கொழும்பில் இன்று காலை முதல் இடைக்கிடை மழையுடன் கூடிய வானிலை நிலவும், அதேவேளை மலையகத்தின் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை நிலவுகின்றது.
இதனால் கொழும்பில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
களனி ஆறு பெருக்கெடுத்தமையே இந்த வெள்ளத்திற்கான காரணமாகும். இதன்படி, வெல்லம்பிட்டி, சேதவத்தை, கொலன்னாவை, கடுவெல, ஹங்வெல்ல மற்றும் களனி ஆகிய பகுதிகளிலேயே இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கினால் 35,513 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 30,726 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 801 பேர் பாதுகாப்பான இடங்களை நோக்கி அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 56 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு ஏற்படும் வெள்ளப் பெருக்கு அபாயத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதிக மழையுடனான காலநிலையினைப் பயன்படுத்திக் கொண்டு திருடர்கள் தம் கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளநீர் நிரம்பியுள்ள வீடுகள் மற்றும் கடைகள், நிறுவனங்களுக்குச் சென்று திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து இவ்வாறான முறைப்பாடுகள் அதிகம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக 119 என்ற இலக்கத்தை அழைத்து அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று தமது முறைப்பாட்டினை தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளின் போது சிறுவர்கள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்த நிலைமையினை பயன்படுத்திக் கொள்ளும் சிலர் சிறுவர்களை கடத்தல், துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கல் போன்ற செயல்களில் ஈடுபடலாம் எனவும் இது தொடர்பில் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக 1929 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல் தருமாறும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் கூறியுள்ளனர்.
தேர்தல் முடிவுகளால் தி.மு.க வட்டாரம் கலவரப்பட்டுப் போனாலும், தமிழக சட்டசபையின் வரலாற்றில் இவ்வளவு பெரிய எதிர்க்கட்சியை எப்படித் தாங்கப் போகிறார் ஜெயலலிதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வந்தபோது கொஞ்சம் ஆடித்தான் போனார் கருணாநிதி. அ.தி.மு.க அதிக இடங்களைப் பெற்று மிகப் பெரிய எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமர்ந்தது. மைனாரிட்டி தி.மு.க அரசின் முதல்வராக பதவியேற்ற கருணாநிதி, ” என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய எதிர்க்கட்சியை நான் பார்த்ததில்லை. மிகுந்த வேதனையோடுதான் பதவியில் அமர்கிறேன்” என்றார்.
அதைப்போலவே, இந்தத் தேர்தலில் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக தி.மு.க மாறியிருக்கிறது. ‘இவ்வளவு பலம் வாய்ந்த எதிர்க்கட்சி இருப்பதை ஜெயலலிதா விரும்ப மாட்டார். இது ஒருவகையில் தமிழ்நாட்டின் நலனுக்கு நல்லது என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்.
தேர்தலில், ‘பூரண மதுவிலக்கு’ என்ற கோஷத்தை தி.மு.க தீவிரமாக முன்னெடுத்தது மக்கள் மத்தியில் எடுபடாமல் போனதற்குக் காரணம், தி.மு.க புள்ளிகள் நடத்தும் மதுபான ஆலைகள் குறித்த தகவல்கள் மக்கள் மத்தியில் வேகமாக பரப்பப்பட்டதுதான். அதிலும், நாள்தோறும் தினசரி பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் தி.மு.க தலைமை கொடுத்த விளம்பரங்கள் மக்கள் மத்தியில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இதைப் பற்றி கனிமொழியிடம் பேசிய நிர்வாகி ஒருவர், ” டீக்கடையில் அமர்ந்து பேசுவர்கள்கூட நமது விளம்பரத்தைப் பற்றித்தான் பேசுகிறார்கள். பொதுவாக, ஆளுங்கட்சிதான் தேர்தல் நேரத்தில் இப்படி ஆடம்பரமாக விளம்பரம் கொடுப்பார்கள். நாம் எதிர்க்கட்சி வரிசையில்கூட இல்லை.
இதைப் பற்றிப் பேசும் மக்கள், ‘ இவங்ககிட்டதான் பணம் அதிகமாக இருக்கிறது. இப்பத்தான் வெளியில வருது’ எனப் பேசுகிறார்கள். நமக்கே எதிராகப் போகிறது” என வருத்தத்தைச் சொல்லியிருக்கிறார்.
