அகதிகள் படகை கடலுக்குள் தள்ளும் இந்தோனேசியாவின் முயற்சி மீண்டும் தோல்வி!!

2

இந்தோனேசியாவில் தரைதட்டியுள்ள, இலங்கைத் தமிழ் அகதிகள் படகை மீண்டும் ஆழ்கடலுக்குள் தள்ளிச் செல்வதற்கு நேற்றுக்காலை முன்னெடுக்கப்பட்ட முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் செல்லும் வழியில் அகதிகள் படகு இயந்திரக் கோளாறினால், இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில், தரைதட்டியது.

ஒரு வாரகாலமாக படகில் இருந்து இறங்க அகதிகளுக்கு அனுமதி மறுத்து வந்த இந்தோனேசிய அதிகாரிகள், அனைத்துலக அழுத்தங்களை அடுத்து கடந்த சனிக்கிழமை, அகதிகளை தரையிறங்க அனுமதித்தனர்.

இதையடுத்து, ஆச்சே மாகாணத்தின் லோக்நா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில், 44 அகதிகளும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்திக்க நேற்று அகதிகளுக்கான ஐ.நா முகவரமைப்பு அதிகாரிகளுக்கு முதல்முறையாக அனுமதி அளிக்கப்பட்டது.

தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ள அகதிகள், தாம் ஆளுக்கு ஒன்றரை இலட்சம் ரூபா கொடுத்து படகில் பயணம் மேற்கொண்டதாகவும், படகின் கப்டன் தப்பிச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளனர். அதேவேளை, தாம் தொடர்ந்து அவுஸ்ரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், பழுதடைந்துள்ள படகைத் திருத்தி, அகதிகளை மீண்டும் ஆழ்கடலுக்குள் தள்ளிச் செல்வதில் இந்தோனேசிய அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.

நேற்றுக்காலை இந்தோனேசி்ய பாதுகாப்பு அதிகாரிகள், பெக்கோ இயந்திரத்தின் துணையுடன், அகதிகள் படகை கடலுக்குள் மீண்டும் தள்ளிச் செல்வதற்கு முயற்சித்தனர்.

எனினும், கடுமையான அலைகளினால் அந்த முயற்சி சற்று நேரத்திலேயே தற்காலிகமாக கைவிடப்பட்டது.

படகை கடலுக்குள் தள்ளிச் சென்று, அருகில் உள்ள துறைமுகம் ஒன்றில் வைத்து அந்தப் படகில் அகதிகளை ஏற்றி அனைத்துலக கடற்பரப்புக்கு இழுத்துச் செல்வதற்கு இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது.

1 3

Indonesian officials load food supplies onto a boat carrying Tamil migrants which have been stranded on the beach for the last few days in Lhoknga, Aceh province, Indonesia, Friday, June 17, 2016. Authorities are preparing to tow the boat carryingvdozens of men, women and children out to sea Friday after rescuing it last weekend. (AP Photo/Heri Juanda)

விரலால் ஏற்பட்ட விபரீதம் : 5 வயதுக் குழந்தை கோமாவில்!!

Baby

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் உள்ள பள்ளியில் படித்துவந்த லக்‌ஷய் என்ற ஐந்து வயதுச் சிறுவன் கடந்த பத்தாம் திகதி பள்ளிக்கூடத்தில் விளையாடும்போது கீழே விழுந்ததில் கைவிரல்கள் இரண்டில் காயம் ஏற்பட்டது.

இதுபற்றி குழந்தையின் பெற்றோருக்கு தகவல் அளித்த பாடசாலை நிர்வாகம், அவசர சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள மணிபால் என்ற தனியார் வைத்தியசாலைக்கு அவனை அனுப்பி வைத்தது.

பதறியடித்து, வைத்தியசாலைக்கு வந்த லக்‌ஷய்-ன் தந்தையான புருஷோத்தமனிடம், இன்னும் ஆறு மணி நேரத்துக்குள் விரலில் சத்திர சிகிச்சை செய்யவேண்டியுள்ளது, உடனடியாக 60 ஆயிரம் பணம் கட்டுங்கள் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

பிளாஸ்டிக் சேர்ஜரி முறையில் நடத்தப்பட்ட இந்த சத்திர சிகிச்சையின் போது அளவுக்கு அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் கடந்த பத்து நாட்களாக கோமா எனப்படும் ஆழ்மயக்க நிலையில் சிறுவன் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், இதயம் சார்ந்த கோளாறால் ஏற்கனவே லக்‌ஷய் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இதை சிறுவனின் பெற்றோர் மறுத்துள்ளனர்.

