சிங்கத்தின் கூண்டிற்குள் நிர்வாணமாகக் குதித்த நபர் : இறந்துபோன சிங்கங்கள்!!(வீடியோ)

Franco-Luis-Ferrada-Roman

சிலி நாட்டில் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் சிங்கத்தின் கூண்டிற்குள் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிலியின் தலைநகரான சந்தியாகோவில் அமைந்துள்ள Chilean National விலங்கியல் பூங்காவில் பார்வையாளர்களின் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், பூங்காவில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிங்கத்தினை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், யாரும் எதிர்பார்க்கா வண்ணம், 20 வயதுடைய FrancoLuis Ferrada Roman என்ற நபர் தனது ஆடைகளை களைந்துவிட்டு, சிங்கத்தின் கூண்டிற்குள் குதித்துள்ளார்.

கூண்டிற்குள் ஆண் பெண் சிங்கங்கள் இருந்துள்ளன, முதலில் அந்த நபருடன் விளையாட ஆரம்பித்த சிங்கங்கள் பின்னர், தனது தாக்குதலை ஆரம்பித்தன, பொதுமக்கள் முன்னிலையில் அந்த நபரை சிங்கங்கள் உக்கிர வேட்டையாட, பதிலுக்கு அந்த நபரும் சிங்கத்துடன் மல்லுக்கட்டியுள்ளார்.

இந்த சண்டையினை பார்க்கமுடியாமல் மக்கள் அச்சத்தில் அலறியுள்ளனர், விரைந்து வந்த பூங்கா அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், துப்பாக்கியால் சுட்டதில் சிங்கங்கள் இரண்டும் உயிரிழந்தன.

அதன் பின்னர் மோசமாக காயமடைந்திருந்த அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து பூங்காவின் இயக்குனர் Mauricio Fabr கூறியதாவது, பூங்காவிற்கு வரும் மக்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுப்போம், கூட்டம் மிகுதியாக இருந்ததால் எங்களால் இதனை தடுக்க முடியவில்லை.

இருப்பினும், அந்நபரின் உயிரை காப்பாற்றுவதற்காக சிங்கத்தினை சுட்டத்தில் அது உயிரிழந்துவிட்டது, அந்நபர் தற்கொலை செய்யும் நோக்கிலேயே சிங்கத்தன் கூண்டிற்குள் குதித்திருக்க வேண்டும் என உறுதியாக தெரிகிறது என கூறியுள்ளார்.

தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்நபரின் உயிர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்கள் பாதை மிக சரி, பயண தூரம் சற்று அதிகம் : சீமான்!!

Seeman

தமிழகத்தில் நடந்து முடிந்த 232 தொகுதிக்கான சட்டமன்ற தேர்தலில், சீமானின் நாம் தமிழர் கட்சி முதன்முறையாக அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளரை நிறுத்தி தேர்தலை சந்தித்தது.

தேர்தல் முடிவில் 232 தொகுதிகளில் இரு திராவிட கட்சிகளை தவிர, வேறு எந்த கூட்டணியோ, கட்சியோ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை,

இந்நிலையில் முதன்முறையாக தேர்தலை சந்தித்த நாம் தமிழர் கட்சி மொத்தம் 1.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. தேர்தலின் முடிவு குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, வெகுவான மக்களுக்கு இந்த இரண்டு ஆட்சியும் வரக்கூடாது என்கிற எண்ணம் இருக்கிறது.

ஆனால், மாற்று யாரு என தெரியவில்லை? மாற்றாக நினைப்பவர்கள் அனைவரும் ஒரு ஏமாற்றாக மாறி ஒரு தற்காலிக தோல்வியை கூட தாங்க முடியாமல் அன்றைய தேவைக்காக படக்கென இரண்டு திராவிட கட்சிகளிடம் சரணடைந்து விடுகின்றனர்.

இதனால், இந்த இரண்டு திராவிட கட்சிகளையும் அசைக்க முடியவில்லை. ஆனால், நாங்கள் எங்கள் பாதையில் எடுத்து இருக்கும் நோக்கத்தோடு உறுதியாக பயணித்து கொண்டு போக வேண்டிய தேவை தான் நாம் தமிழர் கட்சிக்கு இருக்கின்றது.

