ஒலிம்பிக் தீபம் ஏற்ற பயன்படுத்தப்பட்டு வந்த சிறுத்தை பலி!!

puli siruththai

பிரேசில் மனவ்ஸ் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் உள்ள சிறுத்தை ஒன்றைஒலிம்பிக் தீபம் ஏற்றும் பந்தயத்திற்கு பயன்படுத்தி வந்த சம்பவம் ஒன்றுஇடம் பெற்றுள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளார்.சம்பவத்தில் பெண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிஉயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்தயத்தில் ஈடுப்பட்ட சிறுத்தை,நிகழ்வின் போது சிப்பாய் ஒருவரைதாக்கிவிட்டுச் சென்றதாலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஊடகப் பேச்சாளர்ஒருவர் தெரிவித்துள்ளார்.சிறுத்தையை தடுக்க பல முறை முயன்ற போதும், அது பலனளிக்கவில்லை என்றகாரணத்தினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக சிப்பாய் ஒருவர்தெரிவித்துள்ளார்.

சங்கிலியால் கட்டிவைத்து ஒலிம்பிக் தீபம் ஏற்ற வைத்தது பெறும் தவறு என ரியோவிளையாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஒலிம்பிக் நிகழ்வுகளிற்கு ஏன் விலங்குகளை பயன்படுத்தி வருகின்றீர்கள் என பலகேள்விகளை விலங்கு உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

 

வவுனியாவில் நாளை மறுதினம் வெள்ளிகிழமை பூரண கடையடைப்பு!!

Vavuniya Shopes closed

வவுனியாவில் வர்த்தகர் ஒருவரை இனந்தெரியாதவர்கள் நேற்று இரவு கடத்திச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இக்கடத்தல் சம்பவத்திற்கு எதிராக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24.06.2016) வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் பூட்டி அமைதியான முறையில் கடை அடைப்பினை மேற்கொள்ளுமாறும்,

அன்றைய தினம் தினச்சந்தையில் காலை 9 மணிக்கு ஒன்றுகூடி வர்த்தகர்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு போரணியாகச் சென்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளதாக இன்று இடம்பெற்ற வவுனியா மாவட்ட வர்த்தக சங்க மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் திரு. ரி.கே. இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

இனந்தெரியாதவர்களினால் கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் வவுனியா வர்த்தக சங்கத்தில் பொதுச்சபை உறுப்பினராக செயற்பட்டவர் என்பதுடன் வவுனியா மாவட்டத்தில் பிரபல்யமான வர்த்தகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள கடை அடைப்பிற்கு சகல வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் பூரண உத்துழைப்பினை வங்குவதுடன் அமைதியான முறையில் கடை அடைப்பினை மேற்கொள்ளுமாறும் உணவகங்கள், மருந்தகங்கள் உட்பட அனைத்து வர்த்தக நிலையங்களையும் பூட்டி தமது பூரண உத்துழைப்பினை வழங்குமாறும் வர்த்தகர் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாணவிகளுடன் தகாத முறையில் நடக்க முயன்ற ஆசிரியர் கைது!

1 (19)
யாழ்.பெரியபுலம் பாடசாலையில் மாணவிகளுடன் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தகுற்றச்சாட்டில் குறித்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது டன், மேலும்பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியை ஒருவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.

குறித்த பாடசாலையில் தரம் 7ல் கல்வி கற்கும் மாணவிகளுடன் தகாத முறையில்நடந்து கொண்ட மை தொடர்பாக பெற்றோர் மற்று ம் மாணவர்கள் ஆசிரியர்கள் முறைப்பாடு செய்துள்ளதுடன், மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினையும் இன்றையதினம் காலை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் கு றித்த சம்பவம் தொடர்பில் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அதிபர் மற்றும்ஒரு பெண் ஆசிரியை ஆகியோரை தேடி வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வவுனியாவில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு பிராந்திய தூதுவர் அலுவலகம் அமைக்கத் திட்டம்!!

foreign-ministry-sri-lanka

வவுனியா மாவட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தனது பிராந்திய தூதுவர் அலுவலகத்தை அமைக்க எண்ணியுள்ளது.

