சம்பூர் மக்கள் வாழ வழிவிடுங்கள் : வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்!!

Samboor

நிலக்கரி அனல் மின்நிலையம் அமைப்பதற்காக பறிக்கப்பட்ட பூர்வீக நிலம் சம்பூர் மக்களுக்கு மீளக் கையளிக்கப்படவேண்டும். இவ் அனல்மின் நிலையத்தினால் சூழலுக்கு ஏற்படப்போகும் பாரிய அச்சுறுத்தலைத் தவிர்க்க அத்திட்டத்தைக் கைவிடவேண்டும்.

இதன் மூலம் சம்பூர் மக்களின் நிம்மதியான வாழ்விற்கு வழிவகுக்க வேண்டும் என வலியுறுத்தும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரும் அணிதிரள வேண்டும் என வவுனியா மாவட்ட சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் செயலாளர் சு.டொன்பொஸ்கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர்மேலும் தெரிவிக்கையில் திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் சம்பூர் மக்களின் 505 ஏக்கர் பூர்வீக நிலம் இந்தியக் கம்பனி ஒன்றினால் நிலக்கரி அனல்மின்நிலையம் அமைப்பதற்காக இலங்கை அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலம் மீன்பிடி, விவசாயம், காட்டுவளம் நிறைந்த பகுதியாகும். இப்பிரதேசத்தில் 110 ஏக்கர் வயல்காணிகளும், 8 குளங்கள், 41 குடியிருப்பு காணிகள், மீன்பிடி பகுதிகள், காடுகள் அடங்குகின்றன.

இவற்றை நம்பி வாழ்ந்த விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியினர், தொழிலாளர்கள் வாழ்வை இழந்து நிற்கின்றனர். ஆகவே அவர்களுடைய வாழ்கையைக் கட்டியெழுப்ப அவர்களுடைய நிலங்கள் அவர்களிடம் மீளக் கையளிக்கப்படவேண்டும்.

இவ் நிலக்கரி மின் நிலையம் இயங்கும்போது நிலக்கரியிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகளும், அதிகூடிய காபனீர் ஒக்சைட்டும் சுவாச நோய்களை உருவாக்கும் அபாயம் உள்ளது. சூழல் வெப்பமடையும் ஆபத்தும் உள்ளது.

இதனால் இப்பகுதியைச் சூழவுள்ள 5 கி.மீ பிரதேசத்தின் நிலை மிகமோசமாக பாதிக்கப்படும். இங்கு சுமார் 5000 குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கை அச்சுறுத்தப்படும். இடம்பெயரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

அதுமட்டுமன்றி பருவக்காற்றினால் வடகிழக்கு, வடமத்திய மாகாண பிரதேசங்களுக்கு சாம்பற் கழிவுகள் கொண்டுசெல்லப்படும் அபாயமும் உள்ளது.

ஆகவே, இவை பற்றி சிந்திப்பது அவசியமாகும். அபிவிருத்தி என்ற போர்வையில் அந்நியக் கம்பனிகளின் இலாபவெறிக்காக நாட்டுமக்களின் வாழ்க்கையை பாழடிப்பதா?

புவி வெப்பமடைவது தடுப்பதற்காக உலக நாடுகள் நிலக்கரி அனல் மின்நிலையங்களை மூடுகின்றனர். ஏன், இந்தியாகூட தற்பொழுது தன்னுடைய நிலக்கரி அனல்மின்நிலையங்களை மூடிவருகின்றது.

இந்நிலையில் நிலக்கரி மின் நிலையம் ஏன் இங்கு நிறுவப்படவேண்டும். அந்நியக்கழிவுகள் கொட்டப்படும் இடமாக நமது நாடு மாறிவிட்டதா! இந்தியா நிலக்கரியை பயன்படுத்துவேன் என அடம்பிடிக்கின்றது.

