பதினைந்து வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிரசவம்!!

Baby

நாவலப்பிட்டிய பிரதேசத்தில் முழுமையான விபரங்கள் தெரியாத இளைஞன் ஒருவன் மூலமாக பதினைந்து வயது யுவதியொருவர் ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். இச்சம்பவம் நேற்று நாவலப்பிட்டிய , இங்குரு ஓயா பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த சிறுமி வயிற்று வலி காரணமாக அவரது தகப்பனாரால் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளதுடன் , நேற்றைய தினம் ஆண்குழந்தை ஒன்றையும் பிரசவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி சில மாதங்களுக்கு முன்னர் கண்டியில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

எனினும் அந்த இளைஞனின் ஊர் பெயர் எதுவும் தெரியாத நிலையில், அவருடையை தொலைபேசி இலக்கம் மூலமாக இருவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சிறுமி சில மாதங்களுக்கு முன்னர் குறித்த தனியார் நிறுவன வேலையிலிருந்தும் விலகியுள்ளார்.

அதன் பின்னர் அவருடன் தொடர்பில் இருந்த இளைஞனுக்கும் அவருக்கும் இடையிலான தொடர்பும் கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பதினைந்து வயது சிறுமியை தாயாக்கிய குறித்த இளைஞன் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பறக்கும் விமானத்தில் இளம்பெண்ணை முத்தமிட முயன்ற இளைஞன்!!

alaska-airlines

அமெரிக்காவில் விமான பயணத்தின்போது தூக்கத்தில் இருந்த இளம்பெண்ணை முத்தமிட முயன்ற இளைஞன் ஒருவர் பொலிசாரால் கைதாகியுள்ளார்.

அலாஸ்கா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று போர்ட்லாண்ட் பகுதியில் இருந்து Anchorage பகுதிக்கு சென்றுகொண்டிருந்தது.

அப்போது அந்த விமானத்தில் 16 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தூங்கியபடியே பயணித்து வந்துள்ளார்.

இதனிடையே தூக்கத்தில் இருந்த இளம்பெண்ணை அவரது அருகில் இருந்து பயணம் செய்து வந்த 23 வயதான இளைஞன் ஒருவன் திடீரென முத்தமிட முயன்றுள்ளான்.

இச்சம்பவம் விமானியிடம் தெரிவித்ததையடுத்து அந்த பயணிகள் இருவரையும் வேறு வேறு இருக்கைகளில் அமர்த்தியுள்ளனர்.

மேலும் விமானத்தை சியாட்டில் பகுதியில் உள்ள டகோமா விமான நிலையம் நோக்கி திருப்பிவிட்டுள்ளனர். அங்கு விமானம் தரையிறங்கியதும், சம்பந்தப்பட்ட அந்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறிப்பிட்ட இளம்பெண்ணை பயணத்தை தொடர அனுமதி அளித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் போர்ட்லாண்ட் பகுதியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் 26 வயது நபர் ஒருவர் 13 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை தந்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கு கெடு வைத்த விவசாயிகள்!!

Rajani

கடந்த 2002 அக்டோபர் 13ம் திகதி காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக, கர்நாடகா அரசைக் கண்டித்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் ரஜினி உண்ணாவிரதம் இருந்தார்.

பின், கவர்னரை சந்தித்து மனு அளித்த ரஜினி, நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு, என்னுடைய சொந்த நிதியில் இருந்து, ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என அறிவித்தார்.

அறிவித்து, 14 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் கூட அவர் இதுவரை அந்த நிதியை, மாநில அரசிடமோ, மத்திய அரசிடமோ அளிக்கவில்லை.

இப்போது, மத்தியில் ஆளும் பா.ஜ அரசும், முதல்வர் ஜெயலலிதாவும் நதிநீர் இணைப்பு விஷயத்தில் முனைப்பாக செயல்படுகின்றனர். எனவே, ரஜினி அறிவித்தபடி ஒரு கோடி ரூபாய் நிதியை உடனடியாக அளிக்க கோரி, அவரது வீட்டில் மனு கொடுத்துள்ளோம்.

