இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி படுதோல்வி!!

England's James Anderson (third left) celebrates after taking the wicket of Dimuth Karunaratne during day three of the 1st Investec Test at Headingley, Leeds.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட ரின் முதலாவது போட்டி நேற்று முன்தினம் ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. அந்தவகையில் முதலாவது இன்னிங்சில் 298 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து சகல விக்கட்டுக்களையும் இழந்திருந்தது.

முதல் இன்னிங்சில் இலங்கை அணி 91 ஓட்டங்களுக்குள் சுருண்டு பாலோ-ஒன் ஆனது.

தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 2 பந்து மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் குறைவான நேரத்திலேயே முடித்துக்கொள்ளப்பட்டது.

பின்னர் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 119 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதன்படி இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மரண அறிவித்தல் : திருமதி மனோன்மணி செல்வராசா

Manonmani

(வேலனை 4) வேலனை கிழக்கு அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் வவுனியா குருமன்காட்டை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மனோன்மணி செல்வராசா அவர்கள் 21.05.2016 சனிக்கிழமையன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான திரு திருமதி கந்தையா நகுலேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்காளான திரு திருமதி செல்லையா தங்கச்சியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும் காலஞ் சென்றவர்காளான அன்னலட்சுமி, பூமணி இராசலட்சுமி, தியாகராசா சரோஜினிதேவி மற்றும் கமலாம்பிகை,சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நல்லையா, குணரத்தினம் அமிர்தலிங்கம் மற்றும் சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், செல்வநாயகம் இராசநாயகம், செல்வராணி, இந்திராணி, ரவிச்சந்திரன், கலாநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும் கோமதி, தர்மரத்தினமலர், துரைராஜா, இராசநாயகம், சத்தியபாமா, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 23.05.2016 திங்கட்கிழமை பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரிகைகளிற்காக தட்சணாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

30/41A,
1ம் ஒழுங்கை,
கோவில் வீதி,
குருமன்காடு,
வவுனியா.
024-2221406

அஜித் படத்தில் நடிக்க விரும்பாத சந்தானம்!!

Ajith

சந்தானம் தற்போது நகைச்சுவை வேடத்தில் நடிக்காமல், கதாநாயகனாக நடித்து வருகிறார். அதனால் அஜித் படத்தில் சந்தானம் நடிக்க வில்லை.

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த சந்தானம், முதன் முதலில் சிம்புவின் மன்மதன் படத்தில் அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார்.

சிவா மனசுல சக்தி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இதன் பின்னர் தமிழ் படங்களில் சந்தானத்துக்கு முக்கிய இடம் கிடைத்தது. இந்த நிலையில் வடிவேலு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

இதனால் சந்தானத்தின் மார்க்கெட் சூடுபிடிக்கத் தொடங்கியது. இவர் இல்லாத படம் இல்லை என்ற நிலை உருவானது. மற்ற நடிகர்களுடன் நகைச்சுவை வேடங்களில் நடித்த சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவர் ஆனார். அதன் பின்னர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

இப்போது தில்லுக்கு துட்டு என்ற படத்தில் சந்தானம் நடித்து இருக்கிறார். இது விரைவில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே, அஜித்தின் வீரம் படத்தில் நடித்த சந்தானத்தை அடுத்து அஜித் நடிக்க இருக்கும் அவரது 57வது படத்தில் நடிக்க அணுகி உள்ளனர்.

ஆனால் அதில் காமெடியனாக நடிக்க விரும்ப வில்லை. இதுபற்றி கூறிய சந்தானம்.. “எல்லோருக்கும் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போகவே விரும்புகிறார்கள். நகைச்சுவைப் படங்கள் நிறைய வருகின்றன. ஆனால் இதிலேயே நீண்ட காலம் நிலைத்திருக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

விஜய்யின் தெறி படத்திலும் நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடிக்க சம்மதிக்கவில்லை.

கதாநாயனாக நடிக்கும் படங்களின் கால்ஷீட் பாதித்து விடக் கூடாது என் பதற்காகவே அஜித் படத்தையும் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

மனத் தூய்மையே அழகைத் தரும் : அனுஷ்கா

Anuskaa

அனுஷ்கா சிங்கம் படத்தின் 3ம் பாகமாக தயாராகும் எஸ்3 படத்தில் சூர்யா ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். பாகுபலி இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். அனுஷ்காவுக்கு 34 வயது ஆகிறது. ஆனாலும் கதாநாயகி வாய்ப்புகள் குவிகின்றன. இதற்கு அவருடைய அழகே காரணம் என்கின்றனர்.