கடந்த பத்து நாட்களாக எங்கள் குழந்தை கோமாவில் கிடந்தும், இதுவரை எங்களிடம் எந்த வைத்தியர்களும் இதுதொடர்பாக தொடர்பு கொண்டு பேசவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தற்போது, உயிர்காக்கும் உபகரணங்களின் துணையுடன் சுவாசித்துவரும் லக்‌ஷய் விரைவில் கண்விழிக்க அனைவரும் பிரார்த்திப்போம்.

யாழில் மாணவி துஷ்பிரயோகம் : அதிபர், பிரதி அதிபர், ஆசிரியைகள் உட்பட ஐவர் கைது!!

AB

சிறுவர் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பகுதி பாடசாலை ஒன்றின் அதிபர், பிரதி அதிபர் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் 11 வயது மாணவியாவார். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர் ஒருவர் மற்றும் இரண்டு ஆசிரியைகளும் கைதுசெய்யப்பட்டு, நேற்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பாடசாலை முடிந்து மேலதிக வகுப்புகள் நடைபெற்ற வேளை, பல சந்தர்ப்பங்களில் குறித்த சிறுமியை, 46 வயதுடைய சந்தேகநபரான ஆசிரியர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக, முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது நண்பர்களிடம் முன்னதாக தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் அப் பாடசாலையின் பிரதி அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியைகளிடமும் முறையிட்டுள்ளனர்.

எனினும் அவர்கள் மூவரும் இந்த சம்பவத்தை மறைக்க முற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதுஇவ்வாறு இருக்க, தனது மகளுக்கு ஏற்பட்ட அநீதியை அறிந்த பெற்றோர், இது தொடர்பில் அப் பாடசாலை அதிபரிடம் கூறிய போதும், அவர் பாடசாலைக்கு அகௌரவம் ஏற்பட்டு விடும் எனக் கருதி, சந்தேகநபரான ஆசிரியரை தற்காலிகமாக பிரிதொரு பாடசாலைக்கு மாற்ற முயற்சித்ததாகவும், கூறப்படுகின்றது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான ஆசிரியர் மற்றும் அவருக்கு உதவியதாக கூறப்படும் அதிபர், பிரதி அதிபர் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் அவர்களை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை, எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி ஶ்ரீமதி நந்தசேகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

BMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

BMW

BMW நிறுவனமானது நுண்ணறிவுள்ள எதிர்கால காரொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறித்த காரானது லண்டனில் இடம்பெற்ற கண்காட்சியின் போதே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரோல்ஸ் ரொய்ஸ் என்னும் குறித்த காரே அவர்களால் இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த காரானது மிகவும் அருமையான வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் 2040 இல் சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள போதிலும் அதற்கான கேள்வியானது தற்போதே அனைவரிடமும் நிலவி வருகின்றது.

இதேவேளை, எதிர்காலத்தில் அவர்கள் அறிமுகப்படுத்தவுள்ள தானியங்கி கார் மாதிரிகளும் இதன் போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அடையாளங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அவர்களின் விருப்பத்திற்கேற்ப கார்களை நிர்மானிக்கும் திட்டமானது நடைமுறைப்படுத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு வட்டுவாகலில் வாகன விபத்து : ஒருவர் பலி!!

1

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகனவிபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வட்டுவாகல் பாலத்தில் உழவு இயந்திரம் ஒன்றை, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கடந்து செல்ல முயற்சித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் மோட்டர் சைக்கிளில் வந்த நபர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.

2

ஒரு இதயத்துடன் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு!!

Twin Babies

ஒரே இதயம் மற்றும் ஒரே கல்லீரலுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தன.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டம் சாஸ்தூர் பகுதியை சேர்ந்த தஸ்லீன் மசூல்தர் என்ற பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அறுவை சிகிச்சை மூலம் கடந்த சனிக்கிழமை இரவு இவருக்கு, உடல் ஒட்டியபடி இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் ஒட்டிப்பிறந்த போதிலும், இரு குழந்தைகளுக்கும் தனித்தனி தலைகள், தலா 2 கைகள், கால்கள் இருந்தன.