அதனால். நாங்கள் தற்காலிக தோல்வியை பற்றியும், எதை பற்றியும் கவலைப்படவில்லை. இலக்கை முடிவு செய்து தான் நாங்கள் பயணிக்கின்றோம், எங்களுக்கு பாதை சரியாக உள்ளது, பயண தூரம் தான் சற்று அதிகமாக உள்ளது.

அதனால், பதறாமலும், சிதறாமலும் உளவு சக்தியாகவும், பிளவு சக்தியாகவும் இல்லாமல் கவனமாக நடந்த போக வேண்டிய தேவை தான் இருக்கின்றது.

அதனால் தான் நாங்கள் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை, என்னை வெல்ல வைத்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது, தோல்வியடைய வைத்தாலும் என்னுடைய வருத்தமும் துயரமும் அவங்களுக்கு தான்.

அதனால், தான் நங்கள் துணிந்து மாற்று அரசியல், மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி நாமே மாற்று நாம் தமிழரே மாற்று, திராவிட கட்சிக்கு மற்றொரு திராவிட கட்சி மாற்றாக இருக்க முடியாது என சீமான் கூறியுள்ளார்.

ஜெயலலிதா வெற்றி : திருப்பதி கோயிலுக்குச் சென்ற நடிகை நமீதா!!

Namitha

முதலமைச்சராக ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற்றதற்காக நடிகை நமீதா, திருப்பதி கோயிலில் தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை நமீதா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என தான் பிரார்த்தனை செய்திருந்தேன்.

தனது பிரார்த்தனை நிறைவேறியதை அடுத்து, ஏழுமலையானுக்கு தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளேன் என கூறியுள்ளார்.

இலங்கையின் இயற்கை அனர்த்தம் : மரணங்கள் 82 ஆக உயர்வு!!

Rain

இலங்கையில் இன்று வெளியிட்டுள்ள இயற்கை அனர்த்த பாதிப்புக்கள் குறித்த அறிக்கையின்படி மரணங்கள் 82 ஆக உயர்ந்துள்ளன.

இயற்கை அனர்த்தம் காரணமாக 348 ஆயிரத்து 477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 242 ஆயிரத்து 927 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தநிலையில் கேகாலை அரநாயக்க மண்சரிவின் பின்னர் இன்னும் 118 பேரை காணவில்லை என்று இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

நாளை அரச பாடசாலைகள் ஆரம்பம்!!

School open

நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளும் நாளை திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அனர்த்தங்கள் ஏற்பட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு வலய கல்வி பணிப்பாளர்களின் ஒப்புதலுடன் விடுமுறையளிக்க அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு மேலும், தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரோனு புயல் கோரத் தாண்டவம் : 24 பேர் பலி : 5 லட்சம் மக்கள் வெளியேற்றம்!!

roanu1

பங்காளதேசத்தில் மணிக்கு 88 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய ’ரோனு’ புயலினால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலியாகியுள்ளனர்.

வங்கக்கடலில் உருவான ரோனு புயல் இலங்கையில் கடலோர பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. கனமழை மற்றும் நிலச்சரிவால் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். இதன் தாக்கத்தால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சிட்டகொங் துறைமுகத்திற்கு தென்மேற்கில் 140 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல் இன்று பிற்பகல் பரிசால்-சிட்டகொங் இடையே கரையை கடக்கலாம் என வானிலை மையம் கூறியிருந்தது.

குறித்த புயலின் தாக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கடுமையான காற்று மற்றும் இடியுடன்கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. பாதைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதிப்பு உள்ள 13 கடலோர மாவட்டங்களில் இருந்து சுமார் 5 இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சூறாவளிக் காற்றினால் சிட்டாகொங் பகுதியில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பட்டுவாக்கலி பகுதியில் வெள்ளப் பெருக்கால் ரங்காபாலி அணைக்கட்டு உடைந்ததில் இங்கு 300 இற்கும் அதிகமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

சிட்டாகொங் கடலோரப் பகுதிகளில் மட்டும் புயல், மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுசார்ந்த விபத்துகளில் சிக்கி 10 இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஒட்டுமொத்தமாக, ’ரோனு’ புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிட்டகொங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.