தனது அழகை கவனமாக அவர் பராமரித்து வருகிறார். அழகாக இருப்பது எப்படி என்பது குறித்து அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு.

நான் அழகாக இருப்பதாக ரசிகர்கள், பட உலகினர் பாராட்டுகின்றனர். ஒரு படத்தில் குண்டுப் பெண் வேடத்தில் நடித்தேன். அந்த பருமன் கூட அழகுதான் என்றும் கூறினர். நான் அழகாக இருப்பதற்கான ரகசியம் என்ன என்று பலரும் கேட்டவண்ணம் இருக்கிறார்கள். அழகு என்பது அவரவர் கையில் இருக்கிறது.

சிலர் அந்த அழகை காப்பாற்றிக்கொள்கிறார்கள். வேறு சிலரோ அதை தொலைத்து விடுகிறார்கள். அழகு என்பது கடைகளில் கிடைக்கும் கிரீம்களை தடவுவதால் வருகிறது என்று நினைப்பவர்களும் உண்டு. அது தவறு. அழகு சருமம் சம்பந்தப்பட்டது என்று நினைத்து சருமத்தை மட்டும் மெருகேற்றினால் அழகு வராது. அது மனம் சம்பந்தப்பட்டது.

இரவு தூங்காமல் இருப்பது, எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக் கொண்டு இருப்பது, சாதாரண பிரச்சினைகளை பெரிதாக எடுத்துக்கொண்டு அதிலேயே குழம்பிப்போய் இருப்பது, போன்றவை அழகை கெடுத்து விடும். நான் எந்த பிரச்சினை வந்தாலும் வருத்தப்பட மாட்டேன். எல்லா விஷயங் களையும் பொசிட்டிவ் ஆகவே பார்ப்பேன்.

மனதில் என்ன கவலை இருந்தாலும் முகத்தில் தெரியும். எனவே கவலைகளை நெருங்க விடமாட்டேன். மனதை எப்போதும் தூய்மையாக வைத்து இருப்பேன். மனம் அழகாக இருந்தால் வெளிப்புற தோற்றமும் அழகாகும். தினமும் யோகா பயிற்சிகள் செய்கிறேன். அதுவும் எனது அழகுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்று அனுஷ்கா தெரிவித்தார்.

தயாரிப்பாளர் மீது நடிகை பிரபல நடிகை பாலியல் புகார்!!

Puvisha

படப்பிடிப்பில் பாலியல் தொல்லை கொடுத்ததாக தயாரிப்பாளர் மீது நடிகை புவிஷா புகார் தெரிவித்துள்ளார்.

மலேசியாவைச் சேர்ந்த தமிழ் பெண் புவிஷா மனோகரன். பரதநாட்டியம் கற்றவர். இவர் பாலா இயக்கிய பரதேசி படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்து தமிழ், இந்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோனேயின் தங்கை கதாபாத்திரத்தில் வந்தார்.

இந்த நிலையில் புவிஷாவுக்கு கன்னடத்தில் தயாரான ஜில் ஜில் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிட்டியது. இந்த படத்தை மது இயக்கினார். வெங்கடேஷ் பிரசாத் தயாரித்தார். உதய் பல்லால் ஒளிப்பதிவு செய்தார். இந்த படத்தின் படப்பிடிப்பில் தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புவிஷா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது..

ஜில் ஜில் படத்தில் என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ததில் இருந்தே தயாரிப்பாளர் வெங்கடேஷ் பிரசாத்தும், ஒளிப்பதிவாளர் உதய் பல்லாலும் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். படப்பிடிப்பில் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தார்கள். தயாரிப்பாளர் என்னை ஹோட்டல் அறைக்கு வரும்படி அழைத்தார்.

இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. படப்பிடிப்பில் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எனவே இருவர் மீதும் பொலிஸில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளேன் என்று புவிஷா கூறினார்.

புவிஷா பொலிசில் புகார் அளித்ததும் இருவரும் கைது செய்யப்படலாம் என்று கன்னட பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் : மத்யூஸ் வெளியிட்ட சிறந்த அணி!!