நல்லாட்சி அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைக்கு தயங்குகின்றது. எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாய்திறக்க மறுகின்றது. இதேவேளையில் சம்பூர் மக்கள் பூர்வீக நிலத்தைக் கோரியும், சூழல் மாசடைவதற்கு எதிராகவும் போராடுகின்றனர். அவர்களுடைய கோரிக்கைக்கு ஆதரவாக நாங்களும் குரல்கொடுங்கின்றோம்.

அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்பதை வலியுறுத்தி ஷஷபசுமைத் திருமலை|| அமைப்பினருடன் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும், ஏனைய பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து 25.06.2016 சனிக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா பஸ்நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.

அப்போராட்டத்தில் தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள், அரசியற் கட்சிகள், என அனைவரையும் இன, மத பேதங்களைக் கடந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

index

ரித்திகா சிங் அந்தப் படத்தை மட்டும் மறைப்பது ஏன்?

Ritika-Singh

இறுதிச்சுற்று ரித்திகா சிங் தேசிய விருது எல்லாம் வாங்கி ஒரே படத்தில் பிரபலமாகிவிட்டார். இவர் அடுத்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஆண்டவன் கட்டளை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்து இவர் பல இடங்களில் மனம் திறந்தாலும், இதுமட்டுமின்றி வேறு ஒரு படத்திலும் இவர் ஒப்பந்தமாகியுள்ளார் ஆகியுள்ளார்.

அந்த படம் குறித்து இன்னும் இவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, அதை பற்றி பேசுவும் மறுத்துள்ளாராம், அப்படி என்ன படமாக இருக்கும் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பும்.கன்னடத்தில் பி. வாசு இயக்கிய சூப்பர் ஹிட் படமான ஷிவலிங்கா படத்தின் தமிழ் ரீமேக்கில் இவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!!

British-pounds-1-750x347
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ள நிலையில் பிரிட்டிஷ் பவுண்ட், யூரோ, ஸ்ரேலிங் உள்ளிட்ட நாணயங்களின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக நேற்று அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்டின் விலை சர்வதேச சந்தையில் 1.5 டொலராக உயர்ந்திருந்தது. இன்று முடிவுகள் வெளியாகத் தொடங்கி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்பதை ஆதரிக்கும் வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளது தெரியவந்த நிலையில், இந்த மதிப்பு 9 சதவீதம் சரிவடைந்து, 1.3459 டொலராக மாறியது.

கடந்த 1985-ம் ஆண்டுக்கு பின்னர் பிரிட்டிஷ் பவுண்ட் இவ்வளவு பெரிய வீழ்ச்சியை சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.பிரிட்டனில் கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட நிதிநெருக்கடி காலத்தில் சந்தித்ததைவிட தற்போது பிரிட்டன் நாணயமான பவுண்ட் கடும் சரிவை சந்தித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். நாணய மதிப்பு சரிவை தொடர்ந்து பிரிட்டனில் மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்திக்க நேரிடும் எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வருடாந்தம் 36 லீற்றர் சோஸ் உண்ணும் பெண்!!

Tomato-kechup

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தீவிர சோஸ் பிரியையாகக் காணப்படுகிறார். இவரின் அனைத்து வேளை உணவுகளிலும் கெச்சப் எனும் சோஸ் தவறாமல் இடம்பெறுகிறது. 30 வயதான சமந்தா ஆர்ச்சர் எனும் இப்பெண் வாராந்தம் இரு போத்தல் சோஸை பயன்படுத்துகிறார். அதாவது வருடாந்தம் 36 லீற்றர் சோஸை இவர் உட்கொள்கிறார்.

5 வயதிலிருந்து சோஸ் மீது தான் தீவிர அபிமானம் கொண்டுள்ளதாக சமந்தா கூறுகிறார். “எனது சோஸ் ஆசையை எனது பெற்றோர் அறிவர். அவர்கள் எப்போதும் ஒரு போத்தல் சோஸை எனக்காக தயார் நிலையில் வைத்திருப்பர். எனது ஒவ்வொரு வேளை உணவிலும் சோஸை கலந்துகொள்வேன். கிறிஸ்மஸ் உணவும் இதற்கு விதிவிலக்கல்ல” என்கிறார் சமந்தா ஆர்ச்சர்.

