வவுனியாவில் மாபெரும் தொழிற்சந்தை!!

Vavu

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் எதிர்வரும் மே 27ம் மற்றும் 28ம் திகதிகளில் மாபெரும் தொழிற்சந்தை ஒன்றை பம்பை மடுவிலுள்ள வவுனியா வளாகத்தில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், ஆடை தொழிற்சாலை நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி, தொழில்சார் கற்கை, தொழில் பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் உட்பட 30க்கு மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

இந்நிறுவனங்கள் தமக்கு தேவையான தொழில் வல்லுனர்களை பல்வேறு துறைகளில் நேரடியாக தெரிவு செய்து வேலை வாய்ப்புக்களை வழங்கவுள்ளன.

இவ் வேலை வாய்ப்புக்கள் பல்வேறு தகமையுடையவர்களுக்கும் ஏற்ற வகையில் இருக்கும் இந்நிகழ்வானது 27 ம் திகதி அனைத்து பல்கலைக்கழக பட்டதாரிகள் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்காகவும் 28ம் திகதி அனைத்து வேலை தேடுபவர்களுக்காகவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள் இரண்டு நாட்களும் இடம்பெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகள் இரு நாட்களும் காலை 9 மணி முதல் மலை 4மணி வரை இடம்பெறும்.

நிகழ்வு ஏற்பாட்டு குழு
0772294809

ts2

பெண்கள் உறங்கும் நிலையை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்து கொள்ளுங்கள்!!

Girls Sleeping position

பெரும்பாலும், தம்பதிகள் உறங்கும் நிலையை வைத்து அவர்கள் இல்லற வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என கூற முடியும் என கேள்விப்பட்டிருப்போம்.

இதே போல பெண்கள் உறங்கும் நிலையை வைத்தே அவரது குணாதிசயங்கள், அவர் எப்படிப்பட்ட நபர், கோபக்கார நபரா, அமைதியானவரா என கண்டறிய முடியுமாம்.

நேராக படுப்பது, குப்புறப் படுப்பது, பக்கவாட்டில் படுப்பது, பொம்மை அல்லது உடன் இருப்பவர்களை கட்டியணைத்துக் கொண்டு படுப்பது என இந்த 4 முறையில் தான் பெரும்பாலும் அனைவரும் உறங்குவார்கள். இந்நிலைகளை வைத்து தனிப்பட்ட நபரின் குணாதிசயங்கள், பண்புகள் எப்படி இருக்கும் என இனிக் காண்போம்.

குப்புறப் படுப்பது

குப்புறப் படுத்துக் கொண்டு தலையணைக்கு கீழ் கைகளை அணைத்து கொள்வது போல வைத்துக் கொண்டு உறங்கும் பெண்கள் இயற்கையாகவே மென்மையானவர்களாக இருப்பார்களாம்.

இவர்கள் எதுவாக இருப்பினும் அதை வரவேற்கும் குணம் கொண்டிருப்பார்கள். மகிழ்ச்சி, இகழ்ச்சி, இன்பம், துன்பம் என உணர்வு ரீதியாக இவர்கள் அதிக தாக்கம் கொள்வார்கள்.

கட்டியனைத்துக் கொண்டு உறங்குவது

தலையணை, பொம்மை அல்லது பக்கத்தில் இருப்பவர்களை கட்டியணைத்துக் கொண்டு உறங்கும் பழக்கம் கொண்டுள்ள பெண்கள் நம்பகமானவர்களாக திகழ்வார்கள்.

எந்த விஷயமாக இருந்தாலும் இவர்கள் வெளிப்படையாக வெகுளியாக பேசிவிடுவார்கள். உள்ளொன்று வைத்துக் கொண்டு புறமொன்று பேசுவது போன்று இருக்க மாட்டார்கள். இவர்கள் நல்ல தோழியாக திகழ்வார்கள்.

நேராகப் படுப்பது

நேராக படுத்து உறங்கும் பெண்கள் இயற்கையாகவே அமைதியானவர்களாகவும், கூச்ச சுபாவம் கொண்டுள்ளவர்களாகவும் இருப்பார்கள். தங்களை தாங்களே உயர்வாக எண்ணிக்கொள்வது, தன்னம்பிக்கை இவர்களது விஷேசமான குணம் என கூறலாம். இவர்களிடம் தலைமை வகிக்கும் குணம் அதிகமாக இருக்கும்.

