நயன்தாராவின் மூன்றாவது காதலும் தோல்வியில் முடிந்ததா??

nayanthara-759

நயன்தாரா தமிழ் சினிமாவில் குயின். இவர் படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து ஹிட் வரிசையில் இருக்கின்றன. 10 வருடங்களாக அவரது மார்க்கெட்டை சக நடிகைகளால் சரிக்க முடியவில்லை.இப்படி படங்கள் மூலம் வெற்றிகொடி பிடித்து வரும் நயன்தாராவால் காதலில் ஜெயிக்க முடியவில்லை. இவருடைய முதல் காதல் சிம்புவுடனும், இரண்டாவதாக பிரபுதேவாவுடன் ஏற்பட்டு தோல்வியில் முடிந்தது நமக்கு தெரியும்.

அண்மையில் இவர் நானும் ரவுடித்தான் பட இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக கூறப்பட்டது.ஆனால் தற்போது இந்த காதலும் நிலைக்கவில்லை. விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சண்டை போட்டு பிரிந்து விட்டார் என்று தகவல் வெளியாகி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாய்ந்து வந்த சிங்கம்: சிறு அதிர்ஷ்டத்தால் உயிர் தப்பிய 2 வயது குழந்தை!!

32306F2900000578-3492052-image-m-2_1457989045332

ஜப்பான் நாட்டில் உள்ள விலங்குகள் பூங்கா ஒன்றில் சிங்கத்திடமிருந்து 2 வயது குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு விலங்குகள் பூங்காவிற்கு பெற்றோர் தங்களது இரண்டு வயது ஆண் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

சிங்கம் அடைக்கப்பட்டிருந்த பகுதியில் குழந்தையுடன் பெற்றோர் சுற்றிப்பார்த்து வந்துள்ளனர்.அப்போது, ஓரிடத்தில் சிறுவன் நின்றபோது, அவனுக்கு எதிர்புறமாக ஒரு சிங்கம் வெளியே வந்து அமர்ந்துள்ளது.சில வினாடிகள் சிங்கத்தை பார்த்த அந்த சிறுவன் திடீரென திரும்பி சிங்கத்திற்கு முதுகை காட்டியவாறு நின்றுள்ளான்.

இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தது போல் 181 கிலோ எடையுள்ள அந்த சிங்கம் சிறுவனை நோக்கி பாய்ந்து வந்துள்ளது.சில அடிகள் தூரத்திலிருந்து சிறுவன் மீது பாய்ந்தபோது, இடையில் இருந்த கண்ணாடி தடுப்பு சிங்கத்தை தடுத்தி நிறுத்தி விடுகிறது.

கண்ணாடியை தன்னுடைய நகங்களால் கீரும் ஒலியை கேட்ட சிறுவன் திரும்பி பார்த்தபோது அந்த சிங்கம் தனக்கு வெகு அருகில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவாறு பின்னோக்கி ஓடியுள்ளான்.இரை கிடைக்காத சோகத்தில் அந்த சிங்கம் வேறொரு திசையை நோக்கி நகர்ந்து சென்றுவிடுகிறது.

இந்த சம்பவம் குறித்து விலங்குகள் பூங்கா காப்பாளர் ஒருவர் பேசியபோது, ‘இங்குள்ள சிங்கங்கள் குழந்தைகளை கண்டால் உற்சாகமாகி அவர்களுடன் விளையாடும்.இந்த சம்பத்திலும் சிறுவனிடம் விளையாட்த்தான் அந்த சிங்கம் ஓடி வந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால், விலங்குகள் குறித்து ஆய்வு செய்து வரும் ஆடம் ரோபர்ட்ஸ் என்பவர் பேசியபோது, ‘சிறுவனிடம் விளையாட சரியான சந்தர்ப்பம் எதிர்ப்பார்த்து இவ்வளவு வேகத்தில் சிங்கம் பாய்ந்து வந்திருக்காது. பொதுவாக, எந்தவொரு விலங்காக இருந்தாலும் அது திரும்பி நிற்கும்போது அல்லது அதன் கவனம் சிதறும் போது தான் சிங்கம் தனது தாக்குதலை தொடங்கும்.இந்த சம்பவத்திலும், சிறுவன் திரும்பி முதுகை காட்டிக்கொண்டு நின்றபோது தான் அந்த சிங்கம் பாய்ந்து வந்துள்ளது.

எனவே, இதனை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சிங்கத்திற்கும் சிறுவனுக்கும் இடையில் அந்த கண்ணாடி தடுப்பு இல்லாமல் இருந்திருந்தால், சிறுவனுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது’ என தெரிவித்துள்ளார்.

உறவுக்கு மறுத்த கணவனை அடித்து கொன்ற மனைவி: 2,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்!!