ஒரு மாதத்துக்குள் கொடுக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம் என தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

2016 இல் வெற்றி, தோல்விப் படங்கள் எவை என்று தெரியுமா?

Film 2016

இந்த வருடத்தின் அரையாண்டு முடியவுள்ளது. இந்நிலையில் அதற்குள் 100க்கும் அதிகமான படங்கள் வந்துவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஆங்கிலப்பத்திரிக்கையில் இந்த வருடத்தில் இதுவரை வெளிவந்த வெற்றி, தோல்வி படங்கள் குறித்து ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது.

இதில் அனைத்து தரப்பினருக்கும் லாபம் தந்த படங்கள் என தெறி, ரஜினிமுருகன், பிச்சைக்காரன், தோழா, இது நம்ம ஆளு, இறுதிச்சுற்று, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சேதுபதி, மிருதன், மருது ஆகிய படங்களை குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல் நல்ல விமர்சனம் வந்து சுமாரான லாபம் தந்த படங்கள், போட்ட பணத்திற்கு பாதிப்பு இல்லை, தோல்வி என சில படங்களை கூறிப்பிட்டுள்ளனர். இதில் 24, பெங்களூர் நாட்கள், காதலும் கடந்து போகும், இறைவி, மனிதன், விசாரணை, உறியடி, ஒரு நாள் கூத்து, ஆறாது சினம், ஜீரோ ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளது.

மாணவிகள் ஐவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!!

jail

யாழ். நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள் ஐவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த ஆசிரியரை எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் சதீஸ்கரன் உத்தரவிட்டார்.

ஆசிரியர் ஒருவர் அங்கு கல்வி கற்கும் மாணவிகள் சிலருடன் தகாத முறையில் நடந்து கொண்டதையடுத்து குறித்த ஆசிரியரை கைது செய்து அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடசாலை மாணவர்களும் பழைய மாணவர்களும் வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த ஆசிரியரை கைது செய்த பொலிஸார் விசாரனைகளை, அடுத்து இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரயில் மீது கல்வீச்சு : கர்ப்பிணிப் பெண் காயம்!!

141264195Untitled-1

பதுளையில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த ரயில் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஹட்டன் – சிங்கிமலை பகுதியிலுள்ள சுரங்கப் பாதையில் வைத்தே, இன்று பிற்பகல் 03.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இதன்போது காயமடைந்தவர் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த பெண் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த பகுதியில் வைத்து இதற்கு முன்னதாகவும் இவ்வாறான கல் வீச்சு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், இது குறித்து ஹட்டன் பொலிஸாருக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும், அவர்கள் கூறியுள்ளனர்.

இதுஇவ்வாறு இருக்க கல்வீச்சில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

141264195Untitled-1 (1) 141264195Untitled-1 (2)

கொழும்பில் தேங்காய் உருவில் ஆஞ்சநேயர் : தீயாக பரவும் அதிசயம்!!

11

கடந்த சில தினங்களுக்கு முன்பு குறித்த வீடு ஒன்றில் தேங்கயை பயன்படுத்த எடுக்கும் போது அதன் மேல் பகுதியில் ஆஞ்சநேயர் உருவம் போன்ற ஒரு காட்சி வெளிப்பட்டுள்ளது.

இதை கண்ட குறித்த நபர் இந்த அதியசமான தேங்காயை கொழும்பு 13 கண்ணார தெரு ஸ்ரீ பாமா ருக்மணி பார்த்த சாரதி ஆலயத்திற்கு வழங்கியுள்ளார்.

இதேவேளை, குறித்த தேங்காயைப் பார்வையிடுவதற்காக பல்லாயிரக் கணக்காண பக்தர்கள் கோயிலுக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

12

முகமூடி நபரால் திரையரங்கில் துப்பாக்கி சூடு : 50 பேர் படுகாயம் : ஜேர்மனியில் பதற்றம்!!

