உழவு இயந்திரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் : குடும்பஸ்தர் பரிதாபமாக பலி!!

புதுக்குடியிருப்பு (Puthukkudiyiruppu) சுதந்திரபுரம் பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (29) இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் காலபோக அறுவடை செய்து நெல் ஏற்றிவந்த உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் பலியானதுடன் இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதும் தெரியவந்துள்ளது.

விபத்தினை ஏற்படுத்தி விட்டு உழவியந்திரத்துடன் சாரதி தப்பிச்சென்ற நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எரிபொருளின் விலையில் இன்று மாற்றம்!!

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

இதேவேளை, கடந்த மாதம் மண்ணெண்ணெய்யின் விலையில் மாத்திரம் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் மேற்கொள்ளாதிருப்பதற்கு இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தீர்மானித்திருந்தது.

இதன்படி, கடந்த மாதம் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 188 ரூபாவிலிருந்து 183 ரூபாவாக குறைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், பெப்ரவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இன்றையதினம் அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தீங்கு விளைவிக்கும் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

தீங்கு விளைவிக்கும் காற்றின் தரம், படிப்படியாக குறைவதற்கான அறிகுறிகள் தெரிவதாக அதிகார மத்திய சுற்றுச்சூழல் சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் காற்றின் தரக் குறியீடு நேற்று(30) இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.இந்த நிலைமை மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 150ஐத் தாண்டியிருந்தாலும், நாட்டின் மத்திய பகுதியில் பல இடங்களில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு தற்போது 50க்கும் கீழே குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காற்றின் தரம் நேற்று, எந்த இடத்திலும் 150க்கு மேல் பதிவாகவில்லை என்றும், கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் வெப்பநிலை 100க்கு அருகில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், சுவாசப் பிரச்சினைகள் உள்ள உணர்திறன் மிக்க நபர்கள் ஏதேனும் அசௌகரியத்தை அனுபவித்தால் தகுந்த மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா கற்குழி பகுதியில் இளைஞர் குழு அட்டகாசம் : வீதியால் சென்றவர்கள் மீது வாள் மற்றும் பொல்லுகளால் தாக்கி பணம் பறிப்பு!!

வவுனியா, கற்குழி பகுதியில் இளைஞர் குழு வீதியால் சென்றவர்களை வழிமறித்து வாள், பொல்லுகளால் தாக்கி அவர்களிடம் பணம் பறித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்தும் அவர்கள் வரவில்லை என பாதிகப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (30.01) வியாழக்கிழமை இரவு 7.30 முதல் 9 மணி வரை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மகாவித்தியாலயம் முன்பாகவுள்ள வீதி மற்றும் கற்குழி செல்லும் வீதி என்பவற்றில் மதுபோதையில் வாள்கள், பொல்லுகளுடன் நின்ற இளைஞர் குழு ஒன்று குறித்த வீதிகளில் கற்களை போட்டும், போத்தல்களை உடைத்தும் வீதியால் சென்றவர்களை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி பணம் பறித்துள்ளனர்.

இதன்போது இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கமான 107 இற்கு அழைப்பு எடுத்து அறிவித்த போதும் பொலிசார் வரவில்லை எனவும், தாம் தாக்குதல் மேற்கொண்டவர்களிடம் இருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இளம் பெண்ணும் ஆணும் செய்த மோசமான செயல் : விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்!!

கம்பஹாவில் ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான ஆணும் பெண்ணும் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பதிவாகி உள்ளது.

எண்டேரமுல்ல பிரதேசத்தில் இளம் பெண்ணும், அவரது காதலன் என அடையாளப்படுத்தப்படும் இளைஞனும் சேர்ந்து தங்கள் வீட்டில் கொள்ளையடித்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனும் அவரது காதலியும் சேர்ந்து அவரது வீட்டிலிருந்து 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட 56 பவுண் தங்கம் மற்றும் 200,000 ரூபா பணத்தையும் திருடியுள்ளனர்.