1 (67)
இந்தியாவில் உறவுக்கு மறுத்த கணவனை அவரது மனைவி அடித்து கொலை செய்த குற்றத்திற்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் நகரில் விமலா வகீலா என்ற 54 வயதான பெண் அவருடைய கணவரான நர்சிங் என்பவருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஒரு நாள் இல்லற உறவில் ஈடுப்பட மனைவி விரும்பியுள்ளார். ஆனால், விருப்பம் இல்லாமல் கணவன் படுக்கையை விட்டு எழுந்து சென்றுள்ளார். அப்போது, ‘உங்களுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருக்கிறது. அதனால் தான் என்னுடன் உறவில் ஈடுப்பட மறுக்கிறீர்கள்’ என குற்றம் சாட்டியுள்ளார்.

மனைவியின் குற்றச்சாட்டுக்கு கணவன் எந்த பதிலும் தெரிவிக்காததால், ஆத்திரத்தில் பொங்கிய மனைவி அருகில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து கணவனின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கணவன் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். கணவனின் மரணத்தை உறுதி செய்த மனைவி உடனடியாக வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

‘கணவன் என்னை கொலை செய்ய முயன்றதால், தன்னை காப்பாற்றிக்கொள்ள அவரை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டதாக’ வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், பொலிசார் நடத்திய விசாரணையில் கணவனை மனைவி அடித்துக்கொலை செய்தது நிரூபணம் ஆனது. கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்ந்த இந்த கொலை தொடர்பான இறுதி விசாரணை நேற்று முன் தினம் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, கணவனை மனைவி கொலை செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும், குற்றவாளிக்கு 2,000 ரூபாய் அபாரதம் விதிப்பதாகவும், அதனை செலுத்த தவறினால் 6 மாதங்கள் கூடுதலாக சிறையில் கழிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

காதலனுக்காக தந்தையை கொன்ற பாசக்கார மகள்: பொலிசில் பரபரப்பு வாக்குமூலம்!!

7464688-3x2-940x627
கோவையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, மகள் காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் நெகமம் அருகிலுள்ள சொக்கம்புதூரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது-55), விவசாயி. இவருக்கு பிரமிளா (வயது-42) என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந் திகதி நாகராஜ் கொலை செய்யப்பட்டார்.

சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவருடைய மகள் மகாலட்சுமி, தனது காதலன் சுதீசுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக சதீசின் நண்பர்கள் கமலக்கண்ணன் (19), கிருஷ்ணகுமார் (20), சசிக்குமார் (20), சந்தோஷ்குமார் (20) ஆகிய 4 பேரை பொலிசார் கைது செய்தனர். இதற்கிடையில் கடந்த 10-ந் திகதி மகாலட்சுமி, தனது காதலன் சதீசுடன் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மகாலட்சுமி, சதீஷ் ஆகியோரை நெகமம் பொலிசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.

மகாலட்சுமி பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில்: நாங்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் என் அப்பா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், எனது தந்தை நாகராஜை கொலை செய்ய திட்டம் தீட்டினேன். அதன்படி சதீஷ் தனது நண்பர்கள் உதவியுடன் நாகராஜை கத்தியால் குத்தி கொலை செய்தார் என கூறியுள்ளார்.

முகத்தை மறைப்பதற்கு தடை – பாராளுமன்றம் ஒப்புதல்!!

54b6293fafc72

செர்பியா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு அருகில் உள்ளது பல்கேரிய நாடு. துருக்கிக்கு முன்பாக ஐரோப்பிய கண்டத்தின் கடைசி நாடாக பல்கேரியா உள்ளது.இங்கு ஆடைகளால் முகத்தை மறைத்துக் கொள்ளும் வழக்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட மசோதாவிற்கு பல்கேரியா பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

அந்நாட்டின் தேசியவாத முன்னணி கட்சி கொண்டு வந்த மசோதாவிற்கு 108 எம்.பி-க்கள் ஆதரவாக வாக்களித்தனர். 8 எம்.பி-க்கள் மட்டும் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர்.இந்த மசோதா மூலம் பெண்கள் நகாப், புர்கா ஆகியவற்றை அணிய தடை விதிக்கப்படும். மசோதா அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், நிர்வாக அலுவலகங்களுக்கும் பொருந்தும்.மசோதாவானது சில பாராளுமன்ற குழுக்களின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

முகத்தை மறைப்பதற்கு எதிரான சட்டம் ஏற்கனவே பல்கேரியாவின் பஸர்த்ஷிக், ஸ்டாரா ஸகோரா, சில்வேன் மற்றும் பர்காஸ் ஆகிய நகராட்சிகளில் நடைமுறையில் உள்ளது.முகத்தை மறைப்பதற்கு தடை விதிக்க வகை செய்யும் இந்த சட்டம் பெல்ஜியம் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு அமலுக்கு வந்தது.

