மேடை போட்டு நீலிக்கண்ணீர் வடிப்பது மட்டும் உதவியாக அமையாது : சீ.வி.விக்னேஸ்வரன்!!

Vigneswaran

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் தலைவியர்கள் சமூக அரசியல் துறைகளில் செயலாண்மை மிக்கவர்களாக விளங்க வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை யாழ். நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களாக இருந்தால் என்ன சிங்களவர்களாக இருந்தால் என்ன பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கப் பெற வேண்டும்.

பெண்கள் பிரச்சினைகள் தொடர்பாக, விசேடமாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், கணவனை இழந்த மற்றும் பிள்ளைகளைக் கொண்ட விதவைத் தாய்மார்கள் ஆகியோரின் புனர்வாழ்வு தொடர்பாக வடமாகாண சபை மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்துவருவதுடன் அவர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது தொடர்பாக விசேட கவனம் செலுத்திவருகின்றது.

சலாவப் பகுதி இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு விரைந்து உதவிகளை நல்க வந்திருப்பது பாராட்டப்படக்கூடியது. இது அரசின் கடமையுமாகும்.

எதிர்பாராத இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்படுகின்ற மக்களுக்கான உதவிகள் விரைந்து வழங்கப்பட வேண்டும். ஆனால் வட பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட இலட்சோப இலட்சம் மக்கள் உறவுகளை இழந்து, உடல் அங்கங்களை இழந்து, வீடுகளை இழந்து, வாசல்களை இழந்து, பிள்ளைகளை இழந்து, இன்னல்படுகின்றார்கள்.

ஆகக் குறைந்தது அவர்களின் மிக மிக அடிப்படைத் தேவையாக கருதப்படக்கூடிய உணவுத் தேவைக்கு கூட எந்தவொரு உதவியையும் அரசு வழங்காது தாமதித்து வருவதை நாம் ஏற்க முடியாது.

ஒற்றுமையாக இருப்போம் எம்முடன் இணைந்து செயற்படுங்கள் என நேசக்கரம் நீட்டுகின்றார்கள். நாங்கள் மறுக்கவில்லை. நீங்கள் தமிழ் மக்களை நோக்கி அவர்களின் குறைகளைக் களையும் நோக்கில் ஓர் அடி முன்னோக்கி வாருங்கள் நாம் பத்து அடி உங்களை நோக்கி வருகின்றோம் எனத் திரும்பத் திரும்ப கூறி வருகின்றோம்.

நடந்தவற்றை மறப்போம் புதிய நல்லுறவை சிருஷ்டிப்போம் என்கின்றார்கள். எப்படி மறப்பது? மறக்கக் கூடிய விதத்திலா தமிழர்களுடன் உறவுகள் பேணப்பட்டு வந்துள்ளன? மேடை போட்டு நீலிக்கண்ணீர் வடிப்பது மட்டும் உதவியாக அமைந்துவிடாது. நீங்கள் கூறுகின்ற விடயங்களுக்கு செயல் வடிவம் கொடுங்கள் என்று அரசாங்கத்தை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

சகல வசதிகளுடனும் இருந்த மக்களில் எத்தனை ஆயிரம் பேர் அகதி முகாம்களில் ஏதிலிகளாக இன்று கிடக்கின்றார்கள் என்பதை நாம் கருத்தில் எடுக்க வேண்டும். பொது மக்களின் காணிகளை விடுகின்றோம் விடுகின்றோம் என்கின்றார்கள். எமது மக்களும் இலவு காத்த கிளியாக தவங்கிடக்கின்றார்கள்.

இது எப்போது நிறைவேறப் போகிறது என்று எமக்கும் தெரியாது அரசுக்கும் தெரியாது. தற்போதைய அரசிற்கு ஒரு அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. தமிழ் மக்களின் இப் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் இந் நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்குவதற்கான திட்டங்களை விரைந்து செயற்படுத்துவார்களேயாயின் அவர்கள் அழியாத் தலைவர்களாக எம்மவர்களாலும் ஏன் இலங்கையிலுள்ள ஒட்டு மொத்த சமூகங்களாலும் போற்றி கௌரவிக்கப்படுவதுடன் இவர்களின் பெயர்கள் எமது முன்னைய உலகப் பெருந் தலைவர்களின் பெயர் வரிசைகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை.