ஏழே நாட்களில் சிகப்பழகை பெற சூப்பர் டிப்ஸ்!!

beautiful-lady-600x330

அனைவரும் தன் தோற்றத்தை அழகுபடுத்திக் கொள்ளவே விரும்புவர். அதிலும் இளம் பருவத்தினருக்கு தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் நாட்டம் அதிகம் இருக்கும்.அதற்காக பல ரசாயனம் கலந்த கிரீம்களைத் தடவி தன்னை அழகுபடுத்திக் கொள்வர். இது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும்.முகத்தில் சொறி, கருப்புத் திட்டு, முகச் சுருக்கம், கண்களில் கருவளையம், முகப்பரு, தேமல் என பலவகையான பாதிப்புகள் ஏற்படும்.கிரீம்கள் இல்லாமல் 7 நாட்களுக்குள் இயற்கையான முறையில் உங்களது தோலின் நிறத்தை அதிகரிக்க முடியும், அதாவது இவைகள் தோலின் மெலனின் உற்பத்தியை குறைத்து பிரகாசமான நிறத்தை அடைய உதவுகின்றது.

அப்பிள்கிரீம்

அப்பிளில் உள்ள ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலங்கள் (AHA) தோலின் நிறத்தை அதிகரிக்கிறது. தோல் உரிக்கப்பட்ட அப்பிள்  துண்டுகளை பாலில் 20 நிமிடங்கள் ஊற வைத்து ஒரு க்ரீம் பேஸ்ட் கலவையாக்க வேண்டும்.இதனுடன் எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி கலந்து பேஸ்ட் போல் ஆனவுடன் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவ வேண்டும்.தொடர்ந்து 15 நிமிடங்கள் கழித்து பனிக்கட்டி கொண்டு மசாஜ் செய்ய முகம் நல்ல பிரகாசமாகவும், மென்மையாகவும் இருக்கும்.

குளிர்ந்த தோடம்பள சாறு

தோடம்பள  சாறு உங்கள் தோலை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனை ஒரு இயற்கை டோனராக பயன்படுத்தலாம். ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ கரும்புள்ளிகளை குறைத்து தோலின் நிறத்தை கூட்டுகின்றது. 3 தேக்கரண்டி குளிர்ந்த தோடம்பள  சாறில் பஞ்சை நனைத்து முகத்தில் மெதுவாக துடைத்து, 5 முதல் 7 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர முகம் பளபளப்பதுடன், தேஜஸூம் அதிகரிக்கும்.

தக்காளி

அரை பழுத்த தக்காளியை கூழாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் தேனை கலந்து, முகம், கழுத்தில் பூசி 5 நிமிடங்கள் கழித்து கழுவ எண்ணெய் வழியும் சருமம் மாறும்.

பப்பாளி மற்றும் வெள்ளரிக்காய்

பப்பாளி மற்றும் வெள்ளரிக்காய் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து அதனுடன் பால் கிரீம் ஒரு தேக்கரண்டி கலந்து முகம், கழுத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவ, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிச்சென்று மாறும்.

 

வவுனியாவை சேர்ந்த க.ச. அரவிந்தன் எழுதிய அருளமுது நயினாதீவில் வெளியீடு!!(படங்கள்)

கடந்த 18.06.2016 சனிக்கிழமை   நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய சப்பர திருழாவின் போது க.ச.அரவிந்தன் எழுதிய அருளமுது என்னும் ஈழத்து கோவில்கள் பற்றிய பாடல்கள் அடங்கிய நூல் வெளியீடு இடம்பெற்றது.

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயம் , நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயம் ,திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம்,  வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆகிய ஆலயங்கள்  மீது பாடப்பட்ட பாடல் வரிகள்  அடங்கிய அருளமுது என்னும் நூலே வெளியீடு செய்யபட்டது.