 

மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுக்களின் விலை அதிகரிப்பு!!

big_thumb_42f7f9eb8de45ded22d38972548996ba

மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுக்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, சிகரெட்டொன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே விசேட விடயங்களுக்கான அமைச்சர் சரத் அமுனுக மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் 2016 காலாண்டில் 5.5 வீதம் பொருளாதார வளர்ச்சி!

growth

2016ம் ஆண்டின் காலாண்டில் இலங்கையில் பொருளாதார 5.5 வீதமாக அபிவிருத்தியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது.2015ம் ஆண்டு முதல் காலாண்டு காலத்தினுள் காணப்பட்ட 19,786,09 மில்லியன்மொத்த தேசிய உற்பத்தியானது, 2016ம் ஆண்டு முதல் காலாண்டு காலத்தினுள் 20,880,24 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.

இக்காலப்பகுதியினுள் முழு தொழில் மற்றும் பொருளாதார சேவைகள் நடவடிக்கைகள் முறையே 8.3 மற்றும் 4.9 ஆக விருத்தி வேகத்தை காட்டுவதுடன், கிராமிய தொழில் பொருளாதார நடவடிக்கைகளில் 1.9வீத சிறிய வளர்ச்சி வேகமும் பதிவாகியுள்ளது.எனினும் கிராமியத் தொழில் பொருளாதார நடவடிக்கைகளில் மரக்கறி, தேங்காய்,பழவகைகள் மொத்த மற்றும் சில்லறை அளவிலான உற்பத்திகள் முறையே 16.3, 10, 5.1 வீதங்களாக வளர்ச்சி வேகத்தை காட்டுகின்றன.

தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தினால் 2016 ஆம் ஆண்டின்முதல் காலாண்டுகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்கு மதிப்பீடுகளின் படி அக்காலத்தினுள் தொழில் துறைகளில் மொத்த தேசிய உற்பத்திக்கு கிடைத்துள்ள பங்களிப்பான 31.6 வீதம் வரலாறு காணாத வளர்ச்சியொன்றை கண்டுள்ளது.

இதற்காக அதி கூடிய பங்களிப்பு நிர்மாணக் கைத்தொழில் துறையில் இருந்தே கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அது 2015ம் ஆண்டு முதல் காலாண்டு காலத்தைவிட 2016ம் ஆண்டு முதல் காலாண்டு காலத்தில் 12வீத குறிப்பிடத்தக்க வளர்ச்சி வேகத்தை காட்டுகின்றன.2016ம் ஆண்டு முதல் காலாண்டு காலப்பிரிவில் நிதி மற்றும் இடை நிதிச் சேவை நடவடிக்கைகளுக்காக 15.9வீதமாகவும், சில்லறை மற்றும் மொத்த வியாபார நடவடிக்கைகள் 5.7 வீதமாகவும், கல்வி சேவை நடவடிக்கைகள் 5.9 வீதமாகவும், பிறதனியார் சேவைகள் 6.7 வீதமாகவும் வளர்ச்சி வேகத்தை காட்டுகின்றது.

 

12 சிறுத்தைகள் மனித செயற்பாடுகளினால் உயிரிழப்பு!

26721_medium

வருடத்தின் இதுவரையான காலத்தில் 12 சிறுத்தைகள் மனித செயற்பாடுகளினால் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, சிறுத்தைகள் கொல்லப்படுவதை தடுப்பதற்காக உடனடி மீட்பு படையணி ஒன்றை நியமித்துள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் சிறுத்தைகளை பிடிப்பதற்காக விரிக்கப்பட்டுள்ள வலைகளை அகற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.சிறுத்தையொன்று வலையில் சிக்கினால், மிகவிரைவில் அந்த இடத்திற்கு சென்று சிறுத்தையை மீட்கும் உரிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

பகிடிவதையுடன் தொடர்படைய எவருக்கும் மன்னிப்பு கிடையாது!!

Ragging

பகிடி வதையுடன் தொடர்புடைய எவருக்கும் மன்னிப்பு கிடையாது என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

மாரவில நாத்தான்டிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

பகிடி வதையில் ஈடுபட்ட மாணவர்களை விடுதலை செய்யுமாறு எவ்வளவு போராட்டங்கள் நடத்தினாலும், பகிடிவதையுடன் தொடர்புடைய எவருக்கும் எவ்வித மன்னிப்பும் அளிக்கப்போவதில்லை.

பல்கலைக்கழக மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துகின்றார்கள்.தங்களது கல்வி உரிமையை பெற்றுக்கொள்வதற்காக இந்தப் போராட்டம் நடத்தப்படவில்லை.

பகிடிவதை மேற்கொண்ட மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது.

சட்டத்தில் தடை செய்யப்பட்ட பகிடி வதையை தடுக்க எவரேனும் உதவினால் அவர்களுக்கும் தண்டனை விதிக்க நேரிடும்.