அதற்கான கட்டிடம் வவுனியா நகரில் தேவைப்படுவதாக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா அறிவித்துள்ளார்.

இதன் மூலம் கொழும்பை மையமாகக் கொண்ட சேவைகள் பிராந்திய ரீதியாக பரவலாக்கப்பட்டு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்படி அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கான ஆகக் குறைந்த தகமைகளைக் கொண்ட கட்டடங்கள் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு கோரப்படுகின்றன.

ஆர்வமுடைய உரிமையாளர்கள் எதிர்வரும் 30.06.2016 க்கு முன்னதாக வவுனியா பிரதேச செயலாளரிடம் தமது விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க முடியும் என்றும் மேலதிக தகவல்களை வவுனியா பிரதேச செயலகத்தில் பெறமுடியும் என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் மது ஒழிப்பை வலியுறுத்தி வீதி நாடகம்!!(படங்கள்)

மது ஒழிப்பை வலியுறுத்தி, அது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை இன்று ( 22.06.2016) வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையில், முதற்கட்டமாக விழிப்புணர்வு வீதி நாடகம் பிரதேச செயலக வளாகத்தில் அரங்கேற்றப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் செல்வி நிவேதிகா பேரின்பநாயகம், வவுனியா வடக்கு பிரதேச செயலக கணக்காளர் திரு பா. நாகேஸ்வரபாலா, வவுனியா வடக்கு பிரதேச சபை செயலாளர் திரு க.சத்தியசீலன், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

13458687_507505079439188_3682248038303310462_o

13474945_507504659439230_5896677224976304517_o

13474946_507504186105944_3187890341415353113_o

13475022_507504859439210_7407124348254094418_o

13475065_507505162772513_3376119538279787404_o

13482906_507504452772584_1345253954062840557_o

13483129_507504589439237_8968119179200309986_o

13490583_507504732772556_7573427060809679479_o

13490696_507504576105905_3344966094977273799_o

13490785_507504989439197_350188757251208831_o

13490803_507504846105878_8388180126707772157_o

13495410_507504736105889_1259186528672740597_o

13495668_507504979439198_53995409599414539_o

13497652_507505036105859_4274755683273513505_o

13502534_507504946105868_8736883611810030428_o

 

வவுனியா பேரூந்து தரிப்பிடத்திலிருந்து சடலம் மீட்பு!!

 
வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் இன்று (22.06.2016) காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் பிச்சை எடுக்கும் பூவரசங்குளம் தட்டங்குளத்தினை சேர்ந்த சின்னையா காளிமுத்து (வயது 65) இன்று காலை வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் அமைந்து புத்தக நிலையத்திற்கு அருகாமையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீடீர் மரண விசாரணை அதிகாரி கிசோர் சடலத்தினை பார்வையிட்டதுடன் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

1 SAM_0019 SAM_0023 SAM_0036

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் கோவிலில் அற்புதம், நம்பினால் நம்புங்கள்!!(காணொளி)

Kovil

நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்திருக்க அனல் பறக்கும் தணலில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றும் இளைஞர்களும், கலையேறி தனது நாக்கினை வாளால் வெட்டி இரத்தம் காணும் பக்த நிகழ்வும் ஆனைக்கோட்டையில் நடைபெற்றுள்ளது.

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்திலேயே மயிர் கூச்செறியும் மேற்படி பக்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மேற்படி ஆலயம் ஈழத்தில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தோடு கொடியேறி தொடர்ந்து பதினைந்து நாட்கள் திருவிழா நடைபெறுவது வழமை.

இந்த திருவிழா நாட்களில் தீர்த்த திருவிழா அன்று ஆலயத்தின் முன்புறத்தில் இளைஞர்கள் தீ மூட்டி தமது நேத்திக்கடனை செலுத்தியுள்ளனர்.

எரியும் தணலில் எந்த தயக்கமும் இன்றி தீ மிதித்தல் நிகழ்வை மேற்கொண்டு, நமது நேத்திக்கடன்களை நிறைவேற்றி உள்ளனர்.