20 வயதுடைய பெண்ணும் 25 வயதுடைய ஆணும் கைது செய்யப்பட்டுள்ளதாக எண்டேரமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இளம் பெண் எண்டெரமுல்ல, பகுதியை சேர்ந்தவர் எனவும் இளைஞன் களனி, சிங்கரமுல்ல பகுதியை சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் அடகு வைத்து, 1,800,000 மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை ஒன்றை சந்தேக நபர்கள் கொள்வனவு செய்திருந்த நிலையில் பொலிஸார் அதனை மீட்டுள்ளனர்.

அத்துடன் பெறுமதியான கணனி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவு!!

நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு, இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி.சமந்த வித்யாரத்ன ஆகியோர் இணைந்து இந்த வாரம் தேங்காய் இறக்குமதி தொடர்பான கூட்டு அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்க இருந்தனர்.

எனினும், தேங்காய் இறக்குமதி தொடர்பான மீள்பரிசீலனையின் காரணமாக அந்த முயற்சி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் உற்பத்தி பொருட்களான தேங்காய் தூள் மற்றும் தேங்காய் பால் என்பவற்றை இறக்குமதி செய்யும்

அமைச்சரவை அனுமதிப் பத்திரம் இருப்பதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஆய்வின் படி, தேங்காய் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தோனேசியா பொருத்தமான நாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தேவையை பொருத்து, குறித்த தேங்காய் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய உற்பத்தியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரபல ஹோட்டல் ஒன்றில் மதுபானத்தை திருடி குடிக்கும் குரங்குகள்!!

கண்டியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் குரங்குகள் கூட்டம் புகுந்து, ஒரு அறையில் இருந்து படுக்கை விரிப்பையும், சிற்றுண்டிப் பொருட்களையும், உள்நாட்டு மதுபானம் ஒன்றையும் திருடிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

திருடிய பொருட்களை ஹோட்டலின் கூரையில் இருந்து உண்பதையும், அவை செய்யும் சேட்டைகளையும் பிரதேசவாசிகள் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அந்தப் புகைப்படங்களில் ஒரு குரங்கு மதுபானத்தை ஊற்றுவதையும், மற்றொரு குரங்கு சிந்திய மதுபானத்தை குடிப்பதையும், அருகில் இருந்த மற்றொரு குரங்கு சாப்பிடுவதையும் காட்டுகிறது.

 

பூமியை நோக்கி பாய்ந்து வரும் ‘2024 YR4 சிறுகோள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

2024 YR4 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் அபாயம் குறித்து விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

அஸ்டிராயிட் டெரெஸ்டிரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம் (ATLAS) விஞ்ஞானிகள், 2024 டிசம்பர் 27 அன்று பூமியிலிருந்து சுமார் 8,29,000 கிலோமீட்டர் தொலைவிலிருந்து இந்த சிறுகோள் பூமியை நோக்கி வருவதாகக் கண்டறிந்தனர்.

இந்த சிறுகோள் தற்போது பூமியிலிருந்து 27 மில்லியன் மைல்கள் தொலைவில் சூரியக் குடும்பத்தைச் சுற்றி நகர்ந்துகொண்டிருக்கிறது.

சுமார் 196 அடி விட்டம் கொண்ட இந்த 2024 YR4 சிறுகோள் 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்க 1.2 சதவீதம் (1-in-83) வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

2028 ஆம் ஆண்டில் இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 2024 YR4 சிறுகோள் பூமியைத் தாக்கினால், பூமியின் மீது சுமார் 8 மெகா டன் ஆற்றலை வெளிப்படுத்தும் என்று நாசா கணித்துள்ளது.

இது 1945ல் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு ஆற்றலை விட 500 மடங்கு அதிகமாகும். சிறுகோளின் பாதையை நகர்த்த விஞ்ஞானிகள் விண்வெளியில் வைத்து மோதலை ஏற்படுத்தும் திட்டத்தைப் பரிசீலித்து வருகின்றனர்.

