சமநிலையில் நிறைவடைந்த இலங்கை-இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி!!

NOTTINGHAM, ENGLAND - JUNE 21: Sri Lanka wicketkeeper Dinesh Chandimal successfully appeals for the wicket of Jason Roy of England during the 1st ODI Royal London One Day match between England and Sri Lanka at Trent Bridge on June 21, 2016 in Nottingham, England. (Photo by Gareth Copley/Getty Images)

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

இப்போட்டியில் இரு அணிகளுமே 50 ஓவர்கள் நிறைவில் 286 ஓட்டங்களை பெற்றமை விசேட அம்சமாகும்.

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி களமிறங்கிய இலங்கை அணி சார்பில் மத்தியூஸ் 73 ஓட்டங்களையும், பிரசன்ன 59 ஓட்டங்களையும் பெற்றதோடு, 50 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 09 விக்கட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 287 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இங்கிலாந்து அணி சார்பாக சீ.ஆர்.வோக்கஸ் 95 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தாலும் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்க்கு 286 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

வவுனியாவில் பிரபல வர்த்தகர் இனந்தெரியாதோரால் கடத்தல்!!

 
வவுனியாவில் பிரபல வர்த்தகர் ஒருவர் இன்று (21.06.2016) இரவு 7.15 அளவில் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

தனது வர்த்தக நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய சண்முகம் செல்வராசா (வயது 55) வவுனியா – ராணிமில் ஒழுங்கையில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது

மேலதிக செய்திகளுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

13466385_10208432949200303_3456481172265106722_n 13466407_10208432950080325_8901258496078877743_n 13494956_10208432949280305_8892427210321080237_n 13524319_10208432949600313_8894979041614368871_n

குறும்புத்தனமாக குளிர்சாதனப்பெட்டிக்குள் உட்கார்ந்த குழந்தை : சிக்கலுக்கு ஆளான தந்தை!!

Baby

தைவானில் 2 வயது குழந்தையின் குறும்பால் அக்குழந்தையின் தந்தை சட்ட சிக்கலுக்கு ஆளாகியுள்ளார்.

Qingshui மாவட்டத்தில் கடை நடத்தி வரும் நபர் Huang, குளிர்பானங்களை வைப்பதற்காக இரண்டு குளிர்சாதனப்பெட்டிகளை வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் இந்நபரின் மகன், அதில் ஒரு குளிர்சாதனப்பெட்டிக்குள் உள்ளே சென்று அமர்ந்து கொள்வதும், அதன் பின்னர் வெளியே வருவதும் என விளையாடிய வண்ணம் இருந்துள்ளான்.

தந்தை பலமுறை கண்டித்தும், அச்சிறுவன் தனது குறும்புதனத்தை நிறுத்தியபாடில்லை, இந்நிலையில் கடைக்கு வந்த இந்நபரின் நண்பன், குளிர்சாதனப்பெட்டிக்குள் இருக்கும் குழந்தையை புகைப்படம் எடுத்து, அதனை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி இக்குழந்தையை வளர்க்க முடியவில்லை, அதனால் ஏலத்திற்கு விடுவதற்கு முடிவுசெய்துள்ளேன் என்ற செய்தியையும் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தினை பார்த்த சமூக வலைதளவாசிகள், இது குழந்தைகள் சித்ரவதை ஆகும், இக்குற்றத்திற்காக இந்நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொந்தளித்துள்ளனர்.

தைவான் Social Affairs Bureau – யின் படி குழந்தைகளை சித்ரவதை செய்வது நிரூபணமானால், குற்றவாளிக்கு £6,420 அபராதம் விதிக்கப்படும், இந்நிலையில் குளிர்சாதனப்பெட்டிக்குள் இருந்த இக்குழந்தையின் புகைப்படம் இந்த அமைப்பினை எட்டியதைத் தொடர்ந்து, அவர்கள் விசாரணை வளைத்திற்குள் Huang-யை உட்படுத்தியுள்ளனர்.