ஆனால் விசித்திரமாக அக்குழந்தைகளுக்கு இதயமும், கல்லீரலும் ஒன்றாகவே இருந்தன. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை நவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் பிரிக்கும் முயற்சிக்காக மும்பை சயான் மாநகராட்சி மருத்துவமனைக்கு வைத்தியர்கள் அம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

ஆனால் அம்புலன்ஸ் புனே வந்து கொண்டிருந்தபோது, ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளின் இதயதுடிப்பு நின்றது.

பிறப்பால் இணைபிரியாத அக்குழந்தைகளின் உயிரும் ஒன்றாகவே பிரிந்தது. மருத்துவ துறையினருக்கு இந்த இரட்டையர்கள் சவாலாக இருந்தபோதிலும், உயிரிழப்பு சோகமாக அமைந்து விட்டது.

குடும்பஸ்தர் ஒருவா் துாக்கிட்டு தற்கொலை!!

Hang Death

பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்தில் குடும்பஸ்தா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 05 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் நான்கு பிள்ளைகளின் தந்தையெனவும், தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த சடலம் திடீர் மரண விசாரனையாளரின் விசாரனையின் பின் சட்ட வைத்திய அதிகாரியின் மரண பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் பல பிரதேசங்களில் கடும் மழை, காற்று!!

Rain

நாட்டின் தென்பகுதி மற்றும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் இன்றைய தினம் இடைக்கிடையில் கடும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீனியின் விலை அதிகரிப்பு!!

sugar

மக்களின் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களில் ஒன்றான சீனியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்று ஒரு கிலோ சீனியின் விலை 112 ரூபா என பதிவாகியிருந்தது.

இதன்படி ஒரு கிலோ சீனியின் சில்லறை விலை 118 முதல் 120 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

உலக சந்தையில் துரித கதியில் சீனியின் விலை உயர்வடைந்து செல்கின்றது. இந்தியாவில் தொடர்ச்சியாக நிலவி வரும் வரட்சியினால் இவ்வாறு சீனி நிரம்பலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னதாக ஒரு கிலோ கிராம் சீனி 85 ரூபா முதல் 90 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தரை அச்சுறுத்திய 4 இளைஞர்கள் கைது!!

vavuniya_hospital

வவுனியா பொது வைத்தியசாலையில் விபத்துப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தரை அச்சுறுத்திய 4 இளைஞர்கள் இன்று(20.06.2016) மாலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

இன்று மாலை விபத்துப் பிரிவில் நோயாளரை பார்வையிடும் நேரம் முடிவடைந்தும் விபத்துப்பிரிவில் நோயாளரை பார்வையிட்டு வைத்தியசாலை விடுதி தாதிய உத்தியோகத்தரின் பணிக்கு இடையூறு எற்படுத்திக் கொண்டிருந்த 4 இளைஞர்களை விடுதியிலிருந்து வெளியேறுமாறு விடுதி தாதிய உத்தியோகத்தர் கோரியுள்ளார்.

குறித்த இளைஞர்கள் தாதிய உத்தியோகத்தருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் வெளியே வா உன்னை ஒரு கை பார்ப்பதாகவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

உடனடியாக வைத்தியசாலை பொலிசாரிடம் தாதிய உத்தியோகத்தர் முறையிட்டதையடுத்து பொலிசார் குறித்த 4 இளைஞர்களையும் கைது செய்துள்ளதுடன் விசாரணையின் பின்னர் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த மாதமும் வவுனியா பொது வைத்தியசாலையில் விபத்துப் பிரிவில் தாதிய உத்தியோகத்தரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞர்களை பொலிசார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பிரதேச செயலகத்தின் அறிவுச் சங்கமம் : மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு!!

 
வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா அவர்களின் வழிப்படுத்தலில் வசதியற்ற வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள தரம் ஜந்து மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்குகள் சமூக அறிவுச் செயற்பாடுகளில் ஒன்றான அறிவுச் சங்கமம் தரவட்டக் குழுவினரின் ஒருங்கிணைப்பாளர் வ.ஆதவன் (கிராம உத்தியோகத்தர்) அவர்களினால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

கடந்த மாதம் ஆரம்பமான இச் செயற்றிட்டம் ஈச்சம்குளம் பகுதியில் 118 மாணவர்களும், ஆசிகுளம் பகுதியில் 196 மாணவர்களும் ஓமந்தை பகுதியில் 68 மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.