இப்போது, 2024 YR4 சிறுகோளைக் கவனமாகக் கண்காணித்து வரும் ஆய்வாளர்கள், 2032 இல் அதன் தாக்கம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

தென்னிலங்கையில் பெற்றோரை ஏமாற்றிய மகள் : காதலனுடன் இணைந்து களவாடிய காதலன்!!

கொழும்பு தமது காதலனுடன் இணைந்து, பெற்றோரை ஏமாற்றி அவர்களுக்கு சொந்தமாக சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் களனி பகுதியைச் சேர்ந்த 20 வயது யுவதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி இணைய சூதாட்டத்துக்கு அடிமையானவர் எனவும் அவர் குறித்த சூதாட்டத்தில் சுமார் 25 இலட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்ற தினத்தில் குறித்த யுவதி மாத்திரமே அவரது வீட்டில் இருந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து சந்தேகம் கொண்ட காவல்துறையினர் குறித்த யுவதியிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்தனர் அதன்போது, அவர் தமது காதலனுடன் இணைந்து இந்த திருட்டு சம்பவத்துக்கான திட்டத்தை மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன்பின்னர் அவரது வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் குறித்த திருட்டு சம்பவத்துக்கான திட்ட வரைபடமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சந்தேகநபரான யுவதி இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!!

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களின் பயன்பாடு பரவலாக உள்ளது, ஆனால் நிபுணர்கள் ப்ளீச்சிங் கிரீம்களில் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர்.

சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களுக்கான தேவை சீராக அதிகரித்து வருகிறது, பலர் லேசான மற்றும் பிரகாசமான சருமத்தை விரும்புகிறார்கள்.

இந்த கிரீம்கள் பெரும்பாலும் மருந்தகங்கள் மற்றும் அழகுசாதனக் கடைகளில் இருந்து வாங்கப்படுகின்றன, அதே நேரத்தில் சில கையால் தயாரிக்கப்பட்ட பொருட்களாகவும் விற்கப்படுகின்றன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சரும வைத்தியர் ஹிரோமெல் டி சில்வா, இலங்கை அரசாங்கத்தில் பதிவு செய்யப்படாத கிரீம்கள் அல்லது சரியான லேபிளிங் மற்றும் ஆய்வக விவரங்கள் இல்லாத தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரித்தார்.

இந்த கிரீம்களில் சிலவற்றில் சரியான வெளிப்பாடு இல்லாமல் ஸ்டீராய்டுகள் இருக்கலாம், இது தோல் சிதைவு, வறட்சி, தோல் மெலிதல், சிவத்தல், அரிப்பு, எரிதல் மற்றும் ஒட்டும் தன்மை போன்ற பாதகமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று டாக்டர் டி சில்வா மேலும் எச்சரித்தார்.

கூடுதலாக, இந்த தயாரிப்புகள் இதயத் துடிப்பையும் பாதிக்கக்கூடும் என்றும், பயனர்களுக்கு மேலும் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவி கழுத்தறுத்து கொலை : விசாரணையில் வெளிவந்த தகவல்!!

இரத்தினபுரியில் தனது வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரை பின்னால் இருந்து வந்த நபர், கழுத்தறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (29.01.2025) அலபட பொலிஸ் எல்லைக்குட்பட்ட தெல்லபட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் போது, களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 29 வயதுடைய தெல்லபட பிரதேசத்தை சேர்ந்த யுவதியே உயிரிழந்துள்ளார்.