VIERNHEIM, GERMANY - JUNE 23: Heavily-armed police stand outside a movie theatre where an armed man has reportedly opened fire on June 23, 2016 in Viernheim, Germany. According to initial media reports, the man entered the cinema today at approximately 3pm, fired a shot in the air and barricaded himself inside. (Photo by Alexander Scheuber/Getty Images)

ஜேர்மனி திரையரங்கு ஒன்றில் முகமூடி அணிந்த நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாகி சூட்டில் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரை பொலிஸார் சுட்டு கொலை செய்துள்ளனர். இதனால் இப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஜேர்மனியின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள கினெபோலிஸ் திரையரங்கு கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்த நபர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாகி சூடு நடத்திய நபர் கையில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளன.

தற்போது திரையரங்கு முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

வவுனியாவில் பொலிஸ் வாகனம் மோதி இருவர் படுகாயம்!!

 
வவுனியா குளுமாட்டுச்சந்தியில் இன்று (23.06.2016) சற்றுமுன் பொலிஸ் வாகனம் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியாவிலிருந்து மரக்காரம்பளை வீதிக்கு திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கில் மீது இன்று (23.06.2016) இரவு 7 மணியளவில் குளுமாட்டுச்சந்தியில் காத்தான் கோட்டத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பொலிஸ் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இளைஞன், யுவதி இருவரும் படுகாயமடைந்துள்ளனார்.

சம்பவ இடத்திலிருந்து பொலிஸாரின் வாகனம் எடுத்துச் செல்லப்பட்டு வேப்பங்குளத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையில் மறைந்து வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இடம்பெற்று 1 மணி நேரம் கடந்த நிலையிலும் இது வரை போக்குவரத்துப் பொலிசார் சமூகமளிக்கவில்லை.

1 DSC_0097 DSC_0098 DSC_0099 DSC_0100 DSC_0101 DSC_0102 DSC_0103 DSC_0104 DSC_0105 DSC_0107 DSC_0108 DSC_0109 DSC_0110 DSC_0111

நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி : அதிர்ச்சித் தகவல்!!

Sarath-Kumar

நடிகர், அரசியல் பிரமுக என பண்முகம் கொண்டவர் சரத்குமார். இவர் சில நாட்களாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்தார்.நடிகர் சங்க தோல்விக்கு பிறகு கொஞ்சம் தமிழ் சினிமாவை விட்டு விலகியே இருந்தார். இந்நிலையில் இவருக்கு திடிரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

உடனே இவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். இச்செய்தி திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் உடல்நிலை குறித்து தனஞ்செயன் அவர்கள் ‘மீண்டும் அவர் பழைய பலத்துடன் வருவார், மிகவும் தைரியமானவர் அவர்’ என டுவிட் செய்துள்ளார்.

நள்ளிரவில் பேருந்தில் தனியாக பயணம் செய்த ஒரு வயது குழந்தை: நடந்தது என்ன?

taking+transit+with+a+child
ஜேர்மனி நாட்டில் நள்ளிரவு வேளையில் பேருந்து ஒன்றில் ஒரு வயது ஆண் குழந்தை தனியாக பயணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முனிச் நகரில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றிற்கு 22 வயதான தாய் ஒருவர் அவருடைய ஒரு வயதான ஆண் குழந்தையை தூக்கி சென்றுள்ளார்.

