பாடசாலையின் மீது மரம் முறிந்து விழுந்ததால் கற்றல் நடவடிக்கை பாதிப்பு!!

school

டிக்கோயா, இன்ஜெஸ்ட்ரி தமிழ் வித்தியாலயத்தில், இன்று அதிகாலை வீசிய பலத்த காற்றினால் மரமொன்று முறிந்து விழுந்ததனால் பாடசாலையின் கூரை சேதமாகியுள்ளதுடன் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஏ.பாலையா தெரிவித்தார்.

இதனால் தரம் 1, 10, 11 மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கணனி அறையும் பாதிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாடசாலையின் மைதானத்தில் இடம்பெற்று வருவதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதற்கு தீர்வு எடுக்க வேண்டும் எனவும், இது தொடர்பில் தொலைபேசியின் மூலம் கல்வித் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து பதுளை வரையில் புதிய விமான சேவை!!

hqdefault

கொழும்பிலிருந்து பதுளை வரைவில் விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பண்டாரவளையில் உள்நாட்டு விமான நிலையமொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து பதுளைக்கு தரை மார்க்கமாக பயணிக்க 6 மணித்தியாலயங்கள் செலவாகின்றன. இந்த தூரத்தை வான் மார்க்கமாக 25 நிமிடங்களில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வான் போக்குவரத்து மூலம் சுற்றுலாத்துறையையும் விருத்தி செய்து கொள்ளலாம். இதனால் பதுளை மாவட்டத்தில் உள்நாட்டு விமான நிலையம் ஒன்றினை அமைப்பது மிகவும் பயன்மிக்கதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மதகுரு என கூறி சிறுநீரக நோயாளிகளை ஏமாற்றிய நபர் கைது!!

arrest (1)
அக்குரஸ்ஸ பகுதியில் சிறுநீரக நோயாளிகளிடம் இருந்து பணம் சேகரித்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் அத்துரலிய பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர் தன்னை ஒரு மதகுரு என கூறி, சிறுநீரக நோயாளிகளிடம் தொலைபேசி ஊடாக அழைப்பினை ஏற்படுத்தி சிறுநீரகம் நன்கொடையாக வழங்குவதாக கூறியே இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தனது போக்குவரத்து செலவுகளுக்காக பத்தாயிரம் ரூபாயை வைப்பிலிடுமாறும், தொலைபேசி ஊடாக தெரிவித்து சிறுநீகரம் தேவையான பலரை ஏமாற்றி பணம் பெற்று வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலும் குறித்த நபருக்கு எதிராக ஏற்கனவே குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபரை மாத்தறை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி!!

Shooting

மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் வாகனமொன்றில் வந்த சிலர், நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்றின் மீது இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவத்தில் மரணமடைந்தவரின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-அத தெரண-

இந்திய பிரஜை ஒருவரின் சடலம் கல்பிட்டியில் மீட்பு!!

1 (44)

கல்பிட்டி, தலவில, கப்பலடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாககல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் இந்திய பிரஜை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபரின் பையில் இந்திய நாணயத்தாள்கள் காணப்பட்டதாகவும், இவர் இந்தியமீனவராக இருக்கலாம் எனவும் சந்தேகிப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துவருகின்றனர்.

செயலிழந்த யூடியூப்(Youtube) இணையத்தளம்!!

Youtube

அதிக பாவணையாளர்களால் உபயோகிக்கப்படும் வீடியோ தளமான யூட்யூப் நேற்று தீடீரென செயலிழந்தது. செயலிழந்த யூட்யூப் தளம் மீண்டும் 15 நிமிடங்களுக்கு பின்னரே இயல்பு நிலைக்கு திரும்பியது.

செயலிழந்த யூட்யூப் தளத்தில் “மிகவும் பயிற்சி பெற்ற குழுவொன்று இந்த நிலைமையை சமாளிக்க அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அவர்களை கண்டால் இதனை தெரியப்படுத்துங்கள் ” என்ற வாசகம் காட்சிபடுத்தப்பட்டிருந்தது

இலங்கை அகதிகள் திருப்பியனுப்பப்பட்டால் தற்கொலை செய்துகொள்வார்கள் : த காடியன்!!

Ref

இந்தோனேசியாவில் நிர்க்கதியான நிலையில் தங்கியுள்ள 44 இலங்கை அகதிகளும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டால் அவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக த காடியன் தெரிவித்துள்ளது.

இதன் நிமித்தம் த காடியனால் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பல இலங்கையர்கள் நேர்காணல் செய்யப்பட்டனர்.