ஒவ்வொரு பகுதிகளிலுமுள்ள தரம் ஐந்து மாணவர்களின் விபரங்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு இச் செயற்றிட்டம் இடம்பெற்று வருவதாக மேலும் தெரிவித்தார்.

புலமைச்சுடர் பிரதான வளவாளர் எஸ்.கபிலன், மற்றும் கிராம உத்தியோகத்தர் ப.உமாபதி, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

image-0.02.01.0bcdc2cb37d0b17aa43d760c3661eb01b091e2e97abd2f906d1151991e771483-V image-0.02.01.9c585e750ab4a8508d2f057599828da50677fbeb75f06304283de07cf531c660-V image-0.02.01.9ddb745240399f152cb006e1cf6180dbf7dc5f2a1e6e54a1a8b2fdc6f084df0f-V image-0.02.01.80fdd52802093b7e457ebfc9cbe97430631df1ae835b5e5ac67cac85c236ec8e-V image-0.02.01.88a43eb0bdab453f5566f28005dc458f0b6159e60610d74ea1752e32da88a741-V image-0.02.01.99aa008d7d3260b89d8eea7e3ef82baa21eec3bfac72988d9dd8bee38057043e-V image-0.02.01.666b6b1d6efce6440e8e223d10f3199ffde91d349b27f099c71a5b31491f3c7b-V image-0.02.01.916c15f1caf8c5a04fdd92281e8d085fd3f6a34da3d1100cdbc49190e15873e8-V image-0.02.01.02422a63d7854d1dcac919b8974fc0e94fbbaa308107d430785583c0d3485ff4-V image-0.02.01.d338627b9280940a5229e3e1af2267887c6a3f2f2f5a935a6777d04a3cc1783d-V

வவுனியா கூமாங்குளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலையின் பராமரிப்பு ஆரம்பவிழா!!

 
கூமாங்குளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய அறநெறி பாடசாலையின் கற்றல் உபகரணங்கள் வழங்குதலும் பராமரிப்பு ஆரம்பவிழாவும் நேற்றைய தினம் (19.06.2016) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்கான பாராமரிப்பு நிதி அனுசரணையை லண்டனைச் சேர்ந்த திருமதி சிற்றம்பலம் அன்னம்மா அறக்கட்டளை மேற்கொண்டிருந்தது.

இந் நிகழ்வில் திருகோணமலை ஓய்வு பெற்ற சாரணர் பாசறை ஆணையாளர் ராஜரஞ்சன் இராஜரட்னம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அஸ்திரம் மக்கள் நற்பணி மன்றத் தலைவர் S.P.சுதர்சன், கூமாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர். புஸ்பராஜா, சித்தி விநாயகர் ஆலயத் தலைவர் ந.ஆறுமுகம், R.D.S. செயலாளர் மா.சுரேந்திரன், ஆகியோரும் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இச் செயற்றிட்ட ஏற்பாடுகளை The Compassisan charity LK அமைப்பு மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

DSC_0952 DSC_0958 DSC_0960 DSC_0961 DSC_0962 DSC_0965 DSC_0981 DSC_0984 DSC_0985 DSC_0987 DSC_1015 DSC_1019

வவுனியாவில் தந்தையின் கைகளால் மகளுக்கு துவிசக்கரவண்டி வழங்கிய வன்னிப் பட்டறை!!

 
சர்வதேச தந்தையர் தினமான நேற்று(19.06.2016) வன்னிப் பட்டறை அமைப்பு மூலம் இராமனூர் புளியங்குளத்தில் வசிப்பவரும், புளியங்குளம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ப்பவருமான தில்லைநாதன் தட்சிகாவுக்கு அவரது தந்தை தில்லைநாதன் கைகளாலேயே அவரது கற்றல் நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில் துவிசக்கரவண்டி வழங்கப்பட்டது.