விசாரணையில், எனது குழந்தை மிகவும் அழகாக, குறும்புத்தனமாக இருக்கும், இதனை கவனித்த எனது நண்பன் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளான்.

நான் எனது குழந்தை மீது அதிக அன்பு கொண்டவன் என Huang கூறியதைத்தொடர்ந்து, இதனை உறுதிப்படுத்துவதற்காக அருகில் வசிப்பவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இந்த விவகாரம் கைவிடப்பட்டுள்ளது.

ரோமின் 2700 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக பெண்ணொருவர் மேயரானார்!!

Roam

இத்தாலியின் தலைநகரான ரோமின் மேயராக விர்ஜினியா ரேகி எனும் 37 வயதுப் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ரோமின் 2700 ஆண்டு கால வரலாற்றில் பெண் ஒருவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் முறை என இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நகைச்சுவை நடிகர் பெப் கிரில்லோவால் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “ஐந்து நட்சத்திர இயக்கம்” கட்சி சார்பில் போட்டியிட்ட விர்ஜினியா ரேகியின் வெற்றி, ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு என்று கூறப்படுகிறது.

சட்டத்தரணியான விர்ஜினியா ரேகி, உள்ளூர் கவுன்சிலராகப் பதவி வகித்தவர்.

சில மாதங்கள் வரை பெரும்பாலானவர்களால் அறியப்படாத விர்ஜினியா, அரசுக்கு எதிரான கடுமையான பிரசாரத்தின் மூலம் மக்களின் அபிமானத்தைப் பெற்று, மேயர் தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு பிரபலமடைந்தார் என்று கூறப்படுகிறது.

கூடைப்பந்தாட்ட வீராங்கனையை கரம் பிடிக்கிறார் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா!!

Ishanth Sharma Wedding

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, கூடைப்பந்தாட்ட வீராங்கனையை திருமணம் செய்யவுள்ளார்.

காசியை சேர்ந்தவரான பிரதீமா சிங் 2006 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

இஷாந்த் சர்மா – பிரதீமா சிங் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் டெல்லியில் நடந்தது.

இரு வீ்ட்டார் மட்டும் இதில் கலந்து கொண்டனர். இஷாந்த் சர்மாவுக்கு ரோஹித் சர்மா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இஷாந்த் சர்மா ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் முக்கியப் பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது இடத்தில் எல்லை மீறிய ஷேன் வோன் : புகைப்படங்களால் சலசலப்பு!!

Shane

அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோன் லண்டனில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட்டில் தனது மாயாஜால சுழற்பந்துவீச்சால் பல சாதனைகளை படைத்த ஷேன் வோன், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு காதல் மன்னனாகவே வலம் வந்தார்.

தற்போது 46 வயதாகும் ஷேன் வோனுக்கு ஒரு மகன், 2 மகள் என மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட வோனை தற்போதும் பெண்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றனர்.

இந்நிலையில் லண்டனின் ஒரு இரவு விடுதிக்கு வெளியே ஒரு பெண்ணை அவர் முத்தமிடுவது போன்றும், இருவரும் சிகெரெட் பரிமாறிக் கொள்வது போன்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஷேன் வோன் கூறுகையில், நான் விளக்கம் அளிக்கவும் மாட்டேன், குற்றம் சாட்டவும் மாட்டேன். நான் மிகவும் தனிமையிலே இருக்கிறேன், நான் யாரையும் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

அதே சமயம், புகைப்படங்கள் வெளியானதற்காக நிருபர்களை திட்டியும் தீர்த்துள்ளார். இதேபோன்று இவரது 15 வயது மகன் ஜாக்சன் பெண்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்தன.

இலங்கையில் மேலும் ஒரு தனியார் பல்கலைக்கழகம்!!

MDIS

இலங்கையில் மேலும் ஒரு தனியார் பல்கலைக்கழகம் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் உள்நாட்டு மாணவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு மாணவர்களையும் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க இருப்பதாக மலேசியா MDIS பல்கலைக்கழகத்தின் தலைவர் தியாகேந்திரன் தெரிவித்தார்.

கொழும்பு ஓசோ ஹோட்டலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்.