2010 ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து தற்போது அவுஸ்திரேலிய பிரஜையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒருவரின் கருத்துப்படி, இந்தோனேசியாவில் உள்ள இந்த அகதிகள் மீண்டும் இந்தியாவுக்கோ அல்லது இலங்கைக்கோ திருப்பியனுப்பப்பட்டால் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவார்கள் அல்லது அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த 44 அகதிகளின் படகு இந்தியாவில் இருந்து புறப்பட்ட பின்னர் தமக்கு செய்மதி தொலைபேசி மூலம் அந்த செய்தி தெரிவிக்கப்பட்டதாக கூறும் கரிகாலன் எனினும் அடுத்து வந்த 10 நாட்களில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த அகதிகளை அடையாளம் காணும் பணிகள் முடிந்த பின்னர் அவர்களை இலங்கைக்கு திருப்பியனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அச்சே பிராந்திய குடிவரவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Srilanka Refugees

வவுனியா வளாகம் ஏற்பாடு செய்துள்ள வியாபார கற்கைகள் ஆய்வு மாநாடு!!

 
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமானது வியாபார கற்கைகள் ஆய்வு மாநாடொன்றினை எதிர்வரும் வெள்ளிகிழமை நடத்த திட்டமிட்டுள்ளதாக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

யதார்த்த உலகிற்கான வியாபர சவால்களுக்கான ஆய்வு ரீதியான தீர்வுகள் எனும் தலைப்பில் மனிதவள முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் முகாமைத்துவம், பொருளியல் மற்றும் நிதியியல், பொது முகாமை என்ற நான்கு பிரிவுகளில் விடய ஆய்வுகள் இடம்பெறவுள்ளது.
இதற்கான பதிவுகளை www.vau.jfn.ac\lk\fbs\rcbs என்ற இணையத்தள முகவரியினூகவோ அன்றேல் வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுயா வளாகத்திலோ பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் வியாபார கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ஏ. புஸ்பநாதன் மற்றும் ஏனைய விரிவுரையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

1 IMG_1596 IMG_1607 IMG_1608 IMG_1611

அதிகாலையில் எழுவதில் அப்படி என்ன நன்மைகள் இருக்கின்றன என்று தெரியுமா?

201606220827499040_Wake-up-in-the-morning-what-benefits_SECVPF

அதிகாலையில் எழும்படி நம் வீடுகளில் பெரியவர்கள் கத்திக்கொண்டே இருப்பார்கள். ஆனால் பலருக்கு அதுதான் உலக மகா கஷ்டமான காரியம். சரி, அதிகாலையில் எழுவதில் அப்படி என்ன நன்மைகள் இருக்கின்றன என்று தெரியுமா?

அதிகாலையில் மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இதனால், தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். காலையில் தூய்மையான காற்றைச் சுவாசிப்பதால், நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் நெருங்காது. அதிகாலையில் மூச்சுப் பயிற்சி, யோகா செய்வது, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நலம் பயக்கும்.

அதிகாலையில் எழுவதால் மன அழுத்தம் குறையும். அன்றைய நாளில் என்னென்ன வேலைகள் இருக்கின்றன, அவற்றில் எவற்றை, எப்போது, எங்கே, எப்படி முடிப்பது என எளிதாகத் திட்டமிட முடியும். உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது, அதிக ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்ய முடியும். அதிகாலை எழுவதால், காலை வேளையில் கபகபவென்று பசி எடுக்கும். காலை ஆகாரத்தை தவறவிடாமல் இருப்பதால், உடல் பருமன், சர்க்கரைநோய் அபாயம் குறையும்.

இரவு 9 மணிக்கெல்லாம் உறக்கம் தானாக வர ஆரம்பிக்கும். இரவு சரியான நேரத்துக்குத் தூங்குவதால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது. வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். அதிகாலை எழுவதால் சரியான நேரத்தில் இயற்கைக் கடனைக்கழிக்க முடியும். அது, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும். நச்சுக்கள் சீராக வெளியேறுவதால் சிறுநீர், கல்லீரல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் சீராக இயங்கும்.

உடல்நலனுக்கு மட்டுமல்ல, மனநலனுக்கும் அதிகாலையில் எழுவது சிறந்தது. எனவே, அதிகாலையில் எழும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக வழக்கமாக்கிக் கொள்வோம்.

கேலிக்கூத்தாகிய விஜய் டிவி நீயா நானா!!

Neeyaa Naanaa

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமீப காலமாக மிகவும் அபாயகரமான கட்டத்தை எட்டி வருகின்றது. இதில் உச்சக்கட்டமாக சமீபத்தில் விஜய் டிவியில் நீயா நானாவில் பேய் பற்றி பேசினார்கள்.

இதில் ஒரு பெண் முடிந்தால் என் மீது பேய் பிடிக்க வை என்று கூறி தனி அறைக்கு சென்றனர், கடைசி வரை பேய் வரவே இல்லை.