பக்கவாட்டில் படுப்பது

அமைதியான குணாதிசயம், இரகசியத்தை வெளியே கசிய விடமாடார்கள். இவர்களை சற்று அதிகமாகவே நீங்கள் நம்பலாம்.
எவ்வளவு கடினமாக இருப்பினும், கோவப்படாமல், அவசரப்படாமல் அதற்கான தீர்வுகளை காண்பவர்களாக திகழ்வார்கள். உத்வேகமாகவும், மகிழ்ச்சியான நபர்களாகவும் இருப்பார்கள்.

சிறகிழந்த பறவைகள்..!!

13219728_1090106091030974_2053662876_n

எதிரி சண்டையிட்டும் வீழ்த்த முடியாத
கர்வம் மிகுந்த வீரப் பறவைகள்.
வேடன் இட்ட சதி வலையில்,
சிறகுகள் வெட்டப்பட்டு
வேடன் வகுத்த தனி வழியில்
குவியல் குவியலாக
இறக்கை வேறு உடல் வேறு
முண்டம் வேறு பிண்டம் வேறாக
பாதை எங்கும் கண் பெற்ற பாவமாக காட்சிகள்.

உடலோடு உயிர் மோதி துடிக்கும் வலியை
அணுவணுவாக அனுபவத்தபடி, தன்
உயிர் விட்டு விடும் இறுதி வழியும் தெரியாமல்
தன் இரண்டு குஞ்சுகளும் தன் கண் முன்னே தொலையக்கண்டு
பதறி துடித்து கதறி அழுதும் ஆறுதல் இன்றி
நட்பும் பறவையும் நன்றிப் பறவையும் தம் நினைவற்றுப் போக
துரோகம் தந்த வலியோடு புதைக்கப்படாத
உடலோடு உயிர் வேண்டா வலியோடு
இன்னும் கூண்டுகளில்..

-குமுதினி ரமணன்-

வவுனியாவில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு உதவி தேவை!!

Vavuniya

வவுனியா மரக்காரம்பளை வீதி, கணேசபுரத்தில் வசித்துவரும் 20 வயது இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இளைஞனின் குடும்பம் மிகவும் வறுமையில் யாழ்ப்பாணத்திலிருந்து இறுதி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து வவுனியாவில் தற்காலிகமாக வசித்துவருகின்றனர்.

தந்தையை இழந்து சகோதரன், மற்றும் தாயுடன் வசித்துவருகின்றார். வைத்தியர்கள் நான்கு மாதங்கள் கால அவகாசம் வழங்கியுள்ளதுடன் 15 இலட்சம் ரூபா வரையில் சிறுநீரக மாற்று சிகிச்சைக்குத் தேவைப்படுவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே கருணை உள்ளம் கொண்டவர்கள் இவ் இளைஞனுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு கருணை மனுவில் இளைஞன் கோரியுள்ளார்.

தொடர்புகளுக்கு-
0779387994
0776540354

வெசாக் தினத்தை முன்னிட்டு 540 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!!

Jail

புனித வெசாக் தினத்தை முன்னிட்டு 540 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

சிறு குற்றங்களுக்காக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கே பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல் தெனிய கூறினார்.

சிறைச்சாலையில் சிறு குற்றங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டவர்களின் தண்டனைக்காலம் குறைக்கப்படவுள்ளதுடன் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபாரத் தொகையும் பொதுமன்னிப்பின் ஊடாக இரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பாரிய குற்றங்களை இழைத்தவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கவில்லை எனவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

நாணய அளவிலான ஆளில்லா விமானத்தை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்!!

drone

சிறிய நாணய அளவிலான ஆளில்லா விமானம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

சிறிய பூச்சிகளுக்கு இருப்பது போல் பறக்கும் இறக்கைகளையும் மின்னிலையிலான இறங்கு தள வசதிகளையும் கொண்டதாக இந்த பறக்கும் ரோபாக்கள் இருப்பதால், இவற்றால் மேற்கூரையில் தரையிறங்க முடியும்.

இந்த வசதிகளால் இவை பயணித்துக் கொண்டிருக்கும் போதே இறங்கி விடவும், பறப்பதைத் தொடரும் முன் சக்தியைப் பாதுகாக்கவும் இயலும்.