கூடவே, ” எந்தத் தொலைக்காட்சியைத் திறந்தாலும், கலைஞர் பேசுகிறார், ஸ்டாலின் பேசுகிறார், மனிதன் படம் பற்றி உதயநிதி பேசுகிறார். பொதிகை தொலைக்காட்சியில் மட்டும்தான் யாரும் பேசுவதில்லை. விளம்பரங்களைக் குறைத்துக் கொண்டால்தான் நமக்கு நல்லது” எனவும் தலைமையிடம் சொல்லியிருக்கிறார்கள்.
‘எங்கள் ஆட்சியில் நாங்கள் இவ்வளவுதான் கடன் வைத்திருந்தோம். அவர்கள் வந்ததும் இவ்வளவு தூரத்திற்கு உயர்த்திவிட்டார்கள்’ என்ற பிரசாரம் எடுபடவில்லை. மேலும் ‘புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள்’ என ஸ்டாலின் பேசும்போது, ‘இத்தனை வருஷமாக ஆட்சியில இருந்து எதையும் செய்யலைன்னு ஒத்துக்கறாங்களா?’ என்ற விமர்சனமும் எழுந்தது.
தவிரவும், ‘இவ்வளவு இடங்கள் கிடைத்ததில் இருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. தி.மு.கவை படிப்படியாகத்தான் மன்னிக்க முடியும். ஒரே அடியாக மன்னித்தால் மீண்டும் ஆடத் தொடங்கிவிடுவார்கள் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்’ என்றார் அரசியல் ஆய்வாளர் ஒருவர்.
அரசியல் சதுரங்கத்தில், பல்லாயிரம் கோடி ரூபாய்களை இறைத்து வாக்குகள் வாங்கப்பட்டன என்பது பாமரனுக்கும் தெரியும். ஆட்சியில் அமரப் போகிறவர்களுக்கு, மிகப் பெரிய எதிர்க்கட்சியைக் கொடுத்து செக் வைத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். வரும் காலங்களில் தமிழகத்தின் நலனைத் தீர்மானிப்பவையாக அவை செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோளும் சேர்ந்தே எழுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இதுவரை வௌியான முடிவுகளின் அடிப்படையில் அதிமுக 129 தொகுதிகளிலும் திமுக 82 தொகுதிகளிலும் பாமக 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
இந்நிலையில் திருவாடானையில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ் முன்னிலையில் உள்ளதோடு, பெண்ணாகரத்தில் அன்புமணி பின்னடைவையும் சந்தித்துள்ளதோடு உளுந்தூர்பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பின்னடைவு சந்தித்து தோல்வியடைந்துள்ளார்.
பலர் விவாகரத்து நோக்கி செல்வதற்கான முக்கிய காரணம், தம்பதி மத்தியில் இருக்கும் புரிதல் இன்மை தான்.
நீங்கள் சம்பாதிக்கும் பணத்திலோ, அதைக் கொண்டு நீங்கள் வாங்கி தரும், புடவை, நகை, ஃபேஷன் உபகரணங்கள் போன்ற பரிசுகளையும் தாண்டி. நீங்கள் அவருடன் செலவழிக்கும் நேரம் தான் மனைவிகள் அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பரிசு. இதை இந்த தலைமுறையில் பல ஆண்கள் புரிந்துக் கொள்வதில்லை.
இந்நாட்களில் பலர் விவாகரத்து நோக்கி செல்வதற்கான முக்கிய காரணம், தம்பதி மத்தியில் இருக்கும் புரிதல் இன்மை தான். இந்த புரிதல், ஒருவர் பற்றி ஒருவர் அறியாதிருப்பது போன்றவை உண்டாக காரணியாக இருப்பது சரியாக நேரம் ஒதுக்கி பேசாமல் இருப்பது தான். இதுப் போன்ற பிரச்சனைகள் எழாமல் இருக்கவும், உங்கள் மனைவியை மகிழ்விக்கவும் உதவும் வழிகளை பார்க்கலாம். …
பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், வீடு துடைத்தல் என எந்த வேலையாக இருந்தாலும், சின்ன சின்ன உதவிகள் செய்துக் கொடுக்க மறக்க வேண்டாம். இந்த சின்ன வேலை உதவிகள் உங்கள் மனைவியை பெருமளவு மகிழ்ச்சியடைய உதவும் என்பதில் துளியும் சந்தேகம் தேவையில்லை.