என்ன தான் விழிப்புணர்வு என்றாலும், TRPக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்களா என கோபமாக மக்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

அனைத்தையும் தாண்டி, பாயாசம் எங்கடா? என்பது போல் பேய் எங்கடா? என பலரையும் கேட்க வைத்து நெட்டிசன்களுக்கு மீம்ஸ் வேட்டையாக அமைந்தது.

சூரியமண்டலத்துக்கு வெளியே மிகவும் இளமையான பூமி போன்ற கிரகம் கண்டுபிடிப்பு!!

new-born-planet

புதிய கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தை ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மையம் கெப்லர் விண்கலத்தில் சக்தி வாயந்த டெலஸ்கோப்பை பொருத்தி விண்வெளியில் பறக்க விட்டுள்ளது.

கெப்லர் விண்வெளி தொலைநோக்கி, தொடர்ந்து நமது சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட 150,000 நட்சத்திரங்களை மேற்பட்ட கண்காணித்து வருகிறது. சமீபத்தில் 4,000 இற்கும் மேல் முக்கிய கிரகங்களாகக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது கெப்லர் விண்கலம் சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியை விட 5 மடங்கு பெரிய அளவிலான ஆனால் பூமியை விட இளமையான கிரகம் ஒன்றை கண்டு பிடித்துள்ளது. இதற்கு கே 2-33 பி என பெயரிடப்பட்டுள்ளனர்.

இது பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த புதிய கிரகம் 50 லட்சம் முதல் 1 கோடி ஆண்டுகள் பழமையானது என கணிக்கப்பட்டுள்ளது. இது வியாழன் அல்லது நெப்டியூன் கிரகங்களில் இருந்து உருவாகியிருக்கலாம் என கருதப்படுகின்றது.

எச்சரிக்கை : கைத்தொலைபேசியில் பாட்டுக்கேட்டுக்கொண்டு உறங்காதீர்கள்!!

Dont Use mobile while Sleeping

உறங்கும் போது போனில் ‪‎சார்ஜ்‬ போட்டு ‪ஏர்போனில்‬ பாட்டுக்கேட்டு தூங்குபவர்களா நீங்கள் இழப்பது உங்கள் உயிராக இருக்கும் போனில் மின்சாரம் பூர்த்தி ஆன பின் அதிகபடியான மின்சாரத்தை காதில் மாட்டியிருக்கும் ஏர்போனின் சிறிய மின்காந்தத்தால் உடலில் பாய்ச்சுகிறது.

இதனால் நரம்புமண்டலத்திலிருந்து வரும் சிறிய நரம்புகளின் இரத்தம் உறைந்து முளையின் ஞாபகசக்தியை அதாவது மலட்டுதன்மை ஏற்ப்படுத்துகின்றது.

இதனால் சுயநினைவை இழந்துவிடுகிறோம் பின்னர் மத்திய நரம்புமண்டலத்தின் இரத்தத்தை உறையவைக்கிறது அப்போது சில நரம்புகள் வெடிக்கின்றது இதனால் இதயத்திலிருந்து கழுத்திற்க்கு மேலே செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டு உயிர் இழப்பு ஏற்ப்படுகிறது.

11 12 13 14

நடுவீதியில் நின்று சண்டையிட்ட சாரதிகளால் அவதியுற்ற பயணிகள்!!

1

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேரூந்துகள் முள்ளிவாக்கால் பகுதியில் நடுவீதியில் நிறுத்தி நீண்ட நேரம் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டமையினால் பேரூந்தில் பயணித்த பயணிகள் மற்றும் வீதியால் பயணித்தவர்கள் பெரும் அவதிக்குள்ளாகிய சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

கொக்குத்தெடுவாய் – பருத்திதுறை பேரூந்து மற்றும் திருகோணமலை- யாழ்ப்பாணம் பேரூந்து ஆகிய இரண்டு பேரூந்துகளும் குறித்த வீதியின் நடுவில் நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டு சாரதிகள் தகராறில் ஈடுப்பட்டனர்.

இரண்டு பேரூந்துகளும் பயணிகளின் பாதுகாப்பை கொஞ்சமும் கருத்தில் எடுக்காது, வீதியில் பயணிப்போருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்தியதோடு ஒருவரையொருவர் முந்திக்கொள்ளும் வகையில் பேரூந்து சமிஞ்கை விளக்குகளை கூட சரியாக பயன்படுத்தாது செயற்பட்டமை பயணிகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு பயணிகளை அவர்கள் இறங்க வேண்டிய உரிய இடத்தில் இறக்கிவிடாது தாங்கள் விரும்பிய இடங்களில் இறக்கிவிட்டு வந்த சம்பவங்களும் இடம்பெற்றது.