இந்த சிறிய ஆளில்லா விமானத்தின் சென்சர் வசதியுடன் கூடிய திரள்கள், தேசிய பேரிடர் ஏற்படும் சமயங்களில் அப்பகுதியை இனம் காண உதவுகிறது.

இந்த வசதியினால் மீட்புக் குழுவினருக்கு முக்கிய தகவல்களை அனுப்பி ஆபத்தில் இருக்கும் உயிர்களைக் காப்பாற்ற இயலும் என நம்பப்படுகிறது.

வெள்ள ஆபத்து முழுமையாக நீங்கவில்லை : அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்!!

A Sri Lankan man wades through floodwaters in Kelaniya suburb of the capital Colombo on May 18, 2016.  Rescue workers on May 18 recovered the bodies of 16 villagers buried in landslides in Sri Lanka after three days of torrential rains. / AFP / ISHARA S.KODIKARA        (Photo credit should read ISHARA S.KODIKARA/AFP/Getty Images)

களனி ஆற்றை ஒட்டிய பகுதிகளில் வெள்ள ஆபத்து இன்னும் முற்றாக நீங்கவில்லை என்று நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் கொழும்பு, தொட்டலங்க , நாகலகம் வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் நீரின் உயர அளவீட்டுப் பலகையின் தரவுகளுக்கேற்ப களனி ஆற்றின் அருகாமைப் பிரதேசங்களில் ஏழரை மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கின்றது.

இந்த நீர் முற்றாக வடிந்து செல்வதற்கு இன்னும் இரண்டு நாட்கள் வரை பிடிக்கும்.அதே நேரம் களனி ஆற்றின் உற்பத்திப் பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்யும் நிலை நீடித்தால் களனி ஆற்றின் நீர் மட்டம் குறைவதற்கு இன்னும் பல நாட்கள் வரை செல்லும்.

அத்துடன் மீண்டும் வெள்ள அபாயமும் ஏற்படலாம்.எனவே வெள்ளநீர் முற்றாக வடிய முன்பாக பொதுமக்கள் யாரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்றும் நீர்ப்பாசன திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதற்கிடையே தொடர்ந்தும் ஏழு மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம் இருப்பதாக கட்டிட மற்றும் மண்சரிதவியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பாக உதவும் ஊடகங்களும் படையினரும்!!

 
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் களனி கங்கை பெருக்கெடுத்தமையால் வெல்லம்பிட்டி பகுதி நீரில் மூழ்கியுள்ளது. வீதிகள், பாடசாலைகள் மக்களின் குடியிருப்புகள் என அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் மிகுந்த துயரத்துள்ளாகியுள்ளதுடன் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை மீட்கும் பணியில் மூப்படையினருடன் இணைந்து பொலிஸார், தொண்டு நிறுவனத்தினர் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் இம்மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை விநியோகிக்கும் பணியில் அரச அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஊடகங்களான சக்தி, சிரச , எம்.ரி.வி.(மகாராஜா கூட்டத்தபானம்) வசந்தம் மற்றும் தமிழ் எப்.எம். சேவை ஊழியர்கள் என சகோதரமொழி வானொலிகளும் நிவாரணங்களை சேகரிக்கும் பணியை சிறப்பாக மேற்கொண்டுவருகின்றன.

நேற்று கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அனர்த்தத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான சேகரிக்கப்பட்ட உலர்உணவுப் பொருட்களை மகாராஜா கூட்டத்தபானம் வழங்கியிருந்தது.

இதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உத்தரவில் நிதிபற்றி கவலைப்படாது போதுமான அழவு அனர்த்தத்துக்குள்ளாகிய மக்களுக்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை இந்திய அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்களை விமானம் கப்பல் மூலமும் அனுப்பி வைத்துள்ளது.

13245282_1638759936151596_6506854793206106352_n12036475_1638761089484814_4968612679735100823_n 13094259_1638761442818112_6707270381090677625_n 13221035_1638760492818207_107644913520279938_n 13230086_1638761192818137_3762303642706441591_n 13230288_1638762526151337_4991595660357398_n 13232950_1638761359484787_3174160770390524282_n 13240735_1638762046151385_7934712673112230674_n 13241113_1638761422818114_737604769649578374_n 13244605_1638762142818042_1957573811214996039_n 13244760_1638762559484667_1155136197991689021_n 13254058_1638762582817998_7896843940481903289_n 13254373_1638762059484717_3741148008925253966_n 13254510_1638762072818049_4220254256039497600_n 13263839_1638762166151373_6145737179616591917_n

பல லட்சம் ரூபா மோசடி செய்த இளம்பெண் யாழில் கைது!!