மாறாக எமது பணிவான கோரிக்கைகளை ஏற்க மறுத்து தான்தோன்றித்தனமாக இறுமாப்புடன் செயற்பட்ட அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்ட கதி என்ன என்பதனையும் அவர்கள் நன்கு அறிவார்கள். தம்மை உலகப் பெருந்தலைவர்கள் என பிதற்றிக் கொண்ட பலர் இன்று இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டுள்ளமை இந்த அரசுக்கு ஒரு பாடமாக அமையட்டும் என்றார்.

-அத தெரண-

வவுனியா வர்த்தகர் கடத்தப்பட்டதன் பின்னணி என்ன?:  பொலிஸ் நிலையத்தில் காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்!!

 
வவுனியாவில் இனந்தெரியாதவர்களினால் நேற்று செவ்வாய்க்கிழமை (21.06.2016) இரவு கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் இன்று மதியம் 2.00 மணியளவில் வவுனியா பூவரசங்குளம் காட்டுப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விடுவிக்கப்பட்ட வர்த்தகர் தற்போது பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர் வெளியே வந்த பின்னரே யாரால் எதற்க்காக கடத்தப்பட்டார் என என்ற விபரங்கள் அறியமுடியும் என்பதால் ஊடகவியலாளர்கள் காத்திருந்த போதும் இதுவரை பொலிசாரின் விசாரணை முடிவடையவில்லை.

சண்முகம் செல்வராஜா என்ற 55 வயதுடைய வர்த்தகரே, தனது வர்த்தக நிலையத்தில் இருந்து இரவு சுமார் 7 மணியளவில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது வீட்டு வாசலில் வைத்து கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

மூன்று வாகனங்கள் இக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், உணவுகள் வழங்கப்படாமல் நீர் மட்டும் வழங்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

1 DSC_0583 DSC_0589 DSC_0594 DSC_0595

திரையுலகில் ஒரே ஒரு இளைய தளபதி தான் : விஜய்க்கு ராஜேந்திரன் வாழ்த்து!!

Vijay-Rajenthiran

விஜய்க்கு திரை பிரபலங்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் மொட்டை ராஜேந்திரனும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடுகின்ற விஜய்க்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வில்லனாக அறிமுகமாகி தற்போது ரசிகர்களால் ரசிகர்களை கவர்ந்து வரும் மொட்டை ராஜேந்திரன் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

மொட்டை ராஜேந்திரன் கூறும்போது, ‘அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால், ஒரே ஒரு இளைய தளபதி அது விஜய்தான். என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ‘தெறி’ படத்தில் விஜய் பொலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு டிரைவராகவும், உதவியாளராகவும் மொட்டை ராஜேந்திரன் நடித்திருந்தார். இதில் விஜய், மொட்டை ராஜேந்திரன் காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

வவுனியாவில் நடைபெறவிருந்த கடையடைப்புப் போராட்டம் கைவிடப்பட்டது!!

Vavuniya

வவுனியாவில் இனந்தெரியாதவர்களினால் நேற்று செவ்வாய்க்கிழமை (21.06.2016) இரவு கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் இன்று மதியம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று மதியம் 2 மணியளவில் வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் வைத்து அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அங்கிருந்த முச்சக்கரவண்டியொன்றில் வவுனியாவை வந்தடைந்ததாக தெரியவருகின்றது.

இன் நிலையில் குறித்த வர்த்தகரிடம் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சண்முகம் செல்வராஜா என்ற 55 வயதுடைய வர்த்தகரே, தனது வர்த்தக நிலையத்தில் இருந்து இரவு சுமார் 7 மணியளவில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது வீட்டு வாசலில் வைத்து கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

இவர் கடத்தப்பட்டதைக் கண்டித்து நாளை மறுதினம்(24.06.2016) முழுக் கடையடைப்பிற்கு வர்த்தக சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

இன் நிலையில் கடத்தப்பட்ட வர்த்தகர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடையடைப்புப் போராட்டம் கைவிடப்படுவதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 79 பேர் பலி!!

Minnal

இந்தியாவில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 79 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் உள்ள பீகார், ஜாகர்கண்ட் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது.

மழையின்போது இடியுடன் கூடிய மின்னலும் தாக்கியுள்ளது. இந்த மின்னலுக்கு பீகாரில் 53 நபர்களும், ஜாகர்கண்ட்டில் 10 பேரும் மத்திய பிரதேசத்தில் 16 பேரும் பலியாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பலர் மழை பெய்தபோது பண்ணைகளில் பணிபுரிந்துள்ளனர்.