இலங்கையில் இந்த பல்கலைக்கழகத்தை நிறுவுவதன் மூலம் நாட்டு மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மலேசியா MDIS பல்கலைக்கழகத்தின் கிளைகள் இந்தியா, மலேசியா, தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளில் இருப்பதாகவும், இதன் ஒரு கிளையே தற்போது இலங்கையில் ஆரம்பிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் கல்வி அமைச்சிடம் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும், விரைவில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இதன்போது பல்கலைக்கழகத்தின் தலைவர் தியாகேந்திரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் முதியோர் கௌரவிப்பு!!

 
முள்ளியவளை 4ம் வட்டாரத்தில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று (20.06.2016) வேள்ட் விசன் அனுசரனையுடன் வெண்மலர் விளையாட்டு கழக இளைஞர்களினால் பொது நோக்கு மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன், பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா, வடமாகாண சபை உறுப்பினர் திரு.பவான், கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் வேள்ட் விசன் ஊழியர்கள், வெண்மலர் விளையாட்டு கழக உறுப்பினர்கள், பெருந்தொகையான முதியோர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

1 DSC_2754 DSC_2761 DSC_2763 DSC_2765 DSC_2766 DSC_2767 DSC_2769 DSC_2780 DSC_2781 DSC_2785

கவர்ச்சியாக நடிக்க சமந்தாவிற்குத் தடை!!

Samantha

சமந்தாவிற்க்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதால் அவர் கவர்ச்சியாக நடிப்பதற்கு காதலர் குடும்பத்தினர் தடை விதித்துள்ளனர்.

நடிகை சமந்தாவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. இளம் நடிகர் ஒருவரை விரைவில் மணந்து கொள்வேன் என்று அவர் அறிவித்து இருந்தார். அந்த நடிகர் யார் என்று தெரிந்துகொள்வதில் பட உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது. தற்போது அவர் நடிகர் நாகசைதன்யா என்று தெரியவந்துள்ளது.

இவர் தெலுங்குப் பட உலகில் முன்னணி கதாநாயகனும் நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் ஆவார். சமந்தாவும், நாகசைதன்யாவும் தெலுங்குப் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

நாகசைதன்யாவின் தாயார் சமீபத்தில் சமந்தாவின் வீட்டுக்கு நேரில் சென்று ஒருநாள் முழுவதும் அவருடன் தங்கி இருந்தார். அப்போது சமந்தாவின் நடவடிக்கைகள் அவருக்கு பிடித்து விட்டதால் திருமணத்துக்கு முழு சம்மதத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த வருடம் இறுதியில் சமந்தா-நாகசைதன்யா நிச்சயதார்த்தத்தை நடத்தவும் அடுத்த வருட ஆரம்பத்தில் திருமணத்தை நடத்தவும் இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சமந்தா படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு நாகசைதன்யா குடும்பத்தினர் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பல படங்களில் சமந்தா கவர்ச்சியாக நடித்து இருந்தார். சூர்யாவுடன் அஞ்சான் படத்தின் பாடல் காட்சியொன்றில் துணிச்சலாக நீச்சல் உடையில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது அவர் நடித்து வரும் படங்களிலும் கவர்ச்சியாக நடிக்க இயக்குனர்கள் நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால் நாகசைதன்யா குடும்பத்தினர் இனிமேல் சமந்தா கவர்ச்சி காட்சிகளில் நடிக்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

நாகசைதன்யா வசதியான பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது தாத்தா நாகேஸ்வரராவ் பழம்பெரும் நடிகர் ஆவார். ஐதராபாத்தில் சொந்தமாக ஸ்டுடியோக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளன. சமந்தாவும் காதலர் குடும்பத்தினர் கௌரவத்தை காப்பாற்ற கவர்ச்சியாக நடிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளார்.

திரிஷாவை காதலிக்கின்றாரா ராணா?

trisha-rana

பிரபலங்கள் ஒன்றாக நிகழ்ச்சிகளுக்கு வந்தாலே அவர்களை இணைத்து கிசுகிசுக்கள் வர ஆரம்பித்து விடுகின்றன.அப்படி தான் ராணா, திரிஷா இருவரும் காதலிக்கிறார்கள் என்ற வதந்திகளும் வந்தது.