மேலும், நீங்கள் இது போன்ற வேலைகள் செய்துக் கொடுப்பதை தம்பட்டம் அடித்து தோழிகளிடம் பெருமையாக கூறி மகிழ்ச்சி அடைகிறார்கள் மனைவிகள். இந்த மகிழ்ச்சியை உங்கள் மனைவிக்கு நீங்கள் தந்தே ஆகவேண்டும்.
தேவையான போது மட்டும் முன்னுரிமை அளித்து, பிறகு அவர்களை பின் தள்ளி நிப்பாட்டுவதை தவிர்த்துவிடுங்கள். உங்கள் வாழ்க்கையில் எந்த கட்டத்திலும், எந்த சூழலிலும் நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டிய முதல் நபர் உங்கள் மனைவி.
உங்கள் தொழில், வேலை சார்ந்து மட்டுமில்லாமல், உங்கள் மனைவியின் வேலை சார்ந்தும் சற்று ஆர்வம் செலுத்துங்கள். வேலை ரீதியாக அவர் முன்னேற்றம் அடைய என்ன செய்யலாம் என அறிவுரைக் கூறுங்கள்.
உங்கள் இருவருக்கு மத்தியிலான ஒரு செய்கை பாசையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். செய்கை, சத்தம் போன்ற ஏதேனும் ஒன்று சுயமாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வபோது இந்த முறையில் உரையாட முயற்சி செய்யுங்கள். இதுபோன்ற சில விஷயங்கள் அவர்கள் அதிகமாக மகிழ்ச்சியடைய உதவும்.
முக்கியமாக நேரம் ஒதுக்குங்கள். வேலையே கதி என இருக்க வேண்டும். வீடும், இல்லறமும் கூட முக்கியம். இரண்டையும் இரு கண்களாக பாவியுங்கள். அப்போது தான் இல்லறமும் சிறக்கும், தாம்பத்தியமும் சிறக்கும்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.
அத்துடன் பல்வேறு மாவட்டங்களிலும் 302,997 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 610 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
புலத்கொஹுபிட்டிய மற்றும் அரநாயக்க உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாக அவர் மேலும் கூறினார்.
அத்துடன் களனி கங்கையின் நீர் அதிகரித்துக் கொண்டிருப்பதால் அப்பிரதேச மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சீரற்ற காலநிலை அதேநிலையில் இன்னும் தொடர்வதால் பாதுகாப்பு நடைமுறைகளை கையாளுமாறும், அவசர நிலமைகளின் போது 0117,2670002 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்ட நிலையில் வாக்களித்த வாக்களர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:-
எழுகின்ற நன்றி உணர்ச்சி இவைகளை விவரிக்க அகராதியில் வார்த்தைகளே இல்லை. தி.மு.க-வின் பொய் பிரச்சாரங்களை பொடிப் பொடியாக்கி, உன்னதமான, உத்தமமான, உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டிய தேர்தல் இந்தத் தேர்தல். குடும்ப ஆட்சிக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் இந்தத் தேர்தல். குடும்பத்தோடு வாக்கு கேட்டவர்களைகுழிதோண்டி புதைத்த தேர்தல் இந்தத் தேர்தல். தமிழக மக்களை நம்பாமல் கருத்துக் கணிப்புகளை நம்பிய கட்சிக்கு எதிர்பார்த்த தோல்வியைக் கொடுத்த தேர்தல் இந்தத் தேர்தல்.
என் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, எனது அன்பான வேண்டுகோளினை ஏற்று, மகத்தான, அபரிமிதமான, அளப்பரிய வெற்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அளித்துள்ள தமிழக மக்களுக்கு என்றென்றும் நான் நன்றிக் கடன் பட்டவளாக இருப்பேன் என்றும்; தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றும்; இந்தியாவிலேயே தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்க தொடர்ந்து அல்லும், பகலும் அயராது உழைப்பேன் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்.
இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, 1984-ஆம் ஆண்டுக்கு பிறகு, தொடர்ந்து ஆட்சியில் உள்ள கட்சியே வெற்றி பெற்ற பெருமையை எனக்கு அளித்த தமிழக மக்களுக்கும், இந்தத் தேர்தலில் மெய் வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், ‘கருமமே கண்ணாயினார்’ என்பதற்கேற்ப, ஓயாமல் கழகத்தின் வெற்றிக்காக உழைத்த ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான, எனது அருமை கழக உடன் பிறப்புகளுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், தோழமை கட்சித் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள ஏழு சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈட்டி படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் உள்ளார் அதர்வா. அடுத்து இவர் பத்ரி இயக்கத்தில் செம்ம போத ஆகுது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு இசையமைத்து வரும் யுவன், ஒரு செம்ம கிளப் சாங் ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்த பாடலுக்கு முதன் முறையாக ஸ்டெண்ட் இயக்குனர் திலீப் சுப்புராயனை வைத்து படமாக்கியுள்ளார்களாம்.ஏனெனில் இந்த பாடலில் அதர்வா சண்டைப்போடுவது போல் வருவதால் இந்த முடிவாம்.