பங்களாதேஷில் வீசிய “ரோனு ”சூாறாவளியினால் 5 இலட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

எனினும் தற்போது புயல் காற்று சாதாரண நிலைக்கு திரும்பியிருந்தபோதும் அடைமழை பெய்த வண்ணமிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், நிலவி வரும் சீரற்ற காலநிலையால் அந்நாட்டு துறைமுகங்கள் மூடப்பட்டதுடன் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

Roanu

வவுனியா வர்த்தக சங்கத்தால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்!!

 
தென்பகுதியில் மண்சரிவு, மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்த அழைப்புக்கு அமைவாக வவுனியா வர்த்தக சங்கத்தினால் ஒரு தொகுதி பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(21.05) மாலை இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ரோகண புஸ்பகுமாரவிடம் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் மற்றும் சங்க உறுப்பினர்களினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

பொருட்களைப் பெற்றுக் கொண்ட அரசாங்க அதிபர் ஓரிரு தினங்களில் வவுனியா மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் தென்பகுதியில் மண்சரிவு, பெரு வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சென்றடைய ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் உலர் உணவுப் பொருட்களை வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார்.

image-0a361bb47fc3e305d282df19410f9a24a6ec7d497d40f1c0e6c8de6e3b0ab1e3-V image-5a82e4319da6104b0109af43d38bb64bada91cec6404c6ff24e8058a072d039f-V image-7d9fe5bad4aa6a035a47cd4a20bb41be1b3428602a1737aef7bc2b61c3c52956-V image-7f87b8dfb8085e45de29adb2de6a96092d181901373e4dc2b4143b35701e0bb0-V image-10b52b95868609b418c46ac83323f16ede429a2df10f4b3af48b8ec6c12b5100-V image-53c0c11f48c7654ef9dab2cf8bc03f4f84520a6e8cdd561e88370df1893fdf97-V image-4374765d166e2d69d9e7e412bd13f8d91cc3a469fe2b25031f68e33b7ca0c5e5-V image-b9b19482a01db28299d29419e8bf0188c45c6bd8d78c64c7df97e6b6ac1ff7b7-V image-e9a53186711273b48ee95696eee8dd64e4803e3ba6e3a4c57a39fc2cd3d9b585-V

நிலநடுக்கத்தை உணரும் பெண் பூமியின் இயக்கத்தைச் சொல்ல முடியும் என்கிறார்!!

11

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் மூன் ரிபாஸ். உலகில் நடைபெறும் ஒவ்வொரு நிலநடுக்கத்தையும் அவரால் உணர முடியும். அவரது கையில் ”சீஸ்மிக் சென்சார்” என்ற சிறிய கருவியைப் பொருத்தியிருக்கிறார். தோலுக்கு அடியில் இருக்கும் இந்தக் கருவி, ஒன்லைன் சீஸ்மோ கிராஃப் உதவியுடன் இயங்குகிறது.

மூன்ரிபாஸ் ஒரு நடனக் கலைஞர். அவருக்கு இயற்கையிலேயே எதையும் நுட்பமாக அறிந்துகொள்ளும் உணர்வு இருக்கிறது. அதை இன்னும் மேம்படுத்துவதற்காக சீஸ்மிக் சென்சார் கருவியை உடலுக்குள் பொருத்திக்கொண்டார்.

‘‘என்னால் பூமியின் ஒவ்வொரு இயக்கத்தையும் அறிந்துகொள்ள முடியும். அந்த இயக்கத்தின் தன்மையை மொழிபெயர்த்துச் சொல்லவும் முடியும். பூமியின் எந்த மூலையில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டாலும் உடல் நடனமாட ஆரம்பித்துவிடும். நிலநடுக்கத்தின் தன்மையைப் பொறுத்து என் உடலும் குலுங்கும்.

நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, நள்ளிரவில் என் உடல் அவ்வளவு நடுங்கியது. நானே நேபாளத்தில் இருந்ததுபோல உணர்ந்தேன். பூமியில் பாதிக்கப்படும் மக்களின் உணர்வுகளை நானும் உணர்கிறேன், வருந்துகிறேன். இரண்டாவது இதயம் போல சீஸ்மிக் சென்சார் எப்போதும் துடித்துக்கொண்டே இருக்கிறது.

நிலநடுக்கம் மனிதர்களுக்கு அழிவைத் தருவதால், அதை மோசமான விஷயமாக மனிதர்கள் பார்க்கிறார்கள். ஆனால் நானோ பூமியின் பரிணாம வளர்ச்சியாகத்தான் கருதுகிறேன். மனிதர்கள் இன்னும் பூமியை நன்கு அறிந்துகொள்ளவில்லை.

பூமியைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தால் பூமிக்கும் நல்லது, மனிதர்களுக்கும் நல்லது. பூமியை அறிந்துகொள்வதற்காகவே இன்னும் பல பரிசோதனைகளை என் உடலில் நிகழ்த்த இருக்கிறேன். ஒவ்வொரு விரலிலும் ஒவ்வொரு கண்டத்தை அறிந்துகொள்ளும் விதமாகக் கருவிகளைப் பொருத்துவதே என் அடுத்த இலக்கு.

இப்படிக் கருவிகளைப் பொருத்திக்கொள்வதால் மற்ற மனிதர்களை விட வித்தியாசமாக வாழ முடியும். ஆனால் நம் இயல்பே மாறிவிடும் என்று சிலர் இதை எதிர்க்கிறார்கள். எந்த நல்ல விஷயமும் முதலில் எதிர்க்கப்பட்டு, பிறகுதான் ஏற்றுக்கொள்ளப்படும். அதனால் எனக்குக் கவலை இல்லை’’ என்கிறார் மூன் ரிபாஸ்.

1 2

பூமி, செவ்வாய், சூரியன் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு இன்று!!

mars-sun-earth

பூமி, செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்கள் வானில் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு இன்று (22.05) காலை நிகழவுள்ளது.

தற்போது பூமியில் இருந்து 4.8 கோடி மைல் தொலைவிலுள்ள செவ்வாய் கிரகம், இந்த நிகழ்வின்போது சுமார் 4.6 கோடி மைல் தொலைவுக்கு பூமியை அண்மித்து வரும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பூமி, செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வருகின்றன.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு இதே போன்று நிகழும்போது செவ்வாய் கிரகம் சுமார் 3.6 கோடி மைல் தொலைவு வரை பூமியை அண்மித்து வரும் என்று அமெரிக்காவின் நாஸா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியன், பூமிக்கு இடையே புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு, கடந்த வாரம் நிகழ்ந்தது. அப்போது, சூரியனில் ஒரு சிறிய கரும்புள்ளி போன்று புதன் கிரகம் தென்பட்டது. இது, ஒரு நூற்றாண்டுக்கு 13 முதல் 14 முறை மட்டுமே நிகழும்.

சீரற்ற காலநிலையைப் பயன்படுத்தி வீடுகளில் திருடிய 15 பேர் கைது!!

Robbery

வெள்ளம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறியவர்களின் வீட்டில் திருடிய 15 நபர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் சொத்துக்களைப் பாதுகாக்க விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் மழை நீரை கட்டுப்படுத்துவதற்கு புதிய சுரங்க வழி ஓடைகள்!!

Colombo water

கொழும்பில் மழை நீரை கட்டுப்படுத்துவதற்கு புதிய சுரங்க வழி ஓடைகள் இரண்டை அமைப்பதற்கு மேல் மாகாணம் மற்றும் மாநகர அபிவிருத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது நான்கு கழிவு நீர் ஓடைகள் ஊடாக கொழும்பில், மழை நீர் அகற்றப்படுவதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய கொட்டாஞ்சேனை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்படக் கூடிய வௌ்ளத்தை கட்டுப்படுத்தும் வகையில் கொட்டாஞ்சேனையிலிருந்து முகத்துவராம் ஊடாக கடலை செல்லக்கூடிய வகையில் சுரங்கவழி நீரோடை அமைக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் பௌத்தாலோக்க மாவத்தை தொடக்கம் பம்பலப்பிட்டி ஊடாக கடலை சென்றடைய கூடி மற்றுமொரு சுரங்கவழி நீரோடையொன்றும் நிர்மானிக்கப்படவுள்ளதாக மேல் மாகாணம் மற்றும் மாநகர அபிவிருத்து அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு சுரங்கவழி நீரோடைகளும் இரண்டு வருடங்களுக்குள் நிர்மானிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் காணரமாக கழிவு நீர் ஓடைகளை விரிவுபடுத்துவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