திரிஷா நிச்சயதார்த்தம் நின்றதில் இருந்து மறுபடியும் இருவரும் காதலிக்க ஆரம்பித்துவிட்டனர் என செய்திகள் வர ஆரம்பித்து விட்டன.

இந்நிலையில் இதுகுறித்து ராணா, நான் நாயகிகளிடம் நட்பு ரீதியாக தான் பழகுகிறேன். அப்படி தான் திரிஷாவுடனும் பழகுகிறேன். நான் நடிகைகள் யாரையும் இதுவரை காதலிக்கவில்லை என்றார்.

மாதவனுக்கு நீதிமன்றம் அழைப்பு!!

Madhavan

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்..

கொடைக்கானல் அடிவாரத்தில் இருந்து பாலாறு அணை வரை கால்வாய் செல்கிறது. பாலசமுத்திரம், அய்யம்புலி ஆகிய கிராமங்களை ஒட்டி இந்த கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை நம்பி இந்த 2 கிராமங்களை சேர்ந்த மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

பாலசமுத்திரம் கால்வாயை ஒட்டி உள்ள 4 ஏக்கர் 88 சென்டு நிலத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் ராஜம்மாள் என்பவரிடம் இருந்து நடிகர் மாதவன் விலைக்கு வாங்கி உள்ளார்.

இதன்பின்பு, நடிகர் மாதவன் கால்வாயின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து அங்கு மின் கம்பம் அமைத்துள்ளார். மேலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தில் தென்னை மற்றும் கொய்யா மரங்களை வைத்துள்ளார்.

இதுகுறித்து திண்டுக்கல் கலெக்டர், பழனி மின்வாரிய செயற்பொறியாளர், பழனி தாசில்தார் ஆகியோருக்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுபோன்று புகார் மனு கொடுத்ததை அறிந்த நடிகர் மாதவனின் ஆட்கள் எனக்கு மிரட்டல் விடுத்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றால் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் அருள் வடிவேல்சேகர் ஆஜரானார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் கலெக்டர், பழனி மின்வாரிய செயற்பொறியாளர், பழனி தாசில்தார், நடிகர் மாதவன் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

டொனால்ட் ட்ரம்பை கொலைசெய்ய முயற்சித்த இளைஞர் மடக்கிப் பிடிப்பு!!

British-man-arrested-at-a-Donald-Trump-rally-in-Las-Vegas

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட முயற்சி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிவதால் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப்புடன் குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபரின் மனைவி ஹிலாரி கிளிண்டன் மோதுகிறார்.

இந்நிலையில், லொஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் பிரச்சார நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பெருந்திரளானோர் திரண்டிருந்தனர்.

இதன்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை எடுத்து டொனால்ட் டிரம்ப்பை கொலை செய் முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்த பொலிஸார் குறித்த இளைஞரை மடக்கி பிடித்துள்ளனர்.

20 வயதுடைய பிரித்தானி நாட்டைச் சேர்ந்த மைக்கல் சான்ட்போர்ட் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

டிரம்ப்பை கொலை செய்யும் திட்டத்துடன் 18 மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற மைக்கேல், நியூ ஜெர்சி, கலிபோர்னியா ஆகிய பகுதிகளில் வசித்து வந்துள்ளார்.

லொஸ் வேகாஸ் பிரச்சார கூட்டத்தின்போது டிரம்ப்பை கொலை செய்யும் திட்டத்துடன் கலிபோர்னியாவில் இருந்து அலாஸ் வேகாஸ் நகருக்கு மைக்கேல் காரில் வந்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப்பின் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க அனுமதி சீட்டை வாங்கிய மைக்கேல், இதற்குமுன்னர் துப்பாக்கியை பயன்படுத்திய அனுபவம் இல்லை என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்துக்கு சென்று, அங்கு துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

ஒருவேளை, லொஸ் வேகாஸ் நகரில் தனது திட்டம் தோல்வியுற்றால் பீனிக்ஸ் நகரில் நடைபெறவிருந்த டிரம்ப்பின் அடுத்த பிரச்சாரக் கூட்டத்தில் கொலை செய்யும் எண்ணத்தில் பிரச்சார கூட்டத்துக்கான அனுமதி சீட்டையும் மைக்கேல் வாங்கி வைத்துள்ளார்.