ரேடியோவில் RJவாக பணிபுரிந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் RJ பாலாஜி. இவர் இன்னும் ரேடியோவில் வேலை பார்த்து வருகின்றார்.நாட்டிற்கு தேவையாக கருத்துக்களை நகைச்சுவையாக கூறுபவர். சமீபத்தில் கூட இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வம் குறித்து ஒரு நிகழ்ச்சி நடத்தி வெளுத்து வாங்கினார்.
தற்போது நடந்து முடிந்த தேர்தல் குறித்து ‘சீரியஸாக பார்க்கவேண்டிய தேர்தல் ரிசல்ட்டை ஜாலியாகவும், ஜாலியாக பார்க்க வேண்டிய கிரிக்கெட்டை சீரியஸாகவும் பார்ப்பது நம் மக்கள் தான்’ என கலாய்த்துள்ளார்.
தமிழக சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி கடும் விரக்தியில், முக்கிய நிர்வாகிகளை அழைத்து காய்ச்சி எடுத்தாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் காலை முதல் வாக்குப்பதிவு முடிவுகள் வெளியானது. இதனால், திமுக தலைவர் கருணாநிதி கடும் அதிர்ச்சியடைந்தார்.
தற்போது நிலவரப்படி அதிமுக முன்னிலை பெற்று வெற்றிப் பாதையில் செல்கிறது. இதற்கு அடுத்து, திமுக வந்து கொண்டுள்ளது. இருப்பினும், தமிழகம் முழுக்க திமுக தோல்வி முகத்தில் உள்ளது.
அப்போது, உடன் இருந்த திமுக நிர்வாகிகளிடம் “தமிழகத்தில் என்னய்யா நடக்குது? நான், அப்பேவே சொன்னேன், பலமான கூட்டணி வேணும்னு சொன்னேன், யார் கேட்டீங்க….” என்று கடும் கோபத்தை காட்டினாராம்.
மேலும், தோல்வி விரக்தியில் கருணாநிதி தனது கோபத்தை காட்டினாராம். உடன் இருந்தவர்கள் அவரது கருத்தை ஆதரிக்கும் வகையில், ஆமாம்.. தலைவரே… என அவரது கோபத்தை தணிக்கும் வகையில் ஆறுதல் சொன்னார்களாம்.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஒரு கட்டமாகவும், அசாமில் 2 கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடந்தது.
கேரள மாநிலத்தில் 140 தொகுதிகள் உள்ளன. இதில் 109 பெண்கள் உள்பட 1203 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு 16ம் திகதி நடந்த தேர்தலில் 77.35 சதவீத ஓட்டுகள் பதிவானது.
இன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு படிப்படியாக சுற்று நிலவரங்கள் வெளியாகின. இதன் அடிப்படையில் இறுதிமுடிவுகள் சற்று முன்னர் வௌியிடப்பட்டுள்ளன.
140 தொகுதிகளில்
இடது சரிகள் 88 தொகுதிகளிலும்,
காங்கிரஸ் கூட்டணி 50 தொகுதிகளிலும்,
பாரதீய ஜனதா 1 தொகுதியிலும்
பிற கட்சிகள் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.
நாட்டில் இன்றும் கனமழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.
காங்கேசன் துறைக்கு வடக்கே 500 கிலோ மீற்றர் தொலைவில் பலத்த காற்று வீசிவருகின்றது. இன்னும் 24 மணி நேரத்தில் அது சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ளது.
இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.
மேலும் மத்திய மற்றும் வடபகுதிகள் பெரிதும் பாதிக்ககப்படுமென அவர் தெரிவித்தார்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் பாரிய அலைகள் தோன்றக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதால் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் அதிமுக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. இதனால், அதிமுக அலுவலகம் மற்றும் ஜெயலலிதாவின் வீடு உள்ள போயஸ் கார்டனில் அதிமுக தொண்டர்கள் ஆட்டம், பாட்டம் என்று கொண்டாடி வருகிறார்கள்.