குறிப்பாக கொக்குத்தொடுவாய்- பருத்திதுறை பேரூந்து தொழிற்பயிற்சிக்கு சென்று திரும்பிய இரண்டு யுவதிகளை அவர்கள் இறங்க வேண்டிய இடத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் அப்பால் சென்று இறக்கியது மட்டுமன்றி, நடத்துனர் இரண்டு யுவதிகளையும் கடுமையாக திட்டியுமுள்ளார்.

இதனால் அழுதவாறே இரண்டு யுவதிகளும் பேரூந்திலிருந்து இறங்கி புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு பாதையில் மாத்தளன் நோக்கிச்செல்லும் சந்திவரை திரும்பி நடந்துவந்த அவலமும் நடந்துள்ளது.

இதனைவிட வீதியால் பயணித்த ஏனைய வாகனங்கள் மற்றும் பொது மக்களும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இவர்களின் இந்த முரண்பாடுகளின் போது முல்லைத்தீவிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த முல்லைத்தீவு அரச அதிபரின் வாகனம் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வந்தமையினை அவதானித்த பின்னரே கொக்குத்தொடுவாய் -பருத்துறை பேருந்து சாரதி தன்னுடைய பேரூந்தை நடு வீதியில் இருந்து எடுத்துச்சென்றார்.

இருந்தும் அவர் தனது ஆபத்துமிக்க ஓட்டத்தை கைவிடவில்லை. இதனால் பல இடங்களில் பயணிகள் கூச்சல் இட்டமையும் அவதானிக்க முடிந்தது.

2

புதிய மைல்கல்லை எட்டிய குமார் சங்கக்கார!!

Sri Lanka Sangakkara Signing Off

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார முதல் தரப் போட்டிகளில் 19 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 2வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டை கலக்கிய சங்கக்கார, முதல்தரப் போட்டிகளில் Central Province, Colombo District Cricket Association, Durham, Kandurata, Marylebone Cricket Club, Nondescripts Cricket Club மற்றும் Warwickshire ஆகிய அணிக்காக விளையாடினார்.

இந்நிலையில் முதல்தரப் போட்டிகளில் 19 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். 246 போட்டிகளில் ஆடியுள்ள சங்கக்கார மொத்தம் 19,011 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

இதன் மூலம் 19 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 2வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னாள் இலங்கை வீரர் மெண்டிஸ் 366 போட்டிகளில் 21,436 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

இலங்கை சேர்ந்த ஜெயவர்த்தன (17,843), திலான் சமரவீர (15,501), லடி அவுட்ஸ்சோரன் (15,496) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

500 கோடி மாத சம்பளம் பெறும் இந்திய நபர்!!

Nikesh-arora

ஜப்பான் நாட்டு நிறுவனமான சாப்ட்பேங்கின் தலைவராக ஆக நிகேஷ் அரோரா கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இந்தியாவில் பிறந்தவரான இவர் இதற்கு முன்பு கூகுள் நிறுவனத்தின் பணிபுரிந்தார். கடந்த நிதி ஆண்டில் இவர் 73 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பளமாக பெற்றார். இது இந்திய மதிப்பில் 500 கோடி ரூபாய் ஆகும்.

இதன் மூலம் உலக அளவில் அதிக சம்பளம் பெறும் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

தற்போது சாப்ட்பேங்கின் சி.இ.ஓ. ஆக இருக்கும் நிறுவனர் மாசாயோஷி சானுக்கு பிறகு, அந்த இடத்திற்கு நிகேஷ் அரோரா நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட போவது இல்லை என்று சாப்ட்பேங்க் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த நிகேஷ் அரோரா சாப்ட்பேங்கின் தலைவர் மற்றும் சி.ஓ.ஓ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்ற ஈழத்துச் சிறுவன்!!

13465963_10157183565860637_470112622586774192_n

ஈழத்தைச் சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீரர், 2016 ஆண்டுக்கான கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் வல்வையைச் சேர்ந்த அகிலன் கருணாகரன் அயர்லாந்தில் (டப்ளின்) 15ம் திகதி முதல் 19ம் திகதி வரை நடைபெற்ற கராத்தே உலக சம்பியன்ஷிப்பில் பங்கேற்றார்.

இதில் 36 நாடுகளில் இருந்து 2254 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். kumiteக்கான போட்டியில் 66 போட்டியாளர்கள் பங்கேற்ற பிரிவில் விளையாடி முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கதக்கத்தை பெற்றுக்கொண்டதுடன் இந்த ஆண்டுக்கான உலக சம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

2014ல் போலந்து நாட்டில் நடந்த சம்பியன்ஷிப்பில் இவர் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார். 2015ல் பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய சம்பியன்ஷிப்பில் இவர் kumite விளையாட்டில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

13494754_10157183566795637_8959494036792949533_n 13507087_10157183567050637_7285759289551184295_n