளிக்காற்று ஒவ்வொரு பாட்டில் வழியாகவும் உள்ளே வரும், அப்போது அந்த பாட்டிலின் வாய்ப்பகுதி விரிவடைய முயற்சிப்பதால் உள்ளே வரும் காற்று குளிரடையும், இதனால் அறையும் 9 டிகிரி வரை குளிர்ச்சியடையும் என இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எஸ்.ஜே சூர்யா தமிழ் சினிமாவில் நடிகராக வெற்றிநடை போட்டு வருகிறார். இறைவி படத்தை தொடர்ந்து தமிழில் நிறைய படங்கள் நடித்து வருகிறார்.அதேசமயம் தெலுங்கிலும் பவன் கல்யாண் புதிய படத்தை இயக்க கமிட்டாகியிருந்தார். ஆனால் தற்போது எஸ்.ஜே. சூர்யா அப்படத்தில் இருந்து விலகியுள்ளார்.
காரணம் ஏ.ஆர். முருகதாஸ் மகேஷ் பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கும் படத்தில் எஸ்.ஜே. சூர்யா கமிட்டாகி இருப்பதால், தேதி பிரச்சனையால் இப்படத்தில் இருந்து விலகியுள்ளார்.அவருக்கு பதிலாக பவன் கல்யாண் படத்தை கோபாலா கோபாலா பட புகழ் டாலி இப்படத்தை இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள இளம் நாயகர்களில் முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ரஜினிமுருகன் படம் பாக்ஸ்ஆபிசில் நல்ல வசூலை பெற்றது.இப்படத்தில் இடம் பெற்ற என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா பாடலும் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. இது லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய வசனத்தை கிண்டல் செய்து தான் இந்த பாடல் உருவானது.
அதேபோல் தற்போது தனுஷ் மாரி படத்தில் பேசிய செஞ்சிடுவேன் என்ற வசனத்தையே கொஞ்சம் மாற்றி ரெமோ படத்தில் செஞ்சிட்டாளே என்று கீர்த்தி சுரேஷை பார்த்து பாடவுள்ளாராம்.ஜுலை 1ம் திகதி இந்த பாடல் வெளியாகவுள்ளதாம்.
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சமிந்த எரங்கா இதயநோய் காரணமாக இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணியில் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த எரங்காவும் இடம் பெற்றிருந்தார். நேற்று அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது போட்டியிலும் அவர் விளையாடினார்.
இந்நிலையில் எரங்கா இதய நோய் காரணமாக இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.இங்கிலாந்துக்கு எதிராக 2வது டெஸ்டில் பந்து வீசும்போது அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதனால் நாளை அவர் லாக்பரோக் யுனிவர்சிட்டியில் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த இருந்தார்.
ஏற்கனவே இலங்கை அணியில் போதிய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை என்று மேத்யூஸ் புலம்பி வரும் நிலையில், சமிந்தா எரங்காவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிப்பது இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 21ம் திகதி தொடங்குகிறது.
அரச வைத்தியசாலையின் பொறுப்பற்ற தன்மையால் சிறுவனின் உயிர் காவு கொள்ளப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நடைபெற்றுள்ளமை அப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளாந்தம் பல மில்லியன் ரூபா செலவில் இலசவமாக வழங்கப்படுகின்ற மருத்துவ சிகிச்சை முறையில், சில வைத்தியசாலைகளின் பொறுப்பற்ற தன்மை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
களுவாஞ்சிகுடி மாரியம்மன் வீதியை சேர்ந்த ஏழு வயது மாணவனான மேகநாதன் மோகவர்மன் காய்ச்சல் காரணமாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அண்மையில், அனுமதிக்கப்பட்டார்.
மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, ஒன்பது மணித்தியாலப் போராட்டத்தின் பின்னர் வைத்தியசாலையின் பொறுப்பற்ற தன்மையால் சிறுவனின் உயிர் காவுகொள்ளப்பட்டது.
இதனையடுத்து, பெற்றோர் தமது நியாயத்திற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சு உட்பட பல நீதி வழங்கும் அமைப்புக்களுக்கு தமது கோரிக்கை அடங்கிய மகஜரை அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இறுதியாக ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில், பெற்றோர் தமது முறைப்பாட்டை கடந்த வெள்ளிக்கிழமை பதிவு செய்துள்ளனர்.
குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எனது மகனுக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 11 ஆம் திகதி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டன.
மறுநாள் மகனை திரும்பவும் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது இரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை செய்து அன்று பிற்பகல் 4.00 மணியளவில் வைத்தியசாலை விடுதியில் அனுமதித்தனர்.
அதன்பின்னர் 14 ஆம் திகதி காலையில் காய்ச்சல் முற்றாக குணமடைந்து விட்டதாக கடமையில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
இருந்த போதிலும் அன்று, சுமார் நண்பகல் 12.00 மணியளவில் எனது மகன் வாந்தி எடுத்தான், வயிற்று நோவும் ஏற்பட்டது என அங்கு கடமையில் இருந்தவர்களுக்கு எமக்கு தெரியப்படுத்தினர்.
இதன்போது, ஸ்கேன் எடுக்க வேண்டும் எனக் கூறி 14 ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டி மூலம் அனுப்பி வைத்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்றடைந்ததும் அனுமதிக்கும் பிரிவில் இருந்த வைத்தியர் மகனின் நோய் நிலைமையினை அறியாது அவரது கருத்து நகைச்சுவையாக அமைந்தது.
இது என்னை மிகவும் கவலையடையச் செய்தது. பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து வாந்தி குறைவடைவதற்கு ஊசி போடப்பட்டன.
மீண்டும் வாந்தி வந்தது. அதனுடன் வயிற்று நோ உள்ளதாகவும் கூறினான். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இரவு 10.00 மணிக்கு 33 ஆம் விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.
மகனின் வேதனை தாங்க முடியாது கடமையிலிருந்த உத்தியோகத்தர்களிடம் எடுத்துக் கூறினேன். அதற்கு அவர்கள் கூறிய பதில் ஊசி போட்டிருக்கின்றோம். குணமடையும் எனவும் கூறினார்கள்.
மகனின் நிலைமையை உணர்ந்து பல தடவைகள் எடுத்துக்கூறிய போதிலும் கடமையில் இருந்த உத்தியோகத்தர்கள் பொறுப்பற்ற தன்மையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.
அவதியுற்ற நிலையில் மகன் 15 ஆம் திகதி காலை 4.00 மணியளவில் டொக்டர் என்னைக் காப்பாற்றுங்கள் என்று சத்தமிட்டுக் கத்தினான். அதற்கு உத்தியோகத்தர்கள், பெரிய ஐயா காலையில் வந்து பார்ப்பார் என்று பதிலளித்தனர்.
பின்னர் 5.30 மணியளவில் எனது மகன் துடித்துப் புரண்டு சோர்வடைந்தான். அந்த நிலையில் கடமையில் இருந்த தாதிகளிடம் ஓடிச் சென்று சம்பவத்தினைக் கூறினேன்.
அவர்கள் பக்கத்துவிடுதி வைத்தியரை அழைத்து வந்தனர். நிலைமை மோசமான போது அங்கும் இங்கும் அதை எடு, இதை எடு என மாறிமாறி ஓடினார்களே தவிர அவசரத்திற்கு பொருத்துவதற்கான எந்தவிதமான கருவிகளும் தயார் நிலையில் இருக்க வில்லை.
அதிகாலை 5.45 மணியளவில் அப்போது இருந்த வைத்தியர் யாருக்கோ தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். ஒரிரு நிமிடங்கள் வரை ஏதோ வயர்களை பொருத்த முற்பட்டனர்.
பின் ஒருவர் முகத்தினை ஒருவர் பார்த்தனர் பொருத்த முயன்ற அச் செயலை கைவிட்டனர். அப்போது எனது மகன் உயிர் பிரிந்ததை அறிந்து கொண்டேன்.
இதுதான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேரடியாக அனுபவித்த சம்பவம். வைத்தியர்களின் கவலையீனமே எனது மகனின் மரணத்திற்கு காரணம். எனது மகனின் மரணத்திற்கு அன்றை தினம் கடமையில் இருந்த வைத்தியரும் தாதிமார்களும் பதில் கூறியே ஆக வேண்டும்.