முனிச் நகரிலிருந்து சுமார் 584 கி.மீ தொலைவில் உள்ள ஜேர்மனியின் தலைநகரான பெர்லின் நகருக்கு பேருந்தில் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். பேருந்து ஏறி இருக்கையில் அமர்ந்துள்ளார். பின்னர், நீண்ட தூர பயணம் என்பதால், குழந்தையை நன்றாக தூங்க வைத்துள்ளார்.அப்போது, பேருந்தை ஓட்டுனர் எடுக்கும் நேரத்தில் தாயாருக்கு கழிவறை செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

‘நான் கழிவறைக்கு செல்கிறேன். நான் வரும் வரை தயவுசெய்து பேருந்தை எடுக்க வேண்டாம்’ என தாயார் ஓட்டுனரிடம் தெரிவித்து விட்டு பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு அவர் திரும்பி வந்து பார்த்த போது வாகனம் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.அதாவது, ‘பேருந்திற்குள் இருக்கும் கழிவறையில் தான் பெண் இருக்கிறார்’ என தவறாக எண்ணிய ஓட்டுனர் பேருந்தை எடுத்துச் சென்றுவிட்டார்.

வேதனை அடைந்த பெண் உடனடியாக பேருந்திற்கு சொந்தமான அலுவலக ஊழியர்களை நேரில் சந்தித்து நடந்தவற்றை கூறியுள்ளார்.ஆனால், துரதிஷ்டவசமாக அந்த ஊழியர்களிடம் ஓட்டுனரின் கைப்பேசி எண்கள் இல்லை. அப்போது பொலிசாரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

ஓட்டுனரை தொடர்புக்கொள்ள வழியே இல்லாததால், தாயாரை பின் இருக்கையில் அமர வைத்து பேருந்தை தடுத்து நிறுத்த பொலிசார் புறப்பட்டுள்ளனர்.அதிவிரைவாக பறந்த பொலிசாரின் வாகனம் சுமார் 80 கி.மீ தொலைவை கடந்து சென்றுக்கொண்டு இருந்த அந்த பேருந்தை Ingolstadt என்ற நகரில் மடக்கி பிடித்தனர்.

பேருந்திற்குள் கண்ணீருடன் தாய் நுழைந்து குழந்தையை தேடியபோது, அந்த குழந்தை எவ்வித அசைவும் இன்றி ஆழ்ந்த நித்திரையில் இருந்துள்ளது.அதாவது, 80 கி.மீ தூரத்தையும் குழந்தை தூங்கியவாறே பயணம் செய்துள்ளது. குழந்தை திரும்ப கிடைத்த மகிழ்ச்சியில் தாயார் பொலிசாருக்கு நன்றி தெரிவித்து விட்டு அதே பேருந்தில் பெர்லின் நகருக்கு புறப்பட்டார்.

செல்பி புகைப்படத்தால் 7 பேர் பலி!!

Business Selfie

கான்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜுகி மற்றும் கொலோன்கஞ்ச் பகுதிகளை சேர்ந்த 7 நண்பர்கள் கங்கை நதிக்கு குளிக்க சென்றனர். அங்கு கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் கங்கை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.நண்பர்களில் சிவம் என்ற வாலிபர் குளித்து கொண்டிருக்கும் போதே தனது ஸ்மார்ட்போனை கொண்டு ‘செல்பி’ எடுக்க முயன்றார். அப்போது அவர் நிலைதடுமாறி தண்ணீருக்குள் மூழ்கினார். இதைப்பார்த்த அவரது நண்பர் மசூத் உடனே தண்ணீரில் குதித்து சிவத்தை காப்பாற்ற முயன்றார்.
ஆனால் நதியில் அதிக அளவு தண்ணீர் செல்வதால், மசூத்தும் நீரில் அடித்து செல்லப்பட்டார். அவர்களை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக மீதமுள்ள 5 பேரும் நீருக்குள் குதித்தனர். ஆனால் யாருமே கரை திரும்பவில்லை.இது குறித்து தகவல் அறிந்த பொலிஸ் அதிகாரிகள் நீரில் மூழ்கி தேடும் பயிற்சி பெற்ற மீட்புக்குழுவினருடன் வாலிபர்களை தேடினர். ஆனால் 2 மணி நேரத்துக்குப்பின் 7 பேரும் சடலமாகவே மீட்கப்பட்டனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.‘செல்பி’ மோகத்தால் 7 பேர் பலியான இந்த சம்பவம் கான்பூரில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேவாலயத்தில் திடீர் தீவிபத்து: புனித நீரால் தீயை அணைத்த தம்பதிக்கு குவியும் பாராட்டு!!