Arrest

யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஏமாற்றி லட்சக்கணக்கில் கொள்ளையில் ஈடுபட்ட இளம் பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 22 வயது மதிக்கத்தக்க, சொந்த முகவரியற்ற குறித்த இளம் பெண் பல்வேறு இளைஞர்களை தொடர்பு கொண்டு காதல் வலையில் வீழ்த்தி எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட பணம், நகைகளை கொள்ளையிட்டு தலைமறைவானார். இதன்காரணமாக குறித்த பெண்ணினால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த சந்தேகநபரான குறித்த இளம்பெண்ணான யாழ்.நகரப்பகுதியில் நேற்று முன்தினம் மற்றுமொரு இளைஞருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்தி திருமணம் வரையில் சென்றுள்ளார்.

இதன்போது சந்தேகமடைந்த குறித்த பெண்ணை காதலித்த நபர் அப்பெண்ணிடம் ஊடகங்களில் அண்மையில் உங்கள் புகைப்படம் வந்ததாக குறிப்பிட்டார். அதற்கு அந்தப் பெண் ஊடகங்கள் தவறுதலாக தனது புகைப்படங்களை பிரசுரித்ததாக தெரிவித்தார்.

இதனால் சந்தேகமடைந்த அந்நபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அப்பெண்ணை பலவந்தமாக அழைத்துச் சென்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட குறித்த பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு தான் கொள்ளையடித்த நகைகள் தொடர்பான சகல விடயங்களையும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

மேலும் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஏமாற்றி கொள்ளையில் ஈடுபட்ட குறித்த இளம் பெண் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குமாறு பொதுமக்களை சுன்னாகம் பொலிஸார் வேண்டியிருந்தனர்.

அத்துடன் இந்த பெண் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் 0212240323 என்ற தொலைபேசி ஊடாக தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

நான் பயங்கரமான பேய் என பலாத்காரம் செய்ய முயன்றவர்களை மிரட்டிய சிறுமி!!

the-ghost-girl

இந்தியாவின் டெல்லியில் தன்னை பலாத்காரம் செய்ய வந்த நபர்களிடமிருந்து சிறுமி மிக சாதுர்யமாக தப்பித்துள்ளார்.

இந்தியாவின் டெல்லியில் இரவு 10 மணியளவில் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி நடந்து சென்றுள்ளார். இவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு ஆண்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு சிறுமியை கடத்தி சென்றுள்ளனர்.

நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்து சிறுமி திடீரென பயங்கரமான குரலில் பேசியும், சிரித்தும் பேயை போன்று நடித்துள்ளார். இதனால் பயந்து போன ஒருவன் ஓட்டமெடுத்துள்ளான், குழப்பத்தில் நின்ற மற்றொருவனை பயமுறுத்துவற்காக குறித்த சிறுமி தன்னுடைய ரத்தத்தை முகத்தில் பூசிக் கொண்டு மிரட்டியுள்ளார், இவனும் பயந்து போய் ஓட்டமெடுத்துள்ளான்.

இந்த சம்பவம் பற்றி குறித்த சிறுமியின் தோழி பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

தற்போது வைரலாக பரவி வரும் இந்த போஸ்ட்டுக்கு பலரும் கருத்துகளை பகிர்ந்து வருவதுடன் சிறுமியின் சாதுர்யத்துக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் சினிமாவுக்கு திரும்பினார் டெபாசிட் இழந்த விஜயகாந்த்!!

Vijyakanth

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க கிளம்பிவிட்டார்.

நடந்து முடிந்த இந்த தேர்தலில் 134 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்ற அதிமுக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா 6வது முறையாக முதல்வராக பொறுப்பேற்கிறார்.