தற்போது வௌ்ளவத்தை, தெஹிவளை, நாகலங்கம் வீதி மற்றும் முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் மாத்திரமே கொழும்பில் தேங்கும் நீரை அகற்றுவதற்கான நீரோடைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக தேர்தல் முடிவுகளால் கொந்தளிக்கும் வீரலட்சுமி!!

Veeralakshmi

மக்கள் நலக் கூட்டணி சார்பில் ம.தி.மு.க சின்னத்தில் களமிறங்கிய தமிழர் முன்னேற்றப்படையின் வீரலட்சுமிக்கு வெற்றி கைகூடவில்லை. அதே சமயம் அ.தி.மு.க வேட்பாளர் சி.ஆர்.சரஸ்வதியின் தோல்விக்குக் காரணமே வீரலட்சுமி வாங்கிய ஓட்டுக்கள்தான் என ஆதங்கப்படுகின்றனர் அ.தி.மு.கவினர்.

சட்டசபைத் தேர்தலின்போது பல்லாவரம் தொகுதி களைகட்டி காணப்பட்டது. அ.தி.மு.க வேட்பாளர் சி.ஆர்.சரஸ்வதிக்கும் மக்கள் நலக் கூட்டணியின் வீரலட்சுமிக்கும் முட்டல் மோதல்கள் அதிகரித்தபடியே இருந்தன. அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். என்னைக் கண்காணிக்க தி.மு.க, அ.தி.மு.க ஆட்களை நியமித்திருக்கிறது, என்னைப் பார்த்து பெரிய கட்சிகள் ஓடிப் போகின்றன என்றெல்லாம் கூறி தினம் தினம் தேர்தல் களத்தை அதிர வைத்தார் வீரலட்சுமி.

இந்நிலையில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டவர் 14,083 வாக்குகள் வாங்கியிருக்கிறார். அ.தி.மு.கவின் சி.ஆர்.சரஸ்வதி பெற்ற வாக்குகள் 90,726. வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர் கருணாநிதி 1 லட்சத்து 11 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருந்தார். ஏறக்குறைய அ.தி.மு.கவின் தோல்விக்குக் காரணமாகியிருக்கிறார் வீரலட்சுமி.

அவரிடம் பேசியபோது. ” நான்தான் வெற்றி வேட்பாளராக வந்திருக்க வேண்டியது. எல்லாத்தையும் கெடுத்துட்டாங்க. கடைசி நாளில் பணத்தை வாரிக் கொடுத்தாங்க. நீங்களே சொல்லுங்கண்ணே…வீட்டுக்கு 5 ஆயிரம், எட்டாயிரம்னு கொடுத்தால், மக்கள் யாருக்கு ஓட்டுப் போடுவாங்க? எங்கள் அணிக்கு வெற்றி கிடைக்கும் அளவுக்கு தீவிரமா பிரசாரம் செஞ்சோம். என்னைப் பார்த்த மக்களும், ‘அஞ்சு வருஷமா ஆளுங்கட்சி எங்களுக்கு ஒண்ணும் பண்ணலை. நீ வந்துதான் தீர்த்துக் கொடுக்கணும்னு’ சொன்னாங்க. கடைசி நாள்ல பணத்தைக் கொடுத்து மக்களை வாங்கிட்டாங்க” என்றர்

தேர்தல் தோல்வியை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு,

” எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. இது நான் எதிர்பார்த்ததுதான். இவ்வளவு பணம் கொடுத்தா யார்தான் நமக்கு ஓட்டுப் போட வருவாங்க. தவிர, இன்னொன்னும் சொல்லணும். வர்ற தேர்தல்ல நோட்டா பட்டனை நீக்க ஆணையம் நடவடிக்கை எடுக்கணும். அந்த அஞ்சு லட்சம் ஓட்டும் எங்களுக்கு வர வேண்டியது. தேவையில்லாம நோட்டா பட்டனை வச்சு கெடுத்துட்டாங்க என்று தெரிவித்தார்.

பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

Sucide

பொகவந்தலாவ – ஆரியபுற பகுதியில் 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (21.05) சனிகிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவி கடந்த மாதம் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் கடத்தி செல்ல முயற்சிக்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கும் குறித்த முச்சக்கர வண்டி சாரதிக்கும் காதல் உறவு இருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை ஜெயலலிதா உட்பட தமிழக அமைச்சரவை பதவியேற்பு : 13 பேர் புதியவர்கள்!!

Jeyalaitha

தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் புதிதாக அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் இடம்பெறவுள்ள புதிய அமைச்சர்களின் பட்டியல் ஆளுநர் மாளிகை சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

முன்னதாக, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்கான கடிதத்தையும், புதிய அமைச்சர்களின் பட்டியலையும் ஜெயலலிதா அளித்தார். இந்தப் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து அதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டது.

இதன்படி, முதல்வர் ஜெயலலிதா, 28 அமைச்சர்களும் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர்.

கடம்பூர் சி.ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், வி.சரோஜா, கே.சி.கருப்பண்ணன், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.துரைக்கண்ணு, பி.பெஞ்சமின், வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, வி.எம்.ராஜலட்சுமி, எம்.மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 13 புதுமுகங்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்கின்றனர்.

14-வது சட்டப் பேரவையில் அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி, செல்லூர் கே.ராஜு, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.சண்முகநாதன், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி ஆகிய 12 பேர் மீண்டும் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர்.

கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சர்களாக இருந்த டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகிய 3 பேர் அமைச்சர்களாகவுள்ளனர்.

அதேபோல் வி.சரோஜா (ராசிபுரம்), எஸ்.வளர்மதி (ஸ்ரீரங்கம்), வி.எம்.ராஜலட்சுமி (சங்கரன்கோவில்) ஆகிய 3 பெண்கள் அமைச்சர்களாகவுள்ளனர்.

மேற்கும்-தெற்கும்: அதிமுகவின் வெற்றிக்கு மேற்கு மண்டலத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளும், தென் மாவட்டத்தில் சில தொகுதிகளும் பெரிதும் கை கொடுத்தன.

இதனால், மேற்கு, தென் மாவட்டங்களில் இருந்து தலா 5 பேர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், பிற மாவட்டங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 15-ஆவது சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 134 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இதையடுத்து, சட்டப் பேரவையின் அதிமுக குழுத் தலைவராக ஜெயலலிதா வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, முதல்வர் ஜெயலலிதா, 28 அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் திங்கள்கிழமை (மே 23) நண்பகல் 12.00 மணிக்கு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை!!

Raining in Srilanka

மேல், வட மேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் இன்று (22.05) மழை பெய்யக் கூடும் என வளி மண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் மழை பெய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வளி மண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் புத்தளம், மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பகுதி, மட்டக்களப்பு முதல் பொத்துவில் ஊடான ஹம்பாந்தோட்டை வரையான கடற் பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 வீதம் வரை அதிகரிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் 50 – 60 வீதம் வரை காற்றின் அளவு காணப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வவுனியா உதைபந்தாட்ட சம்மேளத் தலைவர் மீது தாக்குதல்!!

 
நேற்று(21.05.2016) இரவு வவுனியா உதைபந்தாட்ட சம்மேளத் தலைவர் திரு.யோன்சன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

வவுனியா உதைபந்தாட்ட சம்மேளத்தின் தலைவர் திரு.யோன்சன் ஒரு உதைபந்தாட்டப் போட்டி ஒன்றின்போது குறிப்பிட்ட ஒரு விளையாட்டுக் கழகத்திற்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதித்ததாகவும் அதனால் அவர் நேற்றிரவு வேப்பங்குளத்தின் வைத்து தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பான முழுமையான செய்திக்கு தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள்.

1 2 3 4 5