முன்னதாக, இன்று காலை ஜெயா டிவியில் ஜெயலலிதாவின் ராசிக்கு எப்படி இருக்கிறது என்று ஜோதிடர்களை வைத்து நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
இதில் ஜெயலலிதாவின் ராசிப்படி லக்னத்திற்கு 6ம் இடத்தில் சனி இருப்பதால் எதிரிகள் நசிந்து போவார்கள். அம்மாவிற்கு வெற்றியே கிடைக்கும் என்றார் ஒரு ஜோதிடர். ஜெயலலிதா 25 வேட்புமனு தாக்கல் செய்தது ஏன்? அதனால் பலன் கிடைக்குமா என்று கேட்கவே? அதற்கு பதில் சொன்ன ஜோதிடர், கேது என்பது புரட்சிகளை கொடுக்க கூடிய கிரகம். அன்றைய தினம் 7, 2 என்ற அமைப்புப்படி இருக்கிறது.
ஏழு மிகவும் ராசியானது சிறப்பான மாற்றத்தை தரும் என்று கூறியுள்ளனர். வாஸ்துபடி ஆர்.கே.நகர் தொகுதி ஜெயலலிதாவின் வெற்றிக்கு சாதகமாக இருக்கிறது என்றும். துன்முகி வருடமானது ஜெயலலிதாவிற்கு சாதகமாகவே இருக்கிறது. நிச்சயம் ஆட்சிமைப்பார் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
தற்போது ஜோதிடர்களின் கருத்து பளித்துள்ளது. வாக்கு எண்ணிக்கையின் நிலவரத்தைப் பார்த்தால், அதிமுக தான் மீண்டு ஆட்சி அமைக்கும் என்பது தெரிகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், பெரியசாமி, பொன்முடி, வீரமணி ஆகியோர் தமிழக சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்றனர்.
இதேவேளை, தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளனர்.
திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியும் ஆர்கேநகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் வெற்றிபெற்றுள்ளனர்.
மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியிலும் திருச்செந்தூர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கடலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
இந்தியாவில் மத்தியபிரதேசத்தின் குவாலியரில் பெண்ணை கத்தியால் தாக்கிய கொலைகாரர்களிடம் இருந்து காப்பாற்ற பசுமாடு ஒன்று முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின்போது சீமா குஜ்ஜர் என்ற இளம்பெண்ணை இரண்டு நபர்கள் கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் குற்றுயிராக சரிந்த அந்த பெண்ணை தொடர்ந்து கத்தியால் தாக்கும் அந்த கொலைகாரர்களிடம் இருந்து காப்பாற்றும் பொருட்டு பசுமாடு ஒன்று அந்த இருவர் மீது முட்டித்தள்ளியுள்ளது.
ஆக்ரோஷமாக பசுமாடு முட்டித்தள்ளியதில் நிலைகுலைந்து விழுந்த இருவரையும் அந்த பசுமாடு அங்கிருந்து துரத்தியுள்ளது. இதனையடுத்து பசுமாட்டின் ஆக்ரோஷத்திற்கு பயந்து அந்த நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
கத்தியால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டதால் அந்த இளம்பெண் அங்கிருந்து தப்பியும் பாதி வழியில் குழைந்து விழுந்து இறந்துள்ளார்.
அந்த இளம்பெண் தாம் விரும்பிய இளைஞன் ஒருவருடன் கடந்த ஜனவரி மாதம் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில்உடன்படாத அவரது உறவினர் இருவர் சேர்ந்து அந்த இளம்பெண்ணை கொலை செய்யும் நோக்கில் கத்தியால் பலமுறை தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.
2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளில் 454 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகள் (ரத்தம் மற்றும் சிறுநீர்) மீண்டும் சோதனைக்குட்படுத்தப்பட்டது. அதன் முடிவை இப்போது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில் 12 நாடுகளை சேர்ந்த 6 வகையான விளையாட்டுகளில் 31 பேர் ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பது உறுதியாகியுள்ளது.
இவர்களுக்கு ஆகஸ்டு மாதம் நடக்கும் ரியோடி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டிக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது. இதே போல் 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது எடுக்கப்பட்ட 250 மாதிரிகளும் நவீன முறையில் மறுபடியும் சோதனை நடத்தப்பட இருக்கிறது.
‘‘ஊக்கமருந்து மோசடி பேர்வழிகள் அனைவரும் 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே எங்களது இலக்கு’’ என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.