இந்தியாவில் பருவமழை கடுமையாக பெய்யும்போது மின்னல் தாக்கி நபர்கள் உயிரிழப்பது கடந்த 2005ம் ஆண்டில் இருந்து தொடர்கதையாக உள்ளது.

தேசிய குற்றப் பதிவு அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிபரத்தில் மின்னல் தாக்கி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 பேர் வரை பலியாகி வருவதாக தெரிவித்துள்ளது.

யூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொடங்கும் பருவமழையானது வருடத்தில் பெய்யும் மழையில் 80 சதவிகிதம் அளவிற்கு பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையைத் தொடர்ந்து லிபியாவில் ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பு : 25 பேர் பலி!!

Libiya1

லிபியாவில் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 25 பேர் பலியாகியுள்ளனர்.

குறித்த வெடிப்பு சம்பவம் மேற்கு லிபியாவின் கராபுலியில் அமைந்துள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் கடத்தப்பட்ட வர்த்தகர் விடுதலை!!

IMG_1577

வவுனியாவில் இனந்தெரியாதவர்களினால் நேற்று செவ்வாய்க்கிழமை (21.06.2016) இரவு கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் இன்று மதியம் 2 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விடுவிக்கப்பட்ட வர்த்தகர் தற்போது பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் வெளியே வந்தபின்னரே யாரால் எதற்க்காக கடத்தப்பட்டார் என்ற விபரங்கள் தெரியவரும் என்றும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சண்முகம் செல்வராஜா என்ற 55 வயதுடைய வர்த்தகரே, தனது வர்த்தக நிலையத்தில் இருந்து இரவு சுமார் 7 மணியளவில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது வீட்டு வாசலில் வைத்து கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

தொடர்ந்து முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

வவுனியாவில் சமுர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியாவில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் பொது மக்களால் தாக்கப்பட்டதை கண்டித்து வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் இன்று (22.06.2016) காலை 11.00 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா கலாபோகஸ்வெவ என்ற பிரதேசத்தில் வைத்து கடந்த 16 ஆம் திகதி சமுர்த்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டதை கண்டித்து இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பிரதேச செயலக சந்தியிலிருந்து பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றினை கையளித்தனர்.

1 DSC_0556 DSC_0561 DSC_0564 DSC_0565 DSC_0566 DSC_0568 DSC_0570 DSC_0571 DSC_0572 DSC_0573

இனி கதாநாயகர்களை கட்டிப்பிடிக்க மாட்டேன்!!

madonna-sebastian-premam-759

‘பிரேமம்’ மலையாள படத்தின் நாயகிகளில் ஒருவர் மடோனா. இவரது நடிப்பு சிறப்பாக இருப்பதாக பேசப்பட்டது. இதையடுத்து, விஜய்சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இப்போது பிரேமம் தெலுங்கு ‘ரீமேக்’கில் நடித்து வருகிறார். அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்துக்கும் மடோனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதில், மீண்டும் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேருகிறார்.
இந்த நிலையில், ‘காதல் காட்சிகளில் ஹீரோக்களை கட்டிப்பிடித்து நடிக்க மாட்டேன்’ என்று மடோனா நிபந்தனை விதித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரேமம் படத்தில் மடோனா நடித்த போதே, காதல் காட்சியில் நடிப்பேன். ஆனால் கதாநாயகனை கட்டிப்பிடிக்க மாட்டேன். நடனம் ஆடுவேன் அதில் கவர்ச்சி உடை அணிய மாட்டேன் என்ற நிபந்தனையுடன்தான் நடித்தார் என்று கூறப்படுகிறது. காதலும் கடந்து போகும் படத்தில் நாயகனை கட்டிப் பிடிக்கும் காட்சி இல்லை. ஆனால், மது அருந்திவிட்டு இரண்டு பேரும் ஒரே படுக்கையில் புரள்வது போன்ற காட்சி அதில் இடம் பெற்றிருந்தது. ‘நாயகனை கட்டிப் பிடிக்க மாட்டேன்’ என்ற மடோனாவின் அறிவிப்பால், இயக்குனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரை தங்கள் படத்துக்கு நாயகி ஆக்கலாம் என்று திட்டமிட்டிருந்த இயக்குனர்கள் இப்போது தங்கள் படத்துக்கு வேறு நடிகைகளை தேடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சிவகார்த்திகேயனுக்கு இயக்குனர் ஷங்கர் செய்த உதவி!!

sivakarthikeyan_shankar002

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ரைஸிங் ஸ்டார். இவர் படங்கள் வருகிறது என்றாலே தற்போதெல்லாம் எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகிறது.