சமூக ஆர்வலரும், தமிழ் விருட்சத்தின் நெடுங்கேணி இணைப்பாளருமான செ.சபாநாதன் அவர்கள் தட்சிகாவின் குடும்ப நிலையை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) அவர்களுக்கு எடுத்து சொன்னதன் பிரகாரம் கனடாவை தளமாக கொண்டு வன்னியை மட்டுமல்லாமல் வடகிழக்கில் வறுமைக்கோட்டுக்கு உட்பட பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றிவரும் வன்னிப் பட்டறை அமைப்பு மூலம் துவிசக்கரவண்டியை நேற்று தந்தையர் தினம் நடந்த குடியிருப்பு சிறுவர் பூங்காவில் வைத்து புளியங்குளம் இந்துக் கல்லூரி அதிபர் ச.பரமேஸ்வரநாதன், வன்னி பட்டறை அமைப்பு, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொள்ள தட்சிகாவின் தந்தை தில்லைநாதன் அவர்கள் தனது மகளுக்கு துவிசக்கரவண்டி வழங்கி தந்தையர் தினத்தில் மகிழ்ந்து கொண்டார்

பெற்றுக்கொண்ட தட்சிகா வன்னிப் பட்டறைக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

1 13428651_1212272455483641_6743393784790553840_n 13479335_1214267691950784_802892805_n DSCN7075 DSCN7078 DSCN7079 DSCN7080 DSCN7082 DSCN7084 DSCN7088 DSCN7095 DSCN7098

வவுனியா குருமன்காட்டில் மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

 
வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் இன்று மாலை (20.06.2016) இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா குருமன்காட்டு சந்தியில் தரித்து நின்ற பட்டா வாகனம் மன்னார் வீதிக்கு ஏற முட்பட்டபோது. குருமன்காட்டிருந்து மன்னார் வீதியால் பயணித்த மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்துள்ளார்.

1 20160620_173714 20160620_173719 20160620_173723 20160620_173735

பாரீஸ் தாக்குதலில் பலியான மகள் : பேஸ்புக், டுவிட்டர், கூகுள் மீது வழக்கு பதிந்த தந்தை!!

Reynaldo Gonzalez

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மகள் பலியானதை தொடர்ந்து அவரது தந்தை சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

பாரீஸில் கடந்த நவம்பர் 13ம் திகதி ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 130 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

இதில் அமெரிக்கா நாட்டை சேர்ந்த Nohemi என்ற இளம்பெண்ணும் அடங்குவார். கலிபோர்னியாவை விட்டு வெளியேறிய இவர் பாரீஸ் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாரீஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் இவரும் பலியானார்.

மகளின் மரணத்தால் வேதனை அடைந்துள்ள தந்தையான Reynaldo Gonzalez என்பவர் சமூக வலைத்தளமான பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

கடந்த யூன் 14ம் திகதி கலிபோர்னியாவில் பதியப்பட்ட இந்த வழக்கு குறித்து அவர் பேசியபோது, ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு ஒருவகையில் இந்த சமூக வலைத்தளங்களும் காரணமாக இருந்துள்ளன.

பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் மூலமாக ஐ.எஸ் தீவிரவாதிகள் தகவல்களை பகிர்ந்துக் கொள்கின்றன. ஏராளமான நிதியுதவிகளை பெற்றுக்கொள்வதுடன், புதிய தீவிரவாதிகளையும் இந்த சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவு செய்கின்றனர்.

இது போன்ற நடவடிக்கைகள் இந்த சமூக வலைத்தளங்களுக்கு தெரிந்து தான் நடந்துள்ளன என்பதால் அவற்றின் மீது வழக்கு பதிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Reynaldo Gonzalez 1

காபூலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் : 20 இற்கும் மேற்பட்டோர் பலி!!

kabul

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டு பாதுகாப்பு படையினரை அழைத்து சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைகுண்டுத்தாக்குதலில் 20 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து ஜலாலாபாத்திற்கு செல்லும் சாலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பஸ்ஸில் நேபாள நாட்டு பாதுகாப்பு படையினர் மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் சென்றதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

குண்டு வெடிப்பை அடுத்து சம்பவ இடத்திற்கு அதிகமான அம்புலன்ஸ்கள் சென்றுள்ளது. பலர் காயமடைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். புனித ரம்ழான் நோன்பு தொடங்கிய பின்னர் காபூலில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 64 பேர் உயிரிழந்தனர். 340 இற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. கடந்த மே மாதம் பலுசிஸ்தான் மாகாணத்தில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் முல்லா அக்தர் மன்சூரை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தி கொன்றது.

தற்போது காபூல் நகரில் இராணுவ வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு எந்தவொரு இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.