625.0.560.320.500.400.194.800.668.160.90

சுவிட்சர்லாந்து நாட்டில் கிறித்துவ தேவாலயம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து புனித நீரை கொண்டு தீயை விரைவாக அணைத்த தம்பதிக்கு பொலிசார் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.சுவிஸின் St Gallen நகரில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கிறித்துவ தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேவாலயத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் வேளையில் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா தம்பதி இருவர் சென்றுள்ளனர்.

அப்போது, தேவாலயத்தில் பாவ மன்னிப்பு வழங்கும் இடத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தியால் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.தீ ஜுவாலைகள் வேகமாக பரவியதை தொடர்ந்து, பெரும் சேதாரம் ஏற்பட்டுள்ளது. இதனை அந்த சுற்றுலா தம்பதி பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தீயை விரைவாக அனைக்க எண்ணிய அவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த புனித நீரை எடுத்து சென்று தீ மீது ஊற்றியுள்ளனர். இதனால் தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது.எனினும், இந்த விபத்தில் ஆயிரக்கணக்கான பிராங்க் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார், விரைந்து செயல்பட்ட அந்த தம்பதியை பாராட்டியுள்ளனர்.மேலும், இந்த தீவிபத்து திட்டமிட்டு நடத்தப்பட வாய்ப்புள்ளது என்பதால், இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் காரை வழிமறித்த மர்ம பெண்!!

Shahrukh-Khan

மும்பையில் பொலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் பயணித்து வந்த காரை ஒரு மர்ம பெண் வழிமறித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தின் போது அங்கு இருந்தவர்கள் குறித்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

ஷாருக்கான், சமீபத்தில் ரூபாய் 2.78 கோடி மதிப்புள்ள BMW i8 காரை குர்கானில் வாங்கியதாக கூறப்படுகிறது, எனினும் குறித்த கார் கடந்த வாரம் மும்பை பாந்தராவில் உள்ள அவரது வீட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஷாருக்கான் புதிய காரில் பாந்தராவை சுற்றி வீடு திரும்பும் போதே குறித்த சம்பவம் நடந்துள்ளது, ஷாருக்கான் வீட்டிற்கு அருகில் ஒரு மர்ம பெண் அவரது கார் முன் வந்து நின்று வாகனத்தை நிறுத்துமாறு கேட்டுள்ளார்.

மிதமான வேகத்தில் வந்த கார் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் காரை ஷாருக்கான் ஓட்டினாரா, ஒட்டுநர் ஒட்டினாரா என்பது தெளிவாக இல்லை, பிறகு காரின் ஜன்னல் அருகே சென்ற பெண்ணை அங்கிருந்த மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.இதனையடுத்து, ஷாருக்கானின் கார் சென்றுள்ளது. குறித்த பெண் வீடில்லாத ஒரு பெண் எனவும், உதவி கேட்கவே காரை நிறுத்தியாக கூறப்படுகிறது.

மணப்பெண் ஆடையில் தோன்றி மாணவரிடம் திருமணம் செய்வதற்கான தனது விருப்பத்தை வெளி­யிட்ட ஆசிரியை!!

professor_propose_3

பல்­க­லைக்­க­ழக ஆசி­ரி­யை­யொ­ருவர், மணப் பெண் ஆடை அணிந்­த­வாறு நூற்­றுக்­க­ணக்­கான மாண­வர்கள் முன்­னி­லையில் அந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒரு­வ­ரிடம் அவரைத் திரு­மணம் செய்­வ­தற்­கான தனது விருப்­பத்தை வெளி­யிட்டு அனை­வ­ரையும் திகைப்பில் ஆழ்த்­திய சம்­பவம் சீனாவில் ஹுனான் மாகா­ணத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