இதில் ஒருவருக்கு கலை வந்து தான் வைத்திருந்த வாளால் தனது நாக்கினை வெட்டி, வாளின் மீது ஏறியது அனைத்து பகதர்களையும் பக்தியின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. இந்த அற்புத நிகழ்வால் குறித்த ஆலயத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பகதர்கள் சென்று வருகின்றனர்.

குறித்த ஆலயத்தில் அருள் பாலித்துள்ள அம்மன் சக்தி வாய்ந்தவள் எனவும், அவளால் இயலாதது எதுவும் இல்லை எனவும், தாம் வேண்டுபவற்றை அவள் தருகின்றாள் எனவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈழ அகதிகளின் போராட்டத்துக்கு தற்காலிக வெற்றி : இந்தோனேசியாவில் தற்காலிக தங்குமிடம்!!

indo_TKIT

இந்தோனேசியா அச்சே பிராந்தியத்தில் நிர்க்கதியான நிலையில் ஒதுங்கிய இலங்கைதமிழ் அகதிகள் மீண்டும் சர்வதேச கடலில் கொண்டு சென்று விடப்படுவார்கள் என்றதீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர்களை இந்தோனேசியாவில் தற்காலிகமா தங்க வைத்து உண்மையான அகதிகள் மூன்றாம் நாடு ஒன்றில் குடியேற்றப்படுவார்கள் என்று இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பழுதடைந்திருந்த படகை திருத்திய பின்னர் அகதிகள் மீண்டும் சர்வதேச கடலில்சென்று விடப்படுவார்கள் என்றும் அவுஸ்திரேலியாவை நோக்கிய அவர்களை பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்

எனினும் அகதிகளின் படகு திருத்தமுடியாத நிலையில் உள்ளதாகவும் அதனை மீண்டும் கடல்பயணத்துக்கு அனுமதிக்கமுடியாது என்றும் இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்தே இந்தோனேசிய குடிவரவு அதிகாரிகள், அகதிகளை தற்காலிகமாக தங்கவைக்கும்நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இதேவேளை இவர்களுக்கு உதவும் முகமாக சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தப்பியோடிய 4500 படையினர் சட்டபூர்வமாக விலகல்!!

????????????????????????????????????

முப்படைகளிலும் இருந்து தப்பியோடிய சுமார் 4500 பேர் சட்டபூர்வமாக படைகளில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்ட காலப்பகுதியிலே இவர்கள் தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 13ம் திகதி தொடக்கம், அடுத்தமாதம் 13ம் திகதி வரை இந்தப் பொதுமன்னிப்புக் காலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இராணுவத்தில் இருந்து 25 ஆயிரம் பேரும், கடற்படையில் இருந்து 7,137 பேரும், விமானப்படையில் இருந்து 510 பேரும், தப்பியோடியுள்ளனர்.இந்தநிலையில், பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், 4,269 இராணுவத்தினரும், 211கடற்படையினரும், 165 விமானப்படையினரும், தாமாக முன்வந்து படையில் இருந்து முறையாக விலகியுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முறையான அனுமதியின்றி 90 நாட்களுக்கு மேல் விடுமுறையில் இருக்கும் படையினர் அனைவரும் தப்பியோடியவர்களாக கருதப்பட்டு, இவர்களை மீளப் படையில் சேர்த்துக் கொள்வதற்கு அல்லது முறையாக படையில் இருந்து விலகிக் கொள்வதற்கான பொதுமன்னிப்புக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான போதை பொருள் வர்த்தகர்கள் கைது: தொடரும் அதிரடி விசாரணை!

arrest (1)
போதை வியாபாரத்தில் முக்கியமானவர்கள் என்று கருதப்படும் மூவர் கொழும்பில் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களை கைது செய்த போது இவர்களிடம் இருந்து ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சந்தேகநபர்களை தற்சமயம் போதை பொருள் விற்பனையின் பிரதான சூத்திரதாரியாக கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் வெலே சுதா மற்றும்,தர்மராஜா சுசேந்திரன் ஆகிய இருவரும் இயக்கி வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் புதிய பொலிஸ்மா அதிபரான பூஜித் ஜயசுந்தரவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதைப் பொருள் வியாபாரத்தினை ஒழிக்கும் நடவடிக்கைக்கு கீழ் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் போதை பொருள் பாவனையை இந்த நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையின் கீழ் குறித்த சுற்றிவளைப்பானது வெற்றி பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏரியில் வீழ்ந்த காரில் இரண்டு பேர் பலி!!