Angelo Mathews

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் உலக கிரிக்கெட் லெவன் அணியை வெளியிட்டுள்ளார். இந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விபரம்..

சச்சின் டெண்டுல்கர்
குமார் சங்கக்கார
பிரைன் லாரா
அரவிந்த டி சில்வா (அணித்தலைவர்)
மஹேல ஜெயவர்த்தன
ஜக் கலிஸ்
ஷேன் வோன்
முத்தையா முரளிதரன்
வாசிம் அக்ரம்
சமிந்த வாஸ்
கிளென் மெக்ராத்.

பாடசாலைக் கழிவறையில் மாணவி செய்த செயல் : அதிர்ச்சியில் பாடசாலை நிர்வாகம்!!

School

அமெரிக்காவில் பாடசாலை மாணவி ஒருவர் 25 மாணவர்களுடன் உறவு கொண்டுள்ள சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடா மாநிலத்தில் செயல்பட்டு வரும் Fort Myers உயர்நிலைப்பள்ளியில் பயின்று வந்த 15 வயது மாணவி ஒருவர், அப்பள்ளியின் இரண்டாவது தளத்தில் உள்ள மாணவர்களின் கழிவறைக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இவர் கழிவறைக்கு வரும் மாணவர்களுடன் உறவு கொண்டுள்ளார், சுமார் 25 மாணவர்களுடன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். கால்பந்து போட்டியில் அதிகமாக ஈடுபடும் மாணவர்களே இதில் அதிகம் ஆவார்.

இது பிற சகமாணவர்களின் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் இந்த பெண் உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, கழிவறையை பூட்டிவிட்டு ரகசியமாக வீடியோ எடுத்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய தலைமை ஆசிரியர், மாணவியின் தந்தையை பள்ளிக்கு வரவழைத்து புகார் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்ட மாணவியின் தந்தை அதிர்ச்சியடைந்துள்ளார்.

தற்போது, 25 மாணவர்களையும் பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது, மேலும் அந்த மாணவியின் மீதான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக அதிகளவாக பதிவான வெப்பம் எவ்வளவு தெரியுமா?

Climate

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக அதிக அளவிலான வெப்பம் ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பலோடி நகரத்தில் கடந்த வியாழக்கிழமை 51 டிகிரி செல்சியஸ் (123.8 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவானது.
இதற்கு முன்பு 1956ம் ஆண்டு 50.6 டிகிரி செல்சியஸ் பதிவானதே மிக அதிகபட்சமாக இருந்தது.

கோடைகாலமான மே, ஜூன் மாதங்களில் வட இந்தியாவில் பொதுவாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். ஆனால், 50 டிகிரி செல்சியஸைத் தொடுவதும் அரிதாக நடக்கும் ஒன்று.

ஆனால், தற்போது 51 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருப்பது, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையிலேயே மிக அதிகம் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பி.பி. யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த வார இறுதியில் இந்தியாவின் பல பகுதிகளில் கடும் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு நிலவிய சராசரி வெப்ப நிலையை விட 5 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்ப நிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 232 பேரில் 170 பேர் கோடீஸ்வரர்கள் : ஜெ.க்கு 3ம் இடம், கலைஞருக்கு 4ம் இடம்!!

Jayalalitha-karunanidhi

தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள 232 எம்.எல்.ஏ.க்களில் 170 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள். இதில், ஜெயலலிதா மூன்றாமிடத்திலும், கருணாநிதி நான்காம் இடத்திலும் உள்ளனர்.

தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில், இந்த முறை அதிக அளவில் கோடீஸ்வரர்கள் போட்டியிட்டனர்.

இதில், அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 997 பேரில் 553 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்தது.தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கையும் முடிந்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

இந்நிலையில், தமிழக மக்கள் புதிதாக தேர்ந்தெடுத்துள்ள எம்.எல்.ஏ.க்களில் 170 பேர் கோடீஸ்வர்களாக உள்ளனர் . இதை தொடர்ந்து, மொத்தம் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 70 சதவீதம் எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே அதிக எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக இருப்பது இதுவே முதல்முறையாகும்.இதில், அதிக கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள பணக்காரக் கட்சி என்ற முதலிட அந்தஸ்தை அ.தி.மு.க. தட்டிச் சென்றுள்ளது.

வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க.வின் 134 எம்.எல்.ஏ.க்களில் 91 பேர் கோடீஸ்வரர்கள். இதற்கு அடுத்தபடியாக 73 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சி என்ற 2வது இடத்தை தி.மு.க. பிடித்துள்ளது.

இதேபோல், வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரில் 5 பேர் கோடீஸ்வரர்கள். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.யும் கோடீஸ்வரர் அந்தஸ்துடன் உள்ளார்.

இந்த 170 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களில் முதல் இடத்தை நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எச்.வசந்தகுமார் பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு 337 கோடியாகும்.

அண்ணாநகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.கே.மோகன் ரூ.170 கோடி சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா ரூ.113 கோடி சொத்துக்கள் மதிப்புடன் மூன்றாவது இடத்திலும், தி.மு.க. தலைவர் கருணாநிதி ரூ.62 கோடி சொத்துக்கள் மதிப்புடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

வவுனியாவில் வெசாக் தின ஊர்வலமும் நிகழ்வுகளும்!!

 
வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா தெற்கு கல்வி வலயம் ஏற்பாடு செய்த வெசாக் தின ஊர்வலமும் நிகழ்வுகளும் நேற்று(20.05.2016) நடைபெற்றது.

வவுனியா கந்தசாமி ஆலயத்திற்கு முன்னால் இருந்து 6.30 மணியளவில் ஆரம்பமான ஊர்வலம் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தி வழியாக கண்டி வீதியிலுள்ள விகாரையை சென்றடைந்து கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன.

இன் நிகழ்வுகளில் பல்வேறு சிங்களப் பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

 13228052_616208478544408_2138091859_n 13228058_616208481877741_217086693_n 13231238_616208451877744_741744844_n 13236023_616208495211073_1437367935_n 13236319_616208511877738_496911534_n 13245839_616208465211076_1028047370_n 13250364_616208518544404_527669496_n 13275876_616208448544411_330300702_n 13278086_616208508544405_428338700_n

காணாமல் போன விமானத்தின் பாகங்களும் உடல்களும் கண்டெடுப்பு!!

Flight

மத்தியதரைக் கடலில் 66 பேருடன் வியாழக்கிழமை விழுந்து நொறுங்கிய எகிப்து விமானத்தைக் கண்டறிந்ததாக எகிப்து ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

விழுந்து நொறுங்கிய எகிப்து ஏர் விமானத்தின் சிதறிய பாகங்களையும், அதிலிருந்த பயணிகளின் உடமைகளையும் எகிப்து விமானம், கடற்படைக் கப்பல்கள் ஆகியவை கண்டறிந்தன.

அலெக்ஸாண்டிரியா துறைமுகத்துக்கு வடக்கே 300 கி.மீ தொலைவிலுள்ள மத்தியதரைக் கடல் பகுதியில் அந்தப் பொருள்கள் கண்டறியப்பட்டன

கிழக்கு மத்தியதரைக்கடலில் விழுந்த ஈஜிப்ட்ஏர் விமானத்தின் சிதிலங்களும் மனித சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பாரிஸிலிருந்து கெய்ரோவுக்கு சென்றுகொண்டிருந்த இந்த விமானம் அறுபத்தி ஆறு பயணிகளுடன் நேற்று முன்தினம் வியாழனன்று கடலில் விழுந்தது.

37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம், 15,000 அடி உயரம்வரை வேகமாக விழுந்து, கடல்மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் இருந்தபோது, ராடார் பார்வையிலிருந்து அந்த விமானம் மறைந்ததாக கிரீஸ் ராணுவம் தெரிவித்தது.

வவுனியாவில் வெங்காய வெடி வெடித்ததில் குடும்பஸ்தர் படுகாயம்!!

Blast

வவுனியா மறவன்குளம் பகுதியில் வெங்காய வெடியினை பாக்கு என நினைத்து சுத்தியலைக் கொண்டு தாக்கும் போது வெங்காய வெடி வெடித்ததில் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா மறவன்குளம் பகுதியில் சைக்கில் திருத்தும் கடையினை நடாத்திவரும் ஆறு பிள்ளைகளின் தந்தையான சி.திருச்செல்வம் (44 வயது) ஒரு நபரிடம் விலை கொடுத்து பாக்கு வாங்கியுள்ளார். அதற்குள் வெங்காய வெடியினை மறைத்து பாக்குமாதிரியான தோற்றத்தில் வைக்கப்பட்டிருந்துள்ளது.