மனித உரிமைகள் ஆணைக்குழு மூலமாக இதற்கு நீதியான தீர்வினை பெற்றுத்தருவதுடன் எதிர் காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் யாருக்கும் இடம் பெறக் கூடாது என உயிரழந்த மாணவனின் பெற்றோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுகாதார அமைச்சுக்கு சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – தென்மராட்சி – வரணி பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் மற்றும் அதிபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும் 11 வயதுடைய சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நன்னடத்தைப்பிரிவினரிடமும், கொடிகாமம் பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனையடுத்துஇ சிறுவர் நன்னடத்தைப் பிரிவினரும், கொடிகாமம் பொலிஸாரும் இணைந்து விசாரணையை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணையை அடுத்து, பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த சந்தேகத்தின்பேரில் ஆசிரியர் ஒருவர் மற்றும் அதனை மறைத்த பாடசாலையின் அதிபர், உப அதிபர் உட்பட ஜவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் அவரது வாசல்தலத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது சந்தேக நபர்கள் ஜவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் விமான பயணத்தின் போது தனியாக பயணித்த சிறுமிக்கு தொடர்ந்து தொல்லை தந்து வந்த நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.டல்லாஸ் விமான நிலையத்தில் இருந்து போர்ட்லேண்ட் செல்லும் விமானத்தில் கடந்த புதன் அன்று இச்சம்பவம் நடந்துள்ளது.
அந்த விமானத்தில் குறிப்பிட்ட சிறுமி பெற்றோர் துணையின்றி தனியாக பயணித்துள்ளார். அவரது அருகாமையில் வந்து அமர்ந்த 26 வயது சாட் கேம்ப் என்பவர் அந்த 13 வயது சிறுமிக்கு தொடர்ந்து தொல்லை தர துவங்கியுள்ளார்.அச்சிறுமி மீது சாய்ந்து கொண்டு அவரது தொடை மீது 3 முறை கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முழங்கையால் அடிக்கடி சிறுமியை சீண்டவும் செய்துள்ளார்.
இதனிடையே விமான பணிப்பெண் ஒருவர் சிறுமியின் கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீர் கண்டு அதிர்ச்சியுற்று அந்த இளைஞனை வேறு இருக்கையில் அமரும்படி கேட்டுள்ளார். இதனையடுத்து ஒரேகான் (Oregon) விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் எப்.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் பொலிசாரால் பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டின் மீது குறிப்பிட்ட அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற சிறுமியின் பெற்றோர் விமான நிறுவனம் மீது உரிமையியல் வழக்கு தொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த விமான நிறுவனத்தின் கொள்கைப்படி, பெற்றோர் துணையில்லாத 5-17 வயதுடைய சிறுவர்களுக்கு பயண கட்டணத்தில் மேலதிகமாக 150 டொலர்கள் தரவேண்டும். பணம் அதிகம் பெற்றிருந்தும் தமது மகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அந்த நிறுவனம் தவறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் கைது செய்துள்ள கேம்ப் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் ஓடும் வண்டியின் சக்கரத்திற்குள் காலை விட்ட குழந்தையின் பாதி உடல் சக்கரத்திற்குள் சிக்கியதால் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளது. ஆனால், பெற்றோரோ எவ்வித சலனமும் இன்றி நடந்துகொண்டது, சுற்றியிருந்தவர்களை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது, மக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் மிக வேகமாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் தனது குழந்தையை வைத்துக்கொண்டு தாய் அமர்ந்திருந்துள்ளார்.
குழந்தையை சரியான முறையில் பிடிக்காத காரணத்தால், குழந்தை கையில் இருந்து தவறி சக்கரத்திற்குள் காலை விட்டுள்ளது, சக்கரம் ஒரு சுழன்று சுழன்றதில் அதன் உடல்பகுதி பாதி சிக்கியுள்ளது.
இதனைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, உதவிக்கு அருகில் இருப்பவர்களை அழைத்துள்ளனர், குழந்தையை காப்பாற்ற 8 பேர் உதவி செய்துள்ளனர், அதில் ஒருவர் பேனர் மற்றும் சில மெக்கானிக் கருவிகளை பயன்படுத்தி குழந்தையை வெளியே எடுத்துள்ளார்.
சுற்றியிருந்தவர்கள் கூட அச்சத்தில் அலறியுள்ளனர், ஆனால் பெற்றோரோ எவ்வித சத்தத்தையும் எழுப்பாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தனர், குழந்தையை எந்த வேகத்தில் கீழே போட்டார்களோ, அதே வேகத்தில் குழந்தையை வாங்கிகொண்டு, அதன் அழுகையை கூட சமாதானப்படுத்தாமல் சென்றுவிட்டனர். இது சுற்றியிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.