இதன்போது, கொலையாளி சம்பவ இடத்திலேயே விஷம் குடித்து விட்டு ஓடிய போதும் அருகிலிருந்த வயலில் நிலை தடுமாறி விழுந்துள்ளார். இதனையடுத்து, கிராம மக்கள் அவரை இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 32 வயதுடைய குறித்த இளைஞன் மாணவியின் சக மாணவன் என்பதோடு அனுராதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

கொலை சம்பவம் இடம்பெற்ற போது, மாணவியின் தாயார் வீட்டில் வேறு வேலை செய்துகொண்டிருந்ததாகவும் தந்தை வெளியில் சென்றிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குளத்தில் குதித்து காணாமல் போன இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சியில், குளத்தில் குளிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் கல் குளிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் சற்று முன்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளார் பிரிவுக்கு உட்பட்ட பெரிய குளம்பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் நேற்றைய தினம் அப்பகுதியில் நடைபெற்ற ஆலயத் தீர்த்த திருவிழாவிற்கு சென்றிருந்த நிலையில் குளத்துக்கு குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய நிலையில் பகல் காணாமல் போயிருந்தார்.

இவரை பிரதேச மக்கள் நீண்ட நேரமாக தேடிய நிலையில் நேற்று மாலை குறித்த சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

பெரியகுளம் கண்டாவளையைச் சேர்ந்த கணேசமூர்த்தி ரமேஷ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

மீட்கப்பட்ட சடலம் பிரேதபரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டில் சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வரும் மாசு நிறைந்த காற்றினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் காற்றின் தரம் அதிகளவில் மோசமடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இலங்கையில் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவதால், உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக காற்று மாசுபாட்டினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் பயங்கரம் : நேருக்கு நேர் மோதிய இரு விமானங்கள்!!

அமெரிக்காவில் வொஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானமும் உலங்கு வானூர்தியும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் ( Ronald Regan Washington National Airport ) அருகே நிகழ்ந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியுள்ளது.

பி.எஸ்.ஏ. ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான CRJ700 சிறிய ரக பயணிகள் விமானம் தாமதமாக விமான நிலையத்தை நெருங்கும்போது சிகோர்ஸ்கை H-60 என்ற உலங்கு வானூர்தியுடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்து நிகழ்ந்த இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். இந்த விமான விபத்தையடுத்து ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் புறப்பாடுகளும் தரையிறக்கங்களும் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போடோமேக் நதிக்கு அருகில் உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்தில் சிறிய விமானம் கீழே விழுந்தது உறுதி செய்யப்பட்டது என்று கொலம்பியா தீயணைப்பு மற்றும் அவசர மருத்துவ சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு : வீட்டில் உயிர் தப்பிய அதிசயம்!!

காலி, கொஸ்கொட, மஹா இந்துருவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் வீட்டின் முன் ஒரு நபரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி செயல்படாததால் உயிர் சேதமோ அல்லது பொருட்கள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியாக சந்தேகிக்கப்படும் பிஸ்டல் வகை துப்பாக்கி வீட்டின் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. சந்தேக நபர்களை கைது செய்வதற்காக கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னிலங்கைக்கு தலைவலியாக மாறிய அர்ச்சுனா – அரசியலிலிருந்து விலக தீர்மானம்!!

தான் அரசியலில் நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். நேற்று சாவகச்சேரி பகுதியில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது சிங்கள ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், அரசியல் கலாசாரத்தின் மீது தனக்கு எந்த அனுதாபமும் இல்லை என அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

தான் இதுவரை யாருக்கும் வாக்களித்ததில்லை எனவும் இது மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நீண்ட காலம் அரசியலில் நீடிக்கப்போவதில்லை. இருக்கும் வரை நேர்மையாக செயற்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அனுராதபுரத்தில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அனுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா 200,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது.

கடந்த பொதுத் தேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனா தெரிவாகி இருந்தார்.

இந்நிலையில் இலங்கை அரசியல் மட்டத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக அவ்வப்போது சம்பவங்களை அர்ச்சுனா மேற்கொண்டு வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அடுத்து வரும் ஐந்து வருடங்களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும் தலைவலியாக அர்ச்சுனா ராமநாதன் செயற்படுவார் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.