எனினும் குறித்த குடும்பஸ்தர் அதனை பாக்கு என நினைத்து சுத்தியலைக் கொண்டு தாக்கியபோது வெங்காய வெடி வெடித்துள்ளது.

இச் சம்பவத்தில் இரு விரல்களும் சிதறிய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆறு பிள்ளைகளின் தந்தையான இவர் நெடுங்கேணியிலிருந்து இறுதியுத்தில் கால் ஒன்றினை இழந்து விஷேட தேவைக்குட்பட்ட நிலையில் சைக்கில் திருத்தும் நிலையம் ஒன்றினை நடாத்தி வருகின்றார்.

இமய மலை ஏறிய இலங்கையின் முதலாவது வீரர்!!

JayanthiKuru-Utumpala

இமய மலையில் ஏறிய முதலாவது இலங்கையராக ஜெயன்தி குரு உதும்பல சாதனை படைத்துள்ளார்.

இன்று காலை இமய மலையின் உச்சிக்கு அவர் சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Himalayas

வவுனியா பொது நூலகத்தில் தனி அறையில் இரவு முழுவதும் தங்கியிருந்த நபரைத் தேடும் பொலிசார்!!

 
வவுனியா பொது நூலகத்தில் நபர் ஒருவர் தனி அறையில் இரவு முழுவதும் இருந்ததுடன் சில பொருட்களையும் களவாடிச் செல்ல முயற்சி செய்திருக்ககூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இரவு பொது நூலகம் மூடப்படும் போது உள்ளே மறைந்திருந்து, இரவு முழுவதும் அறையொன்றில் தங்கிருந்த நபர் காலை நூலகம் திறந்த பின்னர் தப்பிச்சென்றிருக்கலாம் என நூலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.

நபர் தங்கியிருந்த அறையின் திறப்பு பொது நூலகத்தின் நிர்வாகியிடம் இருக்கவில்லையென விடயம் அறிந்த சிலர் தெரிவித்துள்ளனர். நபர் தங்கிருந்த அறையின் திறப்பு எவ்வாறு தங்கியிருந்த நபரிடம் சென்றது என பொலிசார் கேள்வியெழுப்பிய போதும் வவுனியா நகரசபையின் உயர் அதிகாரிகள் சரியாக பதிலளிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வவுனியா பொது நூலகத்தின் கண்காணிப்புக் கமராக்கள் கடந்த சில மாதங்களாக செயலிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இன்று காலை பொது நூலகம் திறந்த பின்னர் தப்பிச் சென்ற குறித்த நபர் பல நாட்களாக குறித்த அறையில் தங்கியிருந்திருக்க கூடுமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் தங்கியிருந்த பொதுநூலகத்தின் அறையில் இருந்து ஆபாச இறுவட்டுகள் மற்றும் பெண்களின் உள்ளாடைகள் அடங்கலான ஆடைகளை பொலிசார் மீட்டுள்ளனர். மேலதிக விசாரனையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

IMG_9206IMG_9205 IMG_9208 IMG_9214 IMG_9221

இந்த மாதம் முழுவதும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்!!

Rain

இந்த மாதம் முழுவதும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய காலநிலையின் அடிப்படையில் இந்த மாதம் முழுவதிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இடியுடன் கூடிய மழை பெய்யாவிட்டாலும் ஓரளவு தொடர்ச்சியாக மழை பெய்யும் என கொழும்பு பத்திரிகையொன்றுக்குக் குறிப்பிட்டுள்ளார்.

பருவப் பெயர்ச்சி மாற்றங்களினால் தொடர்ச்சியாக இவ்வாறு மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் உயிரழந்த சிறுவர்களுக்கு மக்கள் அஞ்சலி!!

Body - Copy

இரு தினங்களுக்கு முன்னர் மழை வெள்ளத்தில் ரெஜிபோம் பெட்டிகளில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

வத்தளையில் உயிரழந்த இச் சிறுவர்களின் பூதவுடல்கள் தற்போது அஞ்சலிக்காக அவரகொட்டுவையில் வைக்கப்பட்டுள்ளது. 16 வயதான கே.பி விஜயகாந்த் மற்றும் 9 ஜனக்க பிரசாத் ஆகியோரே உயிரழந்தவர்களாவர்.

Body