சங்டி நக­ரி­லுள்ள ஹுனான் கலை மற்றும் விஞ்­ஞான பல்­க­லைக்­க­ழ­கத்தில் தற்­கா­லிக விரி­வு­ரை­யா­ள­ராக கட­மை­யாற்­றும் ஹு என சுருக்கப் பெயரால் அழைக்­கப்­படும் குறிப்­பிட்ட ஆசி­ரியை அந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அடிக்­கடி விஜயம் செய்து மாண­வர்­க­ளுக்கு வழி­காட்­டல்­களை வழங்கும் வகையில் உரை­யாற்­று­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் ஏற்­க­னவே திரு­ம­ண­மாகி விவா­க­ரத்துப் பெற்­றி­ருந்த அவர், 4 மாதங்­க­ளுக்கு முன் பல்­க­லைக்­க­ழக வகுப்­பொன்றில் தன்னை விடவும் 10 வயது இள­மை­யான பெயர் வெளி­யி­டப்­ப­டாத குறிப்­பிட்ட மாண­வரை முதன் முத­லாக சந்­தித்தார். முதல் சந்­திப்­பி­லேயே அந்த மாணவர் பால் ஈர்க்­கப்­பட்ட ஹு, அவ­ரிடம் தனது திரு­மணம் செய்­வ­தற்­கான விருப்­பத்தை புது­மை­யான வழி­மு­றையைக் கையாண்டு வெளி­யிடத் திட்­ட­மிட்டார்.

அவர் அந்தப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களை மணப்பெண் தோழிகள் மற்றும் மண­மகன் தோழர்கள் போன்று ஆடை அணிந்து வரச் செய்து அவர்கள் மத்­தியில் திரு­மண ஆடையும் முக­மூ­டியும் அணிந்­த­வாறு தோன்றி தனது திரு­மணம் செய்­வ­தற்­கான விருப்­பத்தை மாண­வ­ரிடம் அவர் வெளி­யிட்டார்.

இன்ப அதிர்ச்­சிக்­குள்­ளான அந்த மாணவர் உடனே ஹுவின் விருப்­பத்தை ஏற்றுக் கொண்டார். இது தொடர்பில் மேற்­படி மாணவர் விப­ரிக்­கையில், தன்னை விடவும் ஹு 10 வயதால் மூத்­தவர் என்­பதை தான் ஒரு பொருட்­டாகக் கரு­த­வில்லை என தெரி­வித்­துள்ளார்.இன்னும் சில வாரங்­களில் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பட்டம் பெற­வுள்ள அவர், தொழில் ஒன்றைப் பெறு­வ­தற்கு தற்போது முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அதன் பின் ஹுவை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறினார். அவரது திருமணத்திற்கு அவரது பெற்றோர் ஆதரவளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மரணத்தில் முடிந்த காதல்: எதற்காக?

hqdefault
திருச்சியில் வயது குறைவு காரணமாக பெற்றோர் தங்களை சேர்த்து வைக்கமாட்டார்கள் என எண்ணிய காதல் ஜோடியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான இம்ரான்(19), திவ்யா(21) ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்கள் காதலை வீட்டில் தெரியப்படுத்தி, திருமணம் செய்துவைக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர், ஆனால், திவ்யாவைவிட இம்ரானுக்கு 2 வயது குறைவு என்பதால் இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய இந்த காதல் ஜோடி, பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்துவிட்டு, விஷம் அருந்தி நடுரோட்டில் மயங்கி கிடந்துள்ளனர்.இதனைப்பார்த்த அருகில் இருப்பவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர், இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தற்போது, இந்த தகவல் இவர்களது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது, பொலிசார் விசாரணை மேற்கொண்டதில், வயது வித்தியாசத்தால் பெற்றோர் தங்களுக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார்கள் என எண்ணிய காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.