லொஸ் வேகாஸ் நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டொனால்ட் டிரம்ப்பின் பிரச்சார நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் இருந்ததால் ஆயுதம் எதுவும் இன்றி உள்ளே நுழைந்த மைக்கேல், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயரதிகாரியான அமீல் ஜேக்கப் என்பவரின் துப்பாக்கியை எடுத்ததாக மைக்கேல் வாக்குமூலமளித்துள்ளார்.

இதேவேளை தான் விடுதலை பெற்றால் மீண்டும் டிரம்ப்பை கொலை செய்ய முயற்சிப்பேன் என மைக்கேல் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் குறித்த நபருக்கு எதிராக நீதிமன்றில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

முறிகண்டியில் புகையிரதத்துடன் டிப்பர் மோதி விபத்து : சாரதி படுகாயம்!!

12

முல்லைத்தீவு மாவட்டம், முறிகண்டி – அக்கராயன் வீதியில் இருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் இன்று காலை 7.10 மணியளவில் டிப்பர் வாகனம் மோதுண்டு குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முறிகண்டி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சமிக்ஞை விளக்கினை அவதானிக்காமல் புகையிரத கடவையை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் குறித்த டிப்பர் வண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

11

இளம்பெண் கழுத்து அறுத்துக் கொலை : மீண்டும் ஒரு ஆணவக் கொலையா?

Honour_killing

நாமக்கல்லில் இளம் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதி ஆணவத்தின் காரணமாகவே, இந்த கொலை நடந்திருப்பதாக கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வேலூரைச் சேர்ந்த சாந்தி என்பவரும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும் காதலித்து கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணத்தை சுமதியின் பெற்றோர் ஏற்றுக்கொண்ட நிலையில், சந்தோஷின் பெற்றோர் ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், சந்தோஷூம், சுமதியும் நாமக்கல்லில் தனியாக வசித்து வந்துள்ளனர். வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த சந்தோஷ், ஒசூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால், நாமக்கல்லில், சுமதி தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சாந்தி நேற்று பிணமாக கிடந்தார்.

அவரது வீட்டிற்கு, சந்தோஷின் தாயார் வந்ததாகவும், அதனைத் தொடர்ந்தே சுமதி கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் சுமதியின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாதி ஆணவத்தின் காரணமாகவே கொலை நடந்திருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே, சந்தோஷ்-சுமதி திருமணத்தை, சந்தோஷின் பெற்றோர் ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு நாளை திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள போலீசார், சந்தோஷ் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து சில்லில் சிக்குண்டு இளைஞர் பரிதாபமாகப் பலி!!

Dead-body

மாத்தளை – நாவுல, A 9 வீதியில் சென்ற பேருந்திலிருந்து வெளியில் குதிக்க முற்பட்ட இளைஞன் பேருந்தின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து நேற்று (20.06) இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

கலேவெல, அலுத்வேவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்து யாத்திரைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போதே இடம்பெற்றுள்ளதாகவும், பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

சிகிச்சைக்கு சென்ற சிறுமி துஷ்பிரயோகம் செய்த வைத்தியர் கைது!!

Rape

அம்பாறை நிந்தவூரில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக வைத்தியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வைத்தியர் 52 வயதுடையவர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமையவே நேற்று (20) இரவு சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுகயீனம் காரணமாக வைத்தியரிடம் சிகிச்சைக்காக சென்ற போதே குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி 8 வயதுடையர் எனவும் சிறுமி அம்பாறை வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் சம்மாந்துறை பொலிஸாரினால் இன்று (21.06.2016) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.