இந்நிலையில் இவரின் ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் ட்ராக்கை இயக்குனர் ஷங்கர் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.இதற்காக சிவகார்த்திகேயன், ஷங்கருக்கு தன் நன்றியை தெரிவித்துள்ளார்.

அடக்கடவுளே ஹன்சிகாவுக்கு இப்படி ஒரு நிலைமையா?

hansika

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களை போல் இப்போது உள்ள நடிகர்களால் சினிமாவில் வெற்றிநடைபோட முடியவில்லை.அதிலும் ஹீரோயின்களுக்கு ரொம்பவும் மோசமான நிலைமை. தற்போது கிட்டத்தட்ட கரியர் முடியும் அளவிற்கு வந்துவிட்டார் ஹன்சிகா.ஜெயம் ரவியின் போகன் படம் மட்டுமே கையில் இருக்கிறதாம். அஜித்தை தவிர எல்லா முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

பட வாய்ப்புகள் இல்லாததால் நயன்தாரா, திரிஷா போல லீட் ரோலில் அதாவது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். சினிமாவில் தன் திறமையை நிரூபிக்க, இதுவரை ஹீரோ, புரொடக்‌ஷன் கம்பெனி இரண்டை வைத்து மட்டுமே கமிட் செய்துவந்த ஹன்சிகா இனி கதையிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறாராம்.

யாழில் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்த ஆசிரியர் : பெற்றோர் ஆர்ப்பாட்டம்!!

 
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகள் சிலருடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்ற ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பாடசாலைக்கு முன்பாக இன்று காலை 8 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறித்த ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டுமென நேற்றைய தினம், வலய கல்வி பணிமனைக்கு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த பாடசாலையில் உள்ள ஆசிரியர் ஒருவர் அங்கு கல்வி கற்கும் ஏழாம் வகுப்பு மாணவிகள் சிலரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக அந்த பாடசாலையில் பணியாற்றும் மற்றுமொரு ஆசிரியராலும், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களாலும் அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதிலும், அதிபர் இதனை மூடி மறைக்க முட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக கல்விப் பணிப்பாளர்களும் நீதிமன்றமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பெற்றோர்களும் பாடசாலையின் மாணவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

1 2 3 4 5

மைக்கேல் ஜாக்சன் அறையில் இருந்தது என்ன?

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1)
பாப் இசையின் மன்னர் என உலக ரசிகர்களால் அழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சனின் வீட்டினை கடந்த 2003 ஆம் ஆண்டு காவல்துறை சோதனையிட்டதில் கிடைத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. தனது நடனத்தால் உலக ரசிகர்களை தன் கைக்குள் வைத்திருந்த மைக்கேல் ஜாக்சன், அமெரிக்காவில் பல்வேறு அனாதை விடுதிகளை நடத்தி வந்தார், இவர் புகழ்பெற்றது போலவே, இவரது அனாதை விடுதிகளும் புகழ்பெற்றது.

ஆனால் காலப்போக்கில், அங்குள்ள குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டிற்கு ஆளாகிய காரணத்தால் இவர் புகழ் சரிய ஆரம்பித்தது, கூடவே இவர் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால் அதுவே இவரது மரணத்திற்கு வழிவகுத்தது.இவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு வழக்கு 2003 முதல் 2005 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது, 2005 ஆம் தன்னை நிரபராதி என நிரூபித்துகொண்டு அமெரிக்காவைவிட்டு வெளியேறி, பக்ரைனில் குடியேறினார்.

இந்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நெவர்லேண்ட் பண்ணை வீட்டிற்குள் சுமார் 70 பொலிசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.இதில், அவரது அறைக்குள் 1 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நிர்வாணப்படங்கள், நிர்வாணப்பட தொகுப்புகள் அடங்கிய புத்தகங்கள், வீடியோக்கள் போன்றவை அதிகமாக இருந்துள்ளன.