 
அம்பாறை தமன-கலாஹேன மலையடி பாலத்தின் கீழ், கார் ஒன்று ஏரியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த விபத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தினை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதாகவும் தமன பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்தவர்கள் எம்.எல்.பாருக் மற்றும் மொஹமட் இஸ்மாயில் ரிஸ்வி என்ற வர்த்தகர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Car Car2

பகல் உணவு வழங்கவில்லை என்ற காரணத்தினால் தாயை கொலை செய்த மகன்!

1 (53)
பகல் உணவு வழங்கவில்லை என்ற காரணத்தினால் பெற்ற தாயை படுகொலை செய்த மகன் ஒருவர் பற்றிய சம்பவமொன்று மாவனல்ல பகுதியில் பதிவாகியுள்ளது.பகல் உணவு கிடைக்காத காரணத்தினால் நபர் ஒருவர் தாயுடன் வாக்கு வாதம் செய்துள்ளார்.

இந்த வாக்குவாதம் இறுதியில் கத்திக் குத்தாக மாறி தாயின் உயிர் காவுகொள்ளப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் மாலை மாவனல்ல பிரதேசத்தில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.மாவனல்ல அம்புலுகல கந்தேதெனிய தோட்டத்தின் 7ம் இலக்க லயன் அறையைச் சேர்ந்த 52 வயதான கந்தசாமி தேவானி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கத்திக் குத்தை மேற்கொண்ட 36 வயதான வெள்ளயன் புஸ்பகுமார் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சந்தேக நபரை எதிர்வரும் ஜூலை மாதம் 4ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு மாவனல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் கேகாலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வவுனியா மாவட்ட இணைய ஊடக அமைப்பு அங்குரார்ப்பணம்!!

 
வவுனியா மாவட்ட இணைய ஊடக அமைப்பு நேற்று 21.06.2016 மாலை குடியிருப்பு சிறுவர் பூங்காவில் இணைய ஊடக உறுப்பினர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட இணையங்களை ஒன்றினைத்து ஊடகவியலாளர்களை ஒழுக்க ரீதியிலும் அவர்களுக்கான பயிற்சி நெறிகளையும் பெற்று திறமையான ஊடகவியலார்களாக உருவாக்குவதற்கான முதற்படியே இணைய ஊடக அமைப்பு உருவாக்கப்பட்டது.

தலைவராக ந.ஜனகன், செயலாளராக ஜே.அருள், பொருளாலராக செல்வி க.தனுசினி, உப தலைவராக ப.கார்த்திக், உப செயலாளராக திருமதி சி. திவ்வியா, இணைய ஊடக உறுப்பினரால் தெரிவு செய்து வைக்கப்பட்தையடுத்து நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்து வைக்கப்பட்டனர்.

திரு.கதீசன், திரு.வினோத், திரு.லதீப், திரு.தர்சன் ஆகியோர் நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படதையடுத்து

ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக ப.கனேசியஸ், திரு.மாணிக்கம் ஜெகன், திரு.பிரகாஷ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து தொழிநுட்ப உறுப்பினர்களாக
திரு.பிரதீப், திரு.நிதுஷன் ஆகியோர் இணைய ஊடகவியலாளர்களால் தெரிவு செய்யப்பட்டனர்.

இதனையடுத்து தலைவரால் ஒழுக்க விதிமுறைகள், யாப்பு விதி முறைகள் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இணைய ஊடக அமைப்பு உருவாக்கம் தொடர்பாகவும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

அடுத்த கூட்டத்தில் விடுபட்ட இணைய ஊடகவியலாளர்களையும் இணைத்து செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் இன்றைய இணைய ஊடக அமைப்பில் கலந்து கொண்டவர்களின் ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தலைவரின் உரையுடன் நிறைவு பெற்றது.