மேற்படி பாடல்வரிகள்  விரைவில்  இசைத்தட்டுகளாகவும் விரைவில் வெளி வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13482945_1097688390303876_9034097529349655210_o

13412974_1097207390351976_5905616340488529941_n 13417541_1097207410351974_2281964182506960901_n 13419113_1097207463685302_8424749422795948784_n 13422191_1097688753637173_2512826981371486788_o 13422304_1097687746970607_8022268449925547414_o 13422313_1097688240303891_2403195988385406635_o 13433259_1097688593637189_1559034932719061188_o 13442193_1097207487018633_3099155563137302803_n 13442663_1097688403637208_3505026037100263077_o 13443192_1097688116970570_8896539399189598918_o 13443192_1097688730303842_8046106558282852429_o 13475080_1097688040303911_268127344289380895_o 13482945_1097688390303876_9034097529349655210_o 13490742_1097688196970562_2857376233461034843_o 13495452_1097687730303942_1808387099871122602_o 13495669_1097687660303949_6159783621747900566_o 13497647_1097687796970602_4132811952312158710_o 13497687_1097687663637282_470085139642311558_o 13502633_1097687900303925_338913409619289189_o 13502793_1097688660303849_2132787964323489727_o 13502800_1097688183637230_5956131063417626156_o

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது பிரித்தானியா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

brexit-eu-and-britain-flag-afp_650x400_71463987623
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை கடந்த 1993ம் ஆண்டு உருவாக்கின.இதில் பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன.

இதில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை பிற உறுப்பு நாடுகளுக்கு திறந்து வைத்துள்ளன. இந்த அமைப்பின் கடைசி உறுப்பு நாடாக 1-7-2013 அன்று குரோசியா சேர்க்கப்பட்டது. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வசிப்பவர்கள் அந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம், வேலைவாய்ப்புகளை பெறலாம், கல்வி கற்கலாம், தொழில் தொடங்கலாம்.

இதன் காரணமாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் அதிக அளவில் குடியேற தொடங்கினார்கள்.

சீனாவில் ருத்ரதாண்டவம் ஆடிய இயற்கை பேரழிவு: பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு, 800 பேர் படுகாயம்!!

A strong wave breaks over a vehicle along the shore ahead of the landfall of Typhoon Chan-Hom in Wenling in eastern China's Zhejiang province Friday July 10, 2015. Chinese authorities have evacuated tens of thousands of people, canceled scores of trains and flights and shuttered seaside resorts as a super-typhoon with wind gusts up to 200 kilometers per hour (125 mph) heads toward the southeastern coast.(Chinatopix Via AP) CHINA OUT

சீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ள ஜியாங்சூ மாகாணத்தில் திடீரென ஏற்பட்ட சூறாவளியினால் 98 உயிர்கள் பலியெடுக்கப்பட்டுள்ளதுடன் 800 பேர் வரை காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.மணிக்கு 125 கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசிய காற்றினால் உடமைகளுக்கும்,பொருட்களுக்கும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இது தவிர வெள்ள அனர்த்தத்தினால் 2,00,000ற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் கடைத் தொகுதிகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்திருப்பதனால் அத்தியாவசியப் பொருட்களும் பழுதடைந்து வருகின்றன.

இது தொடர்பாக சீனாஅரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், இன்றைய தினம் மீட்பு பணியாளர்கள் முழுவீச்சில் செயற்பட்டு இறந்த உடலங்களையும், காயப்பட்டவர்களையும் மீட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர் .கூடாரங்கள் மற்றும் ஏனைய அவசரகால பொருட்கள் பெய்ஜிங்கில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

திருநங்கையை திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளைஞன்!!

2_2040058h
கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில், இளைஞர் ஒருவர் பெற்றோருக்கு தெரியாமல் திருநங்கையை திருமணம் செய்து அவருடன் குடும்பம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் Gadigeratanda பகுதியைச் சேரந்த சிவக்குமார்(வயது-20) என்ற இளைஞன் தனது பெற்றொருக்கு தெரியாமல் ராதிகா என்னும் 19 வயதான திருநங்கையை திருமணம் செய்துள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து சிவக்குமாரின் உறவினர்களுக்கும், திருநங்கை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாய்மொழி சண்டை நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து சிவக்குமாரின் மூத்த சகோதரர் Fakirappa கூறியதாவது, திருநங்கை தனது சகோதரன் சிவக்குமாரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பொலிஸ் அதிகாரி ஒருவர் அளித்துள்ள தகவலில், சிவக்குமார், திருநங்கை சமூகத்தினர் வாழும் Benki நகரில் உள்ள வீட்டில் கண்டெடுக்கப்பட்டார், பின்னர், அவரின் சம்மதத்துடன் பெற்றொருடன் அனுப்பிவைக்கப்பட்டார்.இதுபோன்ற சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்ய சட்டம் கிடையாது, குறித்து பிரச்சனையை சட்ட ஆலோசனை படி சுமூகமாக தீர்த்து வைத்ததாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற மாணவி! திண்டிவனத்தில் பரபரப்பு!!

hqdefault

திண்டிவனத்தில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள நெய்குப்பி கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பநாதன். இவருடைய மகள் ஆனந்தி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளி சென்ற மாணவி ஆனந்தி பள்ளியில் இருந்து திடீரென காணாமல் போய்விட்டதாக பள்ளி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளது.மாணவியை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், ஆனந்தி கழுத்தறுபட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

தற்போது மேல் சிகிச்சைக்காக திண்டிவனத்தில் இருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆனந்தி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.பள்ளி மாணவி ஒருவர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வவுனியா பூந்தோட்ட வயல்வெளியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!!(2ம் இணைப்பு)

 
வவுனியா பூந்தோட்டம் வயல்வெளிக்கு அருகே காணப்படும் மதகிற்கு கிழே இன்று காலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா பூந்தோட்டம் வயல்வெளிக்கு அருகே காணப்படும் மதகிற்கு கீழே இன்று (24.06.2016) காலை உருக்குலைந்த சடலத்தினை கண்ட பொதுமக்கள் பூந்தோட்டம் வீதியில் காணப்படும் பொலிஸ் காவலரனுக்கு சென்று முறையிட்டனர்.

இச் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வவுனியா பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த சடலம் திருநாவற்குளத்தினைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான பாக்கியம் ஜஸ்ரின் ( 48வயது) என அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த நபரை மூன்று தினங்களாக காணவில்லை என அவரது உறவினர்களினால் நேற்றைய தினம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு அருகே துவிச்சக்கரவண்டி காணப்படுவதால் விபத்தா? கொலையா? என பொலிஸார் விசனம் தெரிவிக்கின்றனர்.

1 DSC_0001 DSC_0002 DSC_0003 DSC_0006 DSC_0007 DSC_0008 DSC_0009 DSC_0010 DSC_0011 DSC_0012 DSC_0015 DSC_0016 DSC_0018 DSC_0019 DSC_0022 DSC_0023

வவுனியா பூந்தோட்ட வீதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு!!(படங்கள்)

Vavuniya Dead Body

வவுனியா குடியிருப்பிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியின் வயல்வெளி அருகே உள்ள பாலம் ஒன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் ஒரு இன்று காலை (24.06.2016) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் தண்ணீரில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாகவும் அருகில் சைக்கிள் ஒரு காணப்படுவதாகவும் சம்பவ இடத்திலிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவ்விடத்தில் சற்று பரபரப்பான நிலைமை காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

image-0.02.01.9f428167e86732eeabfa49439537817add5988a45233b4a04828a4bb35e45a9c-Vimage-0.02.01.aa12840cf84cd25e31269e1c9eaf7f67f1b5ad5827afa4cdf8d72f2c068354be-V  image-0.02.01.9f428167e86732eeabfa49439537817add5988a45233b4a04828a4bb35e45a9c-V image-0.02.01.d52ae188c10f0fe45b9ee59dadf3bb267f99b1ba5df2bdd068c18bca9cd6b5b8-Vimage-0.02.01.218021c9959aa4bec591d3d49ed716da2e725415000d3dcb0cd464f2b46a9c7c-V image-0.02.01.b8118d4e63192512939447f7bc612202439ce3d1986f7a2a019639ce136d6be9-V image-0.02.01.1e0146db97d14b368992d539af2b1cc5400c40074bd32841fe70deaacc2154ea-V

வவுனியாவில் வன்னி மாவட்ட வாழ்வின் எழுச்சி முன்னனேற்ற மீளாய்வுக் கூட்டம்!!

 
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களம் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சர் எஸ். பி.திசானாயக்க தலைமையில் வன்னி மாவட்ட முன்னேற்ற மிளாய்வுக் கூட்டம் நேற்று (23.06.2016) காலை10 மணிக்கு வவுனியா நகர சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் வவுனியா, மன்னார், மல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயளாலர்கள், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள செயலாளர், அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை வங்கி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSC04702 DSC04702_1 DSC04709 DSC04709_1 DSC04717 DSC04717_1 DSC04723 DSC04723_1

இந்திய அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக அணில் கும்ளே!

Anil-kumble

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக முன்னாள் இந்திய அணியின் சுழற் பந்தவீச்சாளர் அணில் கும்ளே நேற்று (23.06) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஒருவருட ஒப்பந்த அடிப்படையில் இவர் இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் ஆலோசனை குழுவின் உறுப்பினர்களான சவ்ரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீ.வீ.எஸ் லக்ஸ்மன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் அணில் கும்ளே தெரிவுசெய்யப்பட்டதாக இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் அனுரக் தாகூர் தெரிவித்தார்.

குறித்த பயிற்றுவிப்பாளர் தெரிவிற்கு அணில் கும்ளே மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவியமை குறிப்பிடத்தக்கது.

பிரபாகரனை சந்திக்க அழைத்துச் செல்வதாகக் கூறி வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டாரா?

Veerappan

இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களின் வனப்பகுதிகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து கோலோச்சிய வீரப்பன் கொல்லப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும் வீரப்பனின் மரணத்தில் பல மர்மங்கள் தொடர்கதையாகவே உள்ளன.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திக்க அழைத்துச் செல்வதாகக் கூறியே வீரப்பனை சுட்டுக் கொன்றதாகக் கசிந்துள்ள தகவல் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது.

வீரப்பனைப் பிடிப்பதற்கான Operation Cocoon செயற்றிட்டத்தின் உயரதிகாரியாக செயற்பட்ட முன்னாள் அதிரடிப்படைத் தலைவரான விஜய்குமார் IPS இனால் எழுதப்படும் வீரப்பன் தொடர்பிலான புத்தகம் பல மர்மங்களை வெளியுலகிற்குப் புலப்படுத்தும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கண் சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதாக அம்புலன்ஸ் வண்டியில் வீரப்பன் ஏற்றப்பட்டது ஒரு காரணம் எனினும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மேல் கொண்ட ஈர்ப்பும் அவரை சந்திப்பதற்கான ஆவலுமே வீரப்பன் தானாக ”ஆப்ரேஷன் குக்கூன்” இல் சிக்கியமைக்கான பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

-News First-

 

யாழில் புகையிரதம் முன் பாய்ந்து இளம் யுவதி தற்கொலை!!

Jaffna rain Sucide

யாழ். மீசாலை பகுதியில் புகையிரதம் முன் பாய்ந்து இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் பாய்ந்தே குறித்த யுவதி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

யாழ். மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் 2014ம் ஆண்டு உயர்தரப் பிரிவில் கல்வி கற்ற 20 வயதான செல்வரத்தினம் புனிதா என்பரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதேவேளை, தற்கொலைக்கான காரணம் இது வரை வெளியாகாத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 2 3