மற்றொரு அறையில், டிஸ்னிலேண்டில் இருக்கும் பொம்மைகள் போன்று ஏராளமான பொம்மைகள் காணப்பட்டுள்ளன, இதனை கைப்பற்றிய பொலிசார் இருவிதமான கருத்துக்களை தெரிவித்தனர்.

ஒரு தரப்பினர், குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதற்காக மைக்கேல் ஜாக்சன் இதுபோன்ற பொம்மைகளை பயன்படுத்தியுள்ளார் என்றும் மற்றொரு தரப்பினர், மைக்கேல் ஜாக்சன் நடத்திவரும் அனாதை விடுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு பரிசளிப்பதற்காக இந்த பொம்மைகளை தனது அறைகளில் வைத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.தற்போது, சோதனையின்போது கிடைத்த புகைப்படங்கள் நீதிமன்றத்தின் அனுமதியோடு வெளியிடப்பட்டுள்ளன.

தண்டவாளத்தில் தடம்புரண்ட பயணிகள் ரயில் : உருண்டோடிய பெட்டிகள்!!

625.0.560.320.500.400.194.800.668.160.90

தைவான் நாட்டில் சற்று முன்னர் பயணிகள் ரயில் ஒன்று தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.தைவான் நாட்டில் உள்ள Hualien என்ற நகர்ப்பகுதியில் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று சற்று முன்னர் தடம்புரண்டதில், 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி பிரிந்து சென்றுள்ளது. ஒரு பெட்டி உருண்டு சென்றுள்ளது.இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ள வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளன.

 

அன்று நாய்களோடு, இன்று 9 வது மாடியில் : உருக்கமாக பேசிய கருணாஸ்!!

karunas45201241842AM

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ் நேற்று சட்டசபையில் உருக்கமாக பேசியுள்ளார்.சென்னையில் தங்க இடம் இல்லாமல் எம்எல்ஏ விடுதி வளாகத்தில் காவலர்களுக்கு தெரியாமல் நாய்களோடு படுத்து உறங்கினேன்.

அப்படிப்பட்ட நான் இன்று, எம்எல்ஏவாக அதே விடுதியின் 9 வது மாடியின் தங்கும் நிலையில் உள்ளேன் என்றால், அதற்கு முழுக்காரணம் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் எனக்கூறியுள்ளார்.

மேலும் இதற்கு நன்றி தெரிவித்துக்கொண்ட அவர், திருவாடனை தொகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் ராமநாதபுரத்தில் உள்ள கண்மாய்களை தூர்வார வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை குடிக்க வைத்து ராகிங் : பாதிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்!!

625.0.560.320.500.400.194.800.668.160.90
கர்நாடகாவில் நர்சிங் கல்லூரி மாணவியை பினாயிலை குடிக்க வைத்து சீனியர் மாணவிகள் ராகிங்கில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தஅஸ்வதி என்ற மாணவி, ஐந்து மாதங்களுக்கு முன்னர்தான் கர்நாடக மாநிலம் குல்பர்காவில்உள்ள அல் குமர் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்துள்ளார்.கடந்த மே மாதம் 9-திகதி ராகிங்கில் ஈடுபட்ட அக்கல்லூரியின் சீனியர் மாணவிகள், அஸ்வதியை கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை குடிக்க வைத்துள்ளனர்.

இந்த கொடூரத்தில் ஈடுபட்ட சீனியர் மாணவிகளும் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும்தெரிய வந்துள்ளது.இந்த சம்பவம் நடந்த ஐந்து நாட்களுக்கு பின்னர் கடுமையான வயிற்று வலியால்அவதிப்பட்ட அஸ்வதி, சிகிச்சைக்காக கேரள மாநிலம் கோழிக்கோடில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.அங்கு அவர் 5 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்றுள்ளார்.

டக்டர்கள் அளித்துள்ள தகவலில், கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை குடித்ததால், அவரின் உணவுக்குழாய் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் அஸ்வதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள அஸ்வதி அளித்துள்ள வாக்கு மூலத்தில், வங்கியில் கடன் வாங்கி குறித்த படிப்பில் சேர்ந்ததாகவும்,கல்லூரியில் சேர்ந்த நாள் முதல், கடந்த ஐந்து மாதங்களாக தான் ராகிங் கொடுமையை அனுபவித்து வந்ததாக தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து கோழிக்கோடு பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.