அதேசமயம் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தல் களம் கண்ட தேமுதிக ஓர் இடம் கூட கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வெற்றி வாய்ப்பை இழந்ததோடு டெபாசிட்டையும் இழந்துள்ளார்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், நமது வெற்றி தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது. மனம் தளர வேண்டாம். நாம் ஆட்சியமைப்பது உறுதி” என்று தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, ‘தமிழன் என்று சொல்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருவதாக அப்படத்தின் புகைபடத்தோடு அவர் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளத்தில் மிதக்கும் வெல்லம்பிட்டி : மீளாத் துயரத்தில் மக்கள்!!(அதிர்ச்சிப் படங்கள்)

 
களனி கங்கை பெருக்கெடுத்தமையால் வெல்லம்பிட்டி பகுதி நீரில் மூழ்கியுள்ளது. வீதிகள், பாடசாலைகள் மக்களின் குடியிறுப்புகள் என அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் மிகுந்த துயரத்துக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த பகுதியிலுருந்து பல்லாயிம் கணக்கான மக்கள் வெளியேறியுள்ள போதும் இன்னும் பலர் குடியிறுப்புகளுக்குள் உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றர்.

குறிப்பாக கடந்த இருநாட்களில் காலநிலை சீராக காணப்பட்ட போதும் வெல்லம்பிட்டி பகுதியில் இன்னமும் 10 அடிக்கு மேல் நீர்மட்டம் காணப்படுகின்றது.

5

6

7

8

9

10

11

12

13

14

232323

13221579_1061143843931772_4452897349414939111_n

13221751_1061143950598428_7776692743379808841_n

13230113_1061144040598419_4016528361497623605_n

13237811_1061143847265105_2525624108757794162_n

13239123_1061143990598424_9188099841540520028_n

13239309_1061143947265095_218734771376378861_n

13239925_1061143890598434_1547262817160483190_n

13240081_1061143937265096_5533951256382376737_n

13240660_1061143977265092_3099603214494484637_n

13241106_1061144073931749_7301992780043829739_n

13244867_1061144027265087_4561773562838243421_n

13245505_1061144070598416_1779414317163134262_n

13254153_1061143857265104_2218769639445319396_n

13256009_1061144000598423_8943391851095857531_n

13263830_1061143900598433_1541015405623238542_n

13263851_1061143893931767_6082778264791242224_n

13265992_1061144020598421_6108540950343975089_n

cfeec12cc3f1c8cc62d18ec79774ed6e_L

Thabbowabunt_1

Vellam

Westarticle_1 (1)

Westarticle_2 (1)

vellam

ஜெயலலிதாவிற்காக விரலை வெட்டி காணிக்கை செலுத்திய அதிமுக தொண்டர்!!

Finger Cut

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதல்வரானதைத் தொடர்ந்து அதிமுக தொண்டர் ஒருவர் தனது விரலை வெட்டி காணிக்கை செலுத்தியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகலூர் கேட்டில் தங்கராஜ் (50) என்பவர் வசித்து வருகிறார்.

தீவிர அதிமுக தொண்டரான இவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா ஆட்சியமைத்தால் தனது விரலை வெட்டி உண்டியலில் காணிக்கை செலுத்துவதாக அங்குள்ள பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவிலில் வேண்டுதல் வைத்துள்ளார்.

இந்த நிலையில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்கவுள்ளதை அறிந்த தங்கராஜ், தனது வேண்டுதல் படி இன்று ராசிபுரம் முனியப்பன் கோவிலில் தனது இடது கை சுண்டு விரலை வெட்டிக்கொண்டார்.

இதில் துண்டான தங்கராஜின் விரல் கையில் இருந்து விழாமல் தொங்கியவாறு இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவருடன் வந்த ராஜா என்பவர் தங்கராஜை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனக்கே தெரியாமல் என்னைப் பற்றி தவறான செய்தி : சூர்யா வருத்தம்!!

Surya

சூர்யாவை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் பரவி வருகிறது. இது குறித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

சூர்யா பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

மலேசியா தமிழ்ப் பத்திரிகையில் எனக்கே தெரியாத என்னைப் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மதம் சார்ந்த நிகழ்வு நடைபெற இருப்பதாகவும், அதில் நான் கலந்து கொள்ள லட்சக்கணக்கில் பணம் கேட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. சமூக வலைத் தளங்களில் இச்செய்தி பலரால் பகிரப்படுகிறது.

இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய தகவல் கூட எனக்குத் தெரியாது. கலந்து கொள்ளும்படி யாரும் என்னை அணுகவும் இல்லை. கலைஞர்கள் சாதி, மதம், மொழி போன்ற எல்லா எல்லைகளையும் கடந்தவர்கள். கலைத்துறையில் இருக்கிற நான் மதம் தொடர்பாக நடக்கிற ஒரு நிகழ்வில் நிச்சயம் கலந்து கொள்ள சம்மதித்து இருக்க மாட்டேன்.

சமூக வளர்ச்சி, மாற்றம், விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வுகளில் ஆர்வமாக கலந்து கொள்கிற நான், அதற்காக எப்போதும் பணம் பெற்றதில்லை. பணம் வாங்கிக் கொண்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள கூடாது எனும் கொள்கை உடையவன் நான். அப்படி இருக்க, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் பணம் கேட்டதாக வந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை.

இது போன்ற செய்திகள் வருவது வருத்தமளிக்கிறது. என் மீது அன்பு கொண்ட அனைவருக்கும் என் வேண்டுகோள். இனி இது போன்ற தவறான நோக்கத்தோடு இடம் பெறும் செய்திகளைப் புறக்கணித்து என்னுடைய நல்ல முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.

என் அழகைப்பற்றி கவலைப்படவில்லை : ஐஸ்வர்யா ராய்!!

www.hdfinewallpapers.com

எனது அழகு முன்புபோல பொலிவுடன் இல்லை என்று கூறப்படுவது பற்றி நான் கவலைப்படவில்லை என்று ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும் சர்வதேச படவிழா மிகவும் பிரபலமானது. இதில் முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் ஆண்டுதோறும் தவறாமல் பங்கேற்று வருகிறார்.

வித்தியாசமான உடை அணிந்து அவர் வருவதை கண்டு ரசிக்கவே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்த ஆண்டு கேன்ஸ் பட விழா கடந்த 11ம் திகதி தொடங்கியது. இதில் ஐஸ்வர்யாராய் கவர்ச்சி உடை அணிந்து கலந்து கொண்டார்.

அவருடைய தோற்றம் பற்றி கருத்து தெரிவித்த சிலர் ஐஸ்வர்யா ராயின் தோற்றப் பொலிவு குறைந்து விட்டது என்று கூறினார்கள். இது பற்றி ஐஸ்வர்யா ராயிடம் கேட்ட போது அவர் பின்வருமாறு தெரிவித்தார்..

கேன்ஸ் படவிழாவில் நான் 15 ஆண்டுகளாக தொடர்ந்து பங்கு பெற்று வருகிறேன். பல்வேறு பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டிருக்கிறேன். எனது அழகு முன்புபோல பொலிவுடன் இல்லை என்று கூறப்படுவது பற்றி நான் கவலைப்படவில்லை.

இதனால் எந்த வருத்தமும் எனக்கு இல்லை. நான் சாதாரண இந்திய உடைகளை அணிந்து நடிக்கிறேன். நடிப்பை தேர்ந்து எடுத்து இருந்தாலும் பேஷனிலும் ஆர்வம் காட்டுகிறேன். எனக்கென்று தனியான வாழ்க்கை, குடும்பம் இருக்கிறது.

எல்லா நேரத்திலும் பேஷனில் நான் முழு கவனம் செலுத்த முடியாது. இப்போது நான் நடிக்கு சரப்ஜித் படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன் என்று தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் அவசர வேண்டுகோள்!!

Rohana Puspakumara

நாட்டில் கடந்த வாரத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மேல் மாகாணம், சப்ரகமுவா மாகாணம் போன்றவற்றிற்கு ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான பால்மா வகைகள் சேகரிக்கும் பணி வவுனியாவில் நடைபெற்று வருகிறது.

இச் சேகரிப்புப் பணி குறித்து கருத்து வெளியிட்ட வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார..

மேல் மாகாணம், சப்ரகமுவா மாகாணம் பேன்றவற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் போருட்கள் சேகரிப்பு நடவடிக்கை தற்போது வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

இன்றிலிருந்து (20.05.2016) மூன்று நாட்களுக்கு இப் பணி இடம்பெறும் எனக் குறிப்பிட்ட அவர் விசேடமாக உலர் உணவுப் பொருட்கள், குடிநீர், சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான சுகாதார ஆடைகள் என்பனவற்றை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.