ஊடகப்பிரிவு
இணைய ஊடகவியலாளர் அமைப்பு
வவுனியா மாவட்டம்

1 IMG_5038 IMG_5040

வவுனியாவின் பிரபல வர்த்தகர் எஸ்.எஸ்.ஆர் கடத்தல் : வர்த்தக சமூகம் பெரும் அதிர்ச்சி!!(2ம் இணைப்பு)

 
வவுனியா நகரின் பிரபல வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் நேற்று செவ்வாய்க்கிழமை (21.06.2016) இரவு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

சண்முகம் செல்வராஜா என்ற 55 வயதுடைய வர்த்தகரே, தனது வர்த்தக நிலையத்தில் இருந்து இரவு சுமார் 7 மணியளவில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது வீட்டு வாசலில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

முறைப்பாட்டையடுத்து, வெளிக்குளம் இராணி மில் ஒழுங்கையில் உள்ள அவருடைய வீட்டிற்குச் சென்ற பொலிசார் கடத்தப்பட்டவருடைய மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி போன்றவற்றை வீட்டு வாசலில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.

இச் சம்பவத்தை பொலிசாரும் உறுதி செய்துள்ளனர். இச் சம்பவம் வவுனியா வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரீ.கே.இராஜலிங்கம் இக் கடத்தல் சம்பவம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய மேல் நடவடிக்கை குறித்து வர்த்தகர்கள் இன்று புதன்கிழமை கூடி ஆராயவுள்ளதாகத் தெரிவித்தார்.

சண்முகம் முதலாளி என அழைக்கப்பட்ட சண்முகம் ஸ்ரோர்ஸ் மற்றும் அரிசி ஆலைகளின் உரிமையாளராகிய பிரபல முன்னாள் வர்த்தகர் சண்முகம் அவர்களின் புதல்வரான செல்வராஜா எஸ்.எஸ்.ஆர் முதலாளி என நன்கு அறியப்பட்ட பிரபல வர்த்தகராவார்.

இவரை யார் என்ன நோக்கத்திற்காக கடத்தினார்கள் என்பது குறித்து பலரும் குழப்பமடைந்துள்ளனர். குறிப்பாக வர்த்தக சமூகம் பெரும் அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் உள்ளாகியிருக்கின்றது.

சம்பவம் பற்றி அறிந்ததும் வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரமசிங்க மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்ட பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு சோதனைகள் நடத்தியதுடன் விசாரணைகளை நடத்தியிருக்கின்றனர்.

1 IMG_1555 IMG_1567 IMG_1569 IMG_1576 IMG_1577

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின் பூங்காவன திருவிழா!!(படங்கள்)

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின்  வருடாந்த  மகோற்சவத்தில் நேற்று 21 .06.2016  பூங்காவன திருவிழா    ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் இடம்பெற்றது .  பூங்காவன திருவிழாவின் பொது விநாயகபெருமான்  அலங்கரிக்கபட்ட  பூந்தண்டிகையில்   வீதி வலம்வந்து பக்தர்களுக்கு  அருள்பாலித்தார் .

13445817_296314657370023_218052298515361063_n 13466267_296314964036659_4950868302045938811_n 13466507_296314607370028_6430235270933129785_n 13516592_296314887370000_7943421570597190704_n 13528897_296314770703345_2364450564194136423_n 13528944_296314860703336_4321161759346683695_n

வவுனியா பழைய குடிமனை – சூடுவெந்தபுலவு இப்தார் நிகழ்வு!!

 
புனித றமழான் நோன்புக்கான இப்தார் நிகழ்வு நேற்று (21.06.2016) சூடுவெந்தபுலவு பழைய குடிமனை பள்ளி வாயிலில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு நிதி அனுசரணை ISRC Qatar Charity வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வினை கே.காதர் மஸ்தான் (பா.உ, வன்னி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்) ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வினை அவரது இணைப்பாளர், பிரத்தியேக, செயலாளர் ஊடாக செயலாளர் மற்றும் அவரது சகோதரர்கள் ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 image 8 img 1 img 3 img 4 img 5 img 6 img 7