பேரணிகளை நடத்தி போராட்டங்களை நடத்தி பரீட்சையில் சித்தியடைய முடியாது.

மக்களின் வரிப் பணத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவியர் இவ்வாறு பொன்னான நேரத்தை வீரயமாக்குவது பாரிய குற்றமாகும்.

மாணவர்கள் என்ன செய்தாலும் எவ்வாறான போராட்டம் நடத்தினாலும் பகிடிவதையுடன் தொடர்புடையவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரருக்கு கார் ஓட்ட தடை!!

Ben Strokes

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் காரை வேகமாக ஓட்டியதாக 4 முறை பொலிசாரிடம் சிக்கி இருக்கிறார்.

இதனால் அவருக்கு டிசம்பர் மாதம் வரை கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதவான் பென் ஸ்டோக்ஸ்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த 6 மாதத்தில் மீண்டும் பென் ஸ்டோக்ஸ் வேகமாக கார் ஓட்டினால், சிறை தண்டனை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு பாரிய கடன் சுமையை எதிர்நோக்கியுள்ளது!!

Maithiri

நாட்டை கட்டியெழுப்புவதற்கு அறிவு, நுண்ணறிவு மற்றும் வழிகாட்டலை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் சட்டத்தரணிகள் சிலருக்கும் இடையே நேற்று முன்தினம் (15.06) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

வெளிநாட்டு கடன் சுமையினை நாடு எதிர்நோக்கியுள்ள சவால் மிகுந்த இவ்வேளையில் அனைத்து கருத்து முரண்பாடுகளையும் மறந்து செயற்படுமாறு அவர் கூறியுள்ளார்.

நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை கண்கூடாக பார்க்க முடியாதபோதும் சர்வதேச ரீதியில் பெரு வரவேற்பை பெற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை செவிசாய்த்து அனைவரதும் ஒத்துழைப்புடன் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையை உறுதி செய்து ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களுக்கு தம்மாலான உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்குவதாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட சட்டத்தரணிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபர் கொலை!!

Killed

மெதிரிகிரிய, மீகஸ்வெவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மெதிரிகிரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 62 வயதுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

தபால் ஊழியர்களின் போராட்டம் முடிவிற்கு வந்தது!!

Post

இலங்கையின் தபால் ஊழியர்கள் மேற்கொண்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை நேற்று நள்ளிரவு முதல் நிறைவுக்கு வந்ததாக கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி கூறியுள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதாக அதிகாரிகள் கூறியதையடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எச்.கே. காரியவசம் கூறினார்.

இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை முற்றாக நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!!

EU

ஐரோப்பிய ஒன்றியத்தால் நாட்டின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட முழுமையான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கும் சந்தர்ப்பத்தில் சர்வதேச சட்டங்களை மீறுவதாக கூறி மீன் ஏற்றுமதி தடையை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 3 வருடங்களாக விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி!!

Dublin , Ireland - 16 June 2016; Bowler Dasun Shanaka, centre, and teammate Dinesh Chandimal of Sri Lanka, congratulate each other after taking the wicket of Ireland's Ed Joyce, left, during the One Day International match between Ireland and Sri Lanka at Malahide Cricket Ground in Malahide, Dublin. (Photo By Seb Daly/Sportsfile via Getty Images)

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 76 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் அபாரமாக ஆடிய தினேஸ் சந்திமால் ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களை விளாசினார்.

மேலும் குஷல் மென்டிஸ் 51 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க இலங்கை அணி, 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

பதிலுக்கு அயர்லாந்து துடுப்பெடுத்தாடும் போது இடைக்கிடை மழை குறுக்கிட்டதால் 47 ஓவர்களுக்கு 293 ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் 40.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்த அயர்லாந்து 216 ஓட்டங்களை பெற்று தோலவியடைந்தது.

இதன்படி டக்வத் லூயிஸ் முறைப்படி இலங்கை 76 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

டசுன் சாணக அபாரமாக பந்துவீசி 43 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை கைப்பற்றியதுடன் துடுப்பெடுத்தாட்டத்தில் 19 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

வவுனியா தோணிக்கல் ஜீனியஸ் முன்பள்ளியின் கண்காட்சி நிகழ்வு!!

 
வவுனியா தோணிக்கல் ஜீனியஸ் முன்பள்ளியின் கண்காட்சி நிகழ்வு நேற்று (15.06.2016) பாலர் பாடசாலையின் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.

இன்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் சிறப்பு விருந்தினராக பண்டாரிகுளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், அயல் முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

IMG_3711IMG_3715IMG_3712IMG_3717IMG_3721IMG_3719IMG_3728IMG_3722IMG_3732IMG_3745IMG_3746IMG_3752IMG_3754IMG_3757IMG_3740IMG_3733IMG_3735IMG_3734IMG_3736IMG_3741